Friday, August 21, 2009

சபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)

சபாநாவலனின்:
தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!


ஆரிய திராவிட மோதல்கள:
 
திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தி திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர். மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும் இணைத்துப் பார்க்கவேண்டும். ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும். இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது.எனவே மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து ஆரியர்- திராவிடர் உயர்வுச் சண்டைகளும் யார் இந்திய மூத்தகுடி வந்தேறுகுடி என்ற வாதிடல்களும் தோன்றின.கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். ராமர் ஆரியன்,இராவணன் திராவிடன்,வசிட்டர் பிராமணன், விஸ்வாமித்திரன் சூத்திரன், சமஸ்கிருதம் தேவபாசை அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.
 
 
ஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை. மாறாக,ஐரோப்பிய சார்பான ஆங்கிலக்கல்வி பெற்றவர்களும்நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக்கற்பனை எதிரிகளையும் தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர். புராண,இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர். திராவிடநாடு, ஆரிய தேசம்,இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்;கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின. இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால் மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.அல்லது குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்தது போல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்?
 
 
மேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது. மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய்,இளம்பிள்ளைவாதம், கசம்,மலேரியா இல் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா? மேற்கத்தைய ஆரியராககருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா?இங்கு கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே. திராவிடர்,ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள்மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக்கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை.மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல. வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டும் சபதம் செய்வது அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து திருத்தம் செய்ய முயல்வதாகும். ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும். சாபம் தருவதோ, சபிப்பதோதீர்வு அல்ல உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும். மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக்கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.
 
 
ஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது. திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரி;த்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர். திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம்,குமரிநாடு, ஏழ்கடல்நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது. தமிழ்நாட்டு தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும். இவைகளிலே பிளவும் முரண்களும் சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் அவர்களிடையே பொதுவான வர்க்கரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல. அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.
 
 
திராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை அலெக்சாண்டர் ஒரு தமிழன் என்று கண்டு பிடிக்க தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார்,ம.பொ.சி,ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர்.இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.
தமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் திராவிடச்சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர்.திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார். மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழி;ற்புரட்சியின் முன்பு பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை. இந்தியப் பிராமண மதகுருக்களை போல்ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமதகுருக்களைநியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றாhர்.மன்னார்கள் இ;ல்லாத போதும் மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார்.அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளையும் தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர்மறுத்தார
திருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.
 
 
மதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும் அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு,மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப்பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன. மதகுருக்கள், படைத்தலைவர்கள்,அரசுப்பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் Bochland என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள். குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.கிறீஸ்த திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவ திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து. பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்த பாவம் போக்கிகள் அலைந்த திரிந்தார்கள்.
 
 
கி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறுவிதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும் வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது தெய்வ நிந்தனையானது. கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையானது 14ம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்பு பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின.சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத்துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது.இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் மறுவகையில் இந்தியாவானது பேர்சியா,பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராhமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய,அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும்.இந்திய முழுச்சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.
 
 
இந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்;க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழி;ற் பிரிவினைக்குட்பட்ட உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன. பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது. இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக்கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்ற போதும் மறுபுறம் இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன. இன்று வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தமையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் ஆதாரமாகும் இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.
 
 
இந்திய ஆரியக்கருத்துக்காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழயில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்;ப்பைக் கொண்டிருந்ததுடன் கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர். தாம் ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய இந்துமதம் ஊடாக சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர்நிலையில் செயற்பட்ட பெரியார்,அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர். இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர். மனிதப்பண்பாட்டு அம்சங்களை உயர்வு தாழ்வு முறைகளை தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளை புறம் தள்ளிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச் சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக NGO க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம்,பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும் இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும் இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.
 
 
ஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும் கட்டுடைப்பாளர்களாகவும் புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர். இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3;ம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ்,ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர். 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் இறுதியாக நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது. 1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களி;ல் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் இன்று அம்பலமாகிவிட்டனர். இவர்கள்கைடேக்கர் நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர். மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம்சாட்டப்பட்டதுடன் நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர்.தழிழ்நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதி;ர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.
 
 
இன்று திராவிடம் ஆரியம் காந்தியம் என்பன இந்திய பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கி பின்பு தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக பெரியாரியமாகக் குறுகி இன்று இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன. திராவிட இயக்கம்கள் இன்று இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத்திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச் சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக்காலத்துக்கு உரியதான சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.
 
 
‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே நாவலனால் எடுத்துக் கையாளப்படுகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது.மத்திpய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது. ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் இருந்தன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க,ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய "PROD" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்;ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத்தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகி;ன்றார்கள்.இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.
 
 
இதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா? புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை? ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா? பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா? தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை? தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை? ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகி;ன்றது. மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூதநம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும். மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள்புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும். இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல்,இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி,அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.
 
 
ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர்,சீனா, லிபியா. முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கிpன. இவர்களே குரான் போதி;க்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய,ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழி;ற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.
 
 
இங்கு நாவலன் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாரே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த,யூத அடிப்படைவாதம்களை அவர் பேசவில்லை. ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை அது தற்காலிக இருப்பினும் கூட நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும். இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாவலன் திபேத்திலும் பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவில்லை என்பது அவரது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது. தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபதி;திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.
‘இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு, வன்முறையால் அழிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் ஆரம்பம் சிதைக்கப்பட்டது. அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது’என்று வரிசைப்படுத்துகின்றார் நாவலன்.
 
 
இங்கு மிகவும் மேலோட்டமானதும் எளிமைப்படுத்தப்பட்ட சுலோகம்களில் அவர் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம். இந்தியா மிகவும் மந்தகதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும். பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது மன்னர்களையும் ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது மறுபுறம் பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது.; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம் புதியதாக சமூக,பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆக்கலும் அழிவும் இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சிவர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழி;ல்புரட்சி ஏற்பட்டு இருந்தன. பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கி கொலனிகளில் விற்றது. இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.
 
 
இந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நாவலனின் விளக்கமானது அவரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது. மறுபுறம் இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் வி;லை அதிகமாக முடிந்தமையாலும் இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதை நாவலன் காணவில்லை என்பது அவரது பிரதான குறைபாடாகும்.
 
 
இந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று "Die Zeit" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது. உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியான "ADB" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது. இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக "IBSA" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.பிறேசிலுடன் கூட்டாக "Icone" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத்தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்;துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.
 
 
பிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar >land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது.இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியின் மூலம் உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின் ; Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது. மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் "Nucor"மற்றும் "USS" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் "Arcelor" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது. பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த இந்து முதலாளி ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற்கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 2,50,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள்,தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors>Tata steel > Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang>Changchun >FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland >Tata பெரிய வாகனத் தயாரிப்பில் இறங்கிவிட்டது. இந்திய கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.
 
 
இந்திய "HAL" நிறுவனம் அமெரிக்காவின் "Bell" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் "Bell Texto407″ என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, "EADS"வுடன் இணைந்து இந்தியாவில் "Eurocopter" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின் ; Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம்.ஜெர்மனிய VW>BMW>, கார்த்தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கி;ன்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர்விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை. நாவலன் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டனர். ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுககும் ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த்தேசியம் தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத் தலை முழுகவும் வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.
 
 
3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும். ஆபிரிக்கா நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக்காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள் நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ஆறுகளோ அங்கு இல்லை.வாழக்கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்கள் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது. நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.
 
செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது. அவர்கள் இக்கட்;டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப்பட்டமையூடாகவே நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.
 
 
‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதி;தியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார
 
 
உலக மயமாதல் என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவி;ர்க்கமுடியாத கட்டமாகும். ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழிநுட்பங்கள் நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும் சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை. ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன. உதாரணமாக சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க,ஐரோப்பிய நாடுனகளை முந்தி முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை. பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது வருடாவருடம் 60 மி;ல்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.
 
 
schanghai>Peking>Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது. சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள். பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,Vw என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன. ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100>000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது.. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்pலியன் யூறோ நட்டம் ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.
 
 
வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்துஉhகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள்,பாலம்கள்,ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது. 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் 9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது. 10 வருடம் முன்பு இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை. சீனாவில் ஒரு மணி நேர ஊழியம்0.70 சென்ட்களாகும். இது ஜெர்மனியியல் மணிக்கு 27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
 
 
2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் சமூக ஆய்வியல் அறிஞருமானOskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார். 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்;காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது. ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன. அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata > suzlon Energy> ,சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
 
 
எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது. முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டு;ப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது. உலக மனிதர்கட்கு இன்று 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக்கடன், குளிப்பு, சுடுநீர்ப்பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது. ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ ளுஉறநகநட தேவை.ஆனால் இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகள் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது. மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.
மேற்குலக எரிபொருள் நிறுவனம்களானBP,Exxom,MobilChevron,Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.
 
 
நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின்PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதி;ர்ப்புப் போhர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது. உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது. வடகடலில் பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணுஉலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது 64.புதி;தாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ஆசியாவில் 110 அணுஉலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.
 
 
3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின் ; Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழிநுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,அயடயதெயஇடீயரஒiஇமுழடியடவஇஉழடவயn என்பன உண்டு. ஊழடவயn கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை தொடங்கி வைத்தன. ஆயுதக்குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள்எதிரணியான MDC" க்கு நிதிதந்து ஆதரிக்கின்றன சிம்பாவேயில்உள்ள Platin. . இரத்தினக்கற்கள்உட்படவளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.
 
 
உலகின் 90வீத Platinஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள்இடப்பட்டது அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு, நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது. சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள்,விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழி;ற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்pபிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது. நைஜீரியா 6.5மூ,கானா5.8மூ,சூடான்8மூ,கென்யா6.5மூ,தான்சானியா 6.9மூ, சிம்பாப்வே6.5மூ, தென் ஆபிரிக்கா 4.8மூ என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.
 
 
‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது. தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்;கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர்நிர்வாகிகட்காக ஆடம்பரமாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டுதுளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25மூ எண்ணைவளம் உட்பட ஆபிரிக்க எண்ணைவளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40மூசீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.
 
 
சீனாவுடன் இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன. தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக்கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐஎம்எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது. சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து " என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன. 2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளி;க் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.
சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது. 1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பி;ன்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின. ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டம் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.
 
 
‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.
 
 
இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா? ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா? இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே? கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?
 
 
வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது. 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சிஎன்என் க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும். லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.
 
 
அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? கனடாவையும் பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா? ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார
 
 
அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita"கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளைஆட்சிசெய்தகாலம
இன்றில்லை காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது. வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்;ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.
 
 
வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில
வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.
சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது..இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன. இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர். "Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
 
பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா? இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா? விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா? ‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார். 1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது. வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.
 
எனவே உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர்முதலீட்டில் தொடங்கியுள்ளது. முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.
 
 
ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும். 1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழி;;ற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளி;ல் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நாடு இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது. அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.
 
 
உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை. அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும். அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில்ஜரோப்பாநுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.
 
 
‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.
இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும். கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது. பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிடமுடியாத மூலப்பொருள் வளம்கள் உடையதாக இருந்தும். அது தொழிற்துறையில் வளரத்தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் வளர்ச்சி நிலை போதாக இருந்தது. அடுத்து உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது. தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன? அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜிஎம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன? சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் (USB)வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது? பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.
 
 
உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ஏகாதிபத்pதியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது. அமெரிக்காவையோ ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை. நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன? மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐஎம்எவ் எச்சரிக்கின்றது. 1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும் இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.
 
 
இது முதலாளியத்தின் மரணகண்டமாகும். அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது. உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை. ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 100 வருடம் முன்பு சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர். கடைசியாக உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.
 
 
15.01.2009
தமிழரசன்-பெர்லின

சபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 2)

‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1960 இல் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு செய்து ஏமாற்றியது என நாவலன் எழுதியுள்ளார். இங்கு இவர் தருவது ஒரு பிழையான விபரணையாகும். ‘பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் பின்பு எந்த ஒரு உடன்பாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் ஏற்படவில்லை. தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் இரண்டும் அப்போதும் சரி பின்பும் சரி யுஎன்பி உடன்தான் கூடித்திரிந்தன. மந்திரிப் பதவிகள் ஏற்றன. 1960 இல் இரண்டு முறை தேர்தல் நடந்தது முதல் நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்குமளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்து ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தனர். எனவே தமிழரசுக்கட்சியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்தித்து அம்பத்தெட்டு சேர் போட்டு செல்வநாயகத்திடம் அரசமைக்க ஆதரவு தரும்படி கேட்டது முதலில் ஓம் என்று சொல்லி விட்டு பின்பு செல்வநாயகம் மறுத்துவிட்டார். இங்கு தமிழரசு- யுஎன்பியின் இரகசியக் கூட்டுக்கள் மட்;டுமல்ல இவர்கள் பின்பு இருந்த பிரிட்டிஸ் அரசின் இலங்கைத் தூதரே இவர்களைக் கட்டுப்படுத்தினார். பிரிட்டிஸ் தூதுவராலயம் வெளிப்படையாகவே யுஎன்பி ஆதரவு காட்டியதுடன் எப்பாடுபட்டேனும் இடதுசாரிகள் உதவியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பதவிக்கு வருவதைத் தடுக்க முயன்றது. 1960 இல் இரண்டாவது முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி பெற்றது. அரசமைத்தவுடன் செல்வநாயகம் அரசுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1961இல் சத்தியாக்கிரகம் தொடங்கியது முத்திரை அடித்து விற்கப்பட்டது. இங்கு யுஎன்பியுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டிஸ் தூதரக அரசியலுக்குத் தான் தமிழரசுக்கட்சி ஆடியது. இதைத்தமிழ் மக்களுக்கான அரசியல் என்று நாவலன் நிரூபிக்கப் பார்க்கின்றார்.
 
 
‘1915 இல் இலங்கையில் முதலாவது இனக்கலவரம் நடந்தது என்று தொடங்கும் நாவலன் எழுத்து ‘ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தனர். மத்தியதர வர்க்கமும் தொழிலாளர்களும் இதில் ஈடுபட்டனர்’ என்று வளர்த்துச் செல்கிறார்.1915 இல் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை சிங்கள இனவாதத்தின் விளைவாகக் காட்டுவதென்பது வழக்கமான தமிழ்த்தேசியவாதக் கருத்துருவமாகும். நாம் இதன் மூலகாரணிகளை அக்கால அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் தேடிப்பார்க்க வேண்டும். 1914 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏறின. பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்து யுத்தத்துக்குப் பணம் திரட்டியது.பிரிட்டிஸ் அரசு வெளிநாடுகளில் செய்யும் போருக்கு இலங்கை மக்கள் தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்தது. மக்களிடையே பசி பட்டினியும் வேலையின்மையும் பிரிட்டிஸ் அரசு மீது கோபமும் வளர்ந்து வந்தது. இச்சமயத்திலேயே பிரிட்டிஸ் நபரான டி.எஸ்.சேனநாயக்கா போன்ற சிங்கள இனவாதிகள் பிரிட்டனுக்கு எதிராகத் திருப்பி விட்டார்கள்.உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு விலையேற்றம் இவைகளுக்கு முஸ்லி வியாபாரிகளே காரணம் எனக் கூறினர்.இக்கலவரம் உண்மையில் யுத்த நிலைமைகளில் ஏற்பட்ட உணவுக்கான கலவரமாகும். இத்தகைய உணவுக்கலவரங்கள் இந்தியா உட்பட முழு ஆசியநாடுகளிலும் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்டார்கள். ஆகவே உலக யுத்தம் ஏற்படுத்திய பொருளாதார நிகழ்வுப் போக்கு இலங்கையுள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிட்டிஸ் ஆட்சியினர் இலங்கை சுதேசிய மக்களின் அரசியல் வளர்ச்சியற்ற நிலைமைகளை தமக்குச் சாதகமாககப் பயன்படுத்தினர். இலங்கை மக்களிடையேயான பிணக்குகளாக ஆக்கினர்.இதையே முஸ்லிம் சிங்களக் கலவரமாக நாவலனும் பார்க்கின்றார்.
 
 
யுத்தத்தினால் சமூகத்தின் சகல தட்டுக்களும் பாதிக்கப்பட்டு இருந்த போதும் ஏழைகள், சமூகவிரோதிகள், உதிரித்தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்தனர். இதைப் பட்டினிக்கலவரங்களாகவே கொள்ளவேண்டும். இதை நாவலன் வெறும்சிங்களஇனவாத நடவடிக்கையாகப் பார்த்தமையின் மூலம் இந்தக் கலகத்தின் அரசியல், சமூக, பொருளியல் உள்ளடக்கத்தை தவறவிட்டார். ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடு;த்தனர் என்று எழுதிய போதும் இக்கலவரம் பெரிதாக நடைபெறவில்லை. கம்பளையில் முஸ்லிம்களின் மசூதி முன்பு பௌத்தர்களின் மத ஊர்வலம் வழக்கத்துக்கு மாறாக இசைக்கருவிகளை ஒலித்தமையே கலவரம் தொடங்க உடனடிக்காரணமாக இருந்தது. கைது செய்யப்பட்ட டி.எஸ்.சேனநாயக்காவுக்காக வாதாட பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டன் சென்று குடியேற்ற நாட்டுக் காரியதரிசியைச் சந்தித்தார். அவர் அதற்கான ஆவணங்களை தனது பாதணியில் மறைத்து எடுத்துச் சென்றார் என்று தமிழ்த்தேசியவாதிகள் மேடைகளில் பேசியதுண்டு. அக்காலத்தே தமிழ் உயர்வர்க்கங்கள் முஸ்லிம்கட்கு எதிராக சிங்கள தேசியவாதிகளை ஆதரித்தன என்பதை நாவலன் காட்டாது விட்டு விட்டார். இதையே தான் தமிழ் உயர்வர்க்க சக்திகள் மலையக மக்களுக்கும் செய்தார்கள். செய்திகள் ஆவணங்களை அப்படியே பயன்படுத்துவதை வி;ட்டு அதை மாக்சிய ஆய்வுமுறைக்குட்படுத்தவேண்டும் என்று நாவலன் எண்ணவில்லை.
 
 
"தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியிலிருந்து உருவான அமிர்தலிங்கத்தினது தலைமையின்போது நிலப்பிரபுத்துவக் கூறுகளும் அந்நிய மூலதனத்துக்கு எதிரான கூறுகளும் இருந்தது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிய வர்க்க சார்புகளும் கொண்டிருந்தது என நாவலனின் தத்துவ ஆய்வு கண்டறிந்து சொல்கிறது.
 
 
முதலில் நாவலன் யாழ்குடாநாட்டுள் நிலப்பிரபுத்துவத்தைத் தேடுவதை நிறுத்தவேண்டும். அங்கு சிறுநிலவுடமை வர்க்கமே இருந்தது என்பதுடன் பெரிய விவசாயப் பொருளாதாரத்துக்கு ஏற்ற நிலப்பரப்போ உற்பத்தியோ விவசாயத் தொழிலாளர்களோ அங்கு இருக்கவில்லை.யாழ்.குடாநாட்டின் விவசாயப் பொருளாதார உற்பத்தியானது தனது சொந்த தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாதளவு சிறியதாகும்.
 
 
புகையிலை,வெங்காயம்,மிளகாய் என்பன பணப்பயிர்களாக பயிரிடப்பட்ட போதும் இது பொருளாதார ரீதியாகப் பெரும் பாத்திரத்தை வகிக்கவில்லை. இது யாழ் குடாநாட்டின் ஒரு சில பரப்புக்களில் கடும் உழைப்பில் முறியும் சிறு விவசாயிகளின் குத்தகை விவசாயிகளின் சிறு பொருளாதார நடவடிக்கையாகவே இருந்தது.சிறு நிலவுடமை வடிவமாக பரப்புக்கணக்கான சிறுசிறு நிலத்துண்டுகளில் உழைத்தமையால் கடும் சுரண்டலும் சோத்துக்கையால் காகம் கலையாத நப்பித்தனமும் நிலவியது. நிலமின்மையும் காணிச்சண்டையும் குடாநாட்டின் பண்பாக இருந்தது. வன்னியில் நிலப்பிரபுக்கள் இருக்கவில்லை. நிலத்தை சொந்தமாகக் கொண்டாட சுதந்திர விவசாயிகள் இருந்தனர். கிழக்கில் மட்டுமே போடியார்கள் எனப்படும் நிலத்தை அதிகமாய்க் கொண்ட பெரிய விவசாயிகள் இருந்தனர். யாழ்.குடாநாட்டினைப் போல் வன்னியிலும் கிழக்கிலும் குத்தகை விவசாயிகள் இருக்கவில்லை. ஆனால் தமிழ்தேசியவாத அரசியல் சக்திகள் அது சார்ந்த தலைமை என்பன வன்னியிலோ, கிழக்கிலோ இருந்து தோன்றவில்லை.மாறாக யாழ்.குடாநாட்டின் அரச சேவையால் ஆங்கிலக் கல்வியால் உருவான சக்திகளிடமிருந்தே தோன்றியது.தமிழ்தேசியவாத அரசியல் என்பது யாழ்.நடுத்தரவர்க்கத்தின் படையலாகும்.அங்குள்ள சிறு நிலவுடமை அமைப்புக்கு தமிழ்த்தேசியத்தை கொண்டியங்கும் நடுத்தரவர்க்கத்தை மிஞ்சிய பலம் இருக்கவில்லை.
 
 
ஆக அமிர்தலிங்கம் நிலப்பிரபுத்துவ,தரகுமுதலாளிய நலன்களைப் பிரதிபலித்தார் என்பது பொருத்தமற்றது. அவர் திட்டவட்டமான தமிழ் நடுத்தரவர்க்க கல்வியாளர்களின் பிரதிநிதிகளாகும்.யாழ்ப்பாணத்திலோ ஏனைய தமிழ்ப் பகுதிகளிலோ தமிழ் முதலாளியச் சக்திகள் அல்லது தரகு முதலாளியச் சக்திகளை வளர்ந்து இருக்கவில்லை. பெரும் வர்த்தக நி;லையங்களோ தொழிற்சாலைகளோ தமிழ்ப்பகுதிகளில் இல்லை தமிழ் வர்த்தகர்கள் கொழும்பில் வர்த்தகத்துறையிலேயே பெரும் பகுதியாக இருந்தனர். அவர்கள் தென்னிலங்கையில் உள்ள யுஎன்பி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற தேசியக்கட்சிகளையே ஆதரித்தனர்.
 
 
இவர்களில் எவரும் தமிழரசுக்கட்சியை ஆதரிக்கவில்லை. பதவிக்கு மாறி வரும் எல்லாக் கட்சிகளையும் ஆதரித்தனர். அமிர்தலிங்கம் அந்நிய மூலதனத்தை எதிர்த்ததாய் நாவலன் எழுதியுள்ளார்.அமிர்தலிங்கம் ஏனைய தமிழ்த்தேசியவாதிகளைப் போல் சட்டத்தரணி, பொருளாதார அறிவு படைத்திராதவர் அந்நிய மூலதனத்தை எதிர்த்த இடதுசாரிகளையே எதிர்த்தனர். பிரிட்டிஸ் ஜனநாயகத்தை நம்பியவர் சிங்களவர் ஆட்;சியை விட பிரிட்டிஸ் ஆட்சி சிறந்தது கூடியளவு ஜனநாயகமானது என்று கருதியவர் இலங்கை குடியரசானதை எதிர்த்தவர்.திருமலைத் துறைமுகத்தை தமிழர் பிரச்னையைத் தீர்க்காமல் இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று பிரிட்டிஸ் மகாராணிக்கு தந்தி அடித்த செல்வநாயகத்தின் கட்சிக்காறர், சின்னஞ்சிறு இஸ்ரேல் 20 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளை அடக்கி ஆள்வதாக தமிழ் மக்களுக்கு மேடைகளில் அரசியல் பாடமெடுத்த மேற்குலக கருத்தியல் ஆதரவாளர் அந்நிய ஆட்சியை அந்நிய மூலதனத்தை எதிர்த்தவர்கள் இலங்கை இடதுசாரிகள் முக்கியமாக எல்எல்எஸ்பி யும் இலங்கைத் தொழிலாளர்களுமே தவிர அமிர்தலிங்கம் அல்ல, வலதுசாரியான அமிர்தலிங்கம் எப்படி அந்நிய மூலதனத்தை எதிர்ப்பார். இலங்கையில் அந்நிய சொத்துக்களை தேசிய உடமையாக்குவதை எதி;ர்த்த கட்சியல்லவா தமிழரசுக்கட்சி.நிலச்சீர்திருத்தம் முதல் லேக் ஹவுஸ் ஐ தேசிய மயமாக்கல் வரை அமிர்தலிங்கம் எதிர்த்த ஆள் இப்படியானவர் எப்படி நாவலனுக்கு அந்நிய மூலதனத்தை எதிர்த்தவரானார். அந்நிய மூலதன எதிர்ப்பு என்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றல்லவா பொருள்.அமிர்தலிங்கம் எந்தக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்?அவர் பிரிட்டிஸ் தூதரகத்தில் விருந்து சாப்பிட்டுப் பழகியவரல்லவா?
 
 
.அமிர்தலிங்கத்தின் தமிழரசு வாலிபர் முன்னணி என்பது ஒருபெரும் சேனையல்ல பத்து இருபது பேர் கொண்ட சிறு குழுவாகும்.அதற்குத் தொழில் தமிழரசுக்கட்சிக்கு தேர்தல் காலத்தில் மேடை போட்டுதோரணம்கட்டித்தூக்குவதாகும்.அமிர்தலிங்கம் தனது பல்கலைக்கழக படிப்புக் காலத்திலேயே இலங்கை- இந்தியா தமிழ்நாடுகளை இணைந்த பெரிய தமிழ்நாடு என்ற இலட்சியத்தைப் பிரச்சாரம் செய்தவர். இது தமிழ்நாட்டின் திராவிட நாடு மற்றும் ம.பொ.சி.,ஆதித்தனார் ஆகியோரின் பிரிவினைவாதக் கருத்துக்களுடன் தொடர்புடையதாகும். இவை யாவும் பிரிட்டிஸ் பிரிவினைவாதக் கருத்துக்களின் விளைச்சலே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அமிர்தலிங்கத்திடம் திராவிடர் ஆரியர் நோயின் கூறுகள் ஏராளமாக இருந்தன. இலங்கை இடதுசாரி இயக்கங்களை தமிழ், சிங்கள, முஸ்லிம் உழைப்பாளர்கள் ஒன்றிணைந்த தொழிலாளர் எழுச்சியை நாசமறுத்த அமிர்தலிங்கம் போன்றவர்கள் நாவலனுக்கு அந்நிய மூலதன எதிர்ப்பாளர்களாய் தோன்றுகிறார்கள். இதுவா மாக்சியப் பார்வை?
 
 
‘சிங்களப் பேரினவாத நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவம்’ என்ற அரசியல் வரையறை நாவலனால் அடிக்கடி எழுதப்படுகின்றது. இதன் மூலம் தமிழ்,சிங்கள முரண்பாட்டின் ஏகாதிபத்தியத் தாக்கம் வலுக்குறைக்கப்பட்டு விடுகின்றது. சிங்களப் பேரினவாதம் நிலப்பிரபுத்துவ தரகு முதலாளியம் போன்ற கருத்தியல்களை நாம் ஆராயவேண்டும். 1880 இல் இலங்கையில் இருந்த பிரதான பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையான கோப்புயில் 90 வீதம் பிரி;ட்டிஸ்காரரிடமே இருந்தது. மிகுதி 10வீதத்தில் பெரும்பகுதி இந்திய தோட்ட உடமையாளர்களாக இருந்தபோது மிகச் சிறு பிரிவு பெரும் தோட்டமே சிங்கள, தமிழ் நிலவுடமையாளர்களிடம் இருந்தது. 1917 இல் 300க்கு மேற்பட்ட இலங்கையில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் 29 மட்டுமே இலங்கையருக்குச் சொந்தமாக இருந்தது. அதாவது 500,000 ஏக்கருக்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களில் 2வீதம் மட்டுமே இலங்கையரிடமிருந்து 1934 இல் இலங்கையின் முழு றப்பர் தோட்டங்களில் 77வீத பிரிட்டிஸ்காரர்களிடம் இருந்தது. ஆக முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களான தேயிலை, றப்பர், கோப்பில என்பன இலங்கையரிடம் இருக்கவில்லை என்பதுடன் முக்கிய ஏற்றுமதிப் பண்டமல்லாத தெங்குப்பொருள் உற்பத்தி மற்றும் இரத்தினக்கல் தோண்டுதல் என்பனவே இலங்கையரிடமிருந்தது. எனினும் பெருந்தோட்ட உற்பத்திப் பொருள் சுரங்கத் தொழில் ஏற்றுமதி வர்த்தகம்,முகவர்கள்,கப்பல்சேவை, காப்புறுதி வங்கி யாவும் பிரிட்ஸ்காரர்களிடமே இருந்தது. எனவே சிங்கள மக்கள் மத்தியில் பெரிய நிலப்பிரபுத்துவ அமைப்பு நிலவியது என்ற நாவலனின் கருத்து தவறானது. இலங்கை முழுவதும் ‘சிறு நிலவுடமைச் சமூகமே’ இருந்தது.சுதந்திரமடைந்த பின்பு 1951இல் கூட 70வீத தேயிலைத் தோட்டங்கள், 40வீத றப்பர் தோட்டங்கள்,10வீத தென்னந்தோட்டங்கள் பிரிட்டிஸ்காரரிடமே இருந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் 90வீதம் அவர்கள் கட்டுப்படுத்தினார்கள். 9 வங்கிகளில் ஒரு வங்கி மட்டுமே இலங்கையரிடமிருந்தது. காப்புறுதிச் சொத்தாகிய 83 மில்லியன் ரூபாயில் 73.7மில்லியன் ரூபாய் அந்நிய நிறுவனங்களிடமிருந்தது. சாராயம், கட்டிடத் தொழில் உணவுப் பொருள் தயாரிப்பு என்பனவே இலங்கையரிடம் இருந்தது.
 
 
எனவே முதலாளித்துவ உருவாக்கத்துக்குத் தேவையான பரந்த நிலப்பிரபுத்துவ முறையிலான பொருளாதாரம் இருக்கவில்லை. 1952 இல் உலக வங்கி இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஐரோப்பாவில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் இலங்கையுள் வளர்ந்த சிறு தொழிற்சாலைகளையும் மூடப்பண்ணியது.எனவே உள்நாட்டு சிறு நில உடமையாளர்கள்,இடைத்தரகர்கள், உயர்குடும்பங்கள், வர்த்தகர்கள், நிலம் மீது அக்கஙை கொண்டவர்கள், அரச சேவையாளர்கள், நடுத்தரவர்க்கம் என்பன பிரிட்டனில் தங்கி வாழும் கட்டாயம் இருந்தது. இவர்கள் பிரிட்டனை எதிர்க்கும் பொருளாதாரச் சக்தி படைத்தவர்களல்ல. 1947இல் யுஎன்பி இவர்களின் கட்சியாகப் பிறந்தது. பிரிட்டிஸ் சார்பு இடதுசாரி எதிர்ப்பு அரசியலையும் நடாத்தியது. பிரிட்டிஸ் இராஜதந்திர முதிர்ச்சியின் முன்பு இவர்கள் அரசியல் தமிழ், முஸ்லிம் விரோதத்தை உடைமைகளாய்க் கொண்டன. 1950 கட்கு முன்பு இலங்கை அரசியலில் சிங்கள், தமிழ், இனவாத அரசியல் இருக்கவில்லை என்று நாம் சுலபமாக நிறுவிவிடலாம். தொழிற்துறை வளர்ச்சியை யுஎன்பி தடை செய்தது என்பது நாவலனின் மற்றொரு வாதம்.உண்மையில் அதற்கான பொருளாதாரபலமற்ற வர்க்கமாக இருந்தது. அது தொழில்துறையை படைக்க வல்ல மூலதன பலத்தை பெற்றிராத தரகுச் சக்திகளாக இருந்தது.இது யுஎன்பிக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளும் அன்றைய கால கட்டத்தினது நிலைமையாக இருந்தது. இவர்கள் சுயமாக செயற்படமுடியாத ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்ற சுய அடையாளம் பேணமுடியாத அரசியலைச் செய்தன. 1956இல் பண்டாரநாயக்கா, மற்றும் பிலிப் குணவர்த்தனா அரசு தான் தனியார் முதலாளித்துவம் வளர்ந்திராத இலங்கையில் சுயசார்ப்புப் பொருளாதாரத்தை அரசு வகைப்பட்ட முதலாளித்துவத்தைக் கட்ட முயன்றனர். இந்த சுயசார்பு அரசியல் பொருளாதாரத்தை நிறுத்தவே பண்டாரநாயக்கா கொலை நிகழ்த்தப்பட்டு தீவிர தமிழ், சிங்கள விரோத நிலையை ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்தன. யுஎன்பி யின் டி.எஸ்.சேனநாயக்காவை டட்லியை வெறுக்காத தமிழ் தேசியவாதிகள் பண்டாரநாயக்காவை வெறுத்தமையின் அரசியல் உள்ளுடன் இது தான்.
 
 
இன்றும் 1950 தொடக்கம் 1980 கள் வரை நிலவிய சிங்கள இனவாதம் நிலவுவதாக நாவலன் வாரத்;தைகளை அணிதிரட்டுகின்றார். இன்றுள்ள சிங்கள், முதலாளிய சக்திகள் பல பத்து வருடம் கண் முன்பிருந்த சிறிய பொருளாதார பலத்தைக் கூட உலக மயமாதலில் இழந்துவிட்டு நிற்கின்றன. உள்ளுரில் தமிழ், சிங்கள,முஸ்லிம் முதலாளித்துவ சக்திகளிடையே பொருளாதாரம் இன்று இலங்கையில் இல்லை.முழுமையான ஆசிய மயப்படலுக்கு உள்ளாகியுள்ள நாட்டில் தம்முள் முரண்ட பொருளாதாரத் தேவைகள் இல்லை. இவர்கள் ஒன்றிணைந்து உலக மயமாதலின் பொருளாதாரப் பயன்பாட்டில் பங்கு பெற முயல்கின்றனர். மறுபடி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் வளர்வதும் எதிர்காலத்தில் சீன, ஹிந்தி மொழிகளின் தேவைகள் கூட இலங்கையுள் ஏற்படவுள்ள காலத்தில் தமிழ்,சிங்களச் சண்டைகள் பயன்படமாட்டா ஆக,இலங்கையில் இன்று நிலவுவது முதலாளிய வகைப்பட்ட இலங்கைத் தேசியமாகும்.இலங்கையர் என்ற உணர்வுக்கான போராட்டமாகும். சிங்கள மக்களை பெரும்பான்மையாய்க் கொண்ட காரணத்தால் அது சிங்கள தேசியவாதச் சாயலை கொண்டிருப்பது இயல்பானதாகும். சிங்கள இனவாதமும் இலங்கை தழுவிய தேசபக்த உணர்வு அல்லது தேசியம் இரண்டும் ஒன்றல்ல.உலக மயமாக்கலுக்கு முந்திய இன முரண்பாடுகள் உலக மயமாதலின் பின்பு எப்படி மாறும் என்ற கேள்வி நாவலனிடம் இல்லை. சமூகம் மாறாத்தன்மை வாய்ந்ததா?அசைவியக்கமற்றதா?
 
 
ஏகாதிபத்திய இராணுவப் பாசிசக் கூலிப்படையான புலிகள் தமிழ்,சிங்கள முரண்பாடுகளை உயிருடன் வைத்திருக்க இடைவிடாது போராடி வந்தனர். தமிழ்த்தேசம், சிங்களதேசம், சிங்களப் பேரினவாதம் என்ற சொற்றொடர்களை உருவாக்கி வழக்கில் கொண்டு வந்தனர். இங்கு நாவலனிடம் நிலவும் சிங்களப் பேரினவாதம் என்ற எழுத்து அணி நடை, தமிழினவாதத்தின் சொல்லாடலே இலங்கை தழுவிய தேசியப் போக்கை உருவாக்கவும் ஆசிய மயமாதலில் இரண்டறக் கலக்கவும் இலங்கை நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இந்தியா முதல் சீனா வரை பிளவுபடாத இன,மத, முரண்பாடுகள் இல்லாத ஆசியாவை உருவாக்க முயலும் காலமிது. அது அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றாகும். ஆசியா பிளவுபட்ட காலம் போய் ஒன்றிணையும் காலமாகும். பெரும்பான்மை இனமென்றால் அது எப்போதும் ஒடுக்கும் இனமாக இருப்பதில்லை. இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்த புறமற்றும் அக நிபந்தனைகள் மாறும்போது இனமுரண்பாடுகள் மாறாமல் விடாது. யூகோஸ்லாவியாவின் பெரும்பான்மை இனமான சேர்பியர்கள் சிறு தேசிய இனம்களான குரோட்டிய, பொஸ்னிய, கொசவோ , அல்பானியர்களால் சிதறடிக்கப்படுவதை நாம் பார்த்தோம். இன்றைய ஈராக்கிய மக்களை ஒரு அமெரிக்கக் கூலியானசிறுபான்மையின குர்திஸ் அரசியல்வாதி ஆளவில்லையா?
 
 
இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள், முஸ்லிம்,மலையக மக்களை அடுத்து நாலாவது இடத்தை கிட்டத்தட்ட 3.9 வீதம் வகிக்கும் தமிழர்களின் தேசிய விடுதலை என்ற பெயரிலான புலிப்பாசிசம் முழு இலங்கை மக்களுக்கும் மேலான பயங்கரவாதமாகிவிட்டது. அது உலகு தழுவிய பிரச்சாரம், பொருளாதாரம், அமைப்பு வடிவம் ஆகியவற்றைக் கொண்டு ஆசியாவையே பயமூட்ட முயல்கின்றது. இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த அரசியல் தலைவரையும் கொல்லும் பலம் பெற்றுள்ளது. தமிழர்களை மட்டுமல்ல சிங்கள,முஸ்லிம் மக்களையும்தென்னிலங்கையின்பாதாளஉலகக்கோஷ்டீகளையும் இலங்கை இராணுவம்,பொலிஸ் உளவுத்துறைகளையும் விலைக்கு வாங்குகின்றது. கனடா, அமெரிக்கா வரை தேர்தலில் நிதி தருமளவு அதற்கு தொடர்பும் உறவும் உள்ளது.
 
 
தமிழ் சிங்கள முரண்பாடானது வரலாற்று ரீதியிலான பகைமையுடையதல்ல என்று நிறுவ நேர்மையாக முயற்சித்த நாவலன் இரு இனங்கட்கும் மதம் சார்ந்த முரண்பாடுகள் நிலவின என்பதான நிரூபணங்கட்கு எம்மை இட்டுச் செல்கிறார். 6ம் நூற்றாண்டில் எழுந்த மகாவம்சம் தான் சிங்கள அடிப்படைவாதக் கருத்துக்களைப் புகுத்தியதாகவும் விகாரைகளை மையமாய்க் கொண்ட பிற்கால சிங்கள இனவாதமாகவும் அவர் வரலாற்றை தமிழ்த்தேசியவாதத்தின் விருப்புக்கேற்ப வழி நடத்திச் செல்கிறார். முதலில் இது அவரது சொந்த வாதங்களை மறுப்பதில் தொடங்குகின்றது. தேசிய உருவாக்கம் என்பது தேசியப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதார அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறி வந்தவர், பிரிட்டிஸ் ஆட்சியில் Madame Bluvatsky போன்றவர்களின் காலத்தை பௌத்த சிங்கள போக்குகளின் தொடக்கம் என்றவர். இப்போ சிங்கள இனவாதத்தின் மூலம் 6ம் நூற்றாண்டில் மகாவம்ச காலத்துக்குரியது என்கிறார். பௌத்தம் பாலி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தை சிங்கள மொழி தோன்றிக் கொண்டிருந்த காலத்தை அன்றைய சமுதாய உற்பத்தி உறவுகளிலும் இலங்கையை சூழ நிலவிய ஆக்கிரமிப்புச் சூழலிலும் நாவலன் காண முயலவில்லை. சிங்கள இனஉருவாக்கத்தை வரலாற்று ரீதியாகவும் தொடர்ச்சிவிட்டுப் போகாமலும் அவரால் விளக்க முடியவில்லை. மாறாக ஒன்றை ஒன்று மறுக்கக்கூடிய நிகழ்வுகளாக எமது பார்வைக்கு விட்டுச் செல்கிறார். என்ன தான் இனவாதம் கடந்தவராக தன்னை நாவலன் காட்ட இடையறாது பிரயத்தனம் செய்தபோதும் சிங்கள இன உணர்வு தமிழர்கட்கு எதிரானது என்ற அவரது ஆழமான மனப்பதிவானது சிங்கள இன உருவாக்கத்தை பௌத்த மதத்துடன் கூடிய குற்றத்தன்மை கொண்டதாக விபரிக்கப் பார்க்கின்றார். சிங்கள அரசுகள் இலங்கையின் தென்பகுதியை நோக்கி நகர்ந்தமை இடைவிடாத இந்தியப்படையெடுப்புக்களே என்பதை அவர் குறித்துள்ளபோதும் மகாவம்சத்தை பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்கின் தொடக்கம் என்று இட்டுக்கட்டப் பின் நிற்கவில்லை.
 
 
மகாவம்சம் தோன்றிய காலத்திய இலங்கை,இந்திய நிலைமைகளை நாம் ஆராய்ந்தோமாயின் வர்ணச்சிர மதம் பௌத்தத்தை அழிக்கத் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் சைவசமயம் தீவிரமாக வளரத் தொடங்கியது.சைவம் பரப்பும் நாயன்மார்கள் தோன்றி சிவனின் பெருமை கொண்டாடியபோது வைணவ ஆழ்வார்கள் திருமாலைப் போற்றத் தொடங்கினர்.அந்தணர்,சூத்திரர்,பெண்கள், சாதிகள், கடந்து இந்த மதம்கள் அனைவரையும் ஆட்கொள்ள முயல்வதாகத் தோற்றம் காட்டின.6ம்7ம் நூற்றாண்டு காலப்பகுதி முழுவதும் பௌத்தத்துக்கு எதிராக அனல்வாதம், புனல்வாதம் ஆகிய தர்க்க முறைகள் தோன்றின. ஆயிரக்கணக்கான பௌத்த விகாரைகளையும் பௌத்த மடம்களையும் சைவர்களும் வைணவர்களும் கைப்பற்றினார்கள். அழித்தார்கள். தமது கோவில்களாக ஆக்கினார்கள். இலட்சக்கணக்கான பௌத்த துறவிகள் கொலை செய்யப்பட்டனர். பௌத்த தமிழ்நூல்கள் என்று விடாமல் அழிக்கப்பட்டன தீயிடப்பட்டன. ஆற்றில் இடப்பட்டன. நாவுக்கரசரின் ஷஷநாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற குரல் அரசனை மட்டும் எதிர்த்ததல்ல பௌத்தத்தையும் எதிர்த்தே பிறந்ததாகும்.நாயன்மார்கள் பௌத்த துறவிகள் போன்று எளிமையான கோலம் பூண்டனர். மக்களிடம் சென்றனர்.அவர்கள் தருவதை உண்டனர் என்பன பௌத்த மதத்தை வெல்ல கண்ட உபாயமே.களப்பிரர் ஆட்சிக்காலம் என்பது தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்த காலம். இது இருண்டகாலம் என்று வர்ணிக்கப்படுவதேன்? இக்காலத்திய பௌத்த நூல்கள், பௌத்த இலக்கியங்கள் அழிக்கப்பட்டு அது வரலாறு அடையாளம் காணமுடியாத இருண்ட காலமாக ஆக்கப்பட்டது. கி.பி. 5ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பௌத்தம் உயர்நிலையாய் இருந்தது. 6ம்,7ம் நூற்றாண்டுகளில் அதன் அழிவு தொடங்கிவிட்டது. கி.பி. 788 முதல் 820 வரை வாழ்ந்த ஆதி சங்கரர் பௌத்தத்தின் உள்ளுடன்களைத் திருடி இந்து மதத்துக்கு தத்துவத் தயாரிப்புச் செய்து கொடுத்தார். உழைப்பாளி மக்களை சூத்திரர் என்று இழித்து வர்ணச்சிரமத்து பலம் சேர்த்தார்.
 
 
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தமிழ் பௌத்த துறவிகளும் தமிழ்பௌத்த நூல்களும் பௌத்த விகாரைகளும் இருந்த காலம் முடிவுக்கு வந்தது. பெரும் குளங்கள், நீர்ப்பாசன முயற்சிகள் தோன்றி விவசாயம் பெருகியது.வர்த்தகம் பரவத் தொடங்கி பெரிய அரசுகள் எழுந்தன. இலங்கை மேலான தென்னிந்தியப் படையெடுப்புக்கள், பாண்டியர்களில் தொடங்கி பின்பு சோழர்கள் வரை அதிகரித்தத் தொடங்கியது. சைவசமயம் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவத் தொடங்கியது.6ம்7ம் நூற்றாண்டுகளிலே தான் திருகோணமலை, திருக்கேதீஸ்வரம்,நகுலேஸ்வரம்,முன்னேஸ்வரம் போன்ற கோயில்கள் கட்டப்படுகின்றன.படையெடுப்புக்களுடனும் குடியேற்றங்களுடனும் சைவம் இலங்கையுள் நுழைகிறது. புகழ்பெற்ற சைவக் கோவில்கள் யாவும் கடற்கரைப்பகுதியை ஒட்டிய கரையோரம்களில் ஏற்பட்டமை தற்செயலானதன்று. இந்தியாவிலும் இலங்கையிலும் பெருமதமாக இருந்த பௌத்தம் இலங்கையில் மட்டும் அதுவும் இந்தியப்படையெடுப்புக்கு எட்டாத தென்னிலங்கையில் மக்களிடம் மட்டும் எஞ்சியது. படையெடுப்பாளர்கள் பௌத்த விகாரைகளை அழிப்பது கொள்ளையிடல், பௌத்தர்களைக் கொல்வது நடைபெற்றது. இக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த தமிழ்பௌத்தர்கள் மதம் மாறியோ அல்லது தென்பகுதிக்கு தப்பியோடியோ தான் அவர்கள் தப்பியிருக்க முடியும். இக்காலகட்டத்தே தான் இலங்கையில் மகாவம்சம் எழுகிறது என்பது பௌத்த மதக்காப்புக்கும் அந்நிய படையெடுப்புக்கு எதிரான படைப்பாகவே அது எழுகின்றது. அது தமிழர்களை எதிர்க்கவில்லை. மாறாக பௌத்த விரோதிகளையே எதிர்;த்தது. மகாவம்சம் தமிழர்,சிங்களவர் சண்டை என்பது பிற்கால இனவாதப் பார்வையாகும். அது இந்தியப் படையெடுப்புக்கு எதிராக மக்களை அணி திரட்டும் கருத்தாக இருந்தது.இதன் மூலமே பௌத்தம் இலங்கையில் தப்பிப் பிழைத்தது. மகாவம்சம் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஆகக் கூடிய வரலாற்றுச் செய்திகளை உடடைய நூலுமாகும். இந்தியாவில் பௌத்தத்தை ஆதரிக்கும் நாவலன் இலங்கையில் பௌத்தத்ததை எதிர்ப்பதற்கு தமிழ்தேசியவாத உணர்வு தான் காரணமாக உள்ளது. மகாவம்சத்தை பழிக்காத தமிழரசு மேடைகள் கிடையாது.தன்னை இடதுசாரியாகவும் காட்ட ஆசையுறும் நாவலன் இப்படிப்பட்ட தருணங்களில் தமிழ்தேசியவாதத்துள் குப்புறச் சரிந்து விடுகின்றார். இந்த விடயத்தில் அமிர்தலி;ங்கம் முதல் நாவலன் வரைக்கும் ஒரே தன்மை தான் வெளிப்படுகின்றது.
 
 
மகாயான பௌத்தம் தமிழ்மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்பட்டதால் மகாயான, பௌத்தம் சார்ந்த மொழியாக இலங்கையில் தமிழும் எதிர்க்கப்பட்டது என்று கருத்துருவம்களை நாவலன் உருவாக்குகின்றார். புத்தர் மரணமடைந்து நூறு வருடங்களிலேயே மகாயானம் என்ற பிரிவு பௌத்தத்தில் தோன்றிவிட்டது. வட இந்தியாவில் குசாணர்கள், மொளரியர்கள், மகாயானத்தைப் பின்பற்றியவர்களே.திபேத் முதல் சீனா வரை பௌத்தம் மகாயான வடிவிலேயே பரவிச் சென்றது. இது இந்து மதச்சாயலுடன் அந்தந்த நாட்டு மரபுகளையும் உள்வாங்கியது. மரபான பௌத்தத்திடம் இல்லாத சிற்பம், ஓவியம், இசை நடனம், கலைகள் ஆகியவற்றையும் வளர்த்தது. ஆனால் தமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள்தாம் பௌத்த இலக்கியம்கள் தமிழில் எழுதிய போதும் மத நூல்களை பாளி மொழியிலேயே எழுதினர். இவர்கள் பாளி மொழி அறிஞர்களாகவும் இருந்தனர்.அது அக்காலத்தில் அனைத்து பௌத்த அறிஞர்களதும் பொதுப் பண்பாக இருந்தது. மேலும் இலங்கையில் தேரோவாத பௌத்தம் நிலவிய போதும் மகாயான பௌத்தத்தின் பாதிப்பும் அதில் காணப்பட்டது. இரண்டு பௌத்த மதப் பிரிவுகளும் ஒன்றை ஒன்று நிறுவப் போரிட்டன அல்லது கடும் மோதல் நிகழ்ந்தது என்பதுக்கு ஆதாரமில்லை. இது சைவசமய எழுச்சி போன்று அல்லாமல் பல நூற்றாண்டு கால நிகழ்வாக படிப்படியாகவும் உணரப்படாமலும் நடைபெற்ற மாற்றங்களாகும்.
 
 
இலங்கையில் மகாயான பௌத்தத்தின் பாதிக்கப்பட்ட தேரோவாத பௌத்தம் காணப்பட்ட போதும் அது தனக்கேயுரிய இந்து மதமற்றும் ஆதியான தெய்வம்கள் மரபுகளையும் இணைத்துக் கொண்டே காணப்பட்டது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே பண்பாட்டில் இருந்து பிறந்த மக்கள் என்ற அளவில் நாகவணக்கம் இரு பகுதியினரிடையேயும் காணப்பட்டது. இரு பிரிவு மக்களும் நாக என்பதை தம் பெயர்களில் பரவலாகக் கொண்டிருந்தனர். தமிழர்களிடம் எப்படி குருக்கள் அல்லது பிராமணர் ஆகியோர் மேல் வர்க்க வணக்கம் கோவில்களுடன் தொடர்புடையவர்களாகவும் கிராமங்களில் பூசாரி போன்றவர்கள் இருந்தனரோ அப்படியே பௌத்தர்களின் மேல் தட்டுடன் பௌத்த பிக்குகள் தொடர்;பு கொண்டிருக்க அடிமட்ட மக்களிடம் கிராமங்களில் ‘கப்புறாளை" மற்றும் பெண் பூசாரியான ‘பத்தினி காமியும் இருந்தனர். நாவலன் ஏதோ பௌத்த சிங்களமானது தனித்த தூய வடிவில் வாழ்ந்து தமிழர்களை ஒடுக்கிக் கொண்டிருப்பதாகக் கதை வடிக்கின்றார். சி;ங்களக் கிராமங்கள் மகாவம்சத்தாலும் பௌத்த பிக்குகளாலும் நிரம்பி நிற்பதாயும் வழிகாட்டப்படுவதாகவும் அவர் தீவிரமாய்க் கட்டமைக்கின்றார். ஆனால் அது உண்மையல்ல. பலவகையான பேய்,பூதங்கள் வணங்கப்பட்டன. தமிழர்களிடம் உள்ளது போல இரத்தப்பிசாசு, அக்கினிப்பிசாசு, உதிரவைரவர், உதிரமுனி, இரத்தக்காளி, இரத்தக்காட்டேரி போன்று சிங்கள மக்களிடமும் றீறியகா, மகா கோல சந்நியாகா, ஒட்டிகுமார கீணியம்கா, மகா சோறொன், யச, களுகுமாரயகா,றட்டயகா போன்ற பிசாசுகள் சார்ந்த நம்பிக்கைகள் நிலவின. 12 பிசாசுகள் ஒன்று சேர்ந்து ‘கறாயகு’ என்று அழைக்கப்பட்டது. மனித,மிருக இரத்தம் குடிக்கும் பிசாசுகள் போன்ற புராதன பௌத்தத்துக்கு முந்திய நம்பிக்கைகளும் காணப்பட்டன.
தமிழ்மக்களைப் போன்று மோகினி, கண்ணூறு, பில்லி,சூனியம்,நீர்க்கிரிகைகள்,நம்பிக்கைகளும் நோய்களைக் குணமாக்கும் தெய்வங்களான பத்தினித் தெய்வம் கிரியம்மாமார், சத்பத்தினி என்பன அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து என்பனவற்றை குணமாக்கும் தெய்வங்களாக நம்பப்பட்டது. பயிர்கள் வளராவிட்டால் மழை பெய்யாவிட்டால் தெய்வக் கோபம்,தெய்வக்குற்றம் இதற்கான கடவுள்கள், கிரிகைகள் இருந்தன. அறுவடைத் தெய்வ வணக்கம் இருந்தது. ஆறு, குளம், மலை, மரவணக்கங்கள் நிலவின.கண்ணகி வழிபாடு தமிழர்கட்கு சமமாக சிங்கள மக்களிடம் நிலவியது.பத்தினித் தெய்வயோ என்று வணங்கப்பட்டது.
 
 
கண்ணகி சிங்கள மக்களிடம் கற்புக்கரசியாகவும் தெய்வமாகவும் மதிக்கப்பட்டாள். திருமணச் சடங்குகள், மரணச்சடங்குகள், நீர்க்கடன், குளிர்த்திகொடும்பாவி, வீடுகாவல் செய்யும் கிரிகை, கழிப்புக் கழித்தல் என்பன இந்து, பௌத்த சமய நம்பிக்கைகட்கும் மூத்த புராதன மரபுகட்கு உரியவை என்று நம்பலாம். கதிர்காமம் சிங்கள கப்புறாளையினால் வாய்கட்டிய நிலையில் மந்திரங்கள் எதுவும் இன்றி பூசை செய்யப்படுவதாகும் இது தொன்மையான மரவணக்கத்துடன் தொடர்புடையது. இதே போன்றே செல்வச் சந்நிதியிலும் மரவணக்கத்தில் இருந்து வேல் வணக்கம் இறுதியாகக் உருவணக்கத்துக்கு வந்தடைந்தவையாகும். பௌத்தம் கி.மு.3ம் நூற்றாண்டு தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு வந்தபோது நாகவழிபாடு, இயக்க மற்றும் பூதவழிபாடு,இயற்கை, ஆவிவழிபாடு என்பன நிலவின. பௌத்த மதம் இந்து நம்பிக்கைகளையும் பகுதியாய்க் கொள்வது தவிர்க்கமுடியாத விதியாகியது.பௌத்தம் சமயக்கிரிகைகளை மறுத்த ஒன்று. கடவுள்,ஆன்மா, அவதாரம்,மறுபிறவி, மோட்சம், நரகம், இறந்தோர் வழிபாடு போன்றவை அதற்கு புறம்பானவையே என்றும் எல்லா பௌத்தர்களையும் மகாயானம், தேரோவாதம் என்ற வித்தியாசமின்றி இலங்கையுள் இவை ஆட்கொண்டது. இலங்கையுள் எல்லா பௌத்தர்களும் இந்து தெய்வம்கள், பூதம்,பிசாசுகள்,யோகம், மந்திரம்களை நம்பினர். இவைகள் எல்லாவற்றையும் புத்தரும் போதி சத்துவரும் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பினர்.
 
 
பேளத்த துறவிகள் கலைகள், நாடகம்கள், நடனம் இவைகளை வெறுத்தனர். இவற்றை எதிர்த்து எழுதினர். ஆனால் சிங்கள கிராம மக்களிடம் ஏராளமான நாடகங்கள், கூத்துக்கள், நடனவகைகள் நிலவின. மந்திரத்தில் பாடல்கள் நிலவின. இயற்கையை வசப்படுத்தும் மந்திர ஆடல் பாடல்கள் நிலவின. கண்டிய நடனம், மலைநாட்டுச் சிங்கள வழிபாடுகள் என்பன பௌத்தத்துக்கு முரணானவையாகவே கொள்ள வேண்டும்.ஆனால் இந்தப் பல்பண்புடைய மதப்போக்குகளை நாவலன் ஒற்றைக் கருத்தியலாக பௌத்த வடிவமாக மட்டுமே புரிந்து கொள்கின்றார். இது நாவலனுடைய மட்டுமல்ல சகல தமிழ்த்தேசியவாதப் போக்காளர்களின் வழிவழியாய் வந்த மதிப்பீடுகளுமாகும்.
 
 
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காரருக்கு எதிராகப் போராடிய சிங்கள, பௌத்த போக்குகள் உள்ளன. கெப்பிட்டிப்பொல போன்ற கிளர்ச்சியாளர்கள் தமிழ்மன்னன் எனக் கருதப்பட்ட கண்டியின் கடைசி மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளைப் பதவியில் இருத்தவும் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் பிரிட்டனுக்கு எதிராகப் போராட சபதம் எடுத்தனர். கண்டி மன்னர் சிறிவிக்கிரம ராஜசிங்கன் காத்தில் தமிழ்மொழி தான் கண்டியில் அரச மொழியாக இருந்தது. அவன் பௌத்த மதத்தைப் பாதுகாத்தவன் ஆக பௌத்தம் தமிழ் எதிர்ப்புக் குணத்தைக் கொண்டிருக்கவில்லை. கண்டி தலதா மாளிகையிலிருந்த புத்தரின் புனித தந்த தாது பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்தவர்களின் பிரதான பலமாக இருந்தது. எனவே பிரிட்டிஸ் அரசு அந்த புத்தரின் புனித தந்த தாதுவைக் கைப்பற்றி பெரும் விழா எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் தலதா மாளிகைiயில் வைத்தனர். புனித தந்த தாதுவை யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே தம்மை ஆளத்தகுதியுடையவர்கள் என்று கண்டி மக்கள் நம்பினர்.
 
 
‘இடதுசாரிகள் தாம் சார்ந்த வர்க்கத்தை தேசிய விடுதலை நோக்கில் அணிதிரட்டவில்லை என்பது நாவலனின் அடுத்த அரசியல் மனக்குறையாகும்.
1970 களில் தமிழ்தேசிய வாதம் ஆயுதமெடுத்த சமயம் இலங்கையில் சுயசார்ப்புப் பொருளாதாரத்தைக் கட்டப் போராடிக் கொண்டிருந்த ஒரு இடதுசாரிஐக்கியமுன்னணி அரசு இருந்தது.
 
 
உலகவங்கி,சர்வதேச நாணய வங்கிகளால் கடும் நெருக்கடி தரப்பட்ட ஜேவிபி யின் எழுச்சியால் பலவீனப்பட்ட ஆனால் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகட்கு சார்பான அரசாக அது இருந்தது. இதற்கு எதிராகவே தமிழ் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சி நாச வேலையைத் தொடங்கியது. இதன் மூலம் இலங்கையின் தொழிலாள வர்க்கம் தமிழ், சிங்கள இனவாதத்தின் புதிய பரிமாணத்தின் முன்பு விடப்பட்டது. அமெரிக்க மசாசூசெட் மாநிலத்தின் தமிழ்ஈழ ஆதரவுத் தீர்மானம் பிரிட்டனில் குடியேறிந்த யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் தமிழ்தேசிய ஆதரவு நிலை இவைகளின் ஆதரவு நிலையில் தமிழ் இராணுவக் குழுக்கள் தோன்றுகின்றது.லண்டனை தலைமையகமாகக் கொண்ட தமிழ் தேசியவாதிகளின் குழுக்கள் தமிழ் இராணுவக்குழுக்களை ஆக்கவும் இராணுவப் பயிற்சி பெற்றுத் தரவும் முனைந்தனர். எனினும் தமிழ் ஆயுதக் குழுக்களின் உதிரிகள் தமிழ்நாட்டில் தலைமறைவு வாழ்வுக்கு சென்றிருந்தபோதும் அவர்கள் இந்திய அரசின் கவனத்தைப் பெற்று இருக்கவில்லை. இலங்கையில் மேற்குலக சார்பு யுஎன்பி வந்த பின்பே இந்திய அரசு ஆதரவு தமிழ் இராணுவக் குழுக்களுக்கு கிடைக்கின்றது.
 
 
1977 இல் யுஎன்பி இலங்கையில் ஆட்சிக்கு வந்த பின்பு தான் பயங்கரவவாதத் தடைச்சட்டடம் பிரிட்டனில் ஐரிஸ் மக்களின் போராட்டத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தையொத்ததாகக் கொண்டு வரப்படுகின்றது. சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி ஆட்சிமுறை சுதந்திர வர்த்தக வலயம் என்பனவும் வருகின்றது. தேர்தலுக்கு முன்பே ஜேஆர்க்கும் அமிர்தலிங்கத்துக்கும் இரகசிய அரசியல் கூட்டு இருந்தது. தேர்தலில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்களை யுஎன்பி க்கு வாக்களிக்கச் செய்து இருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக அமி;ர்தலிங்கம் வந்தார். 1977 இல் இலங்கையில் முழு இடதுசாரிகளும் தேர்தலில் தோற்றிருந்தார்கள். தமிழ்தேசியவாதிகளும் சிங்களத் தேசியவாதிகளுமே பாராளுமன்றத்தில் இருந்தார்கள். ஜேஆர் பதவிக்கு வந்தவுடன் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அழித்து யுஎன்பி தொழிற்சங்கங்களை உருவாக்கினார். ஒன்றரை இலட்சம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினார். இந்தச் சமயத்தில் இடதுசாரிகட்கு எதிராக அமிர்தலிங்கம் ஜேர் உடன் ஒத்துழைத்தார். தமிழ், சிங்கள இரு பகுதி இனவாதிகளும் ஒன்றாகப் பவனி வந்தாhர்கள். கொழும்புக்கு அமெரிக்காவின் ஹோப் கப்பல் வந்தபோது அமிர்தலிங்கமும் பிரேமதாசாவும் ஒன்றாக தம்பதிகளாகப் போனார்கள். பின்பு யுஎன்பி இனக்கலவரத்தை தமிழ்மக்களுக்கு எதிராய்க் கொண்டு வந்தபோது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என ஜேஆர் கேட்டபோது யுஎன்பிக்கு வாக்குப் போட்ட தமிழர்களுக்கே அடியும் கிடைத்தது. அமிர்தலிங்கம் ஜேஆர் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டதாக பேசத் தொடங்கினார். தமிழ்தேசியவாதிகள் இடதுசாரிகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களை உருக்குலைத்தார்கள். தமிழ்,சிங்கள, முஸ்லிம் இனவாதம் கடந்த அரசியலை முன்னெடுக்க முடியாமல் தடுத்தார்கள். தமிழ்தேசியவாதிகள் தமிழ்பகுதிகளில் கொம்யூனிஸ்டுகளை ஒடுக்கப்பட்ட சாதிகளின் மட்டத்துக்கு தள்ளிவைத்தார்கள்.தீவிர இடதுசாரி எதிர்ப்புக் காட்டப்பட்டது. 1970 களின் இறுதிப் பகுதியில் வல்வெட்டித்துறையில் தொழிலாளர்பாதை பத்திரிகையை வீடு வீடாக விற்ற புரட்சிக் கம்யூனிசக் கட்சித் தோழர்களை தங்கத்துரையின் ஆட்கள் வில்லுக்கத்தியைக் காட்டி விற்றபத்திரிகையைதிருப்பிக்கொடுத்து வாங்கிய 15 சதம் காசையும் திருப்பிக் கொடுக்கும்படி வெருட்டினார்கள்.
 
 
யுஎன்பி,தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்தில் இலங்கைத் தொழிலாள வர்க்கம் தான் இதுவரை போராடிப் பெற்ற எல்லாவற்றையும் இழந்து இருந்தது. தமிழ்,சி;ங்கள இருபகுதி இனவாதிகளும் இணைந்து கூட்டாக இடதுசாரிகளைத் தோற்கடித்து இருந்தார்கள். அக்காலத்தில் ஜேஆரின் நெருங்கிய கூட்டாளிகளாக அமெரிக்க நபர்களான நீலன் திருச்செல்வமும் ஜேஏ வில்சனும் சட்ட மேதைகள் என்ற பெயரில் இருந்தனர். ஜனாதிபதி ஆட்சிமுறை,பயங்கரவாத தடைச்சட்டம் இரண்டுக்கும் சட்ட வரைவுக்கு உதவியவர்கள் இவர்களே. இத்துடன் இவர்கள் அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் அதே சமயம் நெருக்கமாக இருந்தார்கள். அமிர்தலிங்கம் தம்மை யுஎன்பி ஏமாற்றிவிட்டதாக கூறத் தொடங்கியபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர்கள் அமிர்தலிங்கம் துரோகம் செய்துவிட்டதாகக் கூறத் தொடங்கினர். இடதுசாரி அரசின் காலத்தில் வலதுசாரி நிலையெடுத்த தமிழ்த்தேசியவாதம் இப்போ வலதுசாரி யுஎன்பி அரசு காலத்தில் இடதுசாரிப் பக்கம் சாயத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையில் இடதுசாரிப் பிரிவுக்கு சந்ததியார் போன்றவர்களும் வலதுசாரிப் பிரிவுக்கு மாவை சேனாதிராசா போன்றவர்களை உள்ளடக்கிய பிரிவுகளும் உடைவுகளும் ஏற்பட்டன. இரத்தினசபாபதி, சந்தததியார், விசுவாந்ததேவன் போன்றவர்களின் இடதுசாரித் தமிழ்த்தேசியவாதப் பிரிவுகள் தோன்றின. அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே இடதுசாரிகள் ஊடுருவிவிட்டதாய்க் குறை கூறியதுடன் தான் கொல்வின், என்எம் இடம் மாக்சியம் பயின்றதாகப் பேசத் தொடங்கினார். இடதுசாரிப் போக்குடையவர்களைப் பலவீனப்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் ‘விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம்’ பற்றி தீர்மானம் போடவேண்டி வந்தது.
 
 
மேற்குலக சார்பு யுஎன்பி யின் காலத்தில் தான் இந்தியா தமிழ் இயக்கங்கட்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் தந்தது. இதன் நோக்கம் இலங்கை அரசின் மேற்குலக சார்பு நிலையை தடுப்பதும் தமிழ் ஆயுத இயக்கம்களை அதற்கேற்ப பயன்படுத்துவதும் தான். அப்போ சோவியத் யூனியன் இருந்தது. இந்திய சோவியத் உறவுகள் நிலவின. இந்திய ஸ்டாலினிசக் கட்சிகள் சில இந்திய அரசையும் இடதுசாரி அரசாகக் கணித்த காலமது.எனவே யுஎன்பி வலதுசாரி அரசுக்கு எதிராக தமிழ் இயக்கம்கள் சிவப்புச் சாயத்தை தம்மேல் அப்பிக் கொள்ள முயன்றன. பாலசிங்கம் போன்றவர்கள் சோசலிச நோக்கில் தாம் செயற்படுவதாக எடுத்து விளக்கம் தந்தனர். ஈபிஆர்எல்எவ் இல் பத்மநாபா, புளொட்டில் சந்ததியார், ஈரோஸ், என்எல்எவ்ரி என்போர் சோசலிசத் தத்துவம்கள் சிங்கள மக்களை இணைப்பது போன்றவற்றையும் பேசத் தொடங்கினர். ஆனால் தமிழ் இயக்கம்கள் கையில் ஆயுதம் எடுத்தவுடன் சகலதும் மாறத் தொடங்கின. அவர்கள் இடதுசாரிப் போக்குடையவர்களையே உள்ளும் புறமும் அழிக்கத் தொடங்கினர். புளொட் உடன் வலதுசாரி இராணுவவாதம் பெருத்து அமைப்புள் அழிப்புக்கள் ஆரம்பமாகின. ‘புளொட் ஒரு சோசலிச இராணுவமா? அல்லது முதலாளிய இராணுவமா? ‘என்று கேள்வி எழுப்பியவர்கள் முதல் சந்ததியார் வரை அழிக்கப்பட்டனர். ஈபிஆர்எல்எவ் இல் பத்மநாபா போன்றவர்கட்குப் பதிலாக வரதராஜப்பெருமாள், டக்ளஸ் போன்ற வலதுசாரிகள் பலம் பெற்றனர். ஈரோஸ் இன் இரத்தினசபாபதி போன்றவர்கள் ஓரம் கட்டி தள்ளப்பட்டனர். இடதுசாரிச் சிந்தனையுடையவர்கள் குழப்பங்களை மூட்டுபவர்களாகவும் ஒற்றுமையைக் குலைப்பவர்களாகவும் தமிழ் வலதுசாரி விளக்கம்கள் தரப்படி;டன. சந்ததியார், சுந்தரம், விசுவானந்த தேவன் போன்றவர்களும் வியானந்தன், அண்ணாமலை உட்பட பல கொம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். சோசலிசம் பேசிய ஈரோஸ் அனைத்து மக்களின் அடிமைச் சங்கிலியையும் அறுப்போம் என்று சிங்கள மொழியில் கூட வானொலி நடத்திய புளொட், சிஐஏ உளவாளி என்று அலன் தம்பதிகளைக் கடத்தி உழைப்பாளர்களின் அமைப்புக்ளை உருவாக்கிய ஈபிஆர்எல்எவ், மற்றும் என்எல்எவ்ரி என்பன தமிழ் வலதுசாரி அரசியலுக்கும் முதலாளியப் போக்குகட்கும் சரியத் தொடங்கின.
 
 
இதன் மூலம் ஆரம்பகாலத்தில் இடதுசாரி அவியல் போக்குகள் முடிந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சமமான அரசியல் போக்கு தொடங்கியது. இதற்கான முக்கிய காரணி யாழ்.நடுத்தரவர்க்க அரசியல் புலமாகும். இலங்கையில் முஸ்லிம், சிங்கள மக்களை விட யாழ்.தமிழர்கள் மத்தியிலேயே நடுத்தரவர்க்கம் பலமாக இருந்தது. இவர்கள் இயற்கையாகவே மேற்குலக சார்பும் ஆங்கிலம் படித்தவர்களே கல்வியாளர்கள் என்ற பெருமையும் கொண்டவர்கள். இவர்கள் சிங்களத்தை மட்டுமே எதிர்த்தவர்கள், இவர்கள் அப்புக்காத்து, டாக்குத்தர், எக்கவுண்டன், என்ஜினியர், உத்தியோகம் பெறப் படித்தவர்கள் இதனால் சிங்கள மக்களை விட வெளிநாடுகளில் வாழக் கொடுத்துவைத்தவர்கள், பிரிட்டனில் வீட்டில் கூட ஆங்கிலம் பேசிக் கொண்டே தமிழ் மொழி உரிமைக்குப் போராடியவர்கள்.தமிழ் தேசியவாதிகளை இலங்கையில் வளர்த்து வழிகாட்டியதில் இவர்களே பெரும் பங்கு கொண்டிருந்தனர். உண்மையில் தமிழ்தேசியவாத அரசியல் என்பது சாதாரண தமிழ்மக்களின் அரசியலாகத் தொடங்கவில்லை.
 
 
நாவலன் ஏனைய தமிழ்தேசியவாதிகளைப் போல் அவர்கள் வழியில் இடதுசாரிகளைக் குற்றம் சொல்கிறார். ஏகாதிபத்தியத்தின் பிளவுவாத அரசியலில் இருந்து புறப்பட்ட பிரிவினைப் போக்கை இடதுசாரிகள் ஆதரித்து இருக்க வேண்டுமா? இடதுசாரிகள் தலைமை தரத்தக்க அகமற்றும் புறவயமான சூழல்கள் இருந்ததா? தமிழ் யாழ்ப்பாண நடுத்தரவர்க்க அரசியலின் தமிழ்ஈழம் வர்க்க அடிப்படையில் இடதுசாரிகளை எப்படி ஏற்கும்? ஜேஆர் ஆட்சியின் தீவிர வலதுசாரி அரசியல் நிலைமையில் அதற்கு எதிராக தமிழ்த்தேசியம் தற்காலிக முற்போக்கு முகம் காட்டியபோதும் அது எந்த நேரத்திலும் கழுத்தறுத்து விடும் போக்கிலேயே இருந்தது. தமிழ்த்தேசியவாதத்தின் பின்னால் போனவர்களின் பெரும்பகுதி மாவோவாதிகளாக இருந்தனர். மாவோவாதம் என்பது ஒரு விவசாயக் கோட்பாடு என்ற அளவில் தேசியவாதத்துக்கும் நெருக்கமாக இருந்தது. இன்று புதுவை இரத்தினதுரை பாலகுமார் வரையிலான மாவோவாதிகள் புலிப்பாசிஸ்டுகளாக பரிணாமம் பெற்றதில் இவை முடிவடைந்தன.இடதுசாரிகள்தொழிற்சங்கம்கள் தமிழ்பரப்பில் அழிக்கப்பட்டது என்பது புலிப்பாசிசம் சார்பான வலதுசாரிப் போக்குகட்கு பலம் சேர்த்து வெறும் இராணுவாதக் குழுக்களாக இவை வளர இடம் விட்டது. அரசியலின் இடத்தை ஆயுதம்கள் கைப்பற்றிக் கொண்டன. நாவலன் தனது கட்டுரையில் இடதுசாரிகள் பற்றிய எந்தத் தெளிவான விளக்கத்தையும் வைக்கவில்லை எதையும் வரையறுத்துச் சொல்லவுமில்லை. எல்லாம் போகிற போக்கில் அவசர கோலத்திலான விளக்கங்களாகவேயிருந்தன. தமிழ்த்தேசிய விடுதலை, தென்னிலங்கை இடதுசாரிகளுடன் போயிருக்கவேண்டுமா? இலங்கை தழுவிய புரட்சிக்கு அவர்களுடன் கூட இணைந்து ஆயத்தம் செய்திருக்கவேண்டுமா? வர்க்கப் போராட்டத்தையும் இனவாதிகளின் ஆயுதமேந்துதலையும் ஒன்று சேரப் போட்டு நாவலன் குழப்பியிருக்கின்றார்.
 
 
தமிழ்ப்பாசிசம் வந்து வடக்கு கிழக்கில் இருந்த 50 வருடத்துக்கும் மேற்பட்ட இடதுசாரிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றுவிடாமல் அழித்தார்கள். இலங்கையில் தொழிலாளர் இயக்கம் இல்லாத பகுதிகளாக இவை ஆக்கப்பட்டன. கொல்லப்பட்ட இடதுசாரிகள் தவிர மிச்சமானவர்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகட்கும் தப்பியோடினார்கள். தமிழ்ப் பகுதிகளில் தொழிலாளர்கட்கு வேலை நிறுத்தம் செய்ய சுதந்திரமான தொழிற்சங்க இயக்கம் கட்டக் கூட உரிமை இல்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 100 வருடம் கொண்டாடிய மே தினத்தைக் கூட இடதுசாரிகளால் தமிழ்ப்பகுதிகளில் நடாத்தமுடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய ஒருசில தொழிற்சாலைகள் முதல் கூட்டுறவுத்துறை வரை புலிகளால் சூறையாடி அழிக்கப்பட்டதால் பல பத்தாயிரம் தொழிலாளர்கள் வாழ்விழந்தனர். தேசிய இனச் சுயநிர்ணய உரிமை பேசும் நாவலன் ஏன் தொழிலாளர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசவலி;லை. தமிழ் பாசிசத்தால் அழிக்கப்பட்ட இடதுசாரிகளை தமிழ்தேசியவாதத்தால் இல்லாமல் செய்யப்பட்;ட சோசலிசப் போக்குகளை நாவலன் குற்றவாளிவாயாய்க் காட்ட முயல்கின்றார். கொலையாளியை விட்டு விட்டு கொலையுண்டவரை குற்றம் சொல்கிறார். தமிழ் ஜனநாயக சக்திகளை ,சகோதர இயக்கம்களை, புலிப்பாசிஸ்டுகள் அழித்தமைக்கு இடதுசாரிகளா பொறுப்பு? தென்னிலங்கையில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தி பல ஆயிரம் சி;ங்களப் பொதுமக்களைக் கொன்றமைக்கு இடதுசாரிகளா காரணம்? கிழக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றார்களே அதற்கு இடதுசாரிகளா பொறுப்பு எடுக்கவேண்டும்? தமிழ்தேசியவாதிகள் இன்று சர்வதேச சமூகம் என்று ஏகாதிபத்தியத்தின் பின்னால் அலைகிறார்களே அதற்கு சோசலிஸ்டுகளா சொல்லிக் கொடுத்தார்கள்? நாவலன் தேசியத்துக்காக இடதுசாரிச் சிந்தனையை பலி தரும் மனிதராகவே எங்கும் உலாவுகிறார். தேசியத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பதை அவர் மறவாதிருப்பது நல்லது.
 
 
தமிழ்தேசியப் பிரச்னையில் ‘இடதுசாரிகள் தவறிழைத்தார்கள் என்ற முறைப்பாட்டை நாவலனும் வைக்கத் தவறவில்லை. ஒரே சமயத்தில் தமிழ்த்தேசியவாதத்தின் அனுதாபியாகவும் அதே சமயம் இடதுசாரியாகவும் இருக்க முடியும் என்று நாவலன் நம்புகின்றார். தேசியவாதத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பது அவரது கவனத்துக்கு எட்டாமல் போயிருக்கலாம். இலங்கையில் தொழிலாளர்களையும் இடதுசாரி இயக்கங்களையும் வளரவிடாமல் தடுக்கவே சிங்கள தேசியவாதம் போல் தமிழ் தேசியவாதமும் எழுப்பப்பட்டது. இடதுசாரிப் போக்குகளைப் பலவீனப்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக தமிழினவாதம் நாவலனுக்குப் படவில்லை. மாறாக தமிழ், சிங்களத் தேசியவாதப் போக்குகளால் பாதிப்புற்ற இடதுசாரிகளையே எதிரிகளாக்கும் அரசியலுக்கு அவரும் போகிறார். இடதுசாரிகளான பிலிப் குணவர்த்தனா அதன் பின்பு 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி என்பன சோசலிசத்துக்கு முந்திய சமுதாய நிலைமைகளைப் படைக்கும் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டும் போராட்டத்தை நடத்தியவர்கள் என்பதையும் அவர் கண்டாரில்லை. தமிழினவாதம் மேல் சந்தேகமற்றவராக நாவலன் இயக்கப்படுகின்றார்.ரஸ்ய,சீன ஜேவிபி என்று ஸ்டாலினிச, மாவோயிச இயக்கங்களை ஒன்று கலந்தடித்த அவர் இலங்கையில் முதன் முதலில் தோன்றிய மாக்சிய இயக்கமான எல்எஸ்எஸ்பி யை பி;லிப் குணவர்த்தனாவை கொல்வின் ஆர்டி சில்வாவைப் பற்றிய ஒரு சிறு ஞாபகமூட்டலுக்கு கூட வரமுடியாதளவு இடதுசாரி இயக்கங்கள் பற்றிய தகவல் தட்டுப்பாட்டால் வரலாற்றுணர்வுப் போதாமையால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கையில் பெரிய மாக்சிய இயக்கமாக விளங்கிய எல்எஸ்எஸ்பி யை ரொட்ஸ்கியுடன் தொடர்பு கொண்டிருந்த பிலிப் குணவர்த்தனாவை இந்தியத் துணைக்கண்டத்தின் சிறந்த மாக்சியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்த கொல்வின் ஆர்டி சில்வாவை பேசுவதை ஒருவர் தற்செயலாகவேனும் தவற விட்டு விட்டார் என்றால் அவர் எந்த வகையிலும் இலங்கை இடதுசாரி இயக்கங்களைப் பேசும் தொடக்க நிலைத் தகுதியைக் கூட இழந்துவிடுகின்றார்.
 
 
தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் அரசியலுக்காக நிற்பது வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்து அரசியலைத் தொடங்குவது என்பனவற்றை தமிழ்ப்பாசிசம் குற்றமாக்கிவிட்டுள்ள நிலையில் புலிகள் மட்டுமல்ல புகலிட நாடுகளில் உள்ள தமிழ்முதலாளித்துவ ஜனநாயக சக்திகளும் மாக்சிய விரோத அரசியலை தீவிரமாக முன்னெடுத்த நிலையில் நாவலனும் இடதுசாரிகள் தவறிழைத்ததான குற்றப்வாய்முறைப்பாட்டோடு வருகின்றார். இ;க்குற்றம் கூறலானது சோசலிசத்து இடைஞ்சல் செய்தார்கள் என்ற பார்வையில் இருந்து வராமல் புலிப்பாசிசம் தலைமை எடுத்த தமிழினவாதத்துக்கு மாக்சியவாதிகளையும் தொழிற்சங்க வாதிகளையும் கொன்றொழித்தவர்கட்கு இடதுசாரி இயக்கம்கட்கு தடைவிதித்து மே தினம் கூடக் கொண்டாட முடியாமல் செய்தவர்கட்காக நாவலன் நிற்கிறார். தமிழ்தேசியவாதம் சிங்கள இன ஒடுக்குமுறைக்காற்றாது கொதிக்கவில்லை. மாறாக அது சிங்கள , முஸ்லிம் இனத்துவேசம்களாய் பாசிச இன வெறுப்புக்களால் இலங்கை மக்கள் அனைவர் மேலும் போர் தொடுத்தது. சகல இன மக்களையும் கொன்றது. இலங்கை அரசு வன்முறையின் எதிர்விளைவாக புலிப்பயங்கரம் தோன்றவில்லை. மாறாக இன்று புலிப்பாசிசப் பயங்கரவாதத்தின் எதிர்வினையாக இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே அரச வன்முறை நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இலங்கையை ஆசிய முதலாளிய வளர்ச்சியின் ஈர்ப்புள் கொண்டு வர முயல்கின்றது. சிறு தேசிய இனம் என்றால் அது முழுத்தேசத்துக்கும் எதி;ரான மக்களுக்கு விரோதமான சக்தியாக மாறாது என்று இல்லை. முன்னாள் யூகோஸ்லாவியவில் எப்படி குரோட்டியா முதல் கொசவோ வரை சிறு தேசிய இனம்கள் பெரிய இனத்தை அழிக்கும் ஏகாதிபதி;தியத்தால் ஊட்டம் பெற்ற கூலி இயக்கம்களாக மாறின என்ற படிப்பினைகள் இருக்கின்றன. புலிகள் ஒரு ஏகாதிபத்திய கூலி;ப்படை என்ற அம்சம் நாவலனுக்கு ஒரு பொருட்டாகப்படவில்லை.
 
 
பல்லினத்தன்மையை இலங்கை தழுவிய அரசியலை ஏதோ புனிதக்கேடு எனக் கருதுமளவு தேசியவாதத்தின் பாதிப்பு நாவலனிடம் உள்ளது. கொலனிக்காலப் போராட்டங்களின் போது ஆசிய ஆபிரிக்க நாடுகளில் தேசம்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது எல்எஸ்எஸ்பி சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வாதாடி வந்தது.
 
 
1950 களிலேயே இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்பார்கள், பாகிஸ்தான் மீண்டுமொரு தேசமாக உடையும் என்பதை கொல்வின்ஆர்டி சில்வா எதிர்வு கூறியதுடன் இதை ஏகாதிபத்தியம்கள் கையாளும் என்பதையும் மதிப்பிட்டவர்.தமிழ்த்தேசியம் எனப்படுவது தமிழரசுக் காலம் முதல் புலிகள் வரை ஏகாதிபத்தியப் பின்புலத்தில் இயக்கப்பட்டது என்ற கவனமில்லாதவர்கட்கு இடதுசாரிகள் தவறிழைத்தனர் என்ற கருதுகோள்தான் தெரிகின்றது. தமிழ், சிங்கள இனவாதிகளின் இடைவிடாத எதிர்ப்பாலும் பிரமாண்டமான பொய்ப்பிரச்சாரங்களாலும் இடதுசாரிகள் தோற்கவேண்டி வந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளின் ஒத்துழையாமையாலும் அவர்கள் பாராளுமன்ற வாதத்தை வந்தடைந்தனர். இருந்தபோதும் கொல்வின்ஆர்டி சில்வா போன்றவர்கள் இழைத்த தவறுகள் தொழிலாள வர்க்க இலட்சியத்துடன் சம்பந்தப்பட்டதேயொழிய தமிழ்த்தேசியவாதத்தை ஏற்று அங்கீகரித்த மறுத்தமையுடன் சம்பந்தப்பட்டதல்ல. தமிழ்தேசியவாதம் சிங்கள முஸ்லிம் மக்களுடன் கூடி வாழ்ந்தறியாது.யாழ்.மத்திய தர வர்க்கம் தன் சொந்த யாழ்.குடாநாட்டுக்குள்ளேயே படியாதவர்கள், எளிய சாதிகள் என்று பல மக்கள் பிரிவுகளை தள்ளிவைத்த வாழ்ந்த சமூகமாகும். இவர்கள் பிரிட்டிசாருக்கு எதிராக இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடிய வரலாறு இல்லை. மாறாக நாட்டைப் பிரிக்கப் போராடினார்கள். தமிழரசு முதல் புலிகள் வரை பிரிட்டிஸ் உட்பட அந்நிய சக்திகள் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தியதாக பேசியிருக்கின்றார்களா? மாறாக சுதந்திரமடைந்த பின்பு தான் சகல கொடுமைகளும் தொடங்கியதாக சிங்களவர்கள் உரிமைகளைப் பறித்தெடுத்து விட்டதாக முறையிடத் தொடங்கினார்கள்.
 
 
நாவலனுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, தேசியவிடுதலை என்பன என்றென்றுக்குமாக நிலவக்கூடியவை என்ற மனப்பதிவு உள்ளது. ஸ்டாலினின் தேசிய இனம்களின் சுயநிர்ணயம் பற்றிய கருத்தை இன்றும் கூட எடுத்துக்காட்டும் நிலையில் அவர் விடப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். லெனின் சுயநிர்ணய உரிமை பற்றி எழுதிக் கிட்டத்தட்ட 104 வருடங்கள் ஆகிவிட்டது. லெனின் அதை அக்காலத்திய வரலாற்று அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எழுதினார். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் தன் சொந்த விதிகளால் இயக்கப்படுகின்றது. எனவே உலக மயமாதலை அறியாத தனித்தனி தேசிய அரசுகள் நிலவிய காலத்தில் லெனின் எழுதியதை இன்று பிரயோகிக்க முயல்வது லெனினுக்கு மட்டுமல்ல இது சமுதாய வளர்ச்சி விதிகளுக்கும் முரணாகும். இங்கு நாவலன் காட்டும் ஸ்டாலினின் தேசிய இனம்கள் பற்றிய நூல் ஒரு கடந்த காலத்திய ஆவணம் என்ற பெறுமதி மட்டுமே உடையது. தேசிய இனம்களின் சுயநிர்ணயம் என்ற கருத்தை சோசலிசத்துக்குப் பொருத்துவதை ரோசாலுக்சம்பேர்க் ஏற்கவில்லை.இதற்குப் பதிலளிக்கவே லெனின் இந்த நூலை எழுதுமாறு ஸ்டாலினைத் தூண்டினார். இதில் உள்ள பெரும் கருத்துக்கள் லெனினுக்குரியவை என்பதுடன் இதை எழுதத் தேவையான தத்துவார்த்த நூல்களை ஒஸ்திரியா,ஜெர்மனிய சமூக ஜனநாயகவாதிகளிடமிருந்து பெற்று இதை ஜெர்மனிய மொழியில் இருந்து ரஸ்ய மொழிக்கு மொழி பெயர்த்து ஸ்டாலினுக்குக் கொடுத்தவர் புகாரின் தான். இது கடைசியில் ஸ்டாலின் கருத்தாக ஆகிவிட்டது. இன்று உலகில் 192 நாடுகளள் ஐ.நா.சபையில் உள்ளன. ஆனால் உலகில் 5000 க்கும் மேற்பட்ட தேசிய இனம்கள், மக்கள் பிரிவுகள் உள்ளன. சகலரும் இனம் மக்கள் பிரிவுகளின் அடிப்படையில் பிரிவதாயின் உலகில் உலகை சில ஆயிரம் நாடுகளாக பிரிக்கவேண்டி வரும்.; இந்தியாவில் கிட்டத்தட்ட 1600 மொழிகள் உள்ளன. இதில் 33 மொழிகள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகளாகும். இங்கு இந்தியாவை எத்தனை நாடுகளாய்ப் பிரி;ப்பது? இன்றைய உலகு தழுவிய பொருளாதாரப் பரவலின் காலத்தில் இது மக்களுக்கு எதைக் கொண்டு வரும்.இன்றைய காலம் பிரிந்தவை உடைந்தவை ஒன்றாகும் காலமாகும். அமெரிக்க மசாசூசெட்ஸ் தமிழ்ஈழ ஆதரவுத் தீர்மானம், மொசாட் உளவுத்துறைப் பயிற்சி, நோர்வே உட்பட ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மறைமுக உதவிகள், அமெரிக்க இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள தாய்லாந்து புலிகளின் பிரதான ஆயுதம் வாங்கும் கடத்தும் தளமாக இருப்பது என்று விசாரிக்கப்படவேண்டியவை ஏராளம் உள்ளது.
 
 
‘பல்தேசிய இனநாடுகள்’ என்ற தலைப்பில் நாவலன் எழுதும்போது தேசியத்தை வளர்த்து எடுக்கவேண்டிய சக்திகளே தேசியப் பொருளாதாரத்துக்கு எதிராகச் செயற்படுகின்றன என்கிறார்.தமிழ்த்தேசியம் அதன் வளர்ச்சியான தமிழ்ப்பாசிசம் என்பன இலங்கையின் தேசியப் பொருளாதாரத்துக்கு எதிரான சக்திகளாகவே எழுந்தன என்பதுடன் தமி;ழ்ப்பகுதிகளில் கூட ஒரு சுயசார்புப் பொருளாதாரம் உருவாகமுடியாமல் புலிப்பாசிஸ்டுகள் தடுத்தனர்.புலிகள் ஒரு பாசிசப் பண்புபடைத்த இயக்கம் என்ற அளவில் அது மக்களை கொள்ளையிட்டது,சூறையாடியது. ஒரு மக்கள் தழுவிய பொருளாதாரத் திட்டத்துக்கான பொறுமையோ அறிவோ அதனிடம் இல்லை. ஆக்கம் அல்ல அழிவே அதன் செயலாகும். தனக்குத் தேவையான வளங்களை அது தானே ஆக்கவில்லை. அதை மக்கள் அதீதமாய்ச் சுரண்டியது. பலவந்தம் சட்டவிரோத முறைகள் ஊடாகத் தனக்குத் தேவையானவற்றை திரட்டியது. தமது சொந்த நுகர்வுக்கு உற்பத்தி செய்யும் சந்தைக்கு உற்பத்தி செய்யாத சிறு விவசாயிகளை புலிகள் கொள்ளையடித்தபோது உற்பத்தி மென்மேலும் வீழ்ச்சியடைந்தது. ஒரு தொழி;ற்சாலையையோ பரவலான சிறு கைத் தொழில் முயற்சியையோ ஒரு கூட்டுப்பண்ணைத் திட்டத்தையோ புலிகள் ஆக்கவில்லை. மாறாக குறுக்கு வழியில் பணம் திரட்டதாமே சாராயம் காய்;ச்சி விற்றார்கள். தண்டனையாக பெரும் தண்டப்பணம் அறவிட்டார்கள். எனவே தமிழ்ப்பகுதிகள் தென்னிலங்கைப் பொருட்களில் தங்கும்படி ஆகியது,என்பதுடன் தமிழர்கள் ஒரு தனித்தேசியமாக பரிணாமம் பெறத்தக்க பக்குவநிலை எய்தியிருக்கவில்லை. வடக்கு,கிழக்கு பிரிவினைகள் பிரதேச ஊர்சார்ந்தவாதம்கள் நிலவின என்பது மட்டுமல்ல. நிலமற்ற விவசாயிகள்,சிறு நில உடமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட சமூகத்தில் நடுத்தரவர்க்க அரச சேவையாளர்களைக் கொண்ட யாழ்.குடாநாட்டில் மூலதனத்திரட்டல் தொழிற்துறை முதலீடுகட்கு ஏற்ற நிலை இருக்கவில்லை. உயிரோட்டமுள்ள அரசியல் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள்,சுதந்திரமான மக்கள் அமைப்புக்கள் எதுவுமற்ற நிலையில் புலிப்பாசிச ஒற்றைக் கருத்தியல் சர்வாதிகாரமாக சகலமுமானது.மாற்றுக் கருத்துடையவரைக் கொல், ஜனநாயக செயற்பாடுகளை அழி என்பதே தமிழ்ச்சமூகத்தின் பொதுக்கருத்தாக ஆக்கப்பட்டது. எனவே சுதந்திரமான பொருளாதார , அரசியல், சமூகச் செயற்பாடுகள் இல்லையானால் தேசியம் சாத்தியமான ஒன்றல்ல.
 
 
புலிப்பாசிச இராணுவ இயந்திரம் என்ற முறையில் அதற்கு தேசியப் பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற பொறுப்பு இருக்கவில்லை. புகலிட நாடுகளில் தமிழர்களிடம் திரட்டப்படும் நிதி, புலிகள் சர்வதேச மாபியா செயற்பாடுகழூடான பொருளாதாரத் திரட்டல்கள், புலிகளின் இராணுவச் செயற்பாடுகட்கும் உயர்மட்டத் தலைவர்களின் ஆடம்பர வாழ்வுக்கும் தான் பயன்பட்டது. இவை பொருளாதார முதலீடாக உற்பத்திக்கான திட்டத்துக்கானதாக மாறவில்லை. தமிழ்த்தேசியமானது தரகு முதலாளியமாகக் கூட இருக்க தகுதியற்ற வர்க்கமாகும். அது மேற்குலக ஆதரவில் பிறந்து இந்திய யுஎன்பி போன்ற சக்திகளாய் இடைக்காலத்தில் ஆதரிக்கப்பட்டு மீண்டும் இறுதியாக ஏகாதிபத்தியத்தின் கூலி இயக்கமாகி நிற்கிறது. நாவலன் தேசியப் பொருளாதாரத்தை வளர்க்கவேண்டிய சக்திகளே அதற்கு எதிராக இருந்தன என்று இலங்கை முதலாளித்துவ சக்திகளே குறி வைத்தே கூறினார். அவர் தமிழ் தேசியத்தை விசாரிக்கமுயலவில்லை. இலங்கையில் முதலாளியப் பொருளாதாரம் வளர முடியாமைக்கு அகரீதியான காரணங்கள் தமிழ்ப் பிரிவினைவாதமும் மூலதனம் திரளமுடியாமல் போனதே புறவயரீதியானது. ஏகாதிபத்தியம்கள் இலங்கையை தொழில் உற்பத்தி சார்ந்து வளரவிடவில்லை. எனவே இலங்கையைச் சூழவுள்ள மேற்குலகம் உருவாக்கிய தமிழ்த்தேசியவாதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக நாவலன் தொடவில்லை.
 
 
‘ஐரோப்பிய நாடுகளில் சந்தைப் பொருளாதார அமைப்புமுறை நிறுவப்படுவற்கு முன்பு இருந்த சூழல் இன்று மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது. மூன்றாம் உலக நாட்டு தேசிய இனம்கள் இடையே தமது தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் நடக்கிறது’ என்கிறார் நாவலன்.தேசிய மூலதனம்,தேசியப் பொருளாதாரம்,தேசிய தொழிற்துறை,தேசிய வங்கிகள் என்ற 1990 கட்கு உலக மயமாக்கலுக்கு முற்பட்ட காலம் இன்று இல்லை. தனித்தனி நாடுகளின் சுதந்திரமான வளர்ச்சி.சுயேச்சையான பொருளாதாரம் இன்று இல்லை. மூலப்பொருள், சந்தை உற்பத்தி என்பன தேசிய எல்லையுள் மட்டுப்படுத்தப்பட்டதாய் இல்லை. தேசிய எல்லைகளை மீறிய பொருளாதாரச் செயற்பாட்டின் காலத்தில் புதிய தேசம்கள், தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் நடைபெறாது. இன்று கண்டம் தழுவிய முதலாளிய மயமாதல் நடக்கின்றது. இங்கு தனிநாடுகளில் பொருளாதாரம் மட்டுப்பட்டிராது உதாரணமாக ஆசியாவுக்கு பொது வங்கி, பொதுநாணயம், பொதுவரி வருகின்றது. ஆசிய நாடுகள் தம்முன் கரையத் தொடங்குகின்றன. தொழில்துறை வளர்ச்சியானது ஏற்படும்போது பிரிவினைகள் உடைவுகள் வராது மாறாக பிரிந்தவை உடைந்தவை ஒன்று சேரும் ஒரு பொதுக்கூட்டில் வரும். வளம்கள், உழைப்புச் சக்திகள், உற்பத்தி என்பன ஒன்றிணைக்கப்பட்டு பரந்த பொருளாதாரச் செயற்பாடுகள் தொடங்கும் இங்கு தேசிய எல்லைகளை நிறுவும் போராட்டம் என்பது தற்கொலை முயற்சியாகும். ஆனால் இவை 3ம் உலக நாட்டு போட்டி நிலை வளர்ச்சிகட்கு எதிராக மேற்கு நாடுகனால் செயற்கையாகப் படைக்கப்படுகின்றது. இவை உள்நாட்டு யுத்தமாக இனமோதலாக ஆக்கப்படுகின்றது. எனினும் 3ம் உலக நாடுகள் வளர வளர மேற்குலக அரசியல் இhணுவச் சக்திகள் தோல்வியடைவது அதிகரிக்கும்.ஐரோப்பிய கூட்டமைப்புப் போல் ஆசியக் கூட்டமைப்பு உருவாகின்றது. லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பு உருவாகிவிட்டது. ஆபிரிக்க யூனியன் பத்து வருடம் இருந்ததை விடப் பலமடைந்துவிட்டது. இதனால் 3ம் உலக நாடுகளில் மேற்குலகத் தலையீடுகள் பலவீனமடையத் தொடங்கி விட்டது. தனித்தனி நாடுகளின் ஊடான முதலாளியப் பொருளாதாரம் தேசிய உருவாக்கம் நடைபெறும் காலம் இன்னமும் நிலவுவதாக நாவலன் எண்ணிக் கொண்டு இருக்கி;ன்றார். இது கடந்த காலத்துக்குரிய முதலாளிய வளர்ச்சிக் கட்;டமாகும். உலக மயமாதல் என்றால் தேசியப் பொருளாதாரம்,தேசியத் தொழிற்துறை,தேசிய அரசியல், தேசிய உற்பத்தி என்பன கண்டம் தழுவியதாக உலகம் தழுவியதாக ஆவது என்று நாவலன் புரிந்து கொள்ளாமையால் பழைய முதலாளித்துவப் பண்புகளை இக்காலத்திலும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். மூலதனம், தொழிற்துறை, உற்பத்தி, நுகர்வு என்பன ஆசிய மயமாதல் என்பது முழு ஆசிய தொழிலாளர்கள் ஒன்றுபடுதல் எதிர்காலத்தில் கிளர்ச்சி செய்தல் என்று அர்த்தம் கொள்ள நாவலனுக்கு தெரியாமையால் தேசியம், தேசிய எல்லை என்ற பழைய முதலாளிய வடிவங்கட்கு அவர் திரும்பிச் செல்கிறார்.
 
 
‘சர்வதேச மயமாதலை ஆசியாவுக்குள் தடுக்கவேண்டு:ம். அதற்கெதிரான இயக்கம்களை நடத்த வேண்டும்’ என்று நாவலன் கூறுகின்றார். இது மாக்சியப் பார்வையல்ல தீவிர இடதுசாரிவாதப் புத்தியின் நேரடி விளைவாகும்.சர்வதேச மயமாக்கல் என்ற பொருளாதார தொழிற்துறை வளர்ச்சியைத் தடுக்கமுடியாது அது முதலாளிய வளர்ச்சிக்கட்டத்தின் விதியாகும். அதை உலகார்ந்த சோசலிச இயக்கம்களால் தொழிலாளர் அமைப்புக்களால் மட்டுமே எதிரிட முடியும். நவீன உற்பத்தியுள் ஆசியா நுழையும் போது பல புதிய மில்லியன்கணக்கான நவீன பாட்டாளி வர்க்கம் அரங்குக்கு வருகின்றது. இவர்கள் சோசலிசப் புரட்சிக்கான சக்தியாக உருவாவார்கள். வளம்கள் கொள்ளையிடப்படுகின்றது. சுரண்டல் நடைபெறுகின்றது என்பதற்காக தொழில் மயமாவதை எதிர்க்கக்கூடாது.தொழிற்துறை இல்லாமல் சோசலிசம் இல்லை. முதலாளியத்தின் வளர்ச்சி பெற்ற படைப்பாக்கத் திறன் கொண்ட தொழிற்துறையைக் கைப்பற்றி தனதாக்கியே சோசலிசம் வளரும். சோவியத் யூனியன் முதல் கம்பூச்சியா வரை வளர்ச்சி பெற்ற முதலாளியத் தொழி;ற்துறை இல்லாத சமூகங்களில் புரட்சி வந்தமையால் தான் இவை சோசலிசத்தைக் கட்;ட பிரமாண்டமான சிரமங்களை எதிர்கொண்டன.எனவே தான் ரொட்ஸ்கிக்கு முன்னேறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரும் புரட்சி சோவியத் யூனியனைக் காக்கும் என்று எதிர்பார்த்தார்.
 
 
சோவியத் யூனியன் பட்ட சித்திரவதையும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் தோற்றமும் ரஸ்யாவில் மட்டும் தனிமைப்பட்ட சோசலிஸ நிலைமைகளாலும் தொழி;ற்துறை வளர்ச்சியின்மையாலும் ஏற்பட்டதாகும். பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்து தசை உழைப்புக்குப் பதில் இயந்திரங்களின் இரும்பு உழைப்பு வந்ததை மாக்ஸ் எதிர்க்கவில்லை. அதை அவர் சோசலிசத்துக்கு அனுசரணையாகவே பார்த்தார். கார்,விமானம்,தொலைக்காட்சி, இணையத்தளம்,காலரா, புற்றுநோய்க்கு மருந்து எல்லாம் முதலாளியம் தான் கண்டுபிடித்தது என்று நாம் எதிர்ப்பதில்லை மாறாக அதை கைப்பற்றி சோசலிஸ உற்பத்தி முறையின் கீழ்க் கொண்டு வர வேண்டும்.சோசலிச இயக்கம்கள் சுரண்டல், சுற்றாடல்மாசுபடல், மூலவளங்களைக் கொள்ளையிடல், எதிர்த்துப் போராடுவது என்பது சமூகமாற்றம் என்ற மையக்கருத்தின் அடிப்படையிலேயே தொழிற்துறை வளர்ந்து ஜனநாயகம் மக்களின் சுய உணர்வு தொழிலாளர்களின் பலம் என்பன பெருகும்போது எதிர்காலச் சோசலிசமானது ஒரு போதும் ஸ்டாலினையோ பொல் பொட்டையோ தோற்றுவிக்காது. தேசம் இணையத்தளத்தில் ஸ்டாலினைப் போற்றி எழுதும் நாவலன் மறுபுறம் தமிழ்த் தேசியத்திடம் மோகம் கொண்டவராகவும் இருக்கின்றார். அணுசக்தி, மரபணு, விண்வெளி ஆய்வு, இணையத்தளம் இவைபூகோளம்தழுவிப்பரவியமை உலக மயமாதலின் விளைவு என்று நாம் ஒதுக்க முடியுமா?
 
 
உலக மயமாதல் வராமல், ஆசியா,லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்hக என்பன ஒன்றுபடுதல் தொடங்கியிராது. பிரான்சிலும் ஜெர்மனியிலும் பிரிட்டனிலும் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலை நிறுத்தம் செய்வது போல் எதிர்காலத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் என்று தொழிலாளர்கள் ஒன்றாக கூட்டாக வேலை நிறுத்தம் எழுச்சி செய்யும் காலம் வரும் என்று நாவலன் போன்றவர்கள் நம்பமாட்டார்கள். திராவிடம், பிராமணியம், தலித்தியம், தமிழ், சிங்கம், பௌத்தம் என்று சகலதையும் ஒன்றாய்த் தகர்த்தெறியும் இந்தியத் துணைக்கண்டம் தழுவிய அரசியல் கட்டாயம் வரும் வந்து கொண்டு: இருக்கின்றது. உலக மயமாதலை தனியே மேற்குலக நாடுகளின் செயற்பாடாய் பார்ப்பதும் 3ம் உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மாற்றங்களை மேற்குலகக் கட்டுப்பாட்டுள் மட்;டும் விளையும் செயலாக மதிப்பதும் நாவலனிடம் உள்ள பிரதான குறைபாடாகும். அவர் ஒரு புறம் தமிழ்தேசியவாதத்திடம் சிக்குண்டவராகவும் மறுபுறம் சோசலிசத்தின் மேம்போக்கான கோசம்களை பிரகடனப்படுத்துபவராகவும் உள்ளார். எம்மை உடனடியாகவே உலக மயமாக்கலை ஆதரிப்பவர்கள் என்று முத்திரையிடாமல் அதன் சகல பரிமாணங்களையும் சோசலிசத்திற்கான சாதக பாதக நிலைமையும் ஊடறுத்து அறியும் ஆற்றலை நாம் பெறவேண்டும்.
 
 
ஏகாதிபத்தியம்களால் புறவயமாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய விடுதலை இயக்கம்கள் என்ற தூய இராணுவக் குழுக்களே இன்று உள்ளன. இவைதேசியம் இனவிடுதலை,தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்ற குரல்களையும் தீவிரமாக ஒலிக்கின்றார்கள். சோவியத் யூனியன் உடைந்தபோது தேசியவிடுதலை நிகழ்கிறது என்று பலர் வர்ணித்தார்கள். இடதுசாரிகள் தரப்பில் இருந்து கூட சோசலிசத்துள் நிறைவேற்றப்படாத தேசியக் கடமைகள் நடப்பதாகவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இனம்கள் விடுதலை பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் கூட தத்துவவிளக்கங்கள் நிகழ்த்தப்பட்டது. பழைய சோவியத் யூனியன் முதல் உடைந்த யூகோஸ்லாவியா, செக்கோஸ்லவாக்கியா வரை காட்டப்பட்டது என்னவெனில் தேசியம், தேசியப் பொருளாதாரம் என்பன ஒரு போதும் சாத்தியமில்லை என்பதே இந்த பிரிக்கப்பட்ட எந்த நாட்டிலும் வங்கிகள், தொழிற்சாலைகள், ஊடகங்கள்,சுகாதாரம்,கல்வி,போக்குவரத்து, தொலைத்தொடர்பு,உணவுப்பொருள் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் யாவும் தேசிய சக்திகளிடம் இல்லை. யாவும் ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இந்த நாடுகளின் முத்திரை, பணத்தாள்கள் கூட தனியார் வெளிநாட்டு நிறுவனங்களே அச்சிடுகின்றன. இவர்கள் பெயருக்கு ஒரு பாராhளுமன்றத்தையும் விதம் விதமான நிறம்களில் ஒரு தேசியக் கொடியையும் மட்டுமே வைத்திருக்கின்றார்கள். பழைய யூகோஸ்லாவியாவில் சிகரெட் உற்பத்தி முதல் வாகன உற்பத்தி வரை சகல தொழிற்சாலைகளும் அந்நிய பெரு நிறுவனங்களிடம் போய் விட்டது. இவர்களது தேசிய நாணயங்கள் கூட மதிப்பிழந்து யூறோவும் டொலரும் உள்ளுர் வர்த்தகத்தில் கூட பெரும் இடத்தைப் பிடித்துவிட்டன. இங்கு தமிழீழப் பிரிவினைவாதிகட்கு தேசியப் பொருளாதாரம் என்பது உலகளாவிய மூலதனத்தின் காலத்தில் வலுஇழந்து விடும் செயற்படமுடியாது அதற்கு கீழ் அடங்கி அழிந்துவிடும் என்ற உண்மை புலப்படுவதில்லை. எனவே தான் இவர்கள் தனிநாடு தேசிய சுதந்திரம் என்று தமது கச்சேரியைத் தொடர்கிறார்கள்.
 
 
இந்தியா, சீனா, இலங்கை இல் மட்டுமல்ல மத்திய கிழக்கு, தென்அமெரிக்க நாடுகள் போன்ற மேற்குலகை எதிர்க்கும் பொருளாதார அரசியல் கூட்டு நாடுகளையும் உடைக்க அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பன முனைகின்றன. சீனாவில் திபேத்தியப் பிரச்னயை மட்டுமல்ல 80 க்கு மேற்பட்ட இனம்கள் மொழிகள் உண்டு. 53வீத மக்களின் மொழியான Putonghua என்ற வடசீன மொழி 1956 இல் அரச கரும மொழியானது. இது பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரம்களின் மொழியாக இருந்தது. இது ஏனைய மொழிகள் மேலான திணிப்பு அல்ல நாட்டு வளர்ச்சியின் பொருளாதார விதியாக இருந்தது. இன்று சீன வளர்ச்சி காரணமாக மேற்கு நாடுகளால் தூண்டப்பட்டஉள்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் பின்னடிக்கத் தொடங்கிவிட்டனர். பாகிஸ்தானில் பலூச்சன் பழங்குடிகளும் , நேபாள சிறுபான்மை இனம்களும் பிரிவினைக்குத் தூண்டப்படுகின்றனர். சிரியா,ஈரான்,,ஈராக்கில் குர்திஸ் இன இயக்கம்கள் அமெரிக்க,இஸ்ரேலிய ,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளால் பல பத்தாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஈரானிய சிறு தேசிய இனம்களான Ahwasi, அரபுக்கள் அரசுக்கு எதிராகவுமட் ஈராக்கில் சியா – சுனி முஸ்லிம் பிரிவுகள் ஒன்றுக்கு எதிராக ஒன்று நிறுத்தப்படுகின்றது.சேக்குகள், கலீப்புக்கள், மன்னர்கள் ஒழிக்கப்பட்டு பல்லினங்கள் ஒன்று சேர்ந்து ஈராக்காக, ஈரானாக ஒன்றுபட்டு எழும் மத்திய கிழக்கு முஸ்லிம் அரபுக் கூட்டுள் ஒன்றாக இணையவும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஈரானில் அரசுக்கு எதிராக ‘மக்கள் முஜாதீன்’ ஈராக்கில் ‘ Pmoi என்பன அமெரிக்க நிதி, ஆயுதங்களில் பயங்கரவாதம் புரிகின்றன. ஈராக்கில் கிறீஸ்தவர்களிடையேயும் தனியாக ஆயுதக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
பர்மாவில் சிறுபான்மை இனம்கள் , பௌத்தம் பெயரால் நாட்டை உடைக்க முயல்கின்றனர். பர்மா 1963 இல் 24 உள்நாட்டு வெளிநாட்டுக் கொம்பனிகளை அரசுடமையாக்கியது. பிரிட்டன் கையில் இருந்த சுரங்கத்தொழில், மரம் வெட்டுதல், வங்கிகளை பறிமுதல் செய்தது.இது பண்டாரநாயக்கா மற்றும் 1970 ஆம் ஆண்டுகால இலங்கை இடதுசாரி அரசுகளை ஒத்த சீர்திருத்தங்களாகும். பர்மாவில் அண்மையில் பௌத்த மதம் ஊடாக அரசை வீழ்த்த மேற்குநாடுகள் முயன்றன. சீன மற்றும் இந்திய அரசியல் பொருளாதார பலத்தில் பர்மா தப்பிப் பிழைத்தது. லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவும் சோசலிஸ்டான Eva morales பதவிக்கு வந்து தமது வளம்களை லத்தீன் அமெரிக்க தழுவிய பொதுப் பொருளாதார மண்டலத்தில் கொண்டு வந்தார். அமெரிக்கா,ஐரோப்பிய நிறுவனம்கள் வெளியேற்றப்பட்டன. அல்லது மிகமிகச் சிறிய பங்குகளாக ஆக்கப்பட்டன. இதனால் அமெரிக்கஉளவுத்துறை ஸ்பானியர்கள் அதிகமாக வாழும் Santa, Craz, Tariya, Beni,Pandoஆகிய பகுதிகள் சமஸ்டி, தனிநாடு என்று கிளர்ச்சிகளை ஏற்பாடுசெய்தது தொடங்கின. செவ்விந்திய அடியில் இருந்த வந்தவரான Eva moralesஐ வெள்ளையின விரோதி என்றும் செவ்விந்தியர்கள் தற்போது ஸ்பானியர்களை ஒடுக்குவதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஸ்பானிய வலதுசாரியான Branco Marin- Kovich இதற்குத் தலைமை தாங்கி ஆயுதம் ஏந்திய கலகக் குழுக்களை அமைத்தான். ‘செவ்விந்தியர்களைக் கொல்’ என்பதே இவர்களது கோசமாகும். இவர்கள் செவ்விந்தியர்களையும் கொன்றனர். சேகுவேரா வீழ்ந்த மண்ணான பொலிவியாவில் 36 வித்தியாசமான செவ்விந்தியக் குழுக்கள் முதன் முறையாக நி;லம், கல்வி,சுகாதார வசதிகளைப் பெறுகின்றனர். இவர்களது சில மொழிகள் அரச மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன.பொலிவியமக்களாக மனிதர்கனாக மாறுவதைத்தடுக்கவேஅமெரிக்கச்சதிகள்நடைபெறுகிறது.
 
 
பாலஸ்தீனத்தில் அன்று PLO வுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஹமாஸ் என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பை ஆயுதபாணியாக்கினார்கள். இன்று அதே ஹமாஸ் தன்னை உருவாக்கியவர்கட்கு எதி;ராக ஆயுதமெடுத்துள்ளது. மறுபுறம் யசீர்அரபாத்தின் அமைப்புத் தலைவர் அப்பாஸ் இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு அமெரிக்க ஜெனரல் Keith Dayton இஸ்ரேலில் இருந்தபடி அப்பாஸின் ஆயுதப்படைகளைக் கையாள்கின்றார். ஆயுதம்,பயிற்சி.நிதி தருகிறான். அப்பாஸின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு இவனாலேயே பயிற்றப்பட்டது. இவர்களின் இராணுவ பயிற்சி;க்கு மட்டும் அமெரிக்கா 59 மில்லியன் டொலர் நிதி வழங்கியுள்ளது. ஹமாசுக்கும் அப்பாஸின் ஆயுதப்படைகட்கும் பாலஸ்தீனத்தில் உள்நாட்டு யுத்தம் நடக்கின்றது. பரந்த இஸ்லாமிய – மற்றும் அரபு உலகின் ஆதரவின் முன்பு அப்பாஸ் தோல்வியடைவது திண்ணம். அமெரிக்கா பொருளாதார ரீதியாக உயிர்வாழ்வுப போராட்டத்தை தொடங்கியுள்ளது. எனவே எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு அவர்கள் இராணுவ நிதி உதவிகள் தரமுடியாது. இஸ்ரேல் தனது நவீன இராணுவப் பலத்தின் மூலம் பாலஸ்தீனியர்கட்கு தற்காலிகமாக அழிவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் நீண்ட போக்கில் இஸ்ரேல் உலக முஸ்லிம், அரபு ஆதரவு பெற்ற சக்திகளைத் தோற்கடிக்க முடியாது போகும். இஸ்ரேலிலும் அரபு நாடுகளிலும் இடதுசாரி அமைப்புக்களும் தொழிலாள வர்க்கமும பலம் பெறும்வரை பாலஸ்தீன மக்களின் நாளாந்த துயரம்களையும் யூத- முஸ்லிம் முரண்பாட்டையும் ஒழிக்க முடியாது போகும்.
 
 
தேசியமும் தேசியவாதமும் ஒன்றல்ல. தேசியத்தின் தோற்றத்துக்கு வரலாற்றுக் காரணிகள் இருந்தன. சந்தைப் பொருளாதாரம் தான் உபரியைக் கொண்டு வந்தது. உபரி தான் சுரண்டலாக மாறியது. முதலாளித்துவம் தன் தேவைக்கம் அதிகமாக உற்பத்தி செய்தது. தன்நாட்டு எல்லைகளை தாண்டக் கட்டளையிடப்பட்டது. இன்று தமிழர்கட்கு தனிநாடோ தமிழீழமோ உருவாகத்தக்க இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆசியா தழுவிய பொதுத் தேவைகள் இல்லை. புவியியல் மற்றும் பொருளாதார அவசியம்கள் இல்லை. ஆசியாவுடன் பிரிவினைகள் தனிநாட்டுக் கிளர்ச்சிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. மேற்குலக மற்றும் ஆசிய வளர்ச்சிக்கு எதிரான சக்திகளால் கையாளப்படும் இராணுவக் கூலிப்படையான புலிகள் தோற்பது கட்டாயம் நடக்கும். இந்தியத் துணைக்கண்டத்தின் இஸ்ரேலாக தமிழ் ஈழம் உருவாகமுடியாது என்பதை நிரூபிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
 
 
‘காலனிய காலகட்டத்து சமூகப் புறச்சூழலைக் கருத்தில் கொள்ள மறுத்த ரொட்ஸ்கி,ஸ்டாலின்,மாவோ, லெனின் போன்றவர்களின் தனிநபர் வழிபாட்டினையே தத்துவமாய்க் கருதிய இடதுசாரிகள் தாம் சார்ந்ததாய் கருதிய வர்க்கத்தையே தேசிய விடுதலையை நோக்கி அணி திரட்டிடத் தவறினர்.
 
 
இப்படிக் கூறும் நாவலன் தனது இடதுசாரித் தோற்றத்திற்குரிய தொடக்க நிலை தகுதியைக் கூட எட்டமுடியாதவராகி விடுகின்றார். முதலாவதாக லெனின் ரொட்ஸ்கி இருவரும் சமமாக மாவோவையும் ஸ்டாலினையும் சமப்படுத்தும்போது அவரது சித்தாந்த ரீதியிலான வறிய நிலை தான் தென்படுகின்றது. நாவலன், லெனினையோ ரொட்ஸ்கியையோ சொந்தமாய் கற்றறிந்த தடயம் எதுவும் அவரின் எழுத்தில் இல்லை.லெனின் ‘ரொட்ஸ்கி இருவரும் கொலனிகாலத்திய சமூகப் புறச் சூழலை விளங்கவில்லை’ என்ற அவர் கூற்று ஒரு பாலர் பள்ளிச் சிறுவனின் பல்கலைக்கழகப் பாடம் பற்றிய விளக்கமாகி விடுகின்றது. ஒரு சிறு இது சார்ந்த கருத்தைக் கூடதர அவரால் முடியவில்லை. எங்கோ முதலாளியக் கருத்துக்கட்டரல்களில் சேகரித்துக் கொண்ட ஊகச் செய்திகளுடன் தத்துவார்;த்தத்துறையில் உயிர்தரித்து விட முயன்றிருக்கின்றார். லெனின் கொலனிகால இயக்கம்கள் பற்றி தொகையாக எழுதியிருக்கின்றார். ரொட்ஸ்கியின் கொலனிகளின் விடுதலை பற்றிய எழுத்தை விசாரித்துவிட்டாவது எழுதியிருக்கலாம். அவரின் லெனினுக்குப் பின்பான 3ம் அகிலம் (Die Dritte Internationale nach Lenin) போன்ற நூல்களையாவது வாசித்திருக்கலாம். இதில் சீன விடுதலை முதல் தென் ஆபிரிக்க,அல்ஜீரிய, இந்தியப் போராட்டம்கள் உட்பட கொலனிகளின் விடுதலை பற்றி ரொட்ஸ்கி எழுதியுள்ளார். ரொட்ஸ்கியின் ஸ்டாலினிம் மேலான விமர்சனம் என்பது தனியே ஐரோப்பியப் புரட்சிகளின் நோக்கு நிலை பற்றியது மட்டுமல்ல சீனா உட்பட கொலனிநாடுகளின் விடுதலைக்கான தந்திரோபாயம் சார்ந்த பிரச்னையுமாகும். நாவலன் தான் வாசித்தறியாத,கேட்டறிந்திராத தத்துவப் பிரதேசங்களில் வழி தவறி அலைகிறார். பொருளறியாமலே வார்த்தைகளில் சண்டையிடக்கூடாது. சொற்களின் வரலாற்று பின்புலத்தை அது உருவான அவசியக் காரணிகளை விளங்கி மாக்சியச் , சொற்பதம்களை உணர்;ந்து பொருள் முதல்வாதத்தால் ஊடுருவிப் பார்த்து எழுதவேண்டும்.
 
 
நாவலன் மாக்சியச் சொற்பிரயோகம்களை தாராளமாக வீணடித்து இருக்கின்றார்.
 
 
ஸ்டாலின், மாவோ இருவருடனும் லெனின், ரொட்ஸ்கி இருவரையும் தனிநபர் வழிபாட்டை தொடங்கி வைத்தவராக நாவலன் சிருஸ்டித்துள்ளார். இதற்கு ஒரு சிறு நிரூபணம் கூடத் தரவேண்டும் என்று அவர் எண்ணவில்லை. ஸ்டாலின், மாவோ இருவரது காலமும் தனிநபர் வழிபாட்டின் உச்சம் கொண்டிருந்த காலமே. இவர்களது சொந்த தத்துவ நிலை, தனிமனிதப் பாத்திரம், அன்றைய வளர்ச்சியுறாத ரஸ்ய, சீன நாடுகளின் சமூக பொருளியல் போக்குகளின் ஆய்பூடாகவே தனிநபர் வழிபாடு உருவான காரணிகளைக் கண்டறிய வேண்டும். முதலாவதாக தனிநபர் வழிபாடு என்பது சோசலிஸ்டுக்குணாம்சமல்ல மாறாக அது தனிச் சொத்துடமையின் பண்பாடாகும். வீரயுக காலத்தில் ஆண்களின் அதிகாரத்துடன் தோற்றம் பெற்று பிற்கால விவசாயப் பண்பாட்டால் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. விவசாய சமூகம்களில் வீரர்களைப் போற்றுதல் தனி நபர்களைப் பாடுதல் பண்பாக இருந்தது. சுயசெயற்திறன் பறிக்கப்பட்ட சுய அடையாளமற்ற மக்கள் எப்போதும் வழிகாட்டும் தலைவர்களிடம் வீரர்களிடம் தனிமனிதர்களிடம் தம்மை ஒப்படைத்தார்கள். தொழிற்துறை வளர்ச்சியற்ற இந்தியாவில் அரசியல்வாதிகள் முதல் சினிமாக்காரர்கள் முன்பு வரை ஏன் மனிதர்கள் கால்கைகளில் விழுகின்றார்கள். மனிதர்களை மனிதர்கள் ஏன் வணங்குகின்றார்கள்? அவர்களாக ஏன் தம்மைகப் பிரதி செய்து கொள்கிறார்கள்? இது கொடூரமான சுரண்டல் உள்ள ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் அறியாத விவசாய சமூகம்களின் தனிமனித வழிபாட்டு நிலை தான் முதலாளியத்தின் தொழிற்துறை வளர்ச்சி வரும்போது மக்கள் பகுதியாக இத்தகைய தனிமனித வழிபாட்டு நிலைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். சுயஅடையாளம், தனிமனித உணர்வு பெறுகின்றார்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உணர்வு வருகின்றது.
ஆனால் நாவலன் தனிமனித வழிபாட்டை சோசலிசத்தின் குணமாகப் பார்க்கின்றார்.
 
 
அவர் அப்படி எண்ணக் காரணம் தமிழ்நாட்டின் மாக்சிய இயங்கியலறியாத முன்னாள் ஸ்டாலினிஸ்டுகளின் எழுத்துக்களே. ரஸ்யப் புரட்சி என்பது முதலாளியத்தின் தொழிற்துறை வளர்ச்சி முழுமையாக ஏற்படாத நாட்டில் ஏற்பட்டது என்பதும் அங்கு தொழிலாளர்களை விட அதிக தொகையில் விவசாயிகள் இருந்தனர் என்பதையும் உணர்ந்தால் சோசலிஸம் வந்த பின்பும் ஏன் தனிநபர் வழிபாடு நிலவியது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். சோசலிசம் வந்து அடுத்த மணி;த்தியாலத்திலே சகல தனிச் சொத்துடமை படைத்த மனிதக் குணம்களும் மாறிவிடுவது இல்லை பல ஆயிரம் வயதுடைய மக்களுடைய குணநலன்கள்.அடிமைத்தனம் மாற பல பத்து வருடம்கள் ஏன் தலைமுறைகள் தேவைப்படும். லெனினும் ரொட்ஸ்கியும் சோவியத் புரட்சியை நடாத்தியவுடன் பழைய வரலாற்றுத் தொடர்ச்சி உடனடியாக ஓடி ஒழி;ந்து விடாது, புரட்சி என்பது சோசலிசத்தை தொடக்கி மட்டுமே வைத்தது. ரஸ்யாவின் பல ஆயிரமாண்டு கால விவசாயப் பண்புகள் தொழிலாளர் இயக்கத்தில் தொடர்ந்து தாக்கம் செலுத்தி வந்தது. விவசாயிகள் தமது ஆடு, மாடு,கோழிகள், குதிரைகள்,நிலம், வீடு. செடி,கொடி,மரம்கள், சொத்து என்று தனியுடமையின் பண்புகளைக் கொண்டு இருந்தனர். இவற்றுடன் கூடவே பழைய மதமும் நம்பிக்கைகளும் இருந்தன. இவை சோசலிசத்தின் வருகையின் பின்பு மெதுமெதுவாக மாறத் தொடங்கின. புரட்சியுடன் அறிமுகமாகின.; இந்த நிலைமைகளே ஸ்டாலினிசமும் தனிமனித வழிபாடும் தோன்றக் காரணம். மேற்கு ஐரோப்பிய சோசலிசப் புரட்சிகள் துணைக்கு வந்திருந்தால் சோவியத் புரட்சியில் உள்நெருக்கடிகள் குறைந்து அதன் தனிமைப்படல் நீங்கி ஸ்டாலினிசமும் தனிமனித வழிபாட்டுணர்வும் வளர வரலாறு இடம் விட்டிராது.
 
 
தனிமனித வழிபாட்டின் வரலாற்று வேர்களை அதற்கு இடம் தரும் சமூகவியல் நிலைமை பற்றிய கவனம் எதுவும் நாவலனிடம் இல்லை. லெனின், ரொட்ஸ்கியின் மூலநூல்களைப் படிக்காமல் இரண்டாம் மூன்றாம் பேர்வழிகள் ஊடாக அவர்களை அறிய முற்படும் முயற்சியில் நாவலன் ஈடுபட்டமையே தொடர்ச்சியற்ற துண்டு துண்டான குறை விளக்கங்களுள்ளும் துணைச் செய்திகளிலும் அவரைப் பின் தங்க வைத்துவிட்டது.ஸ்டாலினிசம் என்றால் நாவலன் பதறக்கூடியவர். அது உலக மாக்சிய இயக்கத்தில் ஒரு திரிபடைந்த போக்கு என்று அவர் காண்பதில்லை. இதை ஏதோ ரொட்ஸ்கியியம் பேசுபவர்களின் குற்றச்சாட்டு என்று அவர் கருதக்கூடியவர். ரொட்ஸ்கி கடைசியாக எழுதிய நூல்களில் ஒன்று ஸ்டாலின் பற்றிய நூலாகும். ( Stalin Eine Biographie) இதில் எத்தகைய உள்,வெளி நிபந்தனைகளில் அதிகாரத்துவ சக்தியாய் ஸ்டாலினின் எதிர்க் கேள்விகட்கு அப்பாலான சர்வாதிகாரியாய் வளர்ந்தார் என்பதை விளக்கியுள்ளார். இந்த ரொட்ஸ்கியின் நூலின் பாதிப்புடனேயே பிற்காலத்தில் இசாக் டொச்சர் ‘(Isaac deutscher) "stalin Eine Politischen biografhie" என்ற ஸ்டாலின் பற்றிய நூலையும் எழுதினார். இவைகளைப் படித்தால் தனிமனித வழிபாடு உருவானதற்கான காரணிகள் நாவலனுக்கு தத்துவரீதியில் தென்படும். பிரான்சைச் சேர்ந்த ரொட்ஸ்கிய ஆய்வாளரான Pierre broueஎழுதிய ( Trotzki ) ரொட்ஸ்கி என்ற புதிய நூல் 1292 பக்கத்தில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.தொண்ணூறுகளின் தமிழ்நாட்டின் பழைய ஸ்டாலினிஸ்டுகளின் எழுத்துப் பாதிப்புக்குள்ளானவர் நாவலன், இந்த நபர்களில் எஸ்.வி.ராஜதுரை போன்ற ஒரு சிலர் மட்டுமே ரொட்ஸ்கியின் நூல்கள் ஒரு சிலவற்றிலாவது சிறிது பரீட்சயம் இருந்தது. ஏனையோர் ஸ்டாலினிசத்தில் இருந்து நேரடியாக 1970 களின் மேற்குலக சீர்திருத்தவாதக் கருத்துகட்கு வந்து சேர்ந்தவர்கள். ரொட்ஸ்கியை உள்வாங்காத எவரும் ஒரு மாக்சியவாதியாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்.
Madame Bluvatsky(மடம் புளுவாட்ஸ்கி)
 
 
மடம் புளுவாட்ஸ்கி என்று பொதுவாக அழைக்கப்படும் Helena Bluvatskyமற்றும் மாக்ஸ்முல்லர் ஆரியர் சிந்தனைவுருவாக்கத்தில் பங்கெடுத்தமையையும் திராவிடக் கருத்தை ஆய்ந்த கார்டுவெல் எவ்வாற பிரிட்டிஸ் கிழக்;கு இந்தியக் கொம்பனியுடன் உறவு கொண்டு இருந்தார் என்பதையும் நாவலன் காட்டியிருக்கின்றார். எனினும் அவரது விளக்கம் பலவீனமானது.அக்காலத்திய வரலாற்றுச் சூழலையும் இக் கருத்துக்கள் தோன்ற ஏதுவான மூலகாரணிகளையும் அவர் கண்டறிந்து எழுதத்தவறினார். மடம் புளுவாட்ஸ்கியின் ஆய்வுகள் ஆரியம், பௌத்தம் ஆகியவைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. பௌத்த- இந்து மதம்களைக் கூட ஆரிய மூலத்துக்குரியதாய் கருதியதுடன் இவைகட்கு ஆதியானது என்று எண்ணக்கூடிய பேர்சியச் சிந்தனைகட்கும் சென்றார். இவரின் ஆசான் Jamal ad – Din al Afghaniஎன்ற சூபி முஸ்லிம் சிந்தனையாளராவார். ஏகிப்து, லெபனான், சிரியா,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்த மடம் புளுவாட்ஸ்கி தன் குருவாய்க் கொண்ட Jamal ad – Din al Afghani யிடம் பேர்சிய (ஈரான்) தத்துவச் சிந்தனைகளையும் கற்றனர். சாராதூஸ்ட்ரா போன்ற பேர்சிய தத்துவவாதிகளையும் ஆரியர்களின் தொடக்கமாய்க் காண முயன்றார்.
 
 
15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த ஆரியர் ஆளப்பிறந்தவர்கள் உயர் இனம் என்பதான கருத்தியல், தோலின் நிறம்கள்,மூக்கு, தாடை, முகஅமைப்பு, தலைமுடி சார்ந்து தனித்துவம் சார்ந்து நிறுவல்கள் ஏன் எழுந்தன? இது நாவலன் கருதுவது போல் தனியே கீழை நாடுகளை வெற்றி கொண்டபோது எழுந்த சித்தாந்தம் மட்டுமல்ல. இது ஐரோப்பாவில் செமிட்டிக் எதிர்ப்பையும் தொழிலாளர் வர்க்க ஒன்றிணைவுக்கு எதிரான கூறு போடும் சிந்தனையுமாகும். தொழிலாளர் இயக்கச் சிந்தனைகள் சோசலிச இயக்கத் தலைவர்களை யூதர்கள் அல்லது யூதமயமாக்கப்பட்ட சி;ந்தனை போக்குகளின் தாக்கம்கட்கு உட்பட்டவர்களாகக் காட்டப்பட்டனர். இது ஐரோப்பா தழுவிய இயக்கமாக இருந்தது. இது பிற்காலத்தில் தீவிர சோசலிச இயக்க எதிர்ப்பு வடிவமான பாசிசமாக மாறியது. ஐரோப்பாவில் ஆரியர் – திராவிடர் என்ற முரண்பாடு நிலவவில்லை. இது இந்தியா போன்ற நாடுகளிலேயே இந்த வடிவத்தை எடுத்தது. வட இந்தியரை ஆரியர் என்ற பகுப்புள் கொண்டு வந்தது. ஆனால் இங்கு மடம் புளுவாட்ஸ்கி; ஆரியப் பெருமைக்கு வாதிட்ட போதும் அவர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்லாவிய மக்கள் பிரிவைச் சேர்ந்தவராகும்.ஆரியச் சிந்தனையானது ஸ்லாவியரை கீழ் மக்களினம்களில் ஒன்றாகவே கருதியது. பிற்காலத்தில் கிட்லர் ஸ்லாவியர்களை பூண்டோடு வேரறுக்க வேண்டும் என்று கூறினான்.
 
 
மடம் புளுவாட்ஸ்கி ஆரியம், பௌத்தம், இந்து,பேர்சிய, சிந்தனை ஒரே மூலத்துக்குரியதாய் காண முயன்றார் என்றால் அவர் இந்தியாவின் ஆரியர், திராவிடர், இந்து, பௌத்தம், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளை இணையவிடாமல் செய்ய முயன்றார். ஐரோப்பிய யூத எதிர்ப்பை அவர் இந்திய, இலங்கை போன்ற நாடுகட்கும் கொண்டு வந்ததுடன் இலங்கைச் சிங்கள மக்களை ஆரிய பௌத்தராகவும் வட இந்தியரை ஆரியராகவும் காண்பிக்க முயன்றார், மடம் Colonel Olcott இருவரும் மேற்குலக கருத்தியல் பிரச்சாரகர்களே. அவர்கள் இந்திய இலங்கை மக்களது பௌத்தம், இந்து, சாதிப்பிரச்னை இவைகளை சிறப்பாகப் பயன்படுத்தினர். இலங்கையில் அநாகரீக தர்மபாலாவை பௌத்த மதச் சீர்திருத்தவாதியாய் மாற்றியதுடன் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரை தன் சீடராக்கியதுடன் பௌத்தம் பரப்பல் என்ற பெயரிலும் இந்திய – இலங்கையின் பழைமையான சமூகப் பிளவுகளை நிரந்தரமாக்கவும் பிரி;ட்டனுக்கு எதிரான ஐக்கியம் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டனர். அநாகரீக தர்மபாலா இந்திய,முஸ்லிம், தமிழ் எதிர்ப்புடன் விசித்திரமான முறையில் தீவிர யூத எதிர்ப்பையும் கொண்டிருந்தார். மறுபுறம் தமிழ்நாட்டில் மடம் புளுவாட்ஸ்கியின் தீவிரமான பௌத்த சீடரான அயோத்திதாசப் பண்டிதர் தீவிரமான பிராமணிய ஆரிய எதிர்ப்பை வெளியிட்டதுடன் பிற்கால தலித்துக்கள் பௌத்தர்களாக மாறத்தக்க கருத்துக்களையும் உருவாக்கினர். இலங்கையில் மடம் புளுவாட்;ஸ்கியும் Colonel Olcott உம் இலங்கை பௌத்த மத எழுச்சியின் கர்த்தாக்களாக இன்று வரை மாறினர். ;. Olcott பெயரில் கொழும்பில் ; Olcott Mawatha கூட உள்ளது. அவர் சிங்களவர்களால் தீவிர பௌத்த மத விசுவாசி எனக் கருதப்பட்டார். மேலைத்தேச வளர்ச்சி பெற்ற இராஜதந்திரம் மற்றும் மக்களினம் மதம்கள் பற்றிய ஆரம்பகால மானுடவியல் முன்பு கீழைத்தேசமக்கள் தோற்கடிக்கப்படத் தக்க அறிவையே கொண்டிருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆபிரிக்க ஆசிய நாடுகளைக் கைப்பற்றிய ஐரோப்பியர்கள் தாம் பிடித்த நாட்டு மக்களை ஆள இயற்கையாக உரிமையுடையவர்கள் அந்த மக்களை நாகரீகப்படுத்தும் கடமையை ஏற்றிருப்பவர்கள் என்ற சிந்தனைகட்கு மடம் புளுவாட்ஸ்கி போன்றவர்கள் வழியமைத்தனர்.
 
 
1875 இல் நியூயோர்க்கில் Theosphical society மடம் புளுவாட்ஸ்கி ஆரம்பித்தபோது அக்கால ஐரோப்பாவில் சோப்பன் கோவர், நீட்சே உட்படப் பலர் பௌத்தம், ஆரியம், இந்துமதம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கியிருந்தனர்.ஜெர்மனியப் பாசிசத்தின் தூய ஆரிய இனக் கொள்கையின் மூலவரான நீட்சே பௌத்தம், இந்துசமயம், சாராதூஸ்ட்ரா ஆகியோரில் ஈடுபாடும் இவை ஆரிய அடையாளம்கட்கு உரியவை எனவும் கருதினான்.அவன் ருக் வேதத்தைக் கற்று இருந்தான். ஜெர்மனியின் பெரும் இசைக்கலைஞரான ரிச்சர்ட் வாக்னர் ( Richard wagner) பௌத்த -இந்து மதப் போக்குகளில் ஈடுபாடு காட்டியவர்.எனவே மடம் பூளுவாட்ஸ்கியின் சமகாலத்தில் ஆரிய-பௌத்த – இந்துக் கருத்தாக்கம்கள் ஆய்வுகள் ஐரோப்பிய நாடுகட்கு பொதுவாக இருந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1856 இல் கார்டுவெல் திராவிட மொழிகள் பற்றிய எழுச்சிகள் ஏற்படத் தொடங்கின. 1856 இல் இந்திய சிப்பாய் கலகத்தின் பின்பு பிரிட்டிஸ் அரசு இந்தியர்களை ஐக்கியப்படாமல் இருக்கவும் ஒன்றிணைந்த சக்தியாய் தமக்கு எதிராக எழாமல் இருக்கும் கருத்தாக்கங்களையும் தொடர்ந்து உருவாக்கி வந்தது.
 
 
இக்காலப் பகுதியிலேயே ஐரோப்பாவில் யூதர்கள் மத்தியில் ‘சியோனிசம்’ உருவாவதைப் பார்க்கின்றோம். எந்த யூதர்கட்கும் செமிட்டிக் சிந்தனைக்கும் எதிராக ஆரியர் சிந்தனை உருவானதோ அந்த ஆரியச் சிந்தனைக்கு ஆதரவு கொடுத்த அரசுகள் சியோனிசச் சிந்தனைக்கு இடம்விட்டுத் தந்தன. யூதர்களைப் பல நூறு வருடங்களாக பலி கொண்டு வந்த கிறீஸ்தவம், மற்றும் ஐரோப்பிய அரசுகட்கு எதிராய்சியோனிசம் தோன்றவில்லை மாறாக இது ‘அரபு மற்றும் ஆசியக் காட்டுமிராண்டிகட்கு எதிராக மேற்குலக உதவியுடன் நாகரீகத்தை நிலை நாட்டுவது இஸ்ரேலை உருவாக்குவது பற்றிப் பேசியது’ சியோனிசத்தைப் படைத்தவர்கள் இஸ்ரேலிய யூதர்கள் அல்ல ஐரோப்பிய யூதர்களே ஆவர். இவர்கள் ஐரோப்பியர் அரபுநாடுகளைக் கைப்பற்றி அவர்களை அழித்தமையை எதிர்க்கவில்லை.; மாறாக தம்மையும் அரபுக்களையும் ஒன்று சேர ஒடுக்கிய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களையே ஆதரித்தனர். சியோனிசத்தின் தந்தை எனப்படும் Theodor Herzel (1860-1904) யூதர்கட்கான நாடு (Der Judens taat ) என்ற நூலை 1896 இல் எழுதினார். இவர் கிறீஸ்தவ மதத்தையோ வத்திக்கான் பாப்பரசரரையோ ஆரியரையோ தாக்கவில்லை. செமிட்டின் எதிர்ப்பாளர்களை எதிர்த்துப் போராடவில்லை.; மாறாகஅவர்கள்முஸ்லிம்களையும் அரபுக்களையும் வென்று அடிமைப்படுத்தியதை ஆதரித்தார். பைபிளின் பெயரால் ஆபிரகாமின் நிலமான இஸ்ரேலை தமது என்று உரிமை கோரினார். மற்றொரு சியோனிச சிந்தனையாளரான Jabotinsky இஸ்ரேலை யூத மயமாக்க கட்டாயக் குடியேற்றம்களைச் செய்யவேண்டும்;.காட்டுமிராண்டி அரபுக்களின் படையெடுப்பைத் தடுக்க ஐரோப்பிய நாகரீகத்தின் சார்பில் இஸ்ரேலைச் சுற்றி மதில் எழுப்பவேண்டும் என " The iron wall, we and the Arabs"என்ற நூலில் 1923 இ;ல் எழுதினார்.
பிறிதொரு சியோனிச சிந்தனையாளர் David Hocohen லெபனான், சிரியா, ஜோர்தான், பாலஸ்தீனம் அடங்கிய பெரிய இஸ்ரேலை அமைக்க வேண்டும் என்று கூறினார்.மேற்கு நாடுகள் அரபு நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கிய சமயமே ஐரோப்பிய யூதர்களிடமிருந்து சியோனிசம் எழுகிறது. 1840 இல் பிரிட்டிஸ் வெளிநாட்டமைச்சராக இருந்த Palmerstone தனது துருக்கியத் தூதரான Lord Ponsonby மூலம் துருக்கி சுல்தானை பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றும்படியும் எகிப்திய jpa Mohamed Ali க்கு எதிராக யூதர்களை மனிதமதில்களாக்க வேண்டும்எனவற்புறுத்தினார் Mohamed Ali துருக்கிய சுல்தானுக்கும் பிரி;ட்டனுக்கும் எதிராக இருந்தார்.1841 இல் பிரிட்டிஸ் அரசு யூதர்களைப் பாலஸ்தீனத்தில் குடியேற்றத் திட்டமிட்டது.
 
 
இப்போக்குகளின் தொடர்ச்சியாகவே 50 வருடம் கழிந்து Theodor Herzls ஆல் சியோனிசம் தத்துவமாக எழுதப்படுகின்றது. சியோனிசம் யூதர்களின் விடுதலைத் தத்துவமல்ல யூத தேசிய இயக்கமுமல்ல அது பாசிச இனவாத தத்துவமாகும். 20ம் நூற்றாண்டில் ஒரு மக்கள் பிரிவாக தேசியமாக யூதர்கள் இருக்கவுமில்லை. யூதர்கள் எனப்பட்டோர் வெறும் மத நம்பிக்கையாளர்கள் மட்டுமே அவர்கள் உலகில் பல மொழி பேசிய ஒரு தொகை நாடுகளில் வாழ்ந்த பல நிறங்களுடைய மக்கள் பிரிவு. மாறாக ஒரு தேசிய இனமல்ல முஸ்லிம்கள் எப்படி உலகனைத்தும் வாழ்ந்தபோதும் ஒரு இனமல்லவோ இந்துக்கள் கிறீஸ்தவர்கள் எப்படி பல பிரிவு மக்களை உள்ளடக்கியவர்களோ அப்படியே யூதர்களும் ஒரு தேசிய இனத்துள் அடங்கக் கூடியவர்களல்ல. ஆரியர், திராவிடர் எப்படி இனமல்லவோ யூதர்களும்அப்படியே சியோனிசம் ஐரோப்பிய யூதர்களால் எழுப்பப்பட்டபோது அரபு நாடுகளில் முஸ்லிம்களுடன் வாழ்ந்து வந்த யூதர்கள் இதை ஏற்கவில்லை. ஐரோப்பாவில் ஆரியம் பிறந்த சமயத்திலேயே ஏறக்குறைய அதே நேரத்திலேயே சியோனிசமும் படைக்கப்படுகின்றது.
 
 
மடம் புளுவாட்ஸ்கி திராவிடர்கள் உட்பட ஏனைய மக்களை மிருகங்களாக கீழ்நிலை மனிதர்களாக வர்ணித்தமையை நாவலன் காண்பித்துள்ளார். ஆனால் தமிழ்த்தேசியம் திராவிடம் என்பவைகளை ஆராயாமல் விட்டு விட்டு பௌத்தம், சிங்களத் தேசியம் இரண்டும் மேற்கத்தைய அரசியலுக்குரியது என்று காட்ட நாவலன் தீவிரமாய் முயல்கின்றார். இது வெளிப்படையான பக்கச் சார்பாக தமிழ்த்தேசியவாத ஓரவஞ்சனையாகி விடுகின்றது. 1874 இல் இலங்கையின் கவர்னராக இருந்த வில்லியன் எச்.கிரகரி கட்டளைப்படி மகாவம்சம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு சகல பௌத்த விகாரைகட்கும் விநியோகிக்கப்பட்டதை விபரிக்கும் நாவலன் இலங்கையுள் நாவலரின் சைவ இயக்கம் அதேசமயம் பைபிளைத் தமிழாக்கம் நாவலர் உதவுமளவு பிரிட்டிஸ் ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தமை தமிழ்நாட்டில் திராவிட நாடு, ‘இலங்கை இந்தியத் தமிழ்நாடுகளை உள்ளடக்கிய பரந்த தமிழ் நாடு’ போன்ற போக்குகளையும் இவற்றின் தொடர்ச்சியான இந்திய- இலங்கைத் தமிழ்நாட்டுக் கோரிக்கைகளை நாவலன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. 1918 முதல் 1925 வரை இலங்கையில் தேசாதிபதியாக இருந்த வில்லியம் மனிங் ( William Mannig) தான்கண்டிமற்றும் கரையோரச்சிங்களவரிடையேபிளவுகளை ஏற்படுத்தினார் கண்டியர்தனியான இனம் நீண்டகாலமாக தனி அரசைக் கொண்டிருந்தார்கள் என்று சிங்கள மக்களிடையே கூட கண்டி, கரையோரச் சிங்களவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே பண்டாரநாயக்கா ஒரு சமயம் கண்டியர்கட்கு சமஸ்டியாட்சி கோரினார்.
 
 
இந்தப் பிரிவினை கோரிக்கைகள் பின்பே செல்வநாயகம் சமஸ்டி கேட்டார். ஜி.ஜி. பொன்னம்பலம் பிரிட்டிஸ் கொமன்வெல்த்தில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையான ஐம்பதுக்கு ஐம்பது கேட்டார். இந்தியா – இலங்கை இணைந்த தமிழ்நாடு என்ற கோரிக்கையை அமிர்தலிங்கம், ஊர்காவற்றுறை நவரத்தினம், வட்டுக்கோட்டை தியாகராசா, வவுனியா சுதந்திரலிங்கம் ஆகியோர் கொண்டிருந்தனர். இது தென் இந்தியாவின் ‘பெரும் திராவிட நாடு’ அரசியலின் தொடர்ச்சியே ‘அகண்ட இந்துஸ்தான்’சியோனிஸ்டுகளின் ‘பெரிய இஸ்ரேலிய தேசம்’, துருக்கியவாதிகளின் ‘பெரிய ஒஸ்மானிய அரசு’ம் அல்பானியர்களின் ‘பெரும் அல்பானியா’ நாசிகளின் ‘ஆரிய தேசம்’ என்பன சோசலிச இயக்கம்கள் தொழிலாளர் அமைப்புக்களின் பரந்த அரசியலுக்கு எதிரான பிளவு வேலையாக இருந்தது. நாவலன் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் எதிர்விளைவாகவே தமிழ்த்தேசியவாதத்தைப் பார்க்கின்றாரே தவிர ஏகாதிபத்தியங்களின் இந்தியத் துணைக்கண்டத்தை துண்டுபடுத்தும் அரசியலாகவே திராவிடத்தில் தொடங்கி தமிழ்நாடு, தமிழ்ஈழத்தில் முடிவுற்றது.என்பத
உய்த்துணரத்தெரியாதுபோனார் தமிழ், சிங்கள முரண்பாடு என்பது இந்திய துணைக்கண்டத்தில் பிரிவினைத்திட்டத்தின்ஓரு பகுதியாகும். இதை உணர்ந்த ஒரே ஒரு கட்சியாக 1930 களின் இறுதியிலே இருந்த மாக்சிய இயக்கம் எல்எஸ்எஸ்பி தான். அவர்கள் தான் 1940 களிலேயேமழு இந்தியத் துணைக்கண்டத்துக்கான சோசலிசக் கட்சியைத் தொடங்கினார்கள்.
 
 
———
ஆரியர் – திராவிடர்
கி.மு.7000 ஆண்டளவில் வட ஆபிரிக்கப் பகுதியில் விரிந்து பரவியிருந்த ஏரிகள்,நீர்நிலைகள், ஆறுகள் வற்றத் தொடங்கின. பரந்த புல்வெளிகள், காடுகள், சதுப்பு நிலங்கள் இதன் பயனாக மறையத் தொடங்கின. வரண்ட ஆற்றுப்படுக்கைகளும் மணல் வெளிகளும் தீவிர வரட்சியும் தோன்றின. வட ஆபிரிக்காவில் பாலைவனம் பெரிதாகப் பெரிதாக வடக்கு ஐரோப்பாவில் பனி உருகத் தொடங்கியது. பனி உருகிய இடம்களில் புல்வெளிகள், காடுகள், நீர்த்தேக்கங்கள்,ஆறுகள் உருவாகின. இக்காலப் பகுதியிலேயே வட ஆபிரிக்காவில் வாழ்ந்த மக்களின் குடிபெயர்வுகள் தொடங்குகின்றன. வரட்சியும் நீரின்மையும் இம்மக்கள் குடி பெயரக் காரணமாகும். விவசாயத்தின் வயது 11000 வருடங்களாகும். இம்மக்கள் விவசாயத்தை அறிந்தவர்களாகவும் மந்தை வளர்ப்பை பிரதானமான தொழிலாளியும் கொண்டவர்களாகத் தெரிகிறது. இதையே வரலாற்றில் பெரும் குடிபெயர்வு எனக் கொள்ள முடியும். இதில் ஒருபகுதி வட ஐரோப்பா உட்பட இந்தியா உட்பட ஆசியப்பகுதிகட்குப் பரவினார்கள் என்று கொள்ள முடியும். கி.மு.4000 ஆண்டுகளில் மண்பாண்டம் விளையும் சக்கரம்.சூழைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் மண்பாண்ட வளர்ச்சி தீவிரமாகியது.
 
 
.கிட்டத்தட்ட இக்காலப்பகுதியில் சுமேரியர்கள் இரும்பிலான கருவிகளைச் செய்தனர். கி.மு.3000 இல் மேற்கு ஆசியாவில் இரும்புப் பண்பாடு வளர்ந்தது. இரும்புக்காலம் என்பது இரும்புத்தாதுவை உருக்கி தனியே இரும்பைப் பிரித்தெடுத்து கருவிகளைச் செய்வதாகும்.அதை உற்பத்தியில் பயன்படுத்துவதாகும்.கல்,மரம், செம்பு,வெண்கலத்தை விட இரும்புக்காலத்தில் வளர்ச்சிகள் விரைவாகப் பெருகின. மந்தை வளர்ப்பு, மண்பாண்டம் செய்தல், நெசவுத்தொழில்,தோல்பதனிடுதல், விவசாயம், நீர்ப்பாசனம், மற்றும் ஓடம்,தேர் வண்டி என்பன இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே முன்னர் இருந்ததை விடப் பிரமாண்டமான முன்னேற்றம் கண்டன. அரசுகள்,மன்னர்கள், சிறந்த போர் வீரர்கள், சிறந்த ஆயுதம்கள் வந்தன.
 
 
சீனர்களும் சுமேரியர்களும் இரும்பு நாகரீகத்தைச் சார்ந்து வளர்ந்தனர். இரும்பை உருக்கிக் கருவிகளையும் ஆயுதம்களையும் செய்த மக்கள் அதை உற்பத்தி செய்யாது வாங்கிப் பாவித்த மக்களை விட முன்னேறியவர்களாக இருந்தனர். தொழில்நுட்ப அறிவு படைத்தவர்களாக இருந்தனர். இரும்புக் கண்டு பிடிப்பு என்பது ஒரு தொழிநுட்ப அறிவியல் புரட்சியாகும்.இரும்பு நாகரீகத்தையுடைய மக்கள் கல்,செம்பு,வெண்கல நாகரீகத்துக்குரிய மக்களை வென்றனர். பொருட்களை ஆக்கும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். கடின உழைப்பில் இருந்தும் உழைப்பு விரயத்தில் இருந்தும் விடுபடுவதே வளர்ச்சியின் அடையாளமாகும்.மனித நாகரீக வளர்ச்சி என்றால் மக்கள் என்ன விளைவித்தார்கள்? என்ன பொருட்களை உற்பத்தி செய்தார்கள்? உற்பத்தியில் தொழில் வளர்ச்சியில் எந்த மட்டத்துக்கு வளர்ச்சி எய்தி இருந்தனர் என்பதே அளவீடாகும். கருத்துக்கள், உணவு, உடை,வீடு,பழக்கவழக்கங்கள் இதைச் சார்ந்தே வளர்ச்சி பெறும். எகிப்திய, சீன, சுமேரிய வளர்ச்சிகளை இந்த அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.
இந்த நாகரீக வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாகவே பார்சிய நாகரீகம் தோன்றுகின்றது. இங்கு செமிட்டிக், திராவிட,ஆரிய, மங்கோலிய என்று பல மொழிக் கூட்டமைப்புக்கள் ஒன்றுக்கொன்று கொடுத்தும் வாங்கியும் வளர்ந்தன.
 
 
மேற்குலக ஆர்pய இனக்கோட்பாட்டாளர்களால் போற்றப்படும் பார்சிய மதச்சீர்திருத்தவாதியான சராதூஸ்ட்ரா கி.மு. 6ம் நூற்றாண்டில் தோன்றினார்.இவர் ‘நல்லதுக்கும் தீயதுக்குமான இடைவிடாத போராட்டம்’ என்ற கருத்தைப் போதித்தனர். ‘ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார். தீமைகளையும் நரகத்தையும் அழிப்பார். இறந்தவர் உயிர்த்தெழுவர். உலகில் முடிவாக அழிவற்ற மகிழ்ச்சி ஏற்படும் என்ற கருத்துக்களை அவர் பிரச்சாரம் செய்தார்.இந்த கருத்துக்களை அவர் அவருக்கும் முந்திய மாஜி எனப்படும் மதநம்பிக்கையில் இருந்து பெற்றுக் கொண்டனர். சாராதூஸ்ட்ராவின் மதம் கி.மு. 6ம் நூற்றாண்டில் வடமேற்கு ஈரான்,இந்தியா உட்பட பல நாடுகட்கும் பரவியது. இவரின் கருத்துக்கள் பின்பு பௌத்தம், சமணம்,கிறீஸ்தவம் ஆகிய வைக்குள்ளும் புகுந்தது. சாராதூஸ்ட்ரா காலத்தில் வாழ்ந்த பார்சிய மன்னரான முதலாம் டேசியஸ் தன்னை பார்சிய வழிவந்த ஆரியன் என்று அழைத்துக் கொண்டான். இங்கு ஆரியன் என்ற பதம் மன்னன், தலைவன் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இனக்குழு, அல்லது மதம் என்ற பெயர்களில் கூறப்படவில்லை. அக்காலத்தில் ஆரிய இனக்குழுக்கள் நிலவின என்பதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. பிற்கால ஆரியத் தத்துவவாதிகள் கட்டியமைக்க முயன்றது போல் கி.மு. 2000-1500 காலத்தே சுமேரிய, எகிப்து, சிந்து வெளி நாகரீகம்கள் நிலவியபோது எந்தவொரு ஆரிய நாகரீகமோ மொழியோ நிலவியதான எந்த வரலாற்றுச் சான்றோ புதைபொருள், மானுடவியல் தடயம்களோ கிடையாது. கி.மு.500 இல் தான் ஆரியர் என்ற சொல் அறியப்படுகின்றது. இச்சொல் உழுதல் என்ற கருத்துக் கொண்ட ‘அர்’என்ற பார்சியச் சொற்பிரயோகத்தில் இருந்தே பிறந்துள்ளது.
 
 
சராதூஸ்ட்ராவுக்கு முன்பே பார்சியாவில் இந்திரா,வருணன், அஸ்வினி ;போன்ற செமிட்டிக் தெய்வம்கள்இருந்தன. சாராதூஸ்ட்ரா மதம் ஒரு கலப்பு மதமாகும். இம்மதம் தோன்றிய பின்பு சில தெய்வம்கள் தீய தெய்வம்களாக்கப்பட்டன. இந்திய மதம்கள் பார்சிய, செமிட்டிக்மதங்களின்கடவுளர்களையுடையது, அசுரர்.வருணன்தேவர்,ஆரியர் என்ற பதம்கள் பார்சியவிலிருந்து பரவின. அசுரன் என்பது செமியர்களின் அசீரியத் தெய்வமாகும். அசீரியர்களின் ஆட்சிக்காலம் கொடியது என்பதால் அவர்களின் தெய்வமான அசுரர் தீய தெய்வமாகியது. அசுரர்கள் என்போர் பார்சியவிலிருந்த ஒரு போராடும் மக்கள் பிரிவாகும். பார்சிய இலக்கியமான’அவஸ்தா’வில் அசுரர்கள் உயர்ந்தவர்கள் தேவர்கள் அவர்களின் அடிமைகள் என்று கூறப்படுகின்றது. இந்திய வேதம்கள் திராவிட ஆரியப் போராட்ட வரலாறு என்று இதுவரை கற்பிக்கப்பட்டுள்ளது தவறாகும். இந்தியாவுள் ஆரியர் திராவிடர் போராட்டமோ, தேவர், அசுரர் யுத்தமோ நடக்கவில்லை.கி.மு. 800 க்கு முற்பட்ட பார்சிய பழம் இனக் குழுப்போராட்டம்களை அவர்கட்கு பின்பு வந்தவர்கள் இந்தியாவுக்கும் கொண்டு வந்துவிட்டனர். இவை வேதம்களிலும் இடம் பெற்றன. பிற்கால ஆரிய திராவிட ஆதரவாளர்கள் அதை இந்தியாவில் நடந்த இரு பிரிவு மக்களிடையேயான போராக்கிவிட்டனர். அசுரர்கள் என்பதற்கு சமஸ்கிருதத்தில் புனிதமானது நல்ல ஆவி, உயிர்த்துடிப்பானது என்ற பொருள் உண்டு. ஆகவே பார்சியப் பழம் கதைகள் வித்தியாசம் வித்தியாசமான செய்திகள் வேதம்களில் இடம் பெற்றனவே தவிர அது ஆரிய, திராவிட மொழி பேசிய மக்கள் பிரிவினரை தனியே உள்ளடக்கிய இலக்கியம் என்பது தவறு. பார்சிய வேதமான அவஸ்தா தேவர்கள் அடிமைகள் என்றும் அசுரர்கள் உயர்ந்தவர்கள் என்றும் வர்ணிக்க இந்திய வேதம்களில் இது எதிர்மாறாக தேவர்கள் உயர்ந்தவர்கள் அசுரர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. எனவே வித்தியாசமான மக்கள் பிரிவுகளின் பழைய கதைகள் இந்திய வேதம்களில் இடம் பெற்றன எனக் கொள்ளலாம். அசுரர்களை இந்தியாவில் திராவிடர்களுடன் இணைக்கும்போது பார்சியாவில் அசுரர்கள் செமிட்டிக் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருந்தனர்.
 
 
இன்று ஆரியர், திராவி;டம் என்று விளங்கப்படுபவை எகிப்திய, சுமேரிய, பார்சிய நாகரீகம்களின் பல்வேறு மொழி பேசும் மக்களின் கலந்த நிலை. இனக்குழுப் போராட்டம்களின் சிதறல்களாகும். இவைகள் ஒன்றை ஒன்று இடையறாது எதிர்த்துப் போராhடின என்பத தவறு. செம்பு, வெண்கலம் மற்றும் இறுதியாக இரும்புக் காலத்தில் இந்த நாகரீகம், பரவி மக்களை ஒன்றிணைத்தது. குடிபெயரவும் கூடி வாழவும் புதிய நிலம்களைத் தேடிச் செல்லவும் தூண்டியது. வித்தியாசமான மொழிக் குழுமம்களை இனம்களாக மக்கள் பி;ரிவாக கற்பனை செய்ய முடியாது.எப்போதும்மொழி கடவுள் நம்பிக்கை என்பன குடி பெயர்கின்றன. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கும் ஒரு நூற்றாண்டில் இருந்து அடுத்தடுத்த நூற்றாண்டுகட்கும் செல்கின்றன. இவை குடிபெயர்வினாலோ, ஒத்த பண்புடைய மக்கள் தொடர்பாலோ மட்டுமல்ல. வர்த்தகம், கலாச்சாரப் பரம்பல்களாலும் நடைபெறுகின்றன. இதை தனியே ஆரிய, திராவிட மொழிக்குரியவை என்று குறுக்கிவிட முடியாது. மேலும் பார்சியா முதல் இந்தியா வரையில் ஒரே ஒத்த கலாச்சாரப் பரம்பல் வர்த்தகம், புவியியல் தொடர்புகள் முக்கியமானவை.
 
 
இந்தப் பிரதேசம் திராவிட, செட்டிக், மங்கோலிய, பார்சி மொழி மக்கள் பிரிவுகள் அடங்கியதாக இருந்தது. ஒஸ்ரோவிட் எனப்படும் மங்கோலிய அடியினரான ஆதியான மக்கள் ஆசியப் பிராந்தியம் எங்கும் வாழ்ந்தனர் என்ற வரலாற்றுண்மைகளை ஆரிய- திராவிட தத்துவம்கள் கணக்கில் கொள்வதில்லை. ஆரியர், திராவிடர் என்பது ஒரே புவியியல் அமைப்புள் வாழ்ந்த வித்தியாசமான மொழி பேசிய ஒரே மூலத்தின் பல்கிளையான மக்களாகும். இங்கு கலப்பற்ற மொழி,இனக்குழு என்பவை கி;டையாது. இவை பல்தன்மை வாய்;ந்தவை. இவர்களைப் பிரிப்பதாயின் ஆசியர், மத்திய ஆசியர் என்று மட்டுமே புவியியல் அடிப்படையில் பிரித்துக் காட்ட முடியும்.
 
 
ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்ற கருத்தை கே.எம்.முன்சி, எஸ்.ஸ்றிஜன்டன் போன்ற வரலாற்று ஆய்வாரள்கள் மறுத்துள்ளனர். இவர்கள் இந்தியாவுக்கு உரியவர்களாக நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்தும் பார்சியா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆரிய மொழி பேசிய மக்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் பெருந்த தொகையில் முன்னேறினர்.படை எடுத்தனர். ஆக்கரமித்தனர் என்ற கருத்துக்கள் ஆதாரமற்ற கற்பனைகளாகும். இவர்களை இந்தோ- ஐரோப்பியர் என்று கட்டமைப்பதற்கு மானுடவியல் சார்ந்த அல்லது வரலாற்றுத் தடயம்கள் கிடையாது. 1853 இல் மக்ஸ்முல்லர் ஆரியர் என்ற கருத்தமைப்புக்கு ஆதாரம் தேடினார். அக்காலம் மானுடவியல், மொழி,புதைபொருள் ஆய்வு என்பன பெருமளவு வளராத காலம் என்பதால் ஆதிக்கக் கருத்துக்கு சார்பான ஊகம்கள் வரலாறாக ஆயின. மொழியியல் ரீதியில் இவர் ஆய்வுகளை நடத்தினார். ‘மனித மனம்களின் பழம் வரலாற்றுக் கட்டம்களை மொழியின் ஊடாகத் தேடினார். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கதையுண்டு என்றும் எனக் கூறிய அவர் அதன் மாயத்தை உடைத்து பேசப் புறப்பட்டார்.ஆரிய மொழிகளில் புதைந்துள்ள ஆதிகால ஆரியர் வாழ்வின் புதையல்களை அவர் தேடினார். ஆரியர்கட்கு ஒரு மொழி, ஒரு கடவுள், ஒரு மதம் இருந்தது என்று நம்பிய அவர் ஆரியர்களை ஆரியர் – இந்தோ ஐரோப்பிய வெள்ளை ஆரியர்களிடமும் ஓடுவது ஒரே ஆரிய இரத்தமே எனக் கூறினார். ஆவர் மொழி சார்ந்த ஒற்றுமைகளை ஆரிய இனம்சார்ந்த பொதுப்பண்பு என்று தவறாக விளக்கினார். ஐரோப்பிய மொழிகளையும் சமஸ்கிருத மொழியையும் ஒப்புநோக்கிய அவர் இம் மொழிகள் தோற்ற ஏதுவான எகிப்திய, மாவோனிய, மங்கோலிய, செமிட்டிக், மற்றும் திராவிட மொழிகளையும் இணைத்து ஆராயவில்லை. ஆய்ந்திருந்தால் செமிட்டிக் எதிர்ப்பு மொழியாகக் காட்டப்பட்ட மொழிகளின் மூலம் செமிட்டிக் மொழியிடம் கடன்பட்டு பிறந்து வளர்;ந்ததை அவர் கண்டிருப்பார். நாவலன் மக்ஸ்முல்லர் தனது இறுதிக்காலத்தில் ஆரிய இனம் இரத்தம் என்ற கருத்துக்களை கைவிட்டமையைக் குறித்திருக்கின்றார்.
 
 
ஆரிய மொழி, ஆரிய இனம்,ஆரிய வரலாறு என்பன ஜரோப்பிய நாடுகளில்கொழிளாளர்இயக்கம்கட்கு எதிராகவும் கொலனிக்கால கீழைத்தேச மக்கள் மேலான ஆக்கிரமிப்புக்காக வரலாற்று நியாயம் தேடும் கண்டுபிடிப்புக்களாகவுமிருந்தன . தாம் பிடித்து அடிமைப்படுத்திய செவ்விந்தியர்,ஆசியா,ஆபிரிக்க, அவுஸ்திரேலிய பூர்வகுடிகளை அடிமை கொள்ள தாம் படைக்கப்பட்டதான கருத்தியல்களை அவர்கள் ஆக்கிக்கெண்டார்கள். ஆரிய கொள்கை ஐரோப்பிய நாகரீகத்தை கிறீசில் இருந்தே தொடங்கினர். ஆனால் கிறீசின் பல பழைய தெய்வம்கள் பாபிலோனிய எகிப்திய மூலம்களை உடையனவாக இருந்தன.ஐரோப்பியரை நாகரீகப்படுத்திய கிறிஸ்தவம் ஒரு செமிட்டிக் சிந்தனையே. ஆரியர் மனித உடற்கூறு அடிப்படையில் விளக்க முயற்சிக்கப்பட்டது மண்டைஓட்டு அமைப்பு, மூக்கு, கண்,தோல்நிறம், தலைமுடி, முக அமைப்பு, உயரம் இவைகளின் வித்தியாசம்கள் தேடப்பட்டது. ஆரியர் என்ற கண்டுபிடிப்பு ஒரு பாசிசமானுடவியலாகும்.மக்களின் கறுப்பு, மஞ்சள்,இளம் சிவப்பு, வெள்ளை என்ற நிறம்கள், உடற்தோற்றம் முழுவதுமாக புவியியல் அடிப்படை மற்றும் உணவுமுறைகள் சார்ந்த ஒன்றாகும். இவை தனியான உயர் அடையாளமோ, சிறப்போ கிடையாது. மனிதர்கள் ஒரு பொது மூதாதையரிடமிருந்து எம் மனிதகுலத்தின் ஆதித்தாய் நிலமான ஆபிரிக்காவில் இருந்து தோன்றியவர்கள் என்பதை நவீன மானுடவியல் சந்தேகமற நிரூபித்துவிட்டபோது ஆரியர்- திராவிடர் – மேன்மை பேசல்கள் அது சார்ந்த அரசியல் கற்பிதங்கள் மூடத்தனமானவையாகும். ஏகாதிபத்தியம்கள் உருவாக்கிய கருத்துக்கு அடிமைப்படுவதாகும்.
 
 
கி;.பி.1583 முதல் 1588 வரை இந்தியாவில் கோவாவில் வாழ்ந்த ஃபிலிப்போ ஸஸட்டி என்பவரே முதலில் ஐரோப்பிய மொழிகட்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள மொழி சார்ந்த ஒற்றுமையைக் கண்டறிந்தார். இப்போக்குகள் வளர்ந்து 1786 இல் ‘வங்காள ஆரியச் சங்கம்’ பிரிட்டனால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. கிறீஸ், லத்தீன் மொழிகளுடன் சமஸ்கிருதம் ஒப்புநோக்கி ஆராயப்பட்டது. நாவலன் குறிப்பிடும் மடம் புளுவட்ஸ்கி முன்பே ஆரியர் பிரச்னை பேசப்படத் தொடங்கிவிட்டது. கெகல், றிச்சர்ட், வாக்னர், சோப்பன் கோவர், நீட்சே போன்ற ஒரு பெரும் வரிசையே ஜெர்மனியில் இதை ஆய்ந்து ஈடுபாடு காட்டியுள்ளது. 1831 இல் உக்ரேனில் பிறந்த மடம் புளுவட்ஸ்கி அமெரிக்கா, ஜெர்மனி,பிரிட்டனில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகட்கும் சென்றவர். அப்போ மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் துருக்கி சுல்தானுக்கு எதிரான விடுதலைக்கான கலவரம்கள் நடந்து வந்தன. ஜமால்-அல்-தின்-ஆஃ கானி ( Jamal-al-din-Afagani)என்ற இஸ்லாமிய அறிஞர் எல்லா இஸ்லாமிய நாட்கட்கும் பயணித்தார். துருக்கிய சுல்தானின் கீழ் சகல முஸ்லிம்களும் ஒன்றிணையவேண்டும் எனவும் மேற்கத்திய அறிவியல், தொழில்நுட்பம் இணைந்த இஸ்லாமை அவர் கனவு கண்டதுடன் துருக்கிய சுல்தான் ‘காலிஃப்பாக’ எல்லா முஸ்லிம்களையும் ஏற்க வைக்க முயன்றார். இவருக்கு பல நாடுகளில் மாணவர்களும் ஆதரவாளர்களும் இருந்தனர்.இவர் மேற்குலகக்கு எதிரான புனிதப் போரை முஸ்லிம்கள் தொடங்கவேண்டும் என்றார். இவரை மடம் புளுவட்ஸ்கி சந்தித்து அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.
 
 
இக்காலம் மேற்குலக நாடுகள் துருக்கி சுல்தானுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் வாழ்ந்த அரபு நாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தன.அவற்றைத் தமது கட்டு;ப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றன. எனவே மடம் புளுவட்ஸ்கி இன் ஜமால்-அல்-தின்-அஃகானியுடனான தொடர்பு சந்தேகத்துக்குரியதே. அவரிடமிருந்து பார்சிய தத்துவப்போக்குகளை மடம் புளுவட்ஸ்கி கற்றார். இவர் ஆரியர் தத்துவத்தைப் பிரச்சாரம் செய்த போதும் பிற்கால ஆரியம் மடம் புளுவட்ஸ்கி போன்ற கிழக்கு ஐரோப்பிய ஸ்லாவிய மக்களையும் கீழ்நிலை மக்களாக ஆரியர்களின் புரதான வாழ்விடம்களில் ஊடுருவிய அந்நியர்களாகவே கருதியது. மடம் புளுவட்ஸ்கி யின் செல்வாக்கால் கிட்லர் பாதிக்கப்பட்டதாக நாவலன் எழுதியிருக்கின்றார். ஆனால் கிட்லர் நேரடியாக கென்றி போட் (Henry Ford ) எழுதிய "Der Internationale Jude " நூலை வாசித்து இருந்தான் என்பதுடன் Joseph Arthur de Gobineau (1816-1882), Houston steward chamberlain (1855-1927) போன்ற ஆரியக் கருத்தாளர்களால் ஈர்க்கப்பட்டு இருந்தான் என்பதுடன் Madison grant (1865-1937), Theodore lothrop Stoddard (1883-1950) போன்றவர்களின் கருத்துக்களால் தான் கிட்லர் உருவானான். ஒருவேளை மடம் புளுவட்ஸ்கி யை அவன் கற்றிருக்கக்கூடும். ஆனால் ஆதாரமில்லை.ஆனால் அமெரிக்காவில் உருவான ஆரியச்சிந்தனைகளால் கிட்லர் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தான்.அமெரிக்க ஆரியச் சிந்தனையானது செவ்விந்தியர், சீனர்கள், கறுப்பினமக்கள், ஜெர்மனியர்,ஐரிஸ்,போலந்து, யூதர்கள், இத்தாலியர், ஸ்பானியர்ரஸ்யர்.போத்துக்கேயர். என்று பல இன மக்கள் குடியேறிக் கொண்டிருந்த காலமிது. வெள்ளையின மக்கள் கொண்ட அமெரிக்காவைக் காப்பது பற்றிய சித்தாந்தம்கள் அப்போது எழுப்பப்பட்டன. ‘"The rising tide of color against white world- supremacy " என்ற நூலை 1920 இல் Madison Grant எழுதினார். இதே போல் வெள்ளை இனத்தை உயர் இனமாய்க் காட்டும் கருத்துக்களை Theodore Lothrop Stoddard வெளியிட்டார். இவரின் "Unterman ‘கீழ் நிலை மனிதன் தான் கிட்லரிடம் ; "Untermensch"என்பதாக மாறியது. இவன் இதை யூதர்,ஸ்லாவியர் ஆகியோருக்கு எதிராய் மாற்றினான்.ஆரியவெள்ளைமனிதர்களை உயர்ந்தவர்களாக வகுத்தான்
 
 
ஐரோப்பாவில் ஆரியர் இனப்பெருமைக்கு எதிராக’ஸ்லாவியர்’ இனப்பெருமைகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எழுந்தது. ஸ்லாவிய மக்களை ஒன்றிணைத்த பரந்த குடியரசு பற்றியும் பேசப்பட்டது. யூகோஸ்லாவியாவின் டிட்டோ மற்றும் டிமிட்ரோவ் ஆகியோர் கூட ஸ்லாவியர்களின் பரந்தசோசலிச குடியரசை நிறுவுவது பற்றிய கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சியோனிச இயக்கம்கள் ஆரிய மற்றும் கிறீஸ்தவ ஒடுக்குமுறைகட்கு எதிராக எழுந்ததாய்த் தோன்றினாலும் அவை மேற்கத்திய நாடுகளின் அரபு மக்கள் மேலான ஆதிக்கத்தை ஆதரித்தன.இவை யாவும் கொலனித்துவ அரசியலுக்கு தோதாகவும் ஐரோப்பாவில் அன்று வளர்ச்சி பெற்று வந்த தொழிலாள வர்க்க இயக்கம்கள் அது சார்ந்த ஒன்றிணைந்த மக்களின் அரசியல் போராட்டம்கட்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டன. லூயி ஹென்றி மார்க்கன், ‘திராவிட உறவுமுறை’ என்ற மானுடவியல் ஆய்வைத் தொடங்கிய பின்பே திராவிடர் தனித்துவமானவர்கள்,ஆரியர்கள் திராவிட நாகரீகத்தை அழித்தனர்.ஆரியர் வந்தேறு குடிகள் என்ற கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படத் தொடங்கின. பல ஆயிரம் வருடம் முன்பு மனித வளர்ச்சி கட்டத்தின் ஒரு பொழுதில் நிலவிய மொழி ஒற்றுமைகளை வரலாற்றின் வேறொரு கட்டத்தில் பலவந்தமாகக் கொண்டு வந்து திணிக்கப்பட்டது. மேற்கத்தைய அரசியல் இலக்குகளை நிறைவேற்ற இந்தியாவின் சகோதர மக்களிடையே பகையும் முரண்பாடுகளும் இத்தகைய வடிவம்களில் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது. அந்நிய ஆக்கிரமிப்பாளரை விட்டு ஒரு தேச மக்கள் தம்மிடையே ஆரியர், திராவிடர், முஸ்லிம் என்று கட்சி கட்டி நின்றனர். பிரிட்டிஸ் அரசியல் தந்திரம்கள் பிரித்தாளும் யுக்திகள் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டன. உதாரணமாக பிரிட்டிஸ் ஆட்சியில் அயோத்தியில் இந்து,முஸ்லிம்கள் கூட்டாக வெள்ளையரை எதிர்த்தனர். வெள்ளையர்கள் இங்கு சாதாரணமாகக் நடமாடக்கூட முடியாத நிலை இருந்தது. இச்சமயம் இந்து, முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைக்க 1833இல் மான்ட் கோமரி மாட்டின் என்ற ஆங்கிலேயர் இராமர் கோவிலை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு கட்டுக்கதையைக் கிளப்பிவிட்டார். ஆனால் இது உடனடியாகப் பெரும் பயன்தரவில்லை.
 
 
1857-1858 சிப்பாய் கலகத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் கூட்டாக வெள்ளையரை எதிர்த்துப் போராடினர். இதைக் கண்ட பின்னர் 1860 இல் கார்னகி என்ற பிரிட்டிஸ்காறன் பாபர் கதையை வரலாறாக எழுதினான். பாபர் இராமர் கோயிலை இடித்தே மசூதியைக் கட்டிய கதை இதன் மூலம் வரலாறாக ஆக்கப்பட்டு இன்று வரை இந்து,முஸ்லிம் மோதலுக்கு வழியமைக்கப்பட்டது. அயோத்தி, ராமஜென்ம பூமியானது இது தனியே பிஜேபி போன்ற மேற்குலக ஆதரவுக்கட்சிகளின் செயற்பாடு மட்டுமல்ல. இந்திய மக்களின் அரசியல், சமூக உணர்வுகள் வளர்ச்சியடையாத நிலையின் வெளிப்பாடுமாகும். இந்தியா விடுதலை பெற்றுவிட்டதாகக் கூறப்பட்ட பொழுதிலும் பிரிட்டிஸ் கிட்டத்தட்ட 200 வருடம் முன்பு உருவாக்கிய வரலாறு சார்ந்த வதந்தியொன்றை ஆதாரமாய்க் கொண்டு இந்தியாவுள் இன்றும் இந்து – முஸ்லிம் சச்சரவுகள் தொடர்கின்றன. பௌத்த,சமயக் கோவில்களை இடித்து இலட்சக்கணக்கான பௌத்தமதத்துறவிகளைக் கொன்றே பிராமணிய மதம் எழுந்ததையோ ஐரோப்பியர் இடித்த இந்துக்கோவில்களையோ அந்தக் கற்களைக் கொண்டு கட்;டப்பட்ட கிறீஸ்தவ தேவாலயம்கள் பற்றியோ மக்கள் அறியாதபடி விடப்பட்டுள்ளனர். பெரியார்,இந்திய சுதந்திர நாளைத் துக்கநாள் என்று கூறினார் என்றால் விட்டுப் போகும் பிரிட்டிஸ் ஆட்;சியின் கீழான நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் என்று தானே அர்த்தம். காந்தி,அம்பேத்கார்,ஜின்னா, அயோத்திதாசப் பண்டிதர்,பூலே போன்றவர்கள் பிரிட்டிஸ் ஆட்சியில் இந்திய அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டமையின் மூலம் சோசலிச இயக்கம்கள் எழாமல் தடுக்கப்பட்;டது. இவை பிரிட்டிசாரின் இராஜதந்திரத் திறனுக்கு சாட்சியம்களாகும். புகலிட நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் இன்று வரை ஆரியர், திராவிடர் பற்றிப் பேச காசுகட்டி மண்டபம் எடுத்து கூட்டம் கூடுகின்றார்கள் என்றால் ஏகாதிபத்தியம்கள் விதைத்துவிட்டுப் போன வரலாற்றுப் பொய்களை ஊகம்களைவிட்டு நீங்கி வெளிவரும் அரசியல் திறன் படைத்திராத பின் தங்கிய மக்களாக இவர்கள் உள்ளனர் என்றே பொருளாகும்.