இலங்கை அரச ஊடகங்கள் 17.5.09 இல் பிரபாகரன் மரணம் பற்றிய செய்திகளையும் இதற்கு அடுத்த நாள் பிரபாகரன இறந்த உடலைக் காட்;டும் படங்கள் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டன. பிரபாகரன் 15.05. 09 இலங்கை இராணுவத்தால் பிடிக்கப் பட்டதாகவும் பின்பு பலசித்திரவதைகள் மூலம் உண்மைகள் பெறப்பட்டு பினன்ர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் புகலிடமெங்கும் உலாவி வந்தன. மேற்குலக நாடுகளில் புலிகளின் இணையத் தளங்கள் வானொலிகள் தொலைக் காட்சிகள் முதலிரண்டு நாட்களும் பிரபாகரனின் மரணம் பற்றிய செய்திகள் படங்கள் எதையும் வெளயிடவில்லைசி.என.என், பீ.பி.சி, அல்யெசீறா உட்பட சர்வதேச ஊடகங்களில் பிரபாகரனின் சாவு பற்றிய தகவல்கள் வெளி வந்தமையால் இவர்களும் கருத்துச் சொல்ல நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
புலிகளின் பிரதான செய்தி ஊடகமான தமிழ் நெற் குமரன் பத்மநாதனின் செய்தியை வெளியிட்டு பிரபாகரனின் மரணச் செய்தியை மறுத்ததுடன் பிரபாகரன் உயிருடன் ஆரோக்கியமாக இருப்பதாக செய்தியை வெளியிட்டதுடன் புலித்தேவன் நடேசன் போன்றவர்களை அரசு நயவஞ்சகமாகக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியது. பிரபாகரன் 2000 பேருடன் தப்பி வன்னிக்காட்டில் போராட்டத்திற்குத் தயாராவதாகவும் செய்திகள் படிக்கப் பட்டன. தம் தலைவர் சாகவில்லையென்று புகலிடப் புலி மாந்தர்கள் சாதித்தனர். கிட்லர் இறந்தவுடன் அவன் சாகவில்லை அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் ஒழித்து வாழ்கிறான் என்ற வதந்திகள் திட்டமிட்டும், திட்டமிடப்படாமலும் பல பத்தாண்டுகளாகப் பரப்பப் பட்டன. சுபாஸ் சந்திரபோஸ் இன்னமும் இறக்கவில்லையென்று சொல்லி இருபது முப்பது வருடங்களாக இந்தியாவில் தேடிக் களைத்தார்கள். விசாரணைக் குழுக்கள் நியமித்துக் கூடத் தேடிப் பார்த்தார்கள். இதே போலப் பிரபாகரனைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட தனிமனித வழிபாடு யாராலும் எவராலும் வெல்லப்பட முடியாத பெருவீரனென்ற பிம்பம் இத்தகைய கற்பனைகள் பிரபாகரன் இன்னமும் உயர் தரிப்பதான யதார்த்திற்குப் புறம்பான மனப் பிராந்திகள் உலாவுவதைத் தீPவிரப் படுத்தின.
தீபம், ஜி.ரீ.வீ போன்ற புகலிடத் தமிழ் தொலைக் காட்சிகள் வன்னி;யில் யுத்தம் தொடங்கியவுடன் காட் இன்றி இலவசமாக மக்களுக்குக் காட்சி தரத் தொடங்கின. இந்தப் புலிப் பாசிசப் புழுகுணி ஊடகங்களையே பெரும்பாலான தமிழ் மக்கள் பார்த்தனர். இலங்கைச் செய்திகளைப் பெற வேறு எந்தத் தொலைக்காட்சிகளும் இருக்கவில்லை. புகலிட நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை விட இவை தினசரி மக்களைச் சென்றடைந்தன. புலிகள் இவ் இரு ஊடகங்களையும் பின் புறமிருந்து சிறப்பாகப் பயன் படுத்தினார்கள். புலி அல்லாத எக்கருத்துக்கும் இடமிருக்கவில்லை. தீபம், ஜீ ரீவி இரணடினதும் ஊடகப் பயங்கரவாதமானது சதந்திரமாக இயங்கியது. அனைத்துப் புகலிடத் தமிழ் மக்களையும் புலிப் பாசிசத்தின் கீழ் அணிதிரட்டியது.வெறித்தனமான தமிழினவாதம் பரப்பியது. அண்மையில் புதிதாக இலங்கையில் இருந்து வரும் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியின் வருகை இவர்களது தனி இருப்பை அசைக்கத் தொடங்கியது.
தீபம் ஜீ ரீ.வீ இவ்விரண்டு தொலைக் காட்சிகளும் பொரும்பகுதியாக வன்னிஅகதிகளின் அவலங்களை சாவை இடைவிடாமல் முழுநாளும் ஒளிபரப்பின. மக்களை சோகத்தை விரும்பும் மனப்பாதிப்புடையவர்களாக மாற்றின. இறந்து காயப்பட்ட மனிதர்களின் உடல்கள் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டன. சில சமயம் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த சிங்கள மக்களின் இறந்த உடல்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடல்கள் என்று காட்டப்பட்டது. இந்தப் பிரச்சாரப் பொய்கட்கு எதிராகவோ சமமாகவோ எந்த ஊடகமும் இருக்கவில்லை. இவர்கள் சர்வாதிகார ஊடகத் தனி ஆட்சி செலுத்தினர். தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் பெண்களைக் கற்பழிக்கிறார்கள் தமிழினக் கொலை நடக்கிறது. தமிழ் அகதிகளை வதை முகாங்களில் அடைக்கிறார்கள். தமிழ் இளைஞர்களைக் கொன்று உள் உறுப்புக்களை அபகரிக்கிறார்கள் என்பது போன்ற எண்ணில் அடங்காப் பொய்கள் தினசரி செய்தியாக வாசிக்கப் பட்டன. புலிகளின் தலைமைப் பிரச்சார ஊடகமான தமிழ் நெற்றின் செய்திகள் இந்த ஊடகங்களில் அப்படியே மறுவாசிப்புப் பெற்றன. மக்களுக்கு புலிப் பொய்களுக்கு எதிராக உண்மை அறியும் வாய்ப்பு இருக்கவில்லை.
தமிழ் ஊடகப் பயங்கரவாதத்தின் உச்சமட்டப் பாதிப்புக்குப் புகலிடத்தமிழர் உள்ளாயினர். மனிதர்களின் இயற்கையான கருணை, மனித இரக்கம், ஏனைய மக்களினங்களைப் பற்றிய கவனம் ஜனனாயக உணர்வு என்பன மனிதர்களிடம் மந்தித்துப் போயின. சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்ற கருத்து வெளிப்படையாக இந்த ஊடகங்களில் கேட்டது. புலித்தலைவர் எல்லாம் வல்ல இறைவனைப் போல் சகலரையும் அவதானித்துக் கொண்டிருப்பதாக உரிய நேரத்தில் செயற்படுவாரென்று புலிநபர்கள் வாக்குறுதிகளைத் தந்தார்கள் ஐம்பது தமிழனைக் கொன்றால் பதிலாக 500 சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்று இந்த ஊடகங்களில் வந்து பேசினார்கள். சிங்களவன் தமிழனின் எதிரியென்ற தமிழரசு காலக் கருத்தமைப்புகள் மீண்டும் தீவிரமாக மறுநடுகை செய்யப்பட்டது.
இந்த ஊடகங்கள் பிரபாகரனின் மரணம் பற்றிய பொய்களை நம்பாதீர்கள் என்று மக்களை எச்சரித்தன. பிரபாகரன் மரணம் கடந்த பெருவீரனாக தமிழ் மக்களை ஆட்கொள்வதற்காகவே உயிர்தரித்திருப்பதாக பொய்கள் பின்னப்பட்டன. தேசியத்தலைவர், தலைவர் என்ற சொற்பதங்களினூடு இதுவரை தமிழ் மக்கள் கண்டறியாத தீவிரமான தனிமனித வழிபாட்டு நிலை பரப்பப் பட்டது. புகலிடத் தமிழ் மக்கள் மேற்குலக முதலாளிய ஜனனாயகம் மனித சுதந்திரம் கருத்துவித்தியாச உரிமை போன்றவற்றிற்கு அருகில் இருந்தனர். புலிப் பிரச்சாரங்கள் இந்தப் பண்புகளைக் கூடத் துறக்கும்படி கட்டாயப் படுத்தின. சுய தீர்மானம் சுய அடையாளம் இல்லாத மனித மந்தைகளாகப் புகலிடமக்கள் ஆக்கப் பட்டனர். எங்கும் புலி எதிலும் புலி. அவர்களே சர்வவியாபகமாய்த் தமிழ் மக்கள் மத்தியில் வீற்றிருந்தனர். 2006 ஆம் ஆண்டு கிழக்கில் 300000 தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் புலிகளால் குடியெழுப்பப்பட்ட போது இந்தத் தமிழ் ஊடகக் கும்பல் மக்களை இதில் ஆர்வம்காட்ட விடவில்லை. தமிழ் மக்கள்மட்டுமே பாதிக்கப் படுவதாக ஓரவஞ்சகச் செய்திகள் வாசிக்கப்பட்டன. புலிப் படுகொலைகள் அரசின் கொலைகளாக பெயர்மாற்றம் செய்யப்பட்டன. ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் என்ற பெயரில் கழுத்துப்பட்டிகள் கட்டியவர்கள் புகலிடத் தமிழ் மக்கள் முன்பு பின்பு கேட்டுப் பார்த்தறியாதவர்கள் எல்லாம் தொலைக் காட்சிகளில் தோன்றித் தமிழனுக்காக வாதாடு வாதாடென்று வாதாடத் தொடங்கினர் .
இருபது வருடமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட 200000 பேர் புத்தளம் மன்னார்ப் பகுதிகளில் ஓலைக் கொட்டில்களில் வாழ்ந்தனர். இவர்களைப் பற்றி ஒரு செய்தியையோ காட்சிப் பதிவையோ இந்த ஊடகங்கள் புகலிடத் தமிழ் மக்களுக்கத் தரவில்லை. ஆனால் வன்னியில் புலிகள் இலங்கை இராணுவத்தால் துவம்சம் செய்யப்படத் தொடங்கியதும் மக்களைக் காத்தல் என்ற கோசத்தில் புலிக்கும்பலைக் காக்க புகலிட நாடுகள் எங்கும் எதிர்ப்பு இயக்கங்களை இவர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிரபாகரனும் புலித்தலைமையும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட போதும் எந்த சந்தடியும் இல்லாது இருந்த இந்த ஊடகங்கள் அவைகளை மறைத்து அகதியான வன்னித்தமிழ் மக்களைக் காக்க வரும்படி அழைப்பு விட்டன. வெளிநாடுகளிலுள்ள தமிழர்களாலேயே இலங்கைத் தமிழர்களைக் காக்க முடீயுமென்று கெஞ்சிய இந்த ஊடகங்கள் அரச எதிர்ப்பு இயக்கங்களுக்கு வரும்படி மக்களை அழைத்தன. புலிகளின் மாவீரர் தினங்கள் மாமனிதர் நினைவுகள் ஆகியவற்றை நாள் முழுவதும் காட்டி சோக இசை பரப்பினர். நேயர்களின் தொலைபேசி சேரடித் நிகழ்ச்சிகளை நடாத்தி கண்ணீர் வெள்ளங்களைக் கரை புரண்டு புகலிட நாடுகளில் ஓட விட்டவர்கள் இப்போ பிரபாகரனின் மரணத்தைக் கண்டு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நின்றார்கள். செய்வதறியாது திகைத்தனர்.
அஞ்சலி நடத்தினால் பிரபாகரனின் மரணச் செய்தி மக்களை எட்டினால் புகலிடத்திலுள்ள புலிகள் முதல் ஊடகவியாபாரிகள் வரை ஒரேநாளில் காணாமல் போய் இருக்கும் நிலை இருந்தது. எனவே இவர்கள் பொய்களைப் பூசிக்கத் தொடங்கினார்கள். வன்னியில் தேசியத்தலைவர் கொல்லப்பட்டு அவரின் உடல் நாற்றமெடுகக்த் தொடங்கிய வேளையில் உலக ஊடகங்கள் எல்லாம் பிரபாகரனின் இறந்த உடலைக் காட்டிக்கொண்டிருந்த பொழுதில் தீபம் ஜி.ரீ.வி என்ற இரணடு நேர்மையழிந்த புலிப்பாசிச ஊடகங்களும் அரசு பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பதாக கூறினர். தமிழ் மக்களின் உண்மை அறியும் உரிமை இவ்வாறாகத் தடுக்கப்பட்டது. செத்துப்போன தேசியத்தலைவருக்கு அஞ்சலி செலுத்த அஞ்சலிக்கூட்டம் நடாத்தி வீரவணக்கம் செலுதத் ஆள் கிடையாமல் போனது.
பிரபாகரன் இராணுவத்திடம் தனது முக்கிய 300 புலிகள்புடை சூழ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து பலவித அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 25 வருடமாகப் பிரபாகரனும் புலிகளும் தமது கழுத்தில் கட்டியிருந்த சைனைட் குப்பியைக் கடிக்கவில்லை. தாமே மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரி மேல் மோதி வீரமரணம் எதையும் அடையவில்லை. புலித் தலைவர்கள் தாமாகச் சாகத் துணிய வில்லை. மாறாகபல பத்தமாயிரம் பேரைப் போராடிச் சாக அனுப்பிவிட்டு தம் உயிர்களை மட்டும் காக்க முனைந்த கோழைகளாக இவர்கள் தம்மைப்பற்றி மக்களிடம் வடிவமைத்திருந்த பிரமாண்டமான வீரநாயகர்கள் கதையாடல்கட்கு மாறாக அற்பர்களாகச் செத்திருக்கிறார்கள். சதாம் உசேன் போன்றவர்கள் தூக்கு மேடையில் தம்முன்பு ஆடிய தூக்குக் கயிறு முன்பு உறுதியோடு நின்று மரணத்தை எதிர் கொண்டார்கள். ஆனால் இந்தப் புலிப்பாசிசத ;தலைமைக் குழுவோ 300 மீட்டர் தொலைவில் இராணுவம் வந்துவிட்ட வேளையில் கடைசிக் குண்டு இருக்கம் வரை போராடிச் சாகாமல் சரணடைந்தாவது தம் உயர்களைக் காக்க் முனைந்துள்னர். போரடினால் மரணம் 100 வீதம் நிச்சயம்.
ஆனால் சரணடைந்தால் உயர்தப்ப உள்ள சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதால்தான் இவர்கள் சரணடைந்து மிகவும் இழிவான முறையில் மரணத்தை அடைந்துள்ளனர். செம்படைகள் பெர்லினை நெருங்கிக் கொண்டிருந்த போது செம்படைத்தளபதியாக மார்சல் சூக்கோவுக்கு தான் எல்லாவிதமான நிபந்தனைகளையும் ஏற்கத்தயாராக இருப்பதாய் கிட்லர் செய்திக்கு மேல் செய்தி அனுப்பினான். பேசுவதற்கு எல்லா வகையிலும் முனைந்தான். ஆனால் செம்படை பாசிஸ்டகளுடன் பேச்சு இல்லை, அவர்களை அழித்து நிர்மூலம் செய்வதே இலக்கு என்று அறிவித்தது. இக்கட்டத்தில்தான் கிட்லர் தற்கொலை செய்தான். பாசிவாதி கிட்லருக்குத் தற்கொலை செய்யுமளவாவது துணிவு இருந்தது. தான் வளர்த்த நாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டான். அவன் செம்படைகயின் கைகளிற் சிக்கியிருந்தால் 25 மில்லியன் சோவியத் மக்களைக் கொன்றதற்காக அவனைக் கண்டதுண்டமாக வெட்டியும் சுட்டும் கொன்றிருப்பார்கள்;. உலகில் மிக மோசமாக வதைபட்டுச் செத்த மனிதனாக அவன் இருந்திருப்பான். இத்தாலியப் பாசிஸ்ட் முசொலினியை அவன் தன் கூட்டத்தோடு தப்ப ஓடிய போது பாசிச எதிர்ப்புப் போராளிகளும் கொம்யூனிட்ஸ்டுகளும் பிடித்துச் சுட்டுக் கொன்று அவன் உடல் அழுகி நாற நாற ஒரு வாரத்திற் மேலாகக் கட்டித் தூக்கியிருந்தார்கள். அந்த வகையில் எமது; தமிழீழத்தின் தேசியத் தலைவர் தனது கடைசி நேரத்தில் எதிரிகளிடம் பட்ட பாடு மிகச் சாதாரணமானதாகும்.
தமிழ் சிறுவர் சிறுமிகளை உயரோடு குண்டைக் கட்டி தற்n;காலைப்பொராளிகள் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதற அனுப்பி விட்டு அதற்கு தற்கொடை, உயிர்க்கொடை, உயிர் ஆயுதம் என்றெல்லாம் விதம் விதமாக தூயதமிழில் வீரவிளக்கம் தந்த பிரபாகரன் அவர்களை மாவீரர்களாக்கிக் கல்லறை கட்டி எழுப்பிய மனிதன் அவர்களுக்கு எல்லாம் தலைவனாகத் தன்னை வரித்துக் கொண்டவர்; இலங்கை இராணுவத்திடம் கை உயர்த்தி வெள்ளைக் கொடியுடன் சரண் புகந்து அவர்கள் கையால் சூடுவாங்கிச் செத்துள்ளார்;. பிரபாகரன் தலையில் இரணடு துவக்குச் சூடுகள் இருந்தததை இந்துப்பத்திரிகையாளர் ரெட்டி பிரபாகரனின் இறந்த உடலை நேரிற்கண்டு எழுதியிருக்கிறார். அவை பிரபாகரன் புலிகளின் மாவீரப் பண்புக் கேற்ப ஒரு போதும் தற்கொடை உயிர்க்கொடை எதுவும் செய்யவில்லை. தற்கொலை செய்பவர் இரணடு தடவை தன்னைத்தானே சுட முடியாது. ஒரு தடவைதான் சுடமுடியும். ஆக மாவீரர்களின் மாபெரும் தலைவர் மாகோழையாக எதிரிகளின் கரங்களால் செத்திருக்கிறார்.
மாவீரர் நினைவு நாட்களில் புலிகளின் தொலைக் காட்சியிற் தோன்றி மரணத்திற்கு அஞ்சாத பெருவீரராக வீர உரை நிகழ்த்தியவர் எதிரியிடம் மண்டியிடாத தமிழ் மறவர் பற்றி வீரக் காதைகள் உரைத்தவர். இப்போ தன் வாழ்நாள் எதிரியாய் பிரகடனப் படுத்திய சிறீலங்கா சிங்களப் படை முன்பு மண்டியிட்டு தன் உயிர் காக்க முனைந்து சுயநலமியாக சாவால் ஆட்கொள்ளப் பட்டுள்ளார். "சுடவேண்டாம் நான்பேசத்தயார்"என்று கைகளை உயர்த்திய படி நிராயுதபாணியாகச் சரணடைந்த ரெலோ சிறீ சபாரத்தினத்தை 38 குண்டுகளால் சூட்டுக் கொன்ற புலிகளின் நினைவுகள் தனது மரணத்தின் கடைசிக் கட்டத்தில் ஒருவேளை எமது தேசியத் தலைவருக்கு நினைவுக்குள் நிழலாடி இருக்கலாம். கிடட்தட்ட 60000 பேருக்குமேற்பட்ட மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாகியிருந்த ஒரு மனிதன் பல ஆயிரம் மக்களை மனிதவதைமுகாம்களில் சிறைவைத்து வதைத்து நீதிவிசாரணையின்றிக் கொன்ற ஒரு பாசிச சர்வாதிகாரி தன் உயிரும் தன் குடும்பத்தின் வாழ்வு மட்டும் வெல்லமாய் இனித்திருக்கிறது. உயிர்போனாலும் சரண்புகாத தமிழனை "முதுகுக் கிடான் கவசம்" பேசிய பிரபாகரன் எதிரிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரண்புகுந்து அவமான சாவை எய்தியுள்ளார்;. பிரபாகரன் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாப் பாசிஸ்டுகளும் அதிகாரம் இருந்தபோது இரக்கமற்ற கொடுங்கோலர்களாக இருந்துவிட்டு கடைசிக்காலத்தில் தோற்று ஓடி ஒழித்து அந்தரித்து அவமானப்பட்டு செத்தொழிந்த வரலாறுதான் இருக்கிறது.
புலிகள் வன்னியில் தம்மிடமிருந்து இராணுவபகுதிக்கத்தப்பிஓட முயன்ற 2000 திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்றார்கள். ஓரே தினத்தில் உருத்திர புரத்தில் மட்டும் 200 பேரைக் கொன்றதாக புலிகளிடமிருந்து தப்பி வந்த தயா மாஸ்டர் கூறி இருக்கிறார். புலிகள் மக்களைப் பிணைக்கைதிகளாக வைத்து;க் கொண்டு அரசு பிரகடனப் படுத்திய பாதுகாப்பு வலையத்தில் புகுந்து கொண்டு மக்கள் மத்தியில் இருந்துகொண்டு இராணுவத்தைத் தாக்கினர். புலி இராணுவ யுத்தத்தின் இடையில் மக்கள் சிக்கி மரணம் அடையும் நிலையைப் புலிகளே ஏற்படுத்தினர். இறந்த மக்களின் உடல்களையும் காயப் பட்டவர்களையும் தமது ஊடகங்களின் மூலம் புகலிட நாடுகளில் காட்டி சிங்கள அரசு தமிழனைக் கொலை செய்வதாகக் கூறினார்கள். சர்வதேசரீதியாக இதைப் பிரச்சாரப் படுத்தினர். புலிகளின் தமிழ் நெற் பொய்ப் பிரச்சாரங்களை சீ.என்.என், பீ.பீ.சீ, டொச்சவெல வரை வெளியிட்டனர்.
புலிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயம் புலித்தலைமை மேற்குலக ஏகாதிபத்தியங்களை அரசியல் இராணுவரீதியிற் தலையிடும்படி திரும்பத்திரும்பக் கோரியது. ஐநா படைகளும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் அனுப்பும்படி கேட்டார்கள். மேற்கு நாடுகள் இலங்கையில் நேரடியாகத்தலையீடு செய்யத் தக்க மனிதப்பேரவலம் நிகழ்வதான காட்சிகளை உருவாக்கினர். எவ்வளவு தமிழர்கள் அதிகமாகச் சாகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தம்மைக் காக்கவல்ல சர்வதேச அபிப்பிராயங்கள் திரளுமென்று புலிகள் எதிர்பார்த்தார்கள்.
பிரபாகரன் வன்னியில் மேற்கு நாட்டுச் செல்வந்தர்கள்போன்று நவீன நீச்சல் தடாகங்கள் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட நவீன வசதி கொண்ட வீடுகள் இலங்கையில் எப்பாகத்திலும் மக்கள் கண்டறிந்திராத வகையில் அமைக்கப்பட்ட உலகமெல்லாம் தொடர்புகொள்ளக் கூடிய வகையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கொண்ட நிலவறைகள் இவைகளுடன் வாழ்ந்தவர். இதற்கு முன்பு கொழும்பு -7 எல்லாம் பிச்சை புக வேண்டும். பிரபாகரன் முதல் புலித்தலைமை எல்லாம் போர்ப் பிரதேசத்தில் பசிபட்டினியில் அடிபட்டுச் செத்தவர்களாகவா தென்பட்டனர்? வண்டி தொந்தியடன் கூடிய கொழுப்பேறி மின்னும் கன்னக் கதுப்புகள் தொங்கும் தாடைகள் வீங்கி முட்டிய களுத்துக்களுடன் உழைப்புக்கு மிஞ்சிய போசனை ஊட்டப்பட்வர்களாகக் காணப் பட்டனர். இதே சமயம் வன்னியில் வாழ்ந்த சாதாரண மக்களோ வளர்ந்து கிடந்த தாடி மீசை தலைமயிருடன் பரதேசிகளாகக் காட்சி அளித்தனர். குழிவிழுந்த கண்கள் கன்னங்களுடன் என்பு தோல் போர்த்தியிருந்தனர். வன்னி விவசாயிகள் அரையிற் கட்டிய துண்டுகளோடும் சில சமயம் கோவணங்களோடும் தமது கமங்களிலும் வெண்காயம் மிளகாய் தோட்டங்களிலும் உழைத்தனர். பெண்கள் 20 வயதிலேயே 40 வயதுத் தோற்றத்துடன் வற்றல் தொத்தலாக உயிர் தரித்திருந்தனர். 40;, 50 வயதுப் பெண்கள் அந்த வயதிலேயே கிழ ஆத்தைகளாக ஆச்சிமாராக ஆகிப் போயினர். வுன்னிக் குழந்தைகள் அரைப்பட்டினி காப் பட்டினியுடன் பேத்தைகளாகத் திரிந்தனர். இம்மக்கள் மேல் வரி வட்டி வேண்டிப் புலிகள் இச்சுரண்டலில் வாழ்ந்தனர்.
அவர்களின் உழைப்பினைக் கொள்ளை கொண்டனர். குடும்பங்களாகப் பிள்ளைகுட்டிகளோடு வயற்காடுகளில் இம்மக்கள் உச்சி வெய்யில் வரும்வரை உழைத்தனர். ஆடுமாடுகள் எருமைகளை மேய்த்தார்கள். பெரும் நெல்வயல்களில் இரவுக்காவற் கொட்டில்களில் பயிர்களை அழிக்கவரும் காட்டுமிருகங்களுக்குக் கண்விழித்துக் காவலிருந்தார்கள். ஆனால் புலித்தலைமையோ சீவியத்திலும் உழைத்திராதவர்களாக மண்வெட்டி, கோடாலி, பிக்கான் பிடித்திராதவர்களாக வெற்றிவேர்வை நிலத்தல் சிந்தியிராதவர்களாக குளிர்சாதன அறைகளிலும் நீச்சல் தடாகங்களிலும் காலங்கடத்த முடிந்திருக்கிறது. இப்படிச் சொகுசு வாழ்க்கையில் இருந்தவர்கள் மக்களைக் கொள்ளையிட்டு வாழ்ந்தவர்கள் எப்படிப் போராடி மரணிப்பர். எப்படி உயிராயுதமாக மாறி எதிரியுள் புகந்து வெடித்துச் சிதறி மடிவர்.
பிரபாகரன் இதுநாள்வரை ஆமி பொலீசிடம் பிடிபடாமல் இருந்ததற்குக் காரணம் அவரின் திறமை அல்ல. மாறாகக் கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம். குட்டிமணிபோன்றவர்கள் பொலீஸ் தேடும்போது பயப்படாமல் நின்று இளைஞர்களோடு சதாரணமாக வல்வெட்டித்துறையில் பொது இடத்தில் கைப்பந்து விளையாடும் அளவு துணிச்சல் இருந்தது.மக்களின் ஆதரவும் இருந்தது. ஆனால் பிரபாகரனோ அடிக்கடி இடம் மாறுவார். .ஒரு இரவில் பல இடங்களில் மாறிப் படுப்பார். சொந்த நண்பர்களைக் கூட நம்பாதவர்;. வேறிடத்திற்குப் போக வேண்டாம். தனது கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்குள் கூட துணிந்து மக்கள் முன் வராதவர். சொந்தப் பாதுகாப்பில் அதீத அக்கறையும் தன் நண்பர்கள் தோழர்கள் உயிர்களைப் பாதுகாப்பதில் எந்தக் கவனமும் இல்லாததோடு அவர்கள் இறந்தால் அவர்களை மாவீரர்களாக்கி அப்பெருமையைத் தனக்கே சூடிக் கொள்ளும் மனிதன். இத்தகைய ஒருவர்; யாழ் நடுத்தர வர்க்க அரசியலின் வீர தீரச் செயல்களுக்குத் தோதானவராக இருந்தார். பொறுப்பெடுக்காத அடுத்தவனை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் குணமுடைய இவ்வர்க்கத்திற்கு பிரபாகரன் வந்து வாய்த்தார்.
இவர்கள் பிரபாகரனை உருவேற்றி விட்டனர். உற்சாகம் தந்தனர். நீயே தலைவனுமாகுக! என்றனர். யாழ் நடுத்தர வர்க்கம் தன்னைச் கல்விச் சமூகமென்று சுயபாராட்டுதல் செய்த சமூகமாகும். மேற்கத்தய சார்புக் கல்வி முறையையும் ஆங்கில அறியையும் கொண்டாடிய குழுமமாகும். இத்தகைய சமூகம் எப்படி இவர்களது கல்விச் சமூகம் என்ற இலட்சணங்களுள் வராத பிரபாகரனைத் தலைவராக ஆக்கியது?. ஜி.சீ.ஈ படித்துப் பாஸ் பண்ணாதவர்களை ஏற்காதவர்கள், உவன் எஸ.எஸ்.சி பாஸ் பண்ணாமல் திரிகிறான் என்று தரம் இறக்கிய சமூகம் களிசான் போட ஆங்கில அறிவு தேவை என்று நிபந்தனை போட்ட சமூகம் இதுவாகும். வன்னியில் 5, 10 ஏக்கர் நெற்காணி விதைப்பவர்கள் 5,10 ஆயிரம் மிளகாய் கன்று வைப்பவர்களே மதிக்கப் பட்டனர். வன்னியில் யாழ் குடா நாட்டு மத்திய தர வர்க்கம் போல் உத்தியோக மோகம் கல்வி ஆங்கில அறிவு இவைகளில் மிதப்புக் காட்டுவது இல்லை. யாழ் நடுத்தர வர்க்கம் தனக்கேயுரிய தனக்கு மிகப் பொருத்தமான தமிழ்Cow Boy யாகப் பிரபாகரனைத் தேடிப் பிடித்தது. இவர்கள் தமிழின வாதத்தின் மிக அடி நிலையான தீவீரமான கருத்தாக்கங்களால் நிரப்பப் பட்டிருந்தனர். புலிகளின் தமிழ் மக்கள் மேலான கொலைபாதகங்களைப் பேசாதவர்கள் தமிழினக் கொலை நடப்பதாகத் தொடர்ந்து முறையீடு செய்தார்கள்.
பிரபாகரனின் சாவுக்காக இலங்கைத் தமிழ் மக்கள் துக்கம் கொண்டாட மாட்டார்கள். அவர்கள் இரணடு பத்தாண்டு கால யுத்தத்தில் இருந்து மீள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலி ஆட்சியில் வாழ்ந்த நொந்து கெட்டு இறந்து பழுத்த அனுபவத்தோடு உள்ளவர்கள். அவர்களுக்கு எந்தக் கருத்துரிமையோ ஊடக உரிமையோ இல்லாமல் வாழவிடப் பட்டவர்கள். புகலிடத்து தமிழர்கள் இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலைக் கையாளும் உரிமையைத் தம்மிடம் எடுத்துக் கொண்டார்கள். தமது வெளி நாட்டு அகதி வாழ்வுக்கும் அரசியலுக்கும் ஏற்ப அதை திரித்து விளக்கினார்கள். இவர்களிற் பெரும்பகுதி 1980, 1990 களில் குடிபெயர்ந்தவர்கள். எனவே அக்காலத்தே தம்முள் தேக்கி வைத்துக் கொண்ட பழைய பாசிபிடித்த தமிழின வாதமே அவர்களின் அரசியலாய் இருந்தது. வாழும் நாடுகளின் அரசியலிலோ மாக்ஸ்சிசம் மற்றும் தொழிலாளர் இயக்கங்கள் பற்றியோ எந்த அறிவும் தொடர்பும் இருக்கவில்லை. உலகமயமாதலின் பிரமாண்டமான அரசியல் மற்றும் தொழிற்துறை மாற்றங்களை; அவர்கள் கிரகிக்கவில்லை. புலிகள் தீவிரமாய் வளர்த்த தமிழ் ஈழக் கனவும் சிங்களவர்களும் இலங்கை அரசாங்கமும் எதிரிகள் என்ற நொய்த்தன்மை கொண்ட தமிழின வெறியே அரசியலாக இருந்தது. இவர்கள் மேற்குலக நாடுகளை நம்புபவர்களாக இந்த நாடுகளைத் தமிழர்களுக்கு நீதி வழங்கத் தக்க சர்வதேச சமூகமாக வரித்துக் கொண்டவர்கள்.
ஒரு போரின் கொடுமையைக் கண்டறியாத இவர்கள் தொலை தூரத்திலிருந்து தழிழீப் போரின் வீரசாகசங்களைப் பற்றிய மாவீரர் கதைகளை வீடியோ காட்சிகளில் கண்டு களித்தவர்கள். இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் புலிகளின் முதுகுக்குப் பின்னால் போராடிச் சாகத் தயாராகி உள்ளதான நிரைக்கு நிற்பதான கற்பனைச் சுமையேறித் திரிந்தார்கள். இவர்கள் இலங்கைப் போரினால் மக்களின் மரணங்களினால் நேரடியாக லாபம் பெற்றவர்கள். தமது அகதி வாழ்வுக்கும் செல்வத்திற்கும் இவைகளை அடிப்படையாக்கிக் கொண்;டார்கள். உள்ள பொய்யெல்லாம் சொல்லி அரசியற் தஞ்சம் எடுத்தார்கள். வேலைகள் முடிந்து மாலைப் பொழுதிலும் வார இறுதி நாட்களிலும் மாவீரர் தினங்கள் மற்றும் புலி நிகழ்வுகளில் கலப்பதை வீரக் கடமையாகவும் பொழுதுபோக்காகவும் கருதினர். அன்னிய நாட்டில் அடையாளமற்ற கூட்மாக வாழ்ந்த இவர்கள் தம்மைப் புகலிடப் புலிகளாக எண்ணிச் சிலிர்த்துக் கொண்டார்கள். சூரியக் கடவுளும் தேசியத் தலைவருமான பிரபாகரனின் விசுவாசமிக்க பிரைசைகளாகத் தம்மைக் கருதிக் கொண்டனர்.
இவர்கள் புகலிட நாடுகளில் வதிவிட உரிமை பெற்று இலங்கையில் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் கற்பனையாக இருந்த, தொலைக்காட்சி, கார் தங்க நகைகள, காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் விமானப் பறப்புகள் விடுமுறைப் பயணங்கள் சொந்த வீடுகள் வரை வாங்கி வாழ்வின் கனவுகளெல்லாம் நிறைவேறியும் ஏதோ இன்னமும் நிறைவேறாத ஆசைகள் மனம் நிறைவுறாத புரிந்துகொள்ள முடியாத உள்மனத் துயரங்களில் நிறைந்தவர்கள். இவர்கள் தம் சீவியத்தில் இலங்கைக்கோ தமது தமிழீழத் தனிநாட்டிற்கோ திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எந்தக் கனவும்; இல்லாதவர்கள். விடுமுறைக் கால விடுப்பில் இலங்கை போன சமயம் தமது பிள்ளைகள் இலங்கைச் சுவாத்தியமும், சாப்பாடும், இனசனமும், ஓயாத இரவிரவாக நடந்த பேச்சுக் கச்சேரிகளும் பிடியாமல் பட்ட பாட்டடை பெருமையாய்ச் சொல்பவர்கள். இனி இலங்கைக்கு வரமாட்டோம் என்று பிள்ளைகள் முடிவெடுத்துவிட்டதாக எல்லா இடமும் கதை கதையாகப் பேசுபவர்களாகவும் இருந்தனர். தாம் ஒரு போதும் போய் வாழ விரும்பாத தமீழீத்திற்கு ஆசைப் பட்ட இவர்களே இன்று இலங்கையில் நடந்த தமிழ் மக்களின் அத்தனை பேரழிவுகளுக்கும் மூலகாரணமானவர்கள். மூதூர் தொடக்கம் வன்னிவரை செத்த பல ஆயிரம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் இறப்புக்கும் பலபத்தாயிரம் காயப் பட்டவர்களுக்கும் பொறுப்பாளிகள். இந்த மூன்று வருடத்தில் சிங்களக் கிராமங்களிலிருந்து வந்து இராணுவத்திற் சேர்ந்து புலியுடன் போராடிச் செத்த 6200 வரையிலான இளைஞர்களின் மரணத்திற்கும் இவர்களே முழுப் பழியையும் எடுக்க வேண்டும். உண்மையான கொலையாளிகளாக இவர்களே இருந்தனர். இவர்களது பிள்ளைகள் புகலிட நாடுகளில் மென்மையும் அழகும் ஆரோக்கியமும்; கல்வியறிவும் கொண்டவர்களாக நாகரீகமாக வளர்ந்தார்கள். பல இன மத மக்களோடு ஒன்றுகூடி பல்லினக் கலாச்சாரத்துக்குள் ஆள்ப்பட்டனர். ஆனால் இந்த முதற் தலை முறைத் தமிழர்களர்களின் பெரும்பகுதி தீவிர தமிழ் வெறியர்களாக இருந்தார்கள். இலங்கையில் புலிகள் நடாத்தும ;போராட்டத்திற்கு தம் பிள்ளைச் செல்வங்களை அனுப்ப வேண்டுமென்று ஒரு போதும் எண்ணிப் பார்க்காதவர்கள்.
மிளகாய் கன்றுக்குச் சாறக்; கூலிக்கு ஆள் பிடிப்பது போல் வெண்காயத்தோட்டத்திற்குப் புல் பிடுங்க பெண்விவசாயத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது போல் இவர்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு பணத்தைக் கொடுத்துப் புலிகளின் மூலம் ஏழைத் தமிழ் மக்களின் ஆண் பெண் பிள்ளைகளைப் பலவந்தமாய்ப் பிடித்துக் கூலிக்குப் போராடச் செய்ய முயன்றனர். புலிகட்கு எதிரான எந்த விமர்சனமும் அரசியல் அபிப்பிராயங்களையும் இவர்கள் பொய், துரோகிகளின் பிரச்சாரம் அரசாங்கத்தின் ஆட்களென்று விமர்சிப்பது பொதுக் குணமாய் இ;ருந்தது. சுதந்திரமாய் அரசியற் கருத்துக்களை வளர்த்தெடுக்க முடியாத மட்டத்திற்கு புலிப்பயங்கரவாதத்திடம் இவர்கள் அடிமைப்பட்டுக்கிடந்தனர். புகலிடத் தமிழ்ச் சனத்திற்கு இது விதியாகியது. இவர்களை விட வேறு விதம் விதமாக ஜனனாயகம் பேசும் திருக்கூட்டங்கள் புகலிட நாடுகளில் இருந்தன. இவர்கள் தத்தமக்குப் பொருத்தமான ஜனனாயகம் பேசுபவர்கள். இதில் தமிழ் என்ஜி ஓக்களின் ஜனனாயகம் புலிகளல்லாத தமிழ் இயக்கவாதிகளின் ஜனனாயகம் ரிபீசீ ஜனனாயகம் என்று பல வர்ணங்களில் ஜனனாயகத்தின் காவற்தெய்வங்கள் திக்குககு ஒன்றாய் நின்றனர்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்கும் சிங்கள பவுத்த இனவாதத்திற்கு மெதிரான புனித போராளிகளாக தம்மை நியமித்துக் கொண்டனர். இதன் ஒரு பகுதி மேற்குலக நாடுகளின் நிதிகள் மற்றும் அரசியல் நோக்குகளுக்காகச் செயற்படுபவர்களாகவும் புலியல்லாத தமிழ் இயக்கங்கள் மற்றும் ரீபிசீ போன்றவை இந்தியாவுக்கு அப்புக்காத்து வேலையுடன் பத்து இருபது மேற்கு நாடுகளை; சர்வதேச சமூகம் ஆக்கி ; அவர்களை இலங்கைப் பிரச்சனையில் தலையிடக் கேட்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் சர்வதேச சமூகத்தை தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வா வா என்று வருந்தி அழைத்தனர். மேற்குலக நாடுகளின் சுரண்டல் ஆக்கிரமிக்கும் அரசியலையோ இராணுவக் குணம்சங்;களையோ இவர்கள் மதிப்பிட முயன்றதில்லை. இவர்கள் அனைவரும் கூடிக் குறைந்த அளவில் மாக்ஸ்சிய விரோதிகளாக முதலாளிய அரசியலைத் தொடர்பவர்களாக இருந்தனர்.
தமிழினவாதிகளால் உச்சியில் வைத்துக் கொண்டாடப்பட்ட இலங்கை மக்களின் பொது எதிரயான பிரபாகரனின் மரணம் நிகழ்ந்துவிட்டது. புலி சார்பு மட்டுமல்ல தமிழ் நாடு ஊடக சமுத்திரமும்; மேற்குலக ஊடகங்களும் புலிகளைப்பற்றி உருவாக்கிய கருத்துருவாக்கத்திலிருந்து தப்பி பிரபாகரன் பற்றிய மெய்யான வடிவத்தை அவரது வர்க்கச் சார்பு நிலையை கண்டறிந்து செயலைக் கண்டறிய வேண்டும். பிரபாகரன் யாரின் விருப்புக்களைக் காவி நின்றார். பிரபாகரனின் கொடூரமான பாசிசப் பயங்கரவாதத்தின் பின்புலம் மற்றும் யாழ் குடாநாட்டு தமிழினவாத அரசியல் இவைகளை ஒன்று சேரக் கூட்டிக் கழித்துப் பரிசீலிக்க வேண்டும். பிரபாகரன் ஒர் அரசசேவையாளரின் மகனாகப் பிறந்த போதும் வல்வெட்த்துறை கள்ளக் கடத்தற்சூழலில் சட்டவிரோத வாழ்வில் வளர்ந்து ஆளானவர்;. வல்வெட்டித்துறைச் சிதம்பராக் கல்லூரியில் அக்காலத்தய "ஜே.எஸ.;சீ" படிப்புவரை படித்தவர். அக்காலத்து ஜே.எஸ்.சி யில் பாசோ பெயிலோ அடுத்த வகுப்பேற்றம் செய்வது வழக்கமாக இருந்தது. எனவே பிரபாகரன் ஜேஎஸ்சி சித்தியெய்திய தகுதியைப் பெற்றாh.; அவர்மேலே படிக்கவில்லை. பள்ளியைக் குளப்பி விட்டார். அவர் ஜேஎஸ்சி படித்த காலத்தில் வகுப்பில் 31 பிள்ளைகள் இருந்தனர். அதில் 30 ம் பிள்ளையாக வரும் கெட்டித்தனத்தை எமது எதிர்காலப் புலித்தலைவர் பெற்றிருந்தார்.
அதாவது அக்காலப் பள்ளிக் கூடப் பாஷையில் "கடைசிக்கு முதல"; பிள்ளையாக வருபவர். பிரபாகரன் காலப் பள்ளிப் படிப்பு என்பது பெரும் சித்திரவதையாகும். வகுப்பில் கடுமையாக அடி கிடைக்கும். வாத்திமார் கன்னத்தைப் பொத்தி அறைவார்கள். வாத்திமார் அதற்கென் விதம் விதமான தடிகளை மொக்கு சீவி பதப்படுத்திகொண்டு வருவார்கள். சிலர் விஷேடமாக எப்படி அடித்தாலும் வளையாத உடையாத உறுதியான பிரப்பந்தடிகளைக் கொண்டு வருவார்கள். வீட்டுப்பாட்ம் ஒவ்வொரு மாணவ மாணவியும் செய்ய வேண்டும். வாய்க்கு வந்தபடி வாத்திமார் வகுப்பில் பேசுவார்கள். மொக்கு, கழிவு, சக்கட்டை, மண்டூகம், சோத்துமாடு என்று பட்டங்கள் தரப்படும். "கொப்பர் உனக்குக் கோவணம் அவிட்ட நேரம் ஒரு தென்னம்பிள்ளை வைத்து இருந்தால் இப்ப அது நல்லாய்க் காய்க்கும்" என்று கூடத் திட்டுப்படுவார்கள். திறமையற்றவர்களாகக் கல்வியில் கணிக்கப் படுபடுபவர்கள் சுயம் இழந்து தன்னம்பிக்கை வாய்திராதவர்களாக ஒதுங்கி வாழ்பவர்களாக மாறுவர். பிரபாகரனின் இளம் பிராயம் இத்தகைய வழியிலேயே தொடங்கியது. பள்ளிப் படிப்பு ஏறாதவனாக தாய் தகப்பன் சொற்கேளாதவனாக ஊர்சுற்றத்தொடங்கினார்.. தன் மகன் உருப்படாமற் போய்விட்டதாக தகப்பன் வேலுப்பிள்ளை பலரிடமும் முறையிடத் தொடங்கினார்.
திசையின்றி அலைந்த பிரபாகரன் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் உழைத்த சின்னச் சோதியுடனும் அவருக்குத் துணையாக இருந்த குட்டிமணி தங்கத்துரையுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். கள்ளக் கடத்தற் பொருட்களை ஏற்ற இறக்க பின்பு இந்தியாவுக்கு பொருட்களைக் கடத்திவரச் சென்றதுவரை இது வளர்ந்தது. இதே சமயம் பிரபாகரனுக்கு யாழ் கள்ளியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சிறுவயதிலேயே மக்கோனா சிறுவர் நன்நடத்தைப் பள்ளியில் இருந்தவரான செட்டி என்று அழைக்கப்படும் தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தச் செட்டி அப்பகுதியில் கொலைகள் கொள்ளைகள் என்பவற்றுடன் வங்கிக் கொள்ளையிலும் ஈடுபடத் தொடங்கியிருந்தார். பிரபாகரன் அவரைத் தலைவராக வரித்துக் கொண்டிருந்த சமயம் அது. ஒரு முறை தங்கத்துரையுடன் வாக்குவாதப்பட்ட பிரபாகரன் "செட்டிதான் என்தலைவன.; அவன் எத்தனை வங்கி அடித்தான். நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்" எனக் கேட்டார். இந்தச் செட்டியுடனான உறவே பிரபாகரனின் மாபியாத் தன்மை வாய்ந்து. புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கு மாதிரியாக அமைந்தது.
அரசியலோ பொது அறிவோ இல்லாதவராக எந்தநூலையும் வாசித்திராதவராக எழுதுவதோ பேச்சாற்றலோ இல்லாதவராகப் பிரபாகரன் இருந்தார். விளையாட்டிலோ படிப்பிலோ வேறு எந்தத் துறையிலோ பிரகாசித்திருந்திராத மனிதனாக மெச்சத்தக்க மனிதப் பண்புகளோ ஒருவிடயத்திலாவது விசேடகவனமோ இல்லாதவர். ரசனையோ மென் உணர்வோ இயற்கை சார்ந்த ஈர்ப்போ இல்லாத வறண்ட மனிதர். அக உலகம் இருளடைந்த பிறவியாக உலாவியவர். இளம் வயதுமுதல் யாருடனும் அதிகம் சேராதவராக நண்பர்களைப் பெற்றிராத தனித்த மனிதனாக ஒதுங்கி வாழ்ந்தவர். அதிகம் பேசாத கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லும் அம்ம முண்டியாக இருந்தவர். பிற்காலத்தில் எவ்வாறு கொடூரமான ஆட்கொல்லியாக மாறிய காரணிகளை இக்கால வளர் பருவத்தில் காணமுடியும். இவர் தமையனான மனோகரனை வல்வெட்த்துறைச் சனங்கள் "லேடி மனோகரன்" என்று அழைத்தபோது பிரபாகனைப் "பெட்டையன"; என்றே ஊர்ச்சனம் பேரிட்டிருந்தது. பிறரின் ஆழமைக்கு எளிதில் ஆட்படுபவராக எங்கும் எவரையாவது சார்ந்து நிற்கும் தன்மை வாய்ந்தவராக இவர் இளமைப் பருவம் இருந்தது. பிரபாகரன் ஒரு பிலிஸ்டைன். சுயநலம் பயம் தன்னம்பிக்கை, கோழைத்தனம் இவைகளின் கூட்டு நபராவார். இத்தகையவர் அதிகாரமும் வாய்ப்பும் கிட்டும்போது கனவிலும் எண்ணியிராத கொடுங்கோலர்களாகப் பாசிசப் பண்பு படைத்தவராக மாறுவர். தம் கடந்த காலத்திய சமூகக் கீழ்நிலைக்கு ஒடுங்கி உள்ளிழுத்து ஓட்டுள் பதுங்கி வாழ்ந்த நிலைக்கு பழிஎடுக்கும் இயல்பினராக மாறுவர். பிரபாகரனுக்கு ஆளம்பு சேனை வாய்த்தபோது பாசிஸ்டகளுக்கே உரித்தான எதிர்க்கருத்தோ ஜனநாயகமோ அற்ற தானே ஏகப் பிரதிநிதி ஏகத்தலைவன் ஏக இயக்கம் என்ற கருது கோள்களை இலகுவாக வந்தடைந்தார். பிரபாகரனுக்கு இருந்த ஒரே தகுதி நன்றாகச் சுடத் தெரிந்ததாகும். அண்மையில் குமுதம் சஞ்சிகையில் பிரபாகரன் பற்றி வந்த கட்டுரையொன்றில் ராகவன் என்பவர் பிரபாகரன் இளமையில் கிட்லரின் (Mein Kampf)மையின் காம்ப் நூலைப் படித்திருந்ததாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் 1970 பது களில் வடபகுதியில் தமிழிலோ ஆங்கிலத்திலோMein Kampf மைன்காம்ப் யாராலும் படிக்கப்பட்டது, வாசிப்போர் மத்தியில் உலாவியது அல்லது தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகமாகி இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அது தடைசெய்யப்பட்டு இருந்ததுடன் இலங்கைப் பல்கலைக்களக அரசியல் விஞ்ஞான நூலகங்களிற் கூட இருக்கவில்லை. இது கற்பனை என்பதைவிடப் பிரபாகரனின் மாவீரர் இருப்புக்குச் செய்யும் துணைச் செயலாகும். கிட்லர், பாசிசம் இவர்களைப் பற்றி கொம்யூனிஸ்டுகள் மட்டுமே உணர்வுள்ளவர்களாக இருந்தனர். கொல்வின் ஆர் டி சில்வா பிலிப் குணவர்த்தனா போன்றவர்களது பேச்சிலும் எழுத்திலும் இவை பெருமளவு வெளிப்பட்டன. தமிழ் தேசிய வாதிகளின் செல்வனாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் அமிர்தலிங்கம் போன்றவர்கள் பாசிம் அல்லது பாசிச எதிர்ப்பு போன்றவை சார்ந்த படிப்போ பேச்சோ எழுத்துக்களுடனோ தொடர்பில்லாதவர்கள் என்பது மட்டும் உறுதி.
பிரபாகரனின் ஆடம்பர விருப்பு;- சொகுசு புகழ்விருப்பு தன்னைப் பரப்புவதில் அக்கறை, அதிகார வெறி என்பன அதீதமான சுயநலம் என்பன சார்நத சமுதாயவயப்படாத பாசிசக் குணாம்சமாகும். பிரபாகரன் தமிழர்களுக்காகப் போராடினார் என்ற சொற்சுலோகங்கள் பிரபாகரனின் தனிப்பட்ட இயல்புகள் அவர் பிரதிநிதித்துவப் படுத்திய வர்க்கம் இவைகளை ஆய்வுக்குட்படுத்த முடியாதவர்களின் விளக்கமாகும். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படுத்துதல் தன்னுடன் உடன்படாதவர்களை எதிரியாகப் பிரகடனப்படுத்தி அழித்தல் பழி எடுக்கும் குணம் அரசியலுக்கு வெளியேயான தனிப்பட்ட வன்மங்கள் இவைகள் பிரபாகரனின் இயல்பாகும். யாழ் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் என்பது ஆயுதக் கலாச்சாரமாக கொலைப் பண்பாடாக மாற்றம் பெற்றது. பிரபாகரன் யாழ் நடுத்தர வர்க்கத்தின் புதல்வன் என்ற வகையில் அவர் கொடுங்கோலனாக மாறத்தக்க தமிழ்த்தேசியவாதத்தின் கருத்தோட்டங்கள் சமூகநிலமைகளுள் இருந்தன. புலிகளின் துரோகி எட்டப்பன்காக்கை வன்னியன் காட்டிக் கொடுத்தவன் இனவிரோதி என்ற கருத்தாக்கங்கள் புலிகட்கு முந்திய தமிழரசுக் காலத்திற்கு உரியவையாகும். ரெலோ உறுப்பினர்கள் 800 பேர்வரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது யாழ் நடுத்தர வர்க்கம் அதை வீரக் காட்சியாகக் கண்டது. 100 இயக்கங்கள் தேவையில்லை ஒரு பலமான இயக்கம் இருந்தாற் போதுமென்று கருதியது. ரெலோ தாக்கப்பட்ட போது புலிகளுக்குச் சோடா கொடுத்து உபசரிக்கப்பட்டதாகவும் வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப் பட்டதாகவும் வந்த செய்திகள் அரசியல் உணர்வு பொற்றதாகக் கருதும் யாழ் நடுத்தர வர்க்கம் எதிர்கருத்தற்ற பாசிச மயமாகும் சமிக்ஞையை வெளியிட்டதற்கான அடையாளமாகும். சாதாரண கருத்து வித்தியாசங்கள் சமூக யதார்த்தமாகக் கொள்ளப் படாமல் துரோகமாகக் காட்டிக் கொடுப்பாக விளக்கப் பட்டமை தமிழரசுக்காலத்தில் தொடங்கியது.
பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும்; நண்பர்களைப் பெற்றிராதவர். நண்பர்களாக நம்பப் பட்டவர்களை துரோகி உளவாளி என்று கொன்றார். தன்னைச் சுற்றியுள்ள எல்லோரையும் காலத்துக்காலம் பயன் படுத்திவிட்டுப் பின்பு கழுவில் ஏற்றினார். "ஒன்றுமே தெரியாதவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம்" என்ற கூற்றிற்கு உதாரணமான மனிதர். தன்னைப் பொலீஸ் தேடும்போது காப்பாற்றியவர்கள், ஒழித்துவைத்துச் சாப்பாடு போட்டவர்கள், வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் இவரின் கையாற்சூடுவாங்கிச் செத்தார்கள். தன் சொந்தப் பாதுகாப்பில் கண்ணுங் கருத்துமாக இருந்த பிரபாகரன் தனக்கு என்று ஆரம்பகாலத்திலேயே இந்தியாவுக்கு தேவைப்படும்போது தப்பிச் செல்ல தனி வள்ளமும்; தனக்கென்று; ஓட்டியும் இரகசியமாக வைத்திருந்தார். யாழ்பாணத்தில் பொலீஸ் பொடியங்களைத் தேடினால் எமது தேசியத் தலைவர் இந்தியாவுக்கு வல்வெட்டித்துறையிலிருந்து வள்ளமேறி விடுவார்.
சிலர் தமிழ் தேசியம் புலிப்பாசிசம் இரணடையும் பிரித்து நோக்கினர். பாலையும் நீரையும் பிரித்து அருந்தும் அன்னப் பறவையென்று தம்மை கருதிக் கொண்டனர். தமிழரசுக் கட்சி கிளப்பிய தமிழரது தேசியவாதமே புலிப்பாசிசமாக இறுதியில் பரிணாமம் பெற்ற வளர்ச்சிப் போக்கை இவர்கள் கவனியாததோடு இவை அனைத்துமே மேற்குலக அரசியலால் வழிநடத்தப் பட்டவை என்பதைக் கணக்கில் எடுக்கவில்லை. புலிப்பாசிசம் என்பது தமிழ் தேசியத்தின் தொடர்ச்சி. அதன் இறுதிக்கட்ட வளர்ச்சியாகும். ஏதிர்ப்புரட்சித் தன்மை வாய்ந்ததாகும். பிரபாகரன் இறப்பின் பின்பு பிரபாகரனுக்குச் சில புகலிட ஜனனாயக வாதிகள் மாவீர மரியாதையையும்; அஞ்சலியையும் தெரிவிக்க முனைகிறார்கள். கிட்லரை எதிர்த்துப் போரிட்ட பாசிச எதிர்ப்பாளர்கள் அவன் இறந்த பின்பு அவனுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் அதிசயம் நிகழமுடியுமா. அதுபோல புலிப்பாசிசத்தாற் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்மக்களுக்கு ஜனனாயகம் வேண்டும் என்று போரிட்டவர்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா?. கொன்றவனுக்கும் கொல்லப்பட்வனுக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்த இயலுமா?. பாதித்தவனுக்கும் பாதிக்கப்பட்டவனுக்கும் ஒன்று சேர அனுதாபக் கூட்டம் கூட முடியுமா? காந்திய வாதிகள் கோட்சேக்குத் தூக்குத் தண்டனை விதித்த தினத்தை துயரநாள் என்று பிரகடனப் படுத்துவார்களா? புலிப் பாசிசமா இலங்கை முதலாளிய அரசா என்பதில் புலிப்பாசிசம் என்னவகையிலும் அழியவேண்டும் என்ற அரசியல் நிலை எடுக்காமல் தமிழ் சிங்கள இனவாத வேலிகளுள் கட்டுப்படுபவர்கள் இறுதியில் பாசிசத்திற்கு உதவுவதிலேயே முடிவுறுவர்.
பிரபாகரனும் புலிகளும் இல்லாமற் போனால் தமிழ் மக்கள் நிலை என்னவாவது என்ற கேள்விகள் புலிகள் அல்லாதவர்களிடமிருந்தும் கிளப்பப்படுகிறது. எப்படிக் கிட்லரின் வருகையின் முன்பும் அதன் பின்பும் ஜேர்மானிய மக்கள் வாழ்ந்தார்களோ தமது வழியிற் போரிட்டார்களோ அதே போல் தமிழ் மக்களும் பிரபாகரனின் சாவின் பின்பும் சமூக வடிவுக்காக சிங்கள முஸ்லீம் மக்களின் பொதுப் போராட்டத்தோடு இணைந்து அரசியல் செய்யப் பழகுவார்கள். பிரபாகரன் தமிழ் மக்களை ஏனய இலங்கை மக்களுடன் இணைய விடாமல் ஏற்படுத்திய அரசியற் தடைகளை கடந்து செல்வார்கள். இல்ங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் என்பது நாடுதழுவியதாக மாறி ஆசியா தழுவியதாக அதிலிருந்து உலகார்ந்ததாக வளர்ந்து செல்லும். புகலிட நாடுகளிலுள்ள மேற்குலக சார்பு தமிழ் என்..ஜி.ஓக்கள் ஜனனாயகம் பேசும் தமிழ் இனவாதக் குழுக்கள் இவர்களின் அரசியற் தொல்லைகளிலிருந்தும் கருத்தியல் ஆக்கிரமிப்புகளிலிருந்தும் விலகித் தமது சொந்த அரசியலைப் படைத்துக் கொள்வார்கள். தமக்குத்தாமே தலைமை தருவார்கள்.
இவை இலங்கை முழுவதும் ஒரு சோஷலிச சமுதாயம் வரும்வரை தொடரும். தமிழரசு தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழ ஆயுத இயக்கங்களின் கழிவுப் பொருட்களான ஈபிஆர் எல் எப் புளொட் ரெNhல ஈரோஸ் போன்ற சகல குழுக்களையும் மக்கள் தலை முழுகுவார்கள். அதன் பின்பே அவர்கள் சோஷலிசத்திற்கான முதற் தரிசனங்களை எட்டுவர்hகள். இலங்கையில் ஏனைய மக்களைப் பற்றிக் கவலையுறாமல் தமிழனுக்கு மட்டுமே எல்லா உரிமையும் வேண்டும் என்று எண்ணும் தமிழ் இனவாதக் குழுக்கள் அழியும்வரை இலங்கையராகச் சிந்திக்கும் அரசியல் தோன்றாது. பாசிஸ்ட் பிரபாபகரனின் படத்தை வீடுகளில் தொங்கவிட்டுக்கொண்டு தமிழ் ஈழமே தமது இறுதி லட்சியமென்று கத்தும் புகலிட நாடுகளில் உள் ள புளிச்சல் ஏவறைத் தமிழர்களின் இலங்கை மீதான சகல ஆதிக்கங்களையும் அரசியல் நிதி சார்ந்த போக்குகளையும் தகர்க்கும் அரசியலுக்கு மாக்ஸ்சிய சிந்தனை படைத்தவர்கள் முயலவேண்டும்.
புகலிட நாடுகளில் உள்ள தமிழர்கள் புலிகளால் அரசியல் சமூக ரீதியிற் கட்டுப்படுத்தப் பட்ட தமிழினவாதக் கருத்தியல் அடிமைகளாகும். புலிக்கோயில், புலிப்பிள்ளையார், புலிப் பள்ளிகூடம், புலிவிளையாட்டுக் கழகம், புலிக்கடை, புலித்தமிழ் மன்றம், புலிவானோலி புலித்தொலைக்காட்சி புலி இணையத்தளம் என்று சொந்த சிந்தனைகட்கு இடமற்ற அரசியலுக்கு ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்கள் சுதந்திரமான மனிதர்கள் அல்ல. இவர்கள் தாம் வாழும் நாடுகளில் சட்டங்கள் அரசியலால் கட்டப்படுத்தப்படுவதை விட புலிச்சிந்தனை ஓழங்குக்குள் வாழப் பழகியவர்கள். இவர்கள் பிரபாகரனை ஒரு அவதாரமென்று கருதினார்கள.; தேசியத்தலைவர் தேவனைப ;போல் எல்லாவற்றையும் கண்காணித்து கூடவே இருந்து தமிழர்களை வழிநடத்தும் வல்லமை படைத்தவர் என்று நம்பினர்.
புலிகள் ஒரு அசைக்க முடியாத மாவீரர்களின் வெற்றிகளை மட்டும் குவிக்கும் படையென்று கருதினர். இத்தகையவர்கள் பிரபாகரனை மரணங்கடந்த மாமனிதனாக எதிரிகளின் கரங்களில் ஒருபோதும் சிக்காத தந்திரம் படைத்த தலைவனாக தமக்குள் கட்டி அமைத்திருந்தனர். பிரபாகரனை உயிருடன் பிடிப்போம் என்று இலங்கை அரசு அறிவித்த போது இவர்கள் பிரபாகரனை உயருடனோ பிணமாகாவோ கூட எவராலும் பிடிக்க முடியாது என்று நம்பியவர்கள். ஆனால் யதார்த்தத்தில் இலங்கை அரசபடைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரண் புகுந்து பிரபாகரன் சொந்த அவமான முடிவை அவரே தேடிக்கொண்டார். பிரபாகரன் ஒரு மாவீரன் என்ற தோற்றம் அவர் இராணுவத்துடன் சரண் அடைந்ததுடன் ஒரு மாபெருங்கோழை தன் சொந்த உயிருக்குப் பயந்த பேடி மனிதன் என்பதை நிரூபித்துள்ளது. பிரபாகரன் கடந்த 25 வருடத்தில் தமிழ் மக்களிடம் மட்டுமலல தன் எதிரிகளிடம் ஏற்படுத்தியிருந்த பிரமிப்பு வீர உறுதி படைத்தவன் என்ற கதையாடல்கள் அவர் அரச படைகளிடம் பிடிபட்டு தன்னுயிருக்காக மன்றாடிய இறுதித் தருணத்தில் சில மணித்தியாலங்களில் கரைந்து போய்விட்டது. பிரபாகரன் தன் கழுத்தில் கட்டியிருந்த சயனைட்டை கடிக்கவில்லை. புரட்சியாளன் சேகுவேரா எதிரிகளிடம் பிடிபட்டு அவனது மரணத்தின் இறுதிக் கட்டத்தில் துப்பாக்கி அவன் நெஞ்சை நோக்கி நீட்டப்பட்ட போது "கோழையே நன்றாகக் குறிபார்த்;துச் சுடு. அதன் பின்பு நீ ஒரு இறந்த மனிதனின் உடலைக் காண்பாய"; என்று தனது வாழ்வின் கடைசி வார்த்தையைக் கூறினான். ஆஜண்டீனாவிற் பிறந்து தேசமும் தேசியமும் கடந்து உலகமனிதர்கட்குச் சொந்தமாய்ப்போன ஒரு சர்வதேசவாதி தன் மரணத்தை எதிர்கொண்ட விதம் இதுதான்.
ஆனால் பிரபாகரன் சிறந்த கொரில்லாத் தலைவனென்று புலித்தலைவர்களாற் புகழப்பட்டவர். கொரில்லாப் போர்க்கலைக்கு போர்த்தந்திரத்திற்கு பிரபாகரன் என்னத்தை விட்டுச் சென்றுள்ளார்?. ரொட்க்ஸ்கி, மாவோ, ஜெனறல் ஜியாப், சேகுவேரா போன்ற சோஷலிச இராணுவக் கலைப் படைப்புகளை எழுத்தாக்கிச் சென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரபாகரன் விட்டுச் சென்றதோ "எதிரியிடம் அம்பிடும்போது சைனைட்டை குடித்துச் சா" என்ற போர்த்தந்திரம் மட்டுமே. இராணுவத்திடம் சரணடைந்த முக்கிய புலித்தலைமையைச் சேர்ந்து 300 பேரில் ஒருவர்கூடச் சைனைட் கடிக்கவில்லை. இரர்ணுவத்தை எதிர்த்து ஒரு சூடு சுடவில்லை. மறக்காமல் வெள்ளைக்கொடியை உயர்த்திக் கொண்டு கைகளை உயர்த்திக் கொண்டு சரணடைந்து கடைநிலைக் கோழைகளாகச் செத்திருக்கிறார்கள். இதுதான் யாழ் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் கடைசியான வீரக்காட்சியாகும். புகலிடத்திலுள்ள புலித்தமிழர்கள் Obarma Obarma help us, Help us என்று அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு கத்துவதும் ஜேர்மனியில்Deutschland ,Deutschland Hilf uns, Hilf uns என்று மேற்குலக நாடுகளை தலையிடும்படி கேட்பதிலும் கடைசியாகத் தமிழீழ இலட்சியம் முடிவடைந்தது.
200 வருடமாக இலங்கை மக்கள் போராடித் துரத்திய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களின் கொடியை லண்டனில் புலிக் கும்பல் தம்புலிக் கொடியோடு ஒன்று சேர ஏந்திச் சென்றது. இதன் மூலம் இலங்கையின் முழு மக்கள் பிரிவினருக்கும் இலங்கைத்தொழிலாளி வர்க்கத்திற்கும் எதிரான துரோகத்தை அவர்கள் செய்து முடித்தார்கள். தாம் பிறந்த ஏழையான தாய் நாட்டை இலவசக் கல்வி இலவச மருத்துவம் இலவச அரிசி தந்து வளர்த்துவிட்ட சொந்த இலங்கைத்தேசத்தை மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் காட்டிக் கொடுத்தார்கள். புலித்தமிழர்கள் பெரும்பான்மையென்று பயந்து அரசியல் பேசப் பின்னடிப்பவர்களை மாண்ட புலித்தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா விடுவதா என்று ஊசலாடுபவர்களை எதிர்காலம் மன்னிக்காது. பிரபாகரன் என்ற புலி பாசிசத்தலைவன் கொல்லப் பட்டதை எண்ணி இரங்கி அழ மாக்ஸ்சிச வாதிகளுக்கு எந்தவித அரசியல் நியாயமும் இல்லை. மாறாகப் புலிகளாற் கொல்லப்பட்ட கொம்யூனிஸ்டுகளைத் தொழிற்சங்க வாதிகளை தமிழ் சிங்கள முஸ்லீம் பொதுமக்களை இச்சமயத்தில் நினைவிற்கொள்வோம். புலிகளாற் கொல்லப்பட்ட அண்ணாமலை விஜயானந்தன் போன்ற இடதுசாரிகளை மாக்ஸ்சிச அரசியலை அவர்களது தொழிலாளர்வர்க்கப் பாரம்பரியங்களை முன்னெடுக்க உறுதி பூணுவோம். புலிகளின் அரசியற் தோல்வி என்பது வளரும் ஆசிய நாடுகளின் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாள வர்க்கம் நாடு தழுவிய வகையில மீண்டும் ஒன்றிணைவதற்குக் கிடைத்த வாய்ப்பாகும்.
தமிழரசன்
பேர்ளின்
22.05.2009
3 comments:
very good
author factually totally depends on GSOL WHY? Mr.Tamilarasan totally denying all atrocities against tamil speaking people.WHY? When he elaborate the early days of the Tamils Great Hero he misguiding the readers with imaginatory infomations. WHy?
Ur a not a tamil may be a singala
Post a Comment