தமிழ்மணம் திரட்டி உண்மைகளுக்கு எதிராக இயங்குகிறது?
பதிவுகளை விலத்திவிடுவதில் ஒரு எதேச்சதிகாரத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ்மணம்;நேற்றுத்தான் ஒரு நண்பர் உதவியோடு எனது எழுத்தைப் பதிந்தேன்.
தமிழ்மணத்தில் ஒரு நிமிடம்வரை தெரிந்த அப்பதிவு பின்பு முற்றாக விலத்தப்பட்டது.
எதற்காக?
கேள்விக்குப் பதில்:பிரபாகரன் குறித்த இப்பதிவுதான் காரணம். http://oolam.blogspot.com/2009/05/blog-post_29.html
அறிவும்,தேடலுமுடைய ஒரு சமுதாயத்துக்குத் திரைபோடுவதில் எல்லோருமே தத்தம் அறிவுக்கு எட்டியபடி செயற்படுகிறார்கள்.
வரலாறுகளை மூடிவிடுவதால் உண்மைகள் மறைக்கப்பட முடியாது.
கொல்லப்பட்ட பிரபாகரன் குறித்த விமர்சனம் உண்மைகளையும்,ஆய்வையும் ஊக்கப்படுத்தும் கட்டுரை.
வரலாற்றை அதன் நிசத்துடன் பேச விரும்பாதவர்கள்,மேலும் தவறுகளைச் செய்வதற்குத் துணைபோகிறார்கள்.
நாங்கள் உண்மைகளை,தவறுகளைப் பேசுவது அவசியம்.
கடந்தகாலத்தில் மனிதவரலாற்றில் நடந்த போர்கள் குறித்து இப்போதும் பேசப்படுகிறது.ஆனால், நேற்றுக் கொல்லப்பட்ட பிரபாகரன் குறித்துப் பேசுவதற்குத் தமிழ் மனது தடையாக இருக்கிறது.
தமிழ் மணம் பதிவை விலத்துவது அறிவை முடக்குவதென்று அர்த்தப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment