Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:1-2)

இது,ஈழத்து எழுத்தாளர் எ.போ.எனும் பொன்னுத்துரை அவர்களது"வரலாற்றில் வாழ்தல்" நூல் விமர்சனம்.2007 வாக்கில் கையெழுத்துப் பிரதியாகத் தமிழரசனால் எழுதப்பட்ட இவ் நூல் விமர்சனம் 250 பக்கக்களைக்கொண்டது.இதைத் தொடராக வெளியிடுவதாக எண்ணுகிறோம்.இதன் தொடரில் தமிழில் பாமினி எழுத்துருவில் எழுதப்பட்ட இவ்விமர்சனத்தில் பெரிய அளவில் ஆங்கில எழுத்துக்களுண்டு.இதை யூனிக்கோட்டு எழுத்துருவுக்கு மாற்றும்போது, ஆங்கில எழுத்துக்கள் உருமாறுகிறது.எனினும்,அவற்றையும் சரி செய்து இது தொடராக வெளிவருகிறது-பதியப்படுகிறது.

வரலாற்றுக் குறிப்புகளையும்,அதுசார்ந்த எழுத்துக்களையும் அறியவிரும்பும் மாணவர்கள்-ஆய்வாளர்களுக்கு இவ் விமர்சனம் பயன்தக்கது.இதுள் விமர்சிக்கப்படும் எஸ்.பொ.வின் எழுத்துக்கான விஞ்ஞானத்தன்மையிலான இவ் விமர்சனம், பலதளத்திலான புரிதலைத் திறக்கும்.ஆர்வமுள்ளவர்கள்,நமது இலங்கைப் பிரச்சனையில்-அரசியலில்,இலக்கிய மரபில் ஆள்வுகளைச் செய்பவர்கள், அனைவருக்குமான தளங்களில் இது விரிந்த உண்மைகளைப் பேசுமென்றே நம்புகிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
25.01.2010


எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்


(பகுதி:1)


எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொ.வின் ‘வரலாற்றில வாழ்தல்’ எனும் நூல் இரண்டுபாகங்களில் வெளிவந்குள்ளது. தமிழ் மக்களின் அரசியல் என்பது எதிர்க்கருத்தற்ற அரசியல், இராணுவப் பயங்கரவாதமாய் புலிப்பாசிச சர்வாதிகார ஒழுக்கமாய் மாறியுள்ளநிலையில் எஸ்.பொ.வின் இந்த நூல் சுயசரிதைபோல சுயம் பேணுபவரின் தர்க்கமாக தத்துவம், அரசியல், இலக்கியம் சகலதையும் மழையாகப் புரிந்து கொள்ளும் உரிமையை தன்னிடத்தேகொண்டதாய் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் கருத்துக்கும் பின்னே அவர்கள் வாழும் வர்க்கமும் அதன் பொருளாதார விருப்பம்களும் அதுசார்ந்த சமூகப்பார்வையும் இருக்கும். அதன்படி எஸ்.பெறுப்புக்கும் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.பொ.இன் எழுத்தில் கடந்தகாலத்திய அல்லது நடப்பின் எமது மதிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ள முடியாது. அவரைத் தவிர வேறு மனிதர்களின் இதயத்துடிப்பை எம்மால் கேட்க முடியவில்லை. அவர் தன்னைத்தானே கௌரவிக்கிறார். விசுவாசித்து எழுதுகிறார். எஸ்.பொ. எழுத்துக்கள் அழகுணர்வோ, மென்மையோ அறியாதவை அவை நயமற்ற கந்தக எழுத்துக்களாகும். அவரது அறிவெல்லையுள் தீர்க்கப்பட்ட முடியாதவிடயங்கள் பல்தொகையாகப்பெருகி அவரைத்துரத்திச் செல்கின்றன எனவே அவர் அடிக்கடி தப்பியோடுகிறார். மறைகிறார் வேடம் தரிக்கிறார். மிகைச் சொற்களைக்குவித்து வாசிப்போரை அலைக்கழிக்கிறார். இலக்கியவாதி என்ற வகையிலாவது அவரிடம் அழகியல் அனுபவமோ உயர்கலைதகுதியோ இல்லை ஆழ்ந்தமனித இருப்போ மக்கள் சார்ந்த அனுபவச்செறிவோ இல்லாத வெறும் நேர்க்காட்சிவாதி, அவர் காண்பதைக் கேட்பதை கண்டுயிர்க்கத்தெரியாத சிறந்த உணர்வுகளைத் தூண்டத் தெரியாத மனிதராவார் தகவல்றிந்த வாசனையாளன் முன்பு எழுத்துக் குழப்படி செய்யும் தமிழ் தேசியவாதச் சண்டியராகிறார்.


பிரமாண்டமான சமுதாய அனுபவமென்பது குறுகிய தனிமனிதமாக ஆன்மிக சார்ந்த சிறு சிந்தனையாடலாக குறுகிவிடுகிறது. எங்கும் எதிலும் எப்போதும் தன்னை நாட்டுப் தனிமனிதப் பெருவியாதி ஈழத்தமிழ் இலக்கிய உலகில் பெரும் புயல்களை வரவழைத்தவன் தானே என்ற நிரூபணம்கட்கு இட்டுச்செல்கிறது. ஆனால் இலங்கைத் தமிழ் எழுத்துப்பரப்பில் எஸ்.பொ.புயலல்ல மாறாக தமிழ் தேசியவாதத்தின் சிறு புழுதிக்காற்;றாகும், தூய இலக்கிய ஆழ்மனக்கட்டளைகட்கு செவிசாய்ப்பவராக அழிவற்ற எழுத்துளை எழுத்தில் வடிப்பவராக அவர் எமக்குத் தோற்றம் தர விரும்புகிறார். எஸ்பொ.தனக்குத்தானே இரங்கும் கோலம் கொண்டவராக ஒரு துன்பியல் நாயகனின் பண்புகளைக் கொண்ட பாரம்சுமந்த மனிதராக தன்னை உருவகின்றார் தான் எடுத்துக்கொண்ட பொருளை விளக்கமுடியாத தூய இலக்கியத்தவக் கோலம் அவரால் ஒரு படைப்பாளியின் பரவச உலகைக்காண்பிக்கப் போவதான மாயம்கள் எதுவும்வெற்றி பெறவில்லை. தம் சொந்த வாழ்வு மீது இருப்புடையோர் மனிதப்பொது நலன்களை முன்னிறுத்துவோர்களை பகைவராய் காண்கிறார் என்பது எஸ்.பொ.வின் வெறுக்கும் எழுத்துள் வெளிப்படுகிறது. இலக்கியம் என்பது தன்னனுபவமாக இருப்பினும் அது ஒரு சமூக அனுபவமாகும். தனியே தன்னுள் ஒழிவது சுயஅறிவித்தல் இலக்கிய மாவது இல்லை. எஸ்.பொ.வின் பொய்த்தவக்கோலம் புதிதாக எதையும் தன்னைதவிர எழுதவிடவில்லை. தனது வெறுமையை மேதமை மிக்க இலக்கிய மகானின் பண்பு என்று எஸ்.பொ.நிரூபிக்க முயற்சிக்கிறார். அவர் முதலாளித்துவத்த பட்டறிவோறி எதிர்க்கவில்லை மாறாக யதார்த்தின் கொடூரங்கள் அவருக்கு பழகியதாகிவிட்டது. எஸ்.பொ.வை இடதுசாரிகள் யாரும் சிதைக்கவில்லை அவர் முதலாளியத்தினால் சிதறிய விகாரமடைந்த மனிதர் ஆனால் சகலதுக்கும் இடதுசாரிகளைக் காரணமாக்குகிறார். அவரது அரசியல், சமூக, பொருளாதார விளக்கக்குறைவுக்கு இலக்கிய இயலாமைக்கு அவர் இடதுசாரிகளையே காரணமாக்க முயல்கிறார். நூல் முழுவதும் முதிர்ச்சியற்ற நிலை கடந்தகாலத்தின் மீது அவரால் ஆளுமை செலுத்த முடியவில்லை.ஒரு எழுத்தாளனை எப்படி விளக்குவது அவர் எதையெழுதுகிறார், எதை எழுதவில்லை என்பதனைவைத்துத்தானே சாட்சியமளிக்க முடியும் அவர் பலவீனங்கள், அற்பமான ஆசைகள் சுயநலம் இவைகளின் திரட்டலான தனிமனிதவாதமே தென்படுகிறது. அவர் எழுத்தில் சுய அகங்கார அலைச்சல் அதிகம். சுயதணிக்கைகள் ஏராளம் கள்ளமற்ற எழுத்து என்ற வாதிடலுடன் உளநோய்த்தன்மை வாய்ந்த மாக்சிய எதிர்ப்புடன் முதிர்ச்சியற்ற விளக்கங்கள் தரப்படுகிறது. எஸ்.பொ. புதுப்பித்துக்கொள்ள முடியாததளவு பழையவர். புலிப்பாசிட்டுகளின் தமிழ் மக்கள் மேலான இழிவுகள் அவமதிப்புகள் பயங்கரவாதம் எதுவும் எஸ்.பொ. அறியார் ஆனால் சிங்களப்பேரினவாதம் பற்றிய இரண்டு பத்தாண்டுகட்கு முற்பட்ட கருத்துக்களை அவர் புதுப்பித்துத்தர மறக்கவில்லை தமிழ், சிங்கள, முஸீம் மக்களின் ஒன்றிணைந்த கூட்டு வாழ்வு என்ற கருத்துக்கள் எஸ்.பொ.வைப் பொறுத்த ஒரு சிந்தனைப் பயங்கரவாதமாகும்.


சமூக எழுச்சியற்ற காலங்களில் மாக்சியம் தேங்கிவிட்டதாகவும் தத்துவம் கண்ணியத்தை இழந்துவிட்டதாயும் தான்தோன்றும் எஸ்.பொ.போன்ற எழுத்து லும்பன்கள் தோன்றி தாமே அனைத்துக்கும் உரியோம் என்று வாதிடுவார்கள் நல்லதும் தீயதும் கதாநாயகனும், வில்லனும் தனித்தனி மனிதர்களின் அம்சங்களில்; தனித்தனி மனிதர்கள் அம்சங்களில் தங்கியிருப்பதாய் கூறித் தேடத்தொடங்குவார்கள். மனிதர்கள்வர்க்க சமூகப் பொருளாதார விதிகளின் கட்டளைகட்கு ஏற்பவே செயற்படுகிறார்கள். படைத்து உலாவவிடப்படுகிறார்கள் என்று இவர்கள் விளங்கமாட்டார்கள். புற உலகக்காணிகள் மனிதர்களின் அக உலகை ஆட்சிபுரிவதை ஆராயமுடியாதவர்கள் சமுதாயத்தைவிட்டு மனிதர்களின் அக உலகை பண்படுத்த முயற்சிக்கிறார்கள். இது கடினமான சித்தாந்தத் தொந்திரவுகள் இல்லாத பிரதேசமாக இருக்கிறது. எனவே இலகுவாக அங்கு இவர்கள் குடிபுகுந்துகொள்கிறார்கள் பைபிளும், பகவத்கீதையும், பழந்தமிழ் நூல்களும், இவர்கட்கு ஒத்த அம்சமுள்ளதாய் தெரிகிறது. மாக்கியத்தையும் அதன் பொருள்முதல்வாத மற்றும் இயக்கவியல் அம்சங்களைவிட்டு வெளியேற்றி ஆன்மீகத்துக்கு அருகில் அகவயவிசாரனைகட்கு உதவியாக நிறுத்தமுடியும் என்று நம்புகிறனர். இலங்கையில் எஸ்.பொ. மு.பொன்னம்பலம் முதல் தமிழ்நாட்டில் ஞானி, ஜெயமோகன் வரை இதற்கே முயல்கிறார்கள் இவர்கள் வெற்றிகரமான முதலாளியப் பொருளாதாரச் செழுமைக் காலத்தில் தோன்றி அடுத்துவரும் முதளாய நெருக்கடிகளில் காற்றில் கரைந்து இருந்த இடம் தெரியாமல் போவார்கள். மேசைகளிலும், எழுத்துக்களிலும் புதையுண்டுபோன இந்த முதலாளித்துவ சித்தாந்த அறிவாளிகள் அவர்களது கவனக்குறைவாலேயோ, திறமைமிகுந்தவர்களாக இல்லாததாலேயே இவை நிகழ்வதில்லை முதலாளித்துவ அறிவுத்துறை இத்தகையவர்களையே உற்பத்தி செய்கிறது. இத்தகையோர் தம்மையறியாமலே, இடதுசாரிச் சொற்றொடர்களுடன் அதற்கு தம்மை ஒப்புக்கொடுப்பார்கள். நடப்பிலுள்ள முதலாளிய சிந்தனை வலிமைகயை சகல திசைகளிலும் வெல்லும் பக்குவம் இல்லாதவர்கள் இலகுவாக இதற்கு ஆட்படுவார்கள் ஆனால் தாம் தூய சுதந்திர சிந்தனைகளால் இயங்குவதாக இவர்கள் சபதம் செய்வார்கள்.


கட்சி அமைப்பு, தத்துவம் இவைகளை நிராகரி;த்து இவர்கள் தனிமனிதப் பெருவெளியில் நின்று ஓங்காரமாக அலறுகிறார்கள். பொருளாதார வஞ்சனையுடைய முதலாளித்துவத்தில் மனிதர்களின் அக உலக அலைச்சல் அதிகம். பொருளாதார மீட்சிக்காக மக்கள் தம் எல்லைக்குட்பட்ட எல்லா வழிகளிலும் நுழைவார்கள். விடிவு தேடித்திரிவார்கள். எஸ்.பொ போன்றவர்கள் புற உலகின் அல்லல்கட்டு தீர்வுகளை அகவுலகத்தீர்மானங்களால் நிiவேற்றுகிறார்கள். சமுதாயத்தின் மேல் பரிவுணர்ச்சியோ, மனித அனுதாபமோ இல்லாத தனியுடமைச் சமூகத்தில் அவமானப்படுத்திச் சிதைக்கப்பட்ட கோபம் கொண்ட மனிதர்களோ உலாவுகின்றனர். பண்பழிந்த பிணமான மனிதர்களே இங்குள்ளனர். இவர்கள் புத்தர், யேசு, போதனையாலோ, காந்தி, ராதாகிஷ்ணன் போன்ற முன்னுதாரணங்களாலோ, கருத்துமுதல்வாதக் கற்பனைகளாலோ, நற்லொழுக்கப்போதனைகளாலோ மாறுவதில்லை. புற உலக உறவுகள் மனிதத்தன்மை படைத்தiவாக மாறாமல் அக உலகு பண்புடையதாக மாறாது. பகவத்கீதை, காந்தியம், விவேகானந்தர், தமிழ்த்தத்துவம் சகலதும் ஒருங்கே வாய்ந்த எஸ்.பொ.வின் அக உலகம் ஏன் இத்தனை அழுக்காறு மனித வெறுப்பும் படைத்ததாகவுள்ளது? ஏன் தன்னைத்தவிர எல்லோரையும் மனிதப்பதர்களாக எண்ணுகிறது. கைலாசபதியை, இடதுசாரிகளை மட்டுமல்ல எல்லோரையும் முந்திச் செல்லும் உளவியல் ஏன் தோன்றுகிறது? தன்னைவடக்கெட்டிக்காறர் சிறந்தவர் என எவரையும் அவர் ஒப்பவில்லை அவர் எதிரிகள் எல்லாவிதமான மனிதப் பெறுமானத்தையும் இழந்து போய்விடுகிறார்கள். எஸ்.பொ. மனித நடத்தைகளை இலக்கியத்திற்குரிய அழகியல் விதிகளின்படியோ, சமுகவியல் இலட்சணங்களுடனோ ஆராய்வதில்லை சகலதிற்கும் அவர்களது சொந்த தனிமனிதவாத அளவு கோலையே பயன்படுத்துகிறார்.இவர் எழுத்து ஒரு உணர்வற்ற சுயநலமியின் நேரடி அஞ்சல்முறையாகிறது.


சமூகத்தின் பல நூற்றாண்டுத் தப்பபிப்பிராயங்கள் எமக்கு பழகிச் சலித்த கிளர்ச்சிதராத பழம் கருத்துகளே எஸ்.பொ.வுக்கு துணை நிற்கிறது. வர்க்கம் என்றால் என்ன என்று அதன் நீள அகலம் தெரியாத எஸ்.பொ.தான் கார்த்திகேயனிடம்; மாக்சியம் பயின்றேன் அக்காலத்தில் நான் பயங்கரமான கொம்யூனிஸ்ட் என்று இசைகிறார். சில சுலோ கம்களைத் திரும்பிச்சொல்வதோ பொருளறியாமல் கலைச்சொற்களைப் பாவிப்பதோ மாக்சியவாதியாக இருப்பதற்கு அடிப்படை என்றால் எஸ்.பொவும் மாக்சியவாதிதான். ஏகாதியத்தியம், மூலதனம் உலகம்சார்ந்த பொருளாதாரச் செயற்பாடு, இவைபற்றிச் நாம் எஸ்.பொ.வோடு கட்டாயமாக உரையாட முடியாது அவர் ஆசிரியர், எழுத்தாளர், என்பதால் இந்த கலைச்சொற்களின் விளக்கத்தைக் கொண்டிருப்பார். உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளை விளக்கி வைத்திருப்பார் என்றெல்லாம் நாம் நம்ப எந்த சின்ன தரவுகூட அவர் எழுத்தில் கிடையாது. தான் இடதுசாரியாக இருந்து சனங்களோடும் கட்சியோடும் ஏதோபட்டுப்பழுத்து இறுதியாக கொம்யூனிஸ்டுகளால் ஏமாற்றப்பட்டதான ஒரு காட்சிப்பதிவை அவர் எமக்குக் காட்டுகிறார். ஆன்மீகத்துள்புகுந்துவிட்டு ஏதோ பிரபரஞ்சம் தழவிய அறிவையும் பார்வையும் பெற்றுவிட்டதாய் அவர் எழுத்துக்கள் வேசமிடுகின்றன. மாணவப்பருவத்தில் கொஞ்சக்காலம் தேசாபிமானிவிற்றதாலோ, கடவுளை நம்பமறுத்ததாலோ ஒருவர் மாக்சியவாதியாக ஆவதில்லை, பாசிஸ்ட் பிரபாகரன் கூட தொடக்ககாலத்தில் இளம்பருவத்தில் இடதுசாரிகள் கூறும் கருத்துக்கள் அடிநுனி தெரியாமல் ஆடாமல் அசையாமல் நின்று கேட்டதுண்டு எஸ்.பொ. சோசலிசம் பேசி இவர்காலத்தில் இடதுசாரிகள் எவரும் கேட்டதில்லை. எம்.சி.சுப்பரமணியத்தின் மச்சான் என்ற அறிமுகத்தை வைத்துக் கொண்டு எஸ்.பொ.விலாசமெழுப்பியனதத்தான் எல்லோரும் நினைவில் வைத்துள்ளார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியில் அப்போ இருந்தவர்கள் வெரும் இவரைத் தோழராகக் கருதியதாகவே கட்சியில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்து செயற்பட்டவராகவோ எவரும் கருதவில்லை. 14 வயதிலேயேதான் நாத்திகவாதியாகி விட்டதாய் எஸ்.பொ கூறுகிறார். ஆடு, மாடுகள்கூடச் சீவியம் முழுக்க நாத்திவாதிகள்தான். இவர் அப்போ நாத்திவாதியாக இருக்க திராவிடர் கழகம், தி.மு.க என்பவை மட்டுமே போதும் அதற்கு இடதுசாரி என்ற தகுதிகள் தேவைப்படாது. மாக்சியவாதிகள் கடவுள் மறுப்பை தனித்து வெளியிடுவதில்லை. நாத்திகம் தனியே பேசுவதில்லை கடவுள் நம்பிக்கையின் தோற்றம் சார்ந்த வரலாற்று மூலம்கள் அவர்கட்குத் தெரியும்.

ஆனால் தற்கால நவீன எஸ்.பொ.வோ தனது இளமைக்காலக் கடவுள் மறுப்புக்கொள்கையை தனது இளம்பிள்ளை வயதுக் கோளாறாகவே புரிந்துகொள்கிறார். அவரது ஆன்மீகமானது உயர்வானது காந்தி, யேசு, ராதாகிருஷ்ணன், விவேகானந்தர், சங்கராச்சாரி என்று எல்லோரையும் வழிபாட்டு நிலைக்குக்கொண்டு வருகிறது. இவர்களிமிருந்து பொறுக்கிய அன்பு, அகிம்சை, தியானம், வேதம்கள் மூலம் மனித அக உலகு தூய்னையுறும் என்று புரிந்துணரச் செய்ய முற்படுவதுடன் தான் “மாக்சியத்தையும் வேதமாய்” மதிப்பதாய்க் கூறுகிறார். ஆக மாக்சியம் இருக்கு, சமர், யாமம், சம்பந்தருடைய தேவாரம் போல் வேதமாகிவிடுகிறது. கருத்துமுதல்வாதம். பொருள்முதல்வாதம் போன்ற பிரிவுகளின் இட்டுஇடைஞ்சல்கள் எதுவும் எமது இலக்கியப்போராளி எஸ்.பொவுக்குக்கிடையாது. மாக்சியத்தின் இரக்கமற்ற கட்சி, அதிகாரம்,தத்துவம் இவைகளைக் கழைந்து புதிய தத்துவங்களைப் புனையவே எஸ்.பொ. உயிர்த்தெழுந்துள்ளதாகவே நாம் நம்பவேண்டும் என்பதே அவரின் அவர். அவரின் ஆசையை நாம் நிதர்சனமாக்க விரும்பினால் நாம் வெட்கம் இல்லாமல் எமது பிள்ளைப்பிராய்த்து அறிவுப் பொழுதுகட்கு திரும்பிச்சென்றால் மட்டுமே சாத்தியம். எஸ்.பொ. மனிதர்களின் புற உலகின் பொருளாதார உற்பத்தி உறவுகளுடன் தொடர்பற்ற அகஉலகம் பற்றியே சிந்திக்கிறார். எம்மைச் சுற்றியுள்ள உலகை சமத்துவமாக எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கத்தக்கதாக மாற்றியமைக்காமல் மனித மனம்கள் பண்படமாட்டா சம நுகர்வும் சமவாய்ப்பும் உள்ள சமுதாயம் வராமல் மனிதர்கள் நாகரீகமும், கருணையும், அதிகார உணர்வு அற்றவர்களாகவும் மாறமாட்டர்கள். கிறிஸ்துவும், புத்தரும், சாராதூஸ்ராவும், மகாவீரரும், நபியும் போதித்துப்போதித்து மனித மனம்களை ஈரமாக மாற்றி விட்டார்களா? கடவுளை நம்பி தினம் தினம் ஒதி உணர்ந்தவர்கள் புனிதர்களாக மாறினரா? கிறிஸ்துவையும், ராமரையும் நம்பியர்கள் பாசிஸ்டுகளாக மாறிய படிப்புகள்தான் இருக்கிறது. புலிப்பாசிச இயக்கத்தலைவர் உட்பட முக்கியமானவர்கள் ஆழமான மத நம்பிக்கை படைத்தவர்கள் கிட்லர் தன்னை தீவிரகத்தோலிக்கண் எனக் கருதினான்.
எஸ்.பொ. சட்டம்பி என்பதால் சனம்களில் கற்கத்தயாரில்லை மாறாக அவர் அவர்கட்கு கற்பிக்க மட்டுமே முயன்றார் போலும். எஸ்.பொ. நினைப்பதுபோல் சமூகக்கலகம் என்பது இடதுசாரிகளின் திணிப்பல்ல அமைதியாகவுள்ள சமூகத்தை குலைப்பதுமல்ல மாறாக முதலாளியத்தின் சமூக அநீதிகளே மக்களின் கலகம்களாக வெடிக்கின்றன. தொழிலாளர்கள் புதிய சமூகமொன்றை நோக்கி மாற முயல்கிறார்கள் மாக்கியவாதிகள் கடினமான தத்துவத்தை திணிபவர்களாகத் தோன்றுவது முதலாளித்துவம் எளிமையானதும் அற்பமானதுமான கருத்துக்களாலும் சொற்களாலும் மனிதர்களை பழக்கியிருப்பதுதான்.


இங்கு தத்துவம் கடினமாய் படித்து விளங்க இயலாததாய் தோன்றுகிறது. இந்த நிலை பௌதீகத்தையோ, இரசாயனத்தையே கற்கும் ஒருவருக்குக் கூடத் தோன்றலாம். இந்தக்கல்விசார்ந்த சொற்களை விளங்கத்தவறுபவர் பௌதீகத்தையும், இரசாயனத்தையும் விளங்கத்தவறுபவராவர் அவர் மாக்சியம் ஒரு துறைசார்ந்த கல்வியாய் கற்பிக்கப்படாமையால் அதை கற்றறிவதில் உள்ள சிரமம் எஸ்.பொ. போன்ற ஆன்மீகமும், தமிழ் தேசியமும் கலந்தவர்கட்கு சாதகமாகிறது. மக்களின் தகவலின்மையை இவர்கள் தமக்குச் சாதகமாக்கிச் கொள்கிறார்கள். சகஜமாய் நிலவும் மலிந்த பழைய கருத்துக்களை பெரும் அறிவுக்கருவூலம்போல் எஸ்.பொ. போன்றவர்கள் எழுதிப் பரப்புகின்றார்கள்;. இடதுசாரிகளைப் பற்றி பயமுறுத்தும் எஸ்.பொ. முதலாளியமும், தமிழ்க் தேசியமும் தெந்தரவு இன்றி சுகந்திரமாக விடப்படல்வேண்டும் என்ற கருதுகின்றார். தமிழ்த் தேசியவாதத்துக்கோ புலிப்பாசிசத்துக்கோ எதிரான ஒரு சிறு எதிர்கருத்துதைக்கூட எஸ்.பொ. பொறுக்காதவர் என்பதுஎதைக்காட்டுகிறது. அக உலக விடுதலை பேசும் எஸ்.பொ இங்கு ஏன் தனித்தனி மனம்களின் தீர்மானங்கள் அகவிருப்புகளை எதிர்கிறார். துரோகி, காட்டித்தருவோர், ஈட்டித்தருவோர் என்று பெயர் புணர்ந்து தனி மனிதர்கட்குள்ள சிந்தனா சுதந்திரத்தை தடைசெய்கிறார். தமிழ்; மக்களின் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தைப் புலிகள் போல் தடு;த்துவிட்டவர்களே இலங்கை அரசை விமர்ச்சிப்பதுபோல புலிப்பாசிஸ்டுக்களை நோக்கி ஒரு சிறு விமர்சனம் எஸ்.பொ. செய்வாரா? இங்கு தமிழ்மக்களின் விருப்புகளை புலிப்பாசிச சர்வாதிகாரம் அழித்தொழிம்பதை அவர் காணத்துணிவுபெற மாட்டர்.


ஆனால் இடதுசாரிகள் அதிகாரத்தைப் போற்றுவதாய்க் கூறும் எஸ்.பொ. முதலாளித்துவம் அதிகாரமில்லாமலா ஆட்சிப்புரிகிறது? கிறிஸ்துவின் உபதேசம்களாலும், புத்தரின் பொன் மொழிகளாலுமா அவர்கள் மக்களை ஆளுகிறார்ள்? இந்தியாவில் காந்தியின் அகிம்சையா ஆட்சி நடத்துகிறது? அவர்கட்கு, பொலிசும், இராணுவமும், உளவுத்துறையும், துவக்கும், அணுகுண்டும் ஏன் தேவைப்படுகிறது? இந்தியத்தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து, காந்திபோல் பட்டினிகிடந்து பாகிஸ்தானின் மனதை இழகப்பண்ணாமல் ஏன் இராணுவத்தை அனுப்பி யுத்தம் புரிந்தனர். நக்சலைட்டுகள் ஆயுத்தை கிழே போடவேண்டும் வன்முறையைக் கைவிடவேண்டு;ம். என்று ராஐPவ்காந்தி உண்ணா நோன்பு இருந்ததூண்டா? எனவே இங்கு முதலாளித்துவம் ஆயுதபாணியாக இருந்த கொண்டு ஆன்மிகமும் அகிம்சையும், கருணையும், ஐனநாயகமும் பேசுகிறது. இடதுசாரிகள் இதற்கு முன்பு என்ன செய்யவேண்டும் தீனியாகவேண்டும் என்கிறாரா எஸ்.பொ? பாசிஸ்ட் பிராபாகரனுக்கும், அவுஸ்ரேலியா அரசிற்கும் கொலை செய்யாதே யுத்தம் புரியாதே அதிகாரத்தை மக்கள் மேல் பிரயோகிக்காதே என்று எஸ்.பொ. முதலில் போதிக்கட்டும் அவர்கள் மாறுகிறார்களா என்று பார்ப்போம்? முதலாளியம் நிலவும்வரை சோசலிசம் எப்படி ஆயுதம் தரிக்காமலும் அதிகாரத்தைக் கைக் கொள்ளாமலும் நிலவமுடியும்?


காந்தியவாதி மார்க்கண்டன் சொற்படிதான் தான் செல்வநாயகத்தை ஆதரித்துப்பிரச்சாரம் செய்ததாக எழுதியுள்ள எஸ்.பொ. செல்வநாயகத்தை தந்தை என்று அழைக்கிறார். முதலாவதாக செல்வநாயகத்தை இடதுசாரிகள் தந்தை என்று அழைப்பதில்லை காங்கேசன்துறைத் தொகுதியில் கிராமப்புறங்களில் மக்கள் செல்வநாயகத்தை ‘கிழவன்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்த தந்தை என்ற பட்டத்துக்கு தீப்பொறி பத்திரிகை அந்த நாளில் அடிக்காத நக்கல் இல்லை. ஆனால் எமது எஸ்.பொ.வோ தமிழரசுத் தந்தைக்கு தனயராகி தந்தை! எந்தை! என்று அழைக்கிறார். அடு;த்து செல்வநாயகம் காந்தியவாதியா? அகிம்சைவாதியா? தமிழரசுக் கூட்டங்களில் எதிர்த்துக்கேள்வி கேட்டவர்களை தந்தையின் தனயர்கள் அடித்துதுவைத்த போது எப்போதாவது எமது தந்தை அடியாதே, உதையாதே அகிம்சைநியதிப்படி ஒழுகு என்று கூறிய வரலாறு இருக்கிறதா? எஸ்.பொ.வைப் பொறுத்து இடதுசாரிச் சிந்தனைக்கும், காந்தியத்தியத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்கும் எந்தவிதத்தில் தொடர்பு? செல்வநாயகம் பெயருக்கு அகிம்சைபேசியபோதும் அவர் ஏகாதிபத்தியம்களின் நேரடி நபர் முக்கியமாக பிரிட்டன் தூதரலயத்தில் அவர் கட்சி ஆலோசனை நடாத்தியது. அறிவுரைகள் பெற்றது. செல்வநாயகம் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு நாள் அதுவும் 8-10 மணி நேரமே உண்ணாவிரதம் இருப்பார். காந்தியாவது சாகப்போகிறேன். என்று பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஆட்களை வெருட்டுவார் ஆனால் நமது ஈழத்துக்காந்தியோ காந்திபோல் சாகும் வரையில் உண்ணாவிரதம் என்று சும்மா அறிவிக்கக்கூட மாட்டார். செல்வநாயகம் போன்றவர்கட்கும். ஐp.ஐp.பொன்னம்பலம், சுந்தரலிங்கம், டி.எஸ்.சேனநாயக்காவுக்கும் எந்த வித்தியாசமுயில்லை. அனைவரும் பிரிட்டனின் வளர்ப்புதான் ஒரே ஒரு வித்தியாசம் ஒரு பகுதி தமிழத்தேசியவாதமும், மறுபகுதி சிங்களத் தேசியவாதமும் பேசியது என்பதுதான். ஆனால் நமது எஸ்.பொ. தான் இடதுசாரிகட்சியில் இருந்தவர் என சொல்லிக்கொள்வாரே தவிர அவர் தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, யு.என்;.பி, என்று பேதமில்லாமல் எல்லாக்கட்சி மேடைகளிலும் தோன்றிய வரலாற்றிச்சிறப்புமிக்க சந்தாப்;பவாதி. செல்வநாயகம், பொன்னம்பலம், ஜே.ஆர்.ஐயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொண்டமான், குமரசூரியர், திருச்செல்வம், காமினி திசாநாயக்கா போன்ற பலவிதக்கட்சித்தலைவர்கள் மந்திரிகளோடு ஒரே மேடையில் அமர்ந்து அவர்களை வாழ்த்திப்பேச வாய்ப்புப்பெற்ற கொள்கைக் குன்றாகும், இத்தகைய எஸ்.பொ.வுக்கு கொள்கைப்பிடிப்பு, தமிழ்த்துவம் என்பன உள்ளன என்று நாம் நம்பவேண்டும். ஆனால், இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் அது துரோகமாகும் தமிழ்விரோதமாகும் என்பதை நாம் இத்தால் அறியக்கடவோம்.


இடதுசாரிகள் சேர்ந்திருந்த சிறிமா அரசு ஒரு சோசலிச அரச அல்ல மாறாக ஒரு சீர்திருத்தவாத அரசியலையுடைய முதலாளிய ஐனநாயக அரசாகும், அங்கு தனிச்சொத்துடை ஒழிக்கப்படவில்லை முதலாளிகள் இருந்தார்கள். இடதுசாரிகள் அந்த அரசில் இணைந்து சில இடதுசாரித்திசையிலான சீர்திருத்தங்களே செய்தனர். வி.பொன்னம்பலம், எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் தம் மட்டத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்தனர். கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஐp, டொமினிக்ஜீவா, டானியல் போன்றவர்கள் நேரடியாக அரசோடு சம்பந்தப்பட்டிக்கவில்லை, இலக்கியம், கவிதை, எழுத்துறைகளிலேயே செயற்பட்டனர். இடதுசாரிப் போக்குகளை ஊக்குவிக்கமுயன்றனர். அவர்கள் கொமிசார்களாக நடந்துகொண்டார்கள் என்பது கயமை நிறைந்த பொய்யாகும். வெறும் சோடனை எழுத்துக்களாகம். சோசலிஸ் சமுதாய அமைப்பா அப்போ இலங்கையில் நிலவியது? இடதுசாரிக்கருத்துக்களைவிட முதலாளித்துவக்கருத்துக்கள்தான் அப்போ அதிகம் நிலவியது. எஸ்.பொ.எப்படியானவர் என்றால் 1977 தேர்தலில் இடதுசாரிகள் தோற்க வேண்டும் யு.என்.பி வெல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சமூக உணர்வாளரல்லவா? எஸ்.பொ.தான் கொம்யூனிஸ் கட்சியிலிருந்து விலகியதற்குச் காரணம் கைலாசபதி, வைத்திலிங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்றவர்களே காரணம் என்கிறார். ஆனால் எஸ்.பொ.கட்சியில் முக்கியமானவராகவோ இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக உழைத்தார் என்பதெல்லாம் இல்லை அவர் கட்சி உறுப்பிராகக்கூட இருந்ததாக ஞாபகமில்லை சும்மா இடையிடையே வந்து போகும் நபராகவே இருந்தார். கட்சியைவிட தன் சொந்தச் சோலிகளில்தான் அவர் ஈடுபாடு காட்டிவந்தார். என்று கொம்யூனிஸ்ட் கட்சியிள் பழைய உறுப்பினர்கள் திருமார்க், இரகுநாதன் போன்றவர்கள் இப்போழுது நினைவுகூர்கிறார்கள். மேலும் தனது தொழில் உத்தியோகம் என்று அவர் குடாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார். கைலாசபதி கொழும்பில் இருந்தார். இவர்களிடையே கட்சிரீதியான நெருக்கமோ தனிப்பட்ட உறவோ இருந்ததாக ஆதாரமில்லை. கட்சியில் எஸ்.பொ. செயல்வீரராகவோ, அர்ப்பணித்தவராகவோ போராட்டங்களில் ஈடுப்பவராவோ இருந்து இல்லை. சுந்தர ராமசாமி போன்றவர்கள் கொம்யூனிஸ்ட் கட்சியின் அற்பதொடர்புடன் கட்சியில்; இருந்து செயற்பட்டதான தோற்றத்துடன் எழுதி வந்தது போலவே எஸ்.பொ.வும் கட்சியில் தன் பாத்திரத்தை பெரும்பகுதி கற்பனையால் இட்டு நிரப்பியுள்ளர். இ.மு.எ.சங்கத்தில்கூட அவர் தொடர்ச்சியாக வந்தார் என்பதில்லை. உறுப்புரிமை பெறாமலே ஒட்டியும் ஒட்டாமலே இருந்து வந்துள்ளதாய் தெரிகிறது. கைலாசபதியை அவர் எதிர்த்துப் போராடியதாகக் இன்றைய கதையாடல்கள் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்ற தைரியத்தில் கூறப்படும் மிகையான எழுத்துக்களாகும்.

இடதுசாரித்திசையில்தான் எஸ்.பொ. சீர்கெட்டெழிந்தவராக இருந்தார் என்பதில்லை. மாறாக காந்தியம் பேசிய நம்பியதாகக்கூறும் அவர், தன் சொந்த வாழ்வில் மதுவிலக்கையோ வன்முறையை நிராகரித்தவராகக்கூட இருக்கவில்லை. எளிமையாக வாழந்தவரல்ல. காந்தியர் ஒப்புக்காவது தன்னை இனம், மதபேதம் காட்டாதவராக காண்பித்hர். எஸ்;.பொ. தமிழினவாதி முஸ்லீம், பௌத்த மதவிரோதி ஆக, அவர் காந்தியத்துக்குக்கூட பொருத்தமற்றவர், ஈழகேசரி நிறுவனர் நா.பொன்னையாவின் சன்மார்க்க சபையில் அங்கத்துவம் வகித்த மதவாதி எஸ்.பொ.வுக்கு எத்தனை முகம்கள் எஸ்.பொ. கருதுவது போல் ஒருவர் ஒரே சமயத்தில் இடதுசாரியாகவும், காந்தியவாதியாகவும் இருக்க முடியுமா? ஒரே சமயத்தில் சுத்த சைவத்தையும், மரக்கறி மட்டுமே புசிப்பவராகவும் அதே தருணத்தில் மச்சம் சாப்பிடுபவராகவும் இருக்க முடியுமா? எஸ்.பொ.அப்படியிருந்தார். எழுத்துத்தவம் இயற்றுவராகச் சொல்லும் அவரை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். எம்.சி.சுப்பிரமணியத்தி;ன் மச்சான் என்ற தகுதியைக்காட்டி எஸ்.பொ.தன்னை வளர்த்துக்கொண்டார். உத்தியோகம், பதவி உயர்வு, இடமாற்றம், அரச நியமனங்கள் பெற்றார், ஆளானர் கட்சிக்கு எதையும் செய்யாமலே கட்சிக்காக எதையும் இழக்கமலே கட்சியால் பயன்பெற்றார். கட்சியின் பல நூற்றாக்கணக்கான தோழர்களின் பிரதிபலன்கருதாத உழைப்பு தியாகங்களின் பயன்பாட்டை இவர் அறுவடை செய்து கொண்டார். கட்சியில் பயனடையாமலே கட்சிக்காக தம்மை இழந்த இடதுசாரிகளை இவர் பின்பு பழித்தார். சுயநலமிகள் அதிகார அவர் படைத்தவர்கள் என்று தீர்ப்புத்தந்தார். 30 வருடத்துற்கு மேலான இடதுசாரி அரசியல் இருந்த கார்த்திகேயன் போன்ற வர்களுக்கு ஒரு சொந்தவீடு இருக்கவில்லை, குடும்பத்துக்கு சொத்து சேர்க்க வில்லை வாடகை வீட்டீல் கடைசி மட்டும் இருந்து இறந்து போனர்கள் 1964 அக்டோபர் 21இல் தீண்டாமை இழிப்புப் போராட்டம் நடந்தபோது அது சார்ந்த ஆயுதச் செயற்பாடுகள்கூட இடம்பெற்றபோது எஸ்.பொ. எங்கே போனார் என்று பழைய கொம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடம் கேள்விகள் இருக்கிறது கட்சியில் போராட்டம்களில் கலந்து கொள்ளாத எஸ்.பொவுக்கு தான் கட்சி ஆள் என்று நடிக்க மட்டும் தெரிகிறது.

கார்த்திகேயன், வி.எ.கந்தசாமி, ஏ.சி.இக்பால், திரு.மார்க், முந்தையா, ஆகியோர் மாவிட்டபுரம் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது டானியல், ரகுநாதன், எழுத்தோடுமட்டுமல்ல சமூகப்போரட்டங்களிலும் கட்சியுடன் நின்றார்கள். 1971 ஏப்ரலில் கிளர்ச்சியில் சண்முகதாசன் போன்றவர்களுடன் கைது செய்;யப்பட்டபோது டானியலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் சனங்களோடும் போரட்டங்களோடும் நின்றபோது எஸ்.பொ. தானும் தன்பாடுமாக இருந்தார். உயர் அரசியல் வாதிகளை கட்சி கடந்து சினேகிதம் பிடித்தார், அவர்களின் தேர்தல் மேடையில் ஏறி இறங்கினர். கட்சிக்காக அலைந்து உள்ளதையும் இழந்து பொலிசில் அடிபட்டு சாதி வெறியர்களுடன் மோதி கோடேறிய துன்பப்பட்ட வரலாறு எஸ்.பொ.வுக்கு இல்லை. அவர் அக்காலம்களில் சமூகத்தைத்துறந்து சுயஉணர்ச்சிகளைப் படைக்குப் தன்னுணர்ச்;சி எழுத்தாளராக இருந்தார். இப்போ புலிப்;பாசிஸ்டுகளின் திண்ணையில் இருந்து கொண்டு இடதுசாரிகளைத்தூசணை பேசுகிறார் இடதுசாரிகள் ஸ்டாலினிஸ்டுகளாக இருந்தபோதும் அவர்கட்கு ஒரு வரலாறு சாட்;சி சொல்ல இருக்கிறது. அந்தத் தலைமுறை எதிர்காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்க மனிதர்களாக இருக்கிறார்கள் ஆனால் எஸ்.பொ. எதிர்காலத்துக்கு எதை விட்டுச் செல்கிறார். என்றால் ஒரு புலி;ப்பாசிச ஆதரவு பெற்ற நபர் என்ற பெரும் பழியைத்தான் பழைய இடதுசாரிகள் பெரும்பகுதி இறந்துவிட்டார்கள். சிலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் வயது முதிர்ந்து வெளிநாடுகளிலோ, இலங்கையிலோ செயலிழந்துள்ளனர். இந்த நிலை எஸ்.பொ. போன்றவர்களுடன் எழுத்துத்தூசனம் பேசி மல்லுக்கட்ட விரும்பாத இடதுசாரிகள் சிலர் அமைதியாக உள்ளனர். இந்த நிலை எஸ்.பெ.வுக்கு உரிய பொழுதாகிவிட்டது. அவர் தன் விருப்புக்கு நம்பகமற்றவைகளையும் உண்மையற்ற செய்திகளையும் எழுதிச் செல்ல வாய்ப்பாகிவிட்டது.

எஸ்.பொ.தான் மாணவராக இருந்த காலத்தில் ‘தேசாபிமானி’ விற்றமைக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றட்டதாக தியாகக்கதை எழுதுகிறார். இவர்காலத்தின் முன்பும் பின்பும் பல மாணவர்கள் இடதுசாரி நூல்கள், பத்திரிகைகளைப் பள்ளியில் விற்று இருக்கிறார்கள். அக்காலம் முழுவதும் பல்கலைக்கழங்களில் இடதுசாரிகளே பலம்படைத்தவர்களாக இருந்தனர். யாழ்குடாநாட்டுடன் எஸ்.பொ. மட்டுமல்ல இன்னும் பெருமளவு உயர்வகுப்பு மாணவர்கள் தேசாபிமானி விற்பனை செய்தார்கள். மாணவர்கட்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் இருந்தனர். இவை பள்ளிகளில் கண்டும் காணமலும் விடப்பட்டன. அப்படியிருக்க எஸ்.பொ. மட்டும் பள்ளியில் இருந்து விலக்கப்படக்காரணம் என்னவென்றால் அவரின் தனிப்பட்ட சித்து விளையாட்டுக்களே என்று பழைய கொம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் குறிக்கிறார். எஸ்.பொ.வுக்கு கட்சியின் போக்கில் விரக்தி, வெறுப்பு ஏற்படுமளவு அவர், அத்தனை நெருக்கமாகக் கட்சியில் இருந்து செயற்பட்டவர் அல்ல அந்தளவு அரசியல்தத்துவத் தராதரமோ தீவிரமோ அவரிடம் நிலவவுமில்லை. ‘வந்தாவா போனாப்போ’ என்று தனது கல்வி, தொழில் சொந்த வாழ்வுக்கு வெளியே நேரம் கிட்டும்போது சில கட்சித் தலைவர்களோடு மட்டு;ம் சிறிது தொடர்பை வைத்திருந்த எஸ்.பொ. தான் அப்போ இலட்சியவேங்கையாக, பெரிய புரட்சியாளராக இருந்ததாக இப்போ எழுத்;துக்கள் அதிர கதை நடத்திச் செய்கிறார். தமிழ்த்தேசிய வாதத்தின் பக்கமிருந்து இடதுசாரிகட்கு எதிராகப் பொருதுகிறார். ‘இந்தியா டுடே’ மாலனைப் புழகவந்த எஸ்.பொ. ‘அமெரிக்காவில் அவர் பத்திரிகைத்துறையில் புலமைப்பரிவில் பெற்றுப்படித்தவர்’ என்று பெருமை சான்ற அறிமுகம் தருகிறார். மாலனுக்கு முதல் இந்தியா டுடே யாருடைய பத்திரிகை எந்த அந்நிய சக்திக்காக கருத்துபிரச்சாரம் செய்கிறது. யாருக்கு எழுதுகிறது என்பதை அறிய எஸ்.பொ.தன் புத்தியைக் கொஞ்சநஞ்சமாவது செலவிட்டு இருக்கலாம். மாலனைப் போன்றவர்கள் தமது அமேரிக்க விசுவாசத்தை நிரூபிக்காமல் புலமைப் பரிசில் கிடைத்திருக்குமா? மாலன் எத்தகையை அரசியலை எழுதிவருகிறார்? அவர் அமெரிக்காவில் பத்திரிகைத்துறையில் படித்தால் அவர் என்ன பெரிய கொம்பா? பாரதி என்ன பத்திரிகையாளராக அமெரிக்க புலமைப்பரிசிலா படித்தார்? சிஐஏ இன் செய்திகளைப் பரப்பும் ஊNNஇல் பணிபுரியும் ஊடகவியலாளர்கட்கு இதைவிடப் பெரிய ஊடகத்துறை சார்ந்த பட்டம் பதவிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். முதலாளிய ஊடகத்துறையின் இலக்கு என்ன சமுதாய நலனா? மனிதகுல சேவையா?

தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களில் அரசியல் கட்சிகள் முதல் சினிமாக்காரர்களிடம் என்வலப் பெறும் திருக்கூட்டம்தானே அதிகம், இங்கு மேற்குலகில் மாலனைவிட ஊடகத்துறை புலமை சார்ந்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்சார்ந்த எழுத்தாளர்களை எழுதாமல இந்த மாலன் “முற்போக்கு அணியினருக்கு எதிரான கருத்துக்களை வைக்ககூடிய வகையில் தன்னிடம் கேள்விகளைக் கேட்டதாக” அவரே எழுதும்போது மாலனையும் எஸ்.பொ. வையும் ஒன்று சேர விளங்;கும் தருணமும் எம்மை வந்தடைகிறது. எஸ்.பொ. எழுதும் விடயங்கள் மிகச் சாதாரணமான வியங்களாகும். புதுத்தகவலோ, ஆய்வுககுரியவைகளோ அவரிடம் வெளிப்படுவதில்லை. மாலன், ‘இந்தியா டுடே’ பற்றிய மதிப்பீடுகள் இடதுசாரிகளிடம் ஏற்கனவே உண்டு. எஸ்.பொ. ஒரு சிங்களப்பத்திரிகையாளரை இலங்கையில் சகோதர சிங்கள எழுத்தாளரை அறிந்திருந்தார் எனக்கூற முடியாது. தனது சொந்தநாட்டுக்குள் உள்ள சிறந்த ஊடகவியலாளரை அறியமாட்டார். ஆனால் தமிழ்நாட்டில் லட்சுமிகாந்தன் முதல் மாலன் வரை உடனே தெரிந்துவிடுகிறது.

தனது எழுத்தானது தவம், ஊழியம், யோகம், தமிழ்த்துவம் வாய்ந்தது என்ற தன்னைத்தானே எஸ்.பொ. பெருமையோடு சுயபதிவு செய்யும்போது அளவுக்கு மீறிய சுயம்பேணும்போக்கு எவருக்கும் எரிச்சலைத்தரும். சிறந்தவைகட்கு தானே உரியவன் எனறு உரிமைகோருவது எஸ்.பொ.வின் பண்புதான் கைலாசபதி போலாக ஆசைதான் ஆனால் மூலச்சித்திரத்தை பிரதிசெய்யும் போலியாக கேலிச்சித்திரமாக ஆகிவிடுகிறார். அவரது எழுத்து தவமா? அவர் படைப்பை ஊழியமாய்த் தான் கருதினரா? சொந்த விருப்பு, வெறுப்புகளின் பாற்படாத உயர்நேர்மைக்கு அடையாளமாகவா அவர் எழுத்துக்கள் உள்ளன. தமிழ்; தேசியவெறியையும் சிங்கள, முஸ்லீம் வெறுப்பையும் கொண்டுள்ள எஸ்.பொ. ஒரு சிந்தனை ஆரோக்கியமுடைய மனிதனாகவே முதலில் இல்லை பின்பு எப்படி அவர் எழுத்து தவம் செய்யமுடியும்? இனவெறி கொண்ட மனிதர்களின் எழுத்து எப்படி தியானத்தன்மை வாய்ந்ததாய் அமைதிபூண்டதாய் நல்லொழுக்கம் பொருந்தியதாக இருக்க முடியும். அடக்கமற்ற மனிதமற்ற எஸ்.பொ. இன் எழுத்து உண்மையில் புலிப்பாசிச் வெறியாட்டுதலுக்குரியதாகும். புறநானூற்றில் மனித மண்டையோட்டிலிலே பேய்கள் கூடியிருந்து கூழ் உண்டமை கூறப்பட்டுள்ளதுபோல் அதே புறநானூற்றின் தமிழ்த்துவத்தை மீறாமல் எஸ்.பொ.வும் புலிப்பாசிஸ்டுகளால் மனித எலும்புக் கூடுகளாக மாற்றப்பட்ட பல பத்தாயிரம் மகாதர்களைப் பேசலாம் தமிழர்களே தமிழர்களை கொன்று புதைத்ததை துரோகி-மாவீரர் கதையாடல்களுடன் வீரகாவியமாய்த் தீட்டலாம். தேசியத்தலைவரிடம் ‘பொற்கிளி’ பரிசும் பாராட்டும் பெறலாம். முதலாளித்துவ ஊடகப்பயங்கரவாதத்திற்கு துணைபோகும் எழுத்துத்தான் எஸ்.பொ. வினுடையது. புலிப்பாசிசத்துக்க ஆதரவு தரும் எழுத்;தாளர்களுடன் கருத்துச்சுதந்திரம் எழுத்துத்சுதந்திரம் என்ற உரையாடல்கள் அர்த்தமற்றவை, ஏதோ மனிதகுல அறிவையெல்லாம் திரட்டிக்குறுக்கி தன் எழுத்தினுள் நுழைத்திருப்பதாக எஸ்.பொ. வார்த்தையாட முயல்கிறார். மாக்சியத்தின் பார்வையில்லாவிட்டால், அகன்ற மனிதத்திறமை வராது சமூகத்தின் சகல முழுமையான கருத்தைச்சொல்ல முடியாது. ஒரு செயற்பாடு என்பது தனித்தல்ல அது ஒரு ஒட்டுமொத்த இயக்கத்தின் கூறு, அல்லது விளைவு தொடர்ச்சியாக மாற்றமடையும், இங்கு எஸ்.பொ.வுக்கு சமூக இயக்கியல் விளக்கமின்மையால் ஒரு விளைவின் பிரதான மற்றும் துனை அம்சங்களை தொடர்ந்து சென்று விசாரணை செய்ய முடியவில்லை. அவரின் தமிழ்தேசியவாத அற்ப மூளையானது, மாக்சியத்தை வழக்கொழிந்த போக்காகக் கருதத்ங்லைப்படுகிறது. இவர்களின் ஒடுங்கிக்குறுகிய இந்தப்பிராந்தியங்கள் தத்துவத்தில் இறங்கிக் களைப்படைய விரும்புவதில்லை.

முதலாளிய ஐனநாயகம், சுதந்திரமான கருத்துப்பரிமாறல் என்பனகூட தேசியவாதிகட்கு தமது கருத்துக்கட்கு எதிரான அச்சறுத்தலாகவேபடுகிறது. எனவே விளக்கம், வாதிடலுக்குப் பதில் துரோதி, மாவீரர் எல்லைகளுள் இவை தடுக்கப்பட்டு விடுகின்றன எஸ்.பொ. ஒருபக்கம் தன்னை ஈழத்தவன், இன மானஉணர்வு கொண்டவன் என்று நாட்டிக்கொண்டே மறுபுறம், தன்னிடம் இடதுசாரிப் பாரம்பாரியங்களும் நிலவுவதாக அடிக்கடி எழுதுகிறார். புலிப்பாசிதத்தை தொழும் ஒருவர் எப்படி மாக்சை மதிப்பவராக இருக்க முடியும்? சிங்கள, முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் எதிரிகளாக காண்பிப்பவருக்கு இடதுசாரிக்கருத்தை உச்சரிக்க என்ன உரிமையிருக்கிறது. செல்வநாயகத்தை தீர்;க்கதரிசி எனும் எஸ்.பொ. செல்வநாயகம் சாதித்த அரசியல் என்ன? ஈழத்துக்காந்தி மூதறிஞர் என்று செல்வநாயகத்தக்கு மேல் சுமத்தப்பட்டம்கட்கு ஏதாவது பெறுமானம் உண்டா? அவர் மேற்குலகால் தூண்டிவிடப்பட்ட இலங்கையின் ஐpன்னா தன்னை இலங்கையன் என்பதைவிட பிரிட்டிஸ் மகாராணியின் பிரசை என்று பெருமைப்பட விரும்புவர். பிரிட்டிஷ் ஆட்சி சிங்கள அரசைவிடத் திறம் என்ற கருத்தைப் பரப்பியவர் இன்றை தமிழ் மக்களின் அவலம்கட்கு புலிப்பாசிச கொடுமைகளுக்குப் செல்வநாயகமும் பொறுப்பு இன்று தமிழ் மக்களில் யாரவது செல்வநாயகத்தை தேடுகிறார்களா?

அவர் ஒரு உபயோகமற்ற அரசியல் பண்டம் அவரின் தனிப்பட்ட நற்குணம்களாகக் காட்டப்பட்ட பண்புகளைக்கூட முதலாளித்துவ நல்லொழுக்க விதிகட்கு உட்பட்டவைதான் தமிழ் ஈழக்கோரிக்கையைக் கிளப்பிவிட்டு அதற்கு வழிகாட்டத் தெரியாத செல்வநாயம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பற்றவேண்டும் என்று கடவுளிடம் சகலதையும் பொறுப்புக்கொடுத்தார். கிறிஸ்தவரான செல்வநாயகம் இயேசு கிறிஸ்துவிடமா தமிழ்ழக்கோரிக்கையையும் யாழ்ப்பாண சைவ-நடுத்தர வர்க்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கையளித்தார்? சிங்கள, முஸ்லீம் மக்களுடன் இலங்கையில் சேர்ந்து வாழமாட்டோம் எனற தமிழ்த்தேசிய வாதிகளை இன்று ஆசிய வளர்ச்சி நிலைமைகள் ஒரு ஆசிய நிலைமைகளுள் அடங்கும்படி பொருளாதார ரீதியான கட்டளையை இடுகிறது. இலங்கையுள் ஒத்துவாழ முடியாது என்பவர்கள் ஆசியாக்கண்டத்துள் துளியாகக்கலந்துகரையும் காலம் தொடங்கியுள்ளது. சிங்களம், தமிழ் போன்ற மொழிகடகுக்கூட இனி எதிர்காலமில்லை இலங்கையர் நிலைகூட அற்ப நிலையாக மாறி ஆசியர் என்ற முதலாளிய வகைப்பட்ட இணைப்பு ஏற்பட்டு வருகிறது.


நடிகர் எம்.ஐp.ஆர் இலங்கை வந்தகாலத்தில் ‘எம்.ஐp.ஆர் வருகிறார்’ எனறு துப்பறியும் நாவல் ‘சினிமா லோலன்’ எனற சினிமாப்பத்திரிகையில் எழுதிய எஸ்.பொ. எல்லாம் ஒரு படைப்பாளி என்ற தரத்துக்கு இலக்கிய வாதிஎன்ற மரியாதைக்குரியவரா? இவர் எம்.ஐp.ஆரைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தபோது டானியல் உட்பட இடதுசாரிப்படைப்பாளிகள் சீரழிவுச்சினிமாவை எதிர்த்து எழுதினர். சினிமா எனற கனவுத்தொழிற்சாலைகளைவிட்டு சாதாரண மக்களை எழுத்தாக்கி படைப்பாக்கி இலக்கிய மதிப்பு வழங்கி உலாவவிட்டனர். எம்.ஐp.ஆர் ரசனை என்பது வளர்ச்சியடையாத விவசாய சமூக ரசனையினதும், சிந்தனையினதும் அடையாளமாக இருந்தது. குழந்தைகளின் பாடநூல்களில் உள்ளது போன்ற ‘காவல்காரன்’ வேட்டைக்காரன், தாயைத் காத்ததனயன், தாய் சொல்வதைத்தட்டதே, போன்ற எம்.ஐp.ஆரின் படம்கள் தமிழகத்தின் பொதுப்புத்திக்கும் சிறு பிள்ளைத்தர ரசனைக்கும் விளக்கமாகும். ஏழைகளைக் காப்பவராகத்தோன்றும் எம்.ஐp.ஆர் தமிழ்நாட்டின் கல்வியறிவற்ற ஏழை மக்களையுடம், பின்தங்கிய விவசாயச் சூழலும் நிலமின்மையாலும் வாடிய மக்களை அரசியல் ரீதியில் திரளவிடாமல் செய்யும் மோசடியாகும். கல்வியறிவு பெற்ற ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார, சமூக நிலைமைகள் தமிழகத்தை விடச்சிறப்பான கேரளாவில் எம்.ஐp.ஆர் போன்ற காட்போட்கத்தி வீரர்களை தோன்றவில்லை என்பதை நாம்காண முடியும். இங்கு எம்.ஐp.ஆர் பெயரில் அதுவும் மேற்குலகை பிரதிசெய்து துப்பறியும் கதையெழுதும் எஸ்.பொ. என்ன எழுத்தாளர். இலங்கையிலோ இந்தியாவிலோ அத்தகைய துப்பறிவாளர்கள் உள்ளார்களா? மேற்குலக கொம்யூனிச எதிர்ப்பு எழுத்துகளுக்கும் இந்த துப்பறியும் கதைகட்கும் நெருக்கமான உறவு உண்டு. சினிமா Nஐம்ஸ்பொன்ட்கூட ஒரு பிரிட்டிஸ் உளவாளியை மூலமாய்க் கொண்டதுதான். பாரதியின் மரணத்துக்கு சென்றவர்கள் 20 பேர்தான் ஆனால் எம்.ஐp.ஆரின் மரணச் சடங்குக்கு ஒரு கோடிப்பேர் திரண்டனர் என்பதால் வரலாறு எம.ஐp.ஆரை பாரதிவிட மிஞ்சியவராகக் கணிக்கப்போவதில்லை. எம்.ஐp.ஆரைப் பாடிய எஸ்.பொவும், எம்.ஐp.ஆரின் பொதுப்புத்திக்கு சமமானவர்தான். சுந்தரராமசாமி முதல் சாருநிவேதிதா வரை சினிமா நடிக நடிகரைப் பேசும்போது அவர்களின் இலங்கைத் தமிழ்ப்பதிப்பான எஸ்.பொவும் பேசுவது இயல்புதானே? தினகரன், வீரகேசரி, தினபதி, சுதந்திரன் உட்பட சகல பத்திரிகைகளிலும் எழுதிய எஸ்.பொ.கொம்யூனிஸ்ட் கட்சிப்பத்திரிகையான தேசாபிமானியில் எழுதினாரா? ஒருவேளை எழுதவிரும்பி எழுத்துத்தகுதியற்றுப்போனரா?

வீரகேசரி ஆசிரியர் கே.வி.எஸ்.வாஸ் மக்களைக் கவர்நத நாவல்களை எழுதியவராக எஸ்.பொ.ஆல் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் எத்தகைய நாவல்களை எழுதினார் என்று அவர் குறிக்கவில்லை அவர் பத்திரிகை வாசிப்புடைய நடுத்தரவர்க்கத்தின் கனவுகட்கு ஏற்பவே எழுதினார். வீரகேசரி நிறுவனத்தின் மற்றொரு பத்திரிகையான மித்திரன் கொலை, கொள்ளை, பாலியல் வகைகளையும் பட்லி, பூலான்தேவி, மான்சிங் போன்ற கொள்ளைக்காரர்களின் கதைகளையும் எழுதியது இக்கொள்ளையர்கள் சமூகக் கொடுமைகளால் இப்படி ஆகினர் என்பதைவிட அவர்கள் பாலியல் அவதாரம்களாகவே வர்ணிக்கப்பட்டனர். ஆனால் கைலாசபதி காலத்தினகரன் கதைதேடி இந்தியா போகவில்லை. இலங்கை மக்களின் எழுதாத கதைகளை எழுதியது. இடதுசாரிகள் தமிழ், மத்தியதரவர்க்கத்தின் முறைப்பாடுகளைவிட்டு சாதாரண மக்களைப் பாடுபொருளாய்க் கொண்டனவாக எழுதினார்கள். தாம் அழைந்த மண்ணையும் அதில் வாழ்ந்த புழுதி படிந்த மனிதர்களையும், கந்தலாடையுடன் வயல்களிலும் தெருக்களிலும் கிராமங்களிலும் உலாவியமனிதர்களைப் பேசப்புறப்பட்டனர். கள்ளத்தோணியில் வந்த அநாதை முனியாண்டியும், சிங்கள் வேலைக்காரப் பொடியன் சிரிசேனவும், ரிக்சா இழுக்கும் மனிதர்களும் டானியலின் கதைகளில் தோன்றினார்கள். ஆனால் இந்தத்தருணத்தில் எஸ்.பொ.துப்பறியும் நாவலும் சினிமாவையும் எழுதும் படைப்பாளியாக இருந்தார். கே.வி.எஸ்.வாஸ் மக்களைக்கவர்ந்த எழுத்தாளர் என்று மதிக்கும் எஸ்.பொ. டானியலுக்கு அந்த மரியாதையைத் தருவதில்லை. கே.வி.எஸ்.வாஸ் சமூக உணர்வுள்ள எழுத்தாளராக ஒரு போதும் அறியப்பட்டிருக்கவில்லை. அவரின் எழுத்தை ஒருமுறை கல்கி ‘அவரது பேனா அமெரிக்க டாங்கி போன்றது’ என வர்ணித்ததாக வ.அ.இராசரத்தினம் எழுதியுள்ளார். இது கே.வி.எஸ்.வாஸ் அவர்களை மட்டுமல்ல கல்கியையும் விளங்க வாய்த்த சம்பவமாகும்.


எஸ்.பொ
ஏழ்மை எம்மைத்;தீண்டியதில்லை ஒருபோதும் உணவுக்குப் பஞ்சப்படதில்லை நல்லாய்ச்சமைத்தோம் சாப்பிட்டோம் என்று எஸ்.பொ. தனது எழுத்தில் சாதிப்பது அவரது நடுத்தரவர்கக் வாழ்வுக்குச் சாட்சியமாகிறது. இதுதான் அவரை அரசியல் ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் ஏழை மக்களைப் பூரணமாக விளங்கத்தடையாயிருந்த காரணியாகும். வர்க்கக்குண நலம் அவரை பொருளாதார ரீதியாக தாழ்நிலைககுரியவராக கருதிவிட இடம் தரவில்லை ஏழ்மை கொண்ட மக்களுடன் தன்னை இனைத்துக்காட்ட அது விடாது தன்ர்க்கம் பற்றிய பெருன்மையை அவர் ஏழுத்துகள் மறைக்கவில்லை சிறந்த படைப்பாளியின் எழுத்தில் நாம் எழுதுவோனைத் தரிசிக்கமுடியாது. அவன் நிழலாய் மறைபொருளாய்த்தான் தென்படுவான் ஆனால் எஸ்.பொ. எழுத்துக்களில் அவர் பந்திக்குப்பந்தி பக்கத்துக்குப்பக்கம் வெளிப்படுகிறார். இந்த நூல்சுயசரிதைத் தோரணையை வெளியிட்ட போதும் எஸ்.பொ.வைப் படைத்து இன்றைய சிந்தனைகட்குப் பக்குவப்படுத்திய சமூக, பொருளியல் போக்குகளை அவர்விளக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. எழுதுவோனுக்கு தன்பசியும் தன்துன்பமும் தன்தனிமையும் சமூகத்தில் இருப்பதைக் காண தெரியாமல் போவதேன்? பெரும்பான்மை மக்களின் சமுதாயப்பிரச்சனைகளை இவர்கள் ஏன் கண்டெழுதுவது. இல்லை, எஸ்.பொ. போன்றவர்கள் ஏன் மக்களை வஞ்சிக்கிறார்கள் மக்களுக்கு மேலாக தம்மை நிறுத்தி தரிசனம் தருகிறார்கள். தமது சொந்;த பாலியல் தாபங்களை சர்வ வியாபகமாக்கி ஏன் எழுத்தெங்கும் பரப்புகிறார்கள். தன்னைத் தானே போற்றும் எஸ்.பொக்கள் சமுதாயத்தின் பெறுமதியை உணர்வதில்லை. தாம் மட்டுமே பெறுமதிபடைத்தவர்கள் என்று உணரத்தொடங்குகிறார்கள். அடுத்த மனிதர்களின் வாழ்வுப்போரட்டத்தில் தம் பாத்திரம் என்ன என்று இவர்கட்கு புலப்பட்டாது போகிறது.


பாரதி தன்வீட்டில் மனைவி, பி;ள்ளைகளுடன் பட்டினி கிடந்துகொண்டுதான், ‘கஞ்சிகுடிப்பதற்கிலார் அதன் காரணம்கள் இவையெனும் அறிவுமிலார்’ என்ற கவிதை வரிகளை எழுதினார். பீஐpத் தீவில் கரும்புத்தோட்டங்களில் உழைத்து மாழும் மனிதர்களை எழுத்தில் வார்த்தார் மாக்சீம்கோர்க்கி முதல் எம்தேச டானியல் வரை மக்களோடு அலைந்து திரிந்து பட்ட அனுபவம்தான் அவர்களது எழுத்துக்களைச் செழிக்க வைத்தன. மாக்சிம் கோர்க்கி நாடோடியாய்த் திரிந்து பிச்சைக்காரர்கள், திருடர்கள், விலைமாதர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், கிராமமக்கள் என்று பலதிறப்பட்ட மனிதர்களை வாழ்பனுபவத்தை உள்வாங்கியே படைப்பாளியானார். டானியல் அடிநிலை மனிதனாக சமூக அகீங்காரம் இல்லாமல் அலைந்து பட்டழிந்துதான் எழுத்து அனுபவத்தை பெற்றார். மக்களது மொழியை உணர்வைக்கிரகித்து எழுத்துக்குக் கொண்டுவந்தார். ஆனால் எஸ்.பொ.வுக்கு வறுமையற்ற வாழ்வுச்சூழல் வாய்ந்ததாக அவரே எழுதுகிறார். நகர்ப்பற வாழ்வுச்சூழல், ஆங்கிலக்கல்வி, கல்விசார்ந்த உறவுகள் அடிமட்டமல்லாத பொருளாதார நிலை எனபன அவரை சாதாரண மக்களை அண்டி நிற்கவிட்டிராது. பின்பு அவர் ஆசிரியர், அரசு சேவையாளர் அரச தாபனங்களில் பதவிகள், எழுத்தாளர், இலக்கியவாதி, என்ற மதிப்புகள் என்று அவர் சாதாரண பெரும்பான்மை மக்களுக்கு அன்னியமாகிவிட்டார். அவர் சமூகத்தில் முக்கிய மனிதராக தன்னைக் கருதிக்கொண்டார். எஸ்.பொ. இடதுசாரிகட்குக்காட்டு எதிர்ப்பு என்பது அவர்கட்கு காட்டும் எதிர்ப்பல்ல சாதாரண உழைக்கும் மக்களுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பாகும். இவர் இந்த மக்களைக்கண்டு எரிச்சலூறுகிறார். அவர்கட்கு எதிரான எடுத்துக்களுடன் நிற்கின்றார்.

மக்களின் சமூக வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ககவல்லை பொருளாதார தேவைகளை எஸ்.பொ. ஒரு போதும் பேசுவதில்லை மாறாக அகவயப்பட்ட தியான நிலைகட்கு தனிமனித பண்புகளைத் சீர்ப்படுத்தும் போக்குக்கு செல்கிறார். மனிதர்கள் எல்லோரும் நற்பண்பு படைத்தவர்களாக மாறினால் அவர்கட்கு உணவும் ஆடையும் தொழிலும் கிடைத்துவிடமா? பசித்திருக்கும் வயிறுகட்கு நற்சிந்தனைகள் மதவாத ஆன்மீகம் உணவிடுமா? நோயுற்ற மனிதர்கட்கு மருந்துவ உதவி தருமா? பல ஆயிரமாண்டுகால ஆன்மீகம் தனிமனித ஒழுக்க நெறிகள் மனிதர்கள் உள, உடல்ரீதியில் அடிமை கொண்ட கதையே சுரண்டலைப்பாதுகாத்த வரலாறே அனுபவமாய் மிஞ்சி நிற்கிறது. இதையே எஸ்.பொ. போன்றவர்கள் திரும்பவும் சிபார்சு செய்கின்றார்கள், புரட்சி என்பது மக்கள் மாற்று வழியற்ற நிலையில் வரலாற்றின் கட்டளைப்படி எழுவதாகும். உழைக்கம் மக்கள், தாம் சாகாமல் இருக்க தேர்ந்தெடுக்கும் கடைசி வழியாகும். இது எஸ்.பொ. போன்ற நடுத்தரவர்க்க சிந்தனை வீங்கிகட்கு கடைசிமட்டும் விளங்காது. வண்டி, தொந்தி வைத்து வீங்கி முட்டி நிற்பவர்கள் உழைக்கம் மனிதர்களது சித்தாந்த மென்பது வன்முறையாகவும் அயலகச் சிந்தனையாகவுமே தெரிகிறது. அவர்கள் தம்மை வன்முறையை எதிர்ப்பவர்கள் என்று பிரகடன்படுத்த முயல்கி;ன்றார்கள். பண்பின் திருவுருவம்கiளாய்க் கொள்கின்றனர்.

எஸ்.பொ தான் அடிக்கடி தொண்டமானச் சந்தித்த காதை எழுதுகிறார். ஆனால் சாதாரண தோட்டத்தாழிலாளர்கள் பற்றி அவர்கள் வாழ்நிலைப்பற்றி, அரசியலைப்பற்றி எந்த சிறு குறிப்புமில்லை. 1976-இல் சிவனு லட்சுமணன் சுட்டுக்கொலை எல்.எஸ்.எஸ்.பி யின் தோட்டத்தொழிலாளர்களுடனான தொடர்புகள் பற்றி எழுத்தில் எந்தத் தடயமும் இல்லை. தொண்டமான் ஒரு தொழிற்சங்கச் சர்வாதிகாரி இடதுசாரிகள் அவர்களது தொழிற்ச்சங்கங்களை ஒழிக்க அவர் வன்முறையை நாடினர். 1976இல் சிவனு இலட்சுமணன் சுடப்பட்டபோது ‘புரட்சிக் கொம்ய+னிஸ் கழகம்’ நாவலப்பிட்டியில் கதிரேசன் கல்லூரி உட்பட பல இடங்களில் பாடசாலைப் பகிஷ்கரிப்புக்கு ஒழுங்கு செய்தது. கர்த்தால்கள் நடாத்தியது. அக்காலத்தில் நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் அதற்காக உழைத்தார். அதற்காக அவரைத் தொண்டமான் ஒரு தந்தியோடு 24 மணி நேரத்தில் நாவலப்பிட்டியிலிருந்து இடமாற்றம் செய்தார். அத்;தகைய சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கூடல் எஸ்.பொ.வுக்கு பிழையாகப்படவில்லை. இதுவே இடதுசாரிகளாக இருந்திருந்தால் அவரது எழுத்து சாபமிடதொடங்கியிருக்கும்.


டிசம்பர் 2007 தமிழரசன் பெர்லின்

(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் :பகுதி:2

பகுதி:2



எஸ்.பொ. கல்வி அமைச்சரின் நிரந்தரச் செயலாளராக இருந்த அப்போதிருந்த பாஸ்கரலிங்கம் ஊடாகக் காரியம் பார்ப்பிப்பார். ஏ.எல்.ஏ.மஐpத் ஊடாகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் நுழைவார். அமைச்சர் குமார சூரியரைக்கொண்டு சொந்தக்காரியங்கள்நடக்கும். யு.என்.பி வந்தால் அரச நாடகப் பேரவைத் தலைவராவர். இவரைவிட தமிழ் நாடகத்துறைக்கு சேவை பரிந்தவர்களை எஸ்.பொ. தன் அரசியல் செல்வாக்கால் ஒதுக்கிவைப்பார். யு.என்.பி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி யுடன் சேரும் போதெல்லாம் அவரது இனமான உணர்வு தமிழ்த்துவம் தூய்மை கெட்டுப்போவதில்லை. மாறாக அவர் மென்மேலும் பரிசுத்தமடைவார். மாசுமறு நீங்கிய தமிழினப்பற்றாளராகப் பரிமாணமடைவார். கிழக்கு மாகாணத்தில் செல்வநாயகத்துடன் வேட்பாளர் தேர்வுக்கு தானும் சென்றதாக எஸ்.பொ. எழுதுகிறராரே அது எப்போ நடந்தது இடதுசாரிகளுடன் கூடவே இருந்தபோதா? இவர் மதிப்புடன் எழுதும் கார்த்திகேயன் தமிழ்தேசியவாதிகள் பற்றி செல்வநாயகம், பொன்னம்பலம் பற்றி வைத்திருந்த கருத்தை இவர் ஏன் வெளிப்படையாக எழுதவில்லை. பொன்னம்பலத்துடன் விருந்துண்டு மது பரிமாறிய கதை எல்லாம் எழுதும் இவர் தன்வாழ்வு முழுவது கொம்ய+னிச விரோதிகளோடும் இனவாதிகளோடும்தான் காலம் கழித்தவர். இப்போ வந்துதான். இடதுசாரிப் பாரம்பரியத்தில் இருந்து வந்ததாக தத்துவம் சார்ந்த சோடனைகட்கு முயல்கிறார். இடதுசாரிகளின் அதிகார நடைமுறைகள் எதிர்த்ததாய் கூறும் இவர் இலங்கை அரசின் அதிகாரப்பதவிகளில் இருக்கவில்லையா? இவற்றை இடதுசாரிகள் நிர்வாகித்தால் மட்டும் அது எப்படி அதிகார நடைமுறையாகும். பள்ளியில் ஆசிரியராக மாணவர்கள் மேலும் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மேலும் அதிகாரத்தை பிரயோகிக்காமல் சன்மார்க்க வழிகளில் சமத்துவம் பேணியா எஸ்.பொ. நடந்தார் இலக்கியத்தில் தான்தான் விண்ணன் என்று எல்லோர் மீதும் அதிகாரம் விட்டுத்திரிந்தவரல்லவா எஸ்.பொ.?


தன்முனைப்பும் அகங்காரமும் பிறரை அடிமை கொள்ளும் நடத்தைகள் அவரிடம் நிலவியபடியால்தான் அவருக்கு நண்பர்கள் நெருங்கியோர் இல்;லாமல் போயினர். எல்லா அமைப்புகளிலும் கட்சிகளிலும் இவரது தான்தோன்றித்தனம், சுயபேணல் காரணமாகவே இவர் வெறுக்கப்பட்டவராக மாறினார். இவர் நட்புக்கொண்டிருந்த முதலாளிய அரசியல்வாதிகள் அதிகாரம் இல்லாமலா ஆண்டார்கள். அவர்களின் அதிகாரத்தின் தயவை நாடித்தானே எஸ்.பொ. அவர்கட்கு உறவானர் எழுத்தை இலக்கிவாதிகள் சத்தியத்தேடலாகக் கொள்ளவேண்டும் எனும் எஸ்.பொ. சத்தியத்தையல்லாது தன்னை யல்லவா தேடி எம்மிடம் சுமத்தி விடுகிறார். “தமிழ் உலகம்” என்ற சஞ்சிகை “துட்டர்களின் கொட்டமடக்க துள்ளிவரும் வேல் ஆவேசத்தை அள்ளிவரும் வாள் தமிழ்மறவாத தமிழனுக்கு ஒரு கேடயம்” என்ற சுலோகத்தை தாபித்தவராம். இந்த சினிமாத்தனமான வசனம் மூன்றாம் தரமான உணர்ச்சியூட்டல்களில்தானே தமிழ்த்தேசியவாதிகள் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய ஏடுகளில் எழுதிய எஸ்.பொ.வின் அரசியல் தகுதியைப் பற்றிச் சொல்லவேண்;டியதில்லை. இந்தத்தமிழ் உலகம் புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டதாம்! அது என்ன வகையான புலனர்ய்வுச் செய்தி? ஐhக்குலின் கெனடி கடற்கரையில் நிர்வாணமாக நீராடுவதைப் புகைப்படம் எடுக்க 3 நாட்கள் தனித்தீவில் ஒழிந்து மூச்சடங்கிக்கிடந்த மேற்குலப் பத்திரிகையாளரின் சாதனையா? டயானவின் பின்னால் அவளைக்கலைத்துத் திரிந்த அவளின் காதல் வாழ்வை புலனாய்வு செய்த ஊடகவியலாளிகள் தரமா?


அல்லது னுயளைல என்ற நாய் 10 வருடத்தில் 1996 முதல் 2006 வரை 1.4 தொன் நாய்ப்பீ போட்டது என்று கண்டறிந்த Tempo என்ற சஞ்சிகையின் ஊடகப்பண்பா? இங்கு எஸ்.பொ. குறிப்படும் தமிழ் உலகம் ஒரு மஞ்சள்; பத்திரிகையின் தரம்தான். எம்.கே.தியாகராகபாகவதர், என்.எஸ்.கிருஸ்ணன் பற்றி லெட்சுமிகாந்தன் என்ன அயன்ஸ்டைனின் E=MC2 என்ற கோட்பாட்டை விளக்கி E என்பது ஆற்றல் M என்பது பொருண்மை C என்பது ஒளியின் வேகம் என்று விளக்கினாரா? அல்லது மார்க்கோணியின் “ஒளியின் வேகத்தில் காற்றினூடே செல்லும் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலை உள்ளது” என்பதையா கண்டுசொன்னார் தியாகராஐபாகவதர். N.S.கிருஷ்ணன் முன்பு டி.ஆர்.ராஐகுமாரி ஆடையில்லாமல் ஆடினார் என்பதான பெரும்பிரபஞ்ச உண்மையைத்தானே சினிமாகக்காரன்களின் பின்பு மக்கள் அலையத்தூண்டிய பாரம்பரியங்கள் மேற்குலத்தின் வர்த்தக எழுத்துகட்கு உரியவை இதை பிரதி செய்ய எஸ்.பொ.வுக்கு எந்த எழுத்து நாணமும் ஏற்படவில்லை.


சிவதருமவள்ளல் மில்க்வைற் சோப் கனகராசாவையும், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியையும் அழைத்து தமிழ்விழாக் கொண்டாடும் எஸ்.பொ.மில்க்வைற் கனகராசா பற்றி ஏதும் சொல்லாமல் விட்;டார். இங்குதான் எஸ்.பொ.வின் தமிழ்தேசியவாதக் கள்ளம் இருக்கிறது. மில்க்வைற் கனகராசா தனது தொழிற்சாலையில் வேலை செய்பவர்கட்கு அரசு அனுமதித்த சட்டபூர்வமான சம்பளம் தராதவர், விடுமுறை கிடையாது, தொழிலாளர்கள் சங்கம் அமைக்கத்தடை உள்ள தொழிற்சங்ககளில் சேரத்தடை, யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்களின் மேதின ஊர்வலம் நடக்கும்போது ‘மில்க்வைற் கனகராசா ஒழிக’ என்ற தொழிலாளர்களின் கோசத்தை தவறாமல் கேட்கலாம். ஆனால் தொழிலாளர்களைச் சுரண்டினாலும் எமது சிவதருமவள்ளல் கனகராசாவோ சைவத்;தமிழ் வளர்ப்பதற்குப் பின்னிற்காதவர், ஆறுமுகநாவலரின் சைவ வினாவிடை, மற்றும் தேவரா திருவாசகம் என்பவற்றை சிறு சிறு புத்தகமாக அடித்து சைவப்பள்ளி மாணவ-மாணவிகட்குத் தருவார். யாழ்குடாநாடு முழுவதும் பனங்கொட்டை விநியோகம் செய்வார். “பால் வெண்மைக்கு மில்க்வைற் சோப்” என்ற விளம்பரத்துடன் பஸ்தரிப்பு நிலையம் கட்டித்தருவார். இப்போது இவரது சேவைக்கு அரச வரிவிலக்கு உண்டு. ஆனால் அவரது நற்பணிகள் யானையிறவு தாண்டிச்செல்வதில்லை. ஏன்எனில் அவரது சவர்க்காரத்துக்கு அங்கு பெரும் விற்பனை இல்லை என்பதால் அவரது தொண்டுகள் குடாநாட்டோடு மட்டுப்பட்டுவிட்டு. வன்னிப்பகுதியில் இருந்து கிராம முன்னேற்றச் சங்கங்களோ, இளைஞர் பொதுப்பணி மன்றங்களோ பஸ்தரிப்பு நிலையம் கட்டித்தரும்படி கேட்டால் அது நடவரது. இவர் ஆரம்பம் முதலே தமிழரசுக்கட்சி அபிமானி இவரும் யாழ்குடாநாட்டின் பணக்காரக் கோவில்களில் ஒன்றான தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தர்மகத்தாவான தங்கம்மா அப்பாக்குட்டியும் இணைந்து யாழ்குடாநாட்டில் சைவத்தமிழக்கு லைசன்ஸ் எடுத்த பிரச்சாரக்காரர்களாக இருந்தனர். இவர்கட்கு எஸ்.பொ. இத்தனை வாரப்பாடுகாட்டுவது விளங்கக்கூடியதே.

“இனமானத்தினை விற்று இலக்கியம் செய்வோரை” எஸ்.பொ. அடிக்ககொருதரம் கண்டிக்கிறார். தமிழ் இனத்துக்கு உலகில் ஒரு இனத்துக்குமில்லாத தனியான ஒரு மானம் சிறப்பாக இருக்கிறதா? அதென்ன தமிழருக்குள்ளேயே சாதி பேணும் மானமா? பெண்களை குழந்தைகளை அடிமை செய்யும் மானமா? அல்லது யாழ்நடுத்தர உயர்சாதி வேளாளரின் மானமா? இது எந்தவகை மானம், வர்க்கரீதியில் பிளவுப்பட்ட தமிழர்களிடையே வன்னி, கிழக்கு என்று பிரித்து தரம் தாழ்ந்தப்பட்ட தமிழ்ர்கட்கு என்று ஒரு பொதுவான தமிழ்மானம் இருக்கிறதா? இந்த தமிழ்மானம் ஏழைகட்கு சோறிடுமா? நிலமற்ற ஏழை விவசாயிக்கு நிலம் தருமா? தொழிலும், கல்வியும், வாழும் வசதியும் இல்லாத தமிழருக்கு இந்த தமிழ்மானம் கட்டிக்கொள்ள கந்தையாவது தருமா? ஒருவேளை உணவு தருமா? இந்த மானம் தமிழரசுவாதிகளின் மானமாகும் ஆங்கிலத்தை பேசி அரசியல் செய்வோரின் போலிமானமாகும்.

“கடவுளை நிராகரிக்கும் நாத்திகவாதம் அறிவு சார்ந்ததாய்த் தோன்றவில்லை” என்ற எஸ்.பொ.வின் வாக்கு பகுத்தறிவைத்துறந்து ஆன்மீகத்தில் ஆழந்திருப்பதே அறிவு சார்ந்தது என்ற விளக்கத்துக்கு இட்டு வருகிறது. இந்தப்பெரு நோய் எஸ்.பொவுக்கு மட்டுமல்ல தளையசிங்கம் போன்ற பல்திரட்டு வாதிகளிடமும் நிலவுவதுதான். பொருளாதரச் செயற்பட்டின் பொருள்வகை உலகின் ஆழம்களை விளக்க முடியாதவர்கள் மதவாதிகளின் ஆன்மிகத்தேடலைச் சென்றடைகின்றார்கள் முதலும், முடிவும் இல்லாததாக இவர்கள் அக உலகத் தேடலைக் கருதுகின்றனர். மதம் எல்லோரும் பாவிகள் தீவினையால் சூழப்பட்டவர்கள் என்கிறது. நன்நெறிக்கும், தீங்குக்கும் இடைவிடாத போராட்;டங்கள நடப்பதாய்க்கற்பிக்கிறது. கிறிஸ்துவம் ஆதாமும், ஏவாளும் செய்த பாவம்; இன்றும் எம்மைச் சுற்றிக்கொண்டிருப்பதாய்க் கூறுகிறது. எஸ்.பொவுக்கு இறையியல் நேர்க்குகளில்கூட அடிமுடி தெரியது ஆனால் நிறையப் பாவணை செய்யக்கூடியவர் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மரபான பிற்போக்குகள் மூடநம்பிக்கைகள் எஸ்.பொ.வுக்கு பலம் அந்தப் பிரதேசங்கள்pல் அவர் சீவிக்கிறர் அதற்கு வெளியே அவருக்கு ஒட்சிசன் கிடையாது. ஒரு பகுத்தறிவுப் பிரச்சினையை அல்லது வளர்ந்த ஒரு ஐனநாயகக் கருத்தைகூட எஸ்.பொவுடன் விவாதிக்க முடியாதளவு அவர் கருத்தியில் ரீதியில் பழையவர். தொடக்க காலத்தில் இடதுசாரிகளிடம் திருடிய சில மதிப்புகளை வைத்துக்கொண்டு வித்தைகாட்டப் பார்க்கிறார்.

தமிழ்நாட்டின் படிக்கும்போது காதலுக்காக கிறிஸ்தவத்துக்கு மாறமுயன்றதை எஸ்.பொ.வே குறிக்திருக்கிறார்.பிந்காலத்தில் உத்தியோகத்துக்காக திரும்பவும் கிறிஸ்தவ மத சகாயராக மாறுகிறார். திரும்ப சங்கராச்சரியையும், விவேகானந்தரையும் ராதாகிருஷ்னனையும், பேசுகிறார். இது எம்மதமும் சம்மதம் என்ற கொச்சை முதலாளிய கருத்தல்ல மாறாக எப்பொக்கையும் அழமாகப் புலப்படுத்த தெரியாத கொடுமையால் நிகழ்கிறது. இது சரி, அது சரி என்று ஊசலாட்டம் தீர்மானகரமான முடிவுக்கு உரமுடியாத நிலை இது அரைஅவியல்களின் பண்பாகும் சந்தேகமும் பயமும் நிச்சயமின்மையம் உடைய சிந்தனைப் போக்குகளின் முடிவு கருத்துமுதல்வாதிகளின் தேர்வாகும். இந்துமதம் பற்றி சாமியாடும் எஸ்.பொ. மறுபக்கம் காந்தியத்திடம் நிஷ்டை கூடுகிறார். பொதுவாக மதங்கள் விலக்கக் கோருபவற்றை பாவம்கள் என்று தவிர்க்க கேட்டவைகளையாவது எஸ்.பொ. கைவிட்டாரா? மதம் சொன்ன சகல பழிபாவம்களையும் எஸ்.பொ. தனது தினசரிக்கடமையாய்க் கொண்டர். எஸ்.பொ. போன்ற கடவுளுக்கு அப்புக்காத்து வேலை பார்ப்பவர்களைவிட கடவுள் நம்பிக்கையற்றவர்கள் உயர் பண்புடையவர்களாக மனித நாகரீகம் படைத்தவர்களாக இருந்தனர். ஆனால் காந்தியத்தின் விளக்கங்களினால் அகத்தின் இருள் எல்லாம் நீங்கள்பெற்ற எஸ்.பொ.வோ இனவாதம், மதக்கருத்து, யாழ்;பிரதேசப் பெருமை போன்ற பிணிகளாலும் எல்லையற்ற மனித வெறுப்பினாலும் சீர் கெட்டிருந்தார்.

“மாக்சியத்தில் வைதீகப் போக்குளை அடிநாளிலிருந்தே நிராகரித்து வந்துள்ளேன் என்று எஸ்.பொ. எழுதும்போது கோயில் பூசாரி நீயூட்டனின்விதியான் “ஒவ்வொரு இயற்யியல் விசைக்கும் சமமான் எதிர்வினை உண்டு” என்பதை விளக்க முயல்வது போல் நாம் நியாயமாய்த்திடுக்கிட உரிமை படைந்துள்ளோம். “அறிவுக்கட்டுப்பாடற்ற தேடல் அவசியம்” கொம்ய+னிஸ்டுகள் மாக்சியத்துக்கு அப்பால் தேடுவது கிடையாது என்று அவர் கருத்துப்படையலிடும்போது இ;ந்தியாவின் கள்ளச்சாமி சாயிபாபா “நான் விஞ்ஞானத்திற்கும் புலப்படாத சக்தி” என்பது தான் ஞாபகம் வருகிறது. எஸ்.பொ.வுக்கு மாக்சியத்தில் என்ன தெரியும் ஏது புரியும்? வைதீகமாக்சியப் போக்குகளை எஸ்.பொ நிராகித்தால் எத்தகைய மாக்சியத்தை அவர் ஏற்கிறார்? இப்படி பலவகையான மாக்சியம்கள் உள்ளதா? அது சாத்தியமா? எஸ்.பொ. தமிழ்நாட்டிருந்து அல்துசர், அந்தோனியே கிராம்சி, பிராங்பேர்ட் மாக்சியம் பலதையும் சொல்லக்கேட்டு தானும் அதுவாகப் பாவித்த நிலை சொந்த தத்துவலிமையும் தேடலும் இல்லாவிட்டல் நாளுக்கொருவர் பின்னால் ஓடவேண்டிவரும். மாக்சியக்கலைச் சொற்களைக்கூட விளங்க அறிவுபத்தாத எஸ்.பொ. மாக்சியத்தை ஐயம்திரிபுறக்கற்றதான் எழுத்து கோமாளித்தனத்தில் முடிகிறது. Nஐர்மனிய மூலமொழியில் மாக்ஸ்-ஏங்கல்ஸ் எழுதிய நூல்கள் கிட்டத்தட்ட 40,000 பக்கம்கட்கு மேற்பட்டவை உள்ளது இந்தளவுக்கு எழுதப்படுள்ளது என்று தெரியாமல் போனதை நாம் விட்டுவிடலாம் ஆனால் எஸ்.பொ. படித்து விளங்கிய ஒரு மாக்சிய நூலைக் கூறட்டும் பின்பு வைதீக மாக்சியத்துக்கும் நவமாக்சியத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் இடைவெளிகளை எமக்குப் புலப்படுத்தத் தொடங்கட்டும். நாம் ஆவலோடு காத்திருக்கின்றோம், அவரை ஆசானாக்கிவிட்டுச் காத்திருக்கும் எம்மை நாயே பேயே என்று ஆன்மீக அருள்வாக்குத்தராமல் வைதீமாக்சியத்தினை எமக்கு விளக்கியருள வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றோம்.

காத்தியேகனுக்கும், தர்மகுலசிங்கத்துக்கு உள்ள அரசியல் தத்துவார்த்த வித்தியாசம்கூட என்ன ஏதுவென்ற புலப்படுத்த முடியாத எஸ்.பொ. வைதீகமாக்சியம் பற்றிப்பேச புறப்பட்டது அதிசயம்தான். மாக்சியம் மனிதர்களின் அக அம்சங்களைத் தவறவிட்ட பொருளியல் சித்தாந்தம் என்ற சீர்திருத்த வாதக்கருத்துக்கள் ஏராளமாகவுள்ளன. வாழும் உலகை விளங்க வலிமையற்றவர்கள் அக உலகில் புகுந்து கொண்டு ஆன்மீக விசாரனை நடத்துகிறார்கள். ஐனநாயம், மனித உரிமை, சாதிவிடுதலை, பால்விடுதலை என்று ஆசிய விவசாயச்சூழலில் இன்னமும் சாத்தியப்படாத ஆனால், மேற்குல முதலாளித்துவ சமூகங்களில் சாத்தியப்பட்ட விடயங்களில் அதீதமாய் மூழ்கிறார்கள். குறிப்பாக பொருளாதாரச் செழுமைக்கட்டம் உற்பத்தியில் உயர்வு என்பன சில மனித உரிமைகளைப் பண்புகளை நிறைவேற்றும் என்இவர்கடகு புலப்படுவதில்லை. 1990 முன்பு எஸ்.பொ. இடதுசாரிகளை வெளிப்படையாக எதிர்த்ததில்லை. தனிப்பட்ட வதந்திகளையே பரப்பிக் கொண்டுஇருந்தார். 19990களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் சில் போக்குகள் தலைதூக்கிய பின்பே எஸ்.பொவுக்கு துணிச்சல் வந்தது. தன்னுடைய சகல மடத்தனங்களையும் இவர் எழுத்தில் பரப்பத் தொடங்கினர். கைலாபதி முதல் டானியல் வரை தனிப்பட்ட சம்பவங்கள் குறைகூறல் மூலம் எஸ்.பொ. ஆல் எதிர்கொள்ளப்பட்டனர். அவர்கள் எக்கால இலங்கையில் என்ன அரசியல், இலக்கியப் போக்குகளின் பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்று அவரால் காண்பிக்க முடியவில்லை. கைலாசபதி போன்ற ஒருவர் பிறந்ததே தவறு என்ற மட்டத்துக்கு அவர்தனிப்பட்ட விபரனைகளைத் தேடித்தூற்றினர்.

தனக்கு முன்பு டானியல் ஒரு பொருட்டல்ல என்று நிரூபிக்க முயன்றானர். எனினும் எஸ்.பொ. சகல முயற்சிகளிலும் தோற்றார். மென்மேலும் நம்பதகுந்தவர் என்ற தகுதியை இழந்தார். தான் வாழ்ந்தகாலம் எத்தகையது என்ற சுரணையில்லாத மனிதராக அவர் பரிதாபமாக நின்றார். தனக்கு சீடப்பிள்ளைகளையும் ஒத்தூதுபவர்களையம் தேடும் முயற்சியிலும் அவர் இழப்புகளையே கண்டார். சமூக உணர்கொம்புகள் இல்லாத இவர் சமூகத்தில் எளிமையாய் நிலவும் போக்குகளை பேரதிசயமாகச் சொல்வக் கூடியவர் எஸ்.பொ. இதைக் கலைத்துவம் என்று வேறு கருகிறார். சுயநலத்தின் பிதற்றலும் மதநம்பிக்கை ஒரு கலைத்தவம் என்று வேறு கருகிறார். சுயநலத்தின் பிதற்றலும் மதநம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை எனும் அறிவியல் முன்பு அது தன்னை நிரூபிக்கும் திறமையற்றது என்ற மிகச்சாதாரணமாக புலப்பாடுகள்கூட அவரிடம் இல்லை. அவர் இடதுசாரிகளை முந்திக்கொண்டு ஒடமுயன்று தோற்றார். இங்கு நாம் மறுப்பதும் குற்றம் சாட்டுவதும் தனிப்பட்ட எஸ்.பொவையல்ல. அவர் பிரநிதித்துவப்படுத்தும் போக்கையே. அவர் மாக்சியவாதிகட்கு சமமான எதிரியும்மல்ல. கி;.மு.116-27 இல் வாழ்ந்த மார்க்ஸ் டெரின்ஸியஸ் வார்ரோ ‘தேனீக்களின் ஒரு பகுதி எருதுகளாலும், குளவிகள் குதிரைகளாலும் பெற்றெடுக்கப்பட்டதாய்க் கருதினார். எருதுகளும், குதிரைகளும் இறந்த பின்பு அழுகும் அதன் உடல்களில் இருந்து இவைபிறப்பதாக் அவர் விளக்குகினார். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்கியன் விந்து மூளையின் ஒருபகுதி எனக்கருதினார். இப்படித்தான் இன்று மாக்சியத்தை விளக்கும் முயற்சிகள் நடைபெறுகின. எஸ்.பொ. இப்போக்குகளைச் சேகரித்துக்கொண்டு வருகிறார். ஆனால் இப்போக்கு கள்மாக்சியத்தால் நிர்ணயகரமாய் தோற்கடிக்கப்படும். முதலாளிய நோக்குடையபவர்கள் மாக்சியத்தை விளக்குவதில் தோல்வியுறுவர் என்பதற்கு எஸ்.பொ. சிறந்த உதாரணம். மாக்சியத்துக்குப் பதில் தனிப்பட்ட மாக்சைத் தேடுபவர்;கள் உள்ளனர். மாக்சியன் தாயான கென்றியேட்கூட மாக்ஸ் “தனது வாழ்வை சிறிதும் இலாபமில்லாத இலட்சியத்துக்காக விரயம் செய்துவிட்டதாகவும், மூலதனத்தை எழுதுவதைவிட மூலதனத்தைச் சேர்க்க மாக்ஸ் பாடுபட்டு இருக்கவேண்டும்” என்றே வருத்தப்பட்டார்.

குருதிகொட்டும் தமிழன் இரத்தம் சிந்தும் தமிழன் என வழிநெடுக இனவாதியாய் புலம்பிவந்த எஸ்.பொ. புலிகளின் தற்கொலையாளிகள் பற்றி பெருமைசார்ந்த ஒப்பீடுகள் செய்கிறார். புலிப்பாசிச அரசியலுக்கு செவிசாய்த்தவர். “நான் யார்” என்ற அகவயமான மதவாதியை ஒத்த விசாரனையைத் தொடங்குகிறார். “நான் தமிழ்தத்துவத்தின் உபாசகன்” “நான் வளர்ந்த மண்ணை மயான பூமியாக்கிய சிங்களப்பேரினவாதம் எனும்போது தமிழ் மக்களைப்பொதுவாய் பேசவில்லை எஸ்.பொ. வின் தனிமனித எழுத்தாகின்றது. தன்கருத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திப்பார்ப்பது, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட புலிப்பாசிஸ்டுகளின் அரசியலுக்கு ஒலி பெருக்கியாவதுதான் அவரது அணுகுமுறையாகும். சிங்களப்பேரினவாதம் தமிழர்களை ஒடுக்கும் ஆனால் புலிப்பாசிஸ்டுகள் தமிழர்களை ஒடுக்கச், சுரண்டமாட்டர்கள் கொல்லமாட்டர்கள் என்பதா எஸ்.பொவின் விளக்கம்? புலிகளின் சிறைகள், சித்திரவதை முகாம்கள், உளவுத்துறைகள், நீதியற்ற நீதிமன்றம்கள் யாரை ஒடுக்க ஏற்படுத்தப்பட்டன செயற்படுகின்றன?

“கண்டியரசை அன்னியருக்கு தாரைவார்த்துக்கொடுத்தது சி;ங்களப்பிரதானிகளே ரத்வத்தை திசாவைப்பரம்பரைகளே, ஜே.ஆர். இன் பரம்பரையே கோட்டை அரசைக்காட்டிக்கொடுத்த இனமாக வரையறுக்கிறார். போத்துக்கேயரிடம் சங்கிலியனைக்காட்டிக் கொடுத்தது அவனின் சொந்தச்சகோதரன் பரநிருபசிங்னல்லவா? பிடித்துக்கொடுத்து வன்னியிலிருந்த காக்கை வன்னியன் அல்லவா? இவர்கள் தமிழர்கள் இல்லையா? அரசு பரம்பரைகளில் இது சாதாரணம் நஞ்சுவைப்பது கண்களைத்தோண்டுவது, உயிரோடு புதைப்பது, நாக்கை அறுப்பது, நித்திரையில் வைத்துக்கொல்வது, தமிழ், சிங்கள அரசுகள் சகலதுக்கும் பொதுவாக இருந்துதான். ரத்வத்தை, திசாவை Nஐ.ஆர். பரம்பரை அன்றைய கண்டிகோட்டை உயரதிகாரத்தைச் சேர்ந்தவர்களின் உள் முரண்பாடு சார்ந்த பிரச்சனையாகும். கண்டியரசனின் கொடுமையால் கண்டிய உயர் அதிகாரம்கள் மட்டுமல்ல கண்டிய மக்கள்கூட அரசனுக்கு எதிராக இருந்தமையாலே கண்டி அரசனை பிரட்டஸ் ஆட்சியால் தோற்கடிக்க முடிந்தது. பிலிமத்தலாவ எகலப்பொலவின் குடும்பங்கட்கு கண்டியரசன் இழைந்த கொடுமைகள் கொஞ்மல்ல அதனால்தான் அவர்கள் பிரிட்டிஸ் அரசுடன் உடன்பாட்டுக்குப் போனார்கள் மறுபுறம் சிங்கள மக்கள்தான் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரிட்டின் ஆட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியாகப் பேராட்டிய வரலாறு உடையவர்களாக இருந்தனர். கொப்பிட்டிப்பொல போன்றவீரர்கள் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றவில்லை கண்டியின் கடைசி மன்னன் பெரும் கொடுமையாளன், கோழை, இரக்கமமற்றவன், பிரபாகரனைப்போன்ற குணாதிசயம்கள் படைத்தவன் எனவேதான் கண்டியில் அவன் அதிகமாக எதிர்க்கப்பட்டான். கண்களைத் தோண்டுவது, காதை, மூக்கை, கையை வெட்டுவது என்று கொடூரமான தண்டனை முறைகளும், கட்டாய ராஐகாரிய முறையும் நிலவியகாலமது. தமிழரசுக் கூட்டம்களில் பேசப்பட்டதை ஒத்த எழுத்தே எஸ்.பொ.ஆல் எழுதப்பட்டுள்ளது. என்பதுடன் ரத்வத்தை திசாவை, பண்டார நாயக்கா பரம்பரைகளில் தமிழ், தெலுங்குக்கலப்புகள் உண்டு.

சுத்த ஆரிய இரத்தமுடைய சி;ங்களவர்களைப் பற்றி விபரிக்கும் எஸ்.பொ இனக்கலப்புற்ற மனிதர்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே கிடையாது. சிங்களமக்கள் என்போர் பல்லின மக்களின் கலப்பாகும், வரலாற்று மற்றும் மானுடவியல் உண்மைகள் பற்றி எஸ்.பொ.வின் எழுத்துக்களில் எந்த அசுமாத்தமும் இல்லை. “பீத்தல் சிங்களவன்” இரண்டு மொழி பேசும் மக்களை வைத்துக்கொண்டு வாழ இயலாது என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்துக்கொண்டு இருக்கிறான்” இப்படி எஸ்.பொ போல் புலிகளின் தத்துவவாதி பாலசிங்கத்துக்கு சமமாய் தமிழ்ப்பாசிசம் பேசும் வேறு எவரும் இல்லை சிங்கள் அரசியல்வாதிகளைக்ககூட இவர் குற்றம்சாட்ட இல்லை. சாதாரண சிங்கள மக்களையே அவர் திட்டுகிறார். இப்படித்தமிழர்களை மோசமாக எழுதக்கூடிய சிங்கள இனவாத எழுத்;தாளரை நாம் இன்று எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது என்ற உண்மை தமிழ் இனவாதிகளின் தீவரநிலைக்கு அடையாளமாகிறது. சி;ங்கள தமிழ் தேசியவாதப் போக்குகளின் தொடக்கம் பிரிட்டின் அரசின் சதிகளில் இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. இதில்லாவிட்டால், இலங்கையர் என்ற தேசம் தழுவிய மக்களாக தமிழர், சிங்களவர்கள், முஸ்லீம்கள் வளர்ச்சியுற்று இருப்பார்கள். ஏகாதிபத்திய சதிகள் விளங்காவிட்டல் இது ஏதோ இனப்பிரச்சினை தமிழர்-சிங்களவர் பகைமையாக மட்டுமே தெரியும். ஒரு நாகரீகமான எழுத்தாளனாலும் எஸ்.பொ. போல் இனப்பழிப்பு செய்து எழுத முடியாது. nஐர்மனியில் இப்படி வெளிப்படையாக ஒரு இனத்தை பழித்தால் சட்ட நடவடிக்கை யெடுக்கலாம். ஆக எஸ்.பொ. சாதாரண ஐனநாயகம் சார்ந்த மனிதப் பெறுமதிகளைக்கூட அறியாத அநாகர்Pகர். தமிழினவாதத்தால் கடும் சுகயீன முற்றவர்.

“சிங்களத்தேசியம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறது” என்ற எஸ்.பொவின் இனவாதக்கருத்தை ஏற்பதாயின் “தமிழ்த்தேசியம் சுறுப்பானது ஊக்கம் மிக்கது” என்றா பொருள்? மக்களிடமும் புகலிட நாடுகளிலும் தண்டிய பணத்தால் வாழும் தேசியத்தலைவர் சமூக ஒட்டுண்ணி இல்லையா? உழைப்பு என்றால் என்னவென்று பிரபாகரனுக்குத் தெரியுமா? யாழ்ப்பாண விவசாயிகளின் கடின உழைப்பைக் காட்டி “யாழ்ப்பாணத்தவர்கள் கடுமையாக உழைப்பவர்கள் என்று தமிழ்நடுத்தர வர்க்க உத்தியோகத்தர் கூட்டம் நீண்ட காலமாகக் , கூறிவந்துள்ளது. புலிப்பசிசத்தின் ஊழியரான எஸ்.பொ. தன்னை “சாமானியன்” “சாதாரணன்” “எனது அளவுகோல் சத்தியம்” என்பது எஸ்.பொ வின் புலனடக்கத்தையோ எழுத்து நேர்மையையோ காட்டவில்லை. மாறாக புலிகள் முன்பு இந்த அடக்கம், பணிவு காட்டப்படுகிறது. கொஞ்ச நஞ்ச சந்தேகம் எஸ்.பொ. மீது வந்தாலும் புலிகள் துரோகிகளின் பட்டியலில் பெயரைப்போட்டு ஆளைப்போட்டுவிடுவார்கள். எஸ்.பொவின் சுயபோற்றுதல் தன்னைத்தானே வழிபடும்நிலை அவரது கடைசிநிலைச் சுயநலத்தின் எழுத்தாக இருந்தபோதும் புலிப்பாசிம் சார்ந்த அச்சம் உள்ளுர அவரிடம் உள்ளது. எல்லோரையும் கண்டபாட்டுக்கு அடிப்படைகள் இல்லாமல்கூட விமர்சிக்கும் எஸ்.பொ. புலிகளின் தனிநாட்டுக்கு சம்மதம் தெரிவித்தே அதை எழுதுகிறார். இந்தக் தமிழரசர் அரசாட்சி செய்த யாழ்ப்பாணப் பகுதிதான் தனது ஆசிரியர்; தொழிலைச் செய்ய முடியாது சாதி பார்த்து தென்னலங்கைக்கு சிங்களமக்களோடு வாழும்படி துரத்தப்பட்டதற்கு காரணம் என்பதையோ தன் தாய் நல்லூர்க்கோவிலுக்குள் செல்ல முடியாதநிலை வெப்புசாரத்தையும் தரவில்லை.
எஸ்.பொ. எழுதும் மானிடநேயம் மானுட விமுக்த்தி என்பன தமிழ்மக்களுக்கு மட்டுமே உரிய இனவாத எல்லையுள் சுருங்கிய சொல்லாடலாகும். அவரது மானுடநேயம், சிங்கள மக்களுக்கோ, முஸ்லீம்கட்கோ, வேடர்கட்கோ, குறவர்கட்கோ உரிமையானதல்ல. அது தனித்தமிழ் இனவாதத்தில் மேயவிடப்படுவதாகும். சி;ங்களமொழிற் சொற்கள் தமிழில் வருவதை எதிர்க்கும் இவர் “விமுக்த்தி” என்ற சிங்கள மொழியில் உள்ள சொல்;லைப்பாவிக்கிறார். காந்தியம்போசும் எஸ்.பொ.மதுபாவனையை ஒரு ஆணின் கடமையாக அலுப்புப்பஞ்சிக்கு பாவிக்கும் விடயமாகவே கருதுகிறார். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஆணின்குடி ஏற்படுத்தும் குடும்பச்சீரழிவுகளை, சமூதாயக்கேடுகளை, பெண்கள் விசேடமாகப் பாதிக்கப்படுவதை எஸ்.பொ. பொருட்படுத்தவில்லை. இலங்கையில் உழைப்பு முழுவதையும் குடிக்கு செலவுசெய்துவிட்டு மனைவி, பிள்ளைகளைப் பட்டினி போட்ட கதைகள் கணவனின் குடிக்கொடுமை தாங்காமல் தற்கொலை செய்த பெண்கள் குழந்தைகட்கு நஞ்சு பருக்கிவிட்டு தானும் குடித்துச்செத்த பெண்களின் சோகம் பிள்ளைகளோடு கிணற்றில் பாய்;ந்த கூட்டாய் செத்தகதைகள் ஒரு தொகையாக எம்மண்ணுக்குரியவை. குடியால் ஈரல் கருகிச் செத்தவர்கள் சந்திகளில் சீலை துணியில்லாமல் நின்று, தெருக்களில் விழுந்து குடும்பமானம்கெடுத்திய ஆண்கள் ஏராளம் குடியால் குற்றம்கள் செய்து பொலிஸ், கோடு என்று வாழ்நாள்களைக் கழித்தார்கள் 1960 1970 களில் ஏராளம் ஒரு பெரும்தொகை பெண்கள் சாராயத்தவறனைகளை வெறுத்தார்கள். இந்தியாவில் கள்ளுகடைகளை மதுச்சாலைகளை எதிர்த்து பெண்கள் மறியல் செய்தார்கள். குடியால் ஆண்கள் விரைவாகச் செத்தார்கள். இது பற்றி எஸ்.பொ.வுக்கு கரிசனையில்லை. அது தன்னைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயப்படுகிறார்.

“சிங்கள்மொழியில் பயிலப்படும் சில சொற்கள் ஆடுசத்தம்போடுவது போல் இருக்கும்” என்று எஸ்.பொ.வின் சிங்கள மொழிமேலான கணிப்பு தமிழரசுக்கட்சி சுதந்திரன் காலம்கள் இப்படித்தான் சிங்கள மொழியைச் சபித்தன. கலாச்சார மடைந்த மனிதர்கள் ஒருபோதும் ஒரு மொழியைப் பழிப்பதில்லை. உலகில் பழிக்கக்கூடிய மொழியென்று ஏதுவும் கிடையாது. ஒரு மொழியை இகழ்வதென்பது அம்மொழியைப் பேசும்மக்களை இகழ்வதாகும். மனிதப்;பண்பியலையோ, மானுடவியல் மதிப்புகளையோ அறியாத பாசிஸ்டுகளே இனவாத அடிப்படையில் மொழியை வகுக்க முனைகிறார்கள். ஒரு மொழி ஒரு குறப்பட்ட சமூகச்சூழலில் அதன் தேவையின் நிமித்தமே பிறக்கிறது. வரலாறு தேவையில்லாமலா சிங்கள மொழியைப்படைத்து. சிங்கள மொழியைத் தமிழ்மக்களின் சகோதரமொழி என்று கருதுவது பாவம் என்று எண்ணுபவர் எஸ்.பொ.தமிழ்த்துவம் பற்றிய சொல்மொங்காண்களை கூறிவரும் இவர், தமிழ்மொழியோடு எந்த சகோதர உறவையும் கொண்டிராத ஆங்கிலமொழி மீது எந்த அன்னிய உணர்வையும் காட்டவில்லை. அதை இகழ் முற்படவில்லை. போர்த்துகேய, ஒல்லாந்த மொழிகளை இகழத்துணியவில்லை.
மொழி என்பது மனித உணர்வின் வெளிப்பாடு அது தொடர்புக்கான கருவி மாத்திரமல்ல. அதில் இசையில் உள்ள சத்தம்கள் உள்ளன. மொழிக்கு இசையை வழி நடத்தும் நயம் உள்ளது. மொழிகள் தேவைக்கேற்ப புதிய சொற்களை வாங்கும் பழையதைக் கைவிடும். மொழி சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப பண்பாட்டு செழுமைக்கேற்ப தன்னை வளர்த்துச்செல்லும். தமிழ்மொழியில் 200 வருடம் முன்பு வழக்கிலிருந்து பரவணி, மாத, பிதா, செஞ்ஞேர், மரவிறை(மரவரி), தோட்டவாலயம்(தோட்டவரி), மனைக்கூலி(வீட்டுவரி) இனவரி(ஒவ்வொரு சாதியிடமிருந்தும பெறப்பட்ட வரி) ஊழியம் (சம்பளம் இன்றி அரசுக்குச்செய்யும் சேவை), தோம்புதிறை, அங்க வஸ்த்திரம், அரைப்பணம், ஒருபணம், சீதன ஆதனம். முதுசொம், பிரகாரம், உண்பனவு உடுப்பனவு, வாசம் பண்ணுதல் (வாழ்தல்), மஞ்சநீர்ப்பிள்ளை (தத்துப்பிள்ளை) வாரத்துக்குவாங்கல் (குத்தகைக்கு எடுத்தல்), முது சொம்(சொத்து) போன்ற சொற்கள் இன்று வழக்கற்றுப்போய் விட்டன அருமையாக கிராமங்களில் ஒரு சில முதிய ஆண், பெண்களிடம் மட்டும் மிஞ்சியுள்ளது. இச்சொற்கள் வழக்கற்றப் போனமைக்கான சமுதாயக்காரணிகள் இருக்கின்றன. சொற்களை மட்டுமல்ல எழுத்துக்களும், புதிய உச்சரிப்புகளும் புதிதாக மொழிகளுள் நுழைகின்றன. சிங்களம் தமிழைவிட இளமையானது என்பதால் அது பெருமளவு பிற மொழிச்சொற்களை ஏற்று வளர்ந்தது. பாளி முதல் சமஸ்கிருதம், தமிழ், ஆதிமொழியான ஓஸ்ரலோயிட் வரை தன்னுள் அது அடக்கியது. புதியசொல் உருவாக்கம் தமிழைவிட சிங்கள மொழியில் இலகுவாக நடந்தது. தமிழில் ஆங்கிலமொழி எழுத்துகளான B.F க்கு சமமான எழுத்துக்களும் உச்சரிப்பும் இல்லை. ஆனால் சிங்களமொழியில் உள்ளது. இலங்கையில் Four Asses சிகரெட் வந்தபோது சிங்களமொழியில் F எழுத புதிய எழுத்தைக்கண்டு பிடித்தார்கள், தமிழில் தூயதமிழ் வெறியர்கள் தமிழ்;மொழியை வளரவிடவில்லை.

சிங்களமொழி இலங்கையின் ஆதிமொழியான ஒஸ்ரலோயிட் மொழிச் சொற்களை அழியாமல் இன்றுவரை பாதுகாத்துள்ளது. சிங்களமொழியில் உள்ள ஆற்றைக் குறிக்கும் சொல்லான “கங்க” என்ற சொல் “கங்கை” என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து வந்ததாக முன்பு நம்பப்பட்டது. ஆனால் இச்சொல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உள்ள மொழிகளோடு தொடர்புடைய ஒஸ்ரலோயிட் மொழிச்சொல் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. சிங்களமொழியில் உள்ள ஆற்றைக் குறிக்கும் “ஒயா”, யானை, புலி போன்ற மிருகங்களைக் குறிக்கும் அலியா, கொட்டியா, தாவரம்களின் பெயர்களாக பலாவைக் குறிக்கும் “கொஸ்” தேங்காயைக் குறிக்கும், “பொல்” உடல் உறுப்புகளை முறையே தலை, கால், வாய், தொடை, வயிறு என்பவற்றைக் குறிக்கும் ஒலுவ, ககுவ, கட, கலவ, பட போன்ற சொற்களை ஒஸ்ரலோயிட் மொழிச்சொற்களாகும். இந்த ஒஸ்ரலேயிட்மொழி ஆரிய, திராவிட மொழிகளைவிடப்பழையானதாகும். எம்முன்னோர்களின் ஆதித்தாய்மொழியான ஒஸ்ரலோயிட் மொழியின் மிகுதிகளை சிங்களமொழியே பாதுகாக்கிறது. இந்தமொழியைத்தான் எஸ்.பொ. ஆடு சத்தம் போடுவதுபோல் இருக்கிறது. என்கிறார். ய+தர்களின் மொழியை, ஸ்லாவிய மொழியை nஐர்மனியப் பாசிஸ்டுகளும் இப்படித்தான் குறிப்பிட்டார்கள்.

தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள் முதல் இவர் குரு சுந்தரம்பிள்ளை வரை ஆங்கிலமொழியை எதிர்த்ததி;ல்லை. மாறாக அதிலேயே எழுதினார்கள் ஆனால், இந்தி மொழியை எதிர்த்தனர். இப்படித்தான் இலங்கையிலும் தமிழரசுவாதிகள் ஆங்கில மொழியை படித்தார்கள், எழுதினார்கள், பேசினார்கள் சிந்தித்தனர் ஆனால் சிங்களமொழியை எதிர்த்தனர். இவர்கள் தமிழக்காக வாதிடுவது பெரும் மோசடிகளில் ஒன்று. தூய தமிழ் வேண்டி நின்றவர்கள் தமிழ்மொழி நவீனமடையாமையாலும், வளராமலும் தடுத்துவிட்டார்கள். ஆங்கிலம், nஐர்மனிய, பிரான்சிய மொழிகள் முதலாளிய தொழிற்துறை வளர்ச்சியுடன்தான் வளர்ந்தன. விரைவாக இந்த மொழிகளை எழுதும் முறையும் கண்டறியப்பட்டது. ஆங்கிலமொழி இடப்பக்கம் தொடங்கி வலப்பக்கம் முடியும் இதனால் தொடுத்து எழுதும் முறைக்கு இலகுவாக இருந்தது. இந்த வேகமும் காணமால் பின்பு சுருக்கெழுத்து முறையும், தட்டச்சுமுறையும் வந்தன. எழுத்தும் முறையும் தொடுத்து வந்தன. தமிழில் தொடுத்து எழுதமுடியாது அது எல்லாப் பக்கமும் முடியும் இடம், வலம், நடு என்று முடியும். இக்காரணம்களும் தமிழ் நவீனமொழியாக வளர முடியாமைக்கான காரணம்களில் ஒன்றாகும். தமிழ் இன்று உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சிங்கள மொழியின் நிலையும் இதுதான் ஆனால் எஸ்.பொ. தமிழ்மொழியும் நவீன மொழியாகவோ எதிர்கால மொழியாகவோ ஆக முடியாத நிலையில் உள்ளதைக் காணமால சிங்கள மொழி மீது இனவாதப்பழிப்புரை செய்கிறார். தமிழ், சிங்களம் உட்பட பெருமளவு மொழிகள் ஒரு உலக மொழிக்கு புதிய நவீன மொழிக்கு இடம் விட்டே தீர வேண்டும். நூறு வருடம்கள் முன்பாகவே காவுட்ஸ்கி அவர் நேர்மையான மாக்சிய வாதிகயாக இருந்த சமயம் ஒரு உலகமொழி ஏற்படும் என்ற கூறினார். இரண்டாம் உலகயுத்த சமயத்தில் ESPARANTOஎன்ற உலக மொழி பிறந்தது. இப்போ மலசலகூடம் முதல் விமான நிலையம் வரை எழுத்தல்லாத குறியீட்டு மொழிகள் தோன்றிவிட்டன. இங்கு தமிழ்த்துவம், சிங்களத்துவேசம் பேசும் எஸ்.பொக்கள் வரலாற்று வளர்ச்சியில் இருந்த சுவடு தெரியாமல் ஆக்கப்படுவார்கள்
தமிழ்நாட்டில் றகர, ரகர, நகர, னகர, ணகர, லகர, ழகர, ளகர என்பதைச் சரியாக உச்சரிக்க மாட்டர்கள் என்று குறையாகச் சொல்லும் எஸ்.பொ. இலங்கைத் தமிழ்லில்கூட இத்தகைய பிரச்சினைகள் உண்டு என்பதைக் கவனிக்கவில்லை. இலங்கைதமிழ் ழகர, ளகர இடையேயான உச்சரிப்பு வித்தியாசம் பல இடம்களில் புலப்படுவதில்லை. முன்பு இலங்கைப் பாடத்திட்டத்தில் “வாசிப்பு” என்பது ஒரு பாடமாக இருந்தது. அவை மொழி உச்சரிப்பை உயர்த்தின எஸ்.பொ.விடம் மொழிசார்ந்த இனவாத நம்பிக்கைகள் பெருமளவு உள்ளது.

ஒருகாலத்தில் PLOT உறுப்பினர் தற்போதிய மாக்சிய-பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி என்ற லெட்டர் கெட் அமைப்புக்குமுரியவரான டேவிட் பற்றியும் எமது எஸ்.பொ ஆகப்பட்டவர் குறித்துச் செல்கிறார். காந்தியவாதி தமிழரசுவாதி, புலிவாதி என்று தகுதியுடையவராக இன்றுள்ள டேவிட்டுக்கு எப்படி மாக்சியம், பெரியாரியம் எல்லாம் பொருந்தும் என எஸ்.பொ கேட்டறிய யோசிக்கவில்லை. ஆனால், அவரது புலி விசுவாசம் குறித்த கேள்வியே எஸ்.பொ.விடமிருந்து எழுகிறது “காந்தியமும், டேவிட்டும் புலிகட்கு எதிராகச் செயற்பட்ட வரலாற்றுண்மையின் சன்னிதானத்தில் அவரை விசாரனை செய்ய வேண்டும்” என்று இவர் பரிந்துரை செய்கிற்hர். டேவிட்டுக்கு ஐனநாயக்கருத்துரிமையோ மாற்று அமைப்புகளை தேர்ந்து கொள்ளும் உரிமையே கிடையாது என்பதுதான் இதன் பொருள் அச்சொட்டாகப் புலிப்பாசிஸ்டுகள் போலவே எஸ்.பொவும் சிந்திக்கிறார். தமிழ்தேசியவாதத்தின் ஒற்றைக்கருத்தியல் சர்வாதிகார ஒழுங்கையே ஏற்கிறார். எஸ்.பொ. காட்டும் வரலாற்றுண்மையின் சன்னிதானத்திலான விசாரணை என்பது வன்னியிலா? புலி நீதிமன்றத்திலா நடத்தப்படல் வேண்டும்? புலிப்பாசிஸ்டுகள் பொலிஸ். உளவுத்துறை, நீதிமன்றம் என்று பெயருக்கும் கட்டி வைத்துக்கொண்டு இதற்கு தொடர்பற்ற முறையில் இரகசியமாகவும் உத்தியோக பூர்வமற்ற முறையிலும்தான் வித்தியாசமான கருத்துடையவர்களை கொல்கிறார்கள். புலிப்பாசிசம் என்ன புனித நீதியின் சன்னிதானமாகவா எஸ்.பொ.யின் காந்தியக்கண்களுக்கு தெரிகிறது. காந்தியம் எங்கே புலிகட்கு எதிராய்ச் செயற்பட்டது? அது அகதிகளை அல்லவா பராமரித்தது சந்ததியாளரின் காந்தியத் தொடர்பே PLOT க்கு காந்தியத்துடன் சம்பந்தம் ஏற்படக்காரணம் PLOT இல் டேவிட்டர் காந்தியம் இல்லாமல் போனபின்தான் சேர்ந்தார். இந்தியாவில்தான் சேர்ந்து செயற்பட்டர். சந்ததியாரைப் PLOT கொன்றபோது டேவிட் PLOT ஐ எதிர்;த்துப் பிரச்;சாரம் செய்தவர். ஏன், எஸ்.பொ புலிக்கு ஆதரவு தரலாம் என்றால் PLOT ஐ ஆதரிக்க டேவிட்டுக்குள்ள உரிமையை மறுக்க எஸ்.பொ. யார்? புலிகளை எதிர்ப்பது தமிழர்களை எதிர்ப்பதாகுமா?

டேவிட் விசாரணை செய்யவேண்டம் எனும், எஸ்.பொ தானே சொந்தமாக புலிப்பாசிசக்கொலையாளிகளை ஆதரித்த குற்றத்துக்காக விசாரணை செய்யப்பட்ட வேண்டிய குற்றவாளியல்லவா? இவரின் தனையன் புலிப்பாசிக் கொலைப்படையாளிதானே? எஸ்.பொ. இன் மானுட விமுக்தி, காந்தியம் இவைகளில் மாற்றக்கருத்தாளர்களை குற்றவாளியாய் விசாரணை செய்யும் சட்ட விதிகள் இடம்பெற்றுள்ளதா? இவரின் காந்தியம் கொலை, வன்முறைப்பிரயோகத்துக்கு உடன்பாடானதாகவல்லவா இருக்கிறது? அது சரி, டேவிட் PLOT இல் இருந்தது குற்ற மென்றால் எஸ்.பொ. இலங்கையில் உள்ள சிங்களக் கட்சி, தமிழ்க்கட்சி எல்லாவற்றுடனும் கூடித்திந்தவராயிற்றே அவரை எந்த வரலாற்றுண்மையின் சன்னிதானத்தில் வைத்து விசாரிப்பது? புலியின் வன்னி பாதாளச் சிறைகளில் எத்தனை அடி ஆள பங்கரில் போடுவது என்று எஸ்.பொ. விளம்புவாரா? உண்மையில் டேவிட்டுக்கும், எஸ்.பொவுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சில சென்டிமீற்றர்தான் இருவரும் காந்தியையும், செல்வநாயகத்;தையும், புலியையும் இன்றும் ஒன்று சேர ஏற்பவர்கள்தான். ஆனால்; எஸ்.பொவுடன் ஒப்பிடும்போது டேவிட் காந்தியத்துக்கு குறைந்தபட்ச விசுவாசமாவது உடையவர். திருமணம் செய்யாமல் பிரமச்சாரியம் அனுட்டிஸ்த்து, சனங்கட்கு சேவை செய்து பணம், சொத்து சேகரியாமல், தனது கட்டடக்கலைஞர் தொழிலையும் இழந்தவர். எனினும் அவர் வயது முதிர்ந்து தலை நரைத்து தள்ளாத வயதிலும் தமிழரைப் பேசுகின்றார் என்பது அவரை ஆதரிக்க அனுதாபம் கொள்ள போதுமானதல்ல. டேவிட் எஸ்.பொவை விட தனிபட்ட வாழ்விலாவது நேர்மை பேணியவர், ஒழுக்கவாதி ஆனால் மறுபுறம் அவர் எஸ்.பொ போலவே அபாயகரமான புலிப்பாசிச ஆதரவாளர். புலி பிழைவிட்டாலும் தமிழர்கட்குப் போராடுகிறது என்ற வாதத்;துடன் வாழ்பவர். இவர்கள் இலங்கையின் வரலாற்றில் எந்தப் பெறுமதியையும் பெறாமல் முடிவடைவர்.

ஜெயமோகனுக்கு எஸ்.பொ மிக மரியதை மிகுந்த இடம் தருகிறார். எஸ்.பொவுக்கு பிடித்தமான சினிமாவிலும், சினிமாப் பாடல்களிலும் ஜெயமோகனின் தலைதெரியத் தொடங்கிவிட்டமையால் கௌரவம் அதிகமாகவே ஜெயமோனுக்கு கிடைக்கிறது. தன்னைத் தத்துவஞானி என்று கற்பனை செய்துக்கொண்டு திரியும் கருத்துமுதல்வாதக்குப்பையான ஜெயமோகனை, சுந்தரராமசாமி, ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்களும் ஆரம்பத்தில் சேர்ந்துதான் வளர்ந்துவிட்டார்கள் ஜெயமோகனின் எழுத்துக்கு எதிராக இருந்த தத்துவத்தடைகளை அகற்றி, உதவி புரிந்தார்கள். ஜெயமோகன் போன்ற அக உலக ஆட்சியாளர்கள் நடப்புலகின் உண்மை மனிதர்களைக் கண்டஞ்சி விஸ்ணுபுரம்களின் ஆதி இந்துமதவாதத் கனவுகளில் தூங்குபவர் அவர் இடதுசாரிகள் எதிர்க்க மட்டும் இடையிடையே பூலோகத்துக்கு வருவார். இந்திய இந்துப்பாசிஸ்டுகளின் மூலம்களையுடைய ஜெயமோகன்போன்றவர்கள் இந்தியாவில் பழைய விவசாய சமூகத்தின் கடைசிப் பிரதிநிதிகளாவர். இன்றைய உலகமயமாக்கில் இந்திய மதம்சார்ந்த கற்பனைகள் இன்னமும் நீண்டநாட்களுக்கு நின்றுபிடிக்காது உலகமயமாகும் பொருளாதார, சமூகவியல் போக்கு அது சார்ந்த நுகர்வு முறைகள் இந்திய இந்து மதவாதத்தை சிதறடித்துவிடும். இது வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத கடுகதியில் நடக்கும் எவ்வளவு வேகமாக ஜெயமோகன் முதலாளிப்பரப்புகள் முன்னுக்கு வந்தாரோ அதேவிரைவில் அவர் எழுத்துக்கள் துரத்தி அடிக்கப்படும். புலிகள் துலையும்போது எஸ்.பொ. போன்றவர்களும் சேர்ந்து துலைவார்களோ அதே போல் இதுவும் நடக்கும்.

காசிஆனந்தன் பற்றிய உயர்வான மதிப்புரைகளும் அவர் தன்னிடம் படித்தவர் என்ற துணைத்தகவல்களுடன் எஸ்.பொவால் தரப்படுகிறது. எஸ்.பொ.விடம் பயின்றால் கைலாசபதியிடம் கற்றவர்கள் ஆகியமாதிரியா ஆகமுடியும் காசிஆனந்தனை ஒத்த தமிழ்தேசியவாதிகளாய்த்தானே ஆகமுடியும். காசிஆனந்தன் எப்படியான் தன்னடக்கம் மிக்கவர் என்றால் “களமாடிய கவிஞர் காசி ஆனந்தன்” என்ற நூலை தானே எழுதி தன்தம்பி சின்னத்துரையின் பெயரில் வெளியிட்ட புகழ்விரும்பாப் புண்ணியனாவார். சிங்கள்மொழியை படிப்பேன் என்ற நிபந்தனையின் கீழ் அரசசேவையில் சேர்ந்துவிட்டு பின்பு சி;ங்கள மொழிச்சட்டத்தை எதிர்த்து பதவி விலகி தியாகிபட்டமெடுத்தவர். இளம் பெண்களுக்கு அவர் “தமிழ் வாழ வாழடி என் தங்கச்சி” என்று எழுதிக்கையெழுதிட்டுத்தருவது வழக்கம். அப்படி இவரிடம் கையெழுத்து வாங்கிய ஒரு பெண், விமானத்தில் கொழும்பில் இருந்து பலாலிக்கு செல்ல வேண்டி வந்தது. அப்போது அதில் பிரயாணம் செய்த காசிஆனந்தன் இருக்கைகட்கு அற்பமாய்ச்சண்டை பிடித்ததைக்கண்டு அவர் வெறுத்துப்போய் அன்றுடன் காசிஆனந்தன் மேலான மதிப்பையும் விட்டொழிந்தார். சிறையில் தன் ஆங்கில அறிவைக்காட்டி அடிவாங்காமல் தப்பும் உபாயத்தை விடாமல் கடைப்பிடித்தவர். பஸ்தியான்பிள்ளையே “நீ படிச்சவன் ஏன் இவர்களுடன் சேர்கிறாய்” என்று இவருக்கு நன்னடைத்தைச் சான்றிதழ் வழங்கியவர் என்றால் இவரின் தமிழணர்வை நாம் மதிப்பிட முடியும். காசிஆனந்தணை தமிழ் அல்ல ஆங்கிலமே காத்தது.

அண்மையில் புலிகளின் ஜரேப்பிய தரிசனம் தொலைக்காட்சியில் தோன்றிய காசிஆனந்தன் “தமிழர்கள் பிறந்ததினம் கேக் வெட்டி, மெழுகுதிரி கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். இது தமிழ்பண்பாடு அல்ல பிறந்ததினம் கொண்டாடுவது எமது வழக்கத்தில் இல்லை. தமிழனுக்கு தாழ்வுணர்ச்சிச் சிக்கல் இதனால்தான் இப்படிச் செய்கிறான்” என்றார். புகலிட நாடுகளில் உள்ள தமிழார்கள் இலங்கையின் தமிழ்க்கலாச்சாரத்தைவிட முன்னேறிய கலாச்சாரத்தையும் பொருளாதாரச் சூழல்களையும் எதிர்கொள்கிறார்கள். பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இலங்கை நிலைமைகளைவிட அதிக உரிமைகளையும் பொருளாதார சுதந்திரத்தையும் பெறுகிறார்கள். கற்றவர், கல்லாதவர், என்ற பாகுபாடுகள் பொருளாதார ரீதியாக பெரிய வித்தியசத்தை ஏற்படுத்துவதில்லை. தமது வாழ்க்கையில் பலகனவுகளை உடையவர்களாக இருந்தவர்கள் பொருளாதார ரீதியாகவாவது சில இலக்குகளை அடைகிறார்கள். ஆடைகள், நகைகள், வீட்டுப்பொருட்கள், கார், பணம், சேமிப்பு இவைகளுடன் ஆடம்பரமான பிறந்தநாள், திருமணம், சாமத்திய வீடுகள் கொண்டாடப்படுகிறது. இது நுகர்வு உயர்வதாலும், கடந்தகாலத்திய இலங்கையின் தாழ்ந்த வாழ்வு நிலைகளின் உளத்தூண்டுதல்களாலும் நடைபெறுகிறது.

மேற்குலகவாழ்வில் இது சாதாரண் நிகழ்வாகும். மக்கள் பொருளாதாரச் செழிப்புகளில் இப்படித்தான் நடந்துகௌ;வார்கள். மதம், இனம், மொழி பற்றிய செய்கையான சொல்லடுக்குகளை மீறி இவை நடைபெறுகின்றன. இது ஐரோப்பிய வெள்ளையர்களுடன் சமப்பட நடைபெறுவதல்ல. காசிஆனந்தனார் புகலிடத்தில் இருந்தால் இதைத்தான் செய்வார். புலிப்பிரமுகர்கள் எல்லோரும் புகலிட நாடுகளில் குத்துவிளக்கில் தீபம் ஏற்றி கைகளில் மலரும் ஊதுபத்தியும் தாங்கியா பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கேக் வெட்டுவது தமிழிப்பண்பாடு அல்ல என்கிறால் தேசியத்தலைவர் தனது பிறந்தநாளைக் கேக் வெட்டாமல் பணியாரம், வடை, முறுக்குடன், பொங்கல் பொங்கிய கொண்டுகிறார். அன்னியர் ஆட்சியில் நாம் ஐரோப்பியர்களின் முன்னேறிய பண்பாடுகளை உள்வாங்கவில்லை? எமது கலாச்சாரம்களில் ஒரு பகுதியை அதற்கு விட்டுத்தரவில்லையா? இது சமூகவிதிப்படி திட்டமிடாமல் நடந்ததாகும். புகலிட நாடுகளில் இலங்கை மற்றும் தமிழ் அல்லாத சூழலில் பதிய சூழலுக்கு இசைய மக்கள் மாறுவார்கள். கேக் வெட்டக்கூடாது சாப்பிடக்கூடாது என்று காசிஆனந்தனின் விதிப்பாரேயானால் நாம் பாண், பிஸ்கட், சொக்கலேட் குடிபானம்கள் எல்லாவற்றையுமல்லவா தமிழ் அல்லாதது அன்னியம் என்று ஒதுக்கவேண்டும் சினிமாவையும், கோதுமைமாவையும், ;மேசை, கதிரையையும், கழிசன், சேட், பிக்சான், அலவாங்கு, கல்வீடுகள் சகலதையும் துறக்க முடியுமா? பிறப்பு, இறப்பு பதிவையும், குடிசனத்தொகை எடுக்கவும் சகலதையும் ஆவணப்படுத்தவும் எழுத்தில் வைக்கவும் நாம் ஐரோப்பியரில் இருந்து கற்றது தவறா? தமிழ் விரோதச்செயலா? நோய்க்கு ஆஸ்பத்திரியும், கல்விக்கு பள்ளிக்கூடம்களும் காணிக்கு உறுதிபதிவதும் தபால், தந்திமுறைகளும் தமிழக்கலாச்சாரம் மீறும் செயலா? மின்விளக்கு, தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம், கார், பஸ், ரெயில், விமானம் இவைகளோடு எந்தத் தொடர்பும் இல்லாமலா காசிஆனந்தனார்; தமிழ் வாழ்வுவாழ்கிறார்? அவர் மருத்துக்கு குளிசை உருட்டித்தரும் பரியாரியை, கடிதம், கவிதை, கட்டுரை தீட்ட ஏடும் எழுத்தாணியுமா நாடுகிறார். அவர் தொலைக்காட்சியில் ஏன் தோன்றுகிறார். புறாக்களை தூதாக அல்லவா அனுப்பவேண்டும் கிள்ளைவீடு தூதையல்லவா நாடவேண்;;டும். மேலைத் தேசமருந்துவமும் கடதாசி பேனை இல்லாமல் அவர் வாழ்ந்து காட்டட்டும் நாட்டு நடப்புச்செய்திகளை தமிழ்ப்புலவர்களா நாளாந்தம் வந்து இவர் வீட்டு முற்றத்தில் நின்று பாடிவிட்டு பரிசில்களைச் சுமந்து செல்கிறார்கள்? பத்திரிகை, தொலைக்காட்சியில்லாமல் வாழ்ந்து காட்டட்டும் இதை என்ன தமிழர்களா கண்டு பிடித்தார்கள்? அல்லது இதற்கும் அக்காலத்தில புட்கவிமானம் இருந்தது என்பது போன்ற கதையாடல்கள் உண்டா? வீட்டிலே காசிஆனந்தன் தட்டில், பீங்கான் கோப்பையில் சாப்பிடாமல் இவருக்கு இவரது துனைவியார் தலைவாழை இலையிலா திருவழுது செய்விக்கிறார்?

மனிதகுலம் படைத்துள்ள எல்லா அற்புதம்களையும் நுகர்ந்து தமதாக்கிக்கொண்டு காசிஆனந்தன் போன்ற தமிழ்தேசிய வெறியர்கள் போலித்தமிழ்தேசியம் புகல்கிறார். தமிழனாய்வாழ் தமிழப்; பண்பாட்டைக்காப்பாற்று என்று புலம்புகிறார்கள். AK 47 இயந்திரத்துப்பாக்கி என்ன மட்டக்களப்பு அமிர்தமியிலா கண்டுபிடிக்கப்பட்டது? புலிகளின் தொலைக் தொடர்புக்கருவிகளிள் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் மாலைநேரத்தில் கடற்கரையில் உட்கார்ந்து அவரின் அரிய மூளையைப் போட்டு பிசைந்து கொண்டு இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதா? தமிழிப்பண்பாடு சார்ந்த பொருளாதாரம் என்பது மனிதர்களின் குறைந்த ஆயுள்காலமும் பெண்கள் குழந்தைகள் இறப்பு விகிதமும் தீராத நோய்களும், ஓயாத சண்டைகளும் நிரம்பிய காலமாகும். அம்மைப்பால் குத்தும்முறையை Edward Jenner கண்டுபிடித்திரவிட்டால், கொலரா, இளம்பிள்ளைவாதம், மலேரியாவுக்கு மருந்துகள் கண்டறியா விட்டால் இன்றைய தமிழர்கள் தொகையில் 50% மாணவர்கள் இருந்திருக்கமாட்டர்கள். விசர்நாயக்கடிக்கு லூயிபாஸ்டர் கண்டுபிடித்த மருந்து தமிழர்கள் உட்பட பல நூறு மில்லியன் மக்களின் உயிரைக்காக்கவில்லையா? இல்லாவிட்டால் இந்த நோய்கள் எதிராகப் போராடியிருக்க முடியுமா? X- Ray எனப்படும் ஊடுகதிர்களை Wilhelm Conrad Rontgen என்ற ஜெர்மனியர் கண்டறிந்தார் என்பதால் இது தமிழர்கட்குப் பொருந்தாமல் போய்விட்டதா? இதைக் தமிழ்த்துவத்துக்கு முரண் என்று காசிஆனந்தனும் எஸ்.பொ.வும் மறுத்து ஒதுக்கத்துணிவார்களா? இவர்கள் இருவரையும் ஒன்றுசேரத் தலைமுழுவதன் ஊடாகத்தான் தமிழ் மக்கள் விடுதலை பெறுவார்கள். உலகின் நாகரீகமான மனிதப்பிரிவாக மாறுவார்கள். தமிழ்க்கற்பனைபோலவே காசிஆனந்தனின் தமிழ்ப் பண்பாட்டுக் கற்பனைச் சரக்குகளும் கைவிடப்படும். காடாத்திவிடப்படும்.

“என் அப்பய்யாதான் என் மகாத்மா” என்று எஸ்.பொ தந்தையைப் போற்றுவது தன்குடும்பம் முழுவதுமே தியாகமும் நற்குணமும், உயர் ஒழுக்கம்கள் வாய்த்தவர்களாக உருவாகிப்பதையும் நாம் விட்டுவிடலாம். தான் பிறந்த இடம் யேசுபிரானின் புனித குடும்பநிலைக்கு நிகரானது என்று அவர் குறித்தாலும் அது எமது கரிசனையுள் வராது ஆனால் அவரது குடும்பம் சார்ந்த வர்ணனைகள் அவரின் பொருளாதார நிலைமைக்கும், வர்க்க எண்ணம்கட்கும் தேவையான சாட்சிகளையும் தருகின்றன. அங்கீகாரம் பெற ஆங்கிலக்கல்வியே மார்க்கம் என்று அழுக்குப்பிடியாக இருந்தவர் என்று இவர் எழுதும்போது எஸ்.பொ.வின் சமூகமாக இருந்தபோதும் அவரது மாமனாரால் “கண்டநிண்ட சாதியான எளிய சாதியாக” கூறப்பட்டபோதும் இவருக்கு எந்த பெரும் கோபமும் எழவில்லை. படிப்பால் வசதியால், பணத்தால் தன் குடும்பம் முன்னேறிய நிலையில் இருந்ததாக அவர் பெரும் மனவுறுத்தல் எதுவும் இல்;லாமலே எழுதிக்கொண்டு போகிறார். எஸ்.பொவிடமும் தன் மாமனாரையொத்த சாதிகடந்த வர்க்க ஒற்றுமைக்குணம் காணப்படுகிறது. எஸ்.பொ யாழ்ப்பாணச் சமூகத்தின் இலட்சணமான உத்தியோகத்தர் என்ற பெருமை பூண்டார். வீட்டில் வேலைக்காரன் வைத்திருக்கும் தகுதியையும் அவர் விரைவில் பெற்றவிட்டார். அனேகமாக வீட்டு வேலைக்காரப்பொடி ஒரு மலைநாட்டு தேயிலைத் தோட்டத்தோட்டத்து தொழிலாளியின் ஏழைப் பிள்ளையாகவோ, மட்டக்களப்புப் பகுதியைச்சேர்ந்த தன் சொந்தக் குழந்தைக்கு கல்வியும், உணவும், பராமரிப்பும் தரமுடியாத ஏழைத்தாய், தந்தையர் வயிற்றில் வந்துதித்தாகவோ இருந்திருக்கும்.
பல்லாயிராக்கணக்காக விரியும் கொடுக்கல்; வாங்கல்களை மனக்கணக்காக ஒப்பவிக்கும் தன்தாய் பற்றிக்குறிப்பிடுகையில் அது மரக்கலை வருமானம், வட்டிக்கு கொடுக்கும் தொழில் போன்வற்றுடன் சம்பந்தப்பட்டது என்பதை, அவர் தவிர்த்துவிட்டார். வட்டித்தொழில் அக்கால எத்தனை ஏழைகள் நாட்கூலி வேலைசெய்து பிழைக்கும் தொழிலாளர்களின் மேலாக சுரண்டலின் மூலம் கொண்டு இருந்திருக்கும் என்பதைச் செய்ய வேண்டியதில்லை. எஸ்.பொவின் அத்தான் எம்.சி.சுப்பரமணியம் ஸ்டாலினிஸ்ட் என்ற போதும் தான் வாழ்வில் பெரும் பகுதியாக மக்களுக்கு விசுவாசமாக இருந்தார்.

பிற்காலத்தில் வன்னிப்பகுதியில் அவர் பெரும் நில புலன்களைத் தேடிக்கொண்டர். புதிய அரசியல்யாப்பை எம்.சி ஆதரித்தமை நியமன எம்.பி.யாக ஆன்மை இவைகளை தமிழ்ர்களில் தியாகி, துரோகிகளைத்தேடும் எஸ்.பொ. கட்டாயமாக விமர்சித்து இருக்க வேண்டும். ஆனால் தமிழ்மேல் உள்ள பாசத்தைவிட குடும்ப பாசம் பெரியது என்பதால் இவைகளை புதைத்துவிட அவர் விரும்பினார். மேலும், எம்.சி நியமான எம்.பியாக ஆகாவிட்டால் எஸ்.பொ.வின் உத்தியோக நலன்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியாயிருக்கும். எம்.சி இதற்கு மச்சான் என்ற தகுதியில்லாவிட்டால் குமாரசூரியர் முதூர் மஐPத் என்றெல்லாம் அறிமுகம்கள் கிட்டியிராது. தன் குடும்ப நன்மைக்காக எஸ்.பொ. பல உண்மைகளை சிரச்சேதம் செய்துவிட்டார். நோர்வே, சுவீடன், டென்மார்க் இந்த நாடுகளும் உலகமே வியக்கும் வண்ணம் Egalitarian சமுதாயமாக வளர்ந்துள்ளது. சமூகம், அரசியல், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் மிகுந்த மனித நேயத்துடன் சமத்துவம் வழங்கப்படுகிறதாம். இத்;தகைய சமூக அமைப்பு மாக்சிய ஆட்சியிலேயே சாத்தியமாகும் என்று முன்பு நினைத்திருந்தாராம். முதலில் இந்த நாடுகளும் முதலாளித்துவப் பொருளாதாரத்தைக்கொண்டவை 1970 கள் தொடங்கி 1990கள் வரையில் பொருளாதார செழுமைக்காலம் நிலவியது. பலவித சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. அதற்கு காரணம் அரசு அல்ல பலமான தொழிற்சங்க இயக்கம் 1970 எழுச்சிகள் எற்படுத்திய பயம் காரணமாக அரசு சமூக எழுச்சிகளைத் தணிக்க சில சலுகைகளை ஆறிவித்தது. நோவே எரிபொருள் வளர்த்தைக் கொண்டு இருந்தது. பொதுவாக இந்த நாடுகள் மீன்பிடி, பால் உற்பத்தி, ஆயுதம், வாகன உற்பத்தி உடன் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் இருந்தன. இப்போது 2000 ஆண்டின் பின்பு தகரத்தொடங்கியுள்ளது. nஐர்மனிக்கும், பிரான்சுக்கம், பிரிட்டனுக்கும் ஏற்படும் அரசியல், பொருளாதார கதிகளில் இந்த நாடுகள் தப்பமுடியாது என்பதைக்காட்டும் நிகழ்ச்சி நிரல்கள் தொட்கிவிட்டன. இந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக மூலதனத்தால் இயக்கப்படுவதாக சுரண்டல் சமூக அமைப்பாக உள்ளவரை எப்படி நிரந்திரமாக வாழ்வும் அமைதியும் வரும் இந்த நாடுகள் ஏழைநாடுளை;க் கொள்ளையிடாமல் தமது பொருளாதாரச் சுரண்டலைச் செய்யாமலா? தமது நாட்டு மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரத்தையும் சமூக நிலையையும் தந்தன?


யாரோ மூலதனச் செயற்பாடு பற்றி விளக்கம் குறைந்தவர் ஒப்புவித்ததை வறுக்கிக்கொண்டு எஸ்.பொ. மாக்சிய சமூக அமைப்புகட்கு மாற்றாக இந்த நாடுகளைக்காட்டவெளிக்கிடுகிறார். முதாளியத்தின் தற்காலிகமாக பொருளாதாரச் செழுமைச் காலம்களை நம்பும்படி போதனை செய்யப்படுகிறது. ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சி இனி மேற்குலகநாடுகளின் வாழ்க்கைத்தரம், சமூக அமைதி நிலைமை என்பவைகளைப் பறிந்துவிடும். பொருளாதார ரீதியாக இந்த நாடுகள் தனித்து அரசோச்சிய காலம் போய்விட்டது. முதலாளிகளை வைத்துக்கொண்டு வர்க்க சமூக அமைப்பை வாழவிட்டுக்கொண்டு மனித நல்வாழ்வு வந்துவிடும் என்ற கனவு கண்டவர்கள் தோற்றுத்தொலைவதுதான் வரலாறு. இன்று அமெரிக்கா மட்டுமல்ல மேற்குலக ஐரோப்பாவும் 1930 ஆண்டுகட்கு முற்பட்ட நிலைமைகட்கு திரும்புகின்றன. சமூக உதவிகள் குறைப்பு, வேலையின்மை, வேலை நிறுத்தம்கள், விலை உயர்வு, வேலைநீக்கம், தொழில்களை மூடல் இதுதான் முதலாளித்துவத்தின் இயல்பு. நோர்வே, சுவீடன், டென்மார்க் இதற்கு விலக்கல்ல. நோர்வே அமொரிக்காவின் அரசியல் தூதராகக் மத்திய கிழக்கு, ஆபிhக்க நாடுகளில் செயற்பட்டது. இலங்கைக்குள் புகுந்து புலிக்கு அரசியல் வாய்ப்பும், நிதியும் தருகிறது. உள்நாட்டு யுத்;தத்தை வளர்த்து. புலிகட்கு வடக்கு-கிழக்கில் அதிகாரத்தைப் பெற்றுத்துரவும் இலங்கை வளம்களை இந்திய, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து அபகரிக்க முயன்றது. இன்று நோர்வே அரசியல் இலங்கையில் தோற்றுவிட்டது. நோர்வேயின் இலங்கை மேலான தோல்வி புலிகளின் தோல்வியாகவும், அமெரிக்காவின் தோல்வியாகவும் மாறும்.

“இந்தியத்தலையீடு தமிழ்ர்கட்கு தீர்வு பெற்றத்தரவில்லை. இது இந்திய அயலுறவுக் கொள்கையின் தோல்வி. இந்த நிலையில் நோர்வே தமிழர்கள் கௌரவத்துடன் ;சமாதானமாக வாழ ஏற்பாடு செய்ய முயற்சிகிறது. இதனை முன்னெடுக்க சிங்களஅதிகார பீடம் எத்தகைய ஒத்துழைப்பைத்தரும் என்பனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்”. இது எஸ்.பொவின் மதிப்பீடு வழக்கம்கட்கு பின்னோடும் அரசியல், இன்று ஆசிய நாடுகள் வளர்ச்சி இந்தியா, சீனா, ஐப்பான், தென் கொரியா உட்பட பல நாடுகள் முதலீடு என்பன இந்தியாவின் பலத்தை பலவீனப் படுத்தவில்லை மாறாக அது ஆசியப் பலமாக மாறியுள்ளது. ஆசிய அபிவிருத்தி மேற்குலக நாடுகளின் இதுவரையின் அரசியல், இராஜதந்திர போக்குகளை மாற்றும் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதை உலகவங்கி சர்வதேசங்களின் கட்டுக்களில் இருந்து விடுவிக்கும், இன்று இந்தியா, சீனாவிடம் உபரி மூலதனம் உள்ளது. சீனாவிடம் உலகிலேயே மிக்பெரும் டொலர் சேமிப்பு உள்ளது. 1.3 பில்லயன் டொலர், டொலர் மதிப்பு வீழ்ச்சியடைவதால் சீனா அந்த டொலரை முதலீகளாகவும், கடனாகவும் எல்லா நாடுகளிலும் இறைக்கிறது. இலங்கை அரசு மேற்கு நாடுகளை விமர்ச்சிப்பதும் உலகவங்கி, சர்வதேச நாணய வங்கிகளை கண்டிப்பதும் இதனால்தான், இந்தியா-சீன பொருள் பலம் இருக்கும்போது இந்த மேற்கு நாடுகள் இலங்கைக்கு தேவைப்படமாட்டர். சீக்கியர்களின் “காலிஸ்தான்” போரட்டத்தை இந்தியாவுள் மேற்குலக உதவியுடன் நடத்திக்கொண்டிருந்துபோது அதைத்தடுத்த முடியாமல் இருந்த இந்தியா இன்று இல்லை அது சர்வதேச நிறுவனம்களுடன் உலக மூலதனத்துள் பங்கு ஆகிவிட்டது. இந்தியா லகஸ்;மி மெட்டல் மேற்கு ஐரோப்பா உருக்கு இரும்பு நிறுவனம்களையே விழுங்கத்தொடங்கிவிட்டது. எனவே இந்தியா 1970, 1980 இல் இருந்தபோல் இன்றும் உள்ளது. அதன் அரசியல், பொருளாதாரப் பலம் அப்படியே உள்ளது என்பது ஆசியாவுக்கான மதிப்பீடு அல்ல.

இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கட்கு தனியே உதவி இலங்கை அரசை நிர்ப்பத்தித்த மேற்குலக சார்ப்புப் போக்கைக் கட்டுப்படுத்திக்கையாளத் தேவைப்பட்ட இந்தியாவின் காலமல்ல இது இன்று இந்தியா தனித்தும், ஆசிய வலிமையுடன் உள்ளது. ஒன்றிணைந்த கலைந்து சிதறாத இலங்கைத்தேசம் இந்திய முதலாளித்துவத்துக்கு இன்று தேவை. இலங்கைத்தமிழர்கள் பிரச்சினை தமிழ்நாட்டு அரசியல் குறிப்பிடத்தக்க இன்னும் கொண்டிருப்பதால் இந்தியா வெளிப்படையாக அரசியல் செய்யவில்லை. ஆனால், அதன் பொருளாதார இராணுவச் செயற்பாடுகள் இலங்கையுள் மிகத்தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தேசிய இனம்களின் கிளர்ச்சிகள் அடங்கத்தொடங்கிவிட்டதற்கு அதன் குறிப்பிடத்தக்க முதலாளிப் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகையால், இலங்கைத் தமிழர்கட்;காக இந்திய முதலாளியம் தலையிடாது. அதனால் அதற்கு சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லை. இங்கு மூலதன ஆற்றல் செயற்படுமே தவிர பொருளாதாரத்தின் விருப்பம் தீர்மானிக்குமே தவிர, இந்து, இந்தியாவின் தமிழர் என்பதெல்லாம் பிரதான காரணிகளாக இராது. இவையெல்லாம் பக்கக்காரணிகளே. இந்திய முதலாளித்துக்கு பயன்படும்போது மட்டுமே இவைகள் கவனம் பெறும். மேற்குலகின் கொலனிக்கால இலங்கை மக்கள் மேலான மேற்குலகக் கொடுமைகளை மறந்து நோர்வே போன்ற இனவாத வெள்ளை அரசுகளை மீண்டும் வருந்தி அழைப்பதும், இலங்கையின் சொந்த சிங்கள, முஸ்லீம் சகோதர மக்களுக்கு எதிராக பாவிக்க முனைவதும் எஸ்.பொவின் சிந்தனை ஒட்டம் எத்தகைய துரோகத்தன்மை வாய்ந்தது என்றுகாட்டும்.

டிசம்பர் 2007 தமிழரசன் பெர்லின்

(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)

No comments: