Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:5)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்


(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)


பகுதி:(5)

யாழ்வளாகத்துக்கு கைலாசபதி தெரிவு

கைலாசபதி அரசியல் செல்வாக்கினூடுதான் யாழ் வளாகத் தலைவரானானர் என்ற எஸ்.பொ எழுதுவதை ஆராய முன்பு கைலாசபதி யாழ் வளாகத்தைலைவராகக் ஆன்மைக்கான உண்மை சான்ற காரணிகளை தேடக்கடமைப்பட்டுள்ளோம். 1970களில் இடதுசாரிகள் தாம் பதவிக்கு வந்தால் யாழ்ப்பாணத்துக்கு பல்கலைக்கழகத்தைக்கொண்டு வருவோம் என்று இடதுசாரி ஐக்கிய முன்னணிக் கூட்டம்களில் பேசி வந்தனர். ஆனால் தமிழரசுவாதிகள் இதை மேடைகள் தோறும் யாழ்ப்பாணத்துக்கு சிங்களவர்கள் ஒருபொதும் பல்கலைக்கழகத்தை கொண்டு வரமாட்டார்கள் பல்கலைக்கழமல்ல ஒரு பள்ளிக்கூடம்கூட கட்டித்தர மாட்டார்கள் எனக் கேலியாக பேசி வந்தனர். 1970 இல் புதிய இடதுசாரி ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்த பதியுதீன் முகம்மது கல்வியமைச்சாரானார். எனினும் அவர் உடனடியாக யாழ் பல்கலைக்கழகப் பிரச்சினையில் முனைப்பாக ஈடுபடவில்லை. பீற்றர் கெனமன் உட்பட இடதுசாரிகளும் குமாரசூரியர் போன்றவர்களும் எடுத்த தீவிரமுயற்சியின் விளைவாகவே யாழ் பல்கலைக்கழம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. வளாகம் அமையும் இடமாக திரூநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி என்பன தேர்ந்தெக்கப்படுவதாக முறையிட்டார்களே தவிர எந்த மாற்று யோசனைகளையும் கூட தரத்தயாராக இருக்கவில்லை. யாழில் பல்கலைக்கழகம் வந்தால் அது இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசின் செல்வாக்கை தமிழ்ப்பகுதியில் அதிகப்படுத்தி தம்மைப் பலவீனப்படுத்திவிடும என்று அவர்கள் கருதினர். அவர்கள் உண்மையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிராகவே செயற்படத் தொடங்கினர். ஆனால் குடாநாட்டின் பெரும்பகுதி மக்கள் யாழில் பல்லைக்கழக வளாகம் ஏற்படுவதையிட்டு சாதகமான கருத்தையே கொண்டிருந்தனர். யாழ் பல்லைகழகம் அமைக்க ஒரு குழுநிறுவப்பட்டு அதில் குமாரசூரியர், பமேஸ்வராக் கல்லூரி அதிபராக இருந்த சிவபாதசுந்திரம், பிரேம்ஐp என்போரும் இடம்பெற்றனர். இதைவிடத் தனியாக ஒரு தமிழ் ஆலோசகர் சபையும் நிறுவப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு கோபாலபிள்ளை மகாதேவா இந்திரபாலா வத்தியானந்தன், கைலாசபதி உட்பட பல பெயர்கள் இருந்தன இதில் கோபாலபிள்ளை மகாதேவா இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசின் முக்கிய கட்சிhன சிறிலங்கா சுதந்திரக்ட்சியின் ஆள். வித்தியானந்தன் தீவிர தமிழரசுக்கட்சி நபர். இந்திரபாலா கட்சி சாராதவர் அரசியல் தொடர்பு இல்லாதவர். இங்கு யாழின் அரசியல் நிலைமைகட்கு ஏற்ற அரசியல் பக்குவமும் கல்விசார்ந்த புலமையும், இனவாதத்துள் அகப்படாத குணமும் வாயந்தவராக கைலாசபதியே இருந்தார். அவர் பிரிட்டனில் பர்மின்காம் பல்கலைக்கழகத்தில் மாக்சிய வாதியான ஜோச் தோம்சனின் மாணவராக இருந்தவர். 1961 முதல் அவர் விரிவரையாளராக இருந்து வந்ததுடன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்தியாலங்கார வளாகத்தின், தமிழ்-இந்து நாகரீகத்துறைத் தலைவராகவுமிருந்தார். எனவே iகாசபதியின் இத்தகுதி ஒருவருக்கும் இருக்கவில்லை. கோபாலபிள்ளை மகாதேவா பெரும் கல்வியாளர் எனக்கணிக்கப்பட்ட போதும் நிலையில்லாத அரசியலை உடையவர். எஸ்.பொ கூறுவதுபோல் கைலாசபதிக்கு கல்வி போதித்தவராக இருந்தார் என்ற வித்தியானதனின் தகுதி கைலாசபதியுடன் எத்திசையிலும் ஒப்புநோக்ககூடியதல்ல.

எனவேதான் தேர்வுக்குழு கைலாசபதியைத் தேர்ந்தெடுத்தது. இத்தனைக்கும் பீற்றர் கெனமன்,பிரேம்ஜி போன்றவர்கள் மொஸ்கோ சார்பு கொம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் கைலாசபதி அப்போது இவர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டிருந்த பீக்கிங் கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தார். அப்படியிருந்தபோதும் அரசியல் வித்தியாசம்களுக்கு அப்பால் கைலாசபதி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அவரது திறமையே காரணம் இவர்களோடு கொம்ய+னிஸ்டே அல்லாத குமாரசூரியர் போன்றவர்களும் இணைந்தே கைலாசபதியை யாழ் பல்கலைகழக உபவேந்தராகத் தேர்ந்தெடுத்தனர். கைலாசபதி உபவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பீக்கிங் கொம்ய+னிஸ் கட்சியுடன் கடும் அரசியல் தத்துவ மோதல்கள் அப்போ ஈடுபட்டிருந்த மொஸ்கோ கொம்யூனிஸ் கட்சியின் யாழ்பாணக் கிளை கைலாசபதி தெரிவானமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி வைத்தது. எம்.சி.சுப்ரமணியம் போன்றவர்கள் கைலாசபதியின் தெரிவையிட்டு சந்தோசப்பட்டனர் என்பதே வரலாறு. அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்று பழிவாங்கப்படாமைக்கு அவருடைய உபவேந்தர் பதவிக்கான தகுதியும் தனிப்பட்ட பண்புகளுமே காரணமாகும்.

இதை எதிர்த்தவர்கள் தழிழரசு-தமிழர் கூட்டணிக் கும்பல்களே. அவர்கள் கைலாசபதிக்கு எதிராக இப்போத எஸ்.பொ எழுதுவதுபோல் விசம் பரப்பத் தொடங்கினர். ஏதோ கைலாசபதியைவிட வித்தியானந்தன் நேர்மயானவர்கள் திறமை சான்ற கல்வியாளர் என்று எஸ்.பொ மனநேர்மையற்ற வகுத்தல்களுக்கு முயல்கிறார். வித்தியானந்தன் ஊழல்கட்கு பெயர் போனவர். தமிழ்த்தேசிய வெறியர். காங்கேசன்துறைத் தொகுதியில் கூட்டணி சார்பில் அவரை நிறுவத்தற்குக்கூட முயற்சிக்கப்பட்டது பிற்காலத்தில் யு.என்.பி வந்து ஒரு சில மாதம்களிலேயே இவர் கைலாசபதியின் இடத்துக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிபார்சில் யாழ் பல்கலைக்கழ வளாகத்துக்கு நியமிக்கப்பட்ட கதையை எஸ்.பொ எழுதவில்லை. தமிழர் கூட்டணி ஆளாக யு.என்.பி இன் ஆட்சியில் வித்தியானந்தன் யாழ் பல்லைக்கழகப் பதவிக்கு நுழையவில்லை என்று எஸ்.பொ மறுக்கட்டும் பார்க்கலாம். அவர் யாழ் வளாகத்தலைவராக இருந்த சமயம் செய்த ஊழல்கள் முறைகேடுகள் ஒரு தொகை. அது அமுக்கப்பட்டது. அவர் இரண்டாம் தடவை உபவேந்தர் பதவிக்க நிற்க முயன்ற போது ஆயுத இயக்கங்கள் அவர் ஊழல்களை அறிந்து அவரை நேரில் எச்சரித்ததே போட்டியிடாமல் செய்தார்கள். வித்தியானந்தன் ஒரு கல்வியாளருக்குரிய பண்பாடு இல்லாத மனிதர் அத்தோடு சாதி பார்ப்பவர். அத்தோடு வகுப்பில் தன் பெயருக்கு முன்னாலும் “சுனா” பின்னாலும் “சுனா” என்று இரட்டை பாலியல் அர்த்தத்தில் பேசுவார். தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதிகள் பற்றிக் கற்பிக்கும்போது மாணவிகள் பக்கம் பார்த்துக்கொண்டு “நாம் இப்போது புணர்வோமா”? என்று இரட்டைஅர்தத்தில் பச்சை பச்சையாய் கேட்பவர். தனக்குத் தேவையான ஆட்களுக்கு முக்கியமாக மாணவிகளுக்கு சோதினையைப் பற்றி யோசியாதை பேப்பர் திருத்தும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சலுகைகள் செய்யவர்.

வித்தியானந்தனை ஒரு தமிழரறிஞர் என்று கூறக்கூட முடியாது அவர் சிறந்த பேச்சாளர்கூட அல்ல அவர் தனிநாயகம் அடிகளுடன் ஒட்டித்திருந்ததால் வித்தியானந்தன ஒரு தமிழறிஞர் என்ற ஒரு பார்வை ஏற்பட்டது அவர் ஒர மலிவான தமிழ் தேசியவாதி மட்டுமே கைலாசபதி தேசியவாதியாக இல்லாமைக்காக ஒரு இடதுசாரியாக இருந்தமைக்காக எஸ்.பொ ஆல் கண்டனம் செய்யப்படுகிறார் தமிழ்த் தேசியவாதியாக புலிப்பாசிஸ்ட் ஆதுரவாளராக எஸ்.பொ கிடந்து அழுந்துவதுபோல் தேசியவாததுர்நாற்றம் பிடித்தவராகப் பரிமாணம் எடுத்ததுபோல கைலாசபதியும் மாறியிருக்க வேண்டுமா? மாறத் தவறியது குற்றமா? பல் பத்து வருடம்களாகப் பல்கலைக்கழகங்களில் வித்தியானந்தன் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் உபவேந்தர்கள், பேராசியர்கள் பதவிகளில் இருந்த செழித்திருக்கிறார்கள். யு.என்பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்று சகல கட்சிகளாலும் பதவிகளை எட்டினார்கள். ஆனால் தமிழ்ப்பகுதியில் கைலாசபதி போன்ற இடதுசாரி உபவேந்தராக வந்ததை சகியாது தமிழ்த்தேசியவாதிகள் வெறிகொண்டாடினார்கள் சுதந்திரன் ஆசியர் இன்றைய எஸ்.பொவின் அரசியல் தரத்தில் அன்றே கiலாசபதியைத்திட்டிக் கொட்டினர். தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் உபவேந்தர்களாக விரிவுரையாளர்களாக பெருமளவு சிங்கள இடதுசாரிகள் இருந்தனர். இவர்களை எதிர்க்க சிங்களத் தேசியவாதிகள் கூட தமிழ்த்தேசியவாதிகள் போல் துணிந்ததில்லை. 1970களில் சகல பல்கலைக்கழகங்களிலும் தென்னிலங்கையில் சமசமாஜிகளின் மாணவர்கள் அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்தன. 25வீதம் வரையிலான பேராசிரிகர்ள் இடதுசாரி சிந்தனை படைத்தவர்களாக இருந்தனர் எனக் கொள்ள முடியும் யு.என்.பி சிறலங்கா சுதந்திரக்கட்சி போன்ற இனவாதக் கட்சிகள் அப்போ பல்கலைக்கழக்ங்களில் நுழைய முடியாது தேசியவாதிகள் துரத்தப்பட்டனர். பல்கலைக்கழகம்கள் இடதுசாரிகளின் கோட்டைகளாக இருந்தன. அங்கு “லோக்கல்” எனப்படும் இடம்களில் வாரவாரம். மாக்சிய வகுப்புகள் நடத்தப்பட்டன. விஞ்ஙானம், மருத்தவம், கலைப்பீடமாணவர்கள் இதில் பெருமளவு பங்கெடுத்தனர். இக்காலம்களில் பொலிஸ் நுழைய முடியாதபடி சட்டம்கள் நிறைவேற்றப்பட்டன. அமிர்தலிங்கம் பல்கலைக்கழக மாணவராக இருந்த சமயம் அங்கு இந்தியத் தமிழ்நாட்டையும் இலங்கையின் வடக்குக் கிழக்கையும் ஒன்றிணைத்து பரந்த தமிழ்நாடு அமைக்கும் இலட்சியத்தைப் பேசிவந்தபோது அது இடதுசாரிகளால் தகர்த்தெறியப்பட்டது அத்தகைய இனவாதத்துக்கு எதிராக பாரம்பரியம்கள் இலங்கைப் பல்கலைக்கழங்களுக்கு இருந்தது.

கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் யாழ் வளாகத்துக்கு வந்தது முறைதவறிய வழிகளில் என்று நிருபிக்க முயலும் எஸ்.பொ கைலாசபதிக்குப் பயந்து யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னுடன் தொடர்பு கொள்வதில்லை என்று எழுதுகிறார். எஸ்.பொ யார் கைலாசபதி கால யாழ் வளாகத்துள் நெருப்பமானவர்கள் எஸ்.பொவுக்கு இருந்தார்களா? யார் யார் கைலாசபதிக்கு பயந்து நடுங்கி கதைக்காமல் இவருடன் தொடர்பை அறுத்தனர் என்று எஸ்.பொ திருவாய் மலர்வாரா? டானியல் போன்று எஸ்.பொவுக்கு எந்த மரியாதையும் எழுத்து சார்ந்த யாழ் வளாகத்துள் இருந்தது இல்லை. வித்தியானந்தன் காலத்தில்கூட இடதுசாரிப் பலம் யாழ்வளாகத்துள் அதிகமாகவே இருந்தது. அப்பிடியிருக்க எஸ்.பொவுக்கு மரியாதை தர யார் அங்கு இருந்திருப்பார்கள். எஸ்.பொ அக்காலத்தில் இன்றுபோல் கைவாசபதி பற்றி பேசியது எழுதியது கிடையாது. யாழ் வளாகத்துள் கைலாசபதி உருவாக்கிய மாணவர்கள் பெருமளவு இருந்தனர். எஸ்.பொவை ஒத்தவர்கள் கருத்தல்லாத தனிப்பட்ட ரீதியில் கைலாசபதி எதிர்த்தார், பழிவாங்க வேண்டி சேர்ந்து அலைந்தார் என்பதெல்லாம் எஸ்.பொவின் கற்பனைக் கண்டெடுப்புகள் மட்டுமே எஸ்பொ போன்ற பிறவிகளை விட்டு அவர் மௌனமாக எட்டியிருக்க மட்டுமே விரும்பனார். இநதிரபாலா நூஃர்மான் போன்றவர்கள் கைலாசபதியின் முயற்சியால்ததான் யாழ் வளாகத்துக்கு வந்தனர் என்பது என்ன பெரும் பிழை?. அவர்களைவிடத் திறமைசாலிகளை தவிர்த்துவிட்டு இவர்களை யாழ் வளாகத்துக்கு கைலாசபதி கொண்டு வந்தார் என்று எஸ்.பொ ஆல் நிறுவ முடியுமா?

வித்தியானந்தன் கால யாழ் வளாக ஊழல்கள் ஆயுத இயக்கங்கள் தலையிடுவது வரை வெளியே வந்தன. புலிகள் தவிர மற்றைய இயக்கங்கள் வித்தயானந்தனுக்கு எச்சரிக்கை விடுமளவு சென்றன.புலிப்பாசிஸ்டுகள் யாழ்ப்பாணத்தில் செல்வாக்குப் பெற்றபோது உபவேந்தராக இருந்த துரைராஜா சிவில் என்ஜினியர் துறை விரிவுரையாளர் ஆவார். இந்தத்துறை யாழ் வளாகத்தில் இல்லாதபோதும் இவர் தமிழ் தேசியவாதி என்பதால் உபவேந்தராக்கப்பட்டார். ரஜனி திரண்கம் புலிகளால் கொலையுண்ட போது துரைராஜா முதல் சிவத்தம்பி வரை தமது திருவமுது. செய்யும் உறுப்பை நிரந்தரமாக மூடியே வைத்திருந்தனர். இவைகளை ஏன் எஸ்.பொ எழுத்துக்கள் பொருட்படுத்தவில்லை. துரைராஜாதான் புலிகட்கு நிலத்தின் கீழான சுரங்கக்கட்டிடம்களை அமைத்துக் கொடுத்தவராவர். முஸ்லீம்களை யாழ்குடாநாடடில் இருந்து புலிகள் வெளியேற்றியபோது யாழ் வளாகத்தின் எந்தப் போரசியரும் அதை எதிர்க்கவில்லை அப்போது யாழ் வளாக விரைவுரையாளராக இருந்த நூஃர்மான் 72 மணி நேமாக கால்நடையாக நடந்து ஆணையிறவு வரை வந்தே யாழ்குடா நாடடைவிட்டு வெளியேறினார். யாழ் வளாக மாணவர்கள் விமலேஸ்வரன், விஜிதரன், கவிஞர் செல்வி உட்பட பலரைக் கடத்திக் கொள்றவர்கள் யார்? இவைகள் ஏன்.பொவின் செவிப்பறைக்குத் தூரமாய்ப் போயின? தமிழனத்தை விற்கிறார்கள் வாங்குகிறார்கள் என்று எழுத்தில் அலட்டும் எஸ்.பொ புலிசார்ந்த தமிழ்ப்பாசிசத்தை பேசாதொழித்து இடதுசாரிகதை;தாக்குவது நான் உங்கள் பக்கம் என்று யாருக்கு சமிக்ஞை தர?


கைலாசபதி

வரலாற்று உணர்வுடன் அரசியல் ஆய்வுக்குப் போக்முடியாத எஸ.பொ போன்ற வலதுசாரிகள் எப்போதும் இழிவார்ந்த தனிமனித்தத்தாக்குதலுக்கே செல்வார்கள். புலிகள் ஆயுதப் பங்கரவாதம் தனிமனிதர்களை நோக்கிப் புரிகின்றார்கள். என்றால் எஸ்.பொ ஒத்த பிறவிகள். எழுத்துப் பயங்கரவாதத்தை துணையாய் கொள்கிறார்கள் எழுச்சியற்ற காலம்களில் இவரையொத்தவர்கள் தம் அறியாமையின் உச்சம்களைத் தொடுவார்கள். கைலாசபதிக்கும், எஸ்.பொ வுக்குமான பிரச்சினை ஏதோ அரசியல் தத்துவப்பிரச்சினை என்று நாம் புரிந்துகொள்ள முயல்வது கூட எஸ்.பொ.விடம் இல்லாததைக்கூறி அவரை உயர்த்துவதாகிவிடும். உண்மையில் அவர்தானே பொருளறியாத சொற்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். மனிதத்துன்பத்தின் அடிப்படைகளை முதலாளியச் சிந்தனைவாதிகள் பேசுவதில்லை மாறாக தம்சொந்தக் கற்பனா வாதத்தை பின்தொடர்கிறார்கள். சமுதாய அரசியல் பிரச்சனைகளை மேலோட்டமாய் புரிந்துகொள்வதுடன் பெரும்பான்மை மக்களிடம் நிலவும் இது சார்ந்த கவனமின்மையை இவர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்கள் அறிவார்ந்த கருத்துக்களில் இருந்து தப்ப இது வாய்பாகிவிடுகிறது.

கைலாசபதியை அவரது கருத்துக்கள் ஊடாக எஸ்.பொ நெருங்க முடியவிலைலை அந்த பலவீனத்தை ஈடுகட்ட கைலாசபதி தனிமனித ரீதியில் அனுகப்படுகிறார். அவரது குணநலன்கள் மோசமானது பழியெடுக்கும் மனிதர் என்ற எழுத்து நிரூபணங்கட்கு முயற்சிக்கப்படுகிறது. விமர்சன அனுகுமுறை இல்லாதபோது குற்றம்கள் தொகையாய கூறப்படுகிறது. எல்லாக்க கட்டுகளையும்களையும் அறுக்க முயலும் சுதந்திரமான இலக்கியவாதியாய் தோன்றும் எஸ்.பொவுக்கு தெளிவான அரசியல் விளக்கம் இல்லையாதலாய் எந்தத் திசையிலும் அவருக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்தது. எதிலும் ஒட்டாதவர் என்ற நிலை சந்தர்ப்பவாதத்துக்கு அருமருந்தாக இருந்தது. கைலாசபதி ஒரு மாவோயிஸ்ட், ஸ்டாலினிச அரசியல் நோக்கு நிலைகளாலும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். எனனும் பொதுவான மாக்சிய இயங்கியல் பார்வை அவரிடமிருந்தது. ஒரு இலக்கியத்தின் சமூ, அரசியல் காரணிகளை பெரும்பாலும் சரியாகவே மதிப்பிட்டார். வர்க்கச் செயற்பாடுகளை கண்டுணர்ந்தார். இத்தகைய கொடுப்பனவுகள் எஸ்.பொவுக்கு வாது தத்துவத்தை சினேகிக்க இவருக்கு தெரியாது. சமூக உறவுகளைக் கணடுணரத்தக்க உணர் கொம்புகளற்ற மனிதர். எஸ்.பொ தனித்துவம் பற்றிய அரசியல் அலம்பலகளில் தொடங்கி ராதாகிருஸ்ணன், காந்தி, விவேகானந்தர் என்று அலைந்தார். எல்வோரையும் திக்குத்திக்காக தேடி ஒன்றாகப் பிசைந்தார். இதைத்தான்; தமிழ்நாட்டில் ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகளும் செய்தனர்.
கைலாசபதி நீண்டகாலம் வாழாத மனிதர் அவர் 49 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் 15 வயதிலே எழுதத்தொடங்கினார் எனத் தெரிகிறது. இன்று அவர் எழுதிய எழுத்துகள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டன அவர்தன் காலத்தின் தமிழ்பரப்பு எழுத்துகட்கு மட்டுமல்ல தனக்கு முந்திய கருத்துக்களுக்கும் பெரும்பகுதியாய் பதிலிறுத்தார். ஒரு பொதுப்பார்வையை உருவாக்கினார். அவர் கலை இலக்கிய ஆய்வாளர், கட்டுரையாளர், இலக்கிய நூல்களுக்கு ஆய்வு நூல்கட்கு பதிப்புரைகளை எழுதினார். மல்லிகை தாயகம், சாந்தி சரஸ்வதி தாமரை போன்றவற்றிற்கு கட்டுரைகளை எழுதினார். திறனாய்வு, தமிழ் இலக்கியம், நாவல் இலக்கியம், சிறுகதை, குழந்தை இலக்கியம், தேசிய இலக்கியம் போன்ற பல துறைகளில் அவர் ஆய்வுக் கட்டுரைகள் விமர்சனங்கள் எழுதினார். தேசியம், சாதி, பெண்ணடிமை அக்காலத்திய வளர்ச்சி நிலைகளல் இருந்து கட்டுரைகளை எழுதினார். நந்தன் கதை, அகலிகை கதை, காலம் தோறும் எய்திய பரிமாணம் மாற்றம் என்பதுவும் ஆராய்ந்தார். கைலாசபதியின் சித்தர்பாடல்கள் பற்றிய ஆய்வு தமிழ் ஆய்வுப்பரப்புக்கு புதியது. பாரதிய புதிய முறையில் அனுகப்பட்டார். சமுதாய வளர்ச்சிப்போக்கில் பாரதிமதிப்பிடப்பட்டார். சுந்திரமிபிள்ளையின் திருக்குறைளயும் மனுதர்மசாஸ்திரத்தையும் ஒப்புநோக்கி குறள் நன்று மனுதர்மம் தீது என்ற மேலோட்டமான தீர்ப்புகளை கைலாசபதி ஒப்பவில்லை. வேறோரு சமதாய உற்பத்திநலையில் தோன்றிய ஒன்றை மற்றோரு சமூகச்சூழலில் நிதிக்குரிய நூல்களாக கொள்ள முடியாது என்பதை மாக்சியப் பொருள் உற்பத்தியின் வளர்ச்சி நிலையில் நின்று விளக்க கைலாசபதிக்கு முடிந்திருக்கிறது.

வீரயுகம் பற்றிய கைவாசபதியின் ஆய்வுகள் இன்றுவரை முக்கிய முடையதாகவுள்ளது. அதைத்தொடர்ந்த விபரித்து ஆய்ந்து வளர்த்துச் செல்ல எவரும் தோன்றவில்லை வீரயுகத்தில் அரசரும் புலவரும் இணைந்து தமிழ் வளர்த்தனர். அரசர்கள் புலவர்கட்கு வரையாது வாரிவழங்கினா. புலவர், பாணர், விறலியர். செழித்தனது தமிழ்ப்பாக்களைப் பாடினர். மன்னர் போர்த்திறத்தைப் புகழந்தனர் என்ற மரபான தமிழ்த்தேசியவாதப் பெருமைமீறாத ஆய்வுகளை கைலாசபதி தாண்டிச்சொன்றார். அரசர்-புலவர் உறவின் சமுதாயக் காரணிகளைத் தேடினார். ஐரிஸ், ஜெர்மனிய, கிரேக்க மன்னர்களும் புலவர்களை ஆதரித்தனர். இதை தமிழ் சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டு புலவர்கள் எப்படி இன்றைய மக்கள் தொடர்புச் சாதனங்களாக அன்று விளங்கியதையும் அன்றைய மனித அறிவு செய்யுள்களிலே சேம்க்கப்பட்டுள்ளதை சொன்னவர் கiலாசபதி. தமிழ் மொழியில் திருக்குறுள் உட்பட பல இலக்கியம்கள் வாய்மொமி இலக்கியமாக இருந்து தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியம்களிலே பெரும் புலவர்கள் எனப்பட்டோரின் நூல்களில் கூட நூற்றுக்கணக்கான பிற புலவாகள் பயன்படுத்திய சொற்கள், சொற்றொடர்கள் மூலக்கருத்துக்கள. உவமை, உருவகங்கள் ஒன்றாக இருந்தமை சங்ககாலச் செய்யுள்கள் வாய்மொழியாக நிலவிய்து என்பதற்கு அடையாளம் பல்வேறு காலகட்டத்துக்குரிய வாழவியில் செய்திகள், கதைகள், நம்பிக்கைகள், பாடல்கள, தொகுதிகளில் கலந்தகாணப்பட்டது என்பது அவை பல தலைமுறைச செய்திகள, பழைய மரபுத்தகவல்கள், செவிவழிச் செய்திகள் என்பவை உள்ளடக்கியவை என்பதை கைலாசபதி நிறுவினர்.

இதிகாசம்கள் ஒரு கவியால் படைக்கப்படாது, வழி வழியாய் மக்களால் படைக்கப்பட்ட என்ற கருத்துக்கள்கைலாசபதி காலத்தில் தொட்ங்கியது. திருக்குறள் உலகநீதி நூல், கம்பன் உலகக்கவி, என்ற மரபான மிகைபுணர்வுகள் உண்மை ஆய்வு முறைக்கு முன்பு தம்மை நிரூபிக்கும்படி கேட்கபட்டன. திருக்குறளில் மனித வாழ்வுக்குரியதான யாவும் கூறப்பட்டுவிட்டன என்ற வாதம்களை திருக்குறளின் தோற்றம் சமுதாய நிலை, பொருள், உற்பத்தியின் வளர்ச்சிக்கட்டம் என்பவற்றும் சேர்த்திணைத்து ஆயவும், வர்க்க சமூகத்தில் தோன்றிய நூல்கள் எப்படி எக்காலத்துக்கும் மனிதப் பொதுவாகவும் ஆகமுடியும் என்று கேட்கக்கூடியவாகள் தமிழ் பரப்பில் கைலாசபதிக்கு பின்னே தோன்றினர். எழுத்துக்களின் சரித்திரக்காரணிகள் எஸ்.பொவுக்கு தட்டுப் படுவதில்லை என்பதுடன் அவருக்கு போதிய நூல் பயிற்சியும் கிடையாது அவரின் தேடல்கள் தனிமனித ஈடேற்றத்தின் எல்லைக்குட்பட்டவை வீரயுகம் பற்றிய கைலாசபதியின் ஆய்வு, வீரயுகம் பற்றிய விசாரனைகள் புதிய வர்க்க சமூகம் தோன்றுவதும் அரசு. இராணுவம், சட்டம், நீதிமன்றம் போன்ற செய்ற்பாடுகளின் தொடக்கத்தையம் காட்ட முயன்றது. வீரயுகத்தில் வீரமரணம், மரண்த்துக்குப்பின்பு, கன்னிப் பெண்கள், மது, கழி கொண்ட வாழவு காத்திருப்பதான கற்பனைகள் இன்றும் கிருஸ்தவ, இஸ்லாமிய மததீவிர வாதத்தில் நிலவுவதைம் ஜெர்மனிய பாசிசம் முதல் புலிப்பாசிசம் வரையில் வீரமரணம் பற்றிய கதையாடல்கள் நிலவுவதையும் நாம் காணமுடியும். மாவீரராக மடியாதவர்கள் கோழைத்தமிழர்கள் என்ற புலிப்பாசிஸ்டுகளின் வாதம் போரிய விழுப்புண் ஏற்றுமடியாதோர் வீரசுவர்க்கம் அடையமாட்டார் என்ற வீரயுகக் கதைகளின் மறு சுலோகம்தான்.

புதுக்கவிதையை கைலாசபதி எதிர்த்தார் என்று தமிழ்நாட்டிலும் புகலிட இலக்கியவாதிகளும், திரும்ப திரும்ப ஒருவர் சொன்னதை மற்றவர் கேட்டுச்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கைலாசபதி என்ன அடிப்படையில் அதை மதிப்பிட முயன்றார் என்ற விளக்கமில்லை எப்படி சிறுகதை வடிவங்கள் நவீன முதலாளிய சமூகத்துக்குரியதாக இருந்ததோ விவசாய சமூகங்களின் பெரும் காப்பியங்கள் இதிகாசங்களுக்கு மாற்றான விரைவான இலக்கிய நுகர்வுக்கான இலக்கண மற்றும் மரபுகளை மீறியதாக இருந்தது என்ற பொதுப் போக்ககை கைலாசபதி உணர்ந்திருந்தர். இந்திய சினமாப் படம்கள் மூன்று, மூன்றரை மணிநேரம் ஓடும் படம்களாக இருக்க மேற்குலகப் படம்கள் இரண்டு மணிநேரம் சிலசமயம் ஒன்றரை மணித்தியால படம்களாக ஏன் உள்ளன என்ற காரணம் விவசாய சமூக மொன்றுக்கும் நவீன முதலாளிய நுகர்வுச் சமூக்தினரும் ரசனை மற்றும் விரைவான உணர்வுத்தன்மைக்குக் உதாரணமாகும். புதுக்கவிதைகள் நம்பிக்கையழிவு போன்ற தனிமனித அவலங்களை வெளியிடுவதையே அவர் கண்டித்தார். அவை முதலாளிய சமூக நிலைமைகளின் அழுகையாக இருந்தது. கைலாசபதி சோசலிச நிகிழ்சிப்போக்கில் புதுக்கவிதை சமுதாய வகைப்பட்ட தன்மைகளை உடையதாக இருக்க வேண்டும் என்றும் தனிமனித வாதத்தை வெளியிடுவதை அவர் வரவேற்கவில்லை என்பதும் என்ன தவறு தமிழ் பரப்பில் புதுக்கவிதை புகுந்தபோது, போலித்தன்மை, புதிர்போடும் இயல்பு இவைகட்கு வெளியே கருத்துத்தெளிவு, சமுதாய மனோபாவம் எதிர்க்காலம் சார்ந்த கருத்துக்களையுடைய வானம்பாடிக்கால் கவிதைகைளை அவர் ஏற்றார். கவிதையின் உள்ளடக்கம், நோக்கு நிலையில் அவர் கவனம் செலுத்தினார். முதலாளிய இலக்கியம்கள் சமுதாய மனிதர்களை தனிமனிதர்களாக குறுக்கிவிடுகிறது. அவரவர் சோலியை அவரவர் பார்க்கவேண்டும் என்ற தனிமைப்பட்ட போக்குகள் வளர்கின்றன. எனவே இலக்கியம்களும் அதையே பிரதியெடுக்கின்றன புதுக்கவிதையில் மேற்குலகச் செல்வாக்கு இருந்ததை கைலாசபதி காட்டினர் என்றால் அது மேற்கத்தைய தொழிற்துறைச் சமூகத்தின் இலக்கிய நுகர்வு தமிழ் பரப்பு மத்தியதர வர்க்க இலக்கிய ரசனையுடன் உறவு கொள்வதை அவர் கண்டிருக்கக்கூடும்.

எஸ்.பொ வின் மற்றொருவாதம் கைவாசபதி இலக்கியம் படைக்கவில்லை. அவர் இலக்கிய வாதியுமல்ல எனலே இலக்கியம்களை விமர்ச்சிக்க உரிமையில்லை என்பதாகும். இலக்கியம் விமர்சனம் பற்றி இவ்வளவு சின்ன அறிவு ஒரு இலக்கியவாதி எனப்படுபவருக்கு இருக்க முடியுமா? என்று நாம் நிரம்ப ஆச்சரியப் படலாம். மாக்ஸ், ரொட்ஸ்கி, பிரான்ஸ் மேரிங் போன்றவர்கள் இலக்கியவாதிகள் அல்லதான் ஆயினும் சிறந்த இலக்கிய விமர்சகர்கள் ரொட்ஸ்க்கு “இலக்கியமும் புரட்சியும்” மதிப்புமிக்க நூல் இருக்கிறது. சிறந்த இலக்கிய விமர்சகராக இருக்க அவர் சிறந்த இலக்கியவாதியாக இருக்கத் தேவையில்லை இலக்கியவாதியைவிட விமர்சகருக்குத்தான் அந்த இலக்கியம் தோன்றிய சமுதாயப்புலம் வர்க்க ஆசைகள், தேவைகள் புலப்படும். இலக்கியம் என்பது சமூகம் சார்ந்தது சமூகத்தின் வளர்ச்சி முன்னேற்றத்தைப் பொறுத்தே இலக்கியமும் ஆற்றலும் கருத்து நிலையும் இருக்கும் கற்காலத்தில் சிலப்பதிகாரம் தோன்றியிருக்க முடியாது. மத்திய காலத்தி சமூக நாவல்களும், துப்பறியும் கதைகளும் தோன்றியிராது. எடும் எழுத்தாணியும் தோன்ற முன்பு தட்டச்சு இயந்திரம் தோன்ற நியாயம் இல்லை. சமூகத்தின் உற்பத்தி, பொருளாதாரம் ஆற்றல். மக்களுக்கு கிடைக்கும் உழைப்பு, ஒயவு என்பவைகளைப் பொறுத்தே இலக்கியத்தின் தரம், நுகர்வு என்பன இருக்கும் சேக்ஸ்பியரையும், கம்பரையும் படைத்த சமூகத்தின் அறிவு எல்லைக்கு உட்பட்டே அவர்களது படைப்புகளும் இருக்கும். காலத்தை மிஞசியவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். ராதாகிருஸ்ணன், விவேகானந்தரை அடிக்கடி எஸ்.பொ உதாரணம் காட்டும்போது அவர்கள் உலகமயமாகும் இந்தியாவில் இவர்களையார்தான் தேடப்போகிறார்கள்?

“வீஞ்ஞானப் பகுப்பாய்வு என்றெல்லாம் சொல்லாடல் செய்து மிரட்டுவது சத்தியத் தேடல் முன்பு நின்று பிடிக்காதாம்” சத்தியத்தேடல் என்றால் என்ன? எஸ்.பொ கூறும் காட்டு மனிதன் அப்பய்யாவைப் பின்பற்றுவதா? காந்தியாவதா? ராதாகிருஸ்ணன் ஆவதா? அல்லது பெண்களின் முலைகளையும், பாலுறுப்பையும் ஆய்வதா? எது சத்தியத் தேடல்? எஸ்.பொ போன்ற மத்தியதர வர்க்க வாழ்வும் வரும்படியும் உள்ளவர்கட்கு செமியாக்குணம் முத்தி சத்தியத்தேடல் பிறக்கலாம். ஆகால் ஏழைகட்கு உழைப்பாளர்கட்கு சத்தியத் தேடல் அக உலக உலாத்தல்கட்கு நேரமும் இடமும் இல்லை வரம்பற்ற போலிக்கற்பனை கட்டுப்பொழுது கிடையாது. அக உலகத்தரிசனம் தேடி அலைய மார்க்கங்கள் இல்லை. உடல் உழைப்பில் ஈடுபடாத வகுப்பறைகளில் இருந்து மேசை கதிரைகளுக்கு பாரமாய் இருந்து சட்டாம்பித்தனம் விடும் எஸ்.பொவுக்கு சத்தியத்தேடல் வரலாம் அல்லது மாலைநேர மயக்கங்களில் யதார்த்தத்துக்கு ஒழித்தோடி அக உலகில் பதுங்கும் பலமற்றவர்கட்கு சத்தியத்தேடல் உதவலாம். எஸ்.பொ சத்தியத்தைத் தேடிக் கலைத்துக்கொண்டா நைஜீரியாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் குடியேற்ப்போனார். பொருளாதாரம். வாழக்கைத்தரம், சமூகப்பாதுகாப்பு என்பன அவரின் சத்தியத்தேடல் என்ற புலுடாவைவிட பலம் என்று காண்பிக்கவில்லையா?

நுண்திறமற்ற எஸ்.பொ புகழ்ப்பேராசை கொண்ட எஸ்.பொ தமிழ்மொழியில் உள்ள அத்தனை இழிசொற்களைமயும் பாவித்து கைலாசபதியை வைதாகிவிட்டது. சிங்கள அரசு, சிங்கள அரசு எனும் எஸ்.பொ ஏன் சிறிலங்கா அரசின் சாகித்திய மண்டலப்பரிசுக்கு இந்த அலை அலைந்தார்? இப்பொ பாசிஸ்ட் பிரபாகரனிடம் ஆசீர்வாதத்துக்கு அலைகிறார். அக்காலத்தில் அவர் ஆதிரிக்காத கட்சிகளா? அத்தகைய தருணம்களில் இவரது சத்தியத்தேடல் ஒய்வுக்கால் விடுமுறையில் சென்றிருந்ததா? தான் ஒரு காலத்தில் இருந்த இடதுசாரி அமைப்பின் சரி. பிழைகளுக்கு இவரும் பொறுப்பு இல்லையா? அது சார்நத விமர்சனம் செய்ய சத்தியத் தேடல் தடையாகுமா? கைலாசபதிக்கு தமிழ்நேசிப்பு இல்லையாம். ஆக அவர் இடதுசாரியாக இருந்தது குற்றம்ஃ தமிழ்த்தேசியவாதியாக இல்லாது தவறு அப்படியா? இடதுசாரியாக இருந்தே கைலாசபதி தமிழ் பரப்பு எழுத்துக்கு செய்தது மிகப்பெரும்பணி அது எஸ்.பொ போன்ற தமிழ்த்தேசியவாத பிரதேசம்களில் சஞ்சரிப்பவர்களின் புத்திக்க தட்டுப்படாதவிடயமாகும்.

இடதுசாரி என்று கூறுமுடியாத எழுத்தாளர் நந்தி நவீன தமிழ் இலக்கியத்துக்கும் நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஏற்ற மளித்தவர் கைலாசபதி. பள்ளிப்படிப்புக் குறைவு சாரணமாக புறப்பணிக்கப்பட்டவர்களின் ஆற்றலை வெளிக்கொண்ர்ந்தவர் கைலாசபதி என்று கூறியமையும் எஸ்.பொ தனது வழிகாட்டிகளால் ஒருவராய் காட்டும் கார்த்திகேயன் “எனது மாணவர்களில் சிலர் மேல் லோகம் செல்வதற்காக வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களின் கரம்களில் தேவாரம் திருவாசகம் இருக்கும் அவர்களில் மாறுபட்ட வலு சுட்டியான ஒரு மாணவன் மானுடவியல். சமூக விஞ்ஞான புத்தகங்களை வைத்துக்கொண்டு தடுமாறினான். அவனுக்கு நான் அதைப் புரியும் படியாக விளக்கி வைத்தேன். அவர் பிறகு பூலோகத்தைப் பார்க்கத் தலைப்பட்டான். கூடவே கொம்யூனிச சிந்தாந்தவாதியானான் அவர்கள் வானம் பார்த்த பூலோகவாசியாக இவனே பூலோகம் பார்த்த சமூக விஞ்ஙானியானான்” அந்த மாணவன் கைலாசபதி என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு ஜீவாவை மதிப்பதாய் குறிப்பிடும் எஸ்.பொ தமிழ் இலக்கிய ஆய்வில் ஜீவாவைவிட ஆய்வுப்புலம் கொண்ட கைலாசபதியை மறுப்பது புறநிலை உண்மையை அவமானப்படுத்துவதே.

தினகரனும் கைலாசபதியும்.


தினகரன் சிங்கள முதலிhளியினுடையது. அதில் கைலாசபதி வேலைபார்த்தார் எனும் எஸ்.பொ ஏன் அந்தச் சிங்கள முதலாளியின் பத்திரிகையில் தினகரன் ஆசிரியராக ஆசிரியராக வர ஒடித்திருந்தார்.

இவரும் தளையசிங்கமும் எந்தத் தகுதியைக் கொண்டு அதற்கு முயன்றார்கள். தான் தினகரனில் நுழைய விடாமல் தடுத்தது கைலாசபதிதான் என்று முன்பு சொல்லி வந்தவர் இப்போ வி.பொன்னம்பலம் தான் தன் தினகரன் ஆசிரியர் நியமனம் கிடைக்கவிடாமல் தடுத்ததாக வரலாற்றில் வாழதலில் எழுதியுள்ளார். இவர் தொடர்ச்சியாக எழுதிய வீரகேசரிப் பத்திரிகை அச்யோட்ட நியூஸ் பேப்பர் நிறுவனமும் சிங்கள முதலாளியுடையது தானே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் அதில் பங்கு இருந்ததே அப்படியாயின் சிங்களவர்களின் பத்திரிகையில் இவர் என் எழுதப்போனர். ஏன் எஸ்.பொ சிங்கள அரசின் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அரச பாடநூல் திணைக்களம் எல்லாம் என்ன தமிழ் அரசின் அங்கமா? தேசியத்தலைவரின் கட்டுப்பாட்டிலா இயங்கியபோது அதில் எஸ்.பொ வேலைபார்த்தார். சிங்கள அரசின் இலவசக்கல்வியும், மருத்துவமும் கூப்பனரிசியும் இல்லாமல்h எஸ்.பொ வளர்ந்தார், படித்தார். எம்.சி.இன் மச்சான் என்று பெருமைப்படும் ஒரு மனிதருக்கு இப்படி தொட்டதெற்தெல்லாம் தமிழ்ன், சிங்களவன் இனம் சார்ந்த பேதம்களில் புக முடியுமா? இந்த இடத்தில் எம்.சி போன்றவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் இடதுசாரிகளாக வாழ்ந்த சுவடுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

கைலாசபதி தினகரனில் இடதுசாரிகளை மட்டுமே ஆதிரித்தார் என்று பல வருடங்களாக எழுதிவந்த எஸ்.பொ இப்போ தினகரனை கைலாசபதி முஸ்லீம்களின் பத்திரிகையாக்கி விட்டதாய் கூறுகிறார். ஏன் தேசியவாதிகளுக்கு சுந்திரன், தமிழ்ன், உதயசூரியன் என்ற பத்திரிகைகள்இருக்க உரிமைகள் இருக்குதெனில், முஸ்லீம் எழுத்தாளர்கள் தினரகனில் அரசியல், இலக்கியம் எழுதுவது என்ன தவறு. கிழக்கு முஸ்லீம்கள் மட்டுமல்ல தென்னிலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழில் எழுதத் தொடங்கியது இலங்கைத் தமிழ்ப்பரப்பு எழுத்துக்கு என்ன வகையில் நட்டம் சிங்களவர்களை ஒதுக்க முடிந்து முஸ்லீம்களையும் பரித்துப் பார்க்கும்.

அரசியல் ஊநோய்க்கு எஸ்.பொ ஆட்படுகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த தினகரன் விழாவில் மாட்டுவண்டி சவாரி, தமிழ்விரிக்கள், நாடகம் என்கன கைலாசபதி காலத்தில் நடத்தப்படத் தொடங்கியமை கூட தினகரனை யாழ்ப்பாண மக்களிடம் எடுத்துச்செல்ல கைலாசபதி கையாண்ட தந்திரமாகவே எஸ்.பொவுக்கு படுகிறது. அக்காலத்தில் தினகரன் விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினாhகள். அரசியல் கூட்டங்ளுக்கு வெளியே கோயில் திருவிழாவுக்கு மாற்றாக ஒரு அத்தகைய பெரிய விழாவை தமிழ் மக்கள் கண்டதில்லை. மாட்டுவண்டிச் சவாரி மிகவும் அற்புதமாக மக்களால் வீரும்பப்பட்டது. தினகரன் விழா ஒரு மக்கள் திருவிழாவாக நடந்தது. தமிழராய்ச்சி மாநாடு எல்லாம் பின்னால் வந்த சங்கதிகளாகும். அரசியலுக்கும், மதத்துக்கும் வெளியே நடைபெற்ற இந்த விழாத் தொடங்கிமைக்கு கைலாசபதிதான் பொறுப்பு, கைலாசபதி காலத்தில் தினரகன் 10 மடங்கு விற்பனை அதிகரித்தது என்றால் ஒரு தொகை சிறுகதைகள், விமர்சனம்கள், ஆய்வுக்கட்டுரைகள், வாதம்கள் நடத்தப்பட்டன. சவாரித்தம்பர், சின்னக்குட்டி போன்றவற்றக்காகவே தினகரன் பார்க்கம் ஆட்களும் இருந்தனர். பெருமளவு இளம் வாசகர்கள் தாய்மொழி மூலம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்த காலப்பகுதி அது அப்போ தைப்பொங்கலை “உழவர்விழர்” என்று ஆக்கியவர்கள் இடதுசாரிகள் தான் யாழப்பாண மக்களிடம் தினகரன் போகக்கூடாது என்று சட்டமியற்ற எஸ்.பொ. யார்?

தினகரன் தனியே இடதுசாரி எழுத்தாளர்களையே ஊக்குவித்தது என்று தொடர் குற்றச்சாட்டுக்களை சுலபமாக மறுக்க முடியும். வரதர், வ.சு.இராசரத்தினம், நந்தி, கனக செந்திநாதன், எவ்.எக்ஸ்நடராசன் போன்ற இடதுசாரி அல்லாதவாகள் தினகரன் ஊடாகத்தான் அறிமுகம் பெற்றார்கள். இவர்களில் பெரும் பகுதி தமிழ்தேசியவாதிகள் ஆவர். கைலாசபதி இடதுசாரி எழுத்தாளர்களை வளர்த்தார், அது தன்னை சுற்றி ஆட்திரட்டும் வேயைல்ல மாறாக இடதுசாரிகளின் சமுதாயநோக்கு நிலை சார்ந்ததாகும். எஸ்.பொ சிறுகதை தவிர வேறு எதையும் எழுதுவது இல்லை. அதையும் தன் எதிரிகளைக் குறித்தான சிறுகதைகள் தான் அதிகம். சமுதாயப் பார்வை தன்னைய்ல்லாத வேற்று மனிதர்களை முக்கிய கருப்பொருளாய்க் கொண்டெழுவது எல்லாம் எஸ்.பொவுக்கு சாத்திமற்றொன்று . எஸ்.பொ போன்ற தம்மை நிறுவிக்கொள்ளும் கருத்துக்களையோ போக்கையோ எந்த திசை, கோணம்களுக்கம் ஒப்பிட முடியாத அளவு கைலாசபதி பெரியவர். அவரின் தவறுகள் ஒரு உணர்வு மிக்க இடதுசாரியின் தவறுகள். எஸ்.பொ கூறுவது போல் கைலாசபதி தன்னைத்திட்டமிட்டு ஒதுக்கினார் என்று எழுதுதல் சரியானதல்ல ஏன்னெனில் சமூக உபயோகத்துடன் எஸ்.பொ ஒருபோதும் எழுதியறியாதவர். மஞ்சள் பத்திரிகைத்திரத்திலான எஸ்.பொ எழுத்துக்களை எப்படி எழுத்தாக மதிப்பது எஸ்.பொ சில சமயம் சிறந்த பேச்சு மொழியைக் கையாண்டார் என்றபோதும் அவை இலக்கியத்தரம் கொண்ட எழுத்துகளுக்குள் இடம்பெறச் செய்தல்சிரம்ம்.

சிரித்திரன் சுந்திரை தினகரனில் எழுதப்பண்ணி கைலாசபதி பாவித்தார் எனும் எஸ்.பொ சிரித்திரன் சுந்தர் கைலாசபதி மீது மதிப்பு வாய்ந்தவராகவும் அவருடனான காலத்தை உயர்வாக நினைவு கூர்பவராகவுமே இருந்தார். சிரித்திரன் சுந்தரே சொல்லாத ஒன்றை வலிந்து கற்பிக்க முயலும் எஸ்.பொ மனிதர்களிடையேயான உறவை தொடர்புகளை ஒருவரை யொருவர் பாவிப்பது தேவையின் பொருட்டு உபயோகப்படுத்திக் கொள்வது என்ற சிந்தனையை எப்போதுமே கொண்டுள்ளார். மனிதர்கள் சமுதாயத்துக்காகவும் கூட்டுச் செயற்பாடுகளுக்குhவும் இணைய முடியும் என்ற நினைப்பு அவரின் முதலாளித்துவ சுயநல வளர்ப்புக்கு வாய்க்கவேயில்லை. மற்றைய மனிதர்களாக்காக தானும் தனக்காக மற்றவரஈகளும் பரஸ்பரம் ஜக்கியப்பட முடியும் என்று எண்ணத் டிதெரியாதளவு தனிமனித இரட்ட. மதலாளித்துவத்துள் ஒருவரையொருவர் பயன்படுத்துவது தனது நலன்களுக்கு கீழ்ப்படுத்தவது என்ற தனியுடமைக்கருத்தே அவரிடம் உள்ளது. தன்மீது தானே இரக்கப்படும் தன் வாழ்வைத்தானே மேதைக்குரியதாய் காட்சிப்படுத்த விரையும் எஸ்.பொ எழுத்துக்கள் நன்றாக ஆராயப்பட வேண்டியவை. இங்கு ஆசிரியர் இறந்து விட்டான் என்று எஸ். பொ.வை தப்பவிடுவது பிரதியை அவரவர் விருப்பப்படி படித்து திருப்பியுறுவது வாசிப்பு பலவிதம் என்று அமைதிப்படுவது சாத்தியமல்ல.


இந்திரபாலா
இந்திரபாலா சிங்களவர்கட்கு சார்பாக வரலாறு எழுதினார் பரணவிதான இன் ஆய்வுகைளை பின்பற்றினார் என்ற தொனிப்பட எஸ்.பொ எழுதுகிறார்.

வரலாற்றாய்வாளர்கள் எப்போதும் நிகழ்கால் அரசியல், இனவாத விருப்பங்கட்கு சாதக பாதகமாக ஆய்வுகளைச் செய்ய வேண்டும். எப்பொதும் கட்டாய்ப்படுத்தப்பட்டு வந்துள்ளர்கள் அவர்கள் இதற்கு அசையாதபோது துரோகி, மற்றய இன மத மக்களுக்கு சார்பானவர் என்று சாட்டப்படும் சம்பவங்கள் ஏராளம். ஹிட்லா ஜெர்மனியின் மிகச்சிறந்த புகழ்சாய்ந்த வரலாற்று மானுடவியல் ஆய்வுகளை செமிட்டிக் செல்வாக்குட்பட்டதாய் விட்டு பதிய ஆரியர்களை முதன்மைப்படுத்தும் வரலாற்று விரோத சரித்திரம் எழுதியமை எமது படிப்பினைக்கு விடப்பட்டுள்ளது இன, மத, தேசம் சார்ந்த பெருமை பேசும் வரலாறுகள் உண்மையான ஆய்வுக்கு முன்பு நீண்டகாலம் நின்று நிலைப்பதில்லை. தமிழ்ப்பரப்பில் சிங்கள இனவாதத்கை;காடடிக்கொண்டு தமிழர் வரலாறுகளை மிகவும் முன்தள்ளும் மூத்த முதற்குடி என்று நிருபிக்கம் தொடங்கியுள்ளது. யாழப்பாண வரலாறு எழுதிய சிற்றம்பலம் முன்பு தமிழரசுவாதி நீண்டகாலத்தைய தமிழத்தேசியவாதி. இவர்கள் வரலாறு எழுதப் புறப்படும்பொது சொந்த நிகழ்கால அரசியலுக்கு பலம்தரக்க கருத்துக்கள ஆதாரம்கள் வரலாற்றில் இருந்தது என்று நிருபணம் செய்ய முயற்சிகிறார்கள். சிற்றம்பலம் முத்ல் ரகுபதி, புஸ்பரததினம் போன்ற தமிழ் வரலாற்று விரிவுரையாளர்கள் மானுடவியல் புதைபொருள் ஆய்வு நடத்தியவர்களின் ஆய்வுகளை அவர்களது தேசியவாதப் புத்தியறிவு பெருமளவு பாதித்தது. அவர்கள் தமிழ்ர் தொன்மை சார்ந்த வலிந்த விளக்கங்கள் “தமிழர் அரசு” ஒன்று நிலவியதான 10ம் நூற்றாண்டுக்கு முன்பாக ஆதாரம்களை தேடினார். இத்தகையவர்கள் இந்திரபாலா காலத்திலும் இருந்தனர். பௌதீகத்துறைப் பேராசிரியராக இருந்த மயில்வாகனம் ஒருமுறை “தமிழ்நாடு இலங்கைக்கு மூத்திரம் வீம் துஸரத்தில் இருக்கிறது. இலங்கையில் தமிழ்ர் ஆட்சி புரிந்த வரலாறு ஆதாரம் 10ம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லை என்றால் அதைதேட வேண்டும்” எனக்கு குறிப்பிட்டார்.

இக்கூற்று தமிழ்த்தேசியவாதிகள் விருப்பைமட்டுமே அன்றய இந்திரபாலாவின் வரலாற்று ஆய்வுகளை எதிர்த்தம் கூறப்பட்டதாகும். இங்கு எஸ்.பொ போன்றவர்கள் எங்கிருந்து ஊட்டம் பெறுகிறார்கள் என நாம் கவனிக்க முடியும். யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்ட இந்திரபாலா அதன் தோறற்ம். 10, ம் நூற்றாண்டு சோழர்கால ஆட்சியின் பின்பே எழுந்தது. கன்னடர், கேரளர், தெலுங்கர், தமிழர் இவ்வாறு பலர் ஒன்று அமைத்த அரசே யாழ்ப்பாண அரசு என்று கூறினார். அதற்கு முன்பு தமிழ் அரசு, என்று குறிப்புக்கு எதுவித அதாரமுமில்லை. கரையோரம்களில் சிறு சிறு ஆட்சிப்பிரிவுகள் இரந்திருக்கக்கூடும் என்னும் அவை நிலைத்து நின்று அரசாண்டதாய் எந்தக் குறிப்புகளும் இல்லை என்றார் இந்திரபாலா அரசியல் கடந்தவராக இருந்தார். அவர் கைலாசபதிக்கு நெருக்கமாயிருந்தபோதும் இடதுசாரிக்கருத்துடையவரல்ல. ஆனால் நேர்மையான வரவாற்றாய்வாளராக இருந்தார் தன் கலாநிதி பட்டத்துக்காக “இலங்கையில் திராவிடக் குடியேற்றம்களும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும்” என்ற ஆய்வை எழுதினார். மேலும் திராவிடக்கட்டிடக்கலை, தமிழர் அதிக்குடியிருப்புகள். இலங்கைமேலான தென்னிந்தியப்படை எடுப்புகள் இலங்கையில் தென்னிந்திய வணிகர்கள் பற்றியெல்லாம் அவர் ஆராயந்தார் எழுதினார். கோட்டை அரசில் இருந்த சைவஆவையம்; எனும் நூல் 15, 16ம் நூற்றாண்டுகளில் இருந்து அழிந்ததை சிவன், விநாயகர், நாகர், காளி, முருகன், பத்தினி, கோயில்கள் பற்றி அவர் ஆராய்ந்து எழுதினார்.

“நாட்டார் வழக்கியலும் இலங்கைத் தமிழர் வரலாறும்” எனும் நூலை (ஆய்வு) எழுதியதுடன் “சிங்கள நாட்டார் வழக்கியல் கூறுகளில் உள்ள தமிழ், முஸ்லீம் மக்கள பற்றிய செய்திகள் ஆராய வேண்டும் என்றும் கூறினார். முன்பு தமிழத்தேசிய வாதிகளின் அரசியல் மேடைகளில் கைலாசபதிக்குச் சமமாய் பல சமயம் இந்திரபாலா தாக்கப்பட்டார் சுதந்திரன், இந்திரபாலாவுக்கு எதிராக இருந்தது. தமிழதேசியவாதிகள் தாமே இலங்கையில் மூத்த குடி என்ற கோசத்துக்கு வரலாற்று ஆதாவு தேடினர். உண்மையாக வரலாற்றாளர்கட்கு தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் தேவையோ அவசியமே இருக்கவில்லை வரலாற்று அறிவுத்துறை மீது எந்த ஆழுமையுமற்ற எஸ்.பொ போன்றோர் இந்திரபாலா சிங்கள இனத்துக்கு சார்பாக இருந்தர் என்கிறார்கள் இன்று அவுஸ்ரேலியாவில் வாமும் இந்திரபாலா தமிழ்த்தேசியாவாதப் பக்கம் தனது திருமுகத்தை தற்போது திருப்பியிருப்பதாய்க் கூறக் கேள்விபட்டபோதும் அவர் அக்காலத்தே நேர்மையான வரலாற்றறிஞராக இருந்தார் எஸ்.பொவுக்கு இத்துறையில் வேடிக்கை பார்க்கும் தகுதிகூட இல்லை தமிழ்ர்கள் மத்pயில் பரணவிதான என்றால் சிங்கள இனவாதி என்ற கருத்துப்படிமம் எற்படுத்தப்பட்டுள்ளது. “சாசன்வியல்” எனப்படும் கல்வெட்டியியல் துறையில் இலங்கையில் முதல் முன்னோடி பரணவிதானதான். சிங்கள இனவாதிகளும் அவரது ஆய்வுகள். குறித்து திருப்தியடைந்து இருக்கவில்லை. அவரைத்தமிழ் சார்பாக வரலாறு எழுதபவர் என்று அவரை அவர்கள் கண்டித்தனர். அவரது ஆய்வு சார்ந்த சில தவறுகள் அன்றைய ஆய்வுத்துறை வளர்ச்சிசார்ந்த தவறுகளும் மகாவம்சம் உட்பட பல மூல நூல்களை அவர் ஆதாரமாய் கொள்ள வேண்டிய கட்டாணம் இருந்ததுமாகும். தமிழ் பரப்புகளில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. பேராசிரியர் பத்மநாதன் போன்றவர்கட்கு பின்பு அவர்களை விட பிரந்த வரிவான மட்டத்தில் ஆய்வு செய்தவர் இந்திரபாலாதான். பரணவிதானவிடம் அவர் மாணவராக இருந்தார் என்ற பழிப்புகள் நிதானமுடையவையல்ல. பரணவிதான போன்று இந்திரபாலா கல்வெட்டுத்துறை ஆய்வுகளை நடத்தியவர். அனுராபுரக் கல்வெட்டு, பதவியாக்கல்வெட்டு, யாழ்ப்பாண கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டு, கந்தரோட பிராமிச்சாசனம்;. யாழ்ப்பாணச் சாசனம். கி.பி13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் செய்யுள் வடிவிலமைந்த சாசனம்கள், வெலிகம் விகாரை சோழ்காலக் கல்வெட்டகள் உட்பட பல முக்கிய கல்வெட்டுகளையும் இந்திரபாலா ஆய்வு செய்தவர். யாழ்ப்பாண மனித பண்பியல் பீட முதற் பீடாதிபதியாகவும் வரலாற்றபு பேராசிரியாராகவும் இந்திரபாலா இரந்தார்.

இந்திரபாலா பேன்று பரந்த வரலற்றை அறியும் ஆய்வுப்புலமும் பிறகாலத்தவர்களுக்கு இருந்ததில்லை. இன்றும் அவரது ஆய்வுகள் மறுக்க முடியாது உள்ளது. பூநகரி தொல்பொருள் ஆய்வு நூல் எழுதிய பரமு புஸ்பரட்ணம் தம் நூலை இந்திரபாலாவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். யாழ் நடுத்தர வர்க்கத் தமிழர்கள் டொக்டர் என்ஜினியர், எக்கவுண்டன், உத்தியோகம்கட்கு ஆசைப்படடார்களே தவிர வரலாறு, மாறுடவியல், புதைபொருள் ஆய்வு, சமூகவியல் போன்ற துறைகளில் படிப்பது பட்டம் பெறுவது கிடையாது. இத்தகைய துறைகளில் சொற்பமா வர்களே ஈடுபாடு காட்டினர். இந்திர பாலா ஒடுபக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் கைலாசபதியின் நெருங்கிய நண்பர் என்ற காரணத்தினால் எஸ்.பொ பேசாதொழிகிறார்.

வைத்தியலிங்கம்

வைத்தியலிங்கம் சாதி பார்த்தார் என்ற எழுத்து விசமத்துக்கு எஸ்.பொ காட்டும் ஒரே ஆதாரம். வேளாள வாக்குகள் அதிகமாக உள்ள இடத்தில் தன்னைப் பேசவிடவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். கொம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற வாதத்தின் குணமே தவிர, அது சாதிவெளியல்ல. வைத்தியலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அரசியல், பணபலம் சேனைகள் உள்ள அமிர்தலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஒடக்கப்பட்ட சாதிகமக்களின் பலமே இடதுசாரிகளுக்கு முன்மையாக இருந்தது. அவரை உயர்சாதி வெறியர்கள் நளவைத்தியலிங்கம்” என்றே அழைத்தனர். அவர் கூட்டம்கள் தொடர்ச்சியாகக் குழப்பப்பட்டன. வட்டுக்கோட்டை தமிழரசுக் கோட்டை என்று செல்லப்பட்டது. வைத்திலிங்கம் சாதி பார்த்தாhர் என்பதை பெரும் சிரிப்போடு மறுத்த இடதுசாரியும் எழுத்தாளருமான ரகுநாதன். அவர் பெரும்கல்வியாளர், சாந்தமான மனிதர், சாதி ஒருபோதும் பாராதவர். கட்சிவேலை பார்க்க யாழ்ப்பாணத்திலருந்து 21 கட்டை பயணம் செய்து வந்து பருத்தித்துறையில் இறங்கி தம் வீடுவரை இரண்டு, இரண்டரை கட்டை கால்நடையாய் நடந்து தனது கொட்டில் வீட்டுக்கு வந்து இரவு 8 மணிக்குப் பின்பு கள்ளிறக்கும் தொழிலாளர்கள் மாலை நேரத் தாழில் முடிந்து வருமட்டும் காவலிருந்து கூட்டம் நடத்துவர்ர். இரவு சாமமகளில் கூட்டும் முடிந்து ஒன்றாய் எம்மோடு சாப்பிட்டு எம்வீடுகளிலோ வாசகசாலைகளில் எம்மொடு படுத்துறங்கி அடுத்தநாள் காலையில்தான் யாழ்ப்பாணம் போவார் என்று குறிப்பிட்டார்.

சாதி பார்க்கிறவர்கள் ஏன் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறார்கள்? அதற்கு வேறு கட்சிகள் இரக்கின்றன. யாழ்ப்பாணம் நீராவியடியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழ்ந்த பகுதியில்தான் வைத்திலிங்கத்தின் வீடு இருந்தது. சாதி வித்தியாசம் இல்லாமல் கட்சியின் ஒடுக்கப்பட்ட தோழர்கள் எல்லாம் அவர் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக் குடித்துக் கொண்டாடி வருவார்கள். இரவு தங்கிப் போவார்கள். இரவு சாமம்களில் கூட்டம்கள் முடிந்து படுக்க அங்கு தான் போவர்கள் என்று அக்காலத்தில் கட்சியில் இருந்த தோழர் மார்க் இன்று நினைவு கூறுகின்றார். இந்த ஆதாரமும் எஸ்.பொ.வின் பொய்யை முடித்து வைக்கவில்லையெனில் இறுதியாக ஒன்றைக் கூறலாம். வைத்திலிங்கத்தின் மகள் ஒரு துணி வெழுக்கும் தொழிலாளியின் மகனைத்;தான் காதலித்து திருமணம் செய்தார். வைத்திலிங்கம் உறவினர்கள் அவழரக் கண்ட சாதியுடனும் திரிபவர் என்று ஒதுக்கி வைத்தனர். ஏன் கார்த்திகேசு மாஸ்டரின் தமையன், தம்பி எல்லோரும் அவரின் அரசியலுக்கு கடும் எதிர்ப்புக்காட்டி வந்தனர். அவரது சாதி பாராத குணத்துக்கான தண்டனையாக இது இருந்தது. நிச்சாமம் போராட்டகாலத்தில் கார்த்திகேயன் தனது கட்சித் தோழர்களுடன் இணைந்த வீடு வீடாகப்பொய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, தேங்காய், மரக்கறி, காசு என்று திரட்டினார். தமிழ் அரசியல்வாதிகள் போக்குவரத்து வைத்துக்கொள்hத ஊத்தைகளின் இடமாய் கருதப்பட்ட இடம்களுக்கு எல்லாம் அவர்கள் சென்றாhகள். இக்காலம்களில் எஸ்.பொ எங்கே போனார் என்ன செய்து கொண்டிருந்தார். குறைந்தது எம்.சி. நடத்தியசிறுபான்மைத் தமிழர் மகாசபை போராட்டம்களில் அவர் கலந்ததாய் விரலை மடிக்க முடியமா? கடந்த காலத்திய காலத்திய இடதுசாரிகளின் நேர்மை, தியாகம், இலட்சியப்பற்றுக்கு எஸ்.பொ ஒருபோதும் உரிமை கோரமுடியாது. அவருக்கு பொருத்தமான இடம் புலிப்பாசிஸ்டுகளின் சித்தரவதைக் கூடம்களில் தரப்படும் உத்தியோகம்தான்.

கந்தையாவின் துணைவியார்.

பொன். கந்தையாவின் மனைவி மற்றும் சண்முகதாசன் பற்றி “சில நேரம்களில் சில தோழர்கள்” கதையை எழுதிய எஸ்.பொ பொன்.கந்தையாவின் மரணத்தின் பின்பு சண்முகதாசனை மறு மணமுடித்த பொன். கந்தையாவின் மனைவி பற்றி மோசமான விபரிப்புக்கு வர முயல்கிறார் பொன். கந்தையா உயிருடன் இருந்தபோதே பொன் கந்தையாவின மனைவிக்கும், சண்முகதாசனுக்கும் உறவு இருந்தது இது ஒப்ப முடியாதது எனற பாங்கிலேயே எஸ்.பொ எழுத்துச் சொல்கிறது.

கந்தையாவுடன் சண்முதாசன் நீண்டகாலம் நெருக்கமாக அரசியல் செய்தவர். தனிப்பட்ட நட்பும் நிலவியது. பொன்.கந்தையா நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தவர். தான் சாகும் சமயம் தன் மனைவியின் கையை பிடித்து சண்முகதாசனின்கையில் கொடுத்துவிட்டு அந்தக்காலத்திலேயே முன்னுதாரணம் மிக்க, கொம்யுனிஸ்ட்டாக அவர் இறந்து போனார். நீண்டகாலம் நோயால் பாதிப்புற்று இருந்தபொதும் வெறுப்பு விரக்தியால் பாதிப்புற்று தனது மனைவியை மோசமாக நடத்தவில்லை. சண்முகதாசன் மற்றும் தனது மனைவியின். விருப்பறிந்து பிடித்தவனின் கையில் சேர்த்து வைக்கத்துணிந்த ஒரு மனிதராக பொன். கந்தையா மட்டுமே இருந்திருக்க முடியும். சமூகத்தின் பிற்போக்கு முன்பு வெட்கப்பட்hத மனிதராக பொன்கந்தைய இதைச் செய்தார். அவர் மனைவி துணிந்து நின்றார். இதில் எஸ்.பொ கட்டியமைக்க முயல்வதுபோல வெட்கப்பட்டுச் சாக என்ன கிடக்கிறது? மரண மடைந்து கொண்டிருந்த ஒரு மனிதன் ஆன் பொன்.கந்தையா செய்தது மகச் பெரும்புரட்சி 50 வருடம் முன்பு யாழ்ப்பாணச் சமூகத்தின் பழி தூற்றும் நாக்கு வழிக்கும் பழக்கம் முன்கு அவர் செய்த செயல் இன்று இந்த நிமிடத்தில் இதை எழுதும் தருணத்தில்கூட அவர் செயலுக்காக ஒரு கொம்யூனிஸ்ட்டாக இருப்பதற்காக பெருமைப்படும் செயலை அவர் செய்தார்.

முதலாளியச் சமூகத்தின் ஒழுக்கவிதிகளை மீறயது பிழை என்பதுதான் எஸ்.பொ போன்ற போலி ஒழுக்க வாதிகளின் போதiனை கற்பு, ஒழுக்கம், திருமணபந்தம், குடும்பம் என்ற உறவுகள் ஆதியான மனித உறவுகள் அல்ல இடைக்காலத்தில் தனிச்சொத்தின் தேற்றத்தின் பின்பு பிறப்பிக்கப்பட்டவை இவை மனித சமூக வளர்ச்சியில் தளரும் கைவிடப்படும் என்ற சமூக இயங்கியல் எஸ்.பொ வுக்கு தெரிந்திருக்க வேண்டும். மறுமணம் செய்வது சாராசரி முதலாளிய ஜனநாயக உரிமை விதவையாக கணவர் இறந்த பின்பும் இருக்க வேண்டும் என்பது மனித சுதந்திரத்தை, விருப்புகளை அங்கீகரிப்பவர்களின் சிந்கனையாகவும் இருக்க முடியாது. எஸ்.பொ வானவர் சண்முகதாசன் குற்றம் இழைத்தார் என்று காட்ட முயலும்போது கந்தையாவின் மனiவியின் மனநிலை விருப்பு போன்ற விடயம்களை ஆபாசமாகவே பார்க்கிறார் சிலநேரம்களில் சில தோழர்கள் என்ற எஸ்.பொ.லின்சிறுகதை கந்தையிhவின் மனைவியின் விருப்புகளை பாலியல் விகாரமாக்கி எழுதியது எஸ்.பொ வின் அடுத்த மனிதர்களின் வாழிவில் அத்துமீறிப் புகுந்து விடுப்பறியும் குணம் பெண்களை வேவுபார்க்கும் நோய்க்குணம்தான் வெளிப்படுகிறது. கொம்யூனிஸ்டுகள் என்றால் பாலியல் விருப்பற்றவர்களாகத்தான் வாழ வேண்டுமா? திருமணம் குடும்ப உறவுக்கு வெளியே பாலியலைப் பெறுவது கலாச்சாரப் பயங்கரவாதமா?


துரையப்பா

தமிழராய்ச்சி மாநாட்டை துரையப்பாவே குழப்பியதான கதையை எஸ்பொ எழுதியருக்கிறார் தமிழாராழ்ச்சி மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இலங்கை அரசு இழைத்த குற்றத்துக்கும் மேலாக கூட்டணிக்கும் சமபங்கு இருந்தது. தமிழராய்ச்சி மாநாடு ஒரு ஆய்வு மாநாடு தமிழ்மொழிசார் புலமை சார்ந்தவர்கள் கூடும், ஆய்வு செய்யும் விவாதிக்கும் ஒரு மொழி ஆய்வு மாநாடு. அது தமிழின விழாவோ, தமிழ் விழாவோ அல்ல. ஒரு அரசியல் நிகழ்வு அல்ல. அங்கு அரசியல்வாதிகளுக்கு அல்ல. தமிழராய்ச்சி துறைசார்ந்த அறிஞர்களுக்கே இடமிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்திய தி.மு.க போன்றவர்கள் அதை இன எழுச்சி மாநாடு, தமிழர் மாநாடு என்ற தமக்குத் தோதான அரசியல் வடிவம்களைக் கொடுத்து. சர்வதேச தமிழ் மெழியாய்வு மாநாட்டில் பல இனம்களைச் சேர்ந்த அறிஞர்கள் கலக்கும் மாநாடு என்பதை தமிழினவாதமாநாடாக மாற்றிவிட்டனர். அதில், கருணாநிதி போன்றவர்கள் மலிவான இனப் பெருமை, மொழிப்பெருமை பேசினர். அலங்காரச் சொல்லடுக்குளில் பொருளற்ற புலம்பம்கள் இடம்பெற்றன. வீர உரைகள் நிகழ்த்தப்பட்டன. கருணாநிதியின் வர்ணனையான “மாநகராம் சென்னையில் மலர்ந்தது இன்பத்தமிழராய்ச்சி மாநாடு” “தேரூர்ந்துவரும் காட்சிகாண ஊர் ஊர்ந்து வரும் மக்கள் வெள்ளம்” போன்ற சொல்வித்தைகள் ஆய்வறிஞர்கள் மாநாட்டை அவமதித்தன என்றே கொள்ளவேண்டும். இலங்கையில் முதலில் தமிராய்ச்சி மாநாடு நடத்தும் சிந்தனை எழுத்தபோது தனிநாயகம் அடிகள் போன்றோர் அதை தமிழர் கூட்டணி அரசியலுக்கு அப்பால் தமிழ்மொழியாய்வு மாநாடாக நடத்தவே திட்டமிட்டு இருந்தார் தமிழ்நாட்டைப்பொல் இது ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுகொண்டிருந்தார். ஒரு சர்வதேச மாநாட்டை பண்டாரநாயக்கா சர்தேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டு அரசு அனுமதியும் கிடைத்து ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டபோதுதான் அதில் தமிழர் கூட்டணியும், தழிழக தழிழினவாதிகளும் தலையீடு செய்தனர்.

தமிழகத்தில் இருந்து கருணாநிதியை அழைக்க வேண்டும் என்பதை தமிழ்த்தேசியவாதிகள் கிண்டிவிட்டார்கள். ஜனார்த்தனம், சாலை இளந்திரையன் போன்ற தமிழன வெறியர்கள் அழைக்கப்படல் வேண்டும் எந்ற நிர்ப்பந்தம்களை வஇவர்கள் தமிழாராய்ச்சி மநாட்டுக் குழுவுக்கு தந்தனர். தமிழராய்ச்சி மாநாட்டுக் குழுவில் இருந்த வித்தியானந்தன் போன்ற தமிழரசுவாதிகள் கொடுத்த நிர்ப்பந்தம் தனிநாயகம் அடிகள் தடுமாறத் தொடங்கினார். தமிழர் கூட்டணி மாநாட்டை கொழும்பில் அல்ல தமிழர் தலைநகர் யாழில் நடாத்தவேண்டும் என பிடிவாதம் செய்தபோது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி கொழும்பில் மாநாடு நடத்தினாலே அரச உதவி கிடைக்கும் தமிழர் கூட்டணி இதை அரசியலாக்குகிறது என்று அரசு கூறியது. சுதந்திரன் கருண்hநிதக்கு இலங்கை அரசு விசா மறுப்பு தமிழராய்ச்சி மாநாட்டுக்கு இலங்கை அரசு தடை என்று திரித்து வியாக்கியானம் செய்யத் தொடங்கியது. தமிழ்நாட்டு இனவாதிகளும் இலங்கை பிரச்சனையில் தலையிடத் தொடங்கினார்கள். அமிர்தலிங்கம் தமிழராய்ச்சி மாநாட்டில் முக்கிய தீர்மானிக்கும் நபராக மாறத் தொடங்கினார். பழந்தமிழ் இலக்கியம் ஆய்வு இவைகளில் திறமை படைத்த கைலாசபதி போன்ற ஆய்வறிஞகளைவிட்டு தமிழர் கூட்டணியின் மேடைப்பேச்சாளர்கள் இந்த மாநாடடின் முக்கியமான நபர்களாக மாறினர். இங்கு துரையப்பாவின் பாத்திரம் மிகமிகச்சிறியதாகும். தமிழர்கூட்டணிக்கும் அரசுக்குமான போட்டியில் அவர் சிக்கிக்கொண்டார். அவரைத் தமிழனத்துரோகி என்று கூட்டணி கூறியதுடன் அவரை தமிழராய்ச்சி மாநாட்டில் யாழ் நகரமக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட மேயர் என்ற அடிப்படையில் கூட கலக்க விடாமல் தமிழராய்ச்சி மாநாட்டுக்குழுவுடன் இணைந்து கூட்டணி தடுத்துவிட்டது. யாழ்ப்பாண நகரின் மேயருக்கு யாழ்ப்பாணத்தில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்;பு அனுப்பாத வேடிக்கை அரசியலில் நடந்தது. தமிழராய்ச்சிமாநாட்டுக்கு சார்ந்த ஆய்வறிஞர் அல்லாத ஜனார்த்தனம் போன்ற தமிழ்நாட்டு இனவாதிகள் சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்துக்கு வந்தனர். கூட்டணி தமிழர் எழுச்சி மாநாடாக மாறியது. ஜனார்த்தனன் போன்ற தமிழ் தேசிய வெறியர்களை மேடையேற்றியதடன் தமிழர் கூட்டணி, த.இ. இளைஞர்கள் மாநாட்டுக்கு தாமே பாதுகாப்பு என்று அறிவித்தனர். இதன் மூலம் இலங்கை அரசம் துரையப்பாவும் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு எதிராயினர்.


துரையப்பா அதிகம் அரசியல் பேசுவதில்லை டுளுளுP விசுவநாதன் போன்ற சிறந்த மேயர்களுக்குப் பின்னர் துரையப்பாவே யாழப்பாணுத்தின் சிறந்த மேயராவார். அவர் சாதி, சமயம், பாராட்டுவதில்லை. தனக்கு அரசியலில் எதிர்க்கருத்து உடையவர்களுக்குக்கூட யாழ்.ப.நே.கூ. சங்கம், யாழ் மாநகரசபை இரண்டிலும் அவர் தொழில் வழங்கினார். அவர் சைவக்காரர், வேதக்காரர், முஸ்லீம் என்ற பேதமில்லாதவர். யாழ் மநாகரசபையுள்ள ஒடுப்பப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் முதன்மதலாக நகரசுத்தித் தொழிலாறர் அல்லாத நிர்வாகம் சார்ந்த உத்தியோகங்களிலும் இவர்கால்திலேயே நியமனம் பெற்றார். அவர் சட்டத்தரணியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் காசில்லை என்று வருபவர்களுக்கம் வழக்காடினார். கூட்டணியின் கிறிமினல் லோயர்மார் மேடைகளில் அவரை 5 ரூபாய் அப்புக்காத்து என்றும், அவர் கள்ளக் கோழி பிடித்த வழக்கு, சைக்கிளுக்கு லைற் இல்லாத வழக்குப்பேசும் அப்புக்காத்து எனவும், நக்கல் விட்டகாலமது. துரையப்பா எல்லாச்ச சாதி மக்களையும் சமமாய் அண்ணை, தம்பி வாடாப்பா, போடப்பா” போட்டுப்பழகுவார். அரசியல்வாதி மேயர் என்ற தனது தகுதி குறித்த, பெருமையில்லாத மனிதன் என்று யாழ்ப்பாண மக்களால் அவர் மதிக்க்ப்பட்டவர். அவர் மேயர் என்று சனத்துக்க எட்டாம்ல் வானததில் சஞ்சரித்ததில்லை துரையப்பா காரில் போகும்போது சனம் கைகாட்டிக்காரை மறித்து கதைக்கக்கூடிய தமது பிரச்சினைகளை முறையிடக்கூடிய முதலும் கடைசியுமாகிய யாழ்மேயர் துரைப்பாதான் உத்தியோ பூர்வமாள மாநகரசபைக் கடிதத்தலைப்புகள் மாநகரசபை முத்திரைகள் போன்ற அரச சம்பிரதாயம்கள் அதிகார நடைமுறைகள் குறைவான தெருவில், வீட்டில், பொது இடம்களில்கூட சனம்களுக்கு ஏற்படும் தேவைகட்கு கையில் என்ன கிடைக்கிறதோ அதில் எழுதிக்கொடுப்பார். ஒருமுறை துரையப்பா, வீட்டின் முன்பு தற்செயலாக சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைச் சந்தித்த ஒருவர், தன் கர்ப்பிணியான மனைவிக்கு தேவையான மல்லி, சீரகம், சரக்குகள் போதியளவு யாழ் ப.நோ.கூ.சங்கத்தில் கிடைப்பதில்லை என்று முறையிட்டார். உடனே துரையப்பா அவரிமிருந்து ஒரு சிறு துண்டை வேண்டி அவரின் பேனையாலேயே தேவையான அந்தச் சரக்குப் பொருட்களை அவருக்கு கொடுக்கும்படி யாழ் ப.நோ.கூ சங்க முகாமையாளரக்கு குறிப்பு எழுதிக்கொடுத்தார். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நூற்றக்கணக்கான கதைகள் துரையப்பா பற்றி உள்ளது.

யாழ் மாநகரசபை தினசரி 300 ரூபயை; செலவுசெய்து தனது மாநகரசபை எல்லையுள் கடிதம்களை தபால் மூலம் அனுப்பியது துரையப்பா அந்த நடைமுறையை நிறுத்தி, ஒரு விதவை மூதாட்டி வளர்த்து வந்து இரண்டு பேரப்பிள்ளைகளுக்கு அந்த வேலை மாநகரசபை நியமனம் ஊடாக மாதம் 300 மூபாய் சம்பளத்தில் லேலையை வழங்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள எந்த அரசியல்வாதியையும்விட அவருக்கு சாதாரண நபர மக்களிடம் மதிப்பு இருந்தது. முன்பு ஜி.ஜிஇபொன்னம்பலத்தை யாழ் எம்.பி ஆக்கவிட்டு சனம்பட்ட அனுபவம் இருந்தது. பொன்னம்பலம் மாத்தையாவை பார்ப்பதானால் அடுத்த தேர்தல் சமய்த்திலதான் யாழ்ப்பாணத்தில் தென்படுவார். அந்தளவுக்கு யாழ்ப்பாணம் எம்.பி யைக்காணவில்லை என்று தேடி போஸ்டர் போடும் நிலையிருந்தது. துரையப்பா சனம்களின் வீடுகளில் நடக்கும் விசேடம்களுக்கு நல்லது கெட்டதுகளுக்கும், கல்வீட்டுக்குள்ளும் ஏழைகளின் குடிசைவீட்டுக்குள்ளும் அவர் நுழைந்தார்.

யாழ் நகாரில் உள்ள உயர்ந்த கட்டடங்கள் யாழ்ப்பாணத்துக்கு ஒரு நகரத்துக்குரிய முகம் ஏற்படடதெல்லாம் துரையப்பாவின் காலத்தில்தான் பாரதி முதல் வள்ளுவர் வரை சிலைகள், புதிய தெருக்கள், குடிநீர் வசதிகள் யாழ்நகர மண்டபம், விளையாட்டரங்கு, நல்லூர் கலியாண மண்டபம், நவீன சந்தை, பஸ் நிலையம் அனைத்தும் யாழ் நகருக்குள் வந்தன. யாழ் நகரின் ஒருவழிப்பாதைகளை இருவழிப்பாதைகளாக மாற்றியமைத்து ஒரு நகருக்குரிய வடிவத்தை எற்படுத்தினார். அவர் பதவி ஏற்றபோது யாழ் குறுகிய சாக்கடைக் கால்வாய்களைக் கொண்டதாய் மலசலகூட நாற்றம் நிரம்கிய பஸ்நிலையப் பகுதியை பாதாளச் சாக்கடைகளை ஏற்ப:த்தி பெரிய பஸ்நிலையமாக மாற்றியமைத்து மனிதர்கள் சங்கடமின்றி போய்வரக்கூடியதாக மாற்றியமைத்தார். நல்லூர் திருவிழாக்காலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டடையால் அதைத்தடுக்க புதிய பாதைகளை கோவிலுக்கு வெளியே அமைத்து பொக்குவரத்துக்களை இலகுவாக்கினார். கடைசிக்காலத்தில் அவர் நாற்றமடிக்கும் கழிவுநீர்கள் தேங்கும் புல்லுக்குளத்தை நீச்சல் தடாகமாக்க முயன்றார்.

துரையாப்பா சுயேச்சையாக நின்றார். ஜி.ஜி. பொன்னம்பலம். தமிழரசுக்கட்சி போன்ற பெரும் அரசியல் சந்திகளை எதிர்த்து நின்றவர் அவர் ஒரு முதலாளிய அரசியல்வாதிதான் முதலாளிய அமைப்புகள் சனங்களின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பியவர் தனது இரக்க குணத்தால் முதலாளிய நேர்மையால் சமுதாயப்பிரச்சினைகள் எதிர்கொண்டவர் தமிழரசுக்கட்சி ஒடுக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவாகளில் உள்ள துரைபயப்பாவுக்கு அதரவான வாக்குகளைப் பிரிக்க சி.எக்ஸ்.மாட்டின் என்ற காரையூரைச் சேர்ந்தவரை துரைப்பாவிற்கு எதிராக நிறுத்தியது. இதனால் 56 வாக்குகளில் துரையப்பா பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரைத் தோற்கடிக்க கரையார் சமூக வேதக்காரர் என்ற பிரச்சாரங்களையும் தமிழரசுக்கட்சி கையாணடது. வெற்றி பெற்ற மாட்டின் சொற்பகாலத்தில் தமிழரசுக்கட்சியைவிட்டு வெளியேறினார். என்னும் துரையப்பா யாழ் மேயருக்கான தேர்தலில் நின்று தமிழத்தேசியவாதக் கட்சிகளைத் தோற்கடித்தார். தமிழர் கூட்டணியின் பலமுனைநெருக்டுதல்களை தனியே நின்று சமாளிக்க முடியாத நிலையிலேயே அவர் அரசைச்சார்ந்தர். தமிழ் தலைநகர் எனப்பட்ட யாழ்ப்பாணத்தை அவர் தன் கீழ் வைத்து இருந்தார் சுதந்திரன் பத்திரிகை தொடர்ந்து துரையப்பாவை துரோகி, துரோகப்பா, எட்டப்பன் என்று எழுதி வந்தது. அவர் நகரசபையிலும் ப.நோ.கூ சங்கத்திலும் தனது ஆட்களுக்கு வேலை வழங்குவதாய் கூறி வந்தது. அமிர்தலிங்கம் முதல் ஆலால்சுந்தரம் வரை துரையப்பா கொல்லப்படத்தக்க சூழலை உருவாக்கும் பேச்சுக்களை நிகழ்த்தி வந்தனர். சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களை துரையப்பா இலங்கை அரசை வற்புறுத்தி விடுவித்தார். விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் சிலரே அவரது மரணத்துக்கும் காரணமாயினர். துரையப்பா சனத்துடன் சனமாக ஆயுதமோ, பாதுகாப்போ இன்றி எச்சரிக்கையுணர்வுகூட இல்லாமல் திரிந்தவர். அகிம்சை நாடகம்விட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்முறைப் பேச்சுக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் அவரைச் சுட்டனர். துரையப்பா மிகமிக எளிமையான மனிதன் எல்லாச்சனங்களாலும் நெருங்கிப் பேசக்கூடியவர். கோப்பாய் எம்.பியாக இருந்த கதிரவேற்பிள்ளையை அவரது கட்சிக்காரர் ஒருவர் அண்ணை என்று ஒரு முறை அழைக்கப்போய் “இண்டைக்கு அண்ணை என்கிறாய் நாளைக்கு மச்சான் என்று கூப்பிடுவியோ” என்று அடிக்கப்போன சம்பவங்கள் இருக்கின்றன. செல்லத்தம்புவை கட்சிக்காரரே சேர் போட்டுத்தான் பொரும்பகுதியினர் கூப்பிடுவார்கள். அகிம்சை விடுதலை இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்ட தமிழ்த்தேசியவாதிகளின் அமைப்பு இப்படித்தான் இரந்தது.

இத்தகைய அகிம்சை பேசிய ஈழத்துக்காந்தியின் வன்முறையாளர்கள், தேசியவாதிகள் முன்பு கட்டாயமாக துரையப்பா மிகவும் சிறந்த மனிதர், துரையப்பா கொல்லப்பட்டு அவரது உடல் ஈச்சமோடடையிலிருந்த கடற்கரைப் பக்கமாக பல ஆயிரம் மக்கள் சூழ ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது யாழில் நடந்த மிகப்பெரும் செத்தவீட்டு ஊர்வலம்களில் இதுவும் ஒன்று. ஒரு கூட்டணிகாரர்களும் மரண நிகழ்வுக்குப் போகவில்லை. இரங்கல் அறிக்கைகூட விடவில்லை என்பதன் மூலம் கொலையாளிகளும், அவர்களின் துணைச்சக்திகளும் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது இந்த ஊர்வலத்தில் பிரமுகர்கள், செல்வந்தர்கள், அவர்கால அரசியல்வாதிகள் என்று எவரும் வரவில்லை யாழ்ப்பாணத்தில் சாதாரண மக்களே ஒடுக்கப்பட்ட சாதி மக்களே தம்மையும் மனிதராக மதித்த மனிதன் துரையப்ப்hவுக்கு அஞ்சலி செல்த்த இறுதி ஊர்வலத்துடன் நடந்து வந்தார்கள். பிரேதப் பெட்டியின் பின்புறம் ஒரு பெரியளவு துரையப்பாவின் படம் வைக்கப்பட்டு “போய் வருகின்றேன் வணக்கம்” என எழுதப்பட்டு இருந்தது. அதைப் பார்த்துப் பார்த்து அழுத சனம் அதிகம். யாழ்ப்பாணம் எதிர்காலத்தில் மீண்டும் தன்னைக் கண்டு பிடிக்கும்போது துரையப்பாவைச் சுட்டவர்களுக்கும், எஸ்.பொ போன்ற தேசியவாதப் பெய்யர்களுக்கும்ல்ல துரையப்பாவுக்கே உரிய இடம் வழங்கப்படும்.

பண்டாரநாயக்கா கொலை


“தனது தந்தை, கணவன் இருவரையும் கொன்றது யு.என்.பி தான் என்று சந்திரிக்h கூறியதை சரியான நிருபணம் எதையும் தராமலே பண்டாரநாயக்கா கொலை அரசியல் கொலையல்ல என்று எஸ்.பொ மறுத்துரைக்கிறார். களனி விகாரையின் பிரதம பிக்கு புத்தகித்த தேரோ, சோமராம தேரர் போன்றவர்களின் தனிப்பட்ட பகைமை, பெண்கள் பிரச்சினை, சிறிமாவோ பண்டாரநாயக்கா, திருமதி விமலா விஜயரத்தனா போன்றவர்களின் பாலியல் ஒழக்க மீறல்கள் என்று காண்பிப்பதே அவரின் இலக்காக உள்ளது. தமிழ்த்தேசியவாதத்தின் பெரும் இரைச்சலை எழப்புபவருக்கு தமது எதிரிகள் கொடியவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், பண்பற்றவர்கள் என்று நிருபிக்க வேண்டியுள்ளது. எஸ்.பொ ஒழுக்கத்தை உயிரிலும் பெரிதாக ஒம்பும் பண்புடையோன் அல்லவா? அதனால்தான் போலும் தம்மைச் சுற்றியுள்ள அசுத்தம்களுக்கு பண்புமீறல்களுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

25 செப்டெம்பர் 1959இல் பண்டாரநாயக்கா தமது வீட்டின் விறாந்தையில் வைத்து சொமராம தேரர் என்ற களனி பௌத்த பிக்குவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் இக்கொலை ஒரு திட்டவட்டமான அரசியல் கொலையாகும். களனியின் தலைமைப் பிக்குவான புத்தகித்த தேரோ முதல் களனிப் பிக்குகள் அமெரிக்க தூதுராலயத்துடன் தொடர்பும் நிதியும் பெற்று வந்த செய்திகள் அறியப்பட்டவையாக இருந்தது. எல்.எஸ்.எஸ்.பி யினர்கூட இதுபற்றிப் பாராளுமன்றத்தில் பேசியிருந்தனர். இவர்களின் “எக்சத் பிக்கு பெரமுன” என்ற களனி பௌத்த பிக்குகளின் அமைப்புச் செயலாளராக இருந்தவர் சோமராம தேரர். இந்த அமைப்ப யு.என்.பி உடன் முககியமாக ஜே.ஆர். உடனும் 1950 முதல் தொடர்புகொண்டு இருந்தது. தீவிரமான சிங்கள பௌத்த வலதுசாரி அமைப்பான இது, தமிழர் எதிர்ப்பு, இடதுசாரி எதிர்ப்புகளையும் கொண்டிருந்தது. கொழும்பில் எல்.எஸ்.எஸ்.பி கூட்டம்களை குழப்புவது கொழும்ப நகர மண்டபத்தில் நடைபெற்ற அவர்களின் கூட்டத்துக்கு குண்டு வீசியது உட்பட அவர்கள் தொடர்புகொண்டு இருந்தனர். அமெரிக்க தூதராலயம், யு.என்.பி உடன் கொண்ட தொடர்புகளை இணைத்துப் பார்த்தால் அவர்களின் செயற்பாடுகளின் அரசியல் புலம் துலக்கமாய்த்தெரியும். பண்டாரநாயக்காமந்திரிசபையில் மந்திரிகளாக இருந்த ஸ்டான்லி டி.சொய்சா, திருமதி விமலா விஜயரத்னா உட்பட மந்திரிகளும் அதில் தொடர்பு கொண்டு இருந்தனர். கொம்யுனிஸ்டான பிலப் குணவர்த்தனாவை மந்திரிசபையில் இருந்து இவர்கள் பண்டாரநாயக்காவுக்கு இடைவிடாது பிரச்சினை கொடுத்து வெளியேற்றுவதில் வெற்றி பெற்றிருந்தனர். தீவிர சிங்கள வலதுசாரிச் சக்திகளே பண்டாரநாயக்கா திட்டமிட்டுக் கொன்றனர். அதற்கு யு.என.பி – அமெரிக்கத் தொடர்புகள் இருந்தது பற்றி அக்காலத்தில் இடதுசாரிகள் ஊடகங்களில் எழுதியும், பேசியும் இருக்கின்றனர்.

பண்டாரநாயக்காவை சோசலிஸ்ட் என்று கூறமுடியாது. அவர் ஒரு சீர்திருத்தவாத சோசலிஸ்ட் என்பதுடன், ஒருபுறம் யு.என்.பியின் சிங்கள அரசகரும மொழி என்ற அரசியல் கோசத்தையும் மறுபுறும் இடதுசாரிகளின் அன்னிய நிறுவுனம்களை அரசுடமையாக்கல் போன்ற போக்குகளையும் தனது அரசிலாக்கியதின் மூலம், யு.என்.பியின் அரசியல் பலத்தையும், மற்றப்பபக்கம் இடதுசாரிகளின் செல்வாக்கையும் பலவீனப்படுத்தியிருந்தன. எண்ணை நிறுவனமான செல், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, திருமலை துறைமுகம் இவைகளைத் தேசிய மயமாக்கினார். அரசு நிறுவனம்களைப் பலப்படுத்தி மக்களின் செல்வாக்கை தன் பக்கம் ஈர்க்க முயன்றனர். அத்தனகலவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தம் சொந்த நிலத்தை நிலமற்ற ஏழைச் சிங்கள, முஸ்லீம் மக்களுக்க பங்கிட்டுக்கொடுத்தார், பிலப் குணுவர்த்தனாவுடன் இணைந்து பல தனியார் நிறுவனம்களை தோட்டம்களை மக்கள் மயமாக்கத் திட்டமிட்டார் எனிவேதான் முதலில் சிங்கள முதலாளித்துவ சக்திகள் கொம்யூனிஸ்டான பிலப் குணவர்த்தனவை மந்திரிசபையிலிருந்து வெளியேற்றி பண்டாநாயக்கா தனிமைப்படுத்தினார்கள் பிலிப் குணர்வத்தனர் மந்திரி பதவியைவிட்டு வெளியேறும்போது பண்டாரநாயக்கராவ பலமுறை திரும்பத்திரும்ப உள்ளுர் முதலாளிகள் மற்றும் அன்னிய ஏகாதிபத்தியல்களால் உங்களுக்கு உயிராபத்து ஆபத்து வரும் என்று எச்சரித்து இருந்தார். பண்டாரநாயக்கா அரசியல் முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குட்பட்டதுதான் அவர் கல்வியை கட்டமாயமாக்கி பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்களைத் தண்டிக்கும் சட்டம்களைக் கொண்டுவந்தார். ஏகாதிபத்திய எண்ணை நிறுவனமான செல்லில் கை வைத்தமை. “இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தை நிறுவியமையம் அவரின் மிகவும் துணிவான செயலாகும் அவர் யு.என்.பி இன் உள்ளுர் அரசியலை சிதறடித்ததுடன் ஏகாதிபத்தியப் பொருளாதார ஒழுங்கிலும் கை வைத்து இருந்தார். இதுவே அவரின் கொலைக்கான காரணமாகும்.

பணடா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது களனி பிக்குகள் அமைப்பான எக்சத் பெரமுன கடும் எதிhப்பை பண்டாரநாயக்கவுக்கு காட்டியது. அவர்கள் நாடடின் பிரதம மந்திரியை நேரடியாக அச்சுறுத்தினார்கள். அவரது இருப்பிடத்தை சுற்றிவளைத்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்மக்களுக்கு நாட்டை வித்து விட்டதாய் பிரச்சாரம் செய்தார்கள் யு.என்ட.பி பண்டா-செல்வாஒ ப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு பாதயாத்திரை புறப்பட்டது யு.என்.பி இன் சிங்கள மொழிச்சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாரநாயக்கா தொடர்ந்தும் தமிழர் எதிர்ப்ப அரசியலுக்க செல்லவில்லை என்றபோது அவர்கள் கடும் ஆத்திரமடைந்திருந்தனர். பண்டாரநாயக்கா கொலையை உள்ளுர் மற்றும் சர்வதேச நிலைமைகளை பரிசீலனை செய்யாமல் எஸ்.பொ இத ஏதோ தனிப்பட்ட பகைமை, பொம்பிளை பிடிக்கும் பிரச்சினை என்று பிரச்சினையின் மையக்கருத்தை விட்டுவிடுகிறார். அக்காலத் தமிழ்;;த்தேசியவாதிகள் யு.என்.பி உட்பட் சிங்களத் தேசியவாதிகளும் திட்டமிட்டு தம் அரசியல் பொட்டுக்கேடுகள் வெளிவராமல் இருக்க இப்படியாக பிரச்சாரமகளையே செய்தார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்காவை, பண்டாரநாயக்காவின் கொலையின் சூத்திராதாரி என்று காட்டுமளவு எஸ்.பொ போலவே முயன்றார்கள். தமிழரசு, தமிழக்காங்கிரஸ் அரசியல் மேடைகளும் இத்தகைய கருத்தையே விதைத்தன் மூலம் பண்டாரநாயக்கா கொலையின் அரசியல் பின்புலத்தை ஏகாதிபத்திய சதிகளை மறைத்தார்கள்.

பண்டாரநாயக்காவின் அரசியல் கொலை, கொங்கோவின் பற்றிக்லுமும்பா, சிலியின் அலண்டே இந்திராகாந்தி போன்றவர்களது அரசியல் கொலைகளை ஒத்ததாகும். அக்கால இலங்கையில் இடதுசாரி இயக்கம்கள் இவை பற்றிய உணர்வை மக்களிடம் ஏற்படுத்தப் போராடியிருக்கிறார்கள். மேற்குலகில் உள்ள அரசியல் கரிசனையுடைய இடதுசாரிகள் இன்றும்கூட பண்டாரநாயக்காவினது அரசியல் கொலையை ஞாபகத்தில் வைத்துள்ளனர். ஆனால் நமது தமிழ்த்தேசிய வாதச்சித்தாந்தி எஸ்.பொ , “பக்தா இதுதான் பூலோகமா” என்ற எம்மைக் கேட்கிறார். பண்டாரநாயக்கா குடும்பத்தில் நிலவிய பாலியல் அத்துமீறல்கள், பாலியல் தேலைகளை நிறைவு செய்யப் பெண்களைப் பயன்படுத்திய பௌத்த பிக்குகளாலே பண்டாரநாயக்கா கொலை செய்யப்ட்டது. என்கிறார்.
பண்டாரநாயக்கா குடும்பத்தில் பாலியல் மீறல்கள் நடந்ததெனில் அது பொதுவான மனிதப்பாலியல் பிரச்சினையின் பகுதியாகும். சிங்கள் பௌத்தாகள் எல்லர்ம் பாலியல் பிறழ்ந்தவர்கள் தமிழ்ச்சமூகம் பாலியல் பரிசுத்தம்கள். கற்பு நெறிகடவாக ஆண்ணு பெண்மைப் பண்புகள் மீறாத விழுப்புண் எற்ற சமூகமோ? உண்மையில் தமிழர்களைவிட சிங்கள மக்கள் மத்தியில் ஒப்பீட்டு ரீதியில் பாலியல் ஒடுக்குமுறை குறைவு 20, 30 வருடம் முன்பு தமிழ்ப்பகுதியில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்குப் பக்கத்தில் ஆண்கள் பஸ்சில் இருப்பதுகூடச் சிரமமான விடயம் தென்னிலங்கையில் இந்தளவு நெருக்கடி இருக்கவில்லை. சிங்களத்தியள் டக்கெண்டு மடங்குவாளவை என்பது போன்ற யாழ்ப்பாண நடுத்தர வர்க்க மதிப்பீடகள் அப்போ நிலவின. எனவே எஸ்.பொவின் பண்டாரநாயக்கா கொலை பற்றிய மதிப்பீடுகள் பெண்கள் பற்றிய பாலியல் சார்ந்த அரசியல் வந்திகளாகும். பண்டாரநாயக்கா அரசியல் போக்குக்கு மாற்றாக பாலியப்பிரச்சகைளை நிறுத்தி தன் தமிழ்;தேசியவாத அரசியல் நோக்கத்தை எட்டிவிட முயல்கிறார்.

பெண்களைதும் ஆண்களைதும் பாலியல் பிரச்சனையை முன்னிலை;ப்படுத்தி அரசியல் பேசுதென்பது பேசுபவரது அநாகரீக நிலையும் அவர் சார்ந்த சமூகத்தின் வளரா நிலைக்குமான சான்றாகும். சிறாமாவோ பண்டாரநாயககாம்மட்டுமல்ல மங்கையற்கரசி அமிர்தலிங்கமும் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு எதிராக பொழியப்பட்ட பாலியல் வசைகள் கொஞ்சமல்ல. :ஒவ்வொரு வாடிவீட்டின் சுவர்களும் மங்கையற்கரசி பற்றி கதை சொல்லும்” என்று தமிழ்க் காங்கிரஸ் மேடைகளில் உடுப்பிட்டி சிவசிதம்பரம் போன்றவாகள் பேசினர். நான் ஆம்பிள என்று காட்டுகிறேன் வா” என சவால் விட்டார்கள். பாராளுமன்றத்தில் சிறில் மத்யூ பேசியபோது “மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் வாயையையா அல்லத வேறு ஏதாவது ஒரு உறுப்பையா அமிர்தலிங்கம் அடக்குகிறார்” என்று கேட்டார் இப்படி பலவித ஆண் ஆதிக்க போக்குகள் நிலவின. பாலசிங்கம் பொது மேடைகளில் தானும்பிரபாகாலும் யார் சந்திரிக்கானவத்திருப்பது என்று பேசிக்கொண்டதாக சந்திரிக்கா பற்றி பச்சை பச்சையாக பாலியல் பகிடிகள் விடப்பட்டது இத்தனைக்கும் பாலசிங்கம், பிரபாகரன் மனைவிமார் பற்றி பாலியல் வசைகள் பேசாதளவுக்கு சந்திரிக்கா போன்றவகள் பண்பாக இருந்தார்கள். எஸ்.பொ வின் ஆண் ஆதிக்கப் பர்வையும் கழிசறை அரசியலும் ஒன்று சேர்ந்தவர்தான். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகளான் சுனேத்திரா “ஒன்றுக்கு மேற்பட்ட உத்தியோகபுர்வமான கணவர்களுடன் வாழ்ந்தார்” என்று ஏன் இவர் எழத வேண்டிவருகிறது. ஏன் தனக்கு பிடித்தமற்ற கணவனை விலக்கிவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்யும் உரிமை விவாகரத்துப்பெறும் உரிமை சுனேத்திராவுக்கு இல்லையா? இலங்கை முதலாளித்துவச் சட்டம்கள்கூட பெண்களின் விவாகரத்து, மறுமணம் உரிமைகளை ஊற்றுக்கொண்டுவிட்டது. சுனேத்திராவின் அரசியல் கருத்தை சமூகம் சம்பந்தமான பார்வை மறுப்பது ஏற்பது என்பதற்கு முதல் அவரது தனிப்பட்ட வாழ்வில், பாலியல் சார்ந்த முற்கற்பிதம்கள் ஏன் எஸ்.பொ என்ன கற்பின் காவலரா? பிறன்மனை நோக்கா பெருந்தகையாளரோ? தன் பாலியல் மன விகாரம்களை சுதந்திரமாக துணிச்சலாக எழுதுபவர் பெண்களிடம் மட்டும் தூய ஒழுக்கத்தை அவர்களின் பொது நடத்தைக்கு உரைகல் ஆக்குகிறார். அவர்களைப் பெட்டக்த்தில் வைத்து மூட்ப்பார்க்கிறார்.

பௌத்த பிக்குகள் சிங்கள அரசர் காலத்திலேயே அரசுப் பெண்களை தமது காம்க் கிழத்திகளாகள் கொண்டிருந்தனர்” என்று எமக்கு எழுதிக்காட்டுப்போது சிங்கள. பௌத்தம் ஒழுக்கக்கேடானது என்று தமிழ்தேசியத்தின் சார்பில் வழக்காடுவதுதான் நோக்கம். ஏன் எங்கள் ஊர் பூசாரிமார் முதல், பிராமணர்கள் வரை பௌத்த பிக்குகளைவிட என்ன விதத்தில் வித்தியாசம். கிறஸ்தவபாதிரிகள் பாலியல் முதல் சமபாலியல், சிறு குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது வரை எவ்வளவு நடைபெறுகிறது. புராண இதிகாசங்களில் பிராமணக்குருக்கள் செய்யாத பாலியல் மீறல்களா? எதிப்த்திய, ரோம, கிறிஸ் கால நாகரீகங்களில் சகல மதகுருக்களும் இப்படித்தானே இருந்துள்ளனர். மனிதர்கள் பாலியலைத் துறப்பது இயற்கை விரோதம் எத்தனை ஒழுக்கக்பட்டுப்பாட்டு … வேதமத்து எழுதிக் குவித்தாலும் கற்பு, ஒழுக்கம் என்று விதிகள் ஏற்படுத்தினாலும் அத்தனையும் அதனால்தான் மீற்ப்படுகிறது. மேலும் மதகுருக்கள் என்பவர்கள் உயர்வர்க்கம்களின் நபர்கள் அவர்கள் பெண்களையும் தம் கட்டுள் கொண்டுவருகிறார்கள். இவை எல்லா மதவாதிகளுக்கும் உரியதேதவிர ஏதோ பௌத்த பிக்குகளுக்கு மட்டும் உரியதல்ல. எஸ்.பொ வின் தந்தை ஒரே சமயத்தில் அக்கையும், தங்கையுமாக இரு பெண்களுடன் ஒன்றுசேர வாழ்ந்தமையை ஒழுக்க மீறலாக எஸ்.பொ வால் எண்ண முடியவில்லை. தனது காதலியின் தமக்கை தன்னுடன் காதல் புரிய முயல்வதாக கதையெழுதியமை அவரின் ஒழுக்கம் பற்றிய பார்வையில் அடம் பிடிப்பதில்லை. ஆனால் கல்வியமைச்சராக இருந்த பதியுதின் முகம்மது அவர் பெண்களைத் தேடித்திரிந்தார் எனப்படுவது அவரது “கல்விக் கொள்கைகள், மாவட்டக்கோட்டா” முறைகூட இங்கு எஸ்.பொ வால் வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனில் எவ்வளவு தூரம் தனிமனிதர்களின் செர்ந்த வாழ்வில் தலையிடும் அடாத்து வேலை செய்துவருகிறார் என்று விளங்க முடியும்.

சந்திக்கா பற்றிய குறிப்பில் விஜயகுமாரதுங்கா கொல்லப்பட்டது ஜே.வி.பியாவ் என்று எழுதுகிறார். விஜயகுமாரதுங்கவை கொன்றது பிரேமதாசாதான் யு.னெ;.பிதான். பிரேமதாசா பாசிஸ்ட் பிரபாகரனுடன் சேர்ந்து அண்ணன், தம்பி முறைகொண்டாடிய காலத்தை பச்சைப்புலி என்ற கொலைப்படை கட்டி அரசியல் எதிரிகளைக் கொன்றதை கொழும்பில் அமிர்தலிங்கம் கொலையில்கூட பிரேமதாசாவின் ஒத்துழைப்பைப் புலிகள் பெற்றார்கள் என்றுகூட நம்பத்தக்க தகவல்கள் உண்டு பிரேமதாசா தனது கொலைப்படையைக் கொண்டு தனது எதிரிகளை அழித்துவிட்டு அதை ஜே.வி.பிஇன் தலையில் போட்டார் ரோகணவிஜயவிரவை சுட்டு சுவர் இறக்கு முன்பே உயருடன் போட்டுஎரித்தது யார் ஆட்சியில்? கொழும்பில் புலிகளைக் கொண்டும் இத்தகைய காரிம்களைச் செய்தவுர் பிரேமதாசா ஏன் எஸ்.பொ யு.என்.பி யைக்காக்க முயல்கிறார் என்று எமக்கு நன்கு விளங்கும்.

இறுதியாக பண்டாரநாயக்கா கொலைக்குப் பின்பு தற்காலிய அரசுத்தலைவராக வந்த தகநாயக்கா, பண்டாரநாயக்கா கொலை வழக்கை நடத்தாது இழுத்தடித்தார் அந்தளவுக்கு அவர்களுக்கு நிர்ப்பந்தம் தரப்பட்டது. பின்பு 1960 இல் பதவிக்கு வந்த யு.என்.பி அரசு வழக்கை விசாரிக்காது விட்டது. பின்பு 1960 யூலையில் நடந்த தேர்தலில் சிறலங்கா சுதந்தரக்கட்சி பதவிக்கு வந்தபின்பே பண்டாரநாயக்கா கொலை வழக்கு மீண்டும் விசாரனைக்கு எடுக்கப்பட்டது. கொலையாளிக்கு மரண தண்டனை தரப்பட்டது. இதில் பல முக்கிய நபர்கள் அன்னியத்தலையீடுகள் பற்றிய விபரங்கள் முடக்கப்பட்ன. கொலையில் சிறிமாவின் தொடர்பு என்பது யு.என்.பி யினதும் அவர்களது ஊடகம்களினதும் தமிழரசு வாதிகளினதும் நிரந்தரமான பிரச்சாரம்தான்.

இராணுவச் சதிப்புரட்சி

சிறிமாவுக்கு எதிரான இராணுவச்சதிப் புரட்சிக்கு முயற்சித்த வழக்கின் முதல் எதிரி வியனகே தனக்கு நன்கு தெரிந்தவர். ஜி.ஜி அவருக்காக வாதாடினார் என்று எஸ்.பொ கொஞ்ச ஜனநாயக் உணர்வுகூட இல்லாமல் விலாசம் எழுப்புகிறார் 1964 இல் சிறமாவின் இடதுசாரி சார்பு அரசு பதவியில் இருந்தபோது சிறிமாவைக் கொன்றுவிட்டு இராணுச்சதிப் புரட்சி மூலம் இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்ற இராணுவத் தளப்திகளான டி.சேரம்.டி.மெல், லியனகே போன்றவர்கள் முயற்சித்தார்கள். அப்போது இலங்கை கடற்கடைத்தளதியாக இருந்த ராஜன் கதிர்காமர் இந்தச் சதியை அறிந்து உடன் சிறமாவோ பண்டாரநாயக்காவுக்கு தெரியப்படுத்தி அச்சதியை முறயடிக்க உதவினார். இச்சதிக்கு ஏகாதிபத்திய நாடுகளின் பின்னனி இருந்தது. இலங்கை இ;துசாரிக் கூட்டரசுக்கு எதிராக செய்யப்பட்ட இராணுவச்சதி முயற்சியாகும். ஏகாதிப்த்தியத்தின் நேரடிப் பிரதிநிதிகளான யு.என்.பி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு இடதுசாரி சீர்திருத்தவாத அரசு பதிவியேற்றிருந்த காலம். தனியார்துறை தேசியமயமாக்கல் தீவிரமாய் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலம். சோசலிஸம் சுயசார்ப்புப்பொருளாதாரம் பற்றி அடதுசாரிகள் தீவிரமாகப் பேசிவந்த காலம் இச்சமயமே இந்த இராணுவச் சதிப்புரட்சி முயற்சி நடைபெற முயன்றது என்ற அரசியல் தருணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

இராணுவச் சதிப்புரட்சி முயற்சிக்கு எதிராக இடதுசாரிகள் எதிர்ப்பு இயக்கம்களை நடாத்தினர்கள். தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தன. ரெயில்வே, துறைமுகம் என்பன அசையாது நின்றன. இராணுவச் சதிப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அவர்கள் சிறமாவைக் கொன்றதுடன் நின்றிருக்கமாட்டார்கள். முழுக் கொம்யுனிஸ்ட் தலைவர்களiயும், தொழிற்சங்க தலைவர்களையும் கைதுசய்து சுட்டுக்கொன்றிருப்பார்கள். இடதுசாரிக் கட்சிகள் தொழிற்சங்கங்கள் உடன தடைசெய்து யு.என்.பி உடன் கூட்டுச் சோந்திருப்பார்கள். தான் அந்தக்காலத்தில் இடதுசாரி என்று தன்னை நினைத்துக்கொண்டிருந்த எஸ்.பொ வியனகே நணபர் ஜி.ஜி அவருக்காக வாதாடினார் என்று சாதகமாய் பேசுவது ஏன்? எங்காவது ஒரு இடதுசாரி இராணுவச்சதிப் புரட்சியை, இராணுவ சர்வாதிகாரத்தை அது ஏகாதிபத்திய உதவியுடன் நிகழ்த்தப்படுவதை ஆதரிக்கும் அதிசயம் நிகழுமா? இடதுசாரிகளுக்கு எதிர்ப்பு இராணவச்சதியாளர்களுக்கு சாதகமாக எழுதுவது என்றால் அது என்ன அரசியல்? ஜி.ஜி பொன்னம்பலம் இரண்டு இரானுவ ஜெனரல்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து “தோளகட்டி கிறஸ்தவ தேவாலயத்தில் ஒழித்து வைத்திருந்தார். ஜி.ஜி. பின்பு இவர்களுக்காக வாதாடினார். ஜி.ஜி. பொன்னம்பலம் வெறும் சடத்தரணியாக மட்டும் அவர்களுடன் தொடர்பு இருக்கவில்லை. இராணுவ ஜெனரல்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் தற்செயலல்ல. யாவும் ஏகாதிபத்திய ஏற்பாட்டினன்படி நடத்தவையாகும். எஸ்.பொ தனக்கு இராணுவச் சதிப்புரட்சியாளர்களில் ஒருவரான லியனகேயை நன்கு தெரியும் அவர் மனித நேயர் என்கிறாரே. இராணுவச்சதி புரிந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசைக் கவிழக்க முயல்பவர்கள் மனிதாபிமானிகளா? ஜனநாயகவாதிகளா? ஏகாதிபத்தியக் கூலிகள் இந்தத் தகுதியடைத்தவர்களாக இருப்பார்களா? இடதுசாரிக்கட்சியல் இருந்து தன் சொந்தக்காரியம்கள் பார்த்துக்கொண்டு இராணுவ சர்வாதிகாரம். புலிப்பாசிசம் இவைகளுக்கு எப்படி சேவை செய்வது என்று எஸ்.பொவுக்கு மட்டுமே தெரியும்.

முஸ்லீம்கள் குறித்து

புலிப்பாசிஸ்டுகள் முஸ்லீம் மக்களை யாழப்பாணத்திலிருந்து துரத்திவிட்டு அவர்களது இருப்பிடங்களையும், செல்வங்களையும் சூரையாடிய நிகழ்ச்சியை எஸ்.பொ வியாக்கியானப் படுத்திம்போது.
“போராட்ட நெருக்கடிகளில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் சிலர் அரச சார்பாக செய்ற்பட்டார்கள் என எண்பிக்கப்பட்டதும், கிழ்க்கிலங்கையில் அன்னியப் பணத்தில் தமிழ் இனஒழிப்புக்கு துணைபோன முஸ்லீம்கள் செய்த தமிழ் சங்காரத்தினாலும் யாழ்ப்பாண முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

இங்கு புலிகளின் தருத்தே பிரசங்கம் செய்யப்படுகிறது. அவரின் வாதப்படி யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு தமிழ் ஈழத்தை நிராகரிக்க உரிமைகிடையாது. ஜனநாயக ரீதியாக கருத்துரைக்கவும் பல்லினக்கலாச்சாரத்தை தேர்ந்த்து கொள்ளவும் சுதந்திரதம் இல்லை கிழக்கிலங்கையில் அன்னிய பணத்தில் முஸ்லிம்கள் தமிழ் ஒழிப்பில் ஈடுப்படதாக புலிப்பொய் சொல்லும் எஸ்.பொ கிழக்கில் புலிகளின் முஸ்லீம் மக்கள் மீதான பள்ளிவாசல் படுகொலைகள் உட்பட எதையும் குறிப்பிடவில்லை. தமிழ் பிரிவினை வாதிகள் இந்தியப் பயிற்சி ஆயுதம், நிதி பெற்றால் அது அன்னிய நிதி, ஆயுதம், இராணுவப் பயிற்சியில் சொந்த இலங்கை தேசத்தை எதிர்த்துப் போராடும் கைக்கூலித்தனம் ஆகாதா? நோர்வேயிடம் இப்போ புலிப்பாசிஸ்டுகள் பணம், பயிற்சி பெறுவது அன்னிய நாட்டின் உதவியுடன் பிறந்த நாட்டை எதிர்க்கும் துரோகம் இல்லையா? அவர்களுக்கு சகல மனித விரோதங்களும் செய்ய தமிழ்த்தேசியவாதம் விசேட அனுமதி பெற்றுள்ளதா? முஸ்லீம் மக்கள் ஐக்கிய இலங்கையை ஆதரிக்க உரிமை கிடையாதா? தமிழ் ஈழத்தை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த எஸ்.பொ யார்? எஸ்.பொவே சில முஸ்லீகள் அரசு சார்பாகச் செயற்பாட்டார்கள் என்று எழுதும்போது பலர் அப்படிச் செயற்படவில்லை என்றுதானே பொருள். யாழ் முஸ்லீம்கள் உண்மையில் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. தன்நாட்டுக் கோரிக்கை எழுந்த பின்பு அவர்கள் தமிழ்இனவாதிகளைவிட்டு தொலைவுக்குச் சென்றார்கள். அதே சமயம் இலங்கை அரசையும் ஆதரிக்கப் பயந்தனர். அவர்கள் சுதந்தர மற்றுப்போயினர். புலிப்பயரங்கரவாதிகளின் ஆயுதத்துக்கு பணிந்தே யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தனர்.

புலியை ஆதரித்துக்கொண்டு அவுஸ்ரேலியாவில் வாழும் உரிமையை எஸ்.பொ அனுபவித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் அங்கு வாழக்கூடாது என்று கருத்துப்பட எப்படி எஸ்.பொவால் கூற முடிகிறது. அவுஸ்ரேலியாவில் சில புலி நபர்கள் குற்றமிழைத்தார்கள் என்பதற்காக அங்குள்ள எஸ்.பொ உட்பட ஆயிரக்கணக்கான தமிர்களின் வீடு, வாசல் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு அவுஸ்ரேலியா அரசு அவர்களை இலங்ககை;குத் துரத்திவிட்டால் எப்படியிருக்கும். கொழும்பில் புலி நபர்கள் பதுங்கியுள்ளனர் என்பதற்காக இலங்கை அரசு கொழும்பில் உள்ள முழுத் தமிழர்களையும வடக்குக்கு அனுப்பி வைத்தால் அதையிட்டு எஸ்பொ என்ன சொல்வார். புலிகள் முஸ்லீம்களை 24 மணி நேரத்துள் கலைத்தமைக்கும், இவைக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். இலங்கை அரசை எதிர்த்து கொழும்பில் நீதின்றத்தில் வழக்குப்போடலாம். கைது செய்தவர்களை விடுதலை செய் என்று ஆட்கொள்ளுணர்வு மனுத்தாக்கல் செய்யலாம். புலிகளின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் புலிப்பாசிஸ்டுகளின் பிள்ளை பிடிப்புக்கு எதிரான ஒரு வழக்குப்போட முடியுமா? ஆயிரக்கணக்கில் புலிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் கொல்லப்பட்டவர்கள் சம்பந்தமாய் ஒரு எதிர் மனு போட முடியுமா? புலிப்பாசிஸ்டுகளைவிட இலங்கை முதலாளித்துவம் பல நூறு மடங்கு ஜனநாயகமானது எஸ்.பொ தொடர்ந்து புலிக்காக பின் வருமாறு வழக்காடுகிறார். வன்னியல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லீம்கள் வெளியேற்றத்துக்கு பிரபாகரன் மன்னிப்புக் கேட்டாராம், ஊடகவியலாளர் மாநாட்டில் 90களில் முஸ்லீம்களை வெளியேற்றியமை தவறு என்று அதற்காக பிரபாகரன் மன்னிப்புக்கேட்டது பதிவுக்குரியது. பொது வாழிவில் இயற்றப்படும் குற்றம்களை பொதுமக்கள் மத்தியில் ஒத்துக்கொள்வது நாகரீகம். ஈழத்தமிழ் மண்ணிலே தமிழர்களாலும் பிரேரிக்கப்பட்டது எமக்கு மிருந்த மன மிகழ்ச்சியைத தருகிறது” என்கிறார்.

முதலில் முஸ்லீம்களில் சிலர் அரசுக்கு சார்பாகச் செயற்பட்டார்கள். கிழக்கில் அன்னியப் பணத்தில் தமிழ் ஒழிப்பில் ஈடுபட்டமைக்காக முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினர் என்று குறிப்பிட்ட எஸ்.பொ பின்பு பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிமை தவறு என்று பத்திரிகையாளர் மாநாட்டில் மன்னிப்புக்கேட்டதாய் எழுதும்போது முன்னது பின்னதை மறுக்கிறது. தான் எழுதியாதை அவரே மறுக்கிறார். இந்த இரண்டிலும் எது உண்மை? பிரபாகரன் ஒரு மனிதனா? ஒரு கொலைக்காரனை பல பத்தாயிரம் பேரின் மரணத்துக்கு பொறுப்பானவனை தேசியத்தலைவர் என்று தமிழ்த்தேசியவாதிகள் அழைக்கிறார்கள். சார்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் பிரபாகரன் மன்னிப்புக்கேட்ட நிகழ்;ச்சி புலிகள் முஸ்லீம்களை துரத்தியமைக்கு இதுவரை சொல்லி வந்த காரணிகளை பொய் என்று நிரூபி;ககவில்லையா? அந்த ஊடகவியலார்மாநாட்டில் தேசியத்தலைவரின் மொழியாற்றலு; அறிவாற்றாலும் கண்டு சந்தி சிரிக்கவில்லையா? பிரபாகரன் முஸ்லீம்களை வெறியேற்றது பிழை என்று மன்னிப்புக்கேட்டதுடன் காரியம் முடிந்துவிட்டதா? வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு என்னபதில் அவர்களை வன்னியிலும், யாழிலும் குடியேற்ற வேண்டாமா?

கொள்ளையடித்த சொத்துக்களைத் திருப்பித்தர வேண்டாமா? அவர்களைக் கொற்துக்கும் குடியெடுப்பி 5 வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்வுக்கு தள்ளியமைக்கு பிரபாரனை நீதிமன்றத்தில நிறுத்த வேண்டாமா? இதோடு சம்பந்தப்பட்ட முழுப்புலிப்பாசிஸ்ட்டுகளையும் தேடிப்பிடித்து மக்கள் முன்பு பகிரங்க நீதி, விசாரனைகள், சாட்சியம் வேண்டாமா? எஸ்.பொ எழுதுவதுபொல் முஸ்லீம்களை வெளியேற்றமை என்பது புலிகள் எதோ பொது வாழ்வில் இழைத்த சாதாரணமான தவறா? அப்படியாயின் இலங்கை இராணுவம் சாதாரண தமிழ் பொதுமக்களுக்கு இழைத்ததும் பொது வாழ்வில் இழைத்த சராசரித் தவறா? பிரபாகரன் போல் இலங்கை அரசு ஒருமுறை பத்திரிகையாளர் மாநாட்டைக்கூட்டி மன்னிப்புக்கேட்டால் தமிழ் மக்களின் இழப்புகள் சரியாகிவிடுமா? அமெரிக்கர்கள் வியட்நாமியர்களிடமும், நாசிகள் யுதர்களிடமும், இந்துமத வெறியர்கள் முஸ்லீம்களிடமு: மன்னிப்புக் கேட்டால் சரியாகி விடுமா? புலிப்பாசிஸ்டுகளை முஸ்லீம் மக்கள் மடட்டுமல்ல தமிழ் சங்கள மக்கள் எவரும் மன்னிக்கக்கூடாது. புலிப்பாசிசக் கொடுமைகளை இன்னமும் மக்களின் மனம்களிலே அழமாய் நாம் அறைய வேண்டும். இலங்கை வரலாற்றில் இதுவரை ஒருபோதும் இல்லாத கொடுமையை இலங்கை மக்களுக்கு இழைத்த புலிகளை மறக்கக்கூடாது என்று நாம் மக்களிடம் கேட்கவேண்டும். புலிக் கொடுமைகளை மறைத்து எழுதும் எஸ்.பொ போன்ற தமிழ்த்தேசியவாத எழுத்துக் கூலிகளையும் தமிழ் மக்கள் மன்னிக்கக்கூடாது. இத்தகையவர்களையும் இவர்களின் எழுத்துக்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இந்தவகை எழுத்துக்களை மனித விரோத எழுத்து என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

“யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு செய்யப்பட்டது சரியா?” என்ற ஒரு கேள்வியை எழுப்பும் ஜனநாயகவாதிகள், புத்திஜீவிகள் என்போர் புகலிட நாடுகளிலும் பிழைப்பு நடத்துகிறார்கள் என்று எஸ்.பொ எழுதுகிறார். ஆக முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு என்பது பிழைப்புநடத்தும் வேலை ஆக தமிழ்மக்கள் மேலான அரசு தாக்குதலை எதிர்க்கும் சிங்கள இடதுசாரிகள், ஜனநாய சக்திகள் பிழைப்புவாதிகள். இன்று ஈராக்-ஆப்கானிஸ்தான் யுத்தம்களை எதிர்த்து நிற்கும் உலகின் முற்போக்கான அரசியல் சக்திகள் பிழைப்புவாதிகள். ஆனால் எஸ்.பொ தியாகத்தின் சொரூபம், மாவீரர் பரம்பரையின் அங்கத்தவர். புலிப்பாசிஸ்டுகளை எதிர்த்து அரசியல் செய்தவர்துகளையா? அவர்களை ஆதரித்து அவர்கள் அடி தொழுது வாழ்ந்த வர்களையா வரலாறு விடுவிக்கிறது என்று நாம் பார்க்கலாம்.

104
ஆதிக்குடிகள்
தமிழ் இனவாதிகளின் இருபிரிவுமே தாம்தான் இலங்கையின் மூத்தகுடி முதற்குடி ஏன்ற இனவாதச்சரவுகளைக் கடந்த 50 வருடம்களாக ஈடுபட்டுவந்துள்ளனர். இங்கு எஸ்.பொ.வும் தமிழ் இனவாதிகள் தரப்பிலிருந்து இலங்கையின் பூர்வருகுடிகள் திராவிடர்கள் என்று நிரூபிப்பதன் மூலம் தமிழ்தேசிய வாதிகட்கு பலம் தேடுகிறார். “இலங்கையின் பூர்வகுடிகளான வேடர்கள். நாகர்களில் நாகர்கள் எனப்படுவோர் திராவிடர்களே” என்கிறார் எஸ்.பொ.இன் இந்தக் கூற்றுகள் உண்மை வரலாற்றுடன் எந்தளவுக்கு சம்பந்தம் உடையவை என்பதைக் காண்பது அவசியம், தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பகுதியில் நுண்கற்காலப் பண்பாடு கி.மு.32,000 வருடம்களாக இருந்தபோது அது இலங்கையில் 28,000 வருடம்களாக இருந்தது. இந்தப்பண்பாட்டுக்குரிய மக்கள் தென் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய ஆசியப்பகுதி எங்கும் பரவியிருந்த “ஓஸ்ரலோயிட்” எனப்படும் மக்கள் பிரிவாகும் இவர்களின் வழிவந்தவர்களில் ஒருபிரிவே இன்றைய இலங்கை வேடராகும் இம்மக்;களின் வரலாறு பிற்கால ஆரிய, திராவிட விளக்கம் கட்கும் மிகவும் முற்பட்டதாகும். இம்மக்கள் இன்றைய மங்கோலிய, சீன மக்கள் பிரிவுகட்கு நெருக்கமானவர்கள். என்று கூறப்படுகிறது. இங்கு வேடர்களில் இருந்தே நாகர்கள் எனப்படுவோர் தோன்றிவளர்ந்து இருக்க வேண்டும் நாகர்கள் இலங்கையின் தமிழ் சிங்கள மக்களின்பொது மூதாதையராக இருக்க வேண்டுமே தவிர தனியே தமிழ்ர்களுடன் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல நாகர் என்ற பெயர்கள் , இடப்பெயர்கள், நாகவணக்கம் என்பன சிங்கள,தமிழ் இருமக்கள் பிரிவினருக்கும் பொதுவாகவே உள்ளது நாகர் கோவில் உள்ள தேளில் மறுபுறம் நயினா தீவு “நாகதிப” என்று சிங்களமக்களால் சுட்டப்படுகிறது. இலங்கை நாகதீபம் என்று அழைக்கப்பட்டது நாகர்கள் இயக்கர்கள் வேடர்கள் சகலருமே ஒஸ்லோயிட் மக்களின் வழித் தோற்றங்களே, இவர்கள், திராவிட, ஆரிய விளக்கம்கட்கு மிகவும் முந்தியவர்கள்
ஆனால் எஸ்.பொ.யார் இலங்கையின் மூத்தகுடி, இளையகுடி என்ற சச்சரனவப் புதுப்பிக்கிறார். தமிழன் முத்தியோ சிங்களவன், முந்தியோ வாதாட்டம்கள் வரலாற்றுப் பெறுமதியற்றளவயே பெருங்கற்காலப்பண்பாடு இலங்கையில் கி.மு.

105
ஆயிரம் ஆண்டுகட்குப் பந்தியதாகவும் தென்னிந்தியாவுடன் தொடர்புடையதாகவுமே இருந்தன. இக்காலத்தில்தான் இலங்கைகளில் விவசாய உற்பத்தி, நீர்ப்பாசனம் வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம் என்பன தொடங்குகின்றன. தென் இந்தியா மற்றும் இலங்கை நாகரீகம்கள் கி.மு.500 நூற்றாண்டில் இருந்தே தொடங்குகின்றன. நகரஅமைப்புகள் உறுதியான பரந்த பொருளாதாரச் செயற்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. கி.மு. 2ம் 3ம் நூற்றண்டுகளில் இலங்கையில் 260 மேற்பட்ட சிறு சிறு இனக் குழுக்கள் இருந்துள்ளன அனுராதபுரம். பொலநறுவை போன்ற மக்கள் முன்பு பெரும் தொகையாய் வாழ்ந்த நகர் சார்ந்த சான்றாதாரம்கள் தமிழ்ப்பகுதிகளில் இல்லை சிங்களமக்கள் இருந்தே வரலாறு தொடங்குகிறது சிங்களமக்களின் வரலாற்றுக்கு பௌத்தத்தின் தொன்னமக்கு இலக்கிய மற்றும் தொல் பொருள் சான்றுகள் உறுதியாக உள்ளன. எனவே நவீன வரலாறு சிங்கள மக்களில் இருந்தே தொடங்கியது என்பதை ஒப்பாமல் தமிழ் தேசியவாதிகள் வரலாற்று எழுதுதல் மேல் ஆய்வுகட்டுப்பதில் தேசியவாதம் சார்ந்த தொல் நம்பிக்கைகளை சுமத்த முயல்கின்றனர். இந்திரபாலாவைத்தவிரமற்றய தமிழ் வரலாற்று எழுதிகள் தமிழ்தேசிய வாத அரசியலுக்கு ஏற்ப தமிழ்மக்கள் வரலாற்றை பின்தள்ளவும் இனப்பெருமைகளில் நிரப்பவும் முயன்றனர். தனித் தமிழ்நாட்டுக்கு ஆதரலான சரித்திரம்களைப்படைத்தனர். பொ.பாலசுந்தரம்பிள்ளை ப.புஸ்ப்பரத்தினம், சி.க.சிற்றம்பலம் தள்ளவும் இனப்பெருமைகளில் வரலாற்றை நிரப்பவும் முயன்றனர், தனித் தமிழ்நாட்டுக்கு ஆதரவான சரித்திரம்களைப்படைத்தனர். தமிழரசுக்கட்சி முதல் இன்றைய புலிப் பாசிஸ்டுகள் வரை பேசிய “போத்துக் கேயர் வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தது. என்றவாதம் வைக்கப்பட்டு வந்தது. பிரிவுகளைக்கு இவ்வாறு நியாயம்கள் தேடப்பட்டன. மூன்று அரசுகள் அப்போது இருந்தது என்றால் கண்டி அரசு இப்போ பிரிந்து தனியரசா கேட்கிறார்கள்? கோட்டை ராசசியத்தில் கூடை கோட்டை, ராகம், சீதவாக்கை என்ற பிரிவுகள் இருந்தனவே எனவே அக்காலத்துக்கு இன்று திரும்பி செல்ல முடியுமா? இந்தியா முதல் ஜெர்மனி, பிரான்ஸ். சீனா வரை எத்தனை சிற்றரசுகள் நாடுகளாக கிடந்தன எனவே நாட்டை உடைத்து, பிரிவினை செய்ய கடந்த காலத்துள் பிரவேசிக்க இன்றைய நிலை ஒப்புமா? யாழ்ப்பாண அரசில் குடாநாடும் தீவுப் பகுதியும் மட்டுமே இருந்தன, வன்னிப்பிரதேசம் பெரும் பாலும் சுதந்திரமான சிற்றரசாகவே இருந்தது அது யாழ்ப்பாண ராச்சியத்தில்
106
இருக்கவில்லை பலசமயம் கண்டி அரசோடும் சில சமயம் யாழ்ப்பாண அரசுக்கும் வரிசெலுத்தியது யாழ்ப்பா அரசு விழ்ந்தபிற்பும் வன்னி சுதந்திரமாக இருந்தது. ஒல்லாந்த, பிரிட்டிஸ் ஆட்சிகளுடன் போரிட்டது. எனவே வன்னி இன்று தனியரசாக முடியுமா? இலங்கையில் இருந்து பிரியப்போரட முடியுமா?
கி.பி 7ம் நூற்றாண்டிலேயே வடபகுதியில் தமிழரசு ஒன்று தோன்றிவிட்டதாக புஸ்ப்பரட்ணம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் சரித்திரம் எழுத்த தொடங்கிவிட்டனர் சமகால தமிழ்தேசிய வாத அரசியலுக்கு எற்ப வரலாற்றுள் இனவாதம் நுழைகிறது. தென்இந்தியப் படை எடுப்பாளர்கள் பாண்டிய சோழ மன்னர்களது ஆக்கிரமிப்புக்களைத் கூட தமிழ்மக்ககளின் ஆட்சியாக்காட்ட முடியும் போக்கு உள்ளது.
சோழர்கள்
இலங்கை மேலான சோழர்களின் படை யெடுப்பை கைப்பற்றி ஆண்ட செயலை ஏனைய தமிழ்த்தேசியவாதிகள் போன்றே எஸ்.பொவும் பெருமை பூத்தபடிதான் எழுதுகிறார். கோழர்கள் தமிழிமர்கள் என்பதால் அவர்கட்கு இலங்கையை ஆக்கிரமிக்கும் உரிமையை எஸ்.பொ தானே முன்வந்து மனமுவர்ந்து தருகிறார். சிங்களவர்கள் ஆக்கிரமிக்கவோ ஆளவோ கூடாதே தவிர வீரத்தமிழ்ர்கட்கு நாடுயிருக்கக ஏனைய மக்கள் அடிமை கொள்ள விசேட உரிமை தரப்படுகிறது அன்றைய சோழப்படை எடுப்புகளை இன்றைய புலிப்பாசிச அரசியலின் தமிழின வெறியின் தேவைகளிலிருந்து எஸ்.பொ. பரிசிலிக்கிறார். எஸ்.பொ. தமிழ்சினிமாவின் தீவரமான பாதிப்புடைய வர என்ற வகையில் இராஜசோழளை, வரலாற்றில் கண்டறிவதை விட இராஜசோழன் சினிமாவி; வந்த சிவாஜி கணேசனிடம்தான் கண்டுயிர்த்திருப்பார். இராஜசோழன் நீதிதவறாத சிபிச்சக்கர வர்த்தியின் வழிவந்த சோழன், செங்கோலாட்சி புரிந்தவன். கங்கையும் கடாரமும் வென்றவன் ஈழத்தை படை நடத்தி வெற்றி கண்டவன் அன்பும் அற்றும், வீரமும், கொடையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவன் எற்ற சமூக வரலாற்றுப் பார் வைக்கும் பொருத்தமற்ற தமிழ்தேசியவாத வகைப்பட்ட இலக்கியத்தனம் கொண்ட வியரிப்புகளே எஸ்.பொ. போன்றவர்களின் மூளைக்கலன்களில் பதிவாகியுள்ளன.

107
எப்படி இந்திய சமாதானப் படைகள் தமிழ்மக்களைக் கொன்று, கொள்ளையிட்டு பாலியல் வன்முறைகளை நடத்தியதோ அதை விட பலபத்துமடங்கு வீடு கொடுமைகளை 10,11ம் நூற்றாண்டு சோழப்படைகள் இலங்கையில் நடத்தியிருக்கும் அவர்கள், சிங்கள மக்கனள் மட்டுமல்ல, அதற்குச் சமமாய் தமிழர்களையும் வேறுபாடு இன்றி அழிந்து இருப்பார்கள். சோழர்படைகளில் தனியே தமிழர்கள் மட்டும் இருக்கவில்லை. தென்னிந்தியாவின் பல பிரிவு மக்கள் இருந்தனர் அதே சமயம் சிங்கள மன்னர்களில் படைகளில் தமிழ்ர்களும் ஏனைய மக்களும் கூட இருந்தனர். எனவே சோழர்கள் சிங்களவர்களை மட்டுமே அழித்திருப்பர் தமிழர்கள் மேல் தமிழ் பாசமழை பொழிந்திருப்பார்கள் என்பதெல்லாம் இன்றைய தமிழ் தேசிய வாதிகளின் இனவாதக் கற்பனையே சோழர்கள் பௌத்தர்களின் நிர்ணயகரமான எதிரிகள் என்பதால் இலங்கையில் இருந்த தமிழ் பௌத்தளையும் சேர்ந்தே அழித்தொழித்து இருப்பார்கள் ஏன் சோழர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களான பாண்டியர்களையும் அந்தநாடுகளில் வாழ்ந்த தமிழர்களையும் கொன்று கொள்ளையிடவில்லையா? விளைநிலம்களைப் பாழ் செய்தும் ஆடு, மாடுகள் உட்பட செல்வம்களைக் கவரவில்லையா, தீயிட்டு நாட்டை சாம்பலாக்கவில்லையா? எஸ்.பொ தேசியவாதத்தின் விசித்திரக்கற்பனை யாளர்கள் இப்படித்தான் வரலாற்று பொய்களில் கலந்து கொள்ள மக்கனள் அழைக்கிறார்கள் இராஜ ராஜசோழனும், முதலாம் இராசேந்திரனும் தமிழர்தம் கஜினி முகம்மதுக்களாகவே இருந்திருப்பார்கள்.

மேலும் சோழர்காலப் படை யெடுப்புகள் தமிழர்களின் குடியேற்றம்களை மட்டுமே ஏற்படுத்தியதாய் கருதுவதும் தவறு ஏன்னெனில் சோழர்களின் படைகளுடன் நானாதேசிகன் ஜந்நூற்றுவர், செட்டிகள், செட்டிபுத்திரர்கள், கவறையர் காமுண்டஸ்வாமி, ஆவணக்காறர், வீரவலஞ்சியர், வீரக்கொடி போன்ற வணிக குலம்கள், வடக்கின் துறைமுகப்பகுதிகளில் மட்டுமல்ல சிங்களப்பகுதிகளிலும் செல்வம்மிக்கவர்களாக இருந்தனர் பட்டினம்களைக் கட்டுப்படுத்தினார். இவர்களில் பல பிரிவு மக்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாகும் இந்த வணிகக்குழுக்கள் பல்வேறுபடைப்பிரிவுகளையும் தமது பாதுகாப்புக்களாகக் கொண்டடிருந்தனர். அங்கக்காறர். கொங்குவாளர், வீரக்கொடி, குருகுலத்தார். அகம்படியார். வேளக்காறர்,
108
போன்ற மக்கள் பிரிவுகள் படைகளில் இருந்தனர் வணிகர்களின் சொத்துக்களைப்பாதுகாப்பவர்களாக இருந்தனர் அப்போது வடக்கின் குடியேற்றம்கள் கடற்கனரகளை அண்டியே இருந்தது. என்றால் அவை ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வணிகத்துடன் தொடர்புடையது. என்றே அர்த்தம், யாழ்குடாநாடானது. ஆறு குளம்கள் மலைகள், காடுகள், ஏரிகள், நன்னிர்வளம் இல்லாத பிரதேசமாகும் சிறந்த வளமான மண் மிகவும் அருகிய பிரதேசமாகும். எனவே இங்கு பெரும் மக்கள் குடியேறத்தக்க சூழல்கள் இருந்திரா. விவசாய உற்பத்திக்கான வாய்ப்பு இல்லாவிட்டால் மக்கள்குடியேற்றம் குடிசனப்பெருக்கம் என்பன ஏற்படமாட்டா விவசாய அமைப்பு பலமாக இல்லாவிட்டால் நிலையான மக்கள் குடியிருப்புக்களோ நிலையான அரசுவடிவமோ தோன்றமாட்டது.

பூநகரியை தமிழர்களின் ஆட்சிப் பிரதேசமாய் கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்குடியேற்றம் அங்கு நிலவியது என்பதை நிறுவும் கல்வெட்டு பண்பாட்டு, நாணயம் சார்ந்த ஆய்வுகட்குயாழ் பல்கலைக்கழகம் முயன்றுள்ளது. பூநகரி, மாதோட்டம் போன்றவை இலங்கையின் தமிழ்நாட்டுக்கான நுழைவாயிலாக ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகப்பிரதேசமாகவே இருந்திருக்க வேண்டும். பெருமளவு உற்பத்தி நடை பெறத்தக்க மக்கள் தொகை பரந்த பிரதேசமாக அவை இருந்திருக்க முடியாது தென்னிலங்கை உட்பட ஏனைய பகுதிகட்கான துறைமுகம்களாக இவை விளங்கின என்பதே பொருத்தமுடையது. பூநகரியல் கிடைத்த நாணயம்கள் தென் இந்திய மன்னர்களது அதிகாரம் வர்த்தகம் இனவதிகளையே காட்டுகிறது, வர்த்தகம், மீன்பிடி, கப்பல் ஒட்டுதல், இறக்குமதி, ஏற்றுமதியுடன் தொடர்புடைய மக்களும் சிறுவிவாசய முயற்சிகளும் அங்கு இடம் பெற்றிருக்கவாம். நிரந்தரமான மக்கள் குடியிருப்பும் அது சார்ந்த விவசாய நாகரிகமும் .இல்லாவிட்டால் அங்கு அரசுவடிவம் இருந்திருக்க முடியாது மாறமக தென்னிந்தியச் செல்வாக்குட்பட்ட நிர்வாகமோ பகுதிகளோ தான் இருந்திருக்கமுடியும் அங்கு சமண, பௌத்த மதத் தொடர்புடைய சின்னங்கள் கண்டு பிடிக்பட்டுள்ளமை தென்னிந்திய செல்வாக்குப் பரம்பல் என்றே கொள்ளமுடியுமே தவிர அது தனித்தமிழ் அரசு வடிவம் ஒன்றினது மூல ஆதாரமல்ல.
109

அனுராதபுரத்தை எஸ்.பொ.தமிழர்கட்கு உரியது என்று உரிமை கோருகிறார். அனுராதபுரம் சிங்கள மக்களின் மூத்த கலாச்சாரத்துக்குரிய இடமாகும்; ஆதிமுதல் தமிழ்குடியேற்றமங்கள் இலங்கை முழுவதும் பரவியிருந்தது போல் அங்கும் இருந்திருக்கும் என்பதை மறுக்காத அதேசமயம் அனுராதபுரத்தை தமிழர்கட்கு உரியதாக உடமை பாராட்டுதல் வரலாற்றுண்மைகளில் புகுந்து தமிழ் இனவாதத்துக்காக அடர்த்து செய்வதாகும். யாழ்ப்பாணம் உட்பட தமிழ்பகுதிகளில் சிங்களமக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதால் அதனை சிங்களப்பிரதேசமாக இவரும் கணிப்பதில்iலை. இவை தமிழ், சிங்கள மக்களின் கலப்புத்தன்மை சகோதர மக்கள் பிரிவாக நெடுங்காலம் வாழ்ந்து வந்தமையின் தடயம்களாகும். தொன்று தொட்டு தமிழ் தனியரசு ஒன்று தமிழ்ப்பகுதிகளில் நிலவியது என்ற நிருபணம்கட்கு தமிழ்த்தேசியவதிகளுடன் கூட்டாணி கூட்டிக்கொண்டு எஸ்.பொ.வும் அலைந்து திரிகிறார். பொய்ச் சரித்திரம்கட்கு முயல்கிறார்.

தனித்தமிழ் அரசு

எஸ்.பொ.போன்ற தமிழ்ப்பிரிவினைவாதிகள் தனித்தமிழ் அரசு என்ற கருத்தை மெய்ப்பிக்க 1505 இல் பொதுக்கேயர் இலங்கை வந்தபோது வடக்கில் தமிழ் அரசு இருந்தது என்றே தொடங்குகிறார்கள் கைலாயமாவை, வைபமாவை, வையாபாடல், மட்டக்களப்பு மான்மியம், கோணேசர் கல்வெட்டு, திருகோணாசலபுராணம், இவைகளை வைத்தே தமிழ்அரசுக்கான வரலாற்ற நிருபணம்கட்கு முயற்சிக்கப்பட்டது. யாழ்ப்பாடி மாருதப்புரலிகவல்லி, உக்கிரமசிங்கன் கதைகள் வரலாற்று மாந்தராகக் கொள்ளப்பட்டன. இதில் அரசியல், வரலாற்றுச் செய்திகள் காவலரையறையற்று தென்பட்டன என்று நாம் நம்ப, இடமுள்ள போதும் இவைகளின் பெரும்பகுதி செவிவழிச் செய்திகள் கட்டுக்கதைகள் ஆகியவற்றின் திரட்டலாகும், மாருதப்புரவீகவல்லி, உக்கிரமசிங்கன் கதையானது மகாவம்ச விஜயனின் கதையை எடுத்துக்கையாளப் பட்டுள்ளது அல்லது அதை யொத்த புனைகதைகளாகும் கண்பார்வையற்ற புலவரான அந்தக்கவீரராகவரின்” கதையானது யாழ்ப்பாடியின் கதையானது. இப்போக்குகள் தமிழரசுக்கட்சியின் அரசியல் பிறப்புடன் தமிழ் பிரிவினை வாதக்கருத்துக்கட்டு வலுச்சேர்க்கும் வரலாற்றுண்மைகளைப் பற்றிக்கவலையுறாதவைகளாக வளர்க்கப்பட்டன. 1215இல் கலிங்கமாகனின் பின்பே

110

பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்த பின்பே வடக்கில் ஒரு அரசும் வன்னியில் சிற்றரசுகளும் தோற்றம் பெற்றன என்று நம்பத்தகுந்த ஆதாரம்களே உள்ளன. யாழ்ப்பாண இராசசியத்தை கலங்கமாகனே தோற்றுவித்;;;;;;;;;;தையும் கலிங்க அரசுக்கும் யாழ்ப்பாண அரசுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் உதாரணமாக அரசுத்தலை நகர், நாணயம்கள் அரசு இலட்சளை உட்படப் பலவற்றை பேராசிரியர் இந்திரபாலா காட்டியுள்ளார். இங்கு புர என்ற கலிங்கமப்; பெயரே சிங்கன நகராகியது என்றும் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக கலிங்கமாகளின், சாவகர் ஆகியோர் ஆட்சி செய்த அர சொன்று வடக்கில் இருந்திருக்கலா மென்றும் அவர் கூறினார். கலிங்கர்கள் பொல நறுவை சிங்கள மன்னர்களுடன் கலந்து உறவு கொண்டு இருந்தனர். என்பதால் வடக்கில் தோன்றிய அரசானது இதன் தொடர்ச்சியாகவே கொள்ள வேண்டும் தங்கேஸ்வரி எழுதிய “மாகன் வரலாறு” நூலும் கலிங்கமாகனே யாழ்ப்பாண இராச்சியத்தை தோற்றுவித்த தவனாகக் காட்டப்பட்டுளான் இவர் இந்த ஆய்வை கல்வெட்டு ஆய்வு அடிப்படையில் நிகழ்த்தினார் வடபகுதியின் அரசின் தோற்றத்தை பாளி. சிங்கள தமிழ் இலக்கிய, வரலாற்று ஆதாரம், தொல் பொருட்சான்றுகளின் அடிப்படையில் இந்திரபாலா ஆய்ந்தார். ஆனால் இப்போ தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தேடி எழுதப்படும் வரலாற்று ஆய்வுகளில் யாழ்ப்பாண அரசுக்கு முந்திய நல்லூருக்கும் முற்பட்ட சிங்கை நகரைத் தேடிப்புறப்பட்டுள்ளனர். கந்தரோனடயேகதிரமனல என்றும் அங்குதான் முதல் தமிழ் அரசு நிலவியதான கருத்துக்களும் கட்டப்படுகின்றன. இது சோழநாட்டு இளவரசி மாருதப்புரவிகவல்லி, உக்கிரமசிங்கன் கதைகளுடனும் தொடர்பு படுத்தபடுகிறது இவை பானி இலக்கியம்கள் கூறும் விஜயன் குவேனி கதைகளின் மாற்று வடிவமே இக்காலத்தில் இங்கு தமிழ் இராக்சியம் ஏற்று நிலவியிருக்க முடியாது என்று இந்திரபாலா மறுத்தார். யாழ்ப்பாண வைபமாலை சிங்ககை நகரை வன்னிச்சிற்றரசுகளிடம் நிலவியதாய்க் கூறியதுடன் அவை ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்தது என்றும் கூறியது. இதையொட்டி தமிழ்தேசிய வாத வரலாற்று எழுதல் அதிரமலை அரசை கி.பி 8ம் நூற்றாண்டுக்கு தள்ளிச் சென்றன. 10ம் 11ம் நூற்றாண்டு சோழர் ஆட்சிக்காலத்தின் பின்பே சிங்களமக்களிடமிருந்து வேறுப்பட்ட தமிழ்மக்களின் அடையாளம்களைக் கொண்ட நிலை தொடங்குவதாய்க் கொள்ள முடியும் சோழர் ஆட்சியே யாழ்ப்பாண ராச்சியத்தின், தோற்றத்துக்கும் காரணம் என்ற வாதத்துக்கு வரலாற்று ஆதாரமில்லை. 9ம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் வரைத் தொடங்கிய சோழ அரசு 10ம், 11ம் நூற்றாண்டுகளால் அன்னியப்படை

111
எடுப்புகளையும் நடத்தியது, யாழ்பாணமன்னர்களான செகராசசேகரனையே, பரராச சேகரனையோ கூட இன அடிப்படையில் தமிழ்மன்னர்களாகக் கொள்ள முடியாது. அக்காலத்தில் பல மொழபேசிய மன்னர்களின் கலப்புகளாகவே அரசர்கள் இருந்தனர் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் தமிழ் சிங்கள மக்கள் கலந்து வாழ்ந்தனர் தனித்துவமான மக்கள் கலப்பற்ற பிரதேசம்கள் இலங்கையில் நிலவியிருக்க முடியும் என்பது இனவாதிகளின் தூய கற்பனையே, சிங்கள மக்களின் பகுதியில் தமிழ் மக்கள் வாழ்ந்தது போல் தமிழ் மக்களின் பிரதேசம்களிலும் சிங்களமக்கள் வாழ்ந்தனன், ஏராளமான சிங்களப் பெயர் தமிழ்ப்பகுதிகளில் கிராமங்கட்கு இருந்தன. முதல் தமிழ் அரசு என்று விளக்க முற்படும் “கதிரமலை” யானது “கதிறு கொட” என்ற சிங்களச் சொல்வின் திரிபு எனக்கருதப்படுகிறது கதிறு என்பது சிங்களத்தில் எட்டிமரம் கொட என்பது பிட்டி அல்லது இடம் என்று பொருள்படும் இந்தக்கதிரமலையே பிற்காலக்கந்தரோடையாகும் இங்கு சிங்கள மக்களின் குடியிருப்புகளும் இருந்திருக்க வேண்டும் தமிழ், சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்திருத்தல் சாத்தியம் யாழ் குடநாட்டை தனித்தமிழ் பிரதேசமாக வாதிடும் தமிழ் தேசிய வாதிகட்கு எதிராகவே வரலாற்று உண்மைகள் உள்ளன. மயிலசிட்டி என்ற சிங்களப் பெயர் மயிலிட்டி ஆகவும் வலிகம் என்ற பெயர் வலிகாமம் எனவும்மாறியுள்ளன. வலிகம என்பதன் தமிழ்பதம் மணலூர் என்று இந்திரபாலா எழுதியுள்ளார். தம்பசிட்டி கையிட்டி போயிட்டி, மியிட்டி, என்பன சிங்கள மற்றும் நாகர் காலப் பெயருர்களுடன் தொடர்புடையவையாகும், கொடிகாமம,; சுண்ணாகம், மல்லாகம், அளவெட்டி, விமன்காமம், சந்திராவத்தை, கனட்டி, இணுவில் உடுவில், மானிப்பாய், கொக்குவில், மட்டுவில், கோண்டாவில், நந்தாவில், குடந்தனை, நாரந்தனை, என்பன சிங்களப் பெயர்களாக இருந்து தமிழ்மயமாகியனவயே நூகர்கள் என்போர் தமிழ் சிங்கள இருபிரிவினரதும் மூதாதையரே நாகர்வணக்கம் இருபகுதிமக்களிடமும் நிலவியவருகிறது, நாகபாம்பை வழிபடல், பாம்புக்கு கோழி பலியிடல், பால், நெய் ஊற்றுதல், இறந்த அல்லது கொல்லப் பட்ட நாகபாம்பு புனிதமானதாகவும் அதைக் கொல்லக்கூடாது எனக் கருதும் போக்கு தமிழ் சிங்கள மக்களுக்கு பொதுவான கருத்தாக இன்றும் நிலவிவருகிறது. இவை பழைய நாகவழிபாட்டின் மிச்சம்களாகும்.

தமிழரசன் பெர்லின்


எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்(6)


(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)

No comments: