Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில் பகுதி:(4)

பகுதி:(4)

-உப உணவு உற்பத்தி-

1970 பின்பு ஏற்பட்ட அரிசி, மா, சீனி, பாண், பால்மா, பருப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் கியூக்களை யு.என்.பி தமிழர் கூட்டணி அரசியல்வாதிகள் போலவே எஸ்.பொவும் நினைவு கூறுகிறார். அது கொடுமையான காலம் என அவரது தமிழ் நடுத்தரவர்க்க நுகர்வாளர் கூட்டம் அழுது கொட்டுகின்றது. இடதுசாரி கூட்டரசுக்கு முன்பு மிளகாய், வெங்காயம், உருளைக்கிழக்கு, பருப்பு போன்றவைகளின் இறக்குமதிக்கு வருடாவருடம் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. உப உணவுப்பொருட்கள் தடையை கொண்டுவந்தமையால் தமிழ் விவசாயிகளே இதனால் பயன்பெற்றனர். இது சிங்கள விவசாயிகள் உற்பத்தி செய்யாத பொருட்களாகும். யாழ்பாணம், வன்னிப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட செத்தல் மிளகாயை சிங்கள மக்கள் 40 ரூபாய்க்கு வாங்கினார்கள். வெங்காயம். 25 ரூபாய் விலைபோனது. வடபகுதி விவசாய நடவடிக்கைகளின் வெற்றி படிப்படியாக வவுனியா, மதவாச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் போன்ற பகுதிகட்கு பரவியது. தமிழ் மக்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள் என்ற எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த உள்ளுர் விவாசய முயற்சிகளை எதிர்க்கவில்லை. வெங்காயம் இறக்குமதிக்காலத்தில் 1.50 சதம் விற்றது. அது 25 ரூபா வரை ஏறியபோதும் உற்பத்தி பெருகத்தொடங்கி 3 வருடங்களில் விலை குறையத் தொடங்கியது. பழைய விலைக்கு ஏறக்குறையச் சமமான விலை இறங்கியது. பாண், அரிசி, மா, பால்மா, பருப்பு, சீனி தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் நீண்ட கியூக்கள் ஏற்பட்டபோதும் இது தனியே இறக்கமதித்தடையால் நிகழ்ந்துவிடவில்லை. இதற்கு பெருமளவு கறுப்புச்சந்தையும் காரணமாகும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட தனியார் வர்த்தகர்கள் இறக்குமதித்தடையால் பாதிப்புற்றனர். இவர்கள் அரசுக்கு தமது வன்மமான எதிர்ப்பைக் காட்டினார்கள். பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.

கறுப்புச் சந்தைக்கு எதிராய் அரசு போராடியபோதும் முதலாளியச் சீர்திருத்தம்களில் ஈடுப்டிருந்த அரசாங்கம் வர்த்தகத்தை அரசுமயப்படுத்தவில்லை. முதலாளிகள் ஒழிக்கப்படவில்லை. எனவே அவர்கள் சுதந்திரமாய் இயக்கினார்கள். அரசின் வழக்கமான ஊழல், முறைகோடுகளில் அவர்கள் செயற்பட இடமிருந்தது. கோதுமை மா இறக்குமதியில் கட்டுப்பாடு நிலவியப்படியால், பயறு, உழுந்து, கடலை வகைகள் உற்பத்தியுடன் குரக்கன், திணை, வரகு போன்றவற்றின் தானிய உற்பத்தி பெருகியது. ராசவள்ளிக்கிழக்கு, கருணைக்கிழங்கு, வத்தாளைக்கிழங்கு, மரவள்ளிக்கிங்கு போன்ற கிழங்கு வகைகளின் உற்பத்தி தீவிரமாயப் பெருகியது. பயிரிடலும் பாவனையும் அதிகரித்தது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான அதிகம் ஊட்டச்சத்தற்ற கோதுமை மாவின் இடத்துக்கு இந்த உற்பத்திகள் வரத்தொடங்கின. இலங்கை மக்கள் தமது பாரம்பரியமான உணவுப்பொருட்களை மீண்டும் தேடிக்கண்டறிந்தார்கள். செய்கை பண்ணைப்படாத நெற்காணிகள், தோட்டக்காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு உழைக்கும் விவசாயிகட்கு தரப்பட்டது. வருடக்கணக்கில் பயிரிடப்படாமல் கிடந்த நிலம்கள் பயிர் செய்யப்பட்டது. புதிய உழைப்பாளர்கட்குச் சென்றது. யாழ்குடாநாட்டின் வடலிக்காணிகள், நாயுண்ணிப்பத்தைகள், சுண்ணாம்புக்கல் நிறைந்த களட்டிக்காணிகள் கல்கிளறி விவசாயம் செய்யும் பூமிகளாக மாறின விவசாயம் வளர்ந்து இலாபம் தரும் தொழிலாக மாறியமையால் உத்தியோக ஆர்வம் குறைந்தது. தோட்டக்காரரிடம் பொம்பிளை எடுக்கவும், பொம்பிளை கொடுக்கவும் தயாரானவர்கள் தோற்றம் பெற்றனர். தமிழ்பகுதிகளில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல்முறையாக கமம், தோட்டம் செய்வதையிட்டுப் பொருமைப்பட்டார்கள். தோட்டம் செய்பவர்களும் வெட்கப்படாமல் உத்தியோகம் பார்ப்பவர்களுக்குச் சமமாய் காற்சட்டை போடத்தொடங்கினார்கள் படித்த வாலிபத்திட்டம்களில் கல்விகற்ற இளைஞர்கள் நவீன முறைகளில் விவசாயம் செய்தார்கள்.

விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரம், சிங்கர், உசா தையல் மெசின்கள், சைக்கிள்கள் இரண்டு வீல் லாண்ட் மாஸ்டர், உழவு இயந்திரம், மாடு வண்டில், ரேடியோ என்பன வாங்கினார்கள். கொட்டில் வீடுகள் மண் வீடுகளாகவும், கல்வீடுகளாகவும் மாறத்தொடங்கின. விவசாயிக்ள தமது குமர்களைக் கரை சேர்த்தார்கள். வன்னிப் பகுதியில் பிரமாண்டமான மாற்றம்கள் ஏற்பட்டது. 2-3 ஏக்கர் என்ற அளவில்கூட யாழ்குடாநாட்டைவிட பெரியதாக மிளகாய்கன்று வெங்காய நடுகைகள் நடைபெற்றது. வன்னியின் விவசாயிகள் மிளகாய்ப்பழத்தை “சிவப்பி என்று அழைத்தார்கள், விவசாயிகளின் வீடுகளில் ரக்டர்கள் வரத்தொடங்கின. கல்வீடுகள் மிளகாய் விற்றகாசில் எழுத் தொடங்கின. பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளிக்குப் போனார்கள். 6ம், 7ம் வகுப்புக்கு மேல் படியாத வன்னியப்பகுதிப்பிள்ளைகள் க.பொ.த. சாதாரண, உயர்த்தரப்பரீட்சை கட்கும், பல்கலைக்கழகம் செல்லும் காலம் தொடங்கியது. வேட்டை, நெற் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈபட்ட வன்னி விவசாயிகள் மிளகாய், வெங்காயம், பயறு, உழுந்து, கச்சான், எள்ளும் உற்பத்திகளில் ஏக்கர்கணக்கில் ஈடுபட்டனர். வன்னிதானியக் களஞ்சியமாக மாறியது. உற்பத்திப்பொருட்கள் கொழும்புக்கு எற்றுமதி செய்யப்பட்டது. செந்தல் மிளகாய், வெங்காயம் ஏற்றிச் சென்ற பொறி விவசாயிகள் முதன்முறையாக கொழும்பு சென்று திரும்பினார்கள். ஒப்பீட்டு ரீதியி;ல் பசிபட்டினி குறைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் நெல், உழுந்து, கச்சான், எள்ளு, வெங்காயம் போன்றவை விவசாயிகளிடம் சொந்தத்தேவைக்கு சேமிப்பாக இருந்தது.

யாழ்குடாநட்டுக்குள் முதன் முறையாக வசா விளான், உரும்பிராய்ப் பகுதியில் பல இடம்களில் முந்திரிகைப்பயிர்ச் செய்கை தொடங்கியது. யாழ்ப்பணத்தில் வட முந்திரிகைச்செய்கை பண்ணப்பட்ட முடியுமா? எனப்பலர் அதிசயித்தினர். என்.எம்.பெரேரா தானே உரும்பிராயில் முந்திரிகைத் தோட்டம்களுக்கு சென்று பார்வையிட்டார். இணுவில், தாளையடி போன்ற இடம்களில் உள்ளுர் தேவைக்கு கொழும்புக்கும் ஏற்றுமதிக்குமாக ரோசாப்பூ உற்பத்தி செய்யப்பட்டது. இவை வெப்பவலயப் பிரதேசத்தில் கடுவல் பிரதேசத்தில் வளர்ந்ததால் மிகச் சிறப்பான வாசனை படைத்தவையாக இருந்தன. பெருமளவு உற்பத்தி செய்யப்ட்டது. கொழும்புக்கு ஏற்றுமதி செய்ய வென்றே பெருமளவு வாழைத்தோட்டம்கள் 1970களில் எழுந்தன. நீர்வேலி, அச்சுவேலிப்பகுதிகளில் வாழைக்குலைகளால் யாழ்ப்பாணச் சந்தைகள் நிறைந்தன. பருத்துத்துறை, மயிலிட்டி, மாதகல் பகுதியில் மீன், கருவாடு ஏற்றுமதியும்;, தீவுப்பகுதிகளில் இருந்து பினாட்டு, பாணிப்பினாட்டு உற்பத்தியாகியது. தென்னிலங்கைச் சிங்கள மக்களின் பினாட்டு ஆசைக்கும் ஒடியல், பனங்கட்டித் தேவைக்கும் உற்பத்தி நடந்தது. நல்லெண்ணை, நெல்லிரசம், புகையிலை, கோடாச்சுருட்ரு, சுருட்டு, பாணிப்புகையிலை என்பனவும் யாழ்குடாநாட்டில் உற்பத்தியான சணல், தடி தென்னிலங்கைக்கு ஏற்றுமதியானது. அதில் இருந்து அங்கு சணல், நூல், சாக்கு, சாக்குப்பை என்பன தயாரானது. யாழில் உற்பத்தியான பீற்ரூட், சக்கரைப்பூசணிக்காய் என்பன தென்னிலங்கையின் இனிப்பு உற்பத்தித் தொழிற்சாலைகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1972-1973 களில் அரசி விலை கொத்துக்கு 8-10 ரூபாய்கள் வரை ஏறியது. என்றபோதும் 1974 களில் அது 4.75 வரையாகி பின்பு 1.20க்கு வந்துவிட்டது. உபஉணவு தாரளமாக உற்பத்தியாகி சந்தைக்கு வரத்தொடங்கியபோது விலைகள் இறங்கத்தொடங்கின. சுயசார்ப்புப் பொருளாதாரம் வளர்ந்தது. இறக்குமதியால் சீவித்தநாடு தன்னிறையை நோக்கி நகர்ந்தது. ப.நோ.கூ. சங்கம்களை அரசு ஊக்கி வளர்த்தது. அவை முதலாளித்துவத்தின் ஊழல்கள், முறைகேடுகளுடனும் வளரத்தொடங்கியது. முதலாளித்துவ சந்தை முன்பும் வர்த்தர்கள் முன்பும் அவை திணறியபோதும் அவை முன்னேறின. 1973களில் பெருமளவு விவசாயத் தொழிலாளர்கள் உருவாகினர். நெல்வயல், மிளகாய், வெங்காயம், புகையிலைத் தோட்டம்களிலேயே உழைக்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பெருமளவு உருவாக்கினர். வன்னிப் பகுதிகட்கு உழைப்புத்தேடி மலையகத் தோட்டப்பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் வந்தனர்.

துணிவகைகள் உற்பத்தி

இந்தியத் துணி வகைகள் உட்பட அன்னியத் துணிவகைகள் இறக்கமதி தடை செய்யப்பட்டதையடுத்து வடபகுதியில் கடந்தல்கள் தீவிரமடைந்தபோதும் இலங்கையின் நெசவு உற்பத்தி, துணி மற்றும் ஆடைகள் உற்பத்தி வளர்ந்தது. யாழ்குடாநாட்டுக்குள் கிராமத்துக்கு கிராமம் நெசவுசாலைகள் தோன்றின. அரசு ஆரம்பித்த கிராமிய அபிவிருத்தி அமைப்புகள் உருவாகியபோது படித்துவிட்டு வீட்டில் இருந்த பெண்கள் நெசவுவேலை, பட்டிக்துணி கட்டு டிசைன் போடுவது உட்படப்பல தொழில்களில் ஈடுபட்டனர். வீடுகளில் கூட, பெண்கள் சீன வெள்ளைப் பப்ளின் துணையை வாங்கி அதில் பட்டிக்சாரம், சேட், பெண்களுக்கான ஆடைகளைத் தயாரித்து கடைகட்கு விற்பனை செய்தனர். தென்னிலைங்கையைவிட பட்டிக்தொழில் விரைவாக குடாநாட்டுக்குள் வளர்ந்தது. சுண்ணாகத்தில் முதல் முதல் பட்டுவேட்டி சால்வை என்பன தயாரிப்புத் தொடங்கினர். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தம் சாதித்தொழிலில் இருந்து வெளியேற்றி நெசவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேல்சாதியில் சிலர் இந்த நெசவுத்தொழிலுக்குப்போக வெட்கப்பட்டபோது, ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களும் ஏனைய பெண்களும் ஒன்றாக இணைந்து நெசவுத்தொழில் ஈடுப்பட்டன. ப.நோ. கூட்டுறவுச் சங்கம்கள் துணிவகைகள், ஆடை உற்பத்திகளில் ஈடுப்பட்டன. தென்னிலங்கைக்கும் வெளிநாடுகட்கும் ஏற்றுமதி செய்தன. பண்டத்தரிப்பு செயற்கை நூலிழைத் துணிகட்கு அப்போது பெரும் போட்டியிருந்தது. இக்காலத்தில் வன்னி, கல்விளான் பகுதிகளில் வீடுகளில் தறி வைத்து உறுதியான பல வர்ணமுடைய புறப்பாய்கள் தயாரிக்கப்பட்டு யாழ்ப்பாணச் சந்தைக்கும் விற்பனைக்கு வந்தது. இவை பனை ஓலைப்பாயைவிடப் பலமானதாகவும் பலவருடம் பாவிக்கக்கூடியதாகவும் இருந்தது.

சிறு கைத்தொழில்கள்

இடதுசாரிக் கூட்டரசின் காலத்தில் பெருமளவு சிறு கைத்தொழில் முயற்சிகள் வளர்ந்தன. சாதித்தொழில்களை விட்டு ஒடுக்கப்பட மக்கள் பெருமளவு வெளியேறத் தொடங்கினர். ஒடுக்கப்படட்ட மக்களிடையே கல்விகற்றவர்களும் உத்தியோகம் செய்வோரும் மட்டும் தோன்றவில்லை. விவசாயம், வர்த்தகம், கராச், கடைசல்பட்டறை இவைகளில் புகத்தொடங்கினர். இம்மக்களிடையே லொறி உரிமையாளர்கூடத் தோன்றத் தொடங்கியதுடன் யாழ்ப்பாணம்-கொழும்பு லொறிச்சாரதிகளாக இம்மக்கள் உருவாகினர். வெளிநாட்டுக்கார்கள், உதிரிப்பாகம்கள் இறக்குமதி தடையால் பழைய கார்கள் திருத்தப்படததக்கதாக ஒரு தொகை கராச்சன், கடைசல் பட்டறைகள் யாழ்நகர் முதல் பல இடம்களில் தோன்றின. ஏ,40, சோமர் செற் ஒஸ்ரின்கேம் -பிறிஜ்கார்கட்கு உதிரிப்பாகங்கள் உள்ளுரில் கடைசல் பட்டறைகளில் தயாராகின. இத்தொழிலில் பெருமளவு ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். லொறி, பஸ், கார், டக்சி சாரதிகளாக முக்கியமாக யாழ்நகரில் இவர்கள் உருவாகினர். இவர்கள் ஊர் உலகம் அறிந்தவர்களாகவும், துணிந்த சண்டியர்களாகவும், சாதி மீறுபவர்களாகவும் ஆகினர். இக்காலத்தில் ஊவுடீ யில் சாரதிகளாக வேலைசெய்த சண்டியர்களான இராசேந்திரம், கந்தசாமி கொடிகாமம் ஐயன் போன்றவர்கள் பலராலும் அறியப்பட்னர். யாழில் இருந்த கடைசல்பட்டறைகளில் கார்களின் உதிரிப்பாகம்கள் மட்டுமல்ல விபத்துகளில் சேதமடைந்த கார்களை திருந்தும் புதியபொடி அடிக்கும் தொழில்கூட வளர்ந்தது. வெல்டிங் தொழில் பரவியது. இந்தத்துறையில் ஈடுபட்டவர்கள் 80வீதம் இம்மக்களாகவே இருந்தனர். ப.நோ.கூ சங்கம்களுக்கு பெருமளவு லொறிகள் இறக்குமதி செய்யப்பட்டபோது லொறிகட்கு பொடி அடிக்கும் தொழில் பெருகியது. தென்னிலங்கை வென்னப்புவ லொறி பொடிக்கும் சமமாய் யாழ்ப்பாணத்தில் யாழ்பொடி பில்டஸ் என்ற பெயரில் சின்னத்தம்பி என்பவர் லொறி பொடி அடித்தார். பொருள் உற்பத்தி பெருகியது. போக்குவரத்து அதிகமாகியது லொறிகள் இறக்குமதியாகின.

இக்காலத்தில் யாழ்பாணத்தில் எழுந்த வின்சர் தியேட்டரைக் கட்டியவர் தம்பிராசா என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவராவர். மேளம் அடிப்பது, செருப்புத்தைப்பது போன்ற தொழில்களையிட்டு வெளியேறிய இந்தச்சாதி மக்கள் மண்எண்ணை வியாபாரம், மரச்சாலை வேலை, தச்சுவேலை, கட்டவேலை போன்றவற்றில் ஈடுபட்டனர். இலங்கையின் இலவசக்கல்வி முறையில் படித்து முன்னே வந்த ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் துடிப்புமிக்க இளம் சந்ததியானது. தமது தாய் தகப்பனின் அடிமைத்தனமான சாதித்தொழிலைவிட்டு வெளியேறி வாழ முயன்றது. சுய ஆளுமை படைத்தவர்களாக எழுத்தனர். “எல்லோரும் திருப்பிக்கதைக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்ற மேல்சாதி சாதிவெறியர்கள் முணுமுணுக்கத் தொடங்கிய சமூக பொருளியல் நிகழ்வுகள் இடதுசாரிகள் கூட்டரசின் காலத்துக்குரியதாகும். இந்த இறக்குமதித்தடைகளை சுய பொருளாதார அபிவிருத்திகளை உள்ளுர் விவசாயிகளின் சிறப்பான காலத்தை யு.என்.பி போலவே தமிழர் கூட்டணியினரும் உணரவில்லை. அவர்கள் இறக்குமதித்தடைக் காரணியை தமிழ் தேசியவாதத்துள் தேடிக்கொண்டிருந்தனர். சமசமாஜிகளான என்.எம்., கொல்வினன் மேடைமேடையாய் திட்டினார்கள். அந்தக்காலத்தை அனுபவித்தவர்கட்குத் தெரியும் அது எத்தனை சிறப்பான காலமென்று. எஸ்.பொ போன்ற தமிழ்த்தேசியவாதக் அறணைகட்கு ஒரு பொருளாதாரச் செயற்பாட்டின் விளைவுகளை எதிர்விளைவுகளை விளங்கத்தெரியாது.

இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசு தமிழர்களின் கடும் எதிரி என்று தமிழ்தேசியவாதிகள் எஸ்.பொ.போல், பேசி எழுதிவந்த வேளையிலேயே நிதிமந்திரியாக இருந்த என்.எம்.பெரோ புதிய மரவரி முறையைக் கொண்டுவந்தார். எங்கும் கள்ளுத்தவறணைகள் திறக்கப்பட்டன. இதன் முதலாவதாக காலால்பகுதி அதிகாரிகளின் சர்வாதிகாரம் பகுதியாய்யாவது ஒழிக்கப்பட்டது. கள்ளிறக்கும் ஏழைத்தொழிலாளிகளிடம் கூட லஞ்சம் வாங்குவது அவர்களை அடித்து உதைப்பது, வீடுகளில் புகுந்து சோதனை பொருட்களை அடித்து உடைப்பது, சில சமயம் சோத்துப்பானை சட்டிகள்கூட இவர்களால் அடித்து நொருக்கப்பட்டுவதுண்டு. வீடுகளில் சிவில்தொழிலாளர்களின் போர்க்குணம்கொண்ட பெண்கள் பல சமயம் கால் பகுதி அதிகாரிகளை எதித்துபோது அவர்கள்கூட ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் தாக்கப்படுவதுண்டு. அந்தளவுக்கு கலால் பகுதி அட்டகாசத்துக்கு சீவல் தொழிலாளர்கள் அடிமைப்பட்டு இருந்தனர். இவர்கட்கு சீவல் தொழிலாளர்கள் பயந்து பயந்து சாவாகள். இவர்கள் மேல் அடிக்கடி வழக்குகள் போடப்பட்டு கோடு, கச்சேரி என்று இழுபடுவார்கள், தண்டம் கட்டுவார்கள், லஞ்சம் கொடாதவர்கள் மேல் பொய்வழக்குகள் போடப்படும்.

எத்தனை பனை, தென்னை சீவப்படுகிறது என்று காலால்பகுதியல் பதிந்து மரம்களில் இலக்கம் இடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் சீவப்படும் கள்ளை வீட்டில் வைத்திருக்க முடியாது என்று தடை இருந்தது. சில வேளைகளில்கூடக் கள் கிடைத்து விற்காவிட்டால் நட்டம் ஏற்படும். உழைத்தது வீணாகிவிடும். திறமான சீவல் தொழிலாளி 35-40 பனை மரம்களில் சீவுவான். உயிரை மதியாமல் 40-50 பனைகளில்கூட ஏறி சீவும் கடின உழைப்புத் தொழிலாளர்களும் இருந்தனர். பனை மரம்கள் சில 80 அடி உயரம் வரையில் இருக்கும். உயர ஏறும் போதும் வட்டுக்களைப் பனைமரம்கள் பிடிக்கும்போது விழுந்தும் வழுக்கியும் பெருமளவு தொழிலாளர்கள் விழுந்து இறப்பார்கள். சிலர் உயிர்தப்பி கால், கை முறிந்தது, முதுகெலும்பு உடைந்து உழைப்பில் ஈடுபட முடியாத குடும்பங்கட்கு பாரமான மனிதர்களாக மாறிவிடுவார்கள். இந்தத் தொழிலில் காப்புறுதி கிடையாது. சனம்கள் தம்மிடையே சண்டையிடும்போதும், திட்டும்போது “பனையாலே விழுவான்” “துலாவாலை பொறிவான்” என்று சாபமிடுவது அக்கால இத்தகைய விபத்துகளின் கொடுமையைக் காண உதவும்.

கள்ளுச்சீவும் தொழிலாளர்கள் சீவிய கள்ளை கள்ளுத்தவறணை முறை வருமுன்பு மாலை நேரம்களில் தம் வீடுகளில் வைத்தே விற்பனை, செய்வார்கள். இரவு நேரம்களில் சிறு குப்பி விளக்குகளை தகர விளக்குகள் தரும் வெளிச்சத்தில் இவை விற்பனை. செய்யப்படும். இப்படி சீவல் தொழிலாளியின் குடிசை கட்கு சென்று குடிக்கும் குடிகாரர்கள் குடித்துவிட்டு உடன் போகமாட்டர்கள் மணித்தியாலக் கணக்கில் குந்தியிருப்பர்கள். சீவல் தொழிலாளியின் குடிசை சிறிதாக இருக்கும். குடும்பம் சமையல் படுக்கை அதனுள்தான் நடக்கும். அனேகமாக ஒரே
குப்பி விளக்கு இருக்கும். இரவு நேரம்களில் சீவல் தொழிலாளியின் பிள்ளைகள் பள்ளிபோவதாக இருந்தால். படிக்க முடியாது. அனேகமாக இருக்கும் ஒரே ஒரு குப்பி விளக்க கள்ளுக்குடிபப்வர்களின் சுருட்டு பீடி பற்ற வைக்க அடிக்கடி வெளியே எடுத்து வரப்படும். எனவே பிள்ளைகள் படிக்கமுடியாது. கல்வியறிவு பெற்றிராத தாய், தந்தைக்குப் பிறந்த அக்குழந்தைகளின் கல்விக்கு சாதமற்ற சூழலால் இன்னமும் பாதிப்படையும். கள்ளுக் குடிப்பவர்கள் சத்தம் போடுவார்கள். தூசணம் பேசுவார்கள் கதை வழிப்படுவார்கள். சில சமயம் அடிபுடிப்படுவார்கள். கள்ளுச்சரியில்லை. பழம்பள்ளு, புளிச்சகள்ளு என்று சீவல் தொழிலாளியை அடிப்பார்கள் சீவில் தொழிலாளர்களின் மனைவிகள், பிள்ளைகளைப் பாலியலுக்குப் பயன்படுத்தல் என்பனவும் நடக்கும். 4-5 சீவல் தொழிலாளர்களை வைத்து கள்ளுச் சீவி வித்து தம் சொந்த சாதிக்தொழிலாளிகளைக் கூடச்சுரண்டும் முறை, மதுவரிமுறை, தவணைமுறை வந்ததுடன் நின்றது. கூலிக்கு கள்ளுச்சீவும் தொழிலாளிக்கு போத்தலுக்கு 1970களில் 3 முதல் 5 சதமே கூலியாகச் கிடைத்தது. அவர்கட்கு வருமானம் போதாது. ஆட்களை வைத்துகள்ளுச் சீவி விற்பனை செய்பவர்கள்தான் உழைப்பார்கள். அப்போது போத்தல் கள்ளு 10-15 சதமே விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி, வருசம், நத்தார் நாட்களில் மட்டும் கள் விலை உயர்வதுடன், தட்டும்பாடும் ஏற்படும் அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் அருமைக்கும் அருமையாக ஆடு, மாடு, கோழி, ஆமை என்று அறுத்துக்கொண்டாடுவார்கள். அச்சமயம் நிறையக்கள்ளும் குடிப்பார்கள். நிறைய மாடுகள் அக்காலத்தில் அடிக்கப்படும் மாடுகள் விலை மலிவாகவும், சமூகத்தில் மரியாதை கொட்ட செயலாகவும் இருந்தது. மாட்டிறைச்சி சாப்பிடுவது. நாத்தம் பிடித்தவர்களட்கு உரிய செயலாகவும் கருதப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மேல் நெளிப்பு நையாண்டிகள் நிலவின அது அவர்களது சாதிபற்றிய சந்தேகம்களாக விரியும்.

என்.எம். இன் மரவரிமுறை வந்தபின்பு யாழ்ப்பாணச்சமூகம் அதிரத்தொடங்கும் சம்பவம்கள் நடைபெறத்தொடங்கின. சீவல் தொழிலாளிகள் காலையில் 6 மணி முதல் 8.30 மணிவரை தொழில் செய்து முடித்துவிடுவர்கள். தவறணைக்குக் கள்ளுகள் கொடுபட்டன. கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்பணம் மாதாமாதம் சம்பளம் போல் அவர்கட்குக் கிடைத்தது. கள்ளுத்தவறணையில் கள்ளு விற்றாலும், விற்காவிட்டாலும் சீவல் தொழிலாளிக்கு உரிய பணம் கிடைக்கத்தொடங்கியது. தவறணைமுறை வந்த பின்பு சாதிவிட்டு சாதித்தொழில் விட்டு வேறுதொழில்கள் செய்யும் முறைகள் வளர்ந்தன. சீவல் தொழிலாளிக்கு கிடைத்த இடைதேர்தலில்; அவன் இரண்டாவது தொழிலுக்குப் போனான். அது அவனது சாதித்தொழில் சாராத தொழிலாக இருந்தது, சாதித்தொழில் முறைதகர்வும் கூடவே தொடங்கியது. தவறணைமுறை வந்தபின்பு வீடுகட்கு வந்து குடிகாரர் குடித்துவிட்டு காலநேரம் இல்லாமல் தொந்தரவு செய்யும் கொடுமைகள் ஒழிந்தது. குழந்தைகள், மனைவி, தொழிலாளிக்கு ஒய்வு கிடைத்து. குடும்பம் சிறப்புற்றது. சீவல் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஒழுங்காய் பள்ளிக்குப் போய்ப்படித்தார்கள். கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. இவர்களது வருமானம் உயர்ந்தது. முன்பு 4-5 வகுப்புடன் நின்றுவிட்டு பிள்ளைகள், கையெழுத்துப்போட மட்டும் பழகிய பிள்ளைகள் பள்ளிக்குப்போகாமல் மாறிக்கப்பட்ட பிள்ளைகள் இப்போ அடிப்படைக்கல்வி, உயர்கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. எப்பாடுபட்டாலும் பிள்ளைகளைப் படிப்பித்து சாதித்தொழிலுக்கு வெளியே தொழில் உத்தியோகம் கெட்டு பிள்ளைகளை படிப்பிக்கும் துணிவு வந்தது.

நிரந்தரவருமானம் வந்ததால் திருமணம், கல்வி, வீட்டுவசதி, வாழ்க்கைத்தரம் என்பன மாற்றம் பெற்றன. அவர்கள் மக்கள் வங்கிகளில் கடன் எடுத்து முதல் முறையாக தமது சீவியகாலமெல்லாம் கனவுகண்ட சிறிய கல்வீடுகளைக் கட்டினார்கள். இடதுசாரி கூட்டரசு வந்தபின்புதான் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மனிசராக மாறினார்கள். கார்கள், லொறிகள் வாங்குமளவு முதல் முறையாக மாறினர். யாழ்நகரில் ஒடுக்கப்பட்ட மக்கள் டக்சி சாரதிகளாகவும் சொந்த டக்சி உரிமையாளர்களாகவும் மாறினர். மலிஞ்ச மீன்களான நெத்தலி, சூடை, தேரை போன்ற மலிவு மீன்கள் முள்ளு மீன்கள் கிடைக்கும். காய்கறி பிஞ்சுகளுடன் காலம் தள்ளிய இம்மக்கள் இலவசக் கூப்பன் அரசிரியுடன் உயிரைப்பிடித்து வைத்திருந்தவர்கள் முதல் முறையாகப் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் கையில் கொஞ்சக்காசு பழங்கும் காலம் வந்தது. துவாயை தோளில் இருந்து எழுத்து இடுப்பில் கட்டும் காலம் கமக்கட்டுள் துவாய்த்துண்டை வைத்துப் பணிந்தகாலம் போகத் தொடங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் வேட்டி, இந்தியன் நாலு முழம், லோங்ஸ் போடும் காலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் கல்வியறிவு பெற்ற இளம் சந்ததிக்கும் உரியதாகியது. அவர்கள் செருப்புப் போட்டார்கள், கூச்சப்படாமல் லோங்ஸ் போட்டார்கள்.

மரவரிமுறை வந்தபின்பு குடும்பக்கட்டுப்பாடு ஒடுக்கப்பட்ட மக்களிடையே மெல்ல மெல்ல நுழைந்தது. பிள்ளைகள் பிறப்பு விகிதம் குறைந்தது. பெண்களின் உடல்;நலம் சுகாதார வாய்ப்புக்ள அதிகரித்து. ஒருவர் 2-3 பெண்களைக்கூடக் கட்டும், வைத்திருக்கும் முறைகள் ஒழிணந்தது. வறுமை காரணமான சச்சரவுகள் நிறைந்த சமுதாய நிலையில் இருந்து அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படல் தொடங்கியது. 8-10 வயதிலேயே தாய் தந்தையருடன் கூலி வேலைக்குப்போகும் நிலைமைகள் மரவரிமுறையால் நிற்கத் தொடங்கியது. கள்ளுடன் பதநீர்வடிப்பது வளர்ந்தது. சீனிக்கு இறக்குமதித்தடை இருந்தமையால் சீனிக்குப் பதில் பனங்கட்டி, பனம் சீனி, பனம் கற்கண்டு, பனம் பாணி என்பனவற்றின் உற்பத்தியும், தேவையும் அதிகரித்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் குடும்பங்களாக இத்தொழிலில் ஈடுபட்டனர். விதவிதமான வடிவங்கள் நிறைகளில் பனங்கட்டிக்குட்டான்களில் வார்க்கப்பட்ட பனங்கட்டிகள் சந்தைக்கு வந்தன. பதநீர் போத்தல் கள்ளு, பனங்சீனி என்பன ப.நோ.கூ சங்கங்களாலும், உற்பத்தி செய்யப்பட்டு பாவனையாளர்களிடம் சென்றது. சங்கானை ப.நோ.கூ சங்கத்தின் இந்த உற்பத்திச்சாலைகளை என்.எம் பெரேரா தானே திறந்து வைத்தார்.

சீவல் தொழிலாளிகளை “ஏறுதழையென்ன பட்டி நாரென்ன” என்ற மேலசாதி வெறியர்கள் இழிதொழிலாய் எண்ணிப் பழிந்தபோதும், அதுவும் ஏனைய தொழில்கள்போல் தொழிலாளர்களின் உழைப்புச்சிறப்புக்குரிய தொழிலாகும். கள்ளுசீவல் என்பது கலையாகும். உழைப்பின் அருமையும், உயர்வும் தெரியாத விவசாயச் சமூகத்தின் சாதிவெறியர்கள் இதைப் புரிந்துகொள்ள மாட்டர்கள். பனைகளில் ஆண்பனை, பெண்பனை என்ற வித்தியாசமான சீவல் முறைகள் உண்டு. நுணுக்கமான அனுபவம் நிறைந்த சீவல் முறை அதற்குச் தெரியவேண்டும். கேக்போடுவதுபோல் பதம் தெரியவேண்டும் சீவல் தொழிலாளியின் அறிவு அனுபவம் என்பன எந்த சமூக மதிப்பையும் பெறுவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆண்பனை நீளமானது, ஆண்பனை மற்றை பனைகட்கு முன்பே தை, மாசி மாதம்களிலேயே வந்துவிடும். மற்றைய பனைகள் சாதாரணமாக பங்குணி, சித்திரை, வைகாசி மாதம்களில் அருகத் தொங்கவிடும். பனங்கள்ளு இல்லாத காலம்களில் ஆண் பனையின் பாளைகளில் இருந்து மூன்றுவித தொழல்நுட்பத்தைப் பாவித்து கள் எடுப்பார்கள். ஆண்பனையின் பாளையின் வட்டை வெட்டி அடியில் பாளை சீவுதல், சிக்காயை வெட்டி பனம் பழமாக விடாமல் செய்து கள்ளு எடுத்தல், பங்குனி மாதத்தில் பாளையை வெட்டி ஒக்டோபர் மாதத்தில் திரும்ப வரப்பண்ணுதல் இதையே “வம்புப் பாளை” என்று அழைப்பார்கள். பாளையைத்தட்டி காயப்படாமலும் பாளை வெம்பல் குரும்பெட்டி வராமலும் செய்ய அந்தத் தொழில்முறை தெரியவேண்டும். எல்லாக்கள்ளுச் சீவும் தொழிலாளிகளினாலும் இதைச் செய்யமுடியாது. அதற்குத் திறன்படைத்தவர்களாக இரார். அதற்குரிய அனுபவம் கொண்ட தொழிலாளியைக் கொண்டு சீவித்த பின்பே மற்றைய தொழிலாளிகள் கள் எடுப்பார்கள். பனைகளில் ஆண்பனை, பெண்பனை. மலட்டுப்பனை என்ற பகுப்புகள் உண்டு. ஆண்பனைக்க விசேடமாக வழு இழுப்பார்கள். அதன் மூலம் கள்ளுப் பெறப்படும். ஆண்பனையில் காலையில் சீவும் புதுக்கள்ளு விரும்பிக் குடிப்பதற்கு மட்டமல்ல அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்துவுக்கும மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 1970களின் இடதுசாரிக் கூட்டரசுகாலத்தில் பனம் பொருள் அபிவிருத்திச் சபை நிறுவப்பட்டு பனை பனை ஓயைப் பொருட்களுடன் ஏனைய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதுடன், பனம் பினாட்டு, பனங்கட்டி உற்பத்தியுடன் பனம் பழத்தில் இருந்து சொக்கலேட் உற்பத்தி திட்டம் பரிசோதிக்கப்பட்டது. இடதுசாரி கூட்டரசின் இக்காலம் முதலாளித்துவ ஜனநாயக வழியில் பொருளாதார வளர்ச்சி பெற்ற காலமாகும். இந்த அற்புதச் செயற்பாடுகளை கண்டறிய எஸ்.பொ போன்ற முதலாளியப் பேனை பிடிப்பாளர்கட்கு முடியவில்லை. தமது சொந்தக்குறைபாட்டுக்கு அவர்கள் இடதுசாரிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழக சஞ்சிகைகளின் தடை

தமிழக, சஞ்சிகைகள், நூல்கள், சினிமா என்பன மேலான மட்டுப்படுத்தப்பட்ட தடைகளை எஸ்.பொ தமிழ்விரோதம் என்று உடனே கற்;பிக்கின்றார். தமிழ் சஞ்சிகைகள், நூல்களின், சினிமா என்பன மட்டும் தடைசெய்யப்பட்டவில்லை. இந்தியாவின் சிங்கள மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்ட இந்திப்படங்கள், கொலிவூட் படம்கள் உட்பட பெரும் பகுதி அன்னிய சினிமாப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சிறந்த படங்கள் எனக்குறிப்பிடப்பட்டவை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன. அன்னிய ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள் கூடப் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இது உள்ளுர் சஞ்சிகைகள் நூல்கள், சினிமா என்பவைகளை ஊக்குவிப்பதும் அதே சமயம் அன்னியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவது போன்ற நோக்கங்களை உடையதாக இருந்தது. எஸ்.பொ.வின் சிந்தனைக் குறுக்கம் தேசியவாதத்தில் தேங்கிக்கிடப்பவருக்கு இது ஏதோ தமிழ் எதிர்ப்பாக மட்டுமே தெரிகிறது. தடைகளின் பின்பே இலங்கைத் தமிழ் நூல்கள், சஞ்சிகைகள், இலக்கிய முயற்சிகள் என்பன வளர்ந்தன. குழந்தை நிலையில் இருந்த இவைகளைப் பாதுகாக்க இது அவசியமாக இருந்தது. ஆனந்தவிகடன், குமுதம், பொம்மை, பேசும்படம் வாசகர்களாக இருந்த இலங்கைத் தமிழ்மக்கள் தம் சொந்த வாழ்வைப் பாடு பொருளாய்க் கொண்ட எழுத்துக்களை அதன் பின்பே தீவிரமாய் படைக்கத் தொடங்கினர் ராணிமுத்து கதைத்தொகுதியை போல் வீரகேசரிப்பிரசுரம் தொடங்கின கதை, நாவல் இலக்கியம்கள் தோன்றத் தொடங்கின.
தமிழ்மக்கள் தம் சொந்த எழுத்தைப் படைப்பது தமிழக இரவல்களை தமதாய்க் கொள்ள மறுப்பது தமிழ்நாட்டு விரோதமா?

யாழ்குடாநாடும், வன்னியும், கிழக்கும், மலையகமும் பேசுபொருளாய்க் கொண்ட இலக்கியம்கள் எழுந்தது தவறா? சிங்கள, முஸ்லீம் மக்களின் இலக்கிய எழுத்துக்கள் தமிழக்கு வந்தன. தமிழக எழுக்களில் எம்மைக்காண மறுப்பது இலங்கை மக்களின் சுவாசத்தை எழுத்துக்களில் காண ஆசைப்படுவது இந்திய எதிர்ப்பா? சிங்கள்ச்சார்பா? இலங்கை தழுவிச் செயற்படுவது யாரின் அகராதிப்படி துரோகம் என்று எமக்குத் தெரியும். இந்திய மக்களைப்போல் அவர்கட்கு மேலாக சிங்கள, முஸ்லீம் மக்களோடும் தமிழ் மக்களுக்கு உறவு தேவை, சிங்கள, முஸ்லீம் மக்களின் எழுத்;தையும் அவர்கள் வாசித்தறிய வேண்டும் என்பது சிங்களச்சார்பா? இந்தியச்சார்பு நிலவலாம் இலங்கை சார்பு தகாதது என்றா எஸ்.பொவின் தமிழ் பாசிச உணர்வு கருத்து மொழிபெயர்ப்புச் செய்கிறது இந்திய தமிழக சார்பு என்பது எஸ்.பொவுக்கு ஆட்சேபனைக்குரியதல்ல. சொந்த தேசமக்களைப் பகைத்துக்கொண்டு இந்தியாவுடன் உறவுக்குப்போ என்று சொல்லும் எஸ்.பொ என்ன இலக்கியவாதி? சிங்கள மனிதர்களை வெறுப்பது மனித வெறுப்பு இல்லையா? தன்னை ஏதோ பிரஞ்சம் முழுவதும் அகன்று தடவித்திரியும் படைப்பாளி என்று இட்டுக்கட்டும் எஸ்.பொ. அற்ப புலிப்பாசிசக் கருத்தாடலுக்கு பணியும் அவலம், இந்திய நூல்கள், சினிமா மட்டுமல்ல இந்தியப் பொருட்கள்கூடத் தடை செய்யப்பட்டன. மேற்குலக ஆடம்பரப்பொருட்கள் இறக்குமதி முற்றாகத்தடை செய்யப்பட்டது. இது உயர்வர்க்கங்களுக்குத்தான் கோபத்தை மூட்டியது. இவைகளை என்ன தமிழ் மக்கள் மட்டுமா நுகர்ந்தார்கள். சிங்கள, முஸ்லீம், மக்கள் பாவிக்கவில்லையா? இலங்கையின் யானை நெருப்புப்பெட்டிக்கு போட்டியான இந்திய நெருப்பெட்டிகள், மீதுதடை உள்ளுர் டயர் உற்பத்தியைப் பாதுகாக்க வெளிநாட்டு டயர் இறக்குமதி, தடை பரந்தன் இராசயனத் தொழிற்சாலையைப் பாதுகாக்க அமுக்குச் சோடா இறக்குமதி என்பனவும் தடைசெய்யப்பட்டது. இவையும் என்ன தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளா?
இந்தியச் சினிமாத் தடையின் பின்பே இலங்கையில் நான் உங்கள் தோழன், வாடைக்காற்று குத்துவிளக்கு போன்ற படம்கள் தயாரிக்கப்பட்டன.


தமிழ் பொப்பிசைப்பாடல்கள் சிங்கள் பொப்பிசைப் பாடல்களைத்தழுவி எழுந்தன. ஏ.ஈ.மனோகரன் நித்திகனகரத்தினம் போன்றவர்களின் பாடல்கள் பரவின புகழ் பெற்ற “சின்னமாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற பாடல் சிங்களப்பாடலின் மெட்டில் அமைந்து பிரபல்யமானது. எம்.எஸ்.பெர்ணான்டோ, சுஜாத்தா அத்தநாயக்கா போன்ற சிங்களப்பாடகா’கள் தமிழ்மொழியில் பாடினர். இலங்கையின் சிங்களப் பைலாப்பாடல் இசை தமிழ்நாட்டு சினிமாவுக்குக்கூடச் சென்றது. கைலாசபதியின் “தேசிய இலக்கியம் அறிவுமோசடி எனும் எஸ்.பொ இது இரண்டாயிரமாண்டுகால தமிழ் இலக்கிய மரபுகளை நிகரிக்கிறது என்கிறார். முதலாவதாக கைலாசபதி, விளக்கிய இலங்கை மக்கள் தழுவிய தேசிய இலக்கியம் தமிழ் பேசும் மக்களின் மண் சார்ந்த இலக்கியம் என்ற போக்கை எஸ்.போ.வுக்கு விளங்க முதிhச்;சியில்லை. சிலப்பதிகாரமும், திருக்குறளும், புறநாறும் தோன்று முன்பு தமிழ்மக்களுக்கு எது இலக்கியமாக இருந்தது. இன்னமும் இரண்டாயிரம் வருடம் பின்பு தமிழர்கட்கு என்று இலக்கியம் ஒன்று இருக்குமா? தமிழ் மக்கள் பழையதைவிடுத்து புதிய தமது சமூக பொருளியல் நிலைமைகளின் வேண்டுதலாக புதிய இலக்கியத்தைப் படைக்கும் தேவை ஏற்படாதா? இலங்கைத் தமிழ்மக்கள் தமது சொந்த இலங்கை சார்ந்த தனித்துவமான இலக்கியத்தைப் படைத்தது என்னவகையான எழுத்துக்குற்றமாகிறது? மலையத் தோட்டத் தொழிலாளின் படைப்புகக்ள் தமது வாழ்வனுபத்தை தாமே படைத்துக்; கொண்டது குற்றமா? சங்க இலக்கியம்கள் முதல் ஜெயகாந்தன், கல்கி சுந்தராம சாமி ஜெயமோகன் வரை படித்து இரண்டாயிரம்மாண்டு காலத்தமிழ் மரபைக்காப்பதைவிட்டு எஸ்.பொ ஏன் தனியே சிறுகதை இலக்கியம் படைக்க வெளிக்கிடுகிறார். இவரின் எழுத்தை இலங்கையின் தேசிய இலக்கியப்போக்கில் சேர்க்க முடியாதா? டானியலையும் கனகசெந்திநாதனையும் எந்த எழுத்துப்பிரதேசத்துள் அடைப்பது? சோமசுந்திரப்புலவர், சின்னத்தம்பிபுலவர், விபுலானந்தர் இவர்களின் எழுத்துகளை எந்தப்போக்குக்குள் சேர்ப்பது. கைலாசபதியை எங்கு நிறுத்துவது இலங்கைத்தமிழர் சகலரும் சங்ககாலத்தை சாவது வரை மனப்பாடம் செய்யவேண்டும என்கிறரா?


“இடதுசாரிகள் முயற்சியில் இலங்கைத் திரைப்படக்கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டதை ஒத்துக்கொள்ளாத எஸ்.பொ ஏன் பின்புதானே இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில அரசியல் அணைவோடு போய்ச்சோந்தது எப்படி? இது நிறுவப்பட்ட பின்புதான் சினிமாக்கலை சிறிதாவது பாதுகாக்கப்பட்டது. தனியார் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட இலங்கை சினிமாப்படத்தயாரிப்பு திரைப்பட இறக்குமதிகளை அரசு பொறுப்பெடுத்தமை கண்காணிப்புச் செய்தமை ஒரு முற்போக்கானதாக எஸ்.பொவுக்குப்படவில்லை. சினிமாஸ் குணரட்ணம், சிற்றம்பலம் கார்டினர், எஸ்.எம்.நாயகம், தம்பு குடும்பத்தினர் ஆகிய தமிழர்கள்தானே இலங்கையின் தமிழ், சிங்கள சினிமாவைக்கட்டுப்படுதினர். சிங்களப் படம்களைத் தயாரித்தனர். இந்திய தமிழ், இந்திப்படங்களை இறக்குமதி செய்தனர். இவர்களைக் கட்டுப்படுத்தினால் எஸ்.பொவுக்கு புரைக்கேறுவானேன்? தமிழ் முதலாளிகள் சிங்கள சினிமாவைக் கட்டுப்படுத்தியதையிட்டு எஸ்.பொ என்ன சொல்வார்? சினிமாஸ் குணரட்னம் போன்றவர்கள்தான் இலங்கையின் அரைவாசி சினிமாத்தியேட்டர்களைக் கட்டுப்படுத்தினர்கள். இவர்களை மட்டுப்படுத்தி அரசு சினிமாக்களை கண்காணித்து தயாரிப்புக்கு உதவி ஆலோசனை தந்து வளர்த்தால் என்ன பிழை? இலங்கைத் திரைப்படக்கூட்டுத்தாபனம் வந்தபின்புதானே “சிலோன்தியேட்டர்ஸ், சினிமாஸ் போன்ற திரைப்பட இறக்குமதி நிறுவனம்களது அட்டகாசம் அடங்கியது. முதலாளிகளை அடக்கினால் எஸ்.பொ.வுக்கு ஏன் வலியெடுக்கிறது? திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் இடதுசாரிகள் இருந்தால் ஏன் எஸ்.பொ.க்கு பொறுக்கவில்லை. அதில் தமிழ், சிங்கள முஸ்லீம் என்று எல்லாச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தானே இடம்பெற்றனர்? இடதுசாரிகளைவிட்டு முதலாளிகளை தமிழிiவாதிகளை அப்பதவிகளில் இருத்தி அழகு பார்க்கவில்லை என்கிறாரா?


தரப்படுத்தல்

எஸ்.பொ.வின் தரப்படுத்தல் பற்றிய விளக்கம் தமிழ் இனவாதிகளின் அதேபாடுபொருள்தான் கடந்த மூன்றுபத்தாண்டு காலமாய் மாரித்தவக்கையாய் கத்திக்கேட்ட அதே புதிய பொருள் புலப்படுத்த தெரியாத குரல்தான் “தமிழ் மாணவர்கள் ஊக்கத்துடன் படித்ததை சிங்கள இனவாதிகள் பொறுத்துக்கொள்ளவில்லை” தரப்படுத்தல் சிங்கள இனவாதத்தின் கொடுமை” “தமிழ் மாணவர்கள் இரவு பகலாகப்படித்தார்கள் படிப்பை பைத்தியானமாய்க் கொண்டார்கள்” ஆனால் ஆற்றலும் திறமையும் குறைந்த சிங்கள மாணவர்கட்கு மருந்துவம், பொறியியல்துறையில் அனுமதிகிடைத்தது. என்று எஸ்.பொவின் யாழ்குடாநாட்டின் மத்தியதர வர்க்க நலன்களே பேச்சுமொழியாகிறது. எஸ்.பொவின் வாதத்தை ஒப்புக்கொண்டால் சிங்கள மாணவர்கள் மட்டுமா திறமை குறைந்தவர்கள் என்றாகிறது தரப்படுத்தல் வந்ததினால் இலாபமடைந்த வன்னி, கிழக்கு, மலையகத்தமிழர்களுக்கு, முஸ்லீம்களும் கூட மடையர், மடைச்சியர் என்றல்லவா ஆகிறது. படிப்பைத்தவமாய்க்; கொள்ளாதவர்களாக இரவு பகலாய் ஊக்கத்தோடு படியாதவர்கள் என்றெல்லவா பொருள் கிட்டுகிறது. ஏன் யாழ்குடாநாட்டுக்கு வெளியே தமிழர்கள் இல்லையா? குடாநாட்டுக்குள் ஒடுக்கப்பட்ட சாதித்தமிழர்களில் எத்தனை சதவீதம் தரப்படுத்தல் வருமுன்பு பல்கலைக்கழகம் போனார்கள்? எஸ்.பொ கூறும் மருத்துவர்களாக பொறியியலார்களாக எத்தனை பேர் ஆனார்கள்? எஸ்.பொ போன்ற யாழ்ப்பாணிய நடுத்தரவர்க்கத்தில் இருந்;து எடுப்பு எடுப்பவர்கட்கு தம்மைத்தவிர இந்த உலகில் வேறேதுவும் கண்ணில் தெரியாது. கல்விகற்ற பெற்றோர், சிறந்த கல்விச்சாலைகள் தெருவுக்குத் தெரு ஒழுங்கைக்கு ஒழுங்கை டியூட்டரிகள் என்பன யாழ் நடுத்தரவர்க்கத் தமிழர்கட்கு வாய்த்திருந்தது. வன்னியிலும், கிழக்கிலும், மலையத்திலும் தென்னிலங்கைச் சிங்களக் கிராமங்களிலும் இத்தகைய கொடுப்பனவுகள் இல்லாமலே மாணவ-மாணவியர்கள் கல்வியை எதிர்நோக்கினர்.


எஸ்.பொ தமிழ் மாணவர்களை கெட்டிக்காரர்களாகவும் சிங்கள மாணவர்களை சக்கர்களாகவும் காண்பிப்பது ஒரு இனவாதக் கருத்துரையாகும். யாழ்குடாநாட்டு மாணவ-மாணவியர் திறமை சான்றவர்களாக இருந்தார்கள் என்றால் அதற்குக் காரணிகள் இல்லையா? யாழ் மத்திய கல்லூhயிpல் படிக்கும் ஒரு மாணவனின் தகுதியும், வன்னியில் கனகராயன்குளத்தில் படிக்கும் மாணவனின் தகுதியும் ஒன்றாக இருக்க எந்தளவு சாத்தியமுண்டு. கல்வியில் சமவாய்ப்பற்ற சமூக, பொருளாதார அனுகூலமற்ற மாணவர்களிடம் எப்படித் திறமைசாலிகளைத் தேர்ந்து கொள்வது? எப்படிக் கெட்டித்தனமும், சக்கட்டைத்தனம் பற்றி பகுத்துக்கொள்ள முடியும்? கல்வியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தாங்கிய கல்விகற்ற பெற்றோரைக் கொண்டிராத ஏழைக்கிராம மாணவர்களை எஸ்.பொ போன்றவர்கள் எப்படி அலட்சியப்படுத்துகிறார்கள். கேவலமாக்குகிறார்கள் என்று பாருங்கள். காலம் காலமாய் கல்வியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய கல்விகற்ற பெற்றோரைக் கொண்டிராத ஏழைக்கிராம மாணவர்களை எஸ்.பொ போன்றவர்கள் எப்படி அலட்சியப்படுத்துகிறார்கள். கேவலமாக்குகிறார்கள் என்று பாருங்கள். காலாவதிகாலமாய் கல்வி,உத்தியோகம் சகவதிலும் முன்னுரிமை அனுபவித்த யாழ் நடுத்தர வர்க்கத்தின் கண்டுபிடிப்பாகவே தரப்படுத்தல் தமிழர்கட்கு எதிரானது என்ற வாதம் பிறந்தது. இதை ஆய்வு, தேர்வு இல்லாமலே பல பத்துவருடம்களாக தமிழினவாதிகள் உருப்போட்டு வருகிறார்கள் 1970இல் பதவிக்கு வந்த இடதுசாரி கூட்டரசாங்கம் ஏகாதிப்பதியங்களாலும் உலக வங்கியாலும் ஆட்சி செய்ய விடாது சித்திரவதைப்படுத்தப்பட்டது. உலகவங்கி, கல்வி, சுகாதாரம், சமூகசேவைகளை வெட்டி செலவைக்குறைக்கும் படியும் புதிய வரிகளை விதிக்கும் படியும் இலங்கை அரசை நெருக்கியது. இந்த இடைவிடாத நெருக்கடிகளால்தான் அந்த அரசாங்கம் கல்வி மருத்துவ சேவைகளில் கையை வைத்தது. கல்விக்கான செலவுகளைக் குறைந்தபடியால் புதிய வரிகளை விதிக்கும் படியும் இலங்கை அரசை நெருக்கியது. இந்த இடைவிடாத நெருக்கடிகளால்தான் அந்த அரசாங்கம் கல்வி மருத்துவ சேவைகளில் கையை வைத்தது. கல்விக்கான செலவுகளைக் குறைந்தபடியால் புதிய கல்கழைக்கழகங்களை அமைத்து வருடாவருடம் அதிகரித்து வந்த பல்கலைக்கழகத்துக்கு தேர்வு செய்யத்தகுதிபடைத்த மாணவ-மாணவியருக்கு இடம் வழங்கமுடியவில்லை.

இலவசக்கல்வியால் கல்விகற்போர் தொகை அதிகரித்து வந்த சமயமது வருடாவருடம் 15,000 பேர் பல்கலைக்கழகம்கட்கு நுழைய தகுதி பெற்றனர். ஆனால் 5000 பேருக்கு மட்டுமே பல்கலைக்கழகம்களில் இடமிருந்தது. இந்த 5000 இடத்துக்கே கடுமையான போட்டி நடந்து தமிழினவாதிகளும், சிங்கள இனவாதிகளும் இந்த தேர்வு செய்யப்பட்ட 5000 இடம்களைப் பேசினார்களே தவிர தகுதி இருந்தும் இடம் கிடையாது போன மிகுதி 10,000 பேரை எவரும் பேசவில்லை அரசியல் கல்விக்கான நிதி இருந்திருக்குமேயானால் புதிய பல்கலைக்கழகம்களை அமைத்து அவர்கட்கு இடம் அளித்திருக்கலாம். எனவே இடதுசாரி அரசின் மாவட்டக் கோட்டாமுறை என்பதுக்கு இலங்கை அரசு காரணமென்பதைவிட உலகவங்கியும் ஏகாதிய நாடுகளது நிர்ப்பந்தம்களுமே காரணமாகும். அரசு சேவைகளில் மோகமும், படித்தவர்கட்கு வேலையின்மையம் மறுபுறம் நிலவியது. இவை இலங்கை தழுவிய பிரச்சினையாக தமிழ், சிங்கள, முஸ்லீம் என்று சகல மக்களதும் வாழ்வுப் போரட்டமாக இருந்தது. ஆனால் எஸ்.பொ போன்ற தமிழினவாதிகளே சிங்களவர்கள் ஏதோ மாடமாளிகைகளில் உலாவி உப்பரிகைகளில் சயனித்து, தங்ககரண்டிகளினால் சாப்பிடுவதாக இனவாத விசமூட்டினார்கள். யாழ்குடாநாட்டிலும், கொழும்புப்பகுதியிலும் படித்தமாணவர்கள் பின்தங்கிய பிரதேச மாணவர்கட்கான சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு பதுளையிலும், நுவரெலியாவிலும், பூநகரியிலும், வவுனியாவிலும் கூப்பனை மாற்றிப்பதிந்து விட்டு அங்கிருந்து தேர்வு எழுதி பல்கலைக்கழகம் நுழையும் தந்திரத்தைக் கையாண்டனர். இவைகளை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து முதலாளிய சமூகத்தின் பொதுவான பிரச்சினையாகும். எஸ்.பொ தமிழன்-சிங்களவன் என்ற இனவாத விதிகளை வைத்துக்கொண்டு சகலதையும் ஆய்கிறாரே ஒழிய இந்த இனவாதப் பகுப்புகளை உருவாக்கி பின்புறமிருந்து இயக்கிக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்களைத் தப்பவிடுகிறார்.

சிங்கள மொழிச்சட்டம்

அன்னிய மொழியான ஆங்கிலத்துக்குப்பதிலாக அதன் இடத்தில் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் மொழியான சிங்களம் அரசு கருமமொழியாக வந்தபோது தமிழ் தேசியவாதிகள் அதற்குச் “தனிச்சிங்களச் சட்டம்” என்று பெயரிட்டார்கள். அதிகாரமிழந்து விட்ட ஆங்கிலமொழிக்காக வருந்தி நின்றார்கள். ஆங்கிலம் அரசுமொழியாக இருந்தபோது “தனி ஆங்கில மொழிச்சட்டம்” என்று எந்த கதைகாரியத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. சிங்கள் அரச கருமமொழிச்சட்டம் பிரிட்டிஸ் பின்புலத்தில் யு.என்.பியினது கண்டுபிடிப்பாகவே எழுந்தது. என்பதுடன் இது இலங்கை தழுவிய முதலாளிய வளர்ச்சியின் இயற்கையான தேவையாகவும் இருந்தது. சிங்கள இனவாதம் என்பது இந்திய இந்துமதவாதம் போல் மேற்குலகால் வளர்த்தெடுக்கப்பட்டது. மறுபக்கம் இந்தியாவில் திராவிட இயக்கம்களை வளர்த்ததுபோல இலங்கையிலும் தமிழ் தேசியவாதிகளையும் வழி நடத்தினார்கள். சிங்கள அரசு கரும் மொழிச்சட்டம் என்பது பண்டாரநாயக்கா அரசுக்கு தனியே சிங்கள இனவாத அரசியலின் வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. பிரிட்டின் கால அரசியல், சமூகப் போக்குகளில் இருந்து விடுபட முயலும் சிங்கள முதலாளிய முயற்சியுமாக இருந்தது. 1950 இலங்கையில் 2வீத மக்களே ஆங்கிலமொழி பேசுபவர்களாக இருந்தனர். 70வீதமான மக்கள் சிங்கள மொழியையும், 20 வீதமான தமிழ், முஸ்லீம் மக்கள் தமிழ் மொழியையும் பேசினார். இலவசக்கல்வி முறை வந்தபின்பு தமிழ், சிங்கள மொழிகளில் கல்விகற்போர் தொகை பெருகியத. ஆங்கிலமொழிய+டாக தமது அரச உத்தியோகங்களை கைப்பற்றியிருந்த தமிழ் நடுத்தரவர்க்கம் சிங்கள மொழிச்சட்டம் வந்தபோத பாதிப்புற்றது.

1956 இல் 35,000 சிங்களமொழியில் கல்விகற்ற ஆசிரியர்கள் ஆங்கிலமொழியில் கல்விகற்ற ஆசிரியர்களைவிடச் குறைவான சம்பளத்தையே பெற்றனர். ஏன் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழராசியர்கள், பண்டிதர்கட்கு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்கள் சம்பளத்தில் பாதியளவே வேதனமாய்க்கிடைத்தது. தமிழ் மக்கள் மத்தியில்கூட தாய்மொழியான தமிழில் கல்விகற்றவர்கட்கு சமூகத்தில் மரியாதை இருக்கவில்லை. பல ஆயிரம் சிங்கள ஆயுள்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள் உட்பட தாய் மொழிக்கல்வி பெற்றவர்கள், சிங்களம் அரச கருமமொழியாவதால் தமக்கு தொழில் ரீதியில் அதிகமான உரிமையும், சம்பள உயர்வும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால் தமிழ் தேசியவாதிகள் 2 வீதமான இலங்கையின் உயர்வர்க்க ஆங்கிலமொழி பேசும் மக்களின் மொழியை எதிர்க்காதவர்கள் 70 வீதமான மக்களின் சிங்கள மொழியைக் தீவிரமாய் எதிர்த்தனர். இவர்கள் இலங்கையில் 98 வீத மக்களுக்கு தெரியாத ஆங்கில மொழியையே இவர்கள் தமிழ்-சிங்கள மொழிகளின் அரச மொழியாவதற்கு மாற்றாக விரும்பினர். சிங்களமொழி ஆட்சி மொழியானால் பௌத்தம் வளரும். அன்னிய திரைப்படம்கள், தடை, குதிரை ரேஸ், மதுத்தடை என்பன வரும் என்று பௌத்த பிக்குகள் அன்னிய மொழி ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் எனக்கோரினர். தொழில் வளர்ச்சி பெற்றிராத இலங்கையின் விவசாய சமூகப்பண்புகள் பௌத்த பிக்குகளின் அரசியல்-சமூக அதிகாரத்தின் விளைவாகவும் இவை இருந்தன. தமிழ் நடுத்தர வர்க்கம் சிங்கள அரச கருமமொழிச்சட்டத்துக்கு எதிரான சம்ஸ்டி கேட்கத்தொடங்கி பின்பு 1972 இன் புதிய அரசியமைப்பு வந்தபோது தனிநாடு என பிரிவினைக்குணம் பெற்றது.


தமிழ் சிங்கள தேசியவாதிகள் ஏகாதிபத்தியர்களின் நேரடி நபர்களாக இருந்தனர். பிரிட்டனுக்கும் யு.எஸ்.ஏ க்கும் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குவதாக அன்னிய தூதரகம்களில் மனுக்கொடுக்கும் வழக்கத்தை இலங்கையில் தொடங்கி வைத்தவர்கள் தமிழரசு தமிழ்காங்கிரஸ் துரோகிகளேயாவார். இடதுசாரிகள் இந்தப்போக்கை நிதானமாக அவதானித்த அரசியலைச் செய்தவர்கள். இலங்கை வரலாற்றின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா “இரத்தம் வடியும் துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசில் இருந்து தோன்றக்கூடும். அண்மையில் வெளியேறிய ஏகாதிபத்தியம்கள் மீண்டும் எம்மை ஏப்பம்விட இது ஏதுவாகிவிடும்” என்று கூறினார். இன்று நோர்வே உட்பட மேற்கு நாடுகள் தமிழ்தேசியவாத பிரிவினை சக்திகட்கு பாதுகாப்புச் சாக்திகளாகிவிட்டன. சர்வதேச சமூகம் உதவேண்டும் என்று ஏகாதிபதியங்களை நோக்கி இவர்கள் தினமும் வேண்டுகோள் விடுகிறார்கள். அன்று எல்.எஸ்.எஸ்.பி தலைவர்களில் ஒருவரான லெஸ்லி குணவர்த்தனர் “தமிழர்கள் பிரிந்து போவார்கள் எனக் கூறினார்” சிங்கள அரச கருமமொழிச்சட்டம் மேலான விவாகத்தில் “சிங்கள அரசு கருமமொழிச் சட்டத்தை ஆதரித்தது நாம் எளிதாக வீர புருசர்கள் ஆக முடியும். ஆனால் நாம் சரியான அரசியல் நிலைப்பாட்டுக்காக எதிர்ப்பை எதிர்கொள்ளதக்க யாராக இருக்கின்றோம்” என்று என்.எம் கூறினார். இங்கு எஸ்.பொ.வின் உருப்படாத எல்.எஸ்.எஸ்.பியில் பிழைகள் கண்டுபிடிப்பதில் கவனமான எழுத்துக்கு வரலாற்று ரீதிலான பரிசோதனை செய்யும் வலு இல்லை அது தமிழரசுத்தேசியவாதிகளும் சுதந்தினும் ஆயிரம் தடவை சொன்னதை திரும்பச்சொல்லும் அறிவுமட்டுமே கொண்டுள்ளது. சிங்கள அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது இடதுசாரிகளும் தமிழ்க்காங்கிரசையும் சேர்ந்த 29 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். இன்று புலிப்பாசிஸ்டுகட்கு ஆதரவாக உள்ள ஈழவேந்தன் நீண்டகாலம் அமெரிக்கத் தூதராலயத்தில் பகுதி நேரமாக மொழிபெயர்ப்பு வேலை செய்து வந்தவர் என்பதும், புலிச்சிந்தாந்தி பாலசிங்கம் பிரிட்டின் தூதரகத்தில் மொழியொர்ப்புச் செய்து வந்து வந்தவர் என்பது கவனத்திற்கு உரியதாகும். சாவகச்சேரி நவரத்தினத்துக்கு இஸ்ரேலிய தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. தமிழ் தேசியவாதிகள் தமது மேடைகளில் அக்காலத்தில் ஒரு சின்னஞ்சிறு இஸ்ரேல் 22 முஸ்லீம் நாடுகளை அடக்கியாழ்வதாக கூறிப் பெருமைப்பட்டதுடன் தமது தனிநாடும் அத்தகையதாக உருவாகும் என்று ஒப்பிட்டுப்பேசினர். தமிழ்தேசியவாதிகள் ஏதோ சிங்களவர்கட்கு பைத்தியம் பிடித்துவிட்டதால்தான் சிங்கள அரசு கருமமொழிச்சட்டத்தைக் கொண்டு வந்ததாக நினைத்தார்கள். தமிழ்-சிங்கள மொழிப்பிரச்சினை நேரடியாக பிரிட்டின்-அமெரிக்க ஏகாதிபத்தியங்களினால் இலங்கையில் உள்ள தமிழ்-சிங்கள அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்பட்டு இருந்தது.


இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்


எஸ்.போ நிரூபிக்க முயல்வதுபோல் இ.மு.எ.சங்கம் இலங்கை கொம்ய+னிஸ்ட் கட்சியால் தொடக்கப்படவில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டுக்கு இந்தியா சென்ற ரட்ன தேசப்பிரிய, பிரம்ஜி போய் வந்நபின்னர் அதை இலங்கையிலும் உருவாக்குவது பற்றிய சிந்தனைகள் எழுந்தது. அது கொம்யூனிஸ்ட் கட்சிகட்டளையிட்டுப் பிறந்தது என்பது போன்ற எஸ்.பொ இன் எழுத்து ஒரு தீவிரமான கற்பனை இ.மு.எ.சங்கத்துக்கு பெரும்பகுதி உறுப்பினர்கள் தமது சொந்த வாழ்வின் பொழுதுகளை ஒதுக்கி பொறுப்பு எடுக்கவும், தியாகம் செய்யவும் பெருமளவு தயாரற்ற சூழலிலே பிரேம்ஜி அதன் முதற் செயலாளராகத்; தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது வாழ்க்கையில் ஒருபோதும் எதையும் சமுதாய நலனுக்காக பொறுப்பு எடுத்திராத, மக்களுக்கு சேவை செய்திராத அடுத்த மனிதர்களை தமக்காக தியாகம்களைச் செய்யக்கேட்கும் எஸ்.பொ போன்ற முதலாளித்துவ சுயநலமிகட்கு தன்னிச்சைவாதிகளாக அலைபவர்கட்கு இது விளங்குவது கடினம். கொம்யூனிஸ்ட் கட்சி இ.மு.எ.சங்கத்தில் தலையிட்டு நேரடியாக அதைச்செய்! இதைச்செய்!! என்று கட்டளையிட்டுகொண்டுடிருப்பதான எஸ்.பொ.வின் மூளைப்பதிவுகள் அவரது முதலாளிச் சூழலின் மதிப்பீட்டின் தரவுகளாகும். இ.மு.எ. சங்கம் தொடங்கிய பின்பு ஒரேயொரு முறைபட்டுமே கொம்ய+னிஸ்ட் கட்சியின் தலைவர் பீற்றர் கெனமன் இ.மு.சங்க இடதுசாரி எழுத்தாளர்களை அழைத்து தமிழ் இலக்கியம் பற்றிக்கலந்துரையாடினார். தமிழ் இலக்கிய மரபுகளை விளங்கிக்கொண்டு தான் புதிய தமிழ் இலக்கியப்போக்கு உருவாக முடியும் என்று அவர் கூறினார். என்று தற்போது கனடாவில் வாழும் பிரேம்ஜி நினைவு கூர்கின்றார்?


“கலை இலக்கியப்போக்குகளில் ஒரு கிட்லரிசப்போக்கையே முற்போக்குவாதிகள் கொண்டுவந்தனர் என்கிறார் எஸ்.பொ. தமிழ் அரசியலை தமிழரசுவாதிகள் கட்டுப்படுத்தினார்கள் தமிழ் யாழ் நடுத்தரவர்க்க நலன்கள் பிரிட்டனுடன் குடி கொண்டு இருந்தது. தமிழ் மரபு இலக்கியம் தமிழரசுப்பண்டிதர்கள், புலவர் மணிகளால் பிரதிநிதித்துவப்பட்டுத்தப்பட்டது. தமிழரசு மேடைகளில் திருக்குறளும், புறுநானூறும் பேசப்பட்டது. பாராளுமன்றத்தில் அவர்கள் தேவாரதிருவாசகம்களை பாடினர்கள். இக்காலத்தேதான் தமிழக பழம் இலக்கியம்;கள் முதல்பிற்கால தமிழகச்சினிமா, ஆனந்தவிகடன், குமுதம், ராணிமுத்து வரை தமிழக மக்களின் இலக்கியச் சொந்தாகக் கருதப்பட்ட வேளையில்தான் அன்னியத்தன்மைகளை எமது என்று கொண்டாடியவேளையில்தான் தமிழ்மக்களின் சொந்த இலக்கியம் இலங்கைதமிழ் மண்ணில் வாழும் மாந்தரின் இலக்கியம் பேசும்பொருளாக வேண்டும் என்று இடதுசாரி இலக்கியவாதிகள் கூறினார்கள். தமிழரசுக்கட்சி பத்திரிகைளான சுதந்திரன், அதன் ஆசிரியர் கோவை மகேசன் தி.மு.க எழுத்துக்களைப் பிரதி செய்து எழுதினார். அண்ணாத்துரைபோல் அவரும் சுதந்திரனில் அன்புத்தம்பிக்கு என்று கடிதம்கள் எழுத ஆரம்பித்தார். தமிழகத்தை பிரதியெடுப்பது வழக்காக இருந்தது. கோப்பாய் மகேசன், கோவை மகேசன் எனவும் காந்தமுத்து சிவானந்தன் காசி ஆனந்தன் எனவும் ஆகிய தருணமது. இந்த நிலையிலேயே இடதுசாரிகள் தமது சொந்த மக்களை
கண்முன்னேதென்படும் மனிதர்களை எழுதத் தொடங்கினர். பிரதிகளில் அல்ல அசல்களில் பாத்திரப்படைப்புகள் தோன்றின.


இ.மு.எ. சங்கத்தில் இடதுசாரிகள் மட்டுமே இருந்தனர் என்பது எஸ்.பொ. அடுத்த விடுகையாகும் நந்தி, வரதர், புதுமை லோலன், நாவேந்தன் ஆகியோர் கூட இதில் இடம்பெற்று இருந்தனர். புதுமைலோலன், நாவேந்தன் ஆகியோர் தமிழரசு மேடைகளில்; பேச்சாளர்களாக இருந்து பின்பு இடதுசாரி இயக்கதிற்கு பிற்காலத்தில் வந்தனர். இ.மு.எ.சங்க யாழ்கிளைத்தலைவராக இருந்த நந்தி, வரதர் ஆகியோர் இடதுசாரிகள் அல்ல. மாவோயிசப் போக்குள்ளவர்கள் மட்டுமல்ல எல்.எஸ்.எஸ்.பியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான யாழினியும் இ.மு.எ. சங்கத்தில் இருந்தார். அதிக இடதுசாரிகள் இ.மு.எ.சங்கத்தின் இருந்தவர் என்றால் அதிக இடதுசாரிகள் எழுதிவந்தார்கள் என்றே பொருளாகும், எழுத்துறைசார்ந்தவர்களே இடம்பெற்றனர். ஆள்கணக்கு, கொள்கணக்குக்கு ஆட்கள் அதில் நிறைந்திருந்திருக்கவில்லை. 30 பேர்தான் இருந்;தனர் என்பது எஸ்.பொவின் மற்றொரு குறை ஆள்தொகை எண்தொகை வைத்து இலக்கியம் கணிக்கப்படுவதில்லை. மாறாக அதன் படைப்புதிறன், சமூக உபயோகம் இவைகளைக் கொண்டே மதிப்பிட முடியும். ஏன் எஸ்.பொ நற்போக்கில் கடைசியாக தளையசிங்கம் மட்டும்தானே தனியொருவராக இருந்தார். அவர் முன்பின்னே ஏதாவது ஆள் நடமாட்டம் இருந்ததா? அதைக்கூட ஒரு எழுத்தியக்கம் என்று எஸ்.பொ ஆல் புழுகித்திரிய முடியுமானால் இ.மு.எ.சங்கத்தை குறைத்து மதிக்க என்ன ஆதாரமிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட இலக்கியப்போக்கு எழுகிறது எனில் அதற்கு ஒரு சமூகத்தேவை இருக்கும். அரசியல் மற்றும் வர்க்கம் சார்ந்த கட்டாயம்கள் இருக்கும். சில போக்குகள் பலம்பெறுவதன் அடையாளமாக இருக்கும் மாறாக இது சிலரின் மூளைகளில் மட்டும் உதிக்கும் விடயமல்ல. அத்தகைய சமுதாயக்சூழல் இல்லாவிட்டல் இ.மு.எ.சங்கம் தலைக்கீழாக நின்றாலும் ஒரு அமைப்பாக எழுத்தியக்கமாக எழுத்திராது. எஸ்.பொ சமுதாயக் காரணிகளை தனிமனிதர்களிடம் காணும் குறுகிய நிலைக்குப்போகிறார். முதலாளித்துவ தனிமனிதவாத மூளைகட்கு மனிதச்செயற்பாட்டை ஒரு சமுதாயக் கட்டளையாகக் காணத்தெரியாது. இவை வெறும் தனிமனிதர்களின் சுய உந்துதலில் நிகழுபவை என்று எண்ணுகின்றனர்.

இ.மு.எ சங்கம் சிறிமா அரசு ஆதரவில் இயங்கியது என்று காட்ட எஸ்.பொ முயல்வது தொடர்ந்து நிகழ்கிறது. அதன் மூலம் இடதுசாரிகள் கூட்டரசில் இடதுசாரிகள் இருந்தனர். பங்கெடுத்தனர் சில இடதுசாரிச் சிந்தனைச்செயற்படுத்த அதிகாரம் பெற்றனர் என்ற உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு தமிழரசுவாதிகளின் முறைப்பாடுகளை எஸ்.பொ தொடர்;ச்சியாகக் கூறிவருகிறார். இதையும் மீறி இடதுசாரிகள் சிறிமா அரசுடன் இணைந்து பயனடைந்ததாக குற்றம் சொல்ல முடியுமாயின் எஸ்.பொ இந்த இடதுசாரி ஐக்கிய முண்ணணி காலத்தில் பொதுத்தேவைக்காக வன்றி தனது சொந்த தேவைகட்காக சிறிமா அரசு சார்ந்த சம்பவங்கள் இவர் காலத்தவர்களால் வரிசைப்படுத்தப்படுகின்றன. இடதுசாரிக்கட்சிக்காக மேடையேறியதைத்தானே எழுத்தில் குறித்திருக்கிறார். எம்.சி ஊடாக தனிப்பட்ட வாழ்வுக்காக சாதித்துக்கொண்டவைகளை எந்த அரசியலுக்குள் சேர்ப்பது? எஸ்.பொ ஆசிரியர் தொழிலையே ஒழுங்காயப் பார்க்காதவர் ஒரு ஆசிரியருக்குரிய ஒழுக்கத்தைக் கூட ஒரு போதும் பெற்றிராதவர் எத்தனை மாணவமாணவிகளை இவர்களிடம் படித்தவர்களை சமூக உணர்வுள்ளவர்களாக உருவாக்கியிருக்கினார்? வி.பொன்னம்பலம் ஆசிரியராக இருந்த இடங்களில் சமூக உணர்வுள்ள மாணவமாணவிகளை உருவாக்கினார்;. அவர் வன்னியில் முள்ளியவளை வித்தியானந்தர் கல்லுரியில் படிப்பித்த காலத்தில் இடதுசாரிதிசையில் சிந்திக்கக்கூடிய வகையில் மாணவமாணவிகளை உருவாக்கினார். அப்படி ஏதாவது முன்னுதாரணம்

எஸ்.பொ இன் வாழ்வில் நடந்திருக்கிறதா?

இ.மு.எ. சங்கத்தின் இலக்கியப்பொதுக்கொள்கை என்பது ஸ்டாலினிசப் பாதிப்புக்கொண்டிருந்தது என்ற போதும் அது பெரும்பகுதியாய் 1960, 1970 ஆண்டுகாலத்துக்குரிய அரசியல் சமூக நிகழ்வுகட்கான எழுத்தாகவுமிருந்தது. இலவசக்கல்வி தாய்மொழிக்கல்வியினால் ஏற்பட்ட புதிய வாசிப்பு இலக்கிய நுகர்வுள் சர்;வதேசிய ரீதியாக ஏற்பட்ட முற்போக்கு இலக்கிய வளர்ச்சி வியட்நாம், கிய+ப் எழுச்சிகள் மாணவர்கள் இயக்கம் என்பன பல்வேறு காரணிகளின் தாக்கம் இலங்கையின் தமிழ் எழுத்துகட்கு மட்டுமல்ல சிங்கள இலக்கியம் மக்களிடம் இன்னமும் தீவிர நிலையில் இருந்தது. தமிழ்மொழியில் மட்டும் இந்த மரபு மீறிய எழுச்சி ஏற்படவில்லை. சிங்கள் மொழியில் இது தமிழைவிட பரந்து நடந்தது. தமிழ் சிங்கள மொழிகளில் ஏற்பட்ட இந்த நிலை ஒரு பொதுவான இலங்கை தழுவிய போக்காக இருந்தது என்பதை எஸ்.பொ போன்ற வலதுசாரித்தமிழ் தேசியவாதிகளால் காணமுடியவில்லை. இக்காலமே முதல்முதலில் சாதாரண மக்களைப் பாடுபொருளாய்க் கொண்ட இலக்கியம்கள் தோன்றின. புதிய இளம் இலக்கிய நுகர்வாளர்கள் தோன்றினர். சங்க இலக்கியம், மதம் சார்ந்த பக்தி இலக்கியம்கள் இவைகட்கு வெளியே நிகழ்காலத்தின மனிதப்பெரு வெளியைப்பாடும் படைப்பாளிகள் தோன்றினர். இவைகள் தமிழ்நாட்டு வர்த்தக இலக்கியம்கட்கு மாற்றாக இலக்கியம் விற்பனைப்பண்டமானதற்கு எதிர்ப்பாய்த் தோற்றம் பெற்றன. இவர்கள் கதைகளில் கமக்காரர்களும், மீன்பிடித்தொழிலாளியும். சீவல் தொழிலாளியும் தேயிலைத்தோட்ட மனிதர்களுக்கு வன்னியில் முரளிப்பழம் ஆயும் மனிதர்களும் இலக்கியமாந்தர்கள் ஆகினர்.


எஸ்.பொ ஆதரித்து நிற்கும் சதாசிவம், சோ.இளமுருகனார் உட்பட தமிழ் மரபுகாக்கும் கூட்டம் சிறுகதை, நாவல் இலக்கிய முயற்சிகளை எதிhத்;தனர். இதில் தமிழ்மரபுகாணப்படவில்லை. இவை தமிழ் மரபுக்கு எதிரானது இது இழிசனர் இலக்கியம் என்றனர் தமிழ்த்தேசியவாதிகள் இக்கருத்துக்களை ஆதிரித்து இவர்களைப் பலப்படுத்தினார்கள். யாழில் நடந்த சாகித்திய மண்டல விழாவில் பேசிய சதாசிவம் சான்றோர் வழக்கு. இழிசனர் வழக்கு இவை பற்றிப்பேசியதுடன் இ.மு.எ.சங்கம் இழிசனர் வழக்கை மக்கள்மயப்படுத்துவதாகக் குற்றம் சொன்துடன் சான்றோர் வழக்குகளைப் பேணி எழுதப்பட்வேண்டும் என்று வாதிட்டார். இளங்கீரன், டொமினிக்ஐPவா போன்றவர்கள் சதாசிவத்துக்கு இக்கூட்டத்தில் பதிலிறுத்தார்கள். தோழிலாளர்களை ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து இலக்கியம் படைக்கும்போது அம்மக்கள் பேசும் மொழியிலேயே எழுதவேண்டும் சாதாரண மொழி வழக்கில் எழுதினால்தான் எடுபடும் அவர்களின் பாத்திரத்துக்கு ஏற்ப எழுதவேண்டும். பண்டிதர்கள் பேசும் மொழியில் எழுத முடியாது என்று கூறியபோது கூட்டத்துக்குத் தலைமை வகித்த நடேசபிள்ளை அதை ஏற்றுக்கொண்டார். மரபுவாதிகளை தமிழ்தேசியவாத சக்திளை எதிர்த்துப் போராடிப்போராடியே டானியல் போன்றவர்களின் மக்கள் மொழிபேசும் இலக்கியம்கள் எழுந்தன. முதலாளித்துவ சமூகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானுறு பேசப்பட்டாலும் உயர் இலக்கிய மட்டம்களில் உரையாடப்பட்டாலும் சாதாரண பெரும்பகுதி மக்களுக்கு இது இலக்கியமாவதில்லை. பழைய மத்திய காலத்தில் பலநூறு, ஆயிரம் வருடம் முன்பாக எழுந்த இந்த நூல்கள் புதிய முதலாளிய வளர்;ச்சிசூழலுக்கு பொருத்தமிழக்கத் தொடங்கிகின்றன. இந்த புதிய சூழலில்தான் சிறுகதை நாவல், கவிதை என்பன பிறந்து மக்களின் இலக்கிய நுகர்வுக்காயின புதிய சமுதாய நிலைமைகளில் பழைய சமுதாயத்தின் இலக்கியம்கள் பெரும்பான்மை
மக்களிடமிருந்து அன்னியப்படத் தொடங்கும். சமுதாயம்மாற மொழிமாறும் மக்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசப்பட்டு முன்னேறும் அப்போது பழைய இலக்கியம்ங்கள் புதிய சூழலின் இலக்கிய நுகர்வுத்தேவைகளை நிறைவேற்றப் போதாததாகிடும்.


இதை தமிழ்த்தேசியம் சார்ந்த மரபுவாதிகளை எற்கவில்லை. அவர்கள் புறநானுறு, சிலப்பதிகாரக் கனவுகளிலும் தேவார திருவாசக மொழிகளிலும் தமிழ் வளர்க்கப்பட்டுவிடும் என்று நம்பக்கொண்டிருந்தனர். ஆனால் தமிழ்மொழியோ, புதிதாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் என்பனவற்றை எழுதத் தொடங்கிவிட்டது. இவைகள் இலக்கியம்கள் ஆகா என்ற மரபுபேணுபவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். 1960களில் சோ.நடராசா இடதுசாரி சிறுகதை எழுத்தாளர்களை “சிறுத்தை எழுத்தாளர்கள்” என்று நக்கல் விட்டபோதும் கால வளர்ச்சி அவைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது. மரபுக்குரல்கள் பின்னடிக்கத்தொடங்கின. சிறுகதைப்படிப்பதுகூட மோசமான செயலாகக்கருதப்பட்ட காலம் போய் கதைகள், கவிதை, நாவல் படிக்கத் தொடங்கப்படடது. மக்கள் அவற்றை வாங்கத்தொடங்கினார்கள்.


இலங்கையில் புத்தக நிறுவனம்கள் இத்தகைய நூல்களை வெளியிடுவது அதிகரித்தது. சமுதாய முன்னேற்றம் மரபுகளை கைவிடுவதைக் கட்டாயமாக்கியது. 1546இல் தொடங்கி 1960 களில் ஆக்க இலக்கியம், இழிசனர் வழக்கு என்ற போக்குக்கு எதிரான கருத்தக்கள் தகரத்தொடங்;கின.
எஸ்.பொ தமிழ்பற்றாளர்கள் எனக்குறிப்பிடும் நபர்கள் யாவரும் தமிழரசு, கூட்டணி ஆதரவாளர்கள், குறுகிய தமிழ்த்தேசியவாதிகள், இவர்களின் இன, மத, பிரதேச உணர்வுகளை, சாதிய உணர்வுகளை, யாழ்ப்பாண நடுத்தரவர்க்க உத்தரிப்புகளை எஸ்.பொ பேசவில்லை. அதை ஆராயுமளவுக்கு அறிவுசார்ந்த கவனமும் அவரிடமும் இல்லை. சங்க இலக்கியமே ஈழத்தமிழர் இலக்கிய மரபு என்று வாதிட்;டவர்கள் தமது தேசியவாதப் பொருமைகளை தமிழக வரலாற்றுகளிலும் படித்த இலக்கியம்களிலுமே தேடினர். அவர்கள் தம்சொந்த இலங்கை சார்ந்த இலக்கியம்கட்கு முயலவில்லை.

இ.மு.எ.சங்கம் கொழுப்பு சாஹிராக் கல்லூரியில் நடத்திய மாநாட்டில் வெளியிட்டப்பட்ட விழாமலருக்கு பணம்பெற்றமை கூட ஒரு குற்றச்சட்டாக எஸ்.பொ ஆல் வைக்கப்படுகிறது. பொதுவாக விழா மலர்களை அது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட அதிக விலையைக் கொடுத்தே விழா மேடைகளில் பெறவது ஒரு வழக்கம் ஏன்எனில் இந்நூல்கள் அச்சிடப்படும் செலவை ஈடுசெய்வதில்லை. அனேகமாக இவை நட்டத்திலே முடியும். போட்டகாசை எடுக்க முடியாது நூல்களை உருவாக்க கட்டுரைகளை எழுத பலர் நேரத்தையும்.

பொருளையும் செலவுசெய்து அலைந்து திரிந்தே விழா மலர்கள் வெளியிடுவது வழக்கம். இ.மு.எ.சங்கம் இலவசமாக நூல்களை தருமளவு பொருளாதார பலம் உடையதாகவா இருந்தது? இலக்கிய
கரிசனை படைத்தவர்கள் தமது கருத்து வித்தியாசம்கட்கு அப்பால் ஒரு வெளிவரும். நூலை வாங்கியும் விற்பனைக்கு உதவி செய்யவும் வேண்டியவேளையில் எஸ்.பொ விழாமலரை எனக்கு இலவசமாய் தரவில்லை. என்றல்லவா கேட்கிறார். ஒரு நூல்வாங்க முடியாதளவுக்கு பொருட்கஸ்டத்திலா பிச்சை புகும் நிலையிலா? எஸ்.பொ இருந்தார். தன்னை எழுத்தாளராகக் கருதிக்கொள்ளும் ஒருவர் அதுவும் இப்போதானே அச்சம் தொடங்கி நடத்துபவர் நூல் அடித்து வெளியிடுவதில் உள்ள சிரமம் நூல்களைப் பணம்கொடுத்து வாங்காதவர்களின் தொகை அதிகம் என்று விடயம்களை உணராமல் இருந்திருக்கமுடியாது. எஸ்.பொ தன் நூல்களை அடித்து இலவசமாகவா மக்களுக்கு கொடுக்கிறார் காசு வாங்காலமா வினியோகம் நடக்கிறது. இந்த “வரலாற்றில் வாழ்தல்” நூலுக்கு இந்தப் பெரிய விலை போடப்பட்டு இருக்கிறதே அவுஸ்ரேலியாவில் டொலராக எண்ணுபவர் இதை ஏன் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் இலங்கையில் தந்திருக்கக்கூடாது. இ.மு.எ. சங்கம் விழா மலரை அடித்து தனக்கு தர்மத்தில் தரவில்லை. என்று ஒரு பள்ளிச்சிறுவனைப்போல ஆத்திரம் காட்டும் எஸ்.பொ தனது வரலாற்றில் வாழ்தல் நூலை இலங்கை தமிழர்கட்கு எத்தனை நூறு புத்தகம் இலவசமாகக் கொடுத்தார்? அற்பத்தனத்துக்கு ஒரு அளவு வேண்டாம்.


எஸ்.பொ எழுதும் நூல்களை பணம் கொடுத்து வாங்கிப்படிக்கும் நாம் எல்லோரும் அவரை எழுத்தாளர் என்று ஒப்பவேண்டும். ஆனால் பல எழுத்தாளர்கள் ஒன்று சேர்;ந்து உழைத்துக்கொண்டு வரும் நூலை எஸ்.பொ காசு கொடுத்து வாங்கமாட்டர். இலவசமாகக்கொடு என்பார் பலபத்து வருடம் கழித்தும் தனக்கு விழாமலர் காசுக்கு தர முயற்சிக்கப்பட்டதாக எழுதுமளவு….. காசில் குறி இலக்கியத்தில் அரசியல் வரக்கூடாது, கோசம்கள் ஆகாது என்கிறார் எஸ்.பொ இலக்கியத்தில் நேரடிப்பிரச்சாரம், அரசியல் வெளிப்படையாக வருவது கூடாது என்றபோதும் அரசியல் இல்லாமல் மனிதவாழ்வு இல்லை. ஸ்டாலினிசம் இலக்கியத்தை நேரடிப்பிரச்சாரமாக்கியது என்பதை முழுச் சோசலிச இலக்கியம் கட்டும் எதிராய் திருப்பமுடியாது. முதலாளித்துவம் இலக்கியத்தில் தனது கருத்தைதானே பிரச்சாரம் செய்கிறது. பைபிள் முதல் குரான்வரை பகவத்கீதை முதல் காந்தியம் வரை அரசியல் துறந்தா எழுதப்பட்டுள்ளது? தமிழில் போர்க்கால இலக்கியம் என்ற பெயரில் புலிகளைப்பாடுவதுதானே நடக்கிறது. பிரபாகரனைத் தோத்திரம் செய்யும் இலக்கியம்கள்தானே தமிழில் உள்ளன. சிங்களவர், சிங்களவர் என்று இனவெறி படிக்காத புலி இலக்கியம் ஒன்றை எஸ்.பொ எமக்குக் காட்டப்படும். ஸ்டாலினிச இலக்கியம்கள் அப்படி ஏன் ஆயின. ஸ்டாலினிசம் எந்த உள்மற்றும் சர்வதேச நிலைமைகளில் உருவானது என்று தெரியாமல் அதை அரசியல் ரீதியில் விளக்காமல் முழுப்பழியையும் மாக்சியத்தின் மேல் போடுவது எஸ்.பொ வுக்கு இலகுவான விடயம். தமிழ்நாட்டில் சொல்லக்கேட்டதை வாசித்துவிட்டு தானே சுயமாய் கண்டறிந்த ஆய்வாளர் தோற்றம் எஸ்.பொ.வுக்கு பொருத்தவில்லை. மேலும் இலங்கையில் ஸ்டாலினிஸ்டுகளே இலக்கியம் படைத்தனர். மாவோயிசத்தினால் பாதிப்புற்றவர்காளன டானியல் போன்றவர்களே எழுதினர். எல்.எஸ்.எஸ்.பி இலக்கியத்தில் மிகவும் குறைவாகவே பங்கெடுத்தது. அவர்கள் ஸ்டாலினிஸ்டுகள் போல் இலகியப்பார்வையைப் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இவர்களைவிட தத்துவரீதியில் மிகவும் ஆழமான அரசியல் பேசினர் எழுதினர். தமிழ்நாட்டில், ஜீவா எம்.எம்.ரோய் போன்றவர்களைவிட செவ்வியல் மாக்சியத் சிந்தனைகளை எழுதினர் கொல்வின் உடன் ஒப்பிடக்கூடிய மாக்சிய சிந்தனையாளர் இந்தியத்துணைகண்டததில் இருக்கவில்லை. எஸ்.பொ மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஸ்டாலினிச வழிபாட்டறையில் இருந்துவந்தவர்கள் நவமாக்சியம், மரபு மாக்சியம் என்று 1970களில் மேற்குலக சீர்திருத்தவாதச் சோசலிசக்கருத்துக்களை பேசியவர்கட்கும் இது சார்ந்த படிப்பு இருக்கவில்லை. இந்தியாவைவிட மிகச்சிறந்த மாக்சிய சிந்தனையாளர்களை சர்வதேசவாதிகளை இலங்கை பெற்றிருந்தது. தம்சொந்த இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றைக்கூட எழுதும்படி தமிழ்நாட்டு அ.மாக்ஸ், போன்ற பழைய ஸ்டாலினிஸ்டுகளிடம் விட்ட எஸ்.பொ களுக்கு எதையும் கற்றுத்தர முடியாது. இந்தியாவுக்கு மாக்சிய நூல்கள் இலங்கையில் இருந்து கடத்திக்கொண்டு செல்லப்பட்ட வரலாற்றை எஸ்.பொ. படிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ், சிங்கள இடதுசாரி எழுத்தாளர்கள் தனியே எழுத்தாளர்களாக மட்டும் இருக்கவில்லை. தனியே இலக்கியத்தை படிப்பறைகளில் இருந்து படைத்தவர்களல்ல அவர்கள் அரசியல் செய்தவர்கள், சமூகப்போராளிகளாக இருந்தார்கள் எனவே அவர்கள் இலக்கியம்கள் மக்களிடம் இருந்து புறப்பட்டன. வடக்கில் இடதுசாரிகள் எழுத்தாளர்கள் சாதியப்போரட்டத்தில் ஈடுப்பட்டார்கள். அது முழுமையாக அவர்களுடைய இயக்கமாக இருந்தது. அதில் அவர்களது அரசியல் நேரடியாக இயங்கியது எனவே சோசலிசமும் செங்கொடியும் இல்லாமல் அந்த இலக்கியம்கள் வராது. அந்த இலக்கியம்கள் வலிந்த பிரச்சாரமாக திணிக்கப்பட்ட கருத்துகளை உடைனயதாக இல்லாமல் போரட்டத்தின் வாழ்பவனுபவமாக எழுத்தாக இருந்தது.

எஸ்.பொ

அரசியல் வேடிக்கை பார்த்தவர். கிடைக்கும் மேடையேறி வேட்டி, சேட் கசங்காமல் தேர்தல் அரசியல் பேசியவர் அவர் சமூக இயக்கத்தில் பங்கெடுத்தவர் அல்ல எனவே மக்கள் சார்ந்த அனுபவம் இல்லை. எஸ்.பொ எழுத்துகளைக் கவனித்தவர் கட்டுத் தெரியும் அவர் தனது கடந்த காலத்தை திரும்பதிரும்ப வௌ;வேறு மொழிகளில் சொல்லிக்கொண்டிருப்பது தெரியவரும் அரசியலை பிரச்சாரம் செய்யக்கூடாது எனும் எஸ்.பொ. பாலியலைப் பிரச்சாரம் செய்யவில்லையா? இயற்க்கையாகக் காட்ட வேண்டிய பாலியலை மற்றவற்றில் இருந்து தனித்துக்காட்டும் எழுத்துக்களாக்கவில்லையா? எஸ்.பொ தன்னைத்தானே காதலுறும் எழுத்துக்களை எழுதுவதை இலக்கியம் என்று எப்படி அழைக்கலாம்? அது சுயபிரச்சாரம் அதீத சுயநலமித்தனம் என்று ஆகாதா? ஏஸ்.பொ மதம்களைப் பேசும்போதும் காந்தியம், பற்றி உழறும்போது அது பிரச்சாரம்தானே தளையசிங்கம் சர்வோதயத்தை பிரச்சாரம் செய்தபோது அது ஏதே மாக்சியத்தை முந்திச்சென்று விட்ட சிந்தனை என்று பிரச்சாரம் செய்ய இலங்கையிலும் இந்தியாவிலும் சிலர் வாய்திருக்கிறார்கள்.
“மொழியின் அச்சாணியான மரபுபிழந்தால் மொழி பிறிதாகிவிடும் மொழியை வளப்படுத்தும் அதிகாரம் படைப்பாளிக்கு இருக்க வேண்டும்” என்றார் எமது படைப்பாளி எஸ்.பொ. மொழி, மரபு யா’வுமே மாறுபவை மாறக் கூடியவை பாரதி மொழியையும், மரபையும் மாற்றவில்லையா?

சமுதாயம்

வளர்ச்சியில் நேற்றைய மரபும் மொழியும் உடைந்து பொடிபடும் புதிய மரபும் புதிய மொழியும் உருவாகும். தோழிற்புரட்சியின் பின்புதான் ஐரோப்பிய மொழிகள் வளர்நதன. புதிய பல ஆயிரம் செற்களைப் பெற்றன. ஒவ்வொரு புதிய பொருள் படைப்பிற் போதும் புதிய மொழிப் பிரயோகம் கள்தோற்ற மெடுத்தன. அது வளர்ந்தபோத பழைய காலத்துக்கொள்வாத சமூக விரோத மரபுகளை உடைத்தன. நாகரீகமான மரபையும் மொழியையும் படைத்துக்கொண்டன. பாரதி பிறநாட்டு நல்ல சாக்திரம்களை தமிழக்கு கொண்டு வரவேண்டும் என்று சொன்னது தமிழ் மரவை மீறித்தான் மேற்குலகத்தத்துவம், சிந்தனைகள் வந்தபோது தமிழ்மொழி வளர்ந்தது. அகலித்தது அதற்கேற்ற புதிய மரபுகள் தோன்றின.

இலக்கியம்

இலங்கையில்தான் கட்சி அதிகாரத்தை எதிர்த்தாயும் கட்டளையிட்டு இலக்கியம் இடதுசாரிகளால் படைக்கப்பட்டதாயும் எஸ்.பொ எழுதியுள்ளார். அண்மைக்காலம் வரை இந்த மனிசன் எஸ்.பொவின் தமிழ்நாட்டுத் தொடர்புகள் ஞானி, தமிழவன், எஸ்.வீ.ஆர், அ.மார்க்ஸ், வெங்கடசலாபதி போன்றவர்களின் எழுத்துக்களின் பாதிப்பலேயே எஸ்.பொ இப்படியான கருத்துகக்ளைத் தேடிக்கொண்டார். இதில் எஸ்.வி.ஆர் மட்டுமே மாக்சியத்தின் பொருளாதார உற்பத்தி உறவுகளைபற்றி சிறிது தொட முயன்றவர் மற்றயவர்கள் அக உலகை மாக்சியத்துடன்; ஒன்றாக இணைக்க முடியும் என்ற நம்பியவர்கள். புற உலகு பற்றிய உணர்திறன் குறைவினால் மனிதர்களின் அக உலக இருப்புகட்டு நேரத்தை செலவிட்டவாக்ள். மனித இருப்பு என்பதை தனிமனித ரீதியில் சமுதாயத்துக்கு வெளியே பரிசீலித்தன்ர் வர்க்கம் கடந்து ஆய்ந்ததால் தோல்வியுற்றனர். “மாக்ஸ்” மனித இருப்பு என்பதை “மனித வாழ்க்கை முறைசார்ந்த உணர்வுதான் எண்ணம்களைத் தீர்மானிக்கிறது” என்றார். மனித உணர்வில் புற உலகு பிரதிபலிப்பதே உணர்வு ஆகும். ஸ்டாலினிஸ் அரசியலை அது தோன்றிய ரஸ்ய மற்றும் சர்வதேசப் பொருளாதார நிலைமைகளை ஊடுருவியறிய முடியாதவாக்ள் நான்களையும், சுயத்தையும்,

இருப்பையும் சுற்றியலைந்தார்கள் பல்வேறுப்பட்ட தனிமனித உளவியல் ஆய்க்கினைகளை முதலாளியத்துள் பட்டுக்கொண்டு சோசலித்திடம் பல வண்ணச்சிந்தனைக்களை கோரினர்கள் இவர்கள் மனித மனம்களைப் பிரதானமாக்கினர். மனிதர்களின் அறிதல் பண்பை சமூகத்தின் வளர்ச்சி நிலைகளையும் மீறி ஆராய்ந்தனர். மறுபுறம் மனித அறிவியலை நிராகரித்து தனிமனித தேடல்கட்கு ஊக்கம் தந்தனர். இவர்கள் பேசிய தனிமனித சுயம், இருப்பு என்பன கெகல் முதல் சங்கராச்சாரியார் வரை வலியுறுத்தும் ஆன்மா, பரமாத்மாதான் சமுதாயத்தை துறந்த தனிமனித அலைச்சலாகும். முதலாளியம் சமூகத்தை உதிரிகள் கும்பலாய்காண்கிறது. “அவனது பாட்டை அவனவனே பார்க்கவேண்டும்” என்று கற்றுத்தருகிறது. மனிதர்களை தனித்தனியே நிஷ்டை கூட அழைக்கிறது. இங்கு அமைப்பியல்வாதம், முதல் பின்நவீனத்துவம் வரை பேசப்புறப்பட்டவர்கள் வந்தடைந்த இடமும் இதுதான். இவர்கள் மாக்சியத்தை ஆராயப் புறப்பட்டதாய்த் தொடங்கி கடையாக மதவாதிகளின் கருத்துமுதல்வாத எல்லைகளை வந்தடைந்தனர். Nபுழு நபர்களாக முடிவுற்றனர்.


இவர்கள் கட்டற்றமனிதர்களை அவாவினர். சுதந்திர இலக்கிய கட்டவிழப்புகளைத் துரத்திச் சென்றனர். கட்சி, சமூகம், சட்டம், தத்துவம் போன்றவற்றை நிராகரித்த கலகக்காரர்களாக கோமாளி வேடம் தரித்தனர். தனிமனித கலகத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் கலகத்துக்கு எதிராக நிறுத்தினர், உளவியல் நீதியாக மனிதர்களிடையே பல மன அமைப்புகள், விருப்புகள் இருப்பதான கருத்தியல்கள் உதவியுடன் தனிமனிதர்களின் புற உலகு மேலான பார்வை வித்தியாசப்படும் என்று பொதுமைப்படுத்தினர். மனிதர்கள் இதுவரை சேமித்த அறிவுச் செல்வங்களை நிராகரித்து ஒவ்வோரு மனிதரும் தத்தம் புலனுணர்வுத்தகவல்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனித விருப்புகள், ஆசைகள், நலன்கள் ஏன் வித்தியாசப்படுகிறன்றன. ஏற்றத்தாழ்வாக. எதிர்த்தன்மைபடைத்தாய் மாறுகின்றன என்று இவர்கள் தேடப்பயந்தனர். முதலாளித்துவ மனிதம் அறம் என்பன வர்க்க மதிப்புக்குட்படுத்தப்;படாத நிலையிலும் ஸ்டாலினிசக் சமூகங்களில் நிலவிய பண்புகள் குறித்த தத்துவநிலைப்பட ஆய்வுகள் இவர்களிடம் தோன்றிவில்லை மாறாக இரண்டையும் சமமாக்கினர். ஸ்டாலினிசம் ஏன் தோன்றியது எப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருவியல் நிலைமைகளில் படைப்பாக அது இருந்தது?

அது பொருளாதாரத்துக்கு முழுமை தந்து கலை, சட்ட, பண்பாட்டு, மனித இயல் அம்சங்கட்கு இடம் மறுத்தமையின் காரணிகள் என்ன? இதன் மூலம் அது எதை அடைந்தது? உயர்ந்த சோசலிச தொழிற்துறை வளராமல் உயர்ந்த மனிதப் பண்பாடுகள் தோற்ற முடியுமா? மனித சுதந்திரம் வழக்கப்படும் ஒன்றா அல்லது தானே பொருளியல் நிலையில் விளைவாக உருவாவதா? என்பதற்கான விளக்கம்கள் இருந்தன பேசப்பட்டும் விவாதிக்கப்படடும் வந்தன. ரொட்ஸ்கி இதை வேறு எவரையும்விட மிகமிகச் சிறப்பாய் எல்லாத்தரவுகளுடனும் விளக்கியிருந்தார். ரொட்ஸ்கியைக் கற்கப்பஞ்சிப்பட்டவர்கட்கு அவரைப் படியாதர்கட்கு மாக்சியம் தெரிந்ததாய் நம்ப முயன்றவர்கள் அடைந்த இறுதி நிலை இதுதான். ஸ்டாலினிச விளக்கமில்லாதவர்கள் மாக்சியத்;தை பொருளாதாரவாதமாகப் பார்த்தார்கள். மனிதர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது ஏற்படும் உறவுகள்தான் சமூகத்தின் குணத்துக்கு அடி நிலையாகும். இது பொருளாதாரவாதமல்ல. “ஆதிக்கம் செலுத்தம் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தம் பொருளியல் உறவின் பிரதிபலிப்பாகும்” என்று மாக்ஸ் கூறினார். மேற்கட்டுமானம் என்பது பொருளாதார உற்பத்தி, உறவுகளின் தொடர்ச்சிதான் இரண்டுக்குமான உறவை விளக்கப்புகாமல் பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து இவர்கள் மேற்கட்டுமானத்தைத் துண்டாடினர்கள் எனவே இது இவர்களை தவறான முடிவுகட்கும் கட்சிபிழை, மார்ச்சியத்தில் அறப்பண்புகள் இல்லை தனிமனிதம் நசுகப்பட்டுவிடுகிறது என்ற முடிவுகளை அடைந்தனர். பொருளாதார உற்பத்திமுறை உற்பத்தி உறவுகள், மூலதனச் செயற்பாடு என்று இவர்கள் ஒரு போதும் ஆராயமுடியாதவர்களாக இருந்தனர். பொருளாதாரத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் ஒரு புதிய பொருளாதாரச் செயற்பாடும் உற்பத்திமுறையும் வரும்போது மேற்கட்டுமானத்தில் எது நடைபெறும் என்ற விளங்க இவர்களால் முடியவில்லை. இந்தியாவில் உலகமயமாகும். பொருளாதாரநிலையில்

பின்பு எப்படி உள்ளது நடுத்தரவர்க்கம் புதிதாக வளர்ந்தமை இந்தியாவுள் மூலதனத்திரட்சி, பெறுநிறுவனம்கள் உருவாக்கம், புதிய நுகர்வு என்பன மேற்கட்டுமானத்தை மாற்றவில்லையா? ஆடையும் அணிகலனும் உணவும், இசையும், ஆசைகளும் சமூகத்தில் ஒரு பகுதியில் மாறும்போது மேற்கட்மானம் மாறாதா? இந்திய நடுத்தரவர்க்கம், காந்தியையும், ராமரையும் விட்டுவிட்டு பில்கேட்டையும், கொம்யூட்டர் நிபுணர்களைக் கைக்கொண்டமை எந்தவிளைவுகளை ஏற்படுத்தும் பலஆயிர்மாண்டுச் சாதியையும், இந்து மத்தையும் பின்தங்கிய பழைய விவசாய முறைகளையும் இந்தியா கைவிடக்கட்டாயம் ஏற்படும் இது முன்னெப்பொழுதையும்விட விரைவாக மாறும். யோகிகளும், சாமிகளும், வேதங்களும் விரைவாக இல்லாமல் போவார்கள். கிராமக்களுக்கும் நகரம்களுக்குமான பொருளாதார வித்தியாசம் இடைவெளி என்பன கிராமங்களின் பழைய பண்புகளை இலகுவில் அழியவிடாது என்றபோதும் அது நடக்கும் சோதிடமும் ராமர்ககைத் தொடரும் தொலைக்கட்சிகளில் நவீனமாய் வருதலும் பழைய இந்தியாவை காப்பற்ற முடியாது. மேல்கட்டுமானம் கட்டாயம் மாறுகிறது ஊடகம்கள் கிராமப்புறம் கட்குள்ளும் நுழைகிறது. பழையவைகளை உலுப்புகிறது. புதிய பிரமாண்டமான தொழிற்துறைகளுள் இந்தியா நுழைவதுதான் இதற்குக் காரணம். நடுத்தர வர்க்கம் தொழிலாளர்கள். புதிய நவீன விவசாயிகள், பெரு முதலாளிகள் என்போர் உருவாகின்றனர். வர்க்கம்கள் முன்னரைவிட தெளிவாய் பிளவுபடும் முரண்கள் அதிகரிக்கும் புதிய முதலாளிய நிலைமைக்கு ஏற்றதும் எதிரியுமான அரசியல் கலாச்சாரம்கள் தோன்றும்.


தமிழ்நாட்டு தமிழ் நடுத்தரவர்க்கப் பேராசியர்கள். அறிவாளிகள் தமது தம் சொந்த அகம்களை, இருப்புகளைத் தேடித் துன்புறுவர்கள். பொழுதுபோக அகவயமான சுற்றுலாக்களில் சஞ்சரிப்பார்கள். ஆனால் ஏழை மக்கள், உழைப்பாளிகட்கு இந்த சுயம்தேடும் ஆக்கினைகள் இருப்புகளை இட்டு ஏங்கும் தொந்தரவுகள் இருக்கமாட்டாது. அவர்கள் தமது வயிற்றுக்கும் வாழ்வுக்கும், சம்பளத்துக்கும், தொழிலுக்கும். போராடுவார்கள் தன்னை யொத்தவர்களோடு சேர்ந்து நிற்பார்கள். பொருளாதார அடிப்படைமாறும்போது மேற்கட்டுமானமும் மாறத்தொடங்கும் இது இந்த கல்வியாளர் கடுகதி ஆசைக்கேற்ப மாறாது. சமூக இயக்கவிதிகட்கு ஏற்பமாறும் பல ஆயிரமாண்டு மனிதக்கொடுமைகளை உடனேயே இக்கணமே தொலைத்துத் தலைமுழுக வேண்டும் என்று நடுத்தர வர்க்க விண்ணர்கள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவுவார்கள். அது அவர்களது வர்க்கக்குணம் பொருள்முதல்வாதம், சமூக இயங்கியல் என்ற மாக்சியக் கருத்துக்களை வெறும் அருவமாகக் கருதுவதற்கு ஏற்படும் கதி இதுதான். மனிதர்கள் பொருளாதார ரீதியாக ஏன் உயர்வு தாழ்வாய் வாய்ப்புப் பெற்றுள்ளர்கள். இது மக்களின் பண்பாட்டுக்கோலத்தில் செயற்படுவதில்லையா? மனிதர்கள் சுண்டலில் இருந்து விடுவிக்கபடாமல் தனிமனித சுதந்திரம் இருப்பு என்பன சாத்தியமில்லை. அதுவரை இக்கருத்தாளர்கள் அறிவாளிகள் தம் விருப்பத்துக்கு கனவுகளைச் சுமந்து திரிவார்கள். தம் வர்க்கப் புத்திக்கேற்ப கடும்பிடிவாதம் பிடிப்பார்.
தமிழ்நாட்டு நடுத்தரவர்க்கப் அறிவாளிகளைக் கண்டு திகைத்துப்போன எஸ்.பொ.வுக்கு அவர்களிடமிருந்து கருத்துக் கொள்முதல் செய்வது இலகுவாகியது மாக்சிய இயக்கம்கள் அதிகார மயமாகிவிட்டது என்ற சொல்லடுக்கு எஸ்.பொ.வுக்கு இனித்தது. சோசலிச நாடுகளது வாழ்வு எத்தகைய பொருளாதார நிர்பந்தம்களுக்குள் உலகப்போக்குகள் வாழவிந்தன. ஸ்டாலினிசத்தின் தத்துவப்போக்கின் தவறுகள் எத்தகையது என்றெல்லாம் எஸ்.பொ.வுக்கு அடி நுனி தெரியாது. அவர் தமிழ்நாட்டில் சொல்லப்படத்தை திரும்பிச் சொல்கிறார். அதைப்பரிசோதிக்குமளவுக்கு கீர்த்தி படைத்தவரல்ல. தமிழ்நாட்டு சீர்திருத்தவாதக் கருத்துகள் ஏன் சோசலிசநாடுகள் வீழ்ந்த பின்பு வருகின்றன. இக்கருத்துக்கள் மேற்குலகில் பேசப்பட்டு கிட்டத்தட்ட பல பத்தாண்டுகளின் பின்பு எந்த வர்க்க நோக்கில் அரசியல் தேவையின் பொருட்டு தமிழ்நாட்டுக்குவந்தன என்ற கேள்விகளை எஸ்.பொ கேட்கவில்லை. அமைப்பியல், பின்நவீனத்துவம், நவமாக்கியம், ஐனநாயக சோசலிசம் போன்றவை ஒருபுறம் ஸ்டாலினிசத்துக்கு எதிர்விளைவாக இருந்தன எனக் கொண்டாலும் அதை விளக்கும் போரட்டத்திற்குரியவை எற்று தெரியப்படுத்தப்பட்டாலும் தத்துவரீதியில் அவை சீர்திருத்தவாதத்துக்குத்தான் சேவை செய்தன. சோவியத்யூனியன் போல இலங்கையிலும் இலக்கியப் போக்குகளை இடதுசாரிகள் நசுக்கினர். தமது அரசியல் விருப்புகட்கு இணங்கும்படி கட்டாயப்படுதினர் என்று எஸ்.பொ.வின் முதலாளித்துவச் சேவை. புலிப்பாசிசத்துக்கான உதவித்தொண்டாற்றல் தான்.


இலங்கையில் இடதுசாரிகள் சோசலிசப் புரட்சிகர அரசையா நிர்வகித்தார்கள்? அவர்கள் ஊடகம்கள், எழுத்து, இலக்கியம் என்று சகலதையும் கட்டுப்படுத்தினார்கள்? இலங்கையில் சோசலிசம் பேசிய ஒற்றையான மக்கள் தொட்புச் சாதனம்களா நிலவின? எல்லாம் சோசலிச எழுத்தாகப் பேச்சாக இருக்கவேண்டும் என அவர்கள் தமிழ், சிங்களப் எழுத்துக்களைக் கட்டுப்படுத்திக் கண்காணித்தார்களா? சுதந்திரன், தமிழன் என்று தமிழின வெறிப் பத்திரிகைகள் அப்படியாயின் எப்படி வெளிவந்தன? சிங்களவர்கள் சிங்களவன் என்று இவை எழுதினவ அதுவும் என்ன இடதுசாரிகளின் கட்டளையிலா நடந்தது? இலங்கையின் இலவசகல்வியால் பயன்பெற்ற முதலாவது இளம் சந்தததி 1960, 1970களில் சமூக வாழ்க்கைக்கு வந்தது. அரசியலில் வலிமை பெற்றது. ஆங்கிலமல்லாத தாய்மொழிகளில் கற்ற இந்த இளம் சந்தத்திதான் வியட்நாமைக் கேள்விப்பட்டது. கிய+பாவையும், மாணவர் எழுச்சிகளையும் கண்டு அதிசயித்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுகள் வளர்ந்து வந்தகாலம், தென்னிலங்கையில் கண்டிச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் பேதம்கள் பலமிழக்கத் தொடங்கிய அதேசமயம், வடக்கில் இலங்கை தழுவிய சமூக நிகழ்வுப்போக்குகளை உணர்ந்த அரசியல் செய்தவர்கள்; இடதுசாரிகள் எனவே அவர்கள் மரபுகளை உடைத்தார்கள். சாதியைக் கேள்விகேட்டார்கள். இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரும் வேலைநிறுத்தம்களை நடத்தினார்கள். இந்த எழுச்சியே இடதுசாரிகளின் எழுத்துக்குள்ளும் வந்தது. கைலாசபதியும், டானியலும் ஏதோ வானத்திலிருந்து பொத்தென்று விழவில்லை. அவர்களது எழுத்துக்கான தேவை இருந்தது. சமுதாயக் கட்டளை நிலவியது. அதற்கு கைலாசபதி டானியலின் தனிப்பட்ட கெட்டித்தனம் காரணமல்ல. மாறாக அன்றைய சமுதாய நிலைமைகள் தனக்குக் தோதான திறமை படைத்தவர்களைத் தேடிக்கண்டு பிடித்தது என்பதே பொருத்தம்.


தமிழ்நாட்டுப் எழுத்துக்கள் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம்கள் இந்த இலங்கை தழுவிய எழுச்சியை பிரதிபலித்திருக்க முடியாது. அவை தமிழ்நாட்டு நடுத்தரவர்க்க நுகர்வாளர்களின் எழுத்துதீனிகுரியவையாகும். எனவேதான் இலங்கைத் தமிழ் பரப்புகளை தம்மைத்தாமே எழுதத் தொடங்கியது தமிழ்நாட்டுப் எழுத்தை மட்டுமல்ல இலங்கைத்தமிழ் மரபுப்போக்குகளையும் அவை அன்னியமாய் கருதியது. இதனால்தான் பண்டித்தர்கள், புலவர்கள், வித்துவான்கள் கூட்டம் மரபு அழிகிறது. தமிழ்க்கலாச்சாரம் ஒழிகிறது என்று தமிழ்தேசியவாதிகளுடன் இணைந்து குரலிட்டகாலமது. இலங்கை தழுவிய சுயசார்ப்புப் பொருளாதாரம் எழுத்தொடங்கிய காலத்தில் புதிய இலங்கை தழுவிய மனிதப்பொதுப்போக்குகள் எழுந்தன. தமிழ், சிங்கள, முஸ்லீம், இனவாதப் பேதம்கள் கேள்விக்குரியதான சமயத்தில்தான் மேற்கத்திய தூண்டுதலில் தமிழ்தேசியவாதிகள் தமிழ் ஈழக்கோரிகையை எழுப்பினர். அமெரிக்க மசாவூசென்டஸ் மாநிலம் ஆதரித்து தீர்மானம்போட்ட காலமது. இங்கு எஸ்.பொ போன்றவர்களின் இடதுசாரி எதிர்ப்பு இந்த பின்புலத்திலேயே கண்டுகொள்ளப்படல் வேண்டும்.


ஒரு முதலாளிய அரசில்தான் இடதுசாரிகள் கூட்டரசு சீர்திருத்தம்களில் ஈடுபட்டது. இங்கு ஒரு தனியொரு இ.மு.எ.சங்க எப்படி முழுத்தமிழ்ச் சமூகத்தையம் கட்டுப்படுத்தயிருக்க முடியும். தமிழ் தமிழ்தேசியவாதக் கட்சிகளான தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் என்பவை அல்லவா அப்போ தமிழ் மக்களைக்கட்டி அவிட்டுக்கொண்டு இருந்தன. இடதுசாரிகளை ஒடுக்கிக்கொண்டு இருந்தனர். இடதுசாரிகள் சோசலிசப் பிரச்சாரம் செய்தனர் என்கிறார் எஸ்.பொ. அதாவது மீனவர்கள், மரமேறும் தொழிலாளிகள், விவசாயிகள் கிராமிய விவாசாய உழைப்பாளிகள், சாதிக்கொடுமை இனவாதம்களை பேசுவது இலக்கியததுள் அரசியலை நுழைக்கும் முயற்சியா? உழைக்கும் மக்கள் கதைமாந்தராகக் கூடதா? அது நடந்தால் அது அரசியலா? எஸ்.பொ.போல் ஆதம்ஜோதி முத்தையாகளையும் சைவசமயப்பிரச்சாரி தங்கம்மா அப்பாக்குட்டியையுமா எழுத வேண்டும். தளையசிங்கம் சுதந்திரனில் தமிழரசுக்கட்சி சத்தியாக்கசிரம் பற்றி எழுதினால் அது அரசியல் இல்லாமல் வேறென்ன? எஸ்.பொ தனது சொந்தப்புத்திரனை மாவீரனாக்கி எழுதுவது என்ன அரசியல் இல்லையா? சாதியெதிர்ப்பு இயக்கம்களை இடதுசாரிகள் நடத்தினர்கள். அதையே தமது சொந்த அனுபவத்தையே எழுதினார்கள். முதலாளித்துவம் தன்னைப்பிரச்சரம் செய்யாமலா இருந்தது. தமது சொந்த பாலியல் அலைச்சல் பற்றி எழுதிக்கொண்டிருந்த எஸ்.பொவுக்கு சாதியெதிர்ப்புப் பற்றி எழுத நேரம் இருந்திராது என்பதுடன் அது இடதுசாரிகளின் பகுதி என்பதால் ஒடுக்கப்பட்ட சாதி மக்களே எஸ்.பொ.வை அடித்துத் துரத்தியிருப்பார்கள். தானும் தன்பாடுமாக இருந்த எஸ்.பொ.வுக்கு சமுதாயத்தைப் பற்றி யோசிப்பதென்பது ஆடம்பரமான செயலாகும்.


அரசியலை மறைமுகமாகவேனும் பேசாத இலக்கியமோ எழுத்தோ கிடையாது. சிலப்பதிகாரம் திருக்குறளுக்கு அரசியல் நோக்கம் இல்லையா? புறநானூறுக்கும் தேவார திருவாசகங்களுக்கும் பக்திப்புலத்துக்குப் பின்பு அரசியல் கரிசனைகள் இருக்கவில்லையா? டோல்ஸ் டோய், மாக்சிம் கோர்க்கி, பெற்றோல் பெரஸ்ட் தோம்ஸ்மான் எல்லோரும் அரசியலை விலத்தியா இலக்கியம் எழுதனர். பாரதி எதைப்பாடினான்?. ஏழைகள் செல்வந்தனும் அவரவர் தலைவிதிப்படி உள்ளனர் எனும் முதலாளியச் சமூக ஒழுங்கை எதிர்க்காத ஒரு எழுத்து இலக்கியம் எழுதப்படத்தான் வேண்டுமா? எஸ்.பொ புலிப்பாசிசத்தைக்கூட ஆதரிக்கும் அரசியல் உரிமையை அனுபவித்துக்கொண்டு இடதுசாரிகட்கு எஸ்.பொ இலக்கிய வேலிபோடப்பார்க்கிறார். ஒரு கலைப்படைப்பு அது தோன்றிய சூழலைப் பிரதிபலிக்காதா? சமூகத்தில் நிலவுவது படைப்பாளியின் எழுத்தில் பிரதிபலிக்காதா? கலைகள் கலை நோக்தைத் தாண்டக்கூடாது என்றால் உலகில் இலக்கியம்கள் இல்லை. தன்னைத்தானே எழுதிவிட்டு தனிமனிதப்புலம்பலையே கதை என்று எழுதி விட்டு எஸ்.பொ படைப்புத் தொழில் வேள்வி, தவம் எம்மை அருட்டுகிறார். எஸ்.பொவிடம் உள்ள உண்மையற்றவைகளை எல்லாம் எழுதிவிட்டு வாய்மையில் சிறந்தவர் உத்தம எழுத்துக்களுக்கு பொறுப்பாளி என்ற புனைவுகளில் பயன் இல்லை. இடதுசாரிகள் என்ன புலிப்பாசிஸ்டுகள் போல் எழுதாமல் பண்ணினார்களா? பத்திரிகை, சஞ்சிகைகளை நிறுத்தினார்களா? எழுதியவர்களை கொன்றார்களா? திருஞானசம்பந்தர் போல் மாற்றுச்சமய நூல்கள் என்று எதிர்க்கருத்துகளை தீயிட்டார்களா ஆற்றில் வீசினார்களா? எஸ்.பொ இன் எழுத்து தேடப்படாமல் போனதற்கு இடதுசாரிகள் எப்படிப் பொறுப்பு? புலிப்பாசிஸ்டுகள் அமிர்தலிங்கம் வீட்டிலிருந்த பெரும் தொகை நூல்கள் வெளியப் தூக்கிப்போட்டு நெருப்புவைத்தார்களே இதையிட்டு எஸ்.பொ. எது கூறுவார்?


நிலவினிலே பேசுவோம்


கடந்த 15 வருடங்களாக கைலாசபதி மேலான விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் அவரை பண்பற்ற மனிதராகக் காட்டும் முயற்சிகள் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், புகலிட நாடுகளிலும் தொடங்கின. பல்போக்குகளை பரிசோதனை செல்வதாய்க் கூறிக்கொண்ட இவர்களில் பெரும்பகுதி மாக்சிய விரோதிகளாக இருந்தனர். கடந்த 10 வருடங்களில் புகலிட நாடுகளிலும் முக்கியமாக இலக்கியப் போக்குபோன்ற தமிழ்நாட்டு நடுத்தரவர்க்க அரசியல் போக்குடையவர்களால் வழிநடத்தப்பட்ட அல்லது அவர்களால் கருத்தாதிக்கம் செலுத்தப்பட்டவர்கள் கைலாசபதி எதிர்ப்பை பிரதானப்படுத்தினர். இது ஒரு வகையில் மாக்சிய எதிர்ப்பாகவும் மறுபுறம் தம்சொந்த அரசியல் போக்குகட்கு துணையாகவும் இதைச்செய்தனர். இவர்களில் எவரும் மாக்சியச் சிந்தனையுடன் தொடக்க நிலை வாசிப்புக் கூட இல்லாதவர்களாகவும் ஒர்; இரண்டு மாக்சியக் கலைச்சொற்களைத் தெரிந்திருப்தே இடதுசாரிக்கருத்தை விளங்கப்போதுமானது எனக்கருதும் அறிவு படைத்தவர்களாகவுமிருந்தனர். தமிழ் ஈழப்போரட்டத்தின் தோல்வியில் இருந்து தப்பி இவர்கள் புதிய அரசியல் போக்குகளைத் தெரிவு செய்ய முயன்றனர். அமைப்பில், பின்நவீனத்தும் தலித்தியம் என்பனபற்றி தமிழ்நாட்டில் பேசி எழுதப்பட்டவைகளை இவர்கள் பற்றிக்கொண்டனர். புகலிட நாடுகளிலோ, இலங்கையிலோ தலித்தியம் பொருந்துமா? அமைப்பியல், பின்நவீனத்தும் போன்ற போக்குகள் எழுந்த மேற்கலகக் சூழல்கள் அவைபின்பு செல்வாக்கிழந்து மறைந்த காரணிகள் இவைகளைத் தேட முயலவில்லை. இந்த போக்குகள் மேல் இவர்கட்கு இருந்த சந்தேகமானது இவர்களை படுதீவிரமான உணர்வு நிலைக்குத்தள்ளியது. இவற்றை விசாரிக்க முயல்பவர்களை தீவிர எதிரிகளாகக் குருதிய இவர்கள் இதேசமயம் கட்டற்ற கட்டுடைப்புச் சுதந்திரம் பலதளப்பார்வை அவரவர் விருப்புக்கேற்ப பிரதியினை வாசிப்புச் செய்தல் என்ற சொற்சிலம்பம்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் நடைமுறையில் விமர்சனம் மாற்றுக்கருத்து என்பன முர்த்தண்ணியமாக எதிர்க்கப்பட்டது மாற்றுக்கருத்துக்களைக் கூறுவோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போக்குகள் தீவிரமான தனிமனித இருப்புகளைக்காக்கும் போரட்டம்களாகவே இருந்தன. கலகக்காரர்களாக இவர்கள் தோன்றவிரும்பினர். இதை மறுத்தோடியவர்கள் எதிரிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். இங்கு கருத்துப்போரட்டங்களுக்குப் பதில் கருத்து முரண்பாடுகள் தனிமனிதப் பகையுணர்வுடன் அனுப்பட்டன. இவர்களில் ஒருபகுதி பிற்காலத்தில் தமிழ் தேசிய வெறியர்களாகவும் தன்னார்வக்குழு நபர்களாகவும் பரிணாமம் பெற்றனர்.


இலக்கியப்போக்கில் தாம் இணைந்திருப்பதாக கருதிக் கொண்டவர்கள் சிலர் “நிலவினிலே பேசுவோம்” கதை கைலாசபதியை மையமாயக்கொண்டு எழுத்தப்பட்டது. அவர் சாதி பார்த்தார் கைலாசபதி “வேளாள மாக்சியவாதி” என்ற கருத்துகளைப் பரப்பினர். ஏற்கனவே கைலாசபதி சாதி வெறியர் என்பது போன்ற கருத்துத்தயாரிப்புகள் அ.மாக்சின் எழுத்துக்கள் ஊடாகப் பரப்பட்டிருந்தது. இதை ஜெயமோகன், இலங்கையில் யேசுராசா, மு.பொன்னம்பலம், போன்றவர்களுடன் எஸ்.பொவும் சேர்ந்து திட்டமிட்டுப் பரப்பினர். இந்த வதந்தியைப்பரப்பிய அ.மாக்சுக்கு இதன் உண்மை பொய்களை விசாரித்தெழுதும் பொறுப்பும் கடமையுள் இல்லாதுபோனது அவர்கள் தம் நடப்புக் கருத்துகளுக்கு கைலாசபதி சாதி பார்த்தார் எனக் காட்டுவது தேவையாகவும் இருந்தது, தமக்கே நிச்சயமற்ற இலங்கை இடதுசாரி இயக்கம்கள் பற்றிய ஒரு கருத்தைப் பரப்பினர். இலங்கையில் தமிழ்தேசியவாதிகள் கைலாசபதி எதிர்ப்புக்கு இதைப் பயன்படுத்தினர்கள். இலங்கைத் தமிழ் இடதுசாரிகள் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தினால் அதிர்ச்சியடைந்தபோதும் அதை மறுக்கும் ஊடக மின்மையாலும் ஒரு இடதுசாரியைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுக்கத்தவறிய குணத்தாலும் இதைக் கைவிட்டனர். தமிழ்நாட்டிலும், புகலிட நாடுகளிலும் இருந்த அச்சு வசதி அவர்களிடமிருக்கவில்லை. புலிப்பாசிசம் அவர்களின் அமைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளை இல்லாமல் செய்துவிட்டது. அவர்களால் ஒரு மேதினத்தைக்கூட தமிழ்ப்பகுதிகளில் கூடக்கொண்டாட முடியாதளவு புலிப்பாசிசத் தடை நிலவியது. அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டும் மிகுதியானவர்கள் தப்பிகொழுகும்புக்கும், வெளிநாடுகளுக்கும் போய்விட்டனர்.

சிறுபகுதி தமிழ்த்தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டென்று பழைய பாடலைப் பாடிக்கொண்டு புலிப்பாசிசத்திடம் போய்ச் சேர்ந்துவிட்டனர். எனவே இலங்கைத் தழிழ் மக்களின் மத்தியிலிருந்த எடுத்துக்காட்டான கொம்யூனிஸ்டுகளை. எழுத்துத்துறை சார்ந்தவர்களை விமர்சனத்தை அறிமுகப்படுத்தியவர்களை பாதுகாக்க எவரும் இருக்கவில்லை. எனவே இடதுசாரித்திசையில் இருந்து மறுப்பு வரவில்லை. என்பதால் மாக்சிய எதிரிகள் மிகவும் உசாரடைந்தனர். தமக்கே சந்தேகமான நிருபணமற்ற இடதுசாரி எதிhப்பு விடயம்களை அவர்கள் உண்மை என்று மேனடகட்கும் எழுத்துகட்டும் எடுத்துச் சென்றார்.


“நிலவினிலே பேசுவோம்” கதை எப்போது எந்த ஆண்டில் யாரால் எழுதப்பட்டது இத்தனைக்கும் அதன் சேதி என்று எவருக்கும் எந்த வினாக்களும் இருக்கவில்லை. கதையை எவரும் வாசித்திருக்கவுமில்லை. ஆனால் கைலாசபதி எதிர்ப்பு வதந்திகளை அவர்கள் தீவிரமாய்ப்பற்றிக் கொண்டார்கள். கதையை கவிதைகளை ஆய்கிறோம், மேய்கிறோம் என்றவர்கள் “நிலவினிலே பேசுவோம்” கதையை எழுத்து அது தோன்றிய காலம், சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் நிலை. இடதுசாரி இயக்கங்களின் பங்கு, கதையின் நோக்கு கதை நிலவிய களம் என்பவைகளை ஆயந்தோய்ந்து பார்க்க வேண்டிய தமது கடமையைப் பொறுப்பு எடுத்தாதில்லை அதைச் செய்திருந்தால் அது மதிக்கப்பட்டு இருக்கும் வாதம்கள் தோன்றியிருக்கும் அதைச் செய்யாமல் வதந்திகள் மேல் சவாரிவிட்டனர் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்புக்கு முழுமையாய போராடினார்கள் என்று நிரூபிக்கப்படுவது தலித்தியம் போன்ற போக்குகட்கு புகலிடத்தில் பாதகமாகிவிடும் என்றும் தலித்தியமே இலங்கை சாதியாப்பிரச்சினகளுக்கும் தனிமுதலான தத்துவம் என்று நிரூபிக்க இவர்கள் ஆசையுற்றனர். எனவே கடந்தகால இடதுசாரிகளின் தியாகம்களை போராட்டத் தடயங்களை ஒப்புக்கு பேசுவதோடு மட்டுப்பட்டனர். மறுபுறம் இடதுசாரிகளின் தவறுகளின் மீது தேடலைத் தொடங்கிளர். இந்தத் தேடலகள் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் போரட்டப்படிப்பினைகளாக அதை வளர்த்து எதிர்காலத்துக்கு சமர்பிப்பது என்பதல்லாத நிரகாரிக்கும் பண்புடையதாக இருந்தது. இடதுசாரிகளை தழிழ்த் தேசியவாதிகள் செய்தது போல் இவர்களும் இருட்டடிப்புச் செய்தமை மூலம் இடதுசாரி இயக்கங்களின் இரத்தமாய் சதையாய் நாடி நரம்;புகளாய் இருந்து போராடித்தியாகங்கள் புரித்த ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைப்பாளர்களையும் கைவிட்டனர்.

எஸ்.பொ.வும் இதே எழுத்து மனோநிலையே கொண்டுள்ளார். எஸ்பொ.ஆல் எழதித்தரப்பட்டு தர்மகுலசிங்கம் என்பவர் பெயிரில் வெளியிடப்பட்ட நூலும் கைலாசபதியை விமர்ச்சிக்கும் கதையே “நிலவினிலே பேசவோம்” என்று எழுதியது ஆக அ.மாக்சால் தொடக்கப்பட்டு எஸ்பொ வரை எடுத்து எழுதப்பட்டு ஒரு பொய்யை உண்ணாக்கிவிட்டிருந்தனர். அமைப்பு வடிவங்கள் இழந்து வயது முதிர்ந்து திக்குத்திக்காய் சிதிறிக்கிடந்த பழைய இடதுசாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. மனவேதனைப்பட மட்டுமே முடிந்தது. இந்தச்சூழல் மாக்சிய விரோதிகட்கும் தழிழ்த்தேசியவாதிகட்கும் வாய்ப்பாக இருந்தது. இவர்கள் சுதந்திரமாக கைலாசபதி எதிர்ப்புடன் நடமாடினர். இவர்கள் ஒருபோதும் அழமான. ஆய்வுகட்கோ விமர்சனத்தையோ கொண்டிருக்கவில்லை. குற்றஞ்சாட்ட வதந்திகளைக்காவி வருவதை வழக்காய்க் கொண்டனர். இனிநாம் ரகுநாதனால் 1960களின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நிலிவினிலே பேசுவோம்” கதையைப் பேசுவோமேயானால் இக்கதை அவரால் ஒருபோதும் கைலாசபதியைக் குறித்து. எழுதப்படவில்லை. அக்கதை எழுதப்பட்ட சமயம் கைலாசபதியுடன் நெருக்கமான பழக்கமும் ரகுநாதனுக்கு இருக்கவில்லை கைலாசபதி அப்போ கொழும்பில் இருந்தார். ரகுநாதன் இக்கதையை தனது ஆசிரியராக இருந்த பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த ஜே.பி.செல்லத்துரையை மையமாக் கொண்டே எழுதினார். அவருடன் ஏற்பட்ட அனுபவத்தையே “நிலவினிலே பேசுவோம்” கதையாக எழுதினார் அந்த ஆசிரியர்ஒரு கிறஸ்தவராவார் என்பதுடன் ஒரு தமிழ்தேசியவாதியாவும் இருந்தவர். அவர் வீட்டுக்கு ஒருமுறை ரகுநாதன் சென்றபோது “நல்லநிலவு எறிகிறது வெளியே மணலில் இருந்துபேசுவோமா? என்ற வார்த்தைகளை வைத்தே இந்தச்சிறுகதையை எழுதினார். இக்கதைப்பாத்திரத்திற்கும், கைலாசபதிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டிலும், புகலிட நாடுகளிலும் இலங்கையிலும் கைலாசபதியுடன் தொடர்புபடுத்தி இக்கதை சார்ந்து உலாவவிடப்பட்டுள்ள வதந்திகள் பெரு உருவம் எடுத்துவிட்டன. இதை எழுது முன்பு கனடாவில் உள்ள ரகுநாதனுடன் பேசியபோது “இக்கதைக்கும் கைலாசபதிக்கும் ஒரு தொடர்புமில்லை இதை நான் பலமுறை மறுத்துவிட்டேன். இவை திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. 4 வருடம் முன்பு வெளிநாடு வந்துபோன தெளிவத்தை யோசப் இதைப்பற்றிப் பல இடங்களில் பேசியதாயும் ஆனால் அவர்தன்னைச் சந்தித்தபோது இதுபற்றி தன்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று குறிப்பிட்டதுடன் அவர் பொனபின்பே தன் “நிலவினிலே பேசுவோம் கதை கைலாசபதியைக் குறித்து எழுதப்பட்டது என்ற தெளிவத்தை ஜோசப்பின் பேச்சைக்குறித்து கேள்விப்பட்டு இலங்கையில் உள்ள தினக்குரல் பத்திரிகைக்கு மறுப்பு எழுதியதாயும் குறிப்பிட்டார்.

கைலாசபதியுடன் தனக்கு இருந்த இலட்சியமயமான உறவுப்ற்றிக் குறிப்பிட்ட ரகுநாதன் தனது வீட்டுக்கு கைலாசபதியும் அவரது மனைவியும் அவர்வீட்டுக்கு தானும் போவது வழக்கம் கைலாசபதி வீட்டில் உல்லா உரிமைகளோடும் நான் பழகினேன். அரசியல் பேசுவது சாப்பிடுவது உறங்குவது என்று சாதியறியாத நட்பு எம்மிடையே இருந்தது. நான் போனால் சாப்பிடாமல் போகவிட மாட்டார்கள். என் வீட்டுக்கு கைலாசபதியும் மனைவியும் வந்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கைலாசபதி இறந்தபோது ஈமக்கரிகைகள் முடிந்து பின்பு கூட அந்தத் துக்கநிலைமையிலும் தன்னைக் கைலாசபதியின் மனைவி மறித்துச் சாப்பிடப்பண்ணிப்போட்டுத்தான் அனுப்பினார். 4 வருடம்முன்பு நான் வெளிநாடு வருவதற்கு முன்பு கைலாசபதி வீட்டுக்குப்போய் அவரது மனைவி பிள்ளைகளைச் சந்தித்து சாப்பிட்டு பயணம் சொல்லிவிட்டுத் தான் வந்தேன். கைலாசபதி சாதி பார்த்தவர் என்று அவரைக்கண்ணாலும் பாராதவர்கள் அவரைப் படிக்காதவர்கள் செய்வது அதிசயமாக இருக்கிறது. :கைலாசபதி எமது ஆதர்ச் தலைவர் மகாநதி” என்று இறுதியாக ரகுநாதன் கூறினார். தமிழக எழுத்தாளர் அசோகமித்திரன் யாழ்வந்தபோது அவருக்கு டானியல் வீட்டில்தான் விருந்து பொடுக்கப்பட்டது. அதற்கு கைலாசபதி, அவர் மனைவி, சிவத்தம்பி, மௌனகுரு, சண்முகநாதன் எனப்பலர் டானியல் வீட்டுக்கு வந்தனர். ரகுநாதன், டானியல், டொமினிக்ஜவா, உட்பட சகல ஒடுக்கப்பட்ட சாதித்தேழர்களின் வீட்டு விசேடம்கட்கும் நன்மை தீமைகட்கும் கைலாசபதி உட்பட சகல கட்சித்தோழர்களும் சாதி, வித்தியாசம் இல்லாமல் போய் வந்தார்கள். சகல சாதிகளைச் சேர்ந்த தோழர்களும் கiலாசபதி வீட்டுக்குப் போய் வந்து கொண்டாடினார்கள்.

தழிழ்தேசியவாதிகள் போல் இடதுசாரிகளும் சாதி பார்த்தார்கள் என்பது அரசியல் விசமமாகும். இடதுசாரிக்கட்சிகளில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர்களே அதிகமாகவும் முக்கிய இடம்களிலும் இருந்தனர். கட்சிக்குள் சாதி பார்த்தால் விடுவார்களா? கட்சியைவிட்டுக்கலைத்து விடமாட்டார்களா? இடதுசாரிகட்கு கட்சியில் வேலைத்திட்டம், இலட்சியம் இருந்தது. அங்கு சாதி பார்த்தவர்கள் இருக்க முடியாது. கைலாசபதி உயிரோடு இருந்தபோது இந்தக் குற்றச்சாட்டு வரவில்லை. அவர் இறந்து இவ்வளவு நாட்கள் சென்ற பின்பு புலிப்பாசிசத்தின் உச்சகட்டத்திலும் சோசலிசம் கிழக்கில் வீழ்ந்த பின்பு கிளபப்படுகிறது. புகலிட நாடுகளில் சில இலக்கியம் கல்லாத இலக்கியம்கள் கைலாசபதியை “வேளாள மாக்சியவாதி” என்று அமிலம் வீசினர். மாக்சியவாதிகளில் கறுப்பு மாக்சியவாதி. வெள்ளை மாக்சியவாதி, செவ்விந்தியமக்சியொவாதி யூதமாக்சியெவாதி தலித்திய மாக்சியலவாதி, பிராமண மாக்சியவாதி என்று முதலாளித்துவ இன, நிற, சாதியப் பரிவுகளைப் பின் தொடர்வதில்லை, முதலாளியம்தான் மனிதர்களை பிளக்கிறது. பிரித்து ஆள்கிறது. மக்கள் ஜக்கியப்படாமல் பார்த்துக்கொள்கிறது. இதற்கு உதவுவது போலவே இந்த புகலிட இலக்கியம்கள் முதலாளித்துவ குறுங்குழுவாதப் புத்தியறிவில் கிடந்து உழலுகிறார்கள். சாதி, இனம், நிறம் கடந்து சகரும் ஒன்றிணைந்து போராட வேண்டியதருணத்தில் முதலாளித்துவ அமைப்பு எற்படுத்தி வைத்துள்ள பிறவுகளை, சாதிய, இன, மத பிரிவுகளை இவர்கள் ஏற்று அதைப் பின்பற்றுகிறார்கள். வர்க்கம் சார்ந்த அரசியலை தேர்ந்து கொள்ளாதவர்கள் கட்டாயம் தோல்வியுறுவார்கள் என்பதை காண் நாம் கொடுத்து வைத்தவர்களாக இருப்பொம். வெள்ளை நிறவாதம் இருக்கிறது. என்பதற்காக நாம் ஜெர்மனியிலும், பிரான்சிலும், ஐரோப்பிய அரசியல் போராட்ட சக்திகளுடன் இணையாமல் நாம் கறுப்பு நீங்கள் வெள்ளை என்று நிறவாதம் பேச முடியாது. தலித்தியம் தழிழ்நாட்டிலும் இந்தியா தழுவியும் பணம் பெட்டிகளுக்கு விலையாகிக்கொண்டு இருக்கிறது. புலிப்பாசிசத்தை ஆதறிக்கும் திவிர தமிழ் வெறியர்களாகவும் , இந்துமதவிதிகளும்ன் கூடுபவர்களாகவுமுள்ளளர். ஊழலும், பதவியில் போட்டியும் அதிகாரப் போக்கும் ஏனைய முதலாளித்துவக்கட்சிகளைப் போலவே பெருத்துவிட்டது. தழிழ்தேசியவாதிகட்கு நடப்பதுதான் தலித்தியத்துக்கும் நடக்கம் நடக்கிறது. எத்தகைய நியாயமான போராட்டமாக இருப்பினும் முதலாளித்துவ ஜனநாயகத்துள் அவர்களின் போராட்டம்கள் எவ்வைக்குட்கட்டவையே என்பதும் இறுதி முடிவு வர்க்க உறவுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகும். இந்திய தலித்திய இயக்கிம்களின் இன்றைய சீரழிவு எதிர்பார்க்கப்பட்டதே.

கைலாசபதியை அந்தரப்பட்டு “வேளாள மாக்சியவாதி” என்று இலக்கியச்சந்திப்புகளில் கருத்துக் கட்டினார்கள் அவர் வேளாளர் அல்ல. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை செட்டி பிரிவைச்சார்நதவராகும். அவரின் வண்ணார் பண்ணை ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் வாழும் பகுதியாகும் செட்டி சமூகம்
யாழ்குடாநாட்டுகள் ஒடுக்கப்பட்ட சாதிமக்களை விடத்தனிமைப்படுத்தப்பட்ட மிகச்சிறு மக்கள் பிரிவாகும். இவர்கள் யாழ்ப்பாணத்தில் செட்டிபகுதி” என்று கழித்தே வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இந்தியர், வடக்கர் என்ற பாங்கிலும் மதிக்கப்ட்டனர். இவர்கள் கொழும்புபோல் யாழ்ப்பாணப் பகுதியில் பொரும் வியாபாரிகளாகவோ செல்வந்தர்களாகவோ இருக்கவில்லை. இவர்கள் திருமண உறவுகள் உட்பட பெருமளவு சமூக உறவுகளிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த சமூகப்பலம் குன்றிய மிகச்சிறு மக்கள் பிரிவாகும் வேளாளர் சமூகம் இவர்களை ஒதுக்கியே வைத்திருந்தது. இவர்களுடன் கைகலப்பதில்லை. கைலாசபதி என்ற பெயர் பொதுவாக யாழ்குடாநாட்டுக்குள் வேளார்களிடம் மட்டுமல்ல ஏனைய மக்களிடம் காணப்படாத பெயராகும். சிஙகளப் பகுதியில் வாழ்ந்த செட்டி, மக்கள் பிரிவினர் சிங்கள மக்களோடு கலந்தது போல் யாழ்குடாநாட்டுக்குள் நிகழவில்லை. சிங்களவா மத்தியில் உள்ள ஆதி கெட்டி என்ற பெயர் ஆதிச்செட்டி என்பதில் இருந்து வந்ததாகும். சிங்கள மொழயில் சா.கா இரண்டும் ஒரேவிதமாக உச்சரிக்கப்பட்டதால் ஆதி செட்டி ஆதி கெட்டியாது சரி என்ற சொற்பிரயோகம் கரி என்ற உச்சரிக்கப்பட்டது. கைலாசபதியின் எழுத்துக்களை வாசித்து மறுவாதம் வைக்க முடியாத கொடுமைதான் நிகழ்ந்தது என்றால் தனிப்பட்ட கைலாசபதி பற்றிக்கூட எத்தனை எழுந்தமானமான தகவலறியா பிரச்சாரம்கள் நடந்தன என்று விளங்க முடியும். கைலாசபதி மேலான விசமர்சனம்கள் யாவும் இத்தன்மை படைத்தவையாகவே இருந்தன. கைலாசபதியின் ஆய்வறிஞர் என்ற இடத்தை நிரப்ப இன்னமும் எவரும் வரவில்லை என்பதே அவரின் சிறப்பாகும். அவர் மாக்சியத்துக்கு பெருமை சேர்த்தவர். அவரிடம் நிலவிய ஸ்டாலினிச, மாவோயிசக் கூறுகள் அவரது இலக்கிய மற்றும் திறனாய்வுப் போக்குகளை பெருமளவு சேதப்படுத்தவில்லை கைலாசபதியை அவர் வாழ்காலத்தில் இலங்கையின் வளர்ச்சி நிலைகளுடன் ஒப்பிட்டே விசாரிக்க வேண்டும். எஸ் பொ போன்றவர்களும் கைலாசபதி எதிரிகளும் பெரும்பகுதி தமிழ்த் தேசியவாதிகளாவா தமிழ்தேசியவாதப் பரப்பில்தான் சாதிபார்ப்பும் யாழ் நடுத்தரவர்க்கக் குணாதியம்களும் சிங்கள, முஸ்லீம் வெறுப்பும் நிரம்பிக்கிடக்கிறது. கைலாசபதி இ.மு.எ.சங்கத்தின் தலைவர் ஆக்கப்பட்டமையே அவர்மேல் சாதிஎன்பதாலேயே என்ற எஸ்.பொ.வின் குற்றச்சாட்டுகள் போலவே அவரது எல்லா வாதமும் உண்மையறியாத போக்குகளில் இருந்து கட்டப்பட்டதாகும். இடதுசாரிகள் சாதிக்கலப்பு, இனக்கலக்குக்கு தடையானவர்களா? இடதுசாரி அமைப்புகளில்தான் எல்லாச் சாதியும் மதமும், இனம்களும் கலக்கின்றன. கொம்யூனிஸ்டுகள் என்றால் சாதிகுறைந்தவர்கள் எல்லாச்சாதியையும் ஒன்றாக்குபவர்கள் என்றே குடாநாட்டுக்குள் பொதுக்கருத்து இருந்தது. கொம்யூனிஸ்டுகள் என்றால் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு சமமான சமூக மரியாதையே கிடைத்தது. அவர்கள் சமூகப் பகிடிகளுக்குள்ளாக்கப்பட்டு இந்தனர். தர்மகுலசிங்கம், பொன் கந்தையா உட்பட கொம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட சாதிப் பெயர் அடைமொழிவைத்தே அழைக்கப்பட்டனர்.


மரபுவாதிகட்குமேல் முட்டையெறி

எஸ்பொ.போலவே

இ.மு.எ.சங்கத்தைச் சோந்தவர்கள் கூட்டம் குழப்பினார்கள் முடடையெறிந்தார்கள் என்ற செய்தி இலங்கைகiயில் புலிப்பாசிசம் சார்ந்த யேசுராசா, மு.பொன்னம்பலம் கும்பல் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் இருண்டது விடிந்தது தெரியாத ஜெயமோக்ன வரிசைகள் கடந்த 10 வருடமாக இதைத் திரும்பத் திரும்ப கூறியிருக்கிறார்கள். இதற்கு இடதுசாரிகள் தரப்பில் இருந்து பதில் தரப்படாத நிலையில் புலிகள் முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்த கலைத்ததைவிட வன்னியில் புலிகளின் மனித வதைமுகாம்கள் உள்ளதைவிட முக்கயமான செய்தியாக பேசியும் எழுதப்பட்டும் வருகிறது. தமிழ் வலதுசாரிகளும் தழிழ்நாட்டு சிற்றிலக்கிய பரப்பில் இடைவிடாது உருப்போட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 45 வருடம் முன்பு நடைபெற்ற சம்பவத்தை இன்று எழுதுபவர்கள் நேற்றும், இன்றும் தமிழ் மண்ணில் புலி செய்யும் பயங்கரவாதத்தை எழுதமாட்டார்கள். அது கண்ணில் தெரியாது இடதுசாரிகளில் குண்ரூசி முறையளவு தவறுகள் கூட ……………….. இமயமலையை நிகர்த்தாக இவர்கட்டு ஆகிவிடும்.

இப்போ எஸ்.பொ எழுதும் இந்த முடடையெறிந்த சம்பவம் 1963 ஒக்டோபரில் யாழ் இந்துக் கல்லூhயிpல் நடைபெற்ற சாகித்திய மண்டல விழாவில் நடைபெற்றதாகும். அக்காலத்தில் தமிழ்தேசியவாதிகளின் மரபும் இடதுசாரிகளின் மரபு மீறும் போரட்டம்களும் தீவிரமான உச்சநிலையில் இருந்த காலமாகும். முதலில் சாகித்திய மண்டலப் பரிசுக்கான கதையாக இளங்கீரனின் “நீதியே நீ கேள்” கதையே தேர்ந்தெடுக்கப்பட்டது. சாகித்திய மண்டக்குழுவில் அப்போ தமிழ்த் தேசியவாதிகளான சதாசிவம் எவ்.எக்ஸ்.சி.நடராசா போன்றவர்கள் முக்கியமாக இருந்தனர். 1963 ஆண்டு முதலில் நீதியே நீ கேள் கதை தேர்ந்தேடுக்கப்பட்ட பின்னர் சாகித்திய மண்டலக் குழுவில் இருந்த முஸ்லிமான சலிமை திட்டமிட்டு அழைக்காமல் மீண்டு மொரு முறை கூடி இளங்கீரனின் கதையை நீக்கிவிட்டு வேறொரு கதைக்கு பரிசை அறிவித்தார்கள் இளங்கீரன் ஒரு முஸ்லீம், இ.மு.எ.சங்கத்தைச் சேர்ந்தவர் என்ற காரணிகளுடன் எஸ்.பொ. உட்பட்ட பலரின் தனிப்பட்ட சதிகள் குசுகுசு மாநாடுகள் இதன்பின்பு இருந்தன. சதாசிவம், சு.நடேசபிள்ளை, பெரியதம்பிப்பிள்ளை, வ.சு.இராசரத்தினம். நடராசா, எஸ்.பொ போன்ற தமிழ்த் தேசியவாத மற்றும் இடதுசாரி எதிரிப்பு நபர்கள் அதில் ஒன்று திரண்டு இருந்தனர்.

சாகித்த மண்டவிழா யாழ் இந்துக்கல்லுரியில் நடந்த அன்று விழா மேடைக்கு சு.நடேசபிள்ளை உட்பட மரபுவாதிகள் சிவன்கோவிலில் இருந்து நாதஸ்வரம் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இக்கூட்டத்துக்கு சைவத்தமிழின் தலைவர் பிரித்தானிய அரசிடம் சேர் பட்டம் பெற்ற பொன்னம்பலம் இராநாதனின் மருமகனான சு.நடேசபிள்ளையே தலைமையேற்றார். இந்த விழாவுக்கு இ.மு.ஏ.சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக ஆழைப்பு விடப்பட்டிருந்தது. அழைப்புக்கு நன்றி தெரிவித்து அதன் செயலாளர் பிரேம்ஜி சாகித்திய மண்டல குழுவுக்கு எழுதிய கடிதத்தில் கதைக்கான பரிசுத் தேர்வில் முறைகேடு இடம் பெற்றுள்ளதாயும், தமது படைப்பாளிக்கு அநீதி அழைக்கப்பட்டுள்ளதாயும் தாம் விழாவுக்கு வந்து பரிசு வழங்கும் சமயம் அதை எதிர்க்கும் முகமாக வெளியேறிச்செல்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். விழாவுக்கு செல்ல முன்பு இ.மு.எ.சுங்கத்தை சேர்ந்தவர்கள். இளங்கீரனின் வீட்டில் கூடி, விழாவில் எவ்வாறு கருத்துக்களைத் தெரிவிப்பது என்று திட்டமிட்டனர். எந்தக்குழப்படி, வன்முறைக்கும் அவர்கள் ஒருபோதும் திட்டமிடவில்லை. விழாவில் பரிசு வழங்கும் சமயம் வந்தபோது பிரேம்ஜி எழுந்து இது முறைகேடாக தேர்ந்தெடக்கப்பட்ட பரிசு என்று ஆட்சேபனை எழுப்பினார். அவருக்கு ஆதரவாகப் பல குரல்கள் சபையில் இருந்து எழுப்பப்பட்டதால் வேறு வழியின்றி சு.நடேசபிள்ளை பிரேம்ஜியை மேடைக்கு வந்து அவரின் கருத்துக்களை கூறுமாறு அமைத்தனர். பிரேம்ஜி மேடையேறிப்பேசத் தொடங்க கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து தனது சேட்டைக்கழற்றி எறிந்தவிட்டு ஒரு கதிரையை எடுத்துச் சுழற்றத்தொடங்கினார். மரபுவாதிகள் இத்தகைய செயல்கட்கு தம் ஆட்களை ஆயப்படுத்தியிருந்தனர் என்று தெரிந்தது. பல எதிர்க்கருத்துக்கள் எழுந்தன. இச்சமயம் சலீம் மேடையேறி தான் சாகித்திய மண்டல பரிசு தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தபோதும் திட்டமிட்டு புறக்கணித்ததாகவும் இளங்கீரன் முஸ்லீம் என்பதாலே இது நடந்ததாகவும் கோபமாகக் கூறினார். இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சத்தமும், வாத பிரதிவாதங்களும் எழுந்தன.

இச்சமயமே டானியலுடன் வந்திருந்த இளைஞர்கள் மேடையை நோக்கி முட்டைகளை எறிந்தனர். இச்சம்பவத்தை எஸ்.பொ. எழுதும்போது முட்டையைக் கையாலும் தொடாத சைவக்காரர்கள் மேல் முட்டையெறியப்பட்டதாய் கோபப்படுகிறார். மச்சம், மாமிசம் சாப்பிடாத நெற்றியிலெ சிவ சிவ என்று திரிபுண்டரம் தரிக்கும் ஆறுமுகநாவலர் வழிவந்த சைவவேளார்களுக்கு யாழ்நகரின் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து வந்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் முட்டையடித்தும் எஸ்.பொவுக்கு இந்தப் பெரிய கோபம் ஏற்படுவத நியாயம்தான் மச்சமான மாட்டுப்பாலைக்குடிக்கும் இந்த சைவங்கள் மேல் விழுந்த முட்டைகள். சைவத்-தமிழ்-வேளாள-நடுத்தர வர்க்க வரிசைக்கு விழுந்த முட்டையடியுமாகும். என்னும் சரியான அரசியல் வழியில் நாம் இதைப் பரிசிலீத்தால் டானியல் அக்காலத்தில் 1963-1964 ரஸ்ப சீன முரண்பாட்டில் சீனப்பக்கம் கரையேறி இருந்தார் அவர் அரசியலில் இருந்து நவஸ்டாலினிய வடிவம் எடுத்தபோது மாவோவின் சீன தீவர இடதுசாரி வாதங்களில் இராணுவவாதப்பெரு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் “துப்பாக்கிக் குண்டுகளில் இருந்துதான் அதிகாரம் பிறக்கிறது” அன்று மாவோவின் வாசகம்கள் வட பகுதிச்சுவர்களை நிறைந்தன. தென்னை மட்டைகளைத் துவக்காக்கிப் பயிற்சி எடுத்தார்கள் தத்துவம் சார்ந்த ஆழமான பயிற்சிகட்குப் பதில் மாவோவின் மேற்கோள்களும், சுலோகங்களும் பரந்த தத்துவத்தின் தேவையை இடைமறித்தன. இந்தப் போக்குகளால் பகுதியாகவேனும் டானியலும் பாதிக்கப்பட்டிருந்தார். டானியல் தீவிரமான கட்சி விசுவாசி இன்று வரை சிறந்த மக்கள் சார்ந்த எழுத்தாளர் என்ற தகுதிகளை உடையவராக இருந்தபோதும் முட்டையெறிதல் சம்பவங்கட்கு அவர் காரணமாக இருந்தார்.

முட்டையெறி நடந்தபோது பிரேம்ஜி, சிவத்தம்பி உட்பட பலர் அதை;தடுத்தனர். இவர்கட்கு இப்படி நடக்கும் எந்த விடயமும் தெரிந்திருக்கவுமில்லை. டானியல் இத்தகைய ஏற்பாட்டுடன வந்தள்ளார் என்பதையும் அறிந்திருக்கவுமில்லை. தமிழ்த் தேசியவாதிகள் மரபுசார் எழுத்தாளர்களுடன் டானியலுக்கு இருந்த தீவிர மோதல் எஸ்பொவுடன் இருந்த முரண்பாடுகளும் இதற்குக் காரணம். ஆனால் எமது எழுத்தாளர் எஸ். பொவோ இது கைலாசபதியின் ஏற்பாட்டில் நடந்த முட்டையெறி என்று காட்ட முழுமுயற்சியும் செய்துள்ளார். கைலாசபதி இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது. பிரேம்ஜியும் தனது ஞாபகத்தின் படி கைலாசபதி அன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றே கூறுகிறார். எல்லாக் கூட்டம்களிலும் தனிப்பட்ட சண்டைகளை இழுப்பராக நிதானம் தப்பி யநிலையில் இலக்கிய நிகழ்வுகளுக்குப் பிரசன்னம் தருபவராக எஸ்.பொ இருந்தார். அது எவரும் அறியப் பட்ட ஒன்றாடும்.

இலக்கியத்தில் பல்வேறுபட்ட வர்க்க மனிதர்கட்கு இடம் உண்டு அவர்கள் தத்தம் வர்க்கங்களைப் பேசுவார்கள் பிரசங்கம் செய்வார்கள். அங்கு நடுநிலைமை என்பது கிடையாது சிறந்த எழுத்துக்கள் சமுதாயத்தில் ஆகத்துன்புறும், மனிதர்கள் விட்டுவிலகமாட்டா. மக்கள் சமுதாயத்துடனும் அரசியலுடனும் சம்பந்தப்பட்டவரிர்கள் என்பதால் இலக்கியம்கள் அவர்கள் தூரநிற்கமாட்டா. வெளிப்படையான பிரச்சாரத்தில் இலக்கியம் ஈடுபடக்கூடாது. சுலோகம்களை உயர்த்தக்கூடாது என்ற போதிலும் அவை இயற்கையாய் இலக்கிய எழத்தின் தேவையாய் வேளிப்படவே செய்யும் எஸ்.பொ பேசும் பைபிள், பகவத்கீதை, காந்தியம், வேதம் ராதாகிருஸ்ணன் எல்லாம் பிரச்சாரம்தான். எஸ்.பொ.வும் இங்கு பிரச்சாரம்தான் செய்கிறார். தமிழ்தேசியம், முதலாளித்துவம் இவைகளுக்காக அவர் எழுத்துக்கள் பிரச்சாரம் செய்கின்றன. வாதிட்டுவருகின்றன. மக்கள் சகல உலகச் செல்வம்களையும் பெறவேண்டும் சமத்துவமான மனிதர்களாய் மாறவேண்டும் நாடுமுன்னேறி புதிதாய் படைத்து வாழவேண்டும். என்பதெல்லாம் எழுத்தாளளின் சபதமாக இருக்க வேண்டும். ஆனால் எஸ்.பொ இலக்கியம் அரசியலைவிட்டு விலகி தூய்மையாய இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே எஸ்.பொ அதை மீறுகிறார். தான் வகுத்த சொந்த விதிகளைத்தானே மீறுவதில் அது முடிவடைந்தது. மேலும் தன்னில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பது தனக்காக தானே அதிகம் வருந்தி நிற்பது சமுதாயப் பார்வைக்கு மாற்றாகிறது.
டொமனிக்ஜீவா, டானியல், நீர்வை பொன்னையன் ஆகியோருக்கு கதைகள் திருக்கொடுத்தேன் கதையே எழுதிக்கொடுததேன் என்று அவர் அண்மைக்காலமாக எழுதி வருகிறார். ஆரம்பகாலம்களில் இவர்கள் ஒன்றாக இருந்தார்கள். வளர்நிலையில் பரஸ்பரம் உதவி, விவாதித்து செயற்பட்டதை எஸ். பொ இப்போ மிகைப்படுத்தி எழுதிவருகின்றார். கல்வியறிவு குறைவாக இருந்த டானியல், டொமினிக் ஜீவா போன்றவர்களுக்கு கதையமைப்பு, எழுத்து நீதியிலான அறிவுரைகளைப் பலர் தந்தார்கள் என்று நாம் கொள்ள முடியும். ஆனால் எஸ்.பொ எழுத்துக்கள் அப்போ டொமினிக் ஜீவா, டானியல் போன்று தொடக்க நிலையிலேயே இருந்தது. அப்படியிருக்க எஸ்.பொ பின் வாதம்களை ரகுநாதன் முதல் அக்காலத்தைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் எஸ்பொ அண்மைக்காலத்தில் எழுதிய நனவிடை தேய்தல் போன்ற எழுத்துக்கள் டானியலின் எழுக்களால் பாதிக்கப்பட்டு டானியலின் தண்ணீர் தண்ணீர், கோவிந்தன், பஞ்சமர் போன்ற கதைச் சம்பவங்களைத் தழுவி எழுதியதாகும் டானியலுடன் எஸ்பொ வை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. எஸ்.பொ வின் தன்னடக்கம்ற சுயபெருமை நாடும் எழுத்துக்கள், பகையுணர்ச்சியுடன் எழுதும்போது எஸ்.பொ நம்பத்தகா தவராகிவிடுகிறார். தன் ஆசியிலும் ஞானத்திலும் பல எழுத்தாளர்கள் உருவானதாய் எழுதி ஒயு முன்னே எஸ்.பொ தன்னால் அறிமுகப்படுத்தப்படுபவர்கட்கு சாகித்திய மண்டலப்பரிசு கிடைத்திருக்கிறது என்கிறார். ஆக எஸ். பொ படைப்பாளிகளையெ படைக்கம் படைப்பாளியாகிறார் இலக்கியச்சக்கட்டைகளை சிறந்த எழுக்குரியவராய் ஆக்கும் மாமனிதராகிறார். அவர் எந்த எழுத்தாளரையம் தனக்கு நிகராய் கருதுவதில்லை மற்றவர்கள் எல்லொரும் மந்த உணர்வுபடைத்தவர்கள் டொமினிக்ஜீவா, டானியல் போன்றோர் சமூக அங்கிகாரம் பெறவே தம்மை மாக்சியவாதிகளாக இனம்காட்டினர். சாதியைப் பயன்படுத்தினர். என்ற குற்றம்கள் எஸ்பொ இன் எழத்தில் இடம்பெறுகின்றன. ஆக எஸ்பொ சமூக அங்கீகாரம் பெறவோ தமக்கொன்று முக்கியத்தைப் பெறவோ எழுதவில்லை. மனித குலத்தின் முன்னேற்றமென்ற ஒரே குறிக்கோளை இலட்சியமாக கொண்டு எழுத்துப்படைத்த உலகப்பற்றற்ற மனிகராகும். முதலாளித்துவ மதி படைத்தவர்கள் தம்மைப்போலவே இடதுசாரிகளும் போர் புகழக்கு அலைபவர்களாக தம்மை முன்னிலைப்படுத்தவே எழுதிவருபவர்களாக காட்டப்படுகின்றனர். மேலும் சோசலிச எழுத்தாளர்கள் எதை எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ் வலதுசாரிகளினால் எஸ்.பொவுக்கு முன்பே கொடுக்கப்படடு வந்துள்ளது.


இலங்கையில் கொம்யூனிஸ்ட்கட்சிநாபணிபுந்த இந்தியர் கொம்யூனிஸ்ட் கே.இராமநாதன் மலைநாட்டுத் தமிழர் மு.க.ளேஸ் இவர்களது பங்கு இ.மு.எ.சங்கத்தில் மறைக்கப்பட்டது என்று எஸ்.பொ.வால் எழுதப்படுகிறது. இ.மு.எ.சங்கம் தொடங்கிய 1954 இலேயே இராமநாதன் இந்தியா சென்றுவிட்டார். 20, 25 வருடம் வரை வாழந்த அவரை திரும்பிவர கொத்தலாவலகால இலங்கை அரசு தடைசெய்தது. இராமநாதன் தேசாபிமானி. பத்திரிகையை சிரமத்துடன் நடத்தி வந்தார். பேப்பர் ரீம் வாங்க காசில்லாதபோது தனது மனைவியின் தாலியைக்கூட அடைவு வைத்து அதை வாங்கினார் என்று குறிப்படும் பிரேம்ஜி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியபோது கே.இராமநாதன் இலங்கையில் இருக்கவில்லை தலத்து ஒயாவைச் சேர்ந்தவர் அது தூர இடமெற்பதால் முக்கிய கூட்டங்கள் தவிர அவர் வருவது குறைவு. ஆனாலும் அவருக்கு இ.மு.எ.சங்கத்தில் நல்ல உறவு இருந்தது எஸ்.பொ கதையெமுத மட்டும் கற்பனையைப் பயன்படுத்துவதில்லை. உண்மையை எழுதும்போது; அதன் பெரும்

உதவியைப் பெற்றுக்கொள்கிறார்.

1960 களில் நடந்த அகில இலங்கை ரீதியான எழுத்தாளர் மாநாட்டில் எஸ்.பொவினால் தூண்டப்பட்டு கனகசெந்திநாதன், எவ்.எக்ஸ.சி.நடராசா ஆகியோர் எல்லா எழுத்தாளர் சங்கத்தையும் கலைத்துவிட்டு ஒரே எழுத்தாளர் சங்கம் வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தனர். அது ஏற்கப்படவில்லை. பிரேம்ஜி அக்கூட்டத்தில் பெசியபோது “எந்த எழுத்தாளர் சங்கத்தையும் கலைக்குபடி கோரும் உரிமை எமக்கு இல்லை அவர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூட்டுச்செயற்பாடகளில் ஈடுபட நாம் அழைப்பு விடுக்கலாம்” எனக் கூறினார். இக்கூட்டத்தில் சிவத்தம்பி “எழுவாய் பயனிலை யோல்” என்று கூறியமைக்காக அவருடன் எஸ்.பொ வாய்த்தர்க்கத்தில் இறக்கினார். எஸ்பொ இ.மு.எ.சங்கத்தை கலைத்துவிட்டு ஒரு வலதுசாரி எழுத்தாளர் அமைப்பை உருவாக்க இடைவிடாமல் முயன்றார். அது அன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.


பிரேம்ஜி

பிரேம்ஜி 50 வருடமாக எப்படி இ.மு.எ சங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர் நல்ல கலைஞரல்ல இலக்கியத்துறையில் தடம் பதிக்கவில்லை என்று வரலாற்றில் வாழ்தலின் ஆசிரியர் எழுதுகிறார். முதலாவதாக பிரேம்ஜி 44 வருடமாக 1998 வரையே இ.மு.எ.சங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர். அனத்த தொடக்கியவர்களில் ஒருவர். 1998 இல் அவர் பதவியில் இருந்து விலகி கனடா வந்துவிட்டபோதும் அங்கு இ.மு.எ.சங்கத்துக்கு புதிய செயலாளர் தெரிவுசெய்ய பல தடைவகள் கூட்டம் கூட்டப்பட்டும் செயலாளர் தெரிவு செய்யப்பட முடியவில்லை. இந்த நிலையே 1950, 1960, 1970 களிலும் நிலவியது இ.மு.எ. இருந்தவர்கள் எல்வோரும் பெரும்பகுதி அரச சேவைகள், கட்சிகள் உள்ளவர்களாக தொழில் புரிபவர்களாக இருந்தனர். பொறுப்பு எடுக்க பலர் தயாராக இல்லாத நிலையே நிலவியது. பலர் உறுப்புரிமைகள் புதுப்பிப்பதில், உறுப்பினர்ளாக ஆவதில் கூட அக்கறை இல்லாமல் தமது பிரச்சினைகளையொட்டி தோதுப்பட் நேரம் வந்து போய்க்கொண்டிருந்தனர். ஏன் தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்கள்கூட ஊறுப்பினர்களாக இருந்ததாகவோ ஒழுக்காக கூட்டம்கட்கு வந்துபோன தாகவோ தனக்கு ஞாபகம் இல்லை என்ற இப்போ பிரேம்ஜி குறிப்பிடுகிறார்.


இந்த நிலையில்தான் இ.மு.எ.சங்கம் இயங்கியது பிரேம்ஜி கொழும்பில் வாழ்ந்ததாலும் எல்லோருடனும் பகையின்றிப் பழகக் கூடியவராக இருந்ததாலும் இவர் தொடர்ந்து எதிர்ப்பின்றி ஏகமனதாகக் தெரிவு செய்யப்பட்டு வந்தார். இவர் ரஸ்ய சார்ப்பு அணியில் இருந்தபோதும் சீனச்சார்பு சக்திகளும் இவருக்கு ஆதரவு தந்தனர் மொஸ்கோ பீக்கிங் பிளவு ஏற்பட்ட சமயத்திலும் இது இ.மு.எ சங்கத்துள் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர் தேசாபிமானி, புதுயுகம் பத்திரிகைகளின் ஆசிரியராகவும், இலங்கையில் உள்ள சோவியத்நாடு சஞ்சிகை, சோசலிஸம் - தத்துவமும் நடைமுறையும் தமிழ்பதிப்பிலும் தழிழ்பதிப்பிலும் அவர் கடமையாற்றினார். அவர் சோவியத் தூதரகத்திலும் 1958-1990 கடமையாற்றினார். பிரேம்ஜி சில சிறுகதைகள் எழுதி மொழிபெயர்ப்புகள் செய்திபோதும் அவர் ஊடகவியலாளர். கட்டுரையாளர், விமர்சகர் என்ற நிலைகளையே வகித்தார். அவரை இல்கியவாதியாக எவரும் கருதியதுமில்லை. எஸ்பொ அவர் இலக்கியவாதியாக இருந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாரா? எஸ் பொ அப்போதுதான் எழுதிய அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எதாவது ஒன்றாகக்காட்டட்டும்.


டானியல்
சாதியத்துள் மட்டும் குறுகிப் போகச் சம்மதியாத டானியல்தன் எழுத்துக்களுக்கு புகலிடத்தில் கட்டாயப்படுத்தி தலித்திய வேடம் போட்டுவிட்டார்கள் என்றால் எஸ்.பொ.வோ சாதியக் கொடுமை பற்றிய டானியலின் எழுத்துக்கள் போற்றிதற்குரியவையல்ல என்று காட்ட முயல்கிறார். எஸ்.பொ போன்ற தன்னுணர்ச்சிக்கு அடிமையாயப்போன எழுத்தாளர்களைப் போன்றன்று ஒடுக்கப்பட்ட சாதிய மக்களின் இலக்கியத்தை எழுதிச் சென்றவர்களில் டானியல்தான் இன்றும் பெறும்திக்கு உரியராகவுள்ளார். டானியலின் பஞ்சமர் நாவல் புத்தூர் கமலாசினிப் பாடசாலையில் சரஸ்வதி பூசையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பிள்ளைகள் தேங்காய் துருவத்தடை, பள்ளிக்கிணற்றில் துவாக்க கொடிபிடித்து தண்ணீர் அள்ளத்தடை இதற்குப் பொறுப்பான தமிழ் சட்டம்பிக்கு எதிராக “சாதி வெறியன் பண்டிதர் சின்னத்தம்பியே நீ ஒரு வேடன்” என்ற இடதுசாரிகளின் சுவர் எழுத்துக்கள் எல்லாம் டானியலின் பஞ்சமரில்
பதிவு
செய்யப்படடுள்ளது. “நளத்தியுடன் போட்டான் என்று பெத்த மகனுக்கு சாப்பாட்டில் பொலிடோல் வைத்துக் கொன்ற செய்திகள் கற்பனையல்ல. யாழ்ப்பாணச் சாதிய வரலாற்றின் உண்மையின் நிகழ்ச்சிநிரல் என்று இன்று எமக்கு டானியல் சாட்சி பகர்கின்றார். சிங்கள வேலைக்காரப் பொடியன் சிறிசேனன்தன் மகளுடன் காதல் என்பதற்காக சிறாப்பர் சிறிசேனாவை அடித்துக் கொன்ற கதையை எஸ்.பொ போன்ற தேசியவாதிகள் எழுதமாட்டார்கள். ஆனால் அது டானியலினால் மட்டும் முடிந்த எழுத்து : பிற்காலத்தில் வேண்டுமாயின் நனவிடை தேயும் போது எஸ்.பொ டானியலின் அந்தக் காதைப்பொருளை தனக்காக்கி நாலுவரி தீட்டலாம்.

பஞ்சமர் நாவலில் மட்டுமல்ல ஏனைய எழுத்துக்களிலும் டானியல் சாதியை தனியே சமூக பொருளியல் போக்கிலிருந்து பிரித்து அருவமாய்க் காணவில்லை. அவர் சபை சந்தியிலே ஒடுக்கப்படட் மக்களுக்கு மனிதருக்குரிய இடமில்லை என்று மட்டும் பேசவில்லலை. அடிப்படையாக பொருளாதாரப் பிரச்சனைகளைப் பே சவந்தவர். அவர்கட்கு இருக்க குடி நிலமில்லை, ஆன தொழிலில்லை. நிலத்தை வாரத்துக்கு … செய்கிறார்கள் அவர்களது வாழ்வு இம்மிசைப்பட்ட சீவிப்பு என்று சொல்லத் தெரிந்தவர். சாதி நிலத்தோடும் அது சார்ந்த உழைப்புடனும் பின்னப்பட்டுள்ள விவசாய சமூக நிலைமை டானியல் உணர்ந்துள்ளார். நிலமின்மை சார்ந்த சமூகப் புரிதல் அவருக்கு இருந்தது. “உழுபவனுக்கே நிலம், குடியிருப்பவர்களுக்கே காணி, சாதியமைப்பு ஒழிக” எனப் போராட்டம் நடந்தபோது டானியில் அங்கு இருந்தார் அத்துடன் வாழ்ந்தார். அதை எழுதினார் ஆனால் எஸ்.பொ சட்டம்பி உத்தியோகம், தனது எழுத்துக்கு பரிசு பாராட்டுத்தேடுதல் என்று அவர்தன்னைத்தானே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தார். காணி வாங்கி வீடு கட்டி வெள்ளாடிச்சியைக் கட்டி மத்தியதர வாழ்க்கையில் நிரந்தரமாகி தன்சோலி சுரட்டுக்கே நேரம் போதாத நிலையில் வாழ்ந்தார்.

எஸ்.பொ போல் டானியல் இரண்டுமடங்கு காலம் வாழக்கொடுத்து வைக்காதவர். ஆங்கிலம் தெரியாமலும், வெளிநாடு போய் எஸ்.பொ போல் உயர் சீவியத்துக்கு வழி தேடாமலும் வாழ்ந்தது மடிந்து போனவர். எனினும் அவர் சமூக உணர்ச்சிமிக்கவர் சக மனிதர்களை உள்ளதை உள்ளபடி உறுஞ்சத் தெரிந்தவர். சாதியப் போராட்டம் இடதுசாரிகள் நடத்தியபோது அவர்கள் அதில் வாழ்ந்து, பட்டு அழிந்து, படித்து எழுதினார்கள். சாதியப்பிரச்சினை இடதுசாரிகட்கு உரியது அது அவர்களின் தியாகங்களில் நடந்தது. எனவே அவர்கள்சாதிய எதிர்ப்பு இலக்கிய எழுத்துக்களில் இயற்கையாக இடம்பெற உரிமை கொண்டிருந்தனர். எனினும் டானியல் கதைகளில் இடதுசாரிப் பிரச்சாரத்தன்மை இருந்ததில்லை. செய்கையாக அவர் பாத்திரம்கட்கு… சுமையேற்றி உலாவவிடவில்லை. எஸ்.பொ போல் கதை எழுதுவதாகக் கூறி அவர் சுயசரிதை எழுதவதில்லை. டானியல் கிறிஸ்தவர் என்றபோதும் அவர் கதைகளில் கிறிஸ்தவம் சார்ந்த எந்த உணர்வும் வெளிப்படுவதில்லை. தான் சார்ந்த எதையும் அரசியலுக்கு அப்பால் தெரியப்படுத்துவதில்லை. கோவிந்தன் கதையில் வரும் விதானைமார், மணியகாரர், நிலபுலன் உடையவர்கள், காணிகள் நிலம், பற்றிய அவரது தகவல்கள் வரலாற்றின் பதிவாக அமைகிறது. அந்த மனிதர்கள்வாழ்ந்த காலம் ஏழைகள், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் கஞ்சியும், கூழும் குடித்து உயிர்தரித்த கதை முதல் கோழிச்சண்டை தேங்காயடி, வேட்டை, வண்டில் சாவாரி என்று அக்கால சமூகப் பொழுதுபோக்கில், மக்களின் ரசனை, மனோவியல் தன்மை என்பன டானியல் எழுத்துக்களில் காணக்கிட்டுகிறது. டானியலுக்கு கதை எழுதிக்கொடுத்தேன், ஜீவாவுக்கு கதை திருத்திக்கொடுத்தேன் என்ற எஸ்.பொ எப்படி டானியலின் கோவிந்தன் கதைச்சம்பவங்களை கோழிச்சண்டை, தேங்காயடி, வண்டில் சவாரி என்பவைகளை ப்பின்பற்றி தனது பிற்காலத்திய நனவிடை தேய்தலிக் எழுதியுள்ளார் என்று நாம் காணமுடியும்.

அடிமைகள் போன்ற டானியலின் கதைகளில் உண்மையான மனிதர்கள் வருகிறார்கள். இவர்கள் ஊத்தை உடுத்தவர்களாக, கந்தை கட்டியவர்களாக கோவணதாரிகளாக, குறுக்குக்கட்டிய பெண்கள், அறியாமை, பணிவு, அடிமைத்தனம், தியாகம், வீரம் இவைகள் படைத்த மனிதர்களாக வருகிறார்கள். இம்மனிதாகள் சவம்களைக்காவுகிறார்கள். பிணம்களை எரிக்கிறார்கள். கமக்கட்டுக்குள் துண்டைச் சொருகிப் பணிகிறார்கள். பிண்ம்களை சிரட்டையில் சேத்தண்ணிர் குடிக்கிறார்கள். மரமேறி மாடுகன்று மேய்த்து சொந்த நிலம் புலம் இல்லாத அடிமை குடிமைகளாக சிறைக்குடிகளாக வாழ்கிறார்கள். இவர்கள் சபை சந்திகளில் புகுவதற்கு வழியற்றவர்களாக ஓரம் ஒதுங்கி தாழ்வாரத்திலும் கோடிப்புறம்களிலும் மாட்டுக் கொட்டில்களிலும் வாழ்ந்த மனிதர்கள்தான் டானியலின் கதைமாந்தர்கள். மக்களின் பேசுமொழிதான் டானியலின் இலக்கிய பலமாகும். பறையர், நளவர். சாதி சார்ந்த மக்களின் செயற்பாடுகள் அவர்களின் சொந்த தனித்துவமான பேச்சுமொழியில் அவர் பேச வைக்கிறார். “விண்ணி வீட்டிலை விளம்பல் சேர்க்கப்படாது எண்டு கரக்குட்டானுக்கு ஆரோ மொழிஞ்சு போட்டினம்” என்ற நளப்பொடியனை பறையர் வீட்டிலை சோறு தின்னப்படாது என்று யாரோ தடுத்து விட்டார்கள் என்று பொருள்தரும் பறையர் சமூக மக்களிடம் பேசப்பட்டு இன்று மறைந்துவிட்ட மொழிப்பிரயோகம் டானியல் எழுத்துக்களில் வாழ்கிறது. மக்களின் வாழ்வியலை உறுஞ்சாதவர்கட்கு இந்த மொழி வராது.


அக்கால மனிதர்கள் தம் உணவுகளில் மாங்கன், அயிரை, தவளை, பால்ஆமை போன்ற மச்ச உணகள் நிலவியதைக் காட்டுகிறார். குழையக்காச்சிய வரகுச்சோறு ஆமைக்கறி போன்ற செய்திகள் இன்று மறைத்தொழிந்து விட்ட வாழ்நத செய்திகள் பதிவாகின்றது. இவை, சமூகமற்றும் மானுடவியல் ரீதியில் ஆய்வுக்குரியவையாகும். மொழியியல், பொருளாதாரம் போன்ற துறைகளும் தேடத்தூண்டும் செய்தியாகும் பெண்கள் மத்தியில் சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இப்போ கிட்டத்தட்ட வழக்கற்றுவிட்ட “அள்ளுக்கொண்டை வடிவு” “கொய்யகக்காரி” “கொய்யக்வீச்சு” “நயினாத்தி” “அக்கை”, “கொக்காள்”, “மோள்”, “ஆத்தை”, “கோத்தை”, “கறிக்காறி”, “இருளிப்பெட்டை”, “தீட்டுத்துடக்கு, குப்பைதண்ணி வார்ப்பு, புத்தி அறிவது என்பதுடன் ஆண்கள் பற்றிய மோன் குடிமைப் பொடியன், குடிமோன், குடிமக்கள் விவசாயிகளான மக்களிடம் நிலவிய, மதம், மற்றும் சமூக நம்பிக்கைகளை வெளியிடும் ஆவணி விதைப்பு, அட்டமி, நவமி சீத்துவக்கேடு, வரட்டுக்காம் போ, கொப்பர், பணம்காசு, உமல், தூதன்குறி, ஏமஞ்சாமம், பொய் அடக்கம் செலவு சிதாயம், பொழு கருகுதல், கண்டது கடியது, கட்டுமட்டு, மெய்யுறக்கம், திடல், தாள்க்காட்டு நரிகள், கோள்வம் போன்ற சொற்கள். ஒடியல்கிட்டு, நீத்துப்பெட்டி, குஞ்சுப் பெட்டியுடன் மரண் வீடடில் - முகத்தீட்டு எட்டுமுழத்துணி பாடைத்தட்டு, சுமை இறக்குதல், பரியாரிக்குடிமை, போன்ற ஒரு தொகைச்சொற்கள் அவரது கதைகள் இடம்பெறுகிறது. எம்முன்னோர்கள் பேசிய இந்தச்சொற்கள் கல்வி வளர்ச்சி யாழ்-கிராமங்களிடையெ தொடர்பு அதிகரிப்பு விவசாய சமூகப் பண்புகளின் குணமாற்றம்தொடக்கியது முதிய மனிதர்களிடம் மட்;டுமே இது மிஞ்சியுள்ளன. இத்தகைய சொற்கள் டானியலின் எழுத்து முழுவதும்.
பரவிக்கிடக்கிறது அடிமைகள் நாவலில் 1902இல் ரெயில் யாழ்ப்பாணத்துக்கு வருகை கே.கே.எஸ் இருந்து பளை வரை வெள்ளோட்டம். கோச் உரிமையாளர்கள் சாதி வெறியர்கள் இணைந்து ரெயிலுக்கு கல்லெறி “பெரிசு சறிசு” வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஏற்றி இறக்கும் சமமாய் வாங்கு போட்டிருக்கும் என்ற செய்திகள் மேக்கத்தை முதலாளிய தொழில் வளர்ச்சி நுழைவு எற்படுத்தும் சமூக அதிர்வு பழைய மரபுகளின் தகர்வின் தொடக்கம் காருக்கு இரும்பு மிருகம் என்று மக்கள் வைக்கும் பெயர் ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்த, சிந்தித்த முறைகள் எண்ணம்கள் டானியல் கதைகளில் எழுதப்படுகிறது. டானியல் தீர்மானகரமானவர் எஸ்.பொ போல் சோசலிஸம் மேல்நாக்கு வழிப்பரவல்ல. டானியல் ஒரு ஸ்டாலினிஸ்ட் தான் ஆனால் விவசாய் சமூகச் சூழலை விளங்யிருந்தார். பழைய சமூகம் மேல் கோப்மும், ஜனநாயக மயமாக்கலில் அவருக்கு ஆசையும் இருந்தது. அவர் எஸ்.பொ போல் தேசியவாதத்தை தனிமனித இருப்புகளை வழிபட்டு அரசியலை தவறவிட்டவரல்ல. தனிமனிதர் டானியல் தனது கதைகளில் மக்களோடு கலந்து சிறுப்hத்திரமாகிவிடுகிறார். வாசகனுக்கு டானியலை அங்கு தேடிக்கண்டுபிக்க சிரம்ப்பட வேண்டியிருக்கும். ஆனால் எஸ்.போ.வை தேடும் சிரமம் வாசகனுக்கு இராது. என்எனில் அவர் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார். தனி மனித உளவியலையே அக விருப்பம்களையே பெரும் பகுதி பேசுகிறார். புற உலகின் பொருளாதார. விருப்பம்கள் நிலவுவதையும் அது அக உலகின் அதிக்கம் செலுத்தும் என்பது எஸ்.பொவுக்கு புலப்படவில்லை.


டானியல் கதைகளில் பாலியல் செய்திகள் சுய முறையிடல்களாக வரவில்லை, பாத்திரம்களின் இயல்பு அனுமதிக்கும் அளவுக்கு அதை விகாரமின்றி எழுதுகிறார். எளிமையான செயற்கையின் பாற்படாத மொழி அவருடையது. மேலசாதிப் பெண்களிடமும் ஆண் ஆதிக்கச் செய்ற்பாடு தாக்கத்தை நிகழ்துவதையும் பாலியல் ஒடுக்கு முறையும் பெண் அடிமை கொள்ளப்படுவதும் அங்கும் நடைபெறுவதைக் காட்டத்தவறும் போக்கு டானியில் கதைகளில் வெளிப்பட்ட போதும் எஸ்.பொ போல் பெண்களின் உடல் வளைவுகளை விபரிக்க மட்டும் எழுத்தைச் செலவிட்டவரல்ல. மாறாக இன்று மறைந்துவிட்ட “சவக்கிடங்கில் வைத்து தலைப்பிள்ளைத்தாச்சி இறந்தால் சுமையிறக்கும் வேளாள வழக்கத்தை பதிவு செய்கிறது டானியல் எழுத்து. பாலியல் பற்றிக் கூற வரும்போது மக்களின் மொழியிலேயே “வேளையோட விளக்கை அனைத்துவிடும் நாட்கள்” என்று பாலியலை ஆண் பெண் இருவருக்குமுரியதாய் விளக்குகிறார். எஸ்.பொ கொச்சைக்கதைகளில் பாலியல் ஆணிண் கூற்றாக செய்லாகவே விளக்கிச் செல்லப்படுவதை நாம் காண முடியும். பஞ்சமரில் “பேரின்ப்துக்காக எந்த மொழியிலுமில்லாத தளவு தமிழில் இதிகாசம்கள், புராணம்கள், காவியங்கள், கவிதைகள் என எண்ணற்ற நூல்கள் உள்ளன. சிற்றின்பத்துக்காக அரைநிர்வாண சித்திர விளக்கங்களுடன் வந்து கொண்டிருக்கம் இலக்கியம்கள் தமிழ் சினிமாப்படம்கள் உள்ளன என்று எஸ்.பொவுக்கு பதிலளிக்கத்தக்க எழுத்தை டானியில் எழுதியுள்ளார். “கிராமப்புறத்து மனிதர்களுடைய வாழ்க்கைப்பற்றி சிறிதும் அனுபவ ஞானம் இல்லாத அவர்கள் தங்கள் பாதரட்டைகளைக் கழற்றிவிட்டு கிராமத்து மண்ணில் காலடிவைக்காத இவர்கள் பேச்சு வழக்குச்சரியில்லை. கிராமத்துப் பண்புகளின் சித்தரிப்பு இப்படியானதல்ல என்கிறார்கள் என்பதைக் கூறியுள்ளார். இந்த உலகின் கடைசி மனிதனுக்கும் சுதந்திரம் கிடைக்கும் வரை போராடுவதே தனது இலட்சியம் உலகை எல்லாம் ஒரு வர்க்கம் தனது ஆளுமையின் கீழ் உட்படுத்தும் வரை தனது இலக்கிய யுத்தும் நீடிக்கும்” எனும்போது டானியல் தமிழ்த்தேசியம், சாதி, சகலதையும் தாண்டி மனிதர்கட்காக அவர் நிற்கிறார். அத்தகைய டானியலுக்கு அருகே மட்டுமல்ல கண்படும் தூரத்தில்கூட எஸ். பொ. போன்ற தமிழ் இனவாதத்தின் கண்டதுகடியதுகளை எழுதுவோருக்கு இடமில்லை.


நாவலர்

கைலாசபதியும் இ.மு.எ.சங்கமும் நாவலரைப் பிரதானப்படுத்தினர். கைலாசபதி மாக்சிலும் நாவலரிலும் ஒத்த தன்மையைக் கண்டார். ஆறுமுகநாவலர் சிலையை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவுவதையும் விழாக்கொண்டாடுவதையும் தான் எதிர்த்ததாகவும் நாவலர் சாதிபார்த்தார். கண்ணகி வழிபாட்டை எதிர்த்தார் என்றெல்லாம் எஸ். பொ எமக்கு தனது நாவலர் எதிர்ப்புக்குக் காரணம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியவாதிகளும் சைவசமயிகளும் நாவலர் நற்றமிழ்.

வளர்த்தார் கந்தபுராணம், பெரியபுராணம், திருவாசகம் போன்றவை எங்கும் அறிமுகப்படுத்தினர் பாலபோதினி, வைசபோதினி சைவவிகாவிடை போதினி, வைசபோதினி வெளியிட்டார். இந்துக்கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவினார் என்பதற்கு அப்பால் செல்லவில்லை. ஆனால் கைலாசபதி போன்றவர்கள் இப்பர்களையுளையும் கடந்து நாவலர்கால இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகளுடன் ஏனைய சிங்கள, முஸ்லீம் மக்களின் பொதுவான இன, மத, மொழி சார்ந்த வளர்ச்சியில் வைத்து அவர்கள் நாவவரின் தமிழ், சைவப் போக்குகளை ஆராய முயன்றனர்.


பிரிட்டிஸ் அட்சியில் பௌத்த சைவ, முஸ்லீம் மதப்போக்குளிலும் தமிழ், சிங்கள மொழிச் சீர்திருத்தங்களிலும் அன்னிய எதிர்ப்பு என்ற அம்சமும் காணப்பட்டது. அவர்களது கிறிஸ்தவ எதிர்ப்பு என்பது பிரிடடிஸ் எதிர்ப்பின் மறைவான முயற்சியாகச் செய்ற்பட்டது. அநாகரிகதர்மபால, கண்டி, கரையோரச்சிக்சிங்களவர்களை இணைக்கவும் பௌத்தமத சீர்திருத்தத்துக்கும் முனைந்தபோது சித்திலெப்பை முஸ்லீம்களை பிரிவுகள் கடந்து ஒன்றுகூட ஏதுவான கருத்துக்களைப பிரச்சாரம் செய்தார். இந்த இலங்கை தழுவிய சழுதாயப்போக்கின் வழியே அறுமுகநாவலரும் தமிழ், சைவம் சீரிதிருத்தம்கட்கு முயன்றார். கண்ணகி உட்பட சிறு தெய்வ வழிபாடுகளை எதிர்த்து ஒரு பொதுச் சைவப்போக்கு ஒன்றையும் அது சார்ந்த புதிய தமிழ், வணக்க நடைகளையும் கொண்டுவந்தார் இது வேளாளர்களஉட்பட மேல்மட்டமக்களின் மொழிப்பிரயோகமாகவும் அவர்களுடையபண்பாடாகவும் இருந்தது. இது தமிழ் தேசியம் என்பது யாழ் நடுத்தர வர்கத்தின் தலைமையில் தோன்ற ஏதுவான சமுதாய அரசியல் அடிப்படைகளை நிறுவ முயற்சித்தது. அவர் சிறு தெய்வ வழிபாடுகளை எதிர்த்தமையும் குடாநாட்டுக்குச் சாதியக் கட்டமைப்புகளை உறுதி செய்ய முயன்றமையும் பிற்கால தமிழ்காங்கிரஸ் தமிழரசு அரசியலுக்கு தளம்கள் தோன்ற ஏதுவான நிலைமைகளை சிருஷ்டித்துக் கொடுத்தது. சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற சக்திகளின் தோற்றத்திற்கு உதவக்கூடிய தமிழ் நடுத்தரவர்க்க சக்திகளை ஒன்று சேர்த்துக் கொடுத்தது.

நாவலரின் தீவிரமான கிறிஸ்தவ மத எதிர்ப்பு போன்றே பாணத்துறையைச் சேர்ந்த குணாநந்ததேரோ பைபிள் அறிவுடன் கிறிஸ்தவர்களை எதிர்த்தார். கிறிஸ்தவத்தை விட பௌத்தமே உயர்ந்தது என்று விவாத மேடைகளை ஏற்பாடு செய்து பேசி வந்தார். கிறிஸ்தவ அமைப்புகள் கேலி செய்யப்பட்டன. பௌத்த மதமறுமலர்ச்சிக் கோஷங்கள் எழுப்பட்டன. கிறிஸ்தவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும் குற்றம், வன்செயல், மதுப்பழக்கம்கட்கு கறிஸ்தவமே காரணம் என்றும் இவர்கள் வாதிட்டனர். அக்காலத்தில் பௌத்தம் மேற்கில் பெரிதும் ஈர்க்கப்பட்ட சமயமாக இருந்தது. பௌத்தம் பற்றி பெருமளவு ஆய்வுகள் மேற்கத்தையர்களால் எழுதப்பட்டது. அதேபோலவே இந்து சமயப்போக்குகள் ஆய்வக்குள்ளாகியது. (1864-1933) அநாகரிக தர்மபால காவியுடை தரித்து பௌத்த சமய புத்தாக்கம் பற்றி பேசிவந்தபோது ஆறுமுகநாவலர் சைவமத ஆடைகள் அணிகலன்கள் பூண்டு சைவ சமயப் புத்தாக்கம் பற்றி வாதிட்டு வந்தார். கிறிஸ்தவ அமைப்புகளின் மதம், கல்வி, முயற்சிகளுக்கு எதிராக அமைப்புகளை நிறுவினார். இதன் மூலம் தமிழ்த் தேசியவாதம் சார்ந்த ஆரம்ப எண்ணம்கள் உருவாகின. கைலாசபதி இ.மு.எ.சங்கம் என்பன இந்த அடிப்படையில் தான் ஆராய்ந்தனர். தமிழ்மொழியின் புதிய வளர்ச்சியில் நாவலரின் பங்கு தமிழ் சைவ வேளாள சமூகமானது தமிழ் தேசிய அரசியல் கச்தியாவது. போன்றவைகள் அவர்கள் தீண்ட முயன்றனர்.


ஆனால் இங்கு எஸ்.பொ காண்பது வேறு ஒரு கருத்துப்போக்கின் வரலாற்றுக் கணாம்சத்தை வர்க்க, அரசியல் முகம்களை காண எஸ்.பொவுக்கு தெரியாது. அவர் தேசியவாதத்தின் சொற்கேட்டும் நபர் என்பதுடன் அதற்கு வெளியே தேடத்தெரியாதவர். பௌத்த இயக்கம்கட்டு சிங்களத் தோட்ட உடமையாளர்கள் வியாபாரிகள். என்போர் நிதி, ஆதரவு வளர்த்ததுபோல் சைவ-தமிழ் போக்குகளை நாட்டமுயன்ற நாவலருக்கு யாழ் சமூகத்தில் எப்பிரிவினர் அதரவு தந்தனர். நாவலரைப் பலப்படுத்தினர்? என்ற கேள்விகளை நாம் எஸ்.பொ இடம் எழுப்பினால் அவரால் அந்த திசையில் பயணிக்கத் தெரியாது. அநாகரிகதர்மபால, நாவலர் சித்திலெப்பை மூவரும், அக்கால இலங்கையில் கிட்டத்தட்ட ஒரேவிதமான சமூக, அரசியல்போக்குகளை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் நிகழ்த்தியவர்களாவார்கள். இவர்களது இப்போக்குகள் தத்தம் மதம்களது சிறந்த காலமொன்றைப் படைப்பதாகும். இவை பிரிட்டிஷ்சுக்கு எதிரான அம்சம் என்ற வகையில் மட்டமே பயன்பாடுடையனவாக இருந்தன. எதிர்வினையாக இவை தமிழ், சங்கள, முஸ்லீம் முதலாளியப் போக்குகளுக்காக ஆதாரச் சக்திகளாகவும் இவர்களின் மேல் தட்டுகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் சமூக நிலைமைகளை அலாவுபவர்களாகவே இருந்தனர். கொலனி நாடுகளில் மாம், இனம் என்பன குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக வகித்தன மறுபுறம் இலங்கைதழுவிய தேசிய உருவாக்கத்துக்குத்தடையாயின. 1858 இந்திய சிப்பாய்ககலகம் இந்து முஸ்லீம் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே எழுந்தது. இந்தியா தழுவிய ஒரேதேச மக்கள் என்ற நிலை ஏற்படாத நிலையில் இவை வரலாற்று ரீதியாக முக்கிய முடையவையாகவும் இருந்தன. இங்கு நாவலரை தனி அன்னிய எதிர்பாளராகவோ இல்லது தனியே சாதியைக் கட்டியமைக்க முனைந்தவராகவே காண்பது தவறு மாறாக அக்காலத்தில் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அரசியல் நிலைமகளின் அக மற்றும் பற நிகழ்த்தேவைகள் அதற்கு தலைமை தாங்கிய வர்க்கம்களின் இயக்கத்திலேயே இதைக்காண வேண்டும் என்பதும் அநாகரிக தர்மபால, நாவலர் எற்போர் பிரிட்டிஸ் அரசனுன எதிர்க்காத உள்ளுர்மக்களிடையேயான முரண்பாட்டுக் தொடக்கமாகவும் காரணமாயினர்.

நாவலர் நூற்றாண்டுக்கு இலங்கை அரசு நாவருக்கு முத்திரை வெளியிட்டது. குமாரசூரியர் போன்றவர்கள் இதில் ஆர்வம் காட்டினர். தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் புலவர்கள் அறிஞர்கள் போற்றியபடியினால் தம் அரசியலுக்கு தமிழ்த்தேசியவாதிகளுககு எதிராக நாவலர் இவர்கட்கும் தேவைப்பட்டார். அதே சமயம் தமிழத்தேசியவாதிகள் தம்மை விட்டுவிட்டு நாவலருக்கு மணிமண்டபம் கட்டுதல் முத்திரை வெளியிடல், சிலை எழுப்புதல் என்பவைகளை கடுமையாக எதிர்த்ததும் தம் அரசியல் காரணிகளை ஒட்டி நாவலைப் புறக்கணிக்கவும் முயன்றனர். இங்கு எஸ்.பொ விடம் தென்படும் நாவலர் எதிர்ப்பும் அத்தகையரே நாவலர் கண்ணகி வணக்கத்தை எதிர்த்தவர். சாதி பார்த்தவர் என்பது எல்லாம் பிற்காலத்தில் எஸ்;.பொஅடுத்தவர்களிடம் இருந்தது. தேடிக்கொண்ட விடயமே தவிர அக்காலத்தில் அவருக்கு நாவலரை எதிர்க்க இக்காரண்ம்கள் கூறப்பட்டிராது காந்தி முதல் தங்கம்மா அப்பாக்குடடி வரை உயர்ந்தோர் என்று வழிபாடு செய்யும் எஸ்.பொ இவர்களுக்கும் நாவலருக்கம் மத அடிப்படையில் என்ன வித்தியாசம்? எல்லோருமே சாதியமைப்பை இயற்கையானது என்று கருதியவாகள். சங்கராச்சாரி, காந்தி, தங்கம்மா அப்பாக்குட்டியை ஆதரித்து நிற்கும் எஸ்.பொ நாவலரை மட்டும் எதிர்ப்பதால் கூறுவது சுயமுரண்பாடும் தமிழ்த்தேசியவாதத்தின் பாசாங்கும் ஒன்றிணைந்தது.


கைலாசபதியையும் இ.மு.எ.சங்கத்தையும் நேரடியாக சம்பந்தப்படுத்தி எஸ். பொ எழுதுகிறார். நாவலர் சபை, நாவலர் நூற்றாண்டு விழாவையொட்டி எழுந்போது இடதுசாரிகள் அல்லாத அமைச்சர் குமாரசூரியர் சர்நதவர்களே அதில் அங்கம் வகித்தனர் இ.மு.எ.சங்கத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசிய வாதப்போக்குடையவரான சோமகாந்தன் மட்டுமே அதில் இடம்பெற்றார் இந்த நாவலர் சபைதான் நாவலர் நூற்றாண்டு விழா, முத்திரை வெளியிடு, சிலைவைப்பு ஆய்வு நூல் வெளியீடு இவைகளில் ஈடுபட்டது. இதில் கைலாசபதி ஒருபொழுதும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவர் நாவலரை ஆய்ந்த எழுததுக்களை மட்டுமே எழுதினார். தமிழ்த்தேசிய வாதிகளுக்கு நாவலரை ஏன் கைலாசபதி எழுதுகிறார் என்ற விமர்சனத்தின் உள்ளுடன் விளங்கவில்லை. அவர்கள் இப்போ எஸ்.பொ எழுதுவதுபோல் தம் புத்திக்கு ஏற்ப கோணல் மாணலாய் விளங்கிக்கொண்டனர். அதனால்தான் மாக்சிலும், நாவலரிலும் கைலாசபதி ஒத்த தன்மையைப் பார்த்தார் என எஸ்.பொ எழுதுகிறார் இதேபோல் சு.வித்தியானந்தனும் அப்போ “நாவருக்கு சிவப்புச் சாயம் பூச கைலாசபதி முயல்வதாய் கூறினார். இடதுசாரிகள் இத்தகைய ஒரு விமர்சனத்தின் பல்திறனறியாத தேசியவாதிகளின் சின்னப்புத்திக்கட்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பார்வைபடைத்தவர்கள் இன்று புகலிட நாடுகளிலும் உள்ளனர். நாவலரையும், மாக்சையும் ஒத்தத்தன்மைபுடையவராக பார்த்தார் எனும் எஸ்.பொ சித்தர்களையும், சங்காலப் புலவர்களையும், பாரதியையும், கோமரையும் மாக்சுக்கு சமமென்றுரைத்தார் என்று எழுதினாலும் எழுதுவர். சைவ இளைஞர் முன்னணியில் இணைந்து செயற்பட்டவர் எஸ்.பொ அதில் நாவலரைக் கழித்தா வைத்திருந்தர்கள். இந்த அமைப்பின் சைவ நற்சிந்தனைகளை எஸ்.பொ விளக்கி எமக்கெல்லாம் வெளிச்சம் தருவாரா?

இந்தியா, இலங்கை எங்கும் தோன்றிய மத, இன உணர்வுபடைத்த அமைப்புகளை பரிட்டிஸ் பின்புலமும் உடையவை பிரிட்டனை எதிர்த்த இந்த அமைப்புகளை தமக்குள்தாமே பிணக்குற்றுப் போராடும் அமைப்புகளாக அவர்கள் மாற்றினார்கள் காந்தியின் ராமராச்சியம் இன்று பிஜேபி இன் பாசிச ராமராச்சியமாக இந்து மதவாதமாக மாறிவிட்டது. ஆறுமுகநாவலர் தொடக்கிய தமிழ்தேசிய – சைவ உணர்வகள் இன்று புலிப்பாசிஸ்டுகளுக்கு உரிய அடித்தளமாகிவிட்டது.

தொடரும்...

தமிழரசன் பெர்லின்

No comments: