Thursday, March 18, 2010

புதுவை இரத்தினதுரை தமிழை...

புதுவை இரத்தினதுரை.

மிழரசன் குறிப்புக்கான எனது நோக்கு.

அன்பு வாசகர்களே,ஈழத்தின் ஆஸ்த்தான கவிஞனென என்னால் அதிகம் பாராட்டப்பட்ட-தூசிக்கப்பட கவிஞன் புதுவை இரத்தினதுரை.புதுவை என செல்லமாக அழைக்கப்பட்ட இரத்தினதுரை அவர்கள், கவிதை மிக அழகாகப் பாடும் ஆற்றலுடையவன்.

அற்புதமாகத் தமிழை அதன் உச்சம்வரை பிரயோகித்து, உணர்வுகளை அதன் மூலம் சவாரிக்கு அனுப்புவன்-இவன் கவிஞனென நான் பூரித்தும்-புகழ்ந்தும் இருக்கிறேன்.அதேயளவுக்கு அவனை நான் கடுமையாக விமர்சித்தும் இருக்கிறேன்.

இக் கவிஞனின் புலிசார் அரசியலில், மனிதத்தை ஓட்டுக்கட்சி-இயக்கவாத அரசியலிருந்து பார்க்கப்பட்ட மனிதநோக்காக, வர்க்கம் சார் நிலையைத்தாண்டி அஃது,குறுந்தேசிய அரசியலில் மிகவும் மலினப்படுத்தப்பட்டது.

இன்று,இந்தக் கவிஞன் எங்கே-எப்படி வாழ்கிறானென நான் அறியேன்.இலங்கை அரசினது அழிவு யுத்தத்தில் சிக்குப்பட்ட புதுவை உயிரோடு வாழ்கிறாரா என்பதும் நாம் அறியோம்.

நான்,அவரது சார்பு அரசியலையுந்தாண்டி, அவரது தமிழுக்காகவும்-உணர்ச்சியோடு,உயிராகத் தமிழைப் பயன்படுத்தும் ஆற்றலுக்காகவும் அதிகமாக நேசிப்பவன்.

எனினும்,அவரது அரசியலை என்றும் எதிர்த்து விமர்சிப்பவன்.அவர் புலிகளது ஆயுதப் போராட்டத்தில் தன்னைப் புதைப்பதற்குமுன் புரட்சிகர அரசியலை முன்னெடுத்தவர்.புரட்சிகரமாகக் கவி புனைந்தவர்.என்றபோதும்,தமிழ்த் "தேசிய போராட்டத்தில்"பிழையான வழிமுறைகளைப் பக்குவமாகக் கவிதைமொழியில் நியாயித்தவர்.

இவரது, அரசியல் நிலை குறித்தும்,இலக்கியப் பாத்திரம் குறித்தும் திரு.தமிழரசன் கடந்த ஆண்டு,இறுதிப்பகுதியில் மிகக் கறாராக விமர்சித்துள்ளார்.இந்த விமர்சனத்துக்கான எழுத்தானது தமிழ் யூனிக்கோட்டுக்குப் பொருந்தாத ஏதோவொரு எழுத்துவடிவில் இருப்பதால் சுராதாவின் எழுத்துருமாற்றி அதை நிராகரிக்கிறது.

நான், இதை ஸ்கான் பண்ணிப் பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு பக்கத்திலும்-படத்திலும் கிளிக் பண்ணி வாசித்துப் பாருங்கள்.

விமர்சனத்தின் நியாயம் குறித்து எழுதுங்கள்.

அது,மேலும் ஈழத்தின் முக்கியமான கவிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தைக் குறித்து, வரலாற்றில் எழுதிச் செல்லும் குறிப்புகளுக்கு அக்காலக்கட்டத்தின் நியாயம்-அநியாயம் குறித்து உரைக்கட்டும்.

அன்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.03.2010




























No comments: