Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:6)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்



பகுதி:(6)

யாழ்ப்பாணம்
112
கி.பி. 1435க்கு முற்பட்ட இலங்கையின் எந்தச் சாசனத்திலும் யாழ்ப்பாணம் பற்றிய எந்தக் குறிப்பும் கிடையாது. 15ம் நூற்றாண்டு கோகில சந்தோச “ என்ற சிங்கள நூலே முதன்முதலில் “யாழ்பநே” “யாப்பாபட்டுனோ” என்ற பெயர்களில் யாழ்ப்பாணம் குறிக்கப்பட்டுள்ளது. மலேயாதேசத்தில் இருந்து வந்த வர்களான சாவகர்களின் “சாவ” என்பது “யாவ” என்று உருமாறி சிங்களத்தில் “யாப்பாபட்டுன” எற்று வழங்கிவந்ததாக பரணவிதான கூறியுள்ளார். கிட்டத்தட்ட இதே கருத்தையே இந்திரபாலாவும் வெளிப் படுத்தியுள்ளார். போத்துக் கேயர்காலப் பதிவுகள் துயகயயெ நn Pரவயயெஅ (ஜாபானா-என்-புதனம்) என்று குறிக்கப்படுவதே பின்புதிரிந்து “யாழ்ப்பாணம்” என்று ஆகியது. என்று இந்திரபாலா நிறுவியுள்ளார். யாழ்ப்பாணம் என்பது முதலில் “யாபா-பட்டுன” யாப்பட்டுனே, என அழைக்கப்பட்டுள்ளது பின்பு அதிலிருந்து “இஆழ்ப்பானயந்பட்டினம்” யாழ்ப்பாணப்பட்டினத்துறை, யாழ்பாணத்துறை என்றாகி இறுதியில் யாழ்ப்பாணம் என்றாகியது என்பதே சரியாகும் பழைய எந்த நூலிலும் யாழ்ப்பாணம் என்ற பெயர் நிலவியதற்கான ஆதாரமில்லை. தேவாரம் பாடிய 7ம் 8ம் நூற்றாண்டு காலப்பகுதியில் திருகோணமலை. திருக்கேதீஸ்வரம் என்பன குறிக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள் கிடையது 17ம் நூற்றாண்டு கைலாயமாலையும் 18ம் நூற்றாண்டு வைபவமாலை 19ம் நூற்றாண்டு வையாபாடல் என்பன எழுதப்பட்டவை கிட்டத்தட்ட 275 வருடம் முன்பு ஒல்லாந்தர்காலத்தில் மயில்வாகனம் புலவரால் எழுதப்பட்ட கைலாயமாளலயில்தான் முதன்முதலில் “யாழ்ப்பாணப்பட்டினம்” என்ற பதம் பாவிக்கப் பட்டுள்ளது தமிழில் பட்டினம் எனப்படுவது பானியில் உள்ள பட்டுன என்பதில் இருந்து தோன்றியதாகும் சாவகன்பட்டினம், அல்லது யாவுகபட்டினம் என்பன சில்கள உச்சரிப்பில் யாப்பாட்டுன ஆகி பின்பு தமிழில் யாழ்ப்பாணாயன பட்டினம், யாழ்ப்பாணப்பட்டினம், யாழ்ப்பாணம் ஆகியது என்று இந்திரபாலா குறித்துள்ளார்.
வைபவமாலை கலிங்கமாகன் என்றும் விஜய கலிங்கச் சந்தரவர்த்தியை விஜய கூளங்கைச் சர்கரவர்த்தி என்று கூறுகிறது, நல்லூரை புகனேகபாடு கட்டினான் என்ற வரலாற்றுண்மைக்கு மாறாக யாழ்ப்பாண மன்னர்கள் கட்டினார்கள் என்கிறது. னகலாயமாலை, வைபவமாலை என்பன கண்பார்வையற்றவரான யாழ்ப்பாணன் என்ற
113
யாழ்பாடி யாழ்ப்பாணத்தை காடுகெடுத்து நாடாக்கினான் என்ற எழுதியதுடன் யாழ்ப்பாணம் என்ற பெயர்வந்தமைக்கான காரணமாகவும் நிலைநாட்ட முயல்கிறது. கி.பி 16ம் அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாய்க் கொள்ளப்படும் கண்பார்வையற்ற புலவரான “அந்தகக் கவி வீரராகவனரப் பற்றிய கதையை ஆதாரமாய்க் கொண்டே யாழ்ப்பாணம் என்ற பெயரை நிரூபிக்க தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து முயன்றுவந்துள்ளனர் வித்தியாளர்தன் போன்றவர்கள் இதற்கு ஆதரவுகாட்டிய போதும் வரலாற்று ஆதாரத்தைக் காட்டமுடியவில்லை. 18ம் நூற்றாண்டில் எழுத்தவையாபாடல் தான் முதலில் “யாழ்ப்பாணம்” என்ற பதத்தைப்பாவிக்கிறது யாழ்ப்பாண அரசின் தோற்றம் கலிங்கமன்னர்களின் வம்சத்துத்துடன் தொடர்புடையது அதன் அரசு நாணயம்களில் காணப்படும் நந்தி, குத்துவிளக்கு என்பன கலிங்கமன்னர்களது அரசு அடையாளமாகும். கலிங்கர், சாவகர் மற்றும் சிங்கள கலப்புகளில் இருநN;த தோன்றிய யாழ்ப்பாணத்தை எஸ்.பொ போன்றவர்கள் தூய தனித்தமிழ் வடிவம் எற்று கருதிப் பூரிக்கிறார்கள்.
பௌத்தம்
பௌத்தத்தை தமிழ்ர்கட்கு எதிராய் நிறுத்தும் வேலையை வழக்கமான தமிழ் தேசிய வாதிகளின் கடமையை எஸ்.பொவும் தொடர்ந்து செய்கின்றார். பௌத்தமதத்தை சிங்களமக்களுக்கு மட்டுமே உரியதாய்க்கானும் போக்கில் இருந்து அவரும் தப்பவில்லை, இலங்கைக்கு பௌத்தம் மகாவம்ச வர்ணணை போலன்றி விட இந்தியாவில் இருந்தல்ல தமிழ்நாடு ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தே பரவியுள்ளது. வடபகுதி ஊடாகவே இலங்கையுள் பௌத்தம் நுழைந்திருக்க முடியும். வடபகுதியில் ஆந்திராவுடன் பௌத்தமதச் செல்வாக்குக்குட்பட்ட தடயம்கள் வல்லிபுரம் உட்படப் பல இடம்களில் கிடைத்துள்ளன. கி.மு. 100 நூற்றாண்டியே முல்லைத்தீவில் “குருகுண்டவாசக” என்ற பௌத்த லிகாளர இருந்துள்ளது. அக்காலத்தில் இலங்கையில் எந்த இந்து ஆலயம்களும் கிடையா, பழைய இந்து அலயம்களான திருக்கேதிஸ்வரம், திருகோணமலை என்பன கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே எழுகின்றன. தமிழ்நாட்டில் நாயன்மார் ஆழ்வார்களில் எழுச்சி பக்தி இயக்கத்தின் தோற்றதின் பின்பே தமிழ்நாட்டில் பௌத்தம் அழியத் தொடங்கும் போது இலங்கையின்
114
வர்த்தகம் தொடர்பு மையம்களாகவும் தென்னிந்திய இறக்குமதி ஏற்றுமதிகளுடன் தொடர்புடைய கரையோரப் பகுதிகளில் இந்து சமயம் ஆதிக்கம் பெறுகிறது. இப்பகுதிகளில் பௌத்தம் அழியத் தொடங்கியது என்று கொள்ள முடியும் எனிலும் வடக்கில் கலிங்கமாகன் ஆட்சிவரை பௌத்தம் நிலவியுள்ளது. அதன்பின்பே 12ம் நூற்றாண்டுகளிலே வடக்கில் பௌத்தம் பெருமளவு அழிந்து இந்து மதச் செய்வாக்குக்குட்பிட்டதாகத் தெரிகிறது. இக்காலத்துக்குமுன்பே அனுராதபுரம் தனது பிரதான பௌத்தமதம் நிலவிய இடம் என்ற நிலையை இழந்துவிட்டு பொலநறுவையில் அது தென்னிலங்கைக்கு பின்வாங்கத் தொடங்கியிருந்தது.
பௌத்தம் அன்னியப்படை எடுப்பாளர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மதமான கருத்தியலாக மாறியது தென்னிலங்கையின் பிரதேசம்கள் பௌத்தத்தையும் பின்பு சிங்கள மக்களையும் ஒன்று சேரப்பாதுகாக்கும் பிரதேசம்களாயின. தமிழ்நாட்டில் கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி.10ம் நூற்றாண்டுவரை பௌத்தம் நிலவியது. 13ம் நூற்றாண்டில் அது முழுமையாக மறையத் தொடங்கியது அக்காலத்தில் தமிழ் நாட்டில் பெரும்பகுதி மக்கள் பௌத்த செல்வாக்குக்குட்பிட்டு இருந்தது போலவே இலங்கையிலும் சிங்கள, தமிழ்மக்கள் பௌத்தர்களாகவே இருந்தனர். சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்க வாசகர். திருமங்கையாழ்வார் போன்ற சைவ, வைணவர்கள், தமிழ்நாட்டில் பௌத்தகத்தை இல்லாமல் செய்தனர். பௌத்தலிகாரைகள் அழிக்கப்பட்டு அதே இடத்தில் இந்து, வைணவ கோயில்களாக்கப்பட்டன. தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி போன்ற பௌத்த வழிபாட்டிடம்கள். அம்மன், திரோபதை அம்மன் கோயில்களாக மாற்றப்பட்டன. வுpகாரைகள் இருந்த இடம்;களில் விநாயகர் ஐயனார். முனிஸ்வரர் கோயில்களாகின. பௌத்தயிக்குகள் வாழ்ந்த மலைக்குகைகள் பஞ்சபாண்டவர்கள் குகைகள், கோயில்கள் எனப்பட்டன. நாயன்மார் பௌத்தத்தை புறச்சமயம் என்று அழித்தனர். இலங்கையிலும் சோழர்கள் காலம் முதல் கலிங்கர்கள் வரை பௌத்த விலிகானரகள் அழிக்கப்பட்டன. வடக்கில் கலிங்கர்களே முழுமையாக பௌத்தத்தை அழத்து இந்து சமயத்தை நிறுவினர் எனலாம். கடைசியாக சங்கிலி மன்னன் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து பௌத்தவிகானரயை இடிந்து சிங்களவர்கனை கலைத்தான். இந்த வரலாறுகள் எதையும் எஸ்.பொ மதிப்பிடத் தயாராக இல்லை. அவர் தற்போதய தமிழ் இனவாதத்தின் சைவத்தமிழ், பௌத்த சிங்களம் என்ற மலிவு அரசியலால் காவு கொள்ளப்படுள்ளார்.
115
சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பெருமளவு தமிழ் பௌத்த புலவர்களான கூல வாணிகர் சாத்தனார். இளம்போதியார், அறவாண அடிகள், மணிமேகலைப்பிக்குணி சீத்தலைச்சாத்தனார். சங்கமித்திரர். ஆகியோர் இருந்தனர். தமிழ்பௌத்த காலியமான மணிமேகலையை கூலவாணிகச் சாத்தனார் படைத்தார். வீரசேழியம், குண்டலகேசி. சித்தாந்தத் தொகை, திருப்பதிகம்,; போன்ற பௌத்த நூல்கள், பக்தி இயக்க காலத்தில் அழிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பௌத்தத்தின் மையமாகக் இருந்தது இங்கு தர்மபாலர் என்ற பௌத்த தமிழ் அறிஞர் இருந்தார். நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த, மகாதேரர், போதி தருமர், ஆசாரிய திகநாதர், ஆசாரியதர்மபாலர், மாக்கோதை, தம்மபாலர் புத்திநந்தி, சாரிபுத்தர், வச்சிரபோதி, புத்தமித்திரர், மகாகாசவர் பெருந்தேவனார். திபங்கர தேவர், அனுருத்தர், ஆனந்ததேரர் தம்மகீர்த்தி, கவிராசர் சாரர், காசவதேரர், சாரிபுத்தர். புத்தாதித்தர், தருமபால ஆசிரியர், போன்ற 28 மேற்ப்பட்ட பௌத்த தமிழ் அறிஞர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர். இதில் தருமபால ஆசிரியர், நாளாந்தா பல்கலைக்கழகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த பௌத்த தமிழ் அறிஞர்கள் பாளிமொழியிலேயே பௌத்த நூல்களை எழுதினர் இவர்கள் எழுதிய நூல்கள் இலங்கை முதல் பர்மாவரை பரவியிருந்தபோதும் தமிழ்நாட்டில் பௌத்தமத அழிவுடன் இவையும் கூடவே அழிந்தன. இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போல் பௌத்ததுக்கு பாளிமுக்கிய மொழியாக இருந்தது. எனினும் அது மக்கள் பேசிய மொழிகட்கு எல்லாம் மாறிச் சென்றது சாதாரண மக்களச் சென்றடைந்தது. பிராமணியம் மக்களை மதநூல்களைப் படிக்கவிடவில்லை தனக்கு மட்டுமே மதநூல்களை உரிமையாய்க் கொண்டிருந்தது. பிராமணிய மதத்தின் உயிர்க்கொலை, யாகம் பெண்அடிமை, மனித ஏற்றத்தாழ்வு இவைகட்கு எதிரான போரட்டத்தை பௌத்தம் பிக்குகளே கொண்டு வந்தனர். தமிழ் மொழியில் ஷ், ஸ், ஹ, போன்ற எழுத்துக்கட்கான உச்சரிப்புகள் இருக்கவில்லை. எனவே இந்த எழுத்துகள் பௌத்தபிக்குகளே, ப்ராக்கிருதம் சமஸ்கிருதம் ஆகியவற்றிலிருந்து கொண்டுவந்தனர். நாயகன், கப்பலோட்டி, தம்பூலம் (தாம்பூலம்) நாவிகன், நாவா (கப்பல்) சாவகர் (சுமத்திரா) நிர்வாணம், தம்மம், சீலம் பள்ளி, போதிமரம், விகாரை, பிக்கு, பிக்குணி ஒட்டு பட ஏராளமான பாளிச் சொற்கள் தமிழுக்கு பௌத்தம் மூலம் வந்தன. பௌத்தத்தை சிங்கள இனவாதத்துடன் சேர்த்துப் பார்க்க தமிழினவாதிகள் தமிழ்ர்களைப் பழக்கி விட்டார்கள், பௌத்தம் தமிழர்களின் முதாதையரின் மதமாகும் தமிழை
116
வளர்த்தமதமாகும். தமிழ்ர்கட்கு அறக் கருத்துக்கள் வழங்கிய மதமாகும், மற்றும் பௌத்தம் இந்துமதத்தை விட நாகரிகமான மதமாகும், எஸ்.பொ பௌத்தம் இந்துமதத்தைகளின் எதிரியானமதமாகக் காண்பிக்கிறார். ஒப்பிட்டு நீதியல் கிறிஸ்தவம் இழைந்த கொடுமைகள் போல் தமிழ்மக்களுக்கு பௌத்தம் தீங்கு இழைக்கவில்லை கிறிஸ்தவம் போல் அன்னிய ஆக்கிரமிப்பு மதமாகவும் இருக்கவில்லை. இதைக் கூறும் போது சகல மதம்களும் நடப்பில் மக்கள் விரோதமானவை என்ற பொது உண்மையை நாம்கைவிட வேண்டியதில்லை, வன்னியில் வவுனிக்குளம், கனகராயன்குளம் ஒமந்தை நெடுங்கேனி உட்பட சகல இடம்களிலும் உள்ள பொளத்த மதத்தின் சேதமடைந்த சின்னம்கள் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் அடையாளமுமாகும் என்பதை எஸ்.பொ. அறியாமல் வாழ்கிறார்.
வீரகேசரியில் பௌத்தபிக்குகளையும் அவர்களது பாலியல் மீறல்களையும் குறித்து “யோகம்” என்ற நாவலை எழுதியதாக எஸ்.பொ குறித்துள்ளார். அவர் தமிழினவாதி என்ற படியால் தமது எதிரிகளின் மதம் ஒழுக்கக் கேடானது என்று நிறுவவும் பாலியலை மனித ஒழுக்கம்கட்கு அளவு கோலாக்கவும் முயன்கிறார் எந்தமதம் பாலியல் விதிகளை மீறவில்லை இந்து, கிறிஸ்தவமதம்கள் தாமே பாலியல் உறவுபற்றி வகுத்துக்கொண்ட விதிகளை மதித்தனவா? மீறவில்லையா? எல்லாமதங்களும் பாலியலை ஒடுக்கும் போது மனிதர்களின் இயற்கையின் உணர்வுகளுக்கட்குப் பகுத்தும்போது பாலியல் உணர்வுகள்கட்குக்களை உடைக்கின்றன. இங்குமதக்கட்டுப்பாடுகள் தவறானவையே தவிர பாலியல் உணர்வுகளல்ல இங்கு எஸ்.பொ. மதவுணர்வுகளைக் தூயதாகவும் பாலியல் ஒழுக்க மீறல்களை கண்டிப்பதாகவும் ஒப்புக்கு நடித்துக் கொண்டு மறுபுறம் இவர்தானே சொந்தமாக இவைகளை மீறுகிறார் தகர்ப்பதை தனது உரிமையாய்க் கொள்கிறார்.
இலங்கையில் சிங்கள தேசிய உணர்வை பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான தேசபக்கத அரசியல் எப்படி தமிழ் மக்களுடன் முரண்படும் இனவாதக் குணாம் சந்தையும் பெற்றது? என்று ஆராயாமல் எஸ்.பொ முழுச்சிங்கள மக்களையும் இனவாதிளாய்க் காண்கிறார். “சிங்களமக்கள் அறியாமையாலும் அகங்காரத்ததாலும் அநியாயம் இயற்றுகின்றார்கள்” என்று அவரிடமிருந்து வார்த்தைகள் செயற்கையாக வந்து விடுகிறது. இலங்கையில் சிங்கள மகாசபை, தோன்றிய அதே சமயம் தமிழினவாதப் பக்கம் தமிழ் மகாசபை, தமிழ்க்காங்கிரஸ் என்பதுனவும் தோன்றுகின்றன. இந்த தமிழ்-சிங்கள இனவாத அமைப்புகள் பிரிட்டனை எதிர்க்காத
117
பொதுப்பண்புகைளக்; கொண்டு இருந்தனர். இந்தியாவில் இந்துமகாசபை திராவிட இயக்கம், அம்பேத்கார் இயக்கம், முஸ்லிம் இயக்கம்கள் காந்தியம் தோன்றிய அதேசமயத்திலேயே இலங்கையிலும் இந்தகைய அமைப்புகள் உருவாகின இதன் பிண்ணணியில் பிரிட்டடிஸ் அரசியலின் பிரிவினைவாதத்தந்திரம்கள் இருந்தன. 1925 இல் ழுஒகழசன இல் இருந்து திரும்பிய பண்டாரநாயக்கன் கிறிஸ்தவத்தை விட்டு விலகி பௌத்தசிங்கள மகாசபையைகத் தொடங்கினார். இவர்கள் கண்டியர் தனித்தேசிய இளம் புழபையஅய உயர்சாதிச் சிங்களவர்கரை யோரச்சிங்களவர்களான முயசயஎய சாதியை விட உயர்ந்தவர்கள் கிறிஸ்தவம் கலவாத பௌத்தமக்கள் பிரிவு என்ற கருத்துக்களைப் பரப்பினர் என்பதுடன் ளு.று.மு.னு. பண்பார நாயக்ககா 1926 ஆண்டுகளிலேயே கண்டிச்சிங்கள வர்கட்கு தனிச்சமஸ்டி அமைப்பு தேவை என்று கோரினார்.
இந்தச் சமஸ்டி அமைப்பு முறையானது ஐரிஸ் மாதிரியல்லாத ஸ்கொட் மற்றும் வேல்ஸ் மாதிரியிலான சமஸ்டி அமைப்பாக அமெரிக்காமாதிரிலியான சமஸ்டி முறையாக அமையும் எற்றுவிளக்கினார். கொய்கமகராவ முரண்பாடுகளை அவர் பௌத்த-கிறிஸ்தவ முரண்பாடுகளாகவும் விளக்கினார். இவர்கள் பௌத்த நாடான ஐப்பானின் கிறிஸ்தவரஸ்யா மேலான வெற்றியைக் கொண்டாடினர் கரையோர கராவ சிங்களக்கிறிஸ்தவரான ளுசை அயசஉரள குநசயெனெழ க்கு எதிராக இவர்கள் யாழ்ப்பாண உயர்சாதித்தமிழருடன் கூட்டுச்சேர்ந்திருந்தனர் தேர்தலில் தோற்கடித்தனர். எனவே தமிழ், சிங்களவர் முரண்பாடு என்பது கண்டி, கரையோரச்சிங்களவர் போன்று பிரிட்டிஸ் இராஜந்திரத்தின் சதிகளால் செயற்கையாகப் படைக்கப்பட்ட ஒற்றாகும், பண்டாரநாயக்கர் வின்சமஸ்டியை பிரதிசெய்தே பின்பு செல்;வநாயகம் தமிழ்ர்கட்கு சமஸ்டிகேட்டார் கண்டிச்சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்கள் இருபகுதியையும் பிரிக்கும் அரசியல் தோல்வியுற்ற சமயத்தில்தான். இந்திய எதிர்ப்பு, சிங்களமொழிப்பிரச்சனை, தமிழ் எதிர்ப்பு என்பன கொண்ட ருNP அரங்குக்கு வருகிறது. இது நேரடியாக டுளுளுP இன் இலங்கை தழுவிய ஒற்றுமை தொழிலாளர்கள் இயக்கம் சோசலிசம் போன்ற நோக்கம்கட்கு எதிராகவே எடுகிறது “எக்சத்பிக்கு பெரமுனை” ருNP ஆதரவுடன் உருவாக்கப்பட்டது வுசi ளுinhயடய pநசயஅரயெ க்கு நிதியுடம் அரசியல் வழிகாட்டலும் அமெரிக்கதூதரகம் ஊடாகக்
118
கிடைத்தது. 1955 N.ஆ. பெரேரா பாராளமன்றப் பேச்சில்; இதை நிரூபித்துப்பேசினார், இந்த அமைப்பு டுளுளுP கூட்டம்களைக் கொழும்பில்; குடிப்புவதில் முன்னின்றது. டுளுளுP இந்திய ஆதரவு இயக்கம், இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கப் பார்க்கிறது என்ற பிரச்சாரம்கனள் இவர்கள் செய்தனர்.
வுசi ளூinhயடய Pநசயஅரயெi உடன் து.சு. ஜெயவர்தனர்வுககு நெருக்கிய உறவு இருந்தது. ளுசை ஜோன். கொத தலாவல ளுசை னுழn டீயசழn ஜெதிலககா போன்றசிங்களத் தேசியவாதம் போசி;யோர் இந்திய, தமிழ், இடதுசாரி எதிர்ப்புகளையும் பிரிட்டன் ஆதரவு அரசியலையும் கொண்டு இருந்தனர். மறுபுறம் பு.பு. பொன்னம்பாலம் சி. சுந்தரலிங்கம், செவ்வநாயகம் உட்பட பல தமிழ் இனவாதிகளும் பிரிட்டின் சார்பு இடது சாரி எதிர்ப்புகளைக் கொண்டவர்களாக இருந்தனர். எனவே தமிழ், சிங்கள, இனவாதிற்கு ஏகாதியத்திய அரசியலுக்கு ஆட்பட்ட தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் பற்றி எஸ்.பொவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதுடன் அதுபற்றி எந்த உணர்வுமற்றவராக அவர் சிந்தித்தார். டுளுளுP யை தாக்குவதென்பது தமிழ்-சிங்கள ஒற்றுமை மேலான தாக்குதலாக இருந்தது ளுசை னுழn டீயசழn ஜெயதிலகா “ டுளுளுP மதத்தை அழிக்கப் போகிறது என்றார். ருNP யின் பிரதான கோசம் “சமமாஜிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் அவர்கள் பௌத்தமதத்தை அழித்து விகாரைகளை இடிக்கப் போகிறார்கள் நாட்டை சிவப்பு அபாயம் சூழ்ந்து கொண்டுள்ளது எனவே சமாசமாஜிகளின் நெருப்பிய இருந்து தேசத்தைக் காப்போம் என்பதே. டுளுளுP யின் இந்திய தொழிலாளர ஆதரிப்பு என்பது இந்திய ஆதரவு என்று விளக்கினர். 1955 இல் கொழும்பு நகரமண்டபத்தில் டுளுளுP நடத்திய கூட்டத்துக்கு சிங்கள அரச கருமமொழிச் சட்டத்தை எதிர்த்துப் பேசும் என்.எம். பெரேராவுக்கு சிங்கள இடதுகையை இழந்தார். சிங்கள அரசு கரும மொழிச்சட்டத்தை அவருக்கு சிங்கள மொழி தெரியாது. என்றும் எனவே சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்ப்பதாகவும் ருNP உறியது. இச்சமயம்களில் சிங்கள இனவாதத்தை எதிர்க்கிற தமிழரசு, தமிழ்காங்கிரஸ், சி.சுந்தரலிங்கம் போன்றவர்கள் இடதுசாரிகட்கு உதவவில்லை அவர்களுடன் கூடிப் போரட்டம்கள் நடத்தமறுத்தனர் மாறாக அவர்கள் சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளயே எதிர்க்தனர். 1940 களில் சிங்களமகாசபை டீயளயஇ சுயளய, னுநளய கோசம் எழுப்பிய போது இதை எதிர்த்தவர்கள் டுளுளுP யினரே இங்கு தமிழ், சிங்கள இருபகுதி இனவாதிகளும் கூட்டாக
119
இடதுசாரிகளைத் தனிமைப்படுத்தினர். “கத்தியின்றி ரத்தமின்றி காந்தி சுதந்திரம் தேடிந்தந்ததாக” இன்னமும் எத்தனை தினத்துக்கு நாம் எஸ்.பொ போன்றவர்களிடம் கதைகேட்பது? புதிதாய்ப் புலப்படுத்தத் தெரியாத கிளரவைக்க முடியாத எழுத்துகள் எஸ்.பொ வினதுடையது. “காந்தியம்” என்பது பிரமாண்டமான துணி நெய்யும் நவீன இயந்திரம் முன்பான உபயோகிகக் முடியாத ஒரு பழையராட்டையாம்கும், இந்தியாவில் இடதுசாரிகட்கும் சுதந்திர இயக்கத்துக்கும் எதிராகப் பிரிட்டிஸ் ஆட்சிகள் எடுத்து அறிமுகப்படுத்திய அரசியல் வடிவம் காந்தியை புத்தருடனும் யேசுவுடனும் ஒப்பிட்டுமுதலில் மேற்குலகப் பத்திரிகைகள்தான் எழுதின அவர்கள் காந்தியை வளர்த்து ஆளாக்கிலிட்டார்கள் காந்தி பிரிட்டிஸ் அரசுக்கு ஆபத்தற்ற இந்திய ஆன்மிகத்தின் கருத்துமுதல் வாதப்பண்புகளை நவீமையப்படுத்தினார் போராடமுயன்ற இந்தியர்களின் போர்க்கருணத்தை சாந்தப்படுத்தினார். சமுதாய மனிதர்கட்கு பதிலாக தனித்தனி மனிதர்களை மாற்றும் அரசியலுக்கு ஆபத்தற்ற இந்திய ஆன்மிகத்தின் கருத்து முதல் வாதப்பண்புகளை நவீமையப்படுத்திளார் போரட்ட முயன்ற இந்தியர்களின் போர்க்கருணத்தை சாந்தப்படுத்தினார். சமுதாய மனிதர்கட்டு பதிலாக தனித்தனி மனிதர்களை மாற்றும் அரசியலுக்கு மக்களை இட்டு வர முயன்றார் டாட்டா பிர்லாவின் ஆடம்பரமான மாளிகைகளில் அமர்ந்து கொண்டு ஏழ்மையும் செல்வமும் சாதிய உயர்வு தாழ்வும், முன்விளைப்பயன், இந்திய ஒழுக்கம் என்று போதித்து இந்தியச் செல்வர்களின் மனதைமாற்றமுயன்று சூடு வாங்கியகற்பனாவாதிதான் காந்தி இன்று காந்தி தேசம் அகிம்சையை அல்ல ஆயுதம்களையும் நவீன இரானுவத்தையும் கொண்டு நிற்கிறது. அது தள்னைவருத்தும் சக்;தியாக்கிரகத்தை அல்ல பக்கத்து நாடுகளைப் படை எடுத்து வெருட்டும் நிலையில் உள்ளது. இன்றைய உலகமயமாதலில் காந்தியம் என்பது கற்கால அரசியல் ஆயுதம், காந்தியத்தை உதறிய படி யாழ்த்தான் இந்தியா முன்னேற முடிந்தது. காந்தியின் இந்தியாவின் மத்திய கால வாழ்வுக்கு திரும்பும் கிராமியப் பொருளாதாரம்களை விட்டு இந்திய தேசம் நவீனமுதலாளியத்துள் நுழைந்துள்ளது. இங்கு காந்தியின் ராமராச்சியம் என்பது இந்துமதவாத அரசியலாக மட்டுமே மிஞ்சியுள்ளது.

120
எஸ்.பொ இந்த நூலில் காந்தியை நினைத்து உடலைச் சிலிர்த்துக் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகட்கு காந்தியம் என்பது எந்த வகையிலும்; வழிக்கட்டியல்ல இந்தியமக்கள் காந்தியப் போதளைகளில் மினக் கெடத்தக்க வாழ்வில் இல்லை அவர்கள் உலக மயமாதலின் பொருளாதாரச்சற்றுள் நுகர்வுப்போக்குகள் வலம்வரத் தொடங்கிவிட்டனர். இவர்கட்கு காந்தியம் ஒரு பொருளற்ற பண்டம். அவர்கள் காந்தியைப் போலல்ல கோட்சேயைப் போல வாழத் தொடங்கிவிட்டனர். காந்தியத்தை எமக்கு சிபாரசு செய்யும் எஸ்.பொ குறைந்தபட்சம் தான் தனிமனிதராகவாவது தன்னளவில் அகிம்சையை நம்பி ஒழுகுகிறாரா? அவர்தன் எதிரிகளை ஒறுக்க தன்னைத் தானே வருத்திக் கொள்பவரா? பழிவாங்காதபண்பினரா? புகைமறுத்து மச்சம் மாமிசம் புசியாமல் பாலியல் துறந்து ஆசை அறுத்து வாழ்பவரா? காந்தியின் அகிம்சையை வரித்துக் கொண்டவராயின் எப்படி புலிகளின் ஆயுதப் பயங்கரவாதத்தை எப்படி ஒத்துக் கொண்கிறார்? எஸ்.பொ காலையில் அகிம்சாவதியாகவும் மாலையில் ஆயுதவன் முறையை ஏற்பவராகவும் வாழ முடியும் என்று நம்புகிறாரா?
காந்தி பிரமச்சாரியத்தை அனுட்டிப்பவர் உண்மை மீது பற்றுக் கொண்டவர் என்று இதுவரை காந்தியிடம் எவரும் கண்டறியாத ஒன்றை எழுதுகிறார் காந்திக்கு தெரிந்த உண்மை எது? அவர் தனிச் சொத்துட மையை ஏழ்மையும் செல்வத்தையும் இயற்கையான பகுப்பு என்று நம்பியவர் சாதிப் பிரிவிளைகளை சமூக உயர்வு தாழ்வுகளை அவர் மத வாதத்தின் பின்புறம் உண்மைகளைத் தேடினார். ஆரசியலை ஆன் மீதத்துடனும் மதவாதத்துடனும் இணைத்தார். அவரின் உண்மை மதம்காட்கும் உண்மையாகும் பொருள்வகை உலகை அலட்சியப்படுத்தி அவரவர் மனித உள்மனத்தில் புகுந்து கொள்ளும் அறவாழ்வைத் தேடும் கருத்துமுதல்வாத உண்மையாகும் இது தத்துவதியிலும், சமூகவியல் ரீதியிலும் ஒரு பொய்யுணர்வேயாகும். காந்தியின் இந்தியா என்பது நவீன தொழிற்துறை எதிர்;ப்பு கொண்டதாகும். மக்களை பற்றற்ற இந்து துறவிக் கோலம் பூணும் படி கேட்பதாகும். காந்தியின் பாலியல் துறப்பும் பிரமச்சாரியத்தைப் போற்றுவதும் இயற்கையான உயிரியல் செயற்பாடுகளை மறுப்பதாகும். பாலியல் உணர்வுகளைத்துறப்பது உலலுக்குத் தீங்கானது என்று, மருத்துவம் நிருபித்து
121
விட்டது. ஒழுங்கு தொடர்ச்சியான பாலியல் மாரடைப்பு, உட்பட பல உடல், உள நோய்கட்கு எதிரான பாதுகாப்புடையது, காந்தியின் பாலியல் துறப்புக் கோலம் இந்துமதவாதத்தின் பாலியல் மனிதமனம்களின் கட்டுப்பாடுகளையும் ஒடுக்கத்தையும் சீரழிப்பது என்ற எண்ணம்களின் மதவகைப்பட்ட மாயாவாதமே எம்கிராமங்களில் உள்ள “விந்துவிட்டவன் நொந்து கெட்டான்” என்பது போன்ற அறிவியல் முனைப்பற்ற கருதுகோள்கள்தான்.
காந்தி பற்றிய எஸ்.பொ. வின் பார்வை தமிழரசுக்காலப்பழசு தமிழரசுக் செல்வ நாயகம் “ஈழத்துக்காந்தியாக்கப்பட்டார், காந்தி செல்வநாயகம் இருவரது அகிம்சையும் அந்தியாக்கிரகமும் ஏகாதிபத்தியம்களை எதிர்க்காத அரசியல் வடிவமாகும். தென் ஆபிரிக்காவில் காந்தி கறுப்பு இன மக்கள் ஆதரிக்கவில்லை பிரிட்டின் ஆட்சியை ஆதரித்தவர். பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான ஆசிய ஆபிரிக்கமக்களின் விடுதலைக் கிளர்ச்சிகளைக் காந்தி ஆதரித்ததில்லை. இந்தியாவில் காந்தி இல்லாவிட்டால் மக்களின் ஆயுதக்கிளர்ச்சிகளும் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரானவன்முறைகளும் பிரமாண்டமாக எழுத்திருக்கும் இடதுசாரிகள் அரசியலில் வியட்நாம், சீனா போல பலம் பெற்று இருப்பார்கள். இதைத்தடுக்கவே காந்தியாரின் சத்தியாக்கிரகம் அகிம்சை போன்ற விசித்திரமான மக்களின் போராட்டம்களை உருச்சிதைக்கும் கோழத்தனமான போக்குகள் எழுந்தன. இது பிரிட்டின் இராஜதந்திரத்தின் அரசியல் தயாரிப்புத் தானே தவிர இது காந்தியின் தனித்தன்மையாலோ கெட்டித்தனத்தாலோ தோன்றவில்லை. சோவியத்ய+னியனுடனும், மேற்குஜரோப்பிய சோசலிச சக்திகளுடனும் அரசியல் உறவைதேடிக் கொண்டிருந்த இந்தியப்புரட்சியாளர்கள் காந்தியால் திசைதிருப்பப்பட்டனர் சக்தியிழக்கச் செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்திய எழுச்சியானது ஏனைய 3ம் உலக நாடுகளிலன் ஒவ்வொரு ஒத்துழையாமை இயக்கமும் பிரிட்டிஸ் இந்திய ஆட்சியாளர்களுடன் கலந்தும் உடன்பட்டும் மறைமுகமான ஒப்பந்தம்களுடனுமே நடந்தன. பகத்சிங் முதல் இந்தியக் கடற்படைகளின் ஆயுத மேந்திய நடவடிக்கைகளை காந்திகடுமையாக எதிர்த்தார். இயற்கையாக பிரிட்டிஸ் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக எழுழ்த இந்திய மக்களின் ஆயுத நடவடிக்கைகளை காந்தியை வைத்து பிரிட்டிஸ் கட்டுப்படுத்தியது தனிமைப்படுத்தியது.
122
காந்தியின் இந்து மதத்துறவிக் கோலம், எளிய சராசரி இந்தியர்களை யொத்த ஆடை என்பன சாதாரண இந்தியமக்களை வெல்லும் உளவியல் தந்திரமாகும் அகிம்சை, சத்தியம், சந்தியாக்கிரகம், சுதேசியம், ராமராச்சியம், மதுவிலக்கு பரமச்சாரியம், பசுவதை எதிர்ப்பு என்பன மேற்கத்தைய நவீன முதலாளிய ஜனநாயகம், மனிதசுதந்திரம் இனவகனையறியாத இந்தியக்கருத்து முதல்வாதத்தின் கருத்துக்கட்டலாகும். ஆன்மீக அழகு, ஆன்மா, போன்றவற்றை பேசிய காந்தி இந்தியவிடுதலை இயக்கம் முன்னேறத்தடையாக இருந்தனர் இது பிரிட்டிஸ் அரசியலின் காலடியைச்சுற்றித்திரியும் அரசியலுக்கு வழிவகித்தது, வன்முறையும், போரும், அதிகாரப் போட்டியும் நிறைந்த இராமனின் கதை அன்பே உருவான ராமராச்சியத்தின் கற்பனையாக காந்தியிடம் வடிவெடுத்து, காந்தியின் அரசியல் இந்துமதவாதக்கற்பனா வாதத்தின் பகுதியாகியது, காந்தி பசுவைப்புகழ்ந்தார், பசுதாயைவிடச் சிறந்தது என்று கூறினார் அது இறந்து போன எம்முன்னோர்களின் இந்துமதத்தின் முற்பிறவி பற்றிய கற்பிதம்களுடன் அவர் தொடர்புகொண்டார். மிருகமாகிய பசுவைக்காப்பதற்காக அவர் முஸ்லீம் மக்களை எதிர்க்கும் வரை சென்றார். காந்தியின் அகிம்சையைப் பொதுவாக டால்ஸ்டாய் போன்றவர்களும் சம்பந்தப் படுத்துவது வழக்கம் ஆனால் தலையில் உள்ள பேனைக் கூடக் கொல்லக் கூடாது என்று வாழவிட்டவர்கள் இரவில் உணவு உட்கொள்ளும் போது உணவுடன் சேர்த்து சிறு உயிரினம்களையும் உண்டு விடுவாம் என்பதால் இரவுணவை சாப்பிடாமல் விட்டவர்கள், நடக்கும்போது நிலத்தில் உள்ள சிறு உயிரினம்களை மிதித்து விடாமல் இருக்க நிலத்தை விசிறியால் விசிறியபடி நடந்தவர்களான. பௌத்தர்கள், சமணர்கள் இந்தியாவில் தான் இருந்தனர். இவர்களிடமிருந்தே காந்தி கொல்லாமையைக்கற்றிருக்க வேண்டும் இவர்கள் காந்தியை விட மிகப் பெரிய அகிம்சாவதிகள் காந்தியின் உண்ணா நோன்பு சத்தியாக்கிரகம் என்பன மதரீதியிலானவையே “சகல துக்கம்கட்கும் பாவம்களே காரணம் அதைப்போக்க இந்தப் பாவம் நிறைந்த உடலை வாட்டி வதைக்க வேண்டும் தன்னை வருத்தி இறைவனை இரங்கச் செய்யவேண்டும்” என்ற மதவாதக் கருதுகோள்களால் காந்தியின் சிந்தனைகள் ஆக்கப்பட்டன. காந்திக்கு இந்தியர்கள் கட்டுப்பட்டார்கள் என்றால் காந்தி பிரிட்டனுக்குக் கட்டுப்பட்டார். புpரிட்டிஸ் காறர்கள் சந்தேகப்படாதளவுக்கு அவர் அவர்களது விசுவாசியாக இருந்தார். இதற்கு உபகாரமாகவே அவர் “மகாத்மா” ஆக்கப்பிட்டார் “விலங்குப்பண்ளை” என்ற சோசலிச விரோதநூலை எழுதிய Nஐhச ஆர்வல் முதல் ஐனநாயகச்சிந்தனையாளர் எனப்பட்ட ரஸ்சல் வரை காந்தியின் அபிமானிகளாக இருந்தனர். Nஐhச் ஆர்வல் காந்தியின் அகிம்சையையும் ஆச்சிரமத்தையும் புகழ்ந்தார். இவர்கள் இருவருமே பிரிட்டிஸ் உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்கள் என்பது பின்பு நிரூபிக்கப்பட்டது.

காந்தியின் காலத்திய பல இந்தியப் புரட்சியாளர்கள் சோசலிச சித்தாந்தம் வரை முன்னோறியிருந்த போது காந்தி மாயமாளமதவாதம். தூய ஆன்மா, மதவாத நல்லெழுக்கம்களில் தேங்கிக்கிடந்தார். அவர் சமுதாய யதார்த்தம் மனிதர்களின் விழிப்பு நிலை உலகம் என்பவற்றுக்கு எதிராக இருந்தார். ஒவ்வொருவரும் தம்பாவம் நிறைந்த உடலைவருத்தி துன்பம்களிலிருந்து காந்தி விடுதலை பெறமுடியும் என்று போதித்தவர். வாழ்க்கை பாவம் நிறைந்ததா? மனித உடல் இழிவானதா? மனித வாழ்வு மகத்தானது மனித உடல் ஆராதிக்கத்தக்கது என்ற சாதாரண மனித இயல்பு அவரிடம் இல்லை அந்தளவுக்கு அவர் இந்து மதவாதத்தால் பழுதுபட்டுப்போன நபர் “செத்துப்போய்க்கிடக்கும் உடல்களின் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கின்றேன்” என்ற கவிஞன் பாப்லோ நெருடா மனிதர்கள் உயிர்தரித்திருக்கும் உரிமைக்காக வாதாடிய போது காந்தி உயிர்ச்சுமை உடற்சுமை இறக்க ஆசைப்பட்டவர். முதலாளி தொழிலாளி பிரச்சனைகளில் காந்தி முதலாளிகள் பக்கம் இருந்து தொழிலாளிகட்கு “செல்வத்தின் கவர்ச்சிக்கு மயங்கிவிடாதிர்கள்” என்று புத்திமதி சொன்னவர். அவர் ஏழைகளின் குடிசைகளில் அல்ல செல்வந்தர்களின் மாளிகைகளிலேயே ஓய்வெடுக்கப் போனார். தனது ஆச்சிரமம்கட்கு அவர்களிடம் இருந்து நிதி பெற்றார். அகிம்சை பேசிய காந்தி இந்தியா விடுதலை பெற்றபின்பு அரசு இயந்திரத்தின் வன்முறைச் சக்திகளான பொலிஸ், இராணுவம், உளவுத்துறை இவைகளைக் கலைத்துவிடும் படி கேட்கவில்லை, சுதந்திர இந்தியாவின் பொலிஸ் படையானது தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஒடுக்கியபோது தெலுக்கானா விவசாயிகளின் கிளர்ச்சியை இந்திய இராணுவம் ஈவு இரக்கமற்றமுறையில் அழித்தபோது இவைகளைக் காந்தி எதிர்க்கவில்லை.

அரசவன்முறைகளை எதிர்த்து. உண்ணாநோன்போ சந்தியக்கிரகம் போரட்டமோ செய்யவில்லை. அவர் அரசபயங்கரவாதத்ததை எதிர்க்கவில்லை மாறாக மக்களின் வாழ்வதற்காக வன்முறை பிரயோகிக்கும் உரிமையைத்தான் மறுத்தார். சாதியைக் காந்தி எதிர்க்கவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று கூறியவர்காந்தி. சமுதாய அநீதிகளை மதத்தின் பெயரால் மக்களை ஏற்கச் செய்ய அவர்முயன்றவர், இந்துமதத்தின் ஆன்மீகப் பெரும் செல்வம் பிராமணர்களிடம் குவிந்துகிடப்பதாக நம்பியவர். இந்துமதத்தின் சாரம் சத்தியம் என்றுரைத்த காந்தி இந்துமதத்தின், மறுபிறவி, விதி, கடவுளரின் அவதாரம் என்று சகலதையும் நம்பியவர் அவர் இந்தியாவில் மாற்றம் ஏற்படுவதை எதிர்த்து நின்றவர். உலகம் மாறும் போது இந்தியா மட்டும் எப்படி மாற்றமின்றி இருக்கும்? இத்தகைய காந்தியையே, எஸ்.பொ தன் ஆசானாகச் சித்தரிக்கிறார். காந்தியைப் போல் எஸ்.பொ தன் கழிசானைக் களைந்து கதராடை புனையாவிட்டாலும் பரவாயில்லை. அகிம்சாவாதி காந்தியையும் நரமாமிசபட்சணியான பிரபாகரனையும் அவர் ஒன்று சேர ஆதரிக்கும் காரணத்தையாவது புலப்படுத்தட்டும் பார்க்கலாம். எஸ்.பொ.வின் வலதுசாரி மூளைச் செயற்பாடானது கண்டறிந்து எழுதியது போல் கொல்வின். ஆர்.டி.சில்வா, எஸ்.எம். பெரோரா போன்றவர்களின் வலிந்த அரசியலால் தனிப்பட்ட கெட்டித்தனத்தால் டுளுளுP தோன்றவில்லை. ஒரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான. சமுதாயக்காரணிகள் இருக்கின்றன. அக்காலத்திற்குரிய அரசியல் கட்டளைகளை நிறைவேற்றவே இவை தோன்றுகின்றன. ஏங்கெல்ஸ் உயிருடன் இருந்தபோதே இலங்கையில் முதலாவது மேதினம் கொண்டாடத் தொடங்கப்பட்டது போல் ரொட்ஸ்கி உயிருடன் இருந்தபோதே இலங்கையின் முதல் மாக்சிய இயக்கமாக அவரின் ஆசியுடன் 18 டிசம்பர் 1935இல் டுளுளுP பிறப்பெடுத்தது. மலேரியாவுக்கு எதிரான இயக்கம் 1932 வெள்ளவத்தை நெசவுத் தொழிலாளர் போரரட்டம்களிலிருந்து அதன் தொடர்ச்சியாய் டுளுளுP தோன்றுகிறது. 1893இல் இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம், சிங்கள, தமிழ், பறங்கிய தொழிலாளர்களின் கூட்டில் பிறந்தது. 1886 யாழ்ப்பாணத்தில் சுருட்டுத் தொழிலாளர்சங்கம், 1896 சவவைத் தொழிலாளர் சங்கம், 1907 கொழும்பில் துறைமுகத் தொழிலாளர் சங்கம் 1906இல் 5,000 சிங்கள, தமிழ், முஸ்லீம் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம், 1972 ரெயில்வேத் தொழிலாளர் சங்கம் போன்ற உழைப்பாளர் அமைப்புகளின் இறுதி வடிவமாக டுளுளுP தோற்றம் பெற்றது. பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிரான போராட்ட அமைப்பாகியது, டுளுளுP முன்பு இருந்த இலங்கைத் தொழிலாளர் சங்கதின் தலைவராக இருந்த அருணாசலம் சோவியத் புரட்சியின் மேல் அனுதாபம் கொண்டவராக இருந்தார் 1923 இல் கொழும்பில் நடந்த வேலை நிறுத்ததில் 20,000 தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் 1928 இல் உருவான இலங்கைத் தொழிற்கட்சி உருவாகியது. ஊர்வம்களில் தொழிலாளர்களின் செங்கொடிகளை ஏந்திச் சென்றனர் செந்சட்டைகளை அணிந்து அணிவடுத்துச் சென்றார். 1929 இல் டீழரளவநயன டீசழவாநசள 150 டிராம் வண்டித்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த சமூக நிலைமைகளின் வரலாற்று வடிவமாக தொழிலாளவர்க்கத்தின் ஒன்று திரண்ட அரசியல் இயக்கமாகவே டுளுளுP எழுகிறது. 1930களில் இரண்டாம் உலகயுத்த தடுக்கும் அரசியல் உபாயம்களை முதலாளியம் தேடியது கிட்வர்களையும் முசோலினி, பிராங்கோ, வின்சன் சேச்சில்களையும் தேடிக்கொண்டு இருந்தது, மேற்குலகின் தொழிலாளர்கள் தம் நதரம்களை உலுக்கிக்கொண்டு இருந்த சமயமே இலங்கையுன் டுளுளுP தொடங்குகிறது. இலங்கையின் முதல் மாக்சியவாதியான பிலிப்குணவர்த்தனா துருக்கியல் ரொட்ஸ்க்கியைச் சந்திக்கமுயன்று உளவாளிகள் பிற்தொடர்ந்தமையால் சந்திக்கமுடியவில்லை. ஆனால் ரொட்ஸ்க்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வருடம் மாக்சியவாதியுமான இசாக் எடாச்சருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. பிலிப்குணவர்த்தனா இலங்கை திரும்பிய பின்னர் கொல்வின் ஆர்.டி. சில்வா, N.ஆ. பெரேரா, ரோபேர்ட் குணவர்த்தனா. லெஸ்லி குணவர்த்தனா, டோரின் விக்கிரம சிங்கா, வில்மட்பெரோரா, டோரின் N.னு. சில்வா, ரொபின்ரட்ணம், ரொய் டிமெல் போன்றவர்கள் இணைந்தே டுளுளுP யை உருவாக்கினர், சோசலிஸ்ட் அல்லது கொம்யூனிஸ்ட் என்று பொருள்படும் “சமசமாஐ” பெயரில் கட்சி அமைந்தது, கட்சி உறுப்பினர்களிடமிருந்து. மாதச்சந்தாவாக 25 சதம் அறவிடப்பட்டது. கட்சி தொடங்கிய சில மாதம்களிலேயே முயஅமயசறய (தொழிலாளி) என்ற சிங்கள தினசரிப்பத்திரிகையும் ளுயஅயளயஅதயலய என்ற ஆங்கிலப் பத்திரிகையும் 1938இல் தமிழில் “சமதர்மம” வாரப்பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இதற்கு முதலில் ஆசிரியராக மு.இராமநாதனும் பின்பு வு.நு. புஸ்ப்பராஐனும் இருந்தனர், சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையாள, பறங்கிய, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர் எஸ்.பொவுக்கு டுளுளுP யானது எந்த வர்க்கத்தின் வினை பொருளாக எத்தகைய அரசியல் தருணத்தில் தோன்றியது என்று கண்டறிந்து எழுதத் தெரியவில்லை. டுளுளுP தான் அரசியலை முதன் முதலில் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிகட்குக்குக் கொண்டு வந்தது. கூட்டம்களில் ஆங்கில மொழி பதிலாக, சுதேசிய மொழிகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன, சாதாரண மக்களின் அரசியல் வளர்க்கப்பட்டது. மக்கள் மொழிக்கு அரசியல் சென்ற கொழும்பில் தொழிலாளர்கள் ஒன்று கூடும் “Pயீ” எனப்படும். நிலையம்களை டுளுளுP உருவாக்கியது. டுளுளுP தான் இலங்கையில் முதன்முதலில் மாணவ-மாணவியருக்கு இலவசக்கல்வி, இலவசபாடநூல், இலவச உணவு இலவச மருந்துவம். குழந்தை உழைப்பு தடை, கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் உடல் பாதிப்புற்றோருக்கான விசேட பாதுகாப்புச்சட்டம்கள், ஏழைகள் யாருமற்ற அநாதைகட்கான பிச்சைச்சம்பளம் என அழைக்கப்படும் மதாந்தக் கொடுப்பனவுகட்காகப் பேசியதுடன் இவைகள் கொண்டு வரப் போராடியவர்கள், அந்தகாலத்தில் மக்களின் கல்வியறிவு, ஆயுட்காலம் என்பன மிக மிகப் குறைவு, நோய் நொடிவந்து சாவது அதிகம் வறுமை மக்கள் மேற்சட்டை, சேட்டுக்கள் போடாத காலம், விவசாயிகள் சாதாரணமாக கோமணக்கட்டோடு வயலுக்குப் போவார்கள் வேட்டி, சால்வை, சாறம், சால்வைத்துண்டு, பாவடை, குறுக்குக்கட்டுகளின் காலம் மக்கள் அரை குறையாக உடைதரித் காலம், வடக்கில் ஒடுக்கப்பட்ட சாதிப்புகள் மட்டுமல்ல ஏழைகளின் பிள்ளைகளும் பள்ளிக்கடத்துக்கு அரையில் வேட்டித்துண்டு, சால்பை, சிலக்குழந்தைகள் கோமணம் கூடக் கட்டிக்கொண்டு போன காவங்களவை பெண்குழந்தைகள் கந்தைத்துணி உடுத்திய சமயமது.

மலேரியா, கொலராகசம், இளம்பின்ளைவாதம், என்பன மக்களோடு நிரந்தரமாய் சீவித்தகாலம் அக்காலக்குழந்தைகள் முகம்கழுவாமல் பல்லுத்தீட்டாமல், செருப்பும், போடாமல் மூக்குச்சளிவடியவடிய பள்ளி போன காலமது, பிள்ளைகள் பசியால் வகுப்பில் மயங்கி விழுவார்கள் இப்படித்தான் கிராமங்களின் அக்கால மக்கள் வாழ்ந்தவர்கள், நகரம்கள் வேறுவிதமாய் வாழ்ந்தன, காக்கி, நீலம் வெள்ளை என்று பாடசாலைச்சிருடைகள் அணிவது பின்பு வந்த விடயமாகும், 1960களின் பின்பு டெர்லின், நைலோன் போன்ற செயற்கை தூலிழையில் தயாராகிய நசங்காத ஆடைகள் வந்தன. “முகம் கழுவுவது, பல்லுத்தீட்டுவது, முகம் கழுவிபல்லுத்தீட்டாவிட்டால் முழிவியளத்துக்குக் கூடாது என்பதெல்லாம் நடுத்தரவர்க்கத்துக்குரிய எண்ணம் போக்காக இருந்தது, இச்சமயத்தில் தான் மக்கள் இத்தகைய வாழ்க்கையுள் அநாகரீக வாழ்வில் கட்டுமானம்களில் கிடந்து அழுந்திக் கொண்டிருந்தசமயமே டுளுளுP தோன்றுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகபாரம் பரியம்களைப் பெறுவதற்கான போரட்டம்களைத் தொடங்கியது தொழிலாளர்களை போரட்டச் சக்தியைய் மாற்றியது 1930 இல் இலங்கையில் ஏற்றுமதி வீழ்ச்சி, தேயிலை, ரப்பர் தோட்டம்கள் நட்டப்பட்டுமூடப்பட்டன. கொழும்பில் உள்ள தொழிற்சாலைகள் ஆட்டுகுறைப்புச் செய்தன, வறுமை, வேலையின்மை, தொடர்ந்து அதிகரித்த போது பிரிட்டிஸ் அரசு அதை இந்தியவிரோதத்தின் பால் திருப்பிவிட்டது. இந்த பிரிட்டிஸ் அரசியிலே பின்பு ருNP ஊடாக மலையகமக்களின் பிரசா உரிமை வாக்குரிமைபறிப்பாகியது, 1939 – 1940 களில் டுளுளுP தோட்டத் தொழிலாளர்கள் மத்தியத் தீவிரமாகவேலை செய்தது. இந்திய எதிர்ப்புக்கு எதிராக முதலாவது அரசியலைச் செய்தது. ருNP-பிரிட்டிஸ் தூண்டுதலில் மேன்மேலும் இந்தியவிரோத இயக்கமாக வளர்ந்தது. தோட்டத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளவர்க்க பொது வாழ்விலிருந்து பிரிக்கும் போக்கு வளர்ந்து வந்தது.

1940இல் முல்லோயாத் தோட்ட தொழிலாளி கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவன்மனைவிக்காக கொல்வின். ஆர்.டி. சில்வா நீதிமன்றத்தில் வாதாடினர். வளர்த்துவரும் மலையகத்தோட்டத் தொழிலாளர் மத்தியிலான டுளுளுP யின் செல்வாக்கை முடக்கவே பிரிட்டடிஸ் ஆதரவு இந்திய காங்கிரசின் நேரு 1940 இல் இலங்கை வந்து “இலங்கை இந்திய தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்தனர். பிரிட்டிஸ் அரசுபுறம் இந்திய விரேதம் கொண்ட ருNP யை வளர்த்தது மறுபுறம் இந்திய காங்கிரஸ் மூலம் மலையாகத் தோட்டத்தொழிலாளர்கட்கான தனி அமைப்பை உருவாக்கியது. இவ்வாறாக மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் சிங்கள, தமிழ், தொழிலாளர்களிடமிருந்து பிரிந்து தனிஅமைப்பாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகயுத்தம் ஆரம்பித்தபோது இலங்கைத்தேசிய காங்கிரஸ்”, இலங்கைத் தொழில்க்கட்சி, பிரிட்டனை ஆதரிகக்கத் தொடங்கிய போது, இந்திய காங்கிரஸ் போல் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியும் பிரிட்டஸ் உளவுத்துறையின் அரசியலைப் பேசியது கோவியத்யூனியனை அடுத்து, இலங்கை ஸ்டாலினிஸ்டுகளும் பிரிட்டிஸ் ஆதரவுக்கட்சியாகிவிட்டனர். பிரிட்டிஸ் தொழிற்கட்சியுத்தத்தை ஆதரித்து, இந்திய காங்கிரஸ் பிரிட்டிஸ் அரசுக்கு இராணுவத்துக்கு ஆஸ்திரட்ட உதவியது. ஸ்டாலின் முதலில் கிட்லருடன் ஒப்பந்தம் செய்து வாங்கிக்கட்டிக் கொண்டு பின்பு பிரிட்டன் அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். கிட்லர் பதவிக்கு வந்தவுடனேயே அவன் சோலியத்யூனியளைத்தாக்குவான் என்று ரொட்ஸ்கி திரும்பந்திரும்ப எச்சரித்திருந்தார் ஆனால் ஸ்டாலினிக்கு இந்த அறிவுரைகளின் தத்தவார்த்த புலம் தென்படவில்லை. இப்பிரச்சனை டுளுளுP யுள் இருந்த ஸ்டாலினிஸ்டுகளான ளு.யு. மெஸ்டிஸ், ஆ.பு. மெண்டிஸ் போன்றவர்களை வெளியேற்றுவதில் முடிந்தது. 29பேர் கொண்ட டுளுளுP நிர்வாகக் குழுவில் 5பேர் ஸ்டாலினிஸ்டுகள் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரிட்டிஸ் அரசையும் யுத்தத்தையும் இலங்கையில் எதிர்த்த ஒரே கட்சி டுளுளுP தான் இவர்கள் பிரிட்டிஸ் அரசை எதிர்த்தமையால் டுளுளுP தேசத்துரோக நடவடிக்கைகளின் ஈடுப்பட்டதாக தடைசெய்யப்பட்டது அதன் தலைவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, N.ஆ. எபரேரா, துயஉம கொத்தலாவல், டோரின் N.னு. சில்வா, வில்லி ஜெயதிலகா P.வேலுச்சாமி, ர்.யு.ஊ, விக்கிரமரட்ணா, டீழனல விக்கிரமசிங்கா மாட்டின் சில்வா, ஸ்டான்லி மெண்டிஸ், லயனல்குரே, மு.ஏ. லொறன்ஸ், பெரோரா, லெஸ்லி குணவர்த்தனா, பிலிப்குணவர்த்தனா ளு.ஊ.ஊ. அந்தோனிப் பிள்ளை, நோபேட் குணவர்த்தனா, ரெஜி சேனநாயக்கா ரெஐp பெரோரா, ப.காராளசிங்கம், P.ர். வில்லியம் சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விலியன் குணவர்த்தனா, என்.எம்.பெரேராவின் மனைவி ளுநடiயெ பெரேரா. பிலிப்குணவர்தனாவின் மனைவி குசுமா குணவர்த்தனா போன்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். கட்சிப் பத்திரிகையான ளுயஅயளயஅயலய தடைசெய்யப்பட்டபோதும் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவந்தது, கட்சிதலைமறைவாக இயக்கியது பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான சுதந்திரப் போரட்ட வீரர்களின் அமைப்பாக டுளுளுP விளங்கியது, கைது செய்யப்படுமுன்பு 1940இல் டுளுளுP காலிமுகத்திடலில் பிரமாண்டமான யுத்த எதிர்ப்புக் கூட்டத்தை சர்வதேசிய கீதத்துடன் நடத்தியது ஸ்டாலினிஸ்டுகள் இக்கட்டத்;தைப் பகிஷ்கரிந்து இருந்தனர்.

டுளுளுP பிரிட்டிஸ் அரசால் கைது செய்யப்பட்டு அதன் முக்கிய தலைவர்கள் கைதாகி இந்திய, மற்றும் இலங்கைச்சிறைகளில் இருந்தபோது அப்போது பிரிட்டிஸ் ஆதரவு மற்றும் ருNP யுடன் கூட்டில் இருந்த ஸ்டாலினிசத் கொம்ய+னிஸ்ட் கட்சி விரைவாக டுளுளுP யின் இடம்களில் ஊடுருவமுயன்றது. தொழிற்சங்கம்களை ஆக்கிரமிக்க முயன்றது பிரிட்டிஸ் அரசு டுளுளுP எதிராக கொம்யூனிஸ்ட் கட்சி வளர்வதை ஆதரித்து எனினும் டுளுளுPயை அதன் தொழிலாளவர்க்கப்பரப்பை ஆக்கிரமிப்பதில் கொம்ய+னிஸ்ட் கட்சி வெற்றி பெறமுடியவில்லை. 1946இல் டுளுளுP யின் “வங்கி ஊழியர் சங்கம்” மற்றும் ரெயில்வே. துறைமுகம் நகரசபை, எரிவாயுக் கொம்பனி, தனியார் பஸ் கொம்ப இவைகளின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்களை நடத்தினர். 1947இல் நடந்த வேலை நிறுத்த இயக்கம்களின் போது கந்த சாமி என்ற தொழிலாளி இறந்தார். இச்சமயம் டுளுளுP இலங்கைத் தொழிலாளவர்க்கத்தின் தனிப் பெரும் இயக்கமாகவும் பிரிட்டிஸ் அரசின் விட்டுக் கொடாத எதிரியாகவும் இருந்தது டுளுளுPயின் அரசியலுக்கு எதிராக இடதுசாரி, இந்திய, தமிழ், எதிர்ப்புடன் ருNP பிரிட்டிஸ் ஆதரவுடன் தோற்றம் பெறுகிறது. இத்தகைய ருNP யுடன் கூட்டாகக் கொம்யூனிஸ்ட் கட்சி தேர்தலிலும் டுளுளுP எதிர்த்துப் போட்டியிட்டது. இந்தேர்தலில் ருNP யின் தேர்தல் சுலோகம் என்பது “டுளுளுP யிட மிருந்து நாட்டைப்பாதுகாத்தல்” என்பதாகும் “டுளுளுP முழுநாட்டையும் அதன் பண்பாடுகளையும் அழிக்கப் போகிறார்கள். மதத்தைம் விகாரைகளையும் எரியூட்டப் போகிறார்கள் என்றே பிரச்சாரம் நடந்தது. ரூவான் வெலத் தொகுதியில் N.ஆ. பெரோராவுக்கு எதிராக கொம்யூனிஸ்ட் கட்சி தன்வேட்பாளரை நிறுத்தியது பின்பு தோல்வி நிச்சயம் என்ற நிலையில் தனது வேட்பாளரை சுயேச்சையாகப் போட்டியிட வைத்தது. புNP யுடன் இனைந்து டுளுளுP யைத்தாக்கியது. கைதுகள், வழக்குகள் சிறை வாழ்வு, பொலிஸ் அடக்குமுறை, தலைமறைவு வாழ்வு, பத்திரிகைத் தடை என்பவற்றை சுமத்திய போதும் இலங்கையின் மிகப் பெரும் தொழிலாளர் இயக்கம் என்ற உரிமையை டுளுளுP யிடமிருந்து கொம்யூனிஸ்ட் கட்சியால் பறிக்கமுடியவில்லை அது தத்துவரீதியிலோ, அமைப்பு நீதியாலோ, தலைமைப்பண்பிலோ டுளுளுP க்கு நிகராக முடியவில்லை. 1947 தேர்தலில் டுளுளுP 15 இடம்களிலும் கொம்யூனிஸ்ட்கட்சி 3 இடம்களிலும் ருNP 42 இடம்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 7 இடம்களிலும் வெற்றியீடின. ருNP தமிழ்க்காங்கிரஸ், கொம்யூனிஸ்ட்கட்சி இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் என்ற 4 கட்சிகள் டுளுளுP க்கு எதிராக இருந்தன. அவர்களை தமிழ், சிங்கள, இனவாதக் கட்சிகள் கூட்டாய் எதிர்த்தழிக்க முயன்றன. இதுதான் எஸ்.பொ. எழுதாமல் விட்;;;டவரலாறு பிரிட்டிஸ் அரசுடன் கூடி டுளுளுPயை தோற்கடிக்க முயன்ற கதை, நகர்ப்புறமகள் எங்கும் தொழிலாளர்கள் அதிகமாக இருந்த இடம்கள் யாவற்றிலும் டுளுளுP வென்றது.

ஆனால் டுளுளுP க்கும் கொம்யூனிஸ்ட்கட்சிக்குமான பிணக்குகள் எத்தகையவை தத்துவரீதியில் வித்தியாசம்கள் யாவை என்று எஸ்.பொவுக்கு எந்த விளக்கமும் கிடையாது தான் சார்ந்து இருந்த கொம்யூனிஸ்ட் கட்சி பற்றிக் கூட அவருக்கு உள்ளுர் சார்ந்த மற்றும் சர்வதேச ரீதியிலான மதிப்பீடுகள் அவர் அறியாப் பிரதேசத்தில் இருந்தன. Pழவளனயஅ மற்றும் யால்ட்டா ஒப்பந்தம்களின் போது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது கொலனி நாடுகள் இந்தியா, இலங்கை உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதை ஸ்டாலின் ஏற்றுச் கொண்ட துரோகம்களைப் பற்றி எஸ்.பொவுக்கு, எதுவும் தெரிக்கிருக்கவில்லை. இரண்டாம் உலகயுத்தில் வியட்நாமிய மக்கள் பிரான்சைத் தோற்கச் செய்திருந்தனர். யுத்தத்துக்குப் பின்னர் பிரான்சில் பதவிக்கு வந்த கொம்யூனிஸ்ட் கட்சியின் மந்திரி புறோம் புளும் பிரான்சுக்படைகளை வியட்நாமை ஆக்கிரமிக்க அனுப்பினார். ஸ்டாலினிச அரசியலைப் பரிசோதிக்கதக்க பரந்த அரசியல் எஸ்.பொ இடம் இன்மையால் அரசியல் வதந்திகள், தனிப்பட்ட விடுப்புகளில் அவரது எழுத்துச் சீவியம் போகிறது 1948 இல் தமிழ்நாட்டு ஐPவாவை இலங்கைக்கு கொண்டுவந்தமை என்பது டுளுளுP யின் வலிமையைத் தோற்கடிக்கவே என்பதைக் கூட எஸ்.பொவுக்கு கவனித்துச் சொல்லமுடியவில்லை. ஐPவா யாழ்ப்பாணத்தில் கார்த்திகேயனுடன் தான் தங்கியிருந்தனார். வடபகுதிமக்கள் பலபத்து வருடம்களாக நினைவில் வைததிருக்கத்தக்க பேச்சுக்களை அவர் நிகழ்த்தினார்.

டுளுளுP தலைவர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் என்ற மிகப் பெரிய விடயத்தை எஸ்.பொ பொருட்படுத்தவில்லை காந்தியையும் சுபாஸ்சந்திரபோசையும் புழுகுவார்களே தவிர சொந்த இலங்கையின் சுதந்திர இயக்கதுக்கு பங்களித்தவர்களை அலட்சியப்படுத்திக் கைவிடுவது தமிழ் தேசியவாதத்தின் பொதுக்குணம், டுளுளுP தலைவர்கள் சிறையில் இருந்தது தப்பி வட பகுதியூடாக இந்தியாவுக்கு வள்ளம்களில் சென்றனர். கொல்வின் ஆர்.டி. சில்வா N.ஆ. பெரோ, பிலிப்குணவந்தனா ரேபேட் குணவர்த்தனா, எட்டின் சமரக்கொடி, லெஸ்லி குணவர்த்தனா எஸ்பேரர் முக்கியமானவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, N.ஆ. பெரோ இருவரும் பாதிரி உடையில் உருமாறிச் சென்றனர்.

1942 ஏப்பிரல்மாதம் 7ம் தேதி வடமராட்சிக் கொம்யூனிஸ்ட்குகள் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையூடாக இவர்கள் இந்தியா சென்றனர். இவர்கள் அங்கு ஒருவருடம் முதல் 4 வருடம்கள் வரை தலைமறைவு வாழ்க்கையிலும் சிறையிலும் நாட்களைக் கழித்தனர். இந்தியாவில் 1943 முதல் டுளுளுP யின் தலை மறைவுத் தலைவர்கள் மேலான கைதுகள் தொடங்கின். பிலிப்குணவர்த்தனாவும் அவர்மனைவி குசுமாவும் குழந்தையுடன் பம்பாய் நகரிலும் N.ஆ. பெரேரா அகமாபாத்திலும் பெர்ணாட் சொய்சா, லியனல் கூரே, ரோபேட்குணவர்த்தனா, ரெஜி சேனநாயக்கா, சொலமன், ப. காராளசிங்கம், அலன் மெண்டிஸ்டோரிக் டி.சொய்சா, ளு.ஊ.ஊ அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பம்பாய் சென்னை போன்ற இடம்களிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் 1946 வரை பலர் இந்தியச்சிறைகளில் இருந்தனர். கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தனா விலியன்குண வர்த்தனர், ளுநடiயெ பெரேரா போன்றோர் 2ம் உலகயுத்தம் முடிந்தபின்பே கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது றோபேட் குணவர்த்தனாவுக்க கால்முறிந்தது அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொழும்புவைத்திய சாலையில் ஆஸ்பத்திரிக் கட்டிலோடு சங்கிலியால் கட்டப்பட்டு இரவு பகலாக பொலிஸ் காவல் போடப்பட்டது.

இந்தியாவில் தப்பி தலைமறைவாக இருந்த சமயமே ரொட்ஸ்க்கியால் தொடங்கப்பட்ட நான்காம் அகிலத்தின் கிளையாக இந்தியாவில் “பேஸ்சுவிக் லெனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இதை அமைப்பதில் கொல்வின் ஆர்.டி. சில்வா ப.பாலசிங்கம், டொரிக், டி.சில்வா, பெர்ணாட் செய்தார் பெஸ்லிகுவைர்த்தனர், ஆகியோர் பங்கொடுத்தனர். இதன் முக்கிய நிர்வாகியாக டுடைல சுயல போன்றோர் இருந்தனர். “போல்சுவிக் லெனினிஸ்ட் கட்சியை வாழ்த்தி ரொட்ஸ்கி செய்தி அனுப்பினார் உறுப்பினார். இளம் டுளுளுP தலைவர்கள் இந்திய இடது சாரிகள் இடது சாரிப் போக்குடையவர்கள் எல்லோரையும் சந்தித்தனர். nஐயப்பிரகாஸ் நாராணயன், அசோக் மேத்தா பம்பாய் மேயராக இருந்த ஆ.சு. மசானி கமலா சட்டோ பாத்தியாய ஆகியோர் நடத்திய சோசலிஸ்டுகள் மாநாட்டிலும் கலந்து கொண்டனர். அக்காலம்பற்றிய nஐயப்பிரகாங் நாராயணன் முதல் நேரு வரையிலானவர்களின் எழுத்துகளில் ரொட்ஸ்க்கிபற்றிய மதிப்புக்குரிய குறிப்புக்களைக்கான முடியும், பிரிட்டனில் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி இந்தியாவில் “போல்சுவிக் லெனினிஸ்ட்கட்சியின் தொடக்கம் இவைகட்கான காரணமாகும் அச்சமயம் இந்தியாவில் திராவிடர் ஆசியர் இந்து, முஸ்லிம், தலித்பிரிவினைகள் தீவிரமாக எழுந்தகாலத்தில் இந்தப் பிரிட்டிஸ் அரசியலுக்கான எதிர்ப்பாக “போல்சுலிக்லெஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை டுளுளுP யானது இந்திய தாய்க்கட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ருNP யின் சிங்கள சிறியங்கா அமிர்தலிக்கத்தின் இலங்கை-இந்திய தமிழ்நாடுகள் இணைந்த பரந்த தமிழ்நாடு பற்றிய பிரிவினைவாதக்கனவுகள் நிலவிய சமயமே டுளுளுP பரந்த அரசியலுக்கு முயன்றது. இலங்கை இந்தியா, பர்மா, உட்பட்ட இந்தியத்துனைக்கண்டம் இணைந்த சோசலிச எதிர்காலம் பற்றிய அரசியலுக்கு வந்தனர்.

1942இல் ஸ்டாலின் ஏகாதிபத்தியம்களுடன் செய்த உடன்பாடுகள் 1947க்கு இடையில் கலையத் தொடங்கிவிட்டன முதலாளித்துவத்துக்கு விட்டுக் கொடுத்து பரஸ்பரம் சோசலிசமும்-முதலாளியமும், அருகருகே வாழமுடியும் என்ற ஸ்டாலினியக் கனவுகள் மறையத் தொடங்கின. பிரிட்டிஸ் பிரதமர் வின்சன் சேச்சில் தாம் கொம்யூனிஸ்டுகளை விட்டு தவறுதலாக நாசிகளை அழித்து விட்டோம் என்ற பொருளில் “நாம் பிழையான பன்றியைக் கொன்று விட்டோம்” என்று கூறினார். ஏகாதிபத்தியம்களை சமரசப்படுத்த 1943இல் ஸ்டாலின் 3ம் ஆகிலத்தைக் கலைத்து இருந்தார். 3ம் அகிலத் தலைவராக இருந்த டிமிட்ரோவ் “ இனிக்கொம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரமாக தமது தேசிய எல்லைகட்குள் செயற்படும்” என்று கூறினார். ஸ்டாலினிசம் இப்படியாக தனது தேசிய சேலிசத்தை தனித்தனிநாடுகளில் தேசிய எல்லையுள் தங்கி நிற்கும் தத்துவமாகியது. அமெரிக்காவுடன் ஸ்டாலின் நேசம் கொண்டாடிய சமயம் அமெரிக்கச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சித்தலைவரான நுயசட டீசழறனநச “வர்க்கம்கள் சமாதான மாக வாழமுடியும் அமெரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சி தேவைக் கதிகமான ஒன்றாக ஆகிவிட்டது” எனக் கூறினார் ஆனால் அமெரிக்க ஐனதிபதி வு.வுசயஅயn குளிர்காலயுத்ததைத் தொடங்கினார் அனுஆயுதத்தயாரிப்பு தீவிரமாகியது. கொம்யூனிஸ்;டகட்சிகள் தடை செய்யப்பட்டு கிழக்கு சோசலிச நாடுகட்கு எதிராக ஆயசளாயடட Pடயளெ கொண்டுவரப்பட்டது. இப்படியாக ஸ்டாலினிசத்தின் ஏகாதிபத்தியத்துடன் சமாதானவாழ்வு முடிவுக்கு வந்தது. சமாதான சகவாழ்வு என்பது குருசேவ்காலத்துகுரியதல்ல அதை ஸ்டாலினே தொடக்கினார். 1948 முதல் சீனா வடகொரியா, வியட் நாம் அதன்பின்பு 1950 களில் கியுபா, அல்ஐPரியா, அங்கோலா, சிலி, கம்பூச்சியா லாவோஸ், மொசாம்பிக், நமீபியா, தென்ஆபிரிக்கா என்பன ஏகாதிபத்தியம்களுடன் பொருதத் தொடங்கின. இக்காலத்தில் தமது சர்வதேச அகிலம்இல்லை. 3ம் அகிலத்துக்கு மாற்றாகவே ரொட்ஸ்கி 4ம் அகிலத்தைத் தொடங்கினார் எஸ்.பொ.வுக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் டுளுளுP யின் வரவை இணைத்துப்பார்க்கத் தெரியாத தன்மைக்கு பலியானார் பிரிட்டனின் Pயடிடiஉ சுநஉழசன ழுககiஉந இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இலங்கையின் பிரிட்டிஸ் கவர்னர் பிரிட்டனுக்கு அனுப்பிய இரசிய ஆவணம்களில் டுளுளுP யின் நடவடிக்கைகள் பற்றிய விபரம்கள் உள்ளனர். 1940 இல் டுளுளுP தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பிரிட்டனின் குடியேற்ற நாட்டுக்காரியதரிசி இலங்கை கவர்னர் யு.ஊயடனநஉழவவ க்கு டுளுளுP பற்றிய தகவல்களைக் கோரி தந்தியடித்தார் அக்கால டுளுளுP பத்திரிகைகள் சமதர்மம் உட்படயாவும் உளவுத்துறையால் மொழி பெயர்க்கப்பட்டது இவ்வாறு இலங்கை-இந்தியா அரசியல் மிக முக்கியத்துவம் வகித்த டுளுளுP பற்றிய எஸ்.பொவின் சித்திரம் தமிழ் தேசிய வாதத்தின் அற்பமான அரசியல் வாதிகளைவிட சிறியதாக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 2007 தமிழரசன் பெர்லின்
(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் வெளியிடப்படுகிறது)

No comments: